சுத்ராவின் முக்கியத்துவம்
சுத்ரா என்றால் தொழுபவர் தனக்கு முன் ஒரு தடுப்பை எடுத்துக்கொள்வது, அவர் திடலிலோ, திறந்த வெளியிலோ, பள்ளியிலோ தொழலாம்.
அதன் சிறப்பு;
சுத்ரா தொழுகையின் புனிதத்தைப் பாதுகாக்கின்றது.
عَنْ مُوسَى بْنِ طَلْحَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا وَضَعَ أَحَدُكُمْ بَيْنَ يَدَيْهِ مِثْلَ مُؤْخِرَةِ الرَّحْلِ فَلْيُصَلِّ، وَلَا يُبَالِ مَنْ مَرَّ وَرَاءَ ذَلِكَ» صحيح مسلم
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தனக்கு முன் ஒட்டகத்தின் சாய்மானம் போன்ற ஒன்றை தடுப்பாக வைத்து தொழுதால், அதற்கு பின்னால் நடந்து சொல்வோரை அவர் பொருற்படுத்தத் தேவையில்லை. (முஸ்லிம்)
عَنْ مُوسَى بْنِ طَلْحَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: كُنَّا نُصَلِّي وَالدَّوَابُّ تَمُرُّ بَيْنَ أَيْدِينَا فَذَكَرْنَا ذَلِكَ لِرَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «مِثْلُ مُؤْخِرَةِ الرَّحْلِ تَكُونُ بَيْنَ يَدَيْ أَحَدِكُمْ، ثُمَّ لَا يَضُرُّهُ مَا مَرَّ بَيْنَ يَدَيْهِ» صحيح مسلم
தல்ஹா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நாங்கள் தொழுது கொண்டிருப்போம், எங்களுக்கு முன்னால் மிருகங்கள் கடந்து செல்லும், அதை நாங்கள் நபிகளாரிடம் கூறிய போது, நபியவர்கள் ‘தனக்கு முன் ஒரு தடுப்பை எடுத்துக் கொண்டால், முன்னாள் கடந்து செல்வது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.’ என்று கூறினார்கள். (முஸ்லிம்)
عَبْدُ الْمَلِكِ بْنُ الرَّبِيعِ بْنِ سَبْرَةَ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا صَلَّى أَحَدُكُمْ، فَلْيَسْتَتِرْ لِصَلَاتِهِ، وَلَوْ بِسَهْمٍ» مسند أحمد
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தன் தொழுகைக்காக ஒரு ஈட்டியையாவது தடுப்பாக எடுத்துக் கொள்ளட்டும். (அஹ்மத்: 15340, அல்ஹாகிம்: 925)
தொழுபவருக்கும் தடுப்புக்குமிடையில் கடந்து செல்வது பாவமாகும்.
قَالَ أَبُو جُهَيْمٍ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْ يَعْلَمُ المَارُّ بَيْنَ يَدَيِ المُصَلِّي مَاذَا عَلَيْهِ، لَكَانَ أَنْ يَقِفَ أَرْبَعِينَ خَيْرًا لَهُ مِنْ أَنْ يَمُرَّ بَيْنَ يَدَيْهِ» قَالَ أَبُو النَّضْرِ: لاَ أَدْرِي، أَقَالَ أَرْبَعِينَ يَوْمًا، أَوْ شَهْرًا، أَوْ سَنَةً صحيح البخاري
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுபவருக்குக் குறுக்கே செல்பவர், அதனால் தமக்கு ஏற்படும் பாவத்தைப் பற்றி அறிந்திருந்தால் அவருக்குக் குறுக்கே செல்வதற்குப் பதில் நாற்பது நாட்கள் (அல்லது நாட்களோ, அல்லது வருடமோ) நின்று கொண்டிருப்பது அவருக்கு நல்லதாக இருக்கும்.’ (புஹாரி: 510, முஸ்லிம்) பஸ்ஸாரின் (3782) அறிவிப்பில் ‘நாற்பது ஆண்டுகள்’ என வந்துள்ளது.
தடுப்பை ஏற்படுத்தி தொழுபவர், தன்னை கடந்து செல்பவரை தடுக்கலாம்.
أَبَا سَعِيدٍ؟ قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِذَا صَلَّى أَحَدُكُمْ إِلَى شَيْءٍ يَسْتُرُهُ مِنَ النَّاسِ فَأَرَادَ أَحَدٌ أَنْ يَجْتَازَ بَيْنَ يَدَيْهِ، فَلْيَدْفَعْهُ فَإِنْ أَبَى فَلْيُقَاتِلْهُ فَإِنَّمَا هُوَ شَيْطَانٌ» صحيح البخاري
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் எவரேனும் தமக்கு முன்னால் ‘தடுப்பு’ வைத்துத் தொழும்போது, எவரேனும் குறுக்கே செல்ல முயன்றால் அவரைத் தடுக்க வேண்டும்; அதை அவர் மறுத் (மீண்டும் வந்) தால், அவருடன் போராடட்டும், ஏனெனில் அவர் நிச்சயம் ஷைத்தானாவார்” . (புஹாரி: 509, முஸ்லிம்)
குறிப்பு: அதிகமான அறிவிப்புகளில் பொதுவாக ‘தொழுபவருக்கு முன்னாள்’ என்று வந்துள்ளது. அவை அனைத்தையும் இந்த ஹதீஸும், ‘தனக்கு முன் ஒரு தடுப்பை எடுத்துக் கொண்டால், முன்னாள் கடந்து செல்வது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.’ என்ற ஹதீஸும் ‘தொழுபவருக்கும் சுத்ராவுக்குமிடையில்’ என்பதை குறிப்பாக்குகின்றன.
இமாமின் சுத்ரா, மஃமூம்களுக்கும் சுதராவாகும்.
عَنِ ابْنِ عُمَرَ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا خَرَجَ يَوْمَ العِيدِ أَمَرَ بِالحَرْبَةِ، فَتُوضَعُ بَيْنَ يَدَيْهِ، فَيُصَلِّي إِلَيْهَا وَالنَّاسُ وَرَاءَهُ، وَكَانَ يَفْعَلُ ذَلِكَ فِي السَّفَرِ»، فَمِنْ ثَمَّ اتَّخَذَهَا الْأُمَرَاءُ صحيح البخاري
இப்னு உமர்(ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி(ஸல்) அவர்கள் பெருநாள் அன்று (தொழுகை நடத்துவதற்காகத் திடல் நோக்கிச்) செல்லும்போது ஈட்டியை எடுத்து வருமாறு கூறுவார்கள். அவர்களுக்கு முன்னால் அது நாட்டப்பட்டதும் அதை நோக்கித் தொழுவார்கள். மக்கள் அவர்களுக்குப் பின்னே இருப்பார்கள். பயணத்தின் போதும் இவ்வாறு செய்பவர்களாக இருந்தனர். இதனால்தான் (நம்முடைய) தலைவர்களும் அவ்வாறு செய்கின்றனர். (புஹாரி: 494, முஸ்லிம்)
பள்ளிக்குள்ளும் சுதாராவைப் பேணல்.
يَزِيدُ بْنُ أَبِي عُبَيْدٍ، قَالَ: كُنْتُ آتِي مَعَ سَلَمَةَ بْنِ الأَكْوَعِ فَيُصَلِّي عِنْدَ الأُسْطُوَانَةِ الَّتِي عِنْدَ المُصْحَفِ، فَقُلْتُ: يَا أَبَا مُسْلِمٍ، أَرَاكَ تَتَحَرَّى الصَّلاَةَ عِنْدَ هَذِهِ الأُسْطُوَانَةِ، قَالَ: فَإِنِّي «رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَحَرَّى الصَّلاَةَ عِنْدَهَا» صحيح البخاري
ஸலமதுப்னுல் அக்வஃ(ரழி) அவர்கள், குர்ஆன் வைக்கப்படும் இடத்தில் அமைந்த தூணருகே தொழுவதில் கவனம் செலுத்துவார்கள். காரணம் கேட்கப்பட்டால், ‘நபி(ஸல்) அவர்கள் இந்த இடத்தில் தொழுவதற்கு ஆர்வம் காட்டுபவர்களாக இருந்ததை நான் பார்த்திருக்கிறேன்’ என்று கூறுவார்கள். (புஹாரி: 502, முஸ்லிம்)
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: «لَقَدْ [ص:107] رَأَيْتُ كِبَارَ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَبْتَدِرُونَ السَّوَارِيَ عِنْدَ المَغْرِبِ» صحيح البخاري
அனஸ்(ரழி) அவர்கள் கூறினார்கள்: மஃரிபு(க்கு பாங்கு சொன்னது) முதல், நபி(ஸல்) அவர்கள் வெளியே வரும் வரை முதிய நபித்தோழர்கள் (இரண்டு ரக்அத்கள் முன் ஸுன்னத் தொழுவதற்காகத்) தூண்களை நோக்கி விரைவார்கள். (புஹாரி: 503, 625, முஸ்லிம்)
கஃபாவுக்குள்ளும் நபிகளார் தொழும் போது சுத்ராவை பேணியுள்ளார்கள்.
عَنْ نَافِعٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، كَانَ «إِذَا دَخَلَ الكَعْبَةَ مَشَى قِبَلَ وَجْهِهِ حِينَ يَدْخُلُ، وَجَعَلَ البَابَ قِبَلَ ظَهْرِهِ، فَمَشَى حَتَّى يَكُونَ بَيْنَهُ وَبَيْنَ الجِدَارِ الَّذِي قِبَلَ وَجْهِهِ قَرِيبًا مِنْ ثَلاَثَةِ أَذْرُعٍ، صَلَّى يَتَوَخَّى المَكَانَ الَّذِي أَخْبَرَهُ بِهِ بِلاَلٌ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى فِيهِ» صحيح البخاري
அப்துல்லாஹ் இப்னு உமர்(ரழி) அவர்கள் கஃபாவுக்குள் நுழையும்போது கஃபாவின் உள்ளே நேராகச் சென்று வாசல் தம் முதுகுக்குப் பின் இருக்குமாறும், தமக்கும் எதிர் சுவற்றுக்குமிடையே மூன்று முழ இடைவெளி இருக்கும் விதமாகவும் நின்று தொழுவார்கள். அதாவது நபி(ஸல்) அவர்கள் எந்த இடத்தில் தொழுததாக பிலால்(ரழி) அறிவித்தார்களோ அந்த இடத்தைத் தேடித் தொழுவார்கள். ‘கஃபாவின் எந்தப் புறத்தில் நின்று தொழுதாலும் அதில் தவறில்லை’ என்றும் கூறுவார்கள். (புஹாரி: 506)
وَرَأَى عُمَرُ: ” رَجُلًا يُصَلِّي بَيْنَ أُسْطُوَانَتَيْنِ، فَأَدْنَاهُ إِلَى سَارِيَةٍ، فَقَالَ: صَلِّ إِلَيْهَا ” صحيح البخاري تعليقا
இரண்டு தூண்களுக்கிடையில் தொழுது கொண்டிருந்த ஒரு மனிதரைக் கண்ட உமர் (ரழி) அவர்கள், அவரை இழுத்து, ஒரு தூணுக்கு நேராக நிறுத்தி, அதை நோக்கி தொழுமாறு ஏவினார்கள். (புஹாரி குறிப்பு செய்தி)
தொழுபவர் சுத்ராவுக்கு நெருக்கமாக இருக்க வேண்டும்.
عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ: «كَانَ بَيْنَ مُصَلَّى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَبَيْنَ الجِدَارِ مَمَرُّ الشَّاةِ» صحيح البخاري
ஸஹ்ல் பின் ஸஃது(ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி(ஸல்) அவர்களின் தொழுமிடத்துக்கும் மதிலுக்குமிடையே ஓர் ஆடு நடக்குமளவுக்கு இடைவெளி இருக்கும். (புஹாரி:496, முஸ்லிம்)
عَنْ سَلَمَةَ، قَالَ: «كَانَ جِدَارُ المَسْجِدِ عِنْدَ المِنْبَرِ مَا كَادَتِ الشَّاةُ تَجُوزُهَا» صحيح البخاري
ஸலமதுப்னுல் அக்வஃ(ரழி) அவர்கள் கூறினார்கள்:பள்ளியின் மதில் மிம்பர் பகுதியில் இருந்தது, (நபி(ஸல்) தொழும் போது, அந்த இடைவெளியை) ஓர் ஆட்டுக்கு கடந்து செல்ல முடியவில்லை. (புஹாரி: 497)
عَنْ سَهْلِ بْنِ أَبِي حَثْمَةَ، يَبْلُغُ بِهِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا صَلَّى أَحَدُكُمْ إِلَى سُتْرَةٍ فَلْيَدْنُ مِنْهَا لَا يَقْطَعِ الشَّيْطَانُ عَلَيْهِ صَلَاتَهُ» سنن أبي داود
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் யாராவது தடுப்பை நோக்கி தொழுதால், அதற்கு நெருக்கமாக இருக்கட்டும். ஷைத்தானால் அவனை கெடுக்கமுடியாது. (அஹ்மத்:16090, அபூதாவுத்:695)
أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، كَانَ «إِذَا دَخَلَ الكَعْبَةَ مَشَى قِبَلَ وَجْهِهِ حِينَ يَدْخُلُ، وَجَعَلَ البَابَ قِبَلَ ظَهْرِهِ، فَمَشَى حَتَّى يَكُونَ بَيْنَهُ وَبَيْنَ الجِدَارِ الَّذِي قِبَلَ وَجْهِهِ قَرِيبًا مِنْ ثَلاَثَةِ أَذْرُعٍ، صَلَّى يَتَوَخَّى المَكَانَ الَّذِي أَخْبَرَهُ بِهِ بِلاَلٌ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى فِيهِ» صحيح البخاري
கஃபாவுக்குள் நபிகளார் தொழுத ஹதீஸில் அவர்களுக்கும், சுத்ராவுக்குமிடையில் மூன்று முலம் இருந்ததாக வந்துள்ளது. (புஹாரி:506)
சுத்ராவாக ஏற்படுத்த முடியுமானவைகள்.
ஈட்டி, அது போன்றதை ஏற்படுத்தலாம்.
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُرْكَزُ لَهُ الحَرْبَةُ فَيُصَلِّي إِلَيْهَا» صحيح البخاري
இப்னு உமர்(ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி(ஸல்) அவர்கள் தொழுவதற்காக ஈட்டி நாட்டப்படும். அவர்கள் அதை நோக்கித் தொழுவார்கள். (புஹாரி: 498, முஸ்லிம்)
عَنْ أَبِي جُحَيْفَةَ، قَالَ: «خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالهَاجِرَةِ، فَصَلَّى بِالْبَطْحَاءِ الظُّهْرَ وَالعَصْرَ رَكْعَتَيْنِ، وَنَصَبَ بَيْنَ يَدَيْهِ عَنَزَةً وَتَوَضَّأَ» صحيح البخاري
நபி (ஸல்) அவர்கள், மக்காவில் லுஹரையும், அஸரையும் சுருக்கித் தொழுதார்கள். அவர்களுக்கு முன்னாள் ஒரு தடி நாட்டப்பட்டிருந்தது. (புஹாரி: 501, முஸ்லிம்)
மிருகங்கள்,மனிதர்கள், வாகனம் போன்றவற்றை சுத்ராவாக எடுக்கலாம்.
عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ «كَانَ يُعَرِّضُ رَاحِلَتَهُ، فَيُصَلِّي إِلَيْهَا» صحيح البخاري
இப்னு உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் தன் வாகனத்தை (மிருகம்) குறுக்கே (சுத்ராவாக) வைத்து, அதை நோக்கி தொழுதார்கள். (புஹாரி: 507, முஸ்லிம்)
கட்டில், மேசை, கதிரை போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.
عَنْ عَائِشَةَ، قَالَتْ: أَعَدَلْتُمُونَا بِالكَلْبِ وَالحِمَارِ «لَقَدْ رَأَيْتُنِي مُضْطَجِعَةً عَلَى السَّرِيرِ، فَيَجِيءُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَيَتَوَسَّطُ السَّرِيرَ، فَيُصَلِّي، فَأَكْرَهُ أَنْ أُسَنِّحَهُ، فَأَنْسَلُّ مِنْ قِبَلِ رِجْلَيِ السَّرِيرِ حَتَّى أَنْسَلَّ مِنْ لِحَافِي» صحيح البخاري
ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நான் கட்டிலில் சாய்ந்திருப்பேன், நபியவர்கள் வந்து, கட்டிலின் நடுவில் நின்று தொழுவார்கள், நானோ அப்படி இருக்க விரும்பாததனால் கால்மாட்டிநூடாக சென்றுவிடுவேன். (புஹாரி: 508)
மதில், சுவர், தூன் போன்றவற்றையும் சுத்ராவாக பயன்படுத்தலாம்.
عَنْ سَلَمَةَ، قَالَ: «كَانَ جِدَارُ المَسْجِدِ عِنْدَ المِنْبَرِ مَا كَادَتِ الشَّاةُ تَجُوزُهَا» صحيح البخاري
ஸலமதுப்னுல் அக்வஃ(ரழி) அவர்கள் கூறினார்கள்:பள்ளியின் மதில் மிம்பர் பகுதியில் இருந்தது, (நபி(ஸல்) தொழும் போது, அந்த இடைவெளியை) ஓர் ஆட்டுக்கு கடந்து செல்ல முடியவில்லை. (புஹாரி: 497)
மூத்த நபித்தோழர்கள் சம்பந்தப்பட்ட ஹதீஸ்.
பொதுவாக எந்த ஒரு பொருளையும் சுதராவாக ஏற்படுத்தலாம்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் யாராவது தடுப்பை நோக்கி தொழுதால், அதற்கு நெருக்கமாக இருக்கட்டும். ஷைத்தானால் அவனை கெடுக்கமுடியாது. (அஹ்மத்:16090, அபூதாவுத்:695)
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، أَنَّهُ قَالَ: «وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي بِالنَّاسِ بِمِنًى إِلَى غَيْرِ جِدَارٍ صحيح البخاري
இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி(ஸல்) அவர்கள் ‘மினாவில்’ சுவர் அல்லாததை நோக்கி தொழுகை நடத்திக் கொண்டிருந்தார்கள். (புஹாரி: 493)
சிலர் இந்த ஹதீஸை முன்வைத்து சுத்ரா அவசியமில்லை என்று பேசுவர். அது தவறாகும். ஏனெனில் ‘சல்லா இலைய்ஹி’ என்றால் ஒன்றை நோக்கி தொழுதாலே அப்படி பாவிக்க முடியும். இதை மாத்திரம் சிந்தித்தால் எதோ ஒன்றை நோக்கி தொழுதுள்ளார்கள் என்பதை புரியலாம்.
குறிப்பு; சில அறிவிப்புகளில் முன்னாள் ஒரு கோட்டை கீற்றினாலும் சுத்ராவாக அமையும் என்று வந்துள்ளது. அது பலவீனமான செய்தியாகும்.
أَبَا هُرَيْرَةَ، يَقُولُ: قَالَ أَبُو الْقَاسِمِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” إِذَا صَلَّى أَحَدُكُمْ، فَلْيَجْعَلْ تِلْقَاءَ وَجْهِهِ شَيْئًا، فَإِنْ لَمْ يَجِدْ شَيْئًا، فَلْيَنْصِبْ عَصًا، فَإِنْ لَمْ يَكُنْ مَعَهُ عَصًا، فَلْيَخُطَّ خَطًّا، وَلَا يَضُرُّهُ مَا مَرَّ بَيْنَ يَدَيْهِ ” مسند أحمد
உங்களில் ஒருவர் தொழுதால் தனக்கு முன்னால் ஏதாவது ஒன்றை வைக்கட்டும், எதுவும் இல்லையானால் ஒரு தடி, அதுவும் இல்லையானால் ஒரு கோட்டை கீற்றிக்கொள்ளட்டும். (அஹ்மத், அபூதாவுத்)
இதன் அறிவிப்பாளர்களான ‘அபூ முஹம்மதுப்னு அம்ர்‘அவரது தந்தை‘ இருவரும் ‘யார் என்று அறியப்படாத, ம்ஜ்ஹூல்‘ வகையை சார்ந்தவர்கள். எனவே இது மிகவும் பலவீனமான செய்தியாகும்.
எனவே சுத்ராவின் ஒழுக்கங்களை முறையாக கற்று, அதனைப் பேணி தொழுது, பூரண கூலியைப் பெற்றுக் கொள்ள முயல்வோம்.
சட்டக் கலை பகுதியில் பதியப்படும் இந்தப் பதிவு; 2008 ம் ஆண்டு காலப் பகுதியில் தொகுக்கப்பட்டு, பாடமும் நடத்தப்பட்டது. இப்போது அது ஒரு சில மாற்றங்களுடனே இங்கு பதியப்படுகின்றது. அன்று தொகுக்கப்பட்ட ஆக்கங்கக் எழுத்து வடிவில் பாதுகாக்கப்படாததால் அதன் போடோ பிரதியை இணைத்துள்ளேன்.
தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்டினால் திருத்தி, இன்னும் பயனுள்ளதாக மாற்றலாம்.
அல்லாஹ்வே எம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக!!!