பிக்ஹு -26; தொழுகையில் மறதியும், அதற்கான ஸுஜூதும்

தொழுகையில் மறதியும், அதற்கான ஸுஜூதும்

வீடியோவை பார்ப்பதற்கு இங்கே CLICK செய்யவும்!

ஒரு மனிதன் தொழும் போது மறதியை ஏற்படுத்துவது ஷைத்தானின் முயற்சியாகும். பொதுவாக ஒரு மனிதன் வீண் சந்தேகப்படுவதை தவிர்க்க வேண்டும். அப்படி அவனை மீறி சந்தேகம் ஏற்பட்டால் அவன் எதில் அதிகபட்ச உறுதி இருக்கின்றதோ அதனையே அவன் எடுக்க வேண்டும்.

உதாரணமாக; ஒருவனுக்கு வுழு எடுத்தது உறுதி, முறிந்ததில் சந்தேகம் என்றால், அவன் வுழுவோடு இருக்கிறான் என்பதே அடிப்படை. வுழூ முறிந்தது உறுதியாகாமல் அவன் தொழுகையை இடையில் விடக்கூடாது.

 أَبُو هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” إِذَا أُذِّنَ بِالصَّلاَةِ أَدْبَرَ الشَّيْطَانُ لَهُ ضُرَاطٌ حَتَّى لاَ يَسْمَعَ التَّأْذِينَ، فَإِذَا سَكَتَ المُؤَذِّنُ أَقْبَلَ، فَإِذَا ثُوِّبَ أَدْبَرَ، فَإِذَا سَكَتَ أَقْبَلَ، فَلاَ يَزَالُ، بِالْمَرْءِ يَقُولُ لَهُ: اذْكُرْ مَا لَمْ يَكُنْ يَذْكُرُ حَتَّى لاَ يَدْرِيَ كَمْ صَلَّى   صحيح البخاري   “

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  பாங்கு சொல்லப்பட்டதும் பாங்கைக் கேட்கக் கூடாது என்பதற்காக ஷைத்தான் காற்றுவிட்டவனாக ஓடுகிறான். பாங்கு முடிந்ததும் முன்னே வருகிறான். இகாமத் சொல்லப்பட்டதும் திரும்பி ஓடுகிறான். இகாமத் முடிந்ததும் முன்னே வருகிறான். தொழுது கொண்டிருக்கும் மனிதரிடம் ,எத்தனை தொழுதார் என்பதை அவர் மறந்துவிடும் அளவுக்கு, ‘நீ இதுவரை நினைத்திராதவற்றையெல்லாம் நினைத்துப்பார்” என்று கூறி, (உள்ளத்தில் சந்தேகத்தை ஏற்படுத்துவான்).  (புஹாரி: 1222,1232, முஸ்லிம்)

عَنْ عُقْبَةَ بْنِ الحَارِثِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ العَصْرَ، فَلَمَّا سَلَّمَ قَامَ سَرِيعًا دَخَلَ عَلَى بَعْضِ نِسَائِهِ، ثُمَّ خَرَجَ وَرَأَى مَا فِي وُجُوهِ القَوْمِ مِنْ تَعَجُّبِهِمْ لِسُرْعَتِهِ، فَقَالَ: «ذَكَرْتُ وَأَنَا فِي الصَّلاَةِ تِبْرًا عِنْدَنَا، فَكَرِهْتُ أَنْ يُمْسِيَ – أَوْ يَبِيتَ عِنْدَنَا – فَأَمَرْتُ بِقِسْمَتِهِ»  صحيح البخاري

 உக்பதுப்னுல் ஹாரிஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்:  நபி(ஸல்) அவர்களுடன் அஸர் தொழுதேன். அவர்கள் ஸலாம் கொடுத்ததும் வேகமாக எழுந்து தம் மனைவியின் இல்லத்திற்குச் சென்றுவிட்டுத் திரும்பினார்கள். தம் விரைவைக் கண்டு மக்கள் ஆச்சரியப்படுவதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் ‘நான் தொழுது கொண்டிருக்கும்போது எங்களிடம் இருந்த தங்கக்கட்டி ஒன்று நினைவுக்கு வந்தது. எங்களிடம் அது ஒரு மாலைப்பொழுதோ, இரவுப் பொழுதோ இருப்பதை நான் விரும்பவில்லை. எனவே, அதைப் பங்கிட்டு வழங்குமாறு கட்டளையிட்டேன்” என விளக்கினார்கள். (புஹாரி: 1221)

عَنْ سَعِيدِ بْنِ المُسَيِّبِ، ح وَعَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ، عَنْ عَمِّهِ، أَنَّهُ شَكَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الرَّجُلُ الَّذِي يُخَيَّلُ إِلَيْهِ أَنَّهُ يَجِدُ الشَّيْءَ فِي الصَّلاَةِ؟ فَقَالَ: «لاَ يَنْفَتِلْ – أَوْ لاَ يَنْصَرِفْ – حَتَّى يَسْمَعَ صَوْتًا أَوْ يَجِدَ رِيحًا»  صحيح البخاري

அப்துல்லாஹ் இப்னு ஸைத் இப்னு ஆஸிம்(ரழி) அவர்கள் கூறினார்கள்.’தொழும்போது காற்றுப் பிரிவது போன்ற உணர்வு ஏற்படும் ஒரு மனிதர் பற்றி  நபி(ஸல்) அவர்களிடம் நான் முறையிட்டதற்கு, ‘நாற்றத்தை உணரும் வரை அல்லது சப்தத்தைக் கேட்கும வரை தொழுகையிலிருந்து அவர் திரும்பாமளிருக்கட்டும்’ என்று அவர்கள் கூறினார்கள்”  (புஹாரி: 137, முஸ்லிம்)

ஒருவர் தொழுகை பூரணமாக  முன்னர் மறதியில் ஸலாம் கொடுத்து தொழுகையை முடித்த பினார் அவருக்கு ஞாபகம் வந்தால் உடனே அவர் எஞ்சியதை தொழுது, பூரணமாக்கிவிட்டு, மறதிக்காக இரண்டு சஜ்தாக்களை (தொழுகையின் சுஜுத்களை போன்று) செய்து ஸலாம் கொடுப்பார்.

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: صَلَّى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِحْدَى صَلاَتَيِ العَشِيِّ – قَالَ مُحَمَّدٌ: وَأَكْثَرُ ظَنِّي العَصْرَ – رَكْعَتَيْنِ، ثُمَّ سَلَّمَ، ثُمَّ قَامَ إِلَى خَشَبَةٍ فِي مُقَدَّمِ المَسْجِدِ، فَوَضَعَ يَدَهُ عَلَيْهَا، وَفِيهِمْ أَبُو بَكْرٍ، وَعُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، فَهَابَا أَنْ يُكَلِّمَاهُ، وَخَرَجَ سَرَعَانُ النَّاسِ فَقَالُوا: أَقَصُرَتِ الصَّلاَةُ؟ وَرَجُلٌ يَدْعُوهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذُو اليَدَيْنِ، فَقَالَ: أَنَسِيتَ أَمْ قَصُرَتْ؟ فَقَالَ: لَمْ أَنْسَ وَلَمْ تُقْصَرْ، قَالَ: «بَلَى قَدْ نَسِيتَ، فَصَلَّى رَكْعَتَيْنِ، ثُمَّ سَلَّمَ، ثُمَّ كَبَّرَ، فَسَجَدَ مِثْلَ سُجُودِهِ أَوْ أَطْوَلَ، ثُمَّ رَفَعَ رَأْسَهُ، فَكَبَّرَ، ثُمَّ وَضَعَ رَأْسَهُ، فَكَبَّرَ، فَسَجَدَ مِثْلَ سُجُودِهِ أَوْ أَطْوَلَ، ثُمَّ رَفَعَ رَأْسَهُ وَكَبَّرَ»  صحيح البخاري

அபூ ஹுரைரா(ரழி) அவர்கள் கூறினார்கள்:  தொழுகைகளில் ஒரு (அசர், அல்லது லுஹர்) தொழுகையை நடத்திய நபி(ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்திலேயே ஸலாம் கொடுத்துவிட்டார்கள். பின்பு எழுந்து பள்ளிவாசலின் முற்பகுதியிலிருக்கும் மரக்கட்டையின் பக்கம் சென்று அதன்மேல் தம் கையை ஊன்றி நின்றார்கள். அங்கிருந்தவர்களுள் அபூ பக்ர்(ரழி) உமர்(ரழி) இருவரும் அடங்குவர், அவர்கள்  நபி(ஸல்) அவர்களிடம் அது பற்றிப் பேசப் பயந்து கொண்டிருந்தனர். சமூகத்தில் வேகமாக செல்வோர் ‘தொழுகை சுருக்கப்பட்டுவிட்டதோ என்று கூறியவாறு’ வெளியேறிவிட்டனர்., . அப்போது நபி(ஸல்) அவர்களால் துல்யதைன் என அழைக்கப்படும் ஒருவர் ‘நீங்கள் மறந்து விட்டீர்களா அல்லது தொழுகை சுருக்கப்பட்டுவிட்டதா?’ எனக் கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘நான் மறக்கவும் இல்லை. (தொழுகை) சுருக்கப்படவும் இல்லை” என்றவுடன் ‘இல்லை நிச்சயமாக நீங்கள் மறந்து விட்டீர்கள்’ என அவர் கூறினார்.(ஏனையவர்களிடம் உறுதிப்படுத்திய) நபி(ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்கள் தொழுகை நடத்திவிட்டு ஸலாம் கொடுத்தார்கள். பின்பு தக்பீர் கூறித் தம் வழக்கமான ஸஜ்தாவைப் போன்றோ அல்லது அதைவிட நீண்டதாகவோ ஸஜ்தாச் செய்தார்கள். பிறகு தலையை உயர்த்தித் தக்பீர் கூறினார்கள். மீண்டும் தலையை (பூமியில்) வைத்துத் தக்பீர் கூறினார்கள். தம் வழக்கமான ஸஜ்தாவைப் போன்றோ அல்லது அதைவிட நீண்டதாகவோ ஸஜ்தாச் செய்து, பின்பு தம் தலையை உயர்த்தியாவாறே தக்பீர் கூறினார்கள். (பின்பு சலாம் கூறினார்கள் என இம்ரான் (ரழி) அவர்கள் கூறினார்கள்)  (புஹாரி: 482, 1229, முஸ்லிம்)

தொழுகின்ற ஒருவருக்கு ரக்அத்தின் எண்ணிக்கையில் சந்தேகம் ஏற்பட்டு, அவருக்கு ஒரு முடிவில் உறுதியிருந்தால் அதன் அடிப்படையில் தொழுகையை முடிப்பார், அவருக்கு ஒரு முடிவுக்கு வர முடியாத அளவு சந்தேகமாக இருந்தால் அவர் குறைந்த எண்ணிக்கையை முடிவாக எடுத்து, தொழுகையை முடித்துவிட்டு, அதற்காக கடைசியில் சுஜூத் செய்வார்.

 عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا شَكَّ أَحَدُكُمْ فِي صَلَاتِهِ، فَلَمْ يَدْرِ كَمْ صَلَّى ثَلَاثًا أَمْ أَرْبَعًا، فَلْيَطْرَحِ الشَّكَّ وَلْيَبْنِ عَلَى مَا اسْتَيْقَنَ، ثُمَّ يَسْجُدُ سَجْدَتَيْنِ قَبْلَ أَنْ يُسَلِّمَ، فَإِنْ كَانَ صَلَّى خَمْسًا شَفَعْنَ لَهُ صَلَاتَهُ، وَإِنْ كَانَ صَلَّى إِتْمَامًا لِأَرْبَعٍ كَانَتَا تَرْغِيمًا لِلشَّيْطَانِ»  صحيح مسلم

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவருக்கு தொழுகையில் சந்தேகம் ஏற்பட்டு,தொழுதது மூன்றா, நான்கா என்ற நிலை ஏற்படுமானால், அவர் சந்தேகத்திற்கு இடமானதை விட்டுவிட்டு, உறுதியானதை எடுக்கட்டும், பிறகு சலாம் கொடுப்பதற்கு முன்னர் இரண்டு சஜ்தாக்களை செய்யட்டும். அவர் ஐந்தாக தொழுதிருந்தால், அந்த சஜ்தாக்கள் அதனை (நான்காக) இரட்டையாக்கும், அவர் தொழுதது நான்கை பூர்த்தியாக்குவதாக இருந்தால், (சந்தேகத்தை ஏற்படுத்திய) ஷைத்தானுக்கு இழிவை ஏற்படுத்துவதாக அமையும்.  (முஸ்லிம்)

عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ أَحَدَكُمْ، إِذَا قَامَ يُصَلِّي جَاءَهُ الشَّيْطَانُ فَلَبَسَ عَلَيْهِ، حَتَّى لَا يَدْرِيَ كَمْ صَلَّى، فَإِذَا وَجَدَ ذَلِكَ أَحَدَكُمْ، فَلْيَسْجُدْ سَجْدَتَيْنِ وَهُوَ جَالِسٌ»  صحيح مسلم

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘உங்களில் ஒருவர் தொழத் தயாரானால் அவரிடம் ஷைத்தான் ஊடுருவி, அவர் எத்தனை ரக்அத் தொழுதார் என்பதையே அறியாத அளவுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தி விடுகிறான். எனவே, உங்களில் ஒருவருக்கு இவ்வாறான நிலைமை ஏற்பட்டால் (கடைசி) இருப்பில் இருந்தவாறே இரண்டு ஸஜ்தாச் செய்யட்டும்.  (புஹாரி: 1232, முஸ்லிம்)

ஒருவர் தொழும்போது முதல் (தஷஹ்ஹுதை) அத்தஹிய்யத்தை மறந்துவிட்டால் தொழுகையின் கடைசியில் சலாம் கொடுக்க முன்னர் இரண்டு சஜ்தாக்களை செய்வார்.

மறந்த அவர் எழுந் நிலைக்கு வருமுன் ஞாபகம் வந்தால் மீண்டும் அமர்வார், மறந்து நிலைக்கே வந்துவிட்டால் அவர் மீண்டும் செல்லாமல் தொழுகையை தொடரலாம்.

عَنْ عَبْدِ اللَّهِ ابْنِ بُحَيْنَةَ، قَالَ: «صَلَّى بِنَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَامَ فِي الرَّكْعَتَيْنِ الأُولَيَيْنِ قَبْلَ أَنْ يَجْلِسَ، فَمَضَى فِي صَلاَتِهِ، فَلَمَّا قَضَى صَلاَتَهُ انْتَظَرَ النَّاسُ تَسْلِيمَهُ، فَكَبَّرَ وَسَجَدَ قَبْلَ أَنْ يُسَلِّمَ، ثُمَّ رَفَعَ رَأْسَهُ، ثُمَّ كَبَّرَ وَسَجَدَ، ثُمَّ رَفَعَ رَأْسَهُ وَسَلَّمَ»  صحيح البخاري

அப்துல்லாஹ் இப்னு புஹைனா(ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் (ஒரு முறை) எங்களுக்குத் தொழுகை நடத்தி, இரண்டாவது ரக்அத்தை முடித்தபோது (அத்தஹிய்யாத்தில்) அமராமல் (மூன்றாவது ரக்அத்திற்காக மறதியாக) எழுந்து தொழுகையைத் தொடர்ந்தார்கள். தொழுகை முடியும் தருவாயில் நபி(ஸல்) அவர்கள் ‘சலாம்’ கொடுப்பதை மக்கள் எதிர்ப்பார்த்திருந்தபோது (இருபபிலேயே) சலாம் கொடுப்பதற்கு முன்பாக தக்பீர் கூறி சஜ்தா செய்தார்கள். பிறகு  தலையைத் தூக்கி (அமர்ந்துவிட்டு) மீண்டும் தக்பீர் கூறி சஜ்தா செய்து பின்னர் தலையை உயர்த்தி (அமர்ந்து) சலாம் கொடுத்தார்கள்.  (புஹாரி: 1224,6670, முஸ்லிம்)

عَنْ زِيَادِ بْنِ عِلَاقَةَ، قَالَ: ” صَلَّى بِنَا الْمُغِيرَةُ بْنُ شُعْبَةَ، فَلَمَّا صَلَّى رَكْعَتَيْنِ، قَامَ وَلَمْ يَجْلِسْ، فَسَبَّحَ بِهِ مَنْ خَلْفَهُ، فَأَشَارَ إِلَيْهِمْ أَنْ قُومُوا، فَلَمَّا فَرَغَ مِنْ صَلَاتِهِ سَلَّمَ، ثُمَّ سَجَدَ سَجْدَتَيْنِ “، ثُمَّ قَالَ: ” هَكَذَا صَنَعَ بِنَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ”  مسند أحمد

ஸியாத் பின் இலாகா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: முகீரா (ரழி) அவர்கள் (ஒரு நாள்) தொழும்போது இரண்டாவது ரக்அத் முடிந்ததும் அமராமல் எழுந்தார்கள், பின்னால் தொழுதவர்கள், ‘ஸு ப்ஹானல்லாஹ்’ சொல்லவே, தனது கையால் எழும்புமாறு கூறினார்கள். தொழுகை முடிந்த பிறகு, சலாம் கொடுத்துவிட்டு, இரு சஜ்தாக்கள் செய்துவிட்டு, இப்படியே நபிகளார் செய்தார்கள் என்று கூறினார்கள்.  (அஹ்மத்: 18163, திர்மிதீ:365)

இதே ஹதிஸ் இன்னும் பல வழிகளில் பதியப்பட்டுள்ளதது, அது பெரும்பாலும் விமர்சனத்திற்கு உட்பட்டதே.

குறிப்பு:  மறதிக்காக செய்யப்படும் சுஜூதின் நாம கவனிக்க வேண்டிய அம்சம்;

நபிகளார் இரண்டு ரக்அத்துகளை மறந்த போது சலாம் கொடுத்த பிறகு சுஜூத் செய்தார்கள்.

நபிகளார் அத்தஹிய்யாத்தை மறந்த போதும், ரக்அத் எண்ணிக்கையில் சந்தேகம் ஏற்பட்ட போதும் சலாம் கொடுக்க முன்னர் சஜ்தா செய்தார்கள்.

எனவே இந்த இரண்டு முறையும் சுன்னாவாகும், சலாம் கொடுக்க முன்னர் சஜ்தாவையும் மறந்தால் ஸலாத்திற்கு பிறகு செய்ய முடியும். அல்லாஹு அஃலம் !

தொழுகையில் இமாம் மறந்துவிட்டதை மஃமூம்கள் அறிந்தால் ஆண்கள் ‘சுப்ஹானல்லாஹ்’ சொல்வதன் மூலமும், பெண்கள் கையை தட்டிக்காட்டுவதன் மூலமும் ஞாபகமூட்டல் வேண்டும்.

فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا لِي رَأَيْتُكُمْ أَكْثَرْتُمُ التَّصْفِيقَ، مَنْ رَابَهُ شَيْءٌ فِي صَلاَتِهِ، فَلْيُسَبِّحْ فَإِنَّهُ إِذَا سَبَّحَ التُفِتَ إِلَيْهِ، وَإِنَّمَا التَّصْفِيقُ لِلنِّسَاءِ»  صحيح البخاري

 நபி(ஸல்) அவர்கள் மக்களைப் பார்த்து, ‘நீங்கள் எதற்காக அதிகமாகக் கை தட்டினீர்கள்? ஒருவருக்கு அவரின் தொழுகையில் சந்தேகம் ஏற்படுமானால் அவர் சுப்ஹானல்லாஹ் என்று கூறட்டும். அவ்வாறு தஸ்பிஹ் சொல்லும்போது சொன்னவர் பக்கம் (இமாம்) திரும்பிப் பார்க்க வேண்டும். கை தட்டுவது பெண்களுக்குத் தான்” என்று கூறினார்கள்.  (புஹாரி: 684, முஸ்லிம்)

இமாம் ஓதும்போது ஒரு வசனத்தை மறந்துவிட்டால் அதனை ம ஃ மூமுக்கு நினைவூட்டலாம்.

عَنْ سَعِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى، عَنْ أَبِيهِ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى فِي الْفَجْرِ فَتَرَكَ آيَةً، فَلَمَّا صَلَّى قَالَ: «أَفِي الْقَوْمِ أُبَيُّ بْنُ كَعْبٍ؟» قَالَ أُبَيٌّ: يَا رَسُولَ اللَّهِ نُسِخَتْ آيَةُ كَذَا وَكَذَا، أَوْ نُسِّيتَهَا؟ قَالَ: «نُسِّيتُهَا»  مسند أحمد

அப்துர் ரஹ்மா பின் அப்ஸா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள், (ஒரு நாள்) சுப்ஹுத் தொழுகையில் (ஓதும்போது) ஒரு வசனத்தை விட்டுவிட்டார்கள். தொழுகை முடிந்ததும், ‘உபையுப்னு கஃப் (ரழி) கூட்டாத்தில் இருக்கின்றாரா?’ என்று கேட்கவே, உபை அவர்கள்; அல்லாஹ்வின் தூதரே! இன்னின்ன வசனம் மாற்றப்பட்டதா, அல்லது உங்களுக்கு மறக்கடிக்கப்பட்டதா? என்று கேட்கவே, நபியவர்கள்; ‘அது மறக்கடிப்பட்டது’ என்று கூறினார்கள்.  (அஹ்மத்:15365)

 عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” صَلَّى صَلَاةً، فَقَرَأَ فِيهَا فَلُبِسَ عَلَيْهِ، فَلَمَّا انْصَرَفَ قَالَ لِأُبَيٍّ: «أَصَلَّيْتَ مَعَنَا؟» قَالَ: نَعَمْ، قَالَ: «فَمَا مَنَعَكَ»  سنن أبي داود

இப்னு உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள்; நபிகளார் ஒரு தொழுகையை தொழுவித்த போது, அதில் ஓதினார்கள், ஓதல் அவர்களுக்கு மாறுபட்டது. தொழுகை முடிந்ததும் உபை (ரழி) அவர்களைப் பார்த்து, ‘எம்மோடு நீர் தொழு தீரா?’ என்று கேட்கவே, அவர்கள் ‘ஆம்’ என்றதும், ‘(ஓதலை ஞாபகப்படுத்துவதை) தடுத்தது எது’ என்று கேட்டார்கள்.  (அபூதாவுத்: 407)

இது தவிர தொழுகையின் ஒரு பகுதியை மறந்து விட்டுவிட்டால் (ருகூஃ, ஒரு சுஜுத்) அவர் அதனை அந்த ரக்அத்திலேய ஞாபகப் படுத்திக் கொண்டால் அதனை அடைந்து கொண்டு ஏனையவற்றை பூர்த்தி செய்வார், அந்த ரக்அத் முடிந்த பின் ஞாபகப் படுத்திக் கொண்டால் அந்த ரக்அத்தை மீட்டுவார்.

அல்லாஹு அஃலம்!!!

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *