உழ்ஹிய்யாவும் அதன் சட்டங்களும்

بسم الله الرحمن الرحيم

உழ்ஹிய்யாவும் (குர்பானி) அதன் சட்டங்களும்

VIDEO CLICK HERA

உழ்ஹிய்யா என்பது, துல்ஹிஜ்ஜா மாதத்தின் பத்தாவது (ஹஜ் பெருநாள்) தினத்திலிருந்து, அய்யாமுத் தஷ்ரீக்குடைய நாட்களில் மூன்றாவது நாள் சூரிய அஸ்தமனம் வரைக்கும் ஆடு மாடு ஒட்டகங்களை அறுத்துப் பழியிடுவதாகும்.

உழ்ஹிய்யாவின் பின்னணி

பொதுவாகவே வணக்கங்களைப் பொருத்தமட்டில் அல்லாஹ் கடமையாக்குவான், நபிகளார் காட்டித்தருவார்கள், காரண காரியங்களுக்கு அப்பால் அவற்றை நாம் நடைமுறைப் படுத்துவோம், இதுவே அடிப்படை. அதே நேரம் ஹஜ், உழ்ஹிய்யா ஆகிய வணக்கங்களை எடுத்து நோக்கின், அவற்றுக்குப் பின் இப்றாஹீம் நபியின் குடும்பம் செய்த தியாகம் ஞாபகப்படுத்தப்படுகின்றது.

அந்த அடிப்படையில் இப்றாஹீம் நபியவர்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கு இணங்க, வயது முதிர்ந்த காலத்தில் தனக்கு வழங்கப்பட்ட தன் மகன் இஸ்மாயீல் (அலை) அவர்களை அருத்துப் பலியிட தயாரானார்கள், அதுவே, பிறகு ஒரு பிராணி தியாகத்திற்கு பதிலாக வழங்கப்பட்டு இன்று வரை வணக்கமாக நிறைவேற்றப்படுகின்றது. அதனை அல்லாஹ் அல்குர்ஆனில் பின்வருமாறு விபரிக்கின்றான்.

 • எனவே, நாம் அவருக்கு பொறுமைசாலியான ஒரு மகனைக் கொண்டு நன்மாராயங் கூறினோம்.102. பின் (அம்மகன்) அவருடன் நடமாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார்: “என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக!” (மகன்) கூறினான்; “என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் – என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள்.”103. ஆகவே, அவ்விருவரும் (இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிப்பட்டு, (இப்றாஹீம்) மகனைப் பலியிட முகம் குப்புறக்கிடத்திய போது;104. நாம் அவரை “யா இப்றாஹீம்!” என்றழைத்தோம்.105. “திடமாக நீர் (கண்ட) கனவை மெய்ப்படுத்தினீர். நிச்சயமாக நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுத்திருக்கிறோம்.106. “நிச்சயமாக இது தெளிவான ஒரு பெருஞ் சோதனையாகும்.”107. ஆயினும், நாம் ஒரு மகத்தான பலியைக் கொண்டு அவருக்குப் பகரமாக்கினோம்.108. இன்னும் அவருக்காகப் பிற்காலத்தவருக்கு (ஒரு ஞாபகார்த்தத்தை) விட்டு வைத்தோம்.  (37:101-108)

குர்பானி உழ்ஹிய்யாவின் நோக்கம்

அல்லாஹ்வுக்காக அருத்துப் பலியிடும் ஒவ்வொருவரும் இப்றாஹீம் நபியவர்கள் செய்த தியாகத்தை ஞாபகப்படுத்தி, தன்னை அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு வாழப் பலக்குவதே உயர்ந்த நோக்கமாகும். மாறாக எத்துனை மாடு கொடுத்தோம், எத்துனை பொதி இறைச்சி பங்கு வைத்தோம் என்று பெருமையடிப்பதற்கல்ல. அல்லாஹ் பிவருமாறு கூறுகின்றான்:

 • (எனினும்), குர்பானியின் மாமிசங்களோ, அவற்றின் உதிரங்களோ அல்லாஹ்வை ஒரு போதும் அடைவதில்லை; ஆனால் உங்களுடைய தக்வா (பயபக்தி) தான் அவனை அடையும்; அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காண்பித்ததற்காக அவனை நீங்கள் பெருமைப் படுத்தும் பொருட்டு – இவ்வாறாக அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான்; ஆகவே நன்மை செய்வோருக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக!  (22:37)

صحيح مسلم:    عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللهَ لَا يَنْظُرُ إِلَى صُوَرِكُمْ وَأَمْوَالِكُمْ، وَلَكِنْ يَنْظُرُ إِلَى قُلُوبِكُمْ وَأَعْمَالِكُمْ

 • நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நிச்சியமாக அல்லாஹ் உங்கள் தோற்றத்தையோ, உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை, ஆனாலும் உங்கள் உள்ளங்களையும், செயல்களையுமே பார்க்கின்றான். (முஸ்லிம்:6708)

உழ்ஹிய்யா கொடுப்பவர் செய்ய வேண்டியது

துல்ஹிஜ்ஜா மாதத்திற்கான தலைபிறை தென்பட்டு விட்டால் உழ்ஹிய்யா கொடுப்பவர் தனது நகங்களை வெட்டுவதோ, முடிகளை சிறைப்பதோ கூடாத காரியமாகும்.

صحيح مسلم :    عَنْ أُمِّ سَلَمَةَ أَنَّ النَّبِىَّ -صلى الله عليه وسلم- قَالَ « إِذَا رَأَيْتُمْ هِلاَلَ ذِى الْحِجَّةِ وَأَرَادَ أَحَدُكُمْ أَنْ يُضَحِّىَ فَلْيُمْسِكْ عَنْ شَعْرِهِ وَأَظْفَارِهِ

 • நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘நீங்கள் துல்ஹிஜ்ஜா மாதத்தின் தலை பிறையை கண்டு, உங்களில் ஒருவர் உழ்ஹிய்யா கொடுக்க விரும்பினால் அவர் தன் தலை முடியையும், நகங்களையும் கலையாமல் தடுத்துக் கொள்ளட்டும்.’  (முஸ்லிம்: 5234)

அடுத்து ஒருவருக்கு தலைபிறையின் போது குர்பானி கொடுக்கும் நோக்கம் இல்லாமலிருந்து, பிறகு அதற்கான நோக்கம் வந்தால், அவர் அந்த நேரத்திலிருந்து தன்னை அச்செயல்களிலிருந்து தடுத்துக் கொள்ளவேண்டும்.

அருக்கப்படும் பிராணியின் வயது

பொதுவாக நாம் ஹதீஸ்களை தேடிப்பார்த்தால் நபி (ஸல்) அவர்கள் அருக்கப்படும் பிராணிக்கான வயதை ஒன்று, இரண்டு என்று இலக்கங்களிட்டு கூறியதைக் காண முடியாது, மாறாக மிருகங்களின் வயதெல்லையைக் கொண்ட பெயர்களைப் பாவித்தே கூறினார்கள். அந்த அடிப்படையில் வயதெல்லையை குறிப்பிட்டுக் காட்டுவதில் முஸ்லிம் அறிஞர்களுக்கு மத்தியில் பரவலான கருத்து வேற்றுமை காணப்படுகின்றது.

صحيح مسلم عَنْ جَابِرٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَذْبَحُوا إِلَّا مُسِنَّةً، إِلَّا أَنْ يَعْسُرَ عَلَيْكُمْ، فَتَذْبَحُوا جَذَعَةً مِنَ الضَّأْنِ

 • நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் முஸின்னத்தான (ஒரு வயது பூர்த்தியான) மிருகத்தைத் தவிர அருக்க வேண்டாம், அதனை அடைந்து கொள்வது கஸ்டமாக இருந்தால் ஜத்அத்தை (ஆறு மாதம் பூர்த்தியான) மிருகத்தை பழியிடுங்கள். (முஸ்லிம்: 5194)

صحيح البخاري :عَنِ البَرَاءِ، قَالَ: خَرَجَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ أَضْحًى إِلَى البَقِيعِ، فَصَلَّى رَكْعَتَيْنِ، ثُمَّ أَقْبَلَ عَلَيْنَا بِوَجْهِهِ، وَقَالَ: «إِنَّ أَوَّلَ نُسُكِنَا فِي يَوْمِنَا هَذَا، أَنْ نَبْدَأَ بِالصَّلاَةِ، ثُمَّ نَرْجِعَ، فَنَنْحَرَ، فَمَنْ فَعَلَ ذَلِكَ فَقَدْ وَافَقَ سُنَّتَنَا، وَمَنْ ذَبَحَ قَبْلَ ذَلِكَ، فَإِنَّمَا هُوَ شَيْءٌ عَجَّلَهُ لِأَهْلِهِ لَيْسَ مِنَ النُّسُكِ فِي شَيْءٍ» فَقَامَ رَجُلٌ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي ذَبَحْتُ وَعِنْدِي جَذَعَةٌ خَيْرٌ مِنْ مُسِنَّةٍ؟ قَالَ: «اذْبَحْهَا، وَلاَ تَفِي عَنْ أَحَدٍ بَعْدَكَ»

 • பராஃ (றழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி(ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாளில் பகீஃ எனுமிடத்திற்குச் சென்று இரண்டு ரக்அத்கள் தொழுகை நடத்தினார்கள். பின்னர் எங்களை நோக்கி, ‘இன்று நாம் செய்யும் முதல் காரியம் தொழுகையை நிறைவேற்றுவது. பின்னர்(இல்லம்) திரும்பி (குர்பானிப் பிராணியை) அறுப்பது. இவ்வாறு தொழுகைக்கு முன் அறுத்துவிட்டவர் தம் குடும்பத்தாருக்காக, அவசரமாக அறுத்தவராவார். அது குர்பானியாகாது’ எனக் கூறினார்கள். அப்போது ஒருவர் எழுந்து, ‘இறைத்தூதர் அவர்களே! நான் (தொழுகைக்கு முன்பே) அறுத்துவிட்டேன். என்னிடம் ஒரு வயதுடைய ஆட்டை விடச் சிறந்த ஆறு மாதக் குட்டி ஒன்று இருக்கிறது. (அதை அறுக்கலாமா?)’ என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘அதை அறுப்பீராக! உமக்குப் பின் மற்றவர்களுக்கு இது பொருந்தாது” என்று கூறினார்கள். (புஹாரி: 976)

صحيح البخاري عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَعْطَاهُ غَنَمًا يَقْسِمُهَا عَلَى صَحَابَتِهِ، فَبَقِيَ عَتُودٌ، فَذَكَرَهُ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «ضَحِّ بِهِ أَنْتَ

உக்பா இப்னு ஆமிர் (றழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி(ஸல்) அவர்கள் சில ஆடுகளைத் தம் தோழர்களுக்குப் பங்கிட்டுக் கொடுக்குமாறு என்னிடம் கொடுத்தார்கள். (அவ்வாறே நான் பங்கிட்டு முடித்தபின்) ஓர் ஆட்டுக்குட்டி எஞ்சியது. அது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் நான் கூறியபோது, ‘அதை நீர் (அறுத்து) குர்பானி கொடுப்பீராக!” எனக் கூறினார்கள். (புஹாரி: 2300, முஸ்லிம்)

*இந்த ஹதீஸ்களை நோக்கும் போது மிருகங்கள் ஜத்அத், அதூத், முஸின்னத் என்ற வார்த்தைக் கொண்டே பாவிக்கப்பட்டிருக்கின்றன. அந்த அடிப்படையில் பலியிடுவதற்கு தகுதியானதாக முஸின்னத்தும், அதூதும் இருப்பதோடு, ஜத்அத் என்பது நெருக்கடி நேரத்தில் மாத்திரமே அனுமதிக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகின்றது.

இவற்றின் வயதெல்லையை பார்க்கும் போது ஆடாக இருந்தால் முஸின்னத் என்பது ஒரு வருடம் பூர்த்தியானதும், மாட்டில் இரண்டு வருடம் பூர்த்தியானதும், ஒட்டகத்தில் ஐந்து வயது பூர்த்தியானதும், செம்பரி ஆடாக இருப்பின் ஆறு மாதம் பூர்த்தியாக இருப்பதுமாகும்.

அருத்துப் பலியிடுவதற்கு தடுக்கப்பட்ட மிருகங்கள்

பொதுவாகவே அல்லாஹ்வுக்காக கொடுக்கும் பிராணிகள் நல்ல ஆரோகியமுள்ளதாக இருப்பதோடு, குறைபாடுகள் அற்றதாகவும் இருக்கவேண்டும். அந்த அடிப்படையில் இஸ்லாம் ஒரு சில பிராணிகளை குறிப்பிட்டு குர்பானியில் தடுத்துள்ளது. அவற்றை பின்வரும் நபி மொழி தெளிவு படுத்துகின்றது.

مسند أحمد عن الْبَرَاء بْنَ عَازِبٍ قال قال رَسُولُ اللَّهِ : «أَرْبَعٌ لَا تَجُوزُ فِي الضَّحَايَا الْعَوْرَاءُ الْبَيِّنُ عَوَرُهَا، وَالْمَرِيضَةُ الْبَيِّنُ مَرَضُهَا، وَالْعَرْجَاءُ الْبَيِّنُ عَرَجُهَا، وَالْكَسِيرُ الَّتِي لَا تُنْقِي»

 • நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான்கு மிருகங்கள் உழ்ஹியாவில் செல்லுபடியாகாது, தெளிவான குருட்டுத்தன்மையுள்ள குருட்டு மிருகம், தெளிவாக நோய் விளங்கும் நோயுள்ளது, ஊனம் தெளிவாக விளங்கும் நொண்டியானது, எழும்பு மச்சை இல்லாத வயது முதிர்ந்தது.  (அஹ்மத்: 18667, அபூதாவுத்:2802)

المستدرك على الصحيحين للحاكم : عَنْ عَلِيٍّ، رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: «أَمَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نَسْتَشْرِفَ الْعَيْنَ وَالْأُذُنَ وَلَا يُضَحَّى بِمُقَابَلَةٍ وَلَا مُدَابَرَةٍ وَلَا شَرْقَاءَ وَلَا خَرْقَاءَ»

 • அலி (றழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள், மிருகங்களின் கண்ணையும், காதையும் கவனிக்குமாறு கட்டலையிட்டார்கள், மேலும் காது கிழிக்கப்பட்ட அல்லது வெட்டப்பட்ட அல்லது துளையிடப்பட்ட மிருகத்தையும், கொம்பு உடைக்கப்பட்ட மிருகத்தையும் அருத்துப் பலியிடவேண்டாம் என்றும் கட்டலையிட்டார்கள்.  (அல் ஹாகிம்: 7532)

பாலூட்டும் பிராணி

பொதுவாகவே ஆண் மாடுகளையும், மலட்டு பசுக்களையுமே குர்பானிக்காக முற்படுத்துவார்கள். அதே நேரம் சிலர் பாலூட்டும் பிராணிகளையும் வழங்க முற்படுகின்றனர். எனவே பாலூட்டும் பிராணிகளைப் பொறுத்தவரை அவைகளுக்கு கன்றுக் குட்டிகள் இருக்குமானால் கன்றை விட்டும் தாயைப் பிரிப்பது பாவமாகும். ஆனால் கன்றுகள் இல்லை எனும் போது அவற்றை தவிர்ந்து ஏனையவற்றை முற்படுத்துவதே சிறந்தது.

 • நபி (ஸல்) அவர்களும் அபூ பக்ர், உமர் (றழி) ஆகியோரும் ஓர் அன்சாரி நபித் தோழரின் வீட்டிற்கு உணவுக்காக சென்றபோது, ‘பாலூட்டும் பிராணியை அருப்பதை நான் எச்சரிக்கின்றேன்,’ என்று நபியவர்கள் கூறினார்கள்.  (முஸ்லிம்:5434)

அருப்பதற்கான நேரம்

பெருநாளைக்கான தொழுகையை முடிப்பதே ஆரம்ப நேரமாகும். தொழுகையை நிறை வேற்ற முன்னர் பலியிட்டால் அது வெறும் மாமிசமாகவே அமையும், உழ்ஹிய்யாவாக அமையாது. முடிவு நேரம் அய்யாமுத் தஷ்ரீக்குடைய நாட்களுள் கடைசி நாளான துல்ஹிஜ்ஜா மாதம் பதின் மூன்றாவது நாள் சூரிய மறைவுடனாகும். ஏனெனில் அந்த நாட்களையும் பெருநாளாகவே நபியவர்கள் கணக்கிட்டார்கள்.

 • பராஃ இப்னு ஆஸிப்(றழி) அவர்கள் கூறினார்கள்: “இன்றைய தினத்தில் நாம் முதலில் செய்ய வேண்டியது தொழுவதாகும். பிறகு (இல்லம்) திரும்பி அறுத்துப் பலியிடுதலாகும். இவ்வாறு செய்கிறவர் நம்முடைய வழிமுறையில் நடந்தவராவார். தொழுகைக்கு முன்னர் அறுக்கிறவர் அறுத்தது, தம் குடும்பத்திற்காக அவர் ஒதுக்கிய மாமிசமாகும். அது குர்பானியில் சேராது’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூ புர்தா இப்னு நியார் என்று அழைக்கப்படும் அன்ஸார்களில் ஒருவர் ‘இறைத்தூதர் அவர்களே! நான் (முன்பே) அறுத்து விட்டேன். என்னிடம் ஓராண்டு நிறைந்த ஆட்டைவிடச் சிறந்த ஆறு மாதக் குட்டி ஒன்று உள்ளது. (அதை அறுக்கலாமா?)’ என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘ஒரு வயது ஆட்டுக்குப் பதிலாக அதை நீ அறுத்துக் கொள்! இனி மேல் உன்னைத் தவிர வேறு எவருக்கும் அது பொருந்தாது” என்று விடையளித்தார்கள்.  (புஹாரி:965, முஸ்லிம்)

 عَنْ نُبَيْشَةَ الْهُذَلِىِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « أَيَّامُ التَّشْرِيقِ أَيَّامُ أَكْلٍ وَشُرْبٍ ».

 • நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அய்யாமுத் தஷ்ரீக்குடைய நாட்கள் என்பது உண்டு, பருகும் நாட்களாகும்.  (முஸ்லிம்:2733)
 • குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ் அவர்களுக்கு அளித்துள்ள (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) நாற்கால் பிராணிகள் மீது அவன் பெயரைச் சொல்(லி குர்பான் கொடுப்)பவர்களாகவும் (வருவார்கள்); எனவே அதிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; கஷ்டப்படும் ஏழைகளுக்கும் உண்ணக் கொடுங்கள். (22:28)

பலியிடுவதற்கான ஒழுக்கங்கள்

அல்லாஹ்வின் பெயர்கூறி, அல்லாஹு அக்பர் என்று கூறி அறுத்தல்.

صحيح البخاري : عَنْ أَنَسٍ، قَالَ: «ضَحَّى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِكَبْشَيْنِ أَمْلَحَيْنِ أَقْرَنَيْنِ، ذَبَحَهُمَا بِيَدِهِ، وَسَمَّى وَكَبَّرَ، وَوَضَعَ رِجْلَهُ عَلَى صِفَاحِهِمَا»

 • அனஸ்(றழி) கூறினார்கள்: நபி(ஸல்) அவர்கள் கொம்பு உள்ள இரண்டு கறுப்பு வெள்ளை செம்மறியாட்டுக் கடாக்களைக் குர்பானி கொடுத்தார்கள். அவ்விரண்டையும் தம் கரத்தால் அறுத்தார்கள். (அப்போது) அல்லாஹ்வின் பெயர் (‘பிஸ்மில்லாஹ்’) கூறினார்கள். தக்பீரும் (‘அல்லாஹு அக்பர்’) கூறினார்கள். மேலும், தம் காலை அவற்றின் பக்கவாட்டில் வைத்(துக் கொண்டு அறுத்)தார்கள்.  (புஹாரி: 5565, முஸ்லிம்) முஸ்லிமின் அறிவிப்பில் (5202)

بِاسْمِ اللَّهِ وَاللَّهُ أَكْبَرُ‘பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர்’ என்று வந்துள்ளது.

கத்தியை நன்றாக தீட்டி கூர்மையாக்குதல். அருத்த பின் மிருகத்தை ஓய்வாக விடுதல்.

صحيح مسلم عَنْ شَدَّادِ بْنِ أَوْسٍ، قَالَ: ثِنْتَانِ حَفِظْتُهُمَا عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّ اللهَ كَتَبَ الْإِحْسَانَ عَلَى كُلِّ شَيْءٍ، فَإِذَا قَتَلْتُمْ فَأَحْسِنُوا الْقِتْلَةَ، وَإِذَا ذَبَحْتُمْ فَأَحْسِنُوا الذَّبْحَ، وَلْيُحِدَّ أَحَدُكُمْ شَفْرَتَهُ، فَلْيُرِحْ ذَبِيحَتَهُ»،

 • ஷத்தாத் பின் அவ்ஸ் (றழி) அவர்கள் கூறினார்கள்: நான் நபியவர்களிடமிருந்து இரண்டு விடயங்களை மனனமிட்டேன்; நபியவர்கள் கூறினார்கள்: நிச்சியமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் அதற்குறிய உரிமையை கடமையாக்கியுள்ளான், எனவே நீங்கள் கொலை செய்தால் நல்லமுறையில் கொலை செய்யுங்கள், நீங்கள் அருத்துப் பலியிட்டால் நல்லமுறையில் அருங்கள், உங்களில் ஒருவர் (அருக்க முன்) தன் கத்தியை நன்றாக தீட்டிக் கொள்ளட்டும்,(அருத்த பின்) தன் மிருகத்தை ஓய்வாக இருக்க விடட்டும். (முஸ்லிம்:5167)
 • நபி (ஸல்) அவர்கள் குர்பானி கொடுக்க நாடிய போது ஆயிஷா (றழி) அவர்களைப் பார்த்து; ‘ஆயிஷாவே! நீ கத்தியைக் கொண்டுவா, பின்பு அதனை நன்றாக தீட்டிக் கொள்.’ என்று கூறினார்கள்.

அருக்கும் போது பிறர் துணையின்றி தனியாகவே அருக்கலாம்.

صحيح البخاري :  أَنَسٌ رَضِيَ اللَّهُ عَنْهُ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُضَحِّي بِكَبْشَيْنِ أَمْلَحَيْنِ أَقْرَنَيْنِ، وَيَضَعُ رِجْلَهُ عَلَى صَفْحَتِهِمَا وَيَذْبَحُهُمَا بِيَدِهِ»

 • அனஸ் (றழி) அவர்கள் கூறினார்: நபி(ஸல்) அவர்கள் கொம்பு உள்ள இரண்டு கறுப்பு வெள்ளை செம்மறியாட்டுக் கடாக்களைக் குர்பானி கொடுத்துவந்தார்கள். அப்போது தம் காலை அவற்றின் பக்கவாட்டில் வைத்துக்கொண்டு தம் கரத்தால் அவற்றை அறுப்பார்கள். (புஹாரி: 5564)

கத்தி போன்ற அருக்கக்கூடிய (கல் உற்பட) அனைத்தாலும் அருக்கலாம், ஆனால் எழும்பு, நகம் போன்றவற்றால் முடியாது.

 • ராபிஃ இப்னு கதீஜ்(றழி) அறிவித்தார்கள்: நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் துல் ஹுலைபாவில் தங்கியிருந்தோம். மக்களுக்குப் பசி எடுத்தது. அவர்கள் போரில் கிடைத்த செல்வங்களிலிருந்து சில ஒட்டகங்களையும் ஆடுகளையும் பெற்றார்கள். நபி(ஸல்) அவர்கள் மக்களின் பின்வரிசையில் இருந்தார்கள். மக்கள் அவசரப்பட்டு (அவற்றைப் பங்கிடுவதற்கு முன்பாகவே) அறுத்துப், பாத்திரங்களை (அடுப்பில்) ஏற்றி (சமைக்கத் தொடங்கி)விட்டனர். நபி(ஸல்) அவர்கள் (இந்த விஷயம் தெரிய வந்தவுடன்) பாத்திரங்களைக் கவிழ்க்கும் படி கட்டளையிட்டார்கள். அவ்வாறே அவை கவிழ்க்கப்பட்டு (அவற்றிலிருந்துவை வெளியே கொட்டப்பட்டு)விட்டன. பிறகு, அவற்றை அவர்கள் பங்கிட்டார்கள். பத்து ஆடுகளை ஓர் ஒட்டகத்திற்குச் சமமாக வைத்தார்கள். அப்போது ஓர் ஒட்டகம்மிரண்டு ஓடிவிட்டது. மக்கள் அதைத் தேடிச் சென்றார்கள். அது (அவர்களிடம் அகப்படாமல்) அவர்களைக் களைப்படையச் செய்துவிட்டது. மக்களிடம் குதிரைகள் குறைந்த எண்ணிக்கையில்தான் இருந்தன. ஒருவர் (நபித் தோழர்) அந்த ஒட்டகத்தைக் குறிவைத்து ஓர் அம்பை எறிந்தார். அல்லாஹ் அதை (ஓட விடாமல்) தடுத்து நிறுத்திவிட்டான். பிறகு நபி(ஸல்) அவர்கள், ‘காட்டு மிருகங்களில் கட்டுக்கடங்காதவை இருப்பது போல் இந்தப் பிராணிகளிலும் கட்டுக் கடங்காதவை சில உள்ளன. இவற்றில் உங்களை மீறிச் செல்பவற்றை இவ்வாறே செய்யுங்கள் (அம்பெறிந்து தடுத்து நிறுத்துங்கள்)” என்று கூறினார்கள். நான், ‘(ஒட்டகத்தை அறுக்க வாட்களை இன்று நாங்கள் பயன்படுத்திவிட்டால், அதன் கூர்முனை சேதமடைந்து) நாளை எங்களிடம் வாட்கள் இல்லாத நிலையில் பகைவர்களை (சந்திக்க நேரிடுமோ என்று) நாங்கள் அஞ்சுகிறோம். எனவே, நாங்கள் (கூரான) மூங்கில்களால் (இந்த ஒட்டகத்தை) அறுக்கலாமா?’ என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்), அவர்கள், ‘இரத்தத்தை ஓடச் செய்கிற எந்த ஆயுதத்தால் அறுக்கப்பட்டிருந்தாலும் (பிராணி அறுக்கப்படும் போது) அதன் மீது அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டிருக்கும் பட்சத்தில் அதை உண்ணுங்கள்; பற்களாலும் நகங்களாலும் அறுக்கப்பட்டதைத் தவிர, அதைப் பற்றி (‘அது ஏன் கூடாது’ என்று) நான் உங்களுக்குச் சொல்கிறேன்; பல்லோ எலும்பாகும்; நகங்களோ அபிசீனியர்களின் (எத்தியோப்பியர்களின்) கத்திகளாகும்” என்று கூறினார்கள்.  (புஹாரி: 2488, முஸ்லிம்)
 • கஃப் இப்னு மாலிக் (றழி) கூறினார்கள்:ஒரு பெண் ஓர் ஆட்டைக் (கூர்மையான) கல் ஒன்றினால் அறுத்தார். அது குறித்து நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அவர்கள் அதை உண்ணும்படி உத்தரவிட்டார்கள்.  (புஹாரி: 5504)

அருக்கும் போது கிப்லாவை முன்னோக்கி  வைப்பது கடமையல்ல, அதற்கு நிபந்தனை இடுவதற்கு எந்த ஹதீஸ்களும் வரவில்லை. கிப்லாவை முன்னோக்காமல் அருத்ததையும் சாப்பிடலாம்.

கூட்டாக உழ்ஹிய்யா வணக்கத்தை நிறைவேற்றல்

உழ்ஹிய்யா வணக்கத்தைப் பொருத்தவரை ஆடு தவிர்ந்த மாடு, ஒட்டகத்தில் ஏழு பேர் சேர்ந்து கொடுக்க முடியும், ஆனால் சிலர் அப்படி கொடுக்க முடியாது என்று கூறுகின்றனர், ஆனால் அப்படி கொடுப்பதற்கு தெளிவான ஆதரங்கள் வந்திருக்கின்றன.

صحيح مسلم : عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ، قَالَ: «نَحَرْنَا مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَامَ الْحُدَيْبِيَةِ الْبَدَنَةَ عَنْ سَبْعَةٍ، وَالْبَقَرَةَ عَنْ سَبْعَةٍ»

 • ஜாபிர் (றழி) அவர்கள் கூறினார்கள்: நாங்கள் நபிகளாருடன் ஹுதைபியா உடன்படிக்கை நடந்த ஆண்டு ஒரு ஒட்டகத்தை ஏழு பேருக்காகவும் மாட்டை ஏழு பேருக்காகவும் அருத்துப் பலியிட்டோம்.  (முஸ்லிம்:3246)

سنن الترمذي : عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ، فَحَضَرَ الأَضْحَى، فَاشْتَرَكْنَا فِي البَقَرَةِ سَبْعَةً، وَفِي الجَزُورِ عَشَرَةً.

 • இப்னு அப்பாஸ் (றழி) அவர்கள் கூறினார்கள்:நாங்கள் நபிகளாரோடு ஒரு பயணத்தில் இருந்த போது, ஹஜ்ஜுப் பெருநாள் வந்தது, அப்போது நாங்கள் மாட்டில் ஏழு பேரும், ஒட்டகத்தில் பத்து பேரும் சேர்ந்து (உழ்ஹிய்யா) கொடுத்தோம்.  (திர்மிதீ:905)

இந்த ஹதீஸ்களை நோக்கும் போது கூட்டக சேர்ந்து ஒரு மாட்டையும், ஒரு ஒட்டகத்தையும் ஏழு பேருக்கு வழங்க முடியும் என்பது தெளிவாகின்றது, அதே நேரம் ஒரு ஒட்டகத்தில் பத்து பேர் சேர முடியும் என்பதும் தெரிகின்றது. அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்.

அருத்து முடிந்த பின் செய்ய வேண்டியது.

அதன் மாமிசத்தை முறையாக பங்கு வைத்தல், தானாகவும் செய்யலாம், பிறரையும் சாட்டிவிடலாம்.

صحيح البخاري : عن عَلِيًّ رَضِيَ اللَّهُ عَنْهُ أَخْبَرَهُ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَهُ أَنْ يَقُومَ عَلَى بُدْنِهِ، وَأَنْ يَقْسِمَ بُدْنَهُ كُلَّهَا، لُحُومَهَا وَجُلُودَهَا وَجِلاَلَهَا، وَلاَ يُعْطِيَ فِي جِزَارَتِهَا شَيْئًا»

 • அலீ (றழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி(ஸல்) அவர்கள் தங்களின் குர்பானி ஒட்டகங்களை பலியிடுமாறும் அவற்றின் இறைச்சி, தோல், சேணம் ஆகிய அனைத்தையும் பங்கிடுமாறும் உரிப்பதற்குக் கூலியாக, அவற்றில் எதையும் கொடுக்கக் கூடாது என்றும் எனக்குக் கட்டளையிட்டார்கள்.

இறைச்சியில் ஒரு பகுதியை தனக்கு வைத்துக் கொண்டு, ஒரு பகுதியை ஏழைகளுக்கு கொடுப்பதும், மாமிசத்தை சேமித்து வைப்பதும் ஆகுமானதே.

 • குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ் அவர்களுக்கு அளித்துள்ள (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) நாற்கால் பிராணிகள் மீது அவன் பெயரைச் சொல்(லி குர்பான் கொடுப்)பவர்களாகவும் (வருவார்கள்); எனவே அதிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; கஷ்டப்படும் ஏழைகளுக்கும் உண்ணக் கொடுங்கள்.  (22:28)
 • இன்னும் (குர்பானிக்கான) ஒட்டகங்கள்; அவற்றை உங்களுக்காக அல்லாஹ்வின் அடையாளங்களிலிருந்தும் நாம் ஆக்கியிருக்கிறோம்; உங்களுக்கு அவற்றில் மிக்க நன்மை உள்ளது; எனவே (அவை உரிய முறையில்) நிற்கும் போது அவற்றின் மீது அல்லாஹ்வின் பெயரைச் சொல்(லி குர்பான் செய்)வீர்களாக; பிறகு, அவை தங்கள் பக்கங்களின் மீது சாய்ந்து கீழே விழுந்(து உயிர் நீத்)த பின் அவற்றிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; (வறுமையிலும் கையேந்தாமல் இருப்பதைக் கொண்டு) திருப்தியாய் இருப்போருக்கும், இறப்போருக்கும் உண்ணக் கொடுங்கள் – இவ்விதமாகவே, நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறோம்.  (22:36)

தவிர்க்கப்பட வேண்டியது

அருக்கப்படும் மிறுகத்தின் எந்தப் பகுதியையும், அருக்கும் பனியில் ஈடுபடுவோருக்கு கூழியாக வழங்கக் கூடாது.

 • அலீ (றழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி(ஸல்) அவர்கள் தங்களின் குர்பானி ஒட்டகங்களை பலியிடுமாறும் அவற்றின் இறைச்சி, தோல், சேணம் ஆகிய அனைத்தையும் பங்கிடுமாறும் உரிப்பதற்குக் கூலியாக, அவற்றில் எதையும் கொடுக்கக் கூடாது என்றும் எனக்குக் கட்டளையிட்டார்கள்.

மாற்று மதத்தவர்கள் மனதை நோகடித்தல்.

நாம் மாற்று மத சகோதரர்களுடன் சேர்ந்து வாழ்வதனால் அவர்கள் நாம் அருக்கும் மிருகங்களை கண்ணியப் படுத்துபவர்களாகவும், கடவுலாக எடுத்து வணங்கும் நிலையும் காணப்படுவதனால் மிகக் கவனமாக அவர்களின் மனசு நோகாத வகையிலேயே நடந்து கொள்ள வேண்டும். எழும்புகளை நடமாடும் இடங்களில் வீசிவிடுவது, இரத்தம் வடியும் நிலையில் மாமிசத்தை எடுத்துச் செல்வது, மக்கள் பார்க்கும் அளவு அதனை சுமந்து செல்வது போன்ற வற்றை தவிர்த்துக் கொள்வது போன்ற விடையங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

 • அவர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் திட்டாதீர்கள்; (அப்படித் திட்டினால்) அவர்கள் அறிவில்லாமல், வரம்பை மீறி அல்லாஹ்வைத் திட்டுவார்கள் – இவ்வாறே ஒவ்வொரு சமூகத்தாருக்கும் அவர்களுடைய செயலை நாம் அழகாக ஆக்கியுள்ளோம்.  (6:108)

இந்த ஒழுக்கங்களை பேனி இஸ்லாம் சொன்ன பிறகாரம் உழ்ஹிய்யா வணக்கத்தை மேற்கொள்வோம்.

வ ஆகிரு தஃவானா அனில் ஹம்து லில்லாஹி றப்பில் ஆலமீன்.

M. S. M MURSHID ABBASI              08- 10- 2013

Related Posts

4 thoughts on “உழ்ஹிய்யாவும் அதன் சட்டங்களும்

 1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு….. ஒரு குடும்பத்தலைவர் தன் குடும்ப அங்கத்தவர் அனைவருக்கும் தான் கொடுக்கும் குர்பானியின் நன்மை கிடைக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? ஒரு குடும்பத்தலைவர் குர்பனி கொடுப்பதாக இருந்தாள் அந்த குடும்பத்திள் உள்ளா அனைவரும் நகம்,முடி வெட்டக்கூடாதா? அல்லது அவர் மட்டும் நகம்,முடி வெட்டக்கூடாதா?

 2. You are so cool! I don’t believe I have read something like this before.
  So nice to find another person with genuine thoughts on this subject matter.

  Really.. many thanks for starting this up. This site is one thing
  that’s needed on the web, someone with a bit of originality!

 3. Thanks for this article. I’d personally also like to talk about the fact that it can become hard when you are in school and simply starting out to establish a long history of credit. There are many pupils who are only trying to live and have an extended or beneficial credit history is often a difficult element to have.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *