கஸ்ரு, ஜம்உ
பயணிகளின் தொழுகை, கஸ்ரு (சுருக்கித் தொழுதல்), ஜம்உ (சேர்த்து தொழுதல்).
இஸ்லாத்தின் சிறப்பம்சங்களுல் கஸ்ரு, ஜம்உ மிக முக்கியமானதாகும், பயணிகளின் கஷ்டத்தைக் கறுத்தில் கொண்டு இந்த சலுகையை இஸ்லாம் வழங்கியுள்ளது.
கஸ்ரு (சுறுக்கித் தொழுதல்):-
நான்கு ரக்அத்களைக்கொண்ட தொழுகைகளை (லுஹர், அசர், இஷா) இரண்டாக சுறுக்கித் தொழுவது. சுபஹ், மGக்ரிப் தொழுகைகளை சுறுக்கமுடியாது.அது ஒரு சலுகை (ருக்Hஸத்) ஆகும்
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: «فُرِضَتِ الصَّلاَةُ رَكْعَتَيْنِ، ثُمَّ هَاجَرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَفُرِضَتْ أَرْبَعًا، وَتُرِكَتْ صَلاَةُ السَّفَرِ عَلَى الأُولَى صحيح البخاري »
ஆயிஷா (றழி) அவர்கள் கூறினார்கள்: ‘ஆரம்பத்தில் தொழுகை இரண்டு ரக்அத்களாகவே கடமையாக்கப்பட்டது, பிறகு நபிகளார் ஹிஜ்ரத் செய்து (மதீனா சென்ற) போது அது நான்காக கடமையாக்கப்பட்டு, பயணத் தொழுகை இரண்டாகவே கடமையாக்கப்பட்டது. (புஹாரி:1090,3935, முஸ்லிம்)
நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்: “அதை (சுறுக்கித் தொழுவது) அல்லாஹ் உங்களுக்கு கொடையாக தந்துள்ளான், அவனது கொடையை ஏற்றுக்கொள்ளுங்கள்.” (முஸ்லிம்)
இதற்கு ஏராலமான சான்றுகள் வந்துள்ளன, தேவை உள்ள நேரத்தில் இதை செய்வதுதான் நபி வழி, நபிகளார் செய்த ஒன்றில் செய்யாமல் வீன் பேனுதல் காட்டக் கூடாது.
عَنْ عَائِشَةَ، قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَمَرَهُمْ، أَمَرَهُمْ مِنَ الأَعْمَالِ بِمَا يُطِيقُونَ، قَالُوا: إِنَّا لَسْنَا كَهَيْئَتِكَ يَا رَسُولَ اللَّهِ، إِنَّ اللَّهَ قَدْ غَفَرَ لَكَ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَأَخَّرَ، فَيَغْضَبُ حَتَّى يُعْرَفَ الغَضَبُ فِي وَجْهِهِ، ثُمَّ يَقُولُ: «إِنَّ أَتْقَاكُمْ وَأَعْلَمَكُمْ بِاللَّهِ أَنَا» صحيح البخاري
ஆயிஷா (றழி)அவர்கள் கூறினார்கள்: ‘நபியவர்கள், அவர்களுக்கு (தோழர்களுக்கு) ஏவினால், செய்ய முடியுமான வற்றையே ஏவுவார்கள், தோழர்கள் கூறுவார்கள்: அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்களைப் போல் இல்லை, அல்லாஹ் உங்களது முன் பின் பாவங்களை மண்ணித்துவிட்டான்’ என்று கூறுவார்கள், அப்போது நபியவர்கள் அவர்களின் முகத்தில் கோபம் தென்படும் அளவுக்கு கோபப்படுவார்கள், பிறகு : “உங்களில் மிக இறையச்சம் உள்ளவனும், அல்லாஹ்வை மிக அறிந்தவனும் நானே!, என்று (கண்டிக்கும் விததில்) கூறுவார்கள்.’ (புஹாரி:20)
அதற்கான ஆதாரங்கள்;
{وَإِذَا ضَرَبْتُمْ فِي الْأَرْضِ فَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَنْ تَقْصُرُوا مِنَ الصَّلَاةِ إِنْ خِفْتُمْ أَنْ يَفْتِنَكُمُ الَّذِينَ كَفَرُوا إِنَّ الْكَافِرِينَ كَانُوا لَكُمْ عَدُوًّا مُبِينًا } [النساء: 101]
மூமின்களே! நீங்கள் பூமியில் பிரயாணம் செய்தால், நீங்கள் நிராகரிப்போர் துன்புறுத்துவார்கள் எனப் பயந்தால் சுறுக்கித் தொழுவதில் உங்கள் மீது குற்றமில்லை, .(2:101)
عَنْ يَعْلَى بْنِ أُمَيَّةَ، قَالَ: قُلْتُ لِعُمَرَ بْنِ الْخَطَّابِ: {لَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَنْ تَقْصُرُوا مِنَ الصَّلَاةِ، إِنْ خِفْتُمْ أَنْ يَفْتِنَكُمُ الَّذِينَ كَفَرُوا} فَقَدْ أَمِنَ النَّاسُ، فَقَالَ: عَجِبْتُ مِمَّا عَجِبْتُ مِنْهُ، فَسَأَلْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ذَلِكَ، فَقَالَ «صَدَقَةٌ تَصَدَّقَ اللهُ بِهَا عَلَيْكُمْ، فَاقْبَلُوا صَدَقَتَهُ»
யஃலா பின் உமையா (றழி) அவர்கள், உமர் (ரழி) அவர்களிடம் 2:101 வசனத்தை ஓதிக் காட்டி, ‘இன்று மக்களுக்கு பயம் இல்லையே? என்று கேட்டபோது, உமரவர்கள்: நீங்கள் ஆச்சர்யப்பட்டதிலிருந்து நானும் ஆச்சர்யப்பட்டு, நபிகளாரிடம் அது பற்றிக் கேட்டேன், நபியவர்கள்: “அதை (சுறுக்கித் தொழுவது) அல்லாஹ் உங்களுக்கு கொடையாக தந்துள்ளான், அவனது கொடையை ஏற்றுக்கொள்ளுங்கள்.” என்றார்கள். (முஸ்லிம்)
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: «صَلَّيْتُ الظُّهْرَ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْمَدِينَةِ أَرْبَعًا، وَبِذِي الحُلَيْفَةِ رَكْعَتَيْنِ» صحيح البخاري
அனஸ் (றழி)அவர்கள் கூறினார்கள்: ‘நபியவர்கள் மதீனாவில் லுஹரை நான்காக தொழுதார்கள், தில்ஹுலைபாவில் அசரை இரண்டாக (சுறுக்கி) தொழுதார்கள்.’ (புஹாரி:1089, 1546, முஸ்லிம்)
أَنَسًا، يَقُولُ: ” خَرَجْنَا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ المَدِينَةِ إِلَى مَكَّةَ فَكَانَ يُصَلِّي رَكْعَتَيْنِ رَكْعَتَيْنِ حَتَّى رَجَعْنَا إِلَى المَدِينَةِ، قُلْتُ: أَقَمْتُمْ بِمَكَّةَ شَيْئًا؟ قَالَ: أَقَمْنَا بِهَا عَشْرًا ” صحيح البخاري
அனஸ் (றழி)அவர்கள் கூறினர்கள்: ‘நாங்கள் நபிகளாரோடு மதீனாவிலிருந்து மக்காவுக்கு போனோம், அவர்கள் திறும்பி வரும் வரை இரண்டிரண்டாகவே தொழுதார்கள்.எத்தனை நாட்கள் அங்கு இருந்தார்கள் என்று கேட்கப்பட்டபோது, பத்து நாட்கள் இருந்தார்கள். என்று கூறினார்கள்.’ (புஹாரி:1081, முஸ்லிம்)
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: «صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمِنًى رَكْعَتَيْنِ، وَأَبِي بَكْرٍ، وَعُمَرَ وَمَعَ عُثْمَانَ صَدْرًا مِنْ إِمَارَتِهِ ثُمَّ أَتَمَّهَا» صحيح البخاري
இப்னு உமர் (றழி)அவர்கள் கூறினார்கள்: ‘ நபியவர்கள் மினாவிலும் வேறு இடங்களிலும் இரண்டு ரக்அத்களையே தொழுதார்கள், அபூபக்ர், உமர் (றழி) ஆகியோரும் இரண்டே தொழுதனர், உஸ்மான் (றழி) அவர்கள் தன் ஆட்சியின் ஆரம்பப் பகுதியில் இரண்டாக தொழுதுவிட்டு பிறகு நான்காக பூரணப்படுத்தினார்கள்.’ (புஹாரி:1082, முஸ்லிம்)
இதற்கு ஏறாலமான ஹதீஸ்களைப் பர்க்கமுடியும்.
சுறுக்கித் தொழுவதற்கான தூரம்
தூர எல்லயைப் பொறுத்தவரை அதைக் குறிப்பிட்டு சில ஹதீஸ்கள் வந்திருந்தாலும், வளக்கில் பயணம் என்று சொல்லப்படுவதில் சுறுக்கமுடியும் என்பது தெழிவாக விளங்கும் விடயமாகும். அதேநேரம் நபியவர்களது சுருக்கித் தொழுத மிகக் குறைந்த தூரமாக ‘சுமாராக இருபத்தி ஐந்து மைல், பதின் ஆறரை கிலோ மீட்டர்’ இருக்கின்றது.
மூமின்களே! நீங்கள் பூமியில் பிரயாணம் செய்தால், நீங்கள், நிராகரிப்போர் துன்புறுத்துவார்கள் எனப் பயந்தால் சுறுக்கித் தொழுவதில் உங்கள் மீது குற்றமில்லை .(2:101)
عَنْ يَحْيَى بْنِ يَزِيدَ الْهُنَائِيِّ، قَالَ: سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، عَنْ قَصْرِ الصَّلَاةِ، فَقَالَ: «كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا خَرَجَ مَسِيرَةَ ثَلَاثَةِ أَمْيَالٍ، أَوْ ثَلَاثَةِ فَرَاسِخَ صَلَّى رَكْعَتَيْنِ» صحيح مسلم
அனஸ் (றழி)அவர்கள் கூறினார்கள்: ‘நபியவர்கள் மூன்று மைல் அல்லது மூன்று பர்சக் தூரம் போனால் இரண்டு ரக்அத்தாக தொழுவார்கள்.’ (முஸ்லிம்)
மூன்று பர்சக் என்பது கிட்டத்தட்ட பதின் ஆறரை கிலோ மீட்டர் ஆகும். எனவே சுமாராக இருபத்தி ஐந்து மைல் சேர்த்துக் கொள்ளும் இந்த அளவே நபிகளாரைத்தொட்டு மிகக் குறைந்த அளவில் வந்துள்ளது.அல்லாஹு அஃலம்!!!
ஸஹாபாக்கள் சுறுக்கித் தொழுத தூர எல்லைகளும் பல விதமாக முறன்பட்டு வந்துள்ளது, எனவே ஆகக் குறைந்த அளவு என்ற அடிப்படையில் இதுவே ஸஹீஹாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஹதீஸுக்கு “இது பயணத்தின் ஆரம்ப எல்லை” என்று ஒரு விளக்கம் சொல்லப்பட்டாலும், பின்னால் வரும் ஹதீஸ் அதை மறுக்கின்றது.
عَنْ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، قَالَ: خَرَجْتُ مَعَ شُرَحْبِيلَ بْنِ السِّمْطِ إِلَى قَرْيَةٍ عَلَى رَأْسِ سَبْعَةَ عَشَرَ، أَوْ ثَمَانِيَةَ عَشَرَ مِيلًا، فَصَلَّى رَكْعَتَيْنِ، فَقُلْتُ لَهُ: فَقَالَ: رَأَيْتُ عُمَرَ صَلَّى بِذِي الْحُلَيْفَةِ رَكْعَتَيْنِ، فَقُلْتُ لَهُ: فَقَالَ: «إِنَّمَا أَفْعَلُ كَمَا رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَفْعَلُ» صحيح مسلم
ஜுபைர் அவர்கள் கூறினார்கள் : ‘ஷுரஹ்பீல் என்பவரோடு பதினேழு அல்லது பதினெட்டு மைல் தூர உள்ள ஒரு ஊருக்கு போனபோது, அவர் இரண்டாக சுறுக்கித் தொழுதார், நான் காரணம் கேட்க, அவர்கள் கூறினார்கள்: ‘நான் உமர் (றழி) அவர்களோடு தில் ஹுலைபா என்ற இடத்துக்கு போனபோது, அவர்கள் சுறுக்கித் தொழுதார்கள், நான் காரணம் கேட்டபோது, ‘நபிகளார் செய்வதை நான் பார்த்தது போன்றே செய்கின்றேன்.’ என்று கூறினார்கள்.’ என்று கூறினார். (முஸ்லிம்)
وَكَانَ ابْنُ عُمَرَ، وَابْنُ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمْ، يَقْصُرَانِ، وَيُفْطِرَانِ فِي أَرْبَعَةِ بُرُدٍ وَهِيَ سِتَّةَ عَشَرَ فَرْسَخًا صحيح البخاري
இப்னு உமர், இப்னு அப்பாஸ் (றழி) ஆகியோர் பதினாறு பர்சக் (84,கிலோ மீட்டர், 48மைல்)போனால் சுருக்குவார்களாம். .(புகாரி, குறிப்பு செய்தி)
சுருக்கித் தொழுவதற்கு குறிப்பிட்ட எல்லையை நிபந்தனையிடும் ஒரு ஹதீஸ் வந்திருந்தாலும் அது பலவீனமானதாகும்.
عَنِ ابْنِ عَبَّاسٍ , أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «يَا أَهْلَ مَكَّةَ لَا تَقْصُرُوا الصَّلَاةَ فِي أَدْنَى مِنْ أَرْبَعَةِ بُرُدٍ مِنْ مَكَّةَ إِلَى عَسْفَانَ» سنن الدارقطني
நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்:”மக்கா வாசிகளே! நான்கு பர்துகளுக்கு (பதினாறு பர்சக்) குறைந்த தூரத்தில் நீங்கள் சுறுக்க வேண்டாம்.” (தாரகுத்னீ:1447)
இந்தஹதீஸ் மிகவும் பலவீனமானதாகும், அதன் அறிவிப்பாளர்களுள் பலர் விமர்சிக்கப்பட்டிருப்பதோடு, ‘அப்துல் வஹ்ஹாப்‘ என்பவர் பொய்யர் என்று விமர்சிக்கப்பட்டுள்ளார்.
மேலும் தன் ஊர் எல்லையை விட்டு வெளியேரிய பிறகே சுறுக்கமுடியும், ஏனெனில் நபியவர்கள் எந்தப் பயணத்திலும் ஊருக்குள் சுறுக்கிவிட்டுச் செல்லவில்லை, மாறாக வெளியேரிய பிறகே சுறுக்கியுள்ளார்கள்.
அனஸ் (றழி)அவர்கள் கூறினர்கள்: ‘நபியவர்கள் மதீனாவில் லுஹரை நான்காக தொழுதார்கள், தில்ஹுலைபாவில் அசரை இரண்டாக (சுறுக்கி) தொழுதார்கள்.’ (புஹாரி, முஸ்லிம்)
தில்ஹுலைபா: என்பது மதீன எல்லைக்கு வெளியில் உள்ள உராகும்.
எவ்வளவு காலத்துக்கு சுறுக்கமுடியும் என்றால், ஒருவர் பயணியாக இருக்கும் காலமெல்லாம் சுறுக்கமுடியும், ஒருவர் ஒரு தேவைக்காக பயணிக்கின்றார், அந்தத் தேவை பூர்த்தியாகும் வரை அவர் பயணியாக இருக்கின்றார். அதே நேரம் குறிப்பிட்ட காலம் ஒரு இடத்தில் தங்கும் உருதியோடு இருந்தால் அவர் பூர்த்தியாக தொழுவார்.
عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: «أَقَامَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تِسْعَةَ عَشَرَ يَقْصُرُ، فَنَحْنُ إِذَا سَافَرْنَا تِسْعَةَ عَشَرَ قَصَرْنَا، وَإِنْ زِدْنَا أَتْمَمْنَا» صحيح البخاري
இப்னு அப்பாஸ் (றழி)அவர்கள் கூறினார்கள்: ‘நபியவர்கள் 19 நாட்கள் சுறுக்கி தொழுதார்கள், நாங்களும் பயணம் செய்தால் 19 நாளைக்கு சுறுக்குவோம், அதை விட அதிகமாக இருந்தால் பூரணப் படுத்துவோம்.’ (புஹாரி:1080,4298)
அனஸ் (றழி)அவர்கள் கூறினார்கள்: ‘நாங்கள் நபிகளாரோடு மதீனாவிலிருந்து மக்காவுக்கு போனோம், அவர்கள் திறும்பி வரும் வரை இரண்டிரண்டாகவே தொழுதார்கள்.’ எத்தனை நாற்கள் அங்கு இருந்தீர்கள்? எனக் கேட்டபோது, பத்து நாற்கள் என்று கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்)
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: «أَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِتَبُوكَ عِشْرِينَ يَوْمًا يَقْصُرُ الصَّلَاةَ» مسند أحمد
ஜாபிர் (றழி) அவர்கள் கூறினார்கள்: ‘நபியவர்கள் தபூக்கில் தொழுகையை சுறுக்குபவர்களாக இருபது நாற்கள் தங்கியிருந்தார்கள்.’ (அஹ்மத்:14139, அபூதாவுத்)
பயணிகளும், சுன்னத் தொழுகையும்.
பயணம் செய்பவருக்கு முன் பின் சுன்னத்களை விடுவதில் சலுகை உள்ளது. ஆனாலும் சுபஹின் முன் சுன்னத், இரவுத் தொழுகை, லுஹா போன்றவற்றை தொழுவார்.
أَبَا مُوسَى مِرَارًا يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا مَرِضَ العَبْدُ، أَوْ سَافَرَ، كُتِبَ لَهُ مِثْلُ مَا كَانَ يَعْمَلُ مُقِيمًا صَحِيحًا» صحيح البخاري
நபி (ஸல்) அவர்கள்கூறினாரகள்: “ஒரு அடியான் நோய்வாய்ப்பட்டால் அல்லது பயணம் செய்தால், அவன் சுகதேகியாகவும் , ஊரிலிருக்கும் போதும் செய்த வணக்கத்தைப் போன்று, அவனுக்கு அல்லாஹ் கொடுக்கின்றான்.” (புஹாரி:2996).
عَنْ حَفْصِ بْنِ عَاصِمٍ، قَالَ: مَرِضْتُ مَرَضًا، فَجَاءَ ابْنُ عُمَرَ يَعُودُنِي، قَالَ: وَسَأَلْتُهُ عَنِ السُّبْحَةِ فِي السَّفَرِ، فَقَالَ: «صَحِبْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي السَّفَرِ، فَمَا رَأَيْتُهُ يُسَبِّحُ»، وَلَوْ كُنْتُ مُسَبِّحًا لَأَتْمَمْتُ، وَقَدْ قَالَ اللهُ تَعَالَى: {لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللهِ أُسْوَةٌ حَسَنَةٌ} [الأحزاب: 21] صحيح مسلم
இப்னு உமர் (றழி)அவர்கள் கூறினார்கள்: ‘நான் நபிகளாரோடு பயணத்தில் இருந்திருக்கின்றேன், அவர்கள் (மரணிக்கும் வரை) (முன் பின்)சுன்னத் தொழுததை நான் பார்த்ததில்லை, நான் சுன்னத் தொழுவதாக இருந்தால் தொழுகையைப் பூர்த்தியாக்குவேன், (சுறுக்க மாட்டேன்) நிச்சியமாக அல்லாஹ் கூறியுள்ளான்: “அல்லாஹ்வின் தூதரிடத்தில் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கின்றது .”(முஸ்லிம்)
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: «رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَعْجَلَهُ السَّيْرُ يُؤَخِّرُ المَغْرِبَ، فَيُصَلِّيهَا ثَلاَثًا، ثُمَّ يُسَلِّمُ، ثُمَّ قَلَّمَا يَلْبَثُ حَتَّى يُقِيمَ العِشَاءَ، فَيُصَلِّيهَا رَكْعَتَيْنِ، ثُمَّ يُسَلِّمُ وَلاَ يُسَبِّحُ بَعْدَ العِشَاءِ حَتَّى يَقُومَ مِنْ جَوْفِ اللَّيْلِ» صحيح البخاري
இப்னு உமர் (றழி) அவர்கள் கூறினார்கள்: நான் நபியவர்களைப் பார்த்திருக்கின்றேன், அவர்கள் அவசரமாக பயணம் செய்யவேண்டியிருந்தால் மக்ரிபை பிற்படுத்தி, மூன்றாக தொழுவார்கள், ஸலாம் கொடுத்த பிறகு, சிரிது நேரத்தில் இஷாவுக்காக இகாமத் சொல்லி இரண்டாகத் தொழுவார்கள், இஷாவுக்குப் பிறகு, இரவின் நடுவில் (தொழுகைக்காக) எழும்பும் வரை எந்தத் தொழுகையும் தொழமாட்டார்கள்.’ (புஹாரி:1091,1092)
இதற்கும் ஏராளமான சான்றுகள் வந்துள்ளன, தேவை உள்ள நேரத்தில் இதை செய்வதுதான் நபி வழி, நபிகளார் செய்த ஒன்றில் செய்யாமல் வீண் பேணுதல் காட்டக் கூடாது.
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ رَضِيَ اللهُ عَنْهُمَا، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ عَامَ الْفَتْحِ إِلَى مَكَّةَ فِي رَمَضَانَ فَصَامَ حَتَّى بَلَغَ كُرَاعَ الْغَمِيمِ، فَصَامَ النَّاسُ، ثُمَّ دَعَا بِقَدَحٍ مِنْ مَاءٍ فَرَفَعَهُ، حَتَّى نَظَرَ النَّاسُ إِلَيْهِ، ثُمَّ شَرِبَ، فَقِيلَ لَهُ بَعْدَ ذَلِكَ: إِنَّ بَعْضَ النَّاسِ قَدْ صَامَ، فَقَالَ: «أُولَئِكَ الْعُصَاةُ، أُولَئِكَ الْعُصَاةُ» صحيح مسلم
ஜாபிர் (றழி)அவர்கள் அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றிக்காக ரமழான் மாதத்தில் நோன்பு பிடித்தவராக வெளியேரினார்கள். மக்களும் நோன்பு பிடித்திருந்தனர். குராஉல் கGமீம் என்ற இடத்தை அடைந்ததும், தண்ணீர் குவலை ஒன்றை எடுத்து, மக்களுக்கு தென்படும் அளவில் குடித்தார்கள், பிறகு சிலர் (கஷ்டப்பட்டவர்களாக) நோன்பை தொடர்கின்றனர், என்று கூறப்பட்டது, அப்போது நபியவர்கள்: அவர்கள் பாவிகள், அவர்கள் பாவிகள்.’ என்று கூறினார்கள். (முஸ்லிம்)
பயணத்தில் லுஹாத் தொழுகை
أَنَّ أُمَّ هَانِئٍ بِنْتَ أَبِي طَالِبٍ، أَتَتْ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ …….. ثُمَّ صَلَّى ثَمَانَ رَكَعَاتٍ سُبْحَةَ الضُّحَى» صحيح مسلم
‘நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது உம்மு ஹானிஃ அவர்களின் வீட்டில் எட்டு ரக்அத் ளுஹா தொழுதார்கள்’ (புஹாரி முஸ்லிம்)
பயணத்தில் இரவுத் தொழுகையும், வித்ர் தொழுகையும்.
عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي فِي السَّفَرِ عَلَى رَاحِلَتِهِ، حَيْثُ تَوَجَّهَتْ بِهِ يُومِئُ إِيمَاءً صَلاَةَ اللَّيْلِ، إِلَّا الفَرَائِضَ وَيُوتِرُ عَلَى رَاحِلَتِهِ» صحيح البخاري
இப்னு உமர் (றழி)அவர்கள் கூறினார்கள்: ‘நபியவர்கள் பயணத்தில் தன் வாகனத்தில் இருந்தவாறே, அது செல்லும் திசையை நோக்கி, பர்ளுகளைத் தவிர உள்ள இரவுத் தொழுகையை சாடை செய்யும் நிலையில் தொழுவார்கள், வித்ரையும் வாகனத்தின் மீதே தொழுவார்கள்.’ (புஹாரி:1000, முஸ்லிம்)
நபியவர்கள் லுஹருக்கு முன்னுள்ள இரு ரக்அத்களையும் பயணத்தில் விடவேமாட்டார்கள் என ஒரு ஹதீஸ் வந்துள்ளது அது மிகவும் பலவீனமானதாகும்.
நபில் தொழுகைகளை வாகனத்தில் இருந்தவாறு, பயணம் செய்யும் திசையை நோக்கித் தொழமுடியும். ஆனால் பர்ளு தொழ விறும்பினால் வாகனத்திலிருந்து இறங்கி, கிப்ழாவை முன்னோக்கவேண்டும்.
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي عَلَى رَاحِلَتِهِ، حَيْثُ تَوَجَّهَتْ فَإِذَا أَرَادَ الفَرِيضَةَ نَزَلَ فَاسْتَقْبَلَ القِبْلَةَ» صحيح البخاري
ஜாபிர் (றழி)அவர்கள் கூறினார்கள்: ‘நபியவர்கள் தன் வாகனத்தில் இருந்தவாறே, அது செல்லும் திசையை நோக்கி (சுன்னத்) தொழுவார்கள், பர்ளைத் தொழ விரும்பினால், கீழிறங்கி கிப்ளாவை முன்னோக்குவார்கள். (புஹாரி:400, முஸ்லிம்)
ஜம்உ (சேர்த்துத்) தொழுதல்.
ளுஹர், அசரை சேர்த்தும், மக்Gரிப், இஷாவை சேர்த்தும் தொழமுடியும். சுபஹை எதனுடனும் சேர்க்கவோ, அசர், மக்Gரிபை சேர்க்கவோ கூடாது.சேர்க்கும் போது முற்படுத்தியோ, பிற்படுத்தியோ சேர்க்கலாம். இது சுறுக்கித் தொழுவது போன்றல்ல, மாறாக அவரது வசதியைப் பொருத்து விறும்பினால் செய்துகொள்ளலாம்.
அதற்கான ஆதாரங்கள்
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا ارْتَحَلَ قَبْلَ أَنْ تَزِيغَ الشَّمْسُ أَخَّرَ الظُّهْرَ إِلَى وَقْتِ العَصْرِ، ثُمَّ يَجْمَعُ بَيْنَهُمَا، وَإِذَا زَاغَتْ صَلَّى الظُّهْرَ ثُمَّ رَكِبَ» صحيح البخاري
அனஸ் (றழி) அவர்கள் கூறினார்கள்: ‘ நபியவர்கள் சூறியன் உச்சியிலிருந்து சாய முன் பயணம் செய்தால் லுஹரை அசர் வரை பிற்படுத்தி, இரண்டையும் சேர்த்து தொழுவார்கள். சூறியன் சாய்ந்து விட்டால் லுஹரைத் தொழுதுவிட்டு, பயணம் செய்வார்கள்.’ (புஹாரி:1111,1112, முஸ்லிம்)
عَنْ أَنَسٍ، قَالَ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَرَادَ أَنْ يَجْمَعَ بَيْنَ الصَّلَاتَيْنِ فِي السَّفَرِ، أَخَّرَ الظُّهْرَ حَتَّى يَدْخُلَ أَوَّلُ وَقْتِ الْعَصْرِ، ثُمَّ يَجْمَعُ بَيْنَهُمَا» صحيح مسلم
அனஸ் (றழி) அவர்கள் கூறினார்கள்: ‘ நபியவர்கள் பயணத்தில் சேர்த்து தொழ விரும்பினால் அஸரின் ஆரம்ப நேரம் வரை லுஹரை பிற்படுத்தி, பிறகு இரண்டையும் சேர்த்து தொழுவார்கள்.’ (முஸ்லிம்)
عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَجْمَعُ بَيْنَ صَلاَةِ الظُّهْرِ وَالعَصْرِ، إِذَا كَانَ عَلَى ظَهْرِ سَيْرٍ وَيَجْمَعُ بَيْنَ المَغْرِبِ وَالعِشَاءِ» صحيح البخاري
இப்னு அப்பாஸ் (றழி)அவர்கள் கூறினார்கள்: ‘நபியவர்கள் பயணத்தில் இருந்தால் லுஹரையும் அசரையும் சேர்த்து தொழுவார்கள், இஷாவையும், மக்Gரிபையும் செர்த்து தொழுவார்கள்.’ (புஹாரி: 1107)
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَجْمَعُ بَيْنَ صَلاَةِ المَغْرِبِ وَالعِشَاءِ فِي السَّفَرِ» صحيح البخاري
அனஸ் (றழி)அவர்கள் கூறினார்கள்: ‘ நபியவர்கள் பயணத்தில் மக்Gரிப், இஷாக்கிடையில் சேர்த்து தொழுதார்கள்.’ (புஹாரி:1108)
முற்படுத்தி ஜம் உ செய்தல்,
அசரை லுஹருடனும், இஷாவை மக்Gரிபுடனும் முற்படுத்தி சேர்த்து தொழ முடியும்.
عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ، «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ فِي غَزْوَةِ تَبُوكَ إِذَا ارْتَحَلَ قَبْلَ أَنْ تَزِيغَ الشَّمْسُ، أَخَّرَ الظُّهْرَ حَتَّى يَجْمَعَهَا إِلَى الْعَصْرِ، فَيُصَلِّيَهُمَا جَمِيعًا، وَإِذَا ارْتَحَلَ بَعْدَ زَيْغِ الشَّمْسِ، صَلَّى الظُّهْرَ وَالْعَصْرَ جَمِيعًا، ثُمَّ سَارَ، وَكَانَ إِذَا ارْتَحَلَ قَبْلَ الْمَغْرِبَ، أَخَّرَ الْمَغْرِبَ حَتَّى يُصَلِّيَهَا مَعَ الْعِشَاءِ، وَإِذَا ارْتَحَلَ بَعْدَ الْمَغْرِبِ، عَجَّلَ الْعِشَاءَ فَصَلَّاهَا مَعَ الْمَغْرِبِ»
முஆத் (றழி)அவர்கள் கூறினார்கள்: ‘நபியவர்கள், தபூக் யுத்ததின் போது சூரியன் உச்சியிலிருந்து சாய முன் பயணித்தால் லுஹரைப் பிற்படுத்தி அசருடன் சேர்த்து தொழுவார்கள், சாய்ந்த பின் பயணித்தால் லுஹரையும் அசரையும் சேர்த்தி தொழுதுவிட்டு பயணிப்பார்கள். மேலும் மக்Gரிபுக்கு முன் பயணித்தால் மக்Gரிபைப் பிற்படுத்தி இஷாவுடன் சேர்த்து தொழுவார்கள், மேலும் மக்Gரிபுக்குப் பின்னால் பயணித்தால் இஷாவை முற்படுத்தி மக்Gரிபோடு சேர்த்து தொழுதுவிடுவார்கள்.’ (அபூதாவுத்: 1220)
பிற்படுத்தி தொழுதல்.
லுஹரை பிற்படுத்தி அசருடனும், மக்Gரிபை பிற்படுத்தி இஷாவிடனும் சேர்த்து தொழுதல்.
عَنْ أَنَسٍ، قَالَ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَرَادَ أَنْ يَجْمَعَ بَيْنَ الصَّلَاتَيْنِ فِي السَّفَرِ، أَخَّرَ الظُّهْرَ حَتَّى يَدْخُلَ أَوَّلُ وَقْتِ الْعَصْرِ، ثُمَّ يَجْمَعُ بَيْنَهُمَا» صحيح مسلم
அனஸ் (றழி) அவர்கள்கூறினார்கள்: ‘ நபியவர்கள் பயணத்தில் சேர்த்துத் தொழ விரும்பினால் அசரின் ஆரம்ப நேரம் வரை லுஹரை பிற்படுத்தி, பிறகு இரண்டையும் சேர்த்து தொழுவார்கள்.’ (முஸ்லிம்)
ஜம் உ செய்வதற்கான காரணிகள்.
1- பயணம் செய்தல், அதற்கான ஆதாரங்கள் முன்னால் உள்ள ஹதீஸ்கள்.
2- அச்சம், ஜமாஅத்துக்கு செல்வதில் ஏதாவது ஆபத்தைப் பயந்தால், ஜம் உ செய்ய முடியும்.
3- மலை, கடுமையான மலையாக இருந்தால் சேர்த்து தொழ முடியும், உ+ம்: மக்Gரிப் தொழுகை முடியும் போது கடும் மலையாக இருந்தால் இஷாவை சேர்த்து தொழமுடியும்.
عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: «جَمَعَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ الظُّهْرِ وَالْعَصْرِ، وَالْمَغْرِبِ وَالْعِشَاءِ بِالْمَدِينَةِ، فِي غَيْرِ خَوْفٍ، وَلَا مَطَرٍ» صحيح مسلم
இப்னு அப்பாஸ் (றழி) அவர்கள் கூறினார்கள்: ‘நபியவர்கள் பயம், மலை இல்லாமலும் லுஹர், அசருக்கிடையிலும், மக்Gரிப், இஷாக்கிடையிலும் சேர்த்து தொழுதுள்ளார்கள்.’ (முஸ்லிம்)
ஜம்உ கஸ்ரு என்பது இஸ்லாமிய உம்மத்துக்கு அல்லாஹ் வழங்கிய ஒரு அருள் என்ற அடிப்படையில், அதன் சட்டங்களை அறிந்து, அல்லாஹ் இறக்கப்பட்டு தந்ததை முறையாக கடைப்பிடித்து, அவன் அருளை பெற்றுக் கொள்ள முயல்வோம்.