தொழுகை

தொழுகை என்றால் என்ன!

அல்லாஹு அக்பர் என்ற தக்பீரைக் கொண்டு ஆரம்பித்து, சலாத்தைக் கொண்டு முடிக்கப்படுகின்ற, குறிப்பிட்ட சில வார்த்தைகளையும், செயற்பாடுகளையும் கொண்ட ஒரு வணக்கம்.

அதன் வகைகள்: அது இரண்டு வகைப்படும்;

  1. கடமையானது                                        2.  உபரியா (சுன்னத்தா) னது.

கடமையான தொழுகை இரண்டு வகைப்படும்.

1- ஒவ்வொருவர் மீதும் கடமையாகக்கூடியது.இது பர்ளு ஐன் எனப்படும். ஐந்து நேரத் தொழுகை , ஜும்ஆ தொழுகை போன்று.

2- குறப்பிட்ட சிலர் மீது கடமையாகும். இது பர்ளு கிபாயா எனப்படும். சமூகத்தில் சிலர் செய்தாலும் அனைவரது கடமையும் நீங்கிவிடும்,  உதாரணமாக ஜனாஸா தொழுகை போன்று. யாருமே செய்யவில்லையானால் அனைவரும் குற்றம் பிடிக்கப்படுவர்.

உபரியான சுன்னத்தான தொழுகை, இது கடமையான தொழுகை தவிர்ந்த நபிகளார் காட்டித்தந்த அனைத்து தொழுகையும் அடங்கும். உதாரணமாக முன் பின் சுன்னத்துக்கள், வித்ரு போன்றவை.

அதற்கிருக்கும் தனித்துவங்கள்:

அது இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளுள் இரண்டாவதாகும்.

عَنْ  ابْنَ عُمَرَ قَالَ: «يَا ابْنَ أَخِي بُنِيَ الإِسْلاَمُ عَلَى خَمْسٍ، إِيمَانٍ بِاللَّهِ وَرَسُولِهِ، وَالصَّلاَةِ الخَمْسِ، وَصِيَامِ رَمَضَانَ، وَأَدَاءِ الزَّكَاةِ، وَحَجِّ البَيْتِ» (صحيح البخاري)

இப்னு உமர்(றழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:, ” இஸ்லாம் ஐந்து அம்சங்களின் மீது நிறுவப்பட்டுள்ளது. 1. அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்புவது 2. தொழுகையை நிலைநாட்டுவது  3. ரமளானில் நோன்பு நோற்பது. 4. ஸகாத்தை நிறைவேற்றுதல். 5. (இயன்றோர்) இறையில்லமான) கஃபாவில் ஹஜ் செய்தல்’  (புஹாரி: 4514, முஸ்லிம்)

மிஃராஜ் இரவின் போது எந்த திரையுமின்ரி இறைவனால் நேரடியாக நபிகளாருக்கு வழங்கப்பட்டது.

قال النبي صلى الله عليه وسلم عن معراجه:….. ثُمَّ رُفِعَتْ إِلَيَّ سِدْرَةُ المُنْتَهَى، فَإِذَا نَبْقُهَا مِثْلُ قِلاَلِ هَجَرَ، وَإِذَا وَرَقُهَا مِثْلُ آذَانِ الفِيَلَةِ، قَالَ: هَذِهِ سِدْرَةُ المُنْتَهَى، ….ثُمَّ رُفِعَ لِي البَيْتُ المَعْمُورُ، ثُمَّ أُتِيتُ بِإِنَاءٍ مِنْ خَمْرٍ، وَإِنَاءٍ مِنْ لَبَنٍ، وَإِنَاءٍ مِنْ عَسَلٍ، فَأَخَذْتُ اللَّبَنَ فَقَالَ: هِيَ الفِطْرَةُ الَّتِي أَنْتَ عَلَيْهَا وَأُمَّتُكَ، ثُمَّ فُرِضَتْ عَلَيَّ الصَّلَوَاتُ خَمْسِينَ صَلاَةً كُلَّ يَوْمٍ، …….. فَأُمِرْتُ بِخَمْسِ صَلَوَاتٍ كُلَّ يَوْمٍ………. قَالَ: فَلَمَّا جَاوَزْتُ نَادَى مُنَادٍ: أَمْضَيْتُ فَرِيضَتِي، وَخَفَّفْتُ عَنْ عِبَادِي “(صحيح البخاري)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ……(மிஃராஜின் போது) பிறகு, ‘அல் பைத்துல் மஃமூர்’ (எனும் ‘வானவர்கள் அதிகம் சஞ்சரிக்கும் இறையில்லம்’) எனக்கு  காட்டப்பட்டது. பிறகு என்னிடம் ஒரு பாத்திரத்தில் மதுவும், ஒரு பாத்திரத்தில் பாலும் இன்னொரு பாத்திரத்தில் தேனும் கொண்டு வரப்பட்டது. நான் பாலை (தேர்ந்து) எடுத்தேன். (பிறகு அதைக் குடித்தேன்.) அப்போது ஜிப்ரீல், ‘இதுதான் நீங்களும் உங்கள் சமுதாயத்தாரும் இருக்கும் (இஸ்லாம் எனும்) இயற்கை நெறியாகும்” என்று கூறினார்கள். பிறகு என் மீது ஒவ்வொரு தினத்திற்கு ஐம்பது (வேளைத்) தொழுகைகள் கடமையாக்கப்பட்டன. …….(பிறகு) ஒவ்வொரு நாளும் ஐந்து (வேளைத்) தொழுகைகள் (நிறைவேற்றும்படி) எனக்கு உத்தரவிடப்பட்டது…… (புஹாரி: 3887,முஸ்லிம்)

ஒவ்வொரு நாளையிலும் ஐந்து நேரம் நிறைவேற்றப்படும் ஒரே வணக்கம்.எல்லா நிலைகளிலும் ஊரிலோ, பயணத்திலோ இருந்தாலும், ஆரோக்கியத்தில், நோயில் இருந்தாலும், யுத்த களத்தில் இருந்தாலும்கூட சக்திக்கு ஏற்ப கடமையாகும்.

{وَإِذَا ضَرَبْتُمْ فِي الْأَرْضِ فَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَنْ تَقْصُرُوا مِنَ الصَّلَاةِ إِنْ خِفْتُمْ أَنْ يَفْتِنَكُمُ الَّذِينَ كَفَرُوا إِنَّ الْكَافِرِينَ كَانُوا لَكُمْ عَدُوًّا مُبِينًا (101)} {وَإِذَا كُنْتَ فِيهِمْ فَأَقَمْتَ لَهُمُ الصَّلَاةَ } [النساء: 102]

நீங்கள் பூமியில் பிரயாணம் செய்யும்போது, காஃபிர்கள் உங்களுக்கு விஷமம் செய்வார்கள் என்று நீங்கள் அஞ்சினால், அப்பொழுது நீங்கள் தொழுகையைச் சுருக்கிக் கொள்வது உங்கள் மீது குற்றம் ஆகாது; நிச்சயமாக காபிர்கள் உங்களுக்குப் பகிரங்கமான பகைவர்களாக இருக்கின்றனர். (101) (நபியே! போர் முனையில்) அவர்களுடன் நீர் இருந்து, அவர்களுக்கு தொழவைக்க நீர்(இமாமாக) நின்றால் அவர்களில் ஒரு பிரிவினர் தம் ஆயுதங்களைத் தாங்கிக் கொண்டு உம்முடன் தொழட்டும்;…. (4: 102)

அல்லாஹ்வோடு உரையாடும் சந்தர்ப்பம் அதன்மூலம் கிடைக்கும்.

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ أَحَدَكُمْ إِذَا صَلَّى يُنَاجِي رَبَّهُ، فَلاَ يَتْفِلَنَّ عَنْ يَمِينِهِ، وَلَكِنْ تَحْتَ قَدَمِهِ اليُسْرَى»(صحيح البخاري)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒருவர் தொழும்போது தம் இறைவனிடம் தனிமையில் உரையாடுகிறார். எனவே தம் வலப்புறம் துப்ப வேண்டாம். எனினும் தம் இடது பாதத்திற்குக் கீழே துப்பிக் கொள்ளலாம்.”  (புஹாரி: 531)

 அதன் சிறப்புக்கள்

பாவமான, மானக்கேடான விடயங்களை விட்டு மனிதனை அது தடுக்கும்.

{ اتْلُ مَا أُوحِيَ إِلَيْكَ مِنَ الْكِتَابِ وَأَقِمِ الصَّلَاةَ إِنَّ الصَّلَاةَ تَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنْكَرِ وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ وَاللَّهُ يَعْلَمُ مَا تَصْنَعُونَ } [العنكبوت: 45]

இன்னும் தொழுகையை நிலை நிறுத்துவீராக; நிச்சயமாக தொழுகை (மனிதரை) மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டு விலக்கும். நிச்சயமாக, பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு காரணமாக இருக்கும்.  (29:45)

 عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ” أَرَأَيْتُمْ لَوْ أَنَّ نَهَرًا بِبَابِ أَحَدِكُمْ يَغْتَسِلُ فِيهِ كُلَّ يَوْمٍ خَمْسًا، مَا تَقُولُ: ذَلِكَ يُبْقِي مِنْ دَرَنِهِ ” قَالُوا: لاَ يُبْقِي مِنْ دَرَنِهِ شَيْئًا، قَالَ: «فَذَلِكَ مِثْلُ الصَّلَوَاتِ الخَمْسِ، يَمْحُو اللَّهُ بِهِ الخَطَايَا»(صحيح البخاري)

அபூ ஹுரைரா(றழி) அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒருவரின் வாசலில் ஆறு ஒன்று (ஓடிக் கொண்டு) இருக்கிறது. அதில் அவர் தினமும் ஐந்து முறை குளிக்கிறார். அவரின் மேனியிலுள்ள அழுக்குகளில் எதுவும் எஞ்சியிருக்குமா எனக் கூறுங்கள்” என்று தோழர்களிடம் நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். ‘அவரின் அழுக்குகளில் சிறிதளவும் எஞ்சியிராது’ என நபித் தோழர்கள் கூறினர். ‘இது ஐவேளைத் தொழுகைகளின் உவமையாகும். இதன் மூலம் அல்லாஹ் பாவங்களை அகற்றுகிறான்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.   (புஹாரி: 528, முஸ்லிம்)

 عَنِ ابْنِ مَسْعُودٍ، أَنَّ رَجُلًا أَصَابَ مِنَ امْرَأَةٍ قُبْلَةً، فَأَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَخْبَرَهُ فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ: {أَقِمِ الصَّلاَةَ [ص:112] طَرَفَيِ النَّهَارِ وَزُلَفًا مِنَ اللَّيْلِ، إِنَّ الحَسَنَاتِ يُذْهِبْنَ السَّيِّئَاتِ} [هود: 114] فَقَالَ الرَّجُلُ: يَا رَسُولَ اللَّهِ أَلِي هَذَا؟ قَالَ: «لِجَمِيعِ أُمَّتِي كُلِّهِمْ»(صحيح البخاري)

இப்னு மஸ்ஊத்(றழி) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் அன்னியப் பெண்ணை முத்தமிட்டுவிட்டு  நபி(ஸல்) அவர்களிடம் வந்து தீர்வு கேட்கவே, அல்லாஹ் பின்வரும் வசனத்தை இறக்கினான்: ‘பகலின் இரண்டு ஓரங்களிலும் இரவின் ஒரு பகுதியிலும் தொழுகையை நிலை நிறுத்துவீராக! நிச்சயமாக நல்ல காரியங்கள் தீய காரியங்களை அகற்றிவிடும்” (திருக்குர்ஆன் 11:114)  அப்போது அந்த மனிதர் ‘இறைத்தூதர் அவர்களே! இது எனக்கு மட்டுமா?’ என்று கேட்டதற்கு ‘என் சமுதாயம் முழுமைக்கும்” என்று நபி(ஸல்) அவர்கள் விடையளித்தார்கள். (புஹாரி: 526, முஸ்லிம்)

حُذَيْفَةَ، قَالَ: كُنَّا جُلُوسًا عِنْدَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ، فَقَالَ: أَيُّكُمْ يَحْفَظُ قَوْلَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الفِتْنَةِ، قُلْتُ أَنَا كَمَا قَالَهُ: قَالَ: إِنَّكَ عَلَيْهِ أَوْ عَلَيْهَا لَجَرِيءٌ، قُلْتُ: «فِتْنَةُ الرَّجُلِ فِي أَهْلِهِ وَمَالِهِ وَوَلَدِهِ وَجَارِهِ، تُكَفِّرُهَا الصَّلاَةُ وَالصَّوْمُ وَالصَّدَقَةُ، وَالأَمْرُ وَالنَّهْيُ»(صحيح البخاري)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதன் தம் குடும்பத்தினரிடமும் தம் சொத்துக்களிலும் தம் குழந்தைகளிடமும் தம் அண்டை வீட்டாரிடமும்  சோதனையில் ஆழ்த்தப்படும்போது, தொழுகை, நோன்பு, தர்மம், (நல்லதை) ஏவுதல், (தீமையை) விலக்குதல் ஆகிய காரியங்கள் அதற்குப் பரிகாரமாக அமையும். (புஹாரி: 525, முஸ்லிம்)

சுவனப் பாதையை இலகுபடுத்தும்.

{قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ (1) الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ (2………. وَالَّذِينَ هُمْ عَلَى صَلَوَاتِهِمْ يُحَافِظُونَ (9) أُولَئِكَ هُمُ الْوَارِثُونَ (10) الَّذِينَ يَرِثُونَ الْفِرْدَوْسَ هُمْ فِيهَا خَالِدُونَ } [المؤمنون: 1 – 11]

ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர் *அவர்கள் எத்தகையயோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள்…….*மேலும் அவர்கள் தம் தொழுகைகளை(க் குறித்த காலத்தில் முறையோடு) பேணுவார்கள். *இத்தகையோர் தாம் (சுவர்க்கத்தின்) வாரிசுதாரர்கள்.*இவர்கள் பிர்தவ்ஸ் (என்னும் சுவனபதியை) அனந்தரங் கொண்டு அதில் இவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்.  (29: 1- 11)

தொழுகை பிரகாசமாக இருக்கும்.

 عَنْ أَبِي مَالِكٍ الْأَشْعَرِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الطُّهُورُ شَطْرُ الْإِيمَانِ وَالْحَمْدُ لِلَّهِ تَمْلَأُ الْمِيزَانَ، وَسُبْحَانَ اللهِ وَالْحَمْدُ لِلَّهِ تَمْلَآَنِ – أَوْ تَمْلَأُ – مَا بَيْنَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ، وَالصَّلَاةُ نُورٌ،……….( صحيح مسلم)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகை பிரகாசமாக இருக்கும். (முஸ்லிம்)

வண்ணக்கத்தில் மிகவும் சிறந்த தும், அல்லாஹ்வுக்கு விருப்பமானதுமாகும்.

 عَبْدِ اللَّهِ، قَالَ: سَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَيُّ العَمَلِ أَحَبُّ إِلَى اللَّهِ؟ قَالَ: «الصَّلاَةُ عَلَى وَقْتِهَا»، قَالَ: ثُمَّ أَيٌّ؟ قَالَ: «ثُمَّ بِرُّ الوَالِدَيْنِ» قَالَ: ثُمَّ أَيٌّ؟ قَالَ: «الجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ»(صحيح البخاري)

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(றழி) அவர்கள் கூறினார்கள்:  அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான செயல் எது? என்று நபி(ஸல்) அவர்களிடம் நான் கேட்டபோது, ‘தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுவதாகும்” என்று பதில் கூறினார்கள். … (புஹாரி: 527, முஸ்லிம்)

யார் மீது கடமை;

வயதுக்கு வந்த, புத்திசுவாதீனமுள்ள, ஒவ்வொரு முஸ்லிம் மீதும் கடமையாகும். சிறுவர்கள் ஏழு வயதை அடைந்தால் தொழுகையை கற்றுக்கொடுப்பதும், பத்து வயதாகி தொழவில்லையானால்  அதற்காக கண்டிப்பதும் நபிகளார் ஏவிய அம்சமாகும்.

عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَ مُعَاذًا رَضِيَ اللَّهُ عَنْهُ إِلَى اليَمَنِ، فَقَالَ: «ادْعُهُمْ إِلَى شَهَادَةِ أَنْ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَنِّي رَسُولُ اللَّهِ، فَإِنْ هُمْ أَطَاعُوا لِذَلِكَ، فَأَعْلِمْهُمْ أَنَّ اللَّهَ قَدِ افْتَرَضَ عَلَيْهِمْ خَمْسَ صَلَوَاتٍ فِي كُلِّ يَوْمٍ وَلَيْلَةٍ، فَإِنْ هُمْ أَطَاعُوا لِذَلِكَ، فَأَعْلِمْهُمْ أَنَّ اللَّهَ افْتَرَضَ عَلَيْهِمْ صَدَقَةً فِي أَمْوَالِهِمْ تُؤْخَذُ مِنْ أَغْنِيَائِهِمْ وَتُرَدُّ عَلَى فُقَرَائِهِمْ»(صحيح البخاري)

நபி(ஸல்) அவர்கள் முஆத் (றழி) அவர்களை யமனுக்கு அனுப்பியபோது அவரிடம்,………..தினமும் ஐவேளைத் தொழுகையை இறைவன் கடமையாக்கியிருக்கிறான் என்பதை அவர்களுக்கு அறிவிப்பீராக! ………………………..என்று கூறினார்கள்.  (புஹாரி: 1395, முஸ்லிம்)

سَبْرَةَ بْنِ مَعْبَدٍ الجُهَنِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَلِّمُوا الصَّبِيَّ الصَّلَاةَ ابْنَ سَبْعِ سِنِينَ، وَاضْرِبُوهُ عَلَيْهَا ابْنَ عَشْرٍ» (أحمد, الترمذي, أبوداود)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  பிள்ளைகள் எழு வயதை அடைந்தால் தொழுமாறு ஏவுங்கள், பத்து வயதை அடைந்தால் அதற்காக அடியுங்கள்.  (திர்மிதி: 407, அஹ்மத்)

 தொழுகையை விடுபவனுக்குறிய சட்டம்:

வேண்டுமென்று தொழுகையை விட்டவன் இஸ்லாத்தைவிட்டும் வெளியேற நேரிடும்.

جَابِرًا، يَقُولُ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ بَيْنَ الرَّجُلِ وَبَيْنَ الشِّرْكِ وَالْكُفْرِ تَرْكَ الصَّلَاةِ» (صحيح مسلم)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதனுக்கும், இணைவைப்பு, குப்ருக்குமிடையில் உள்ள வித்தியாசம் தொழுகையை விடுவதாகும்.     (முஸ்லிம்:246, 247)

 بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «العَهْدُ الَّذِي بَيْنَنَا وَبَيْنَهُمُ الصَّلَاةُ، فَمَنْ تَرَكَهَا فَقَدْ كَفَرَ» (سنن الترمذي والنسائ )

திர்மிதீ -2621-, நசாஇ -461- போன்ற அறிவிப்புகளில் யார் அதை விடுகின்றாரோ அவர் காபிராகிவிட்டார். என்று வந்துள்ளது.

{فِي جَنَّاتٍ يَتَسَاءَلُونَ (40) عَنِ الْمُجْرِمِينَ (41) مَا سَلَكَكُمْ فِي سَقَرَ (42) قَالُوا لَمْ نَكُ مِنَ الْمُصَلِّينَ} [المدثر: 40 – 43]

“உங்களை ஸகர் (நரகத்தில்) நுழைய வைத்தது எது?” (என்று நரக வாசிகளைப் பார்த்து கேற்க்கப்படும்.) *அவர்கள்: “தொழுபவர்களாக  நாங்கள் இருக்கவில்லை. (என்று பதில் கூறுவார்கள். (74: 42,43)

قال النبي صلى الله عليه وسلم عن يوم القيامة:……. حَتَّى إِذَا أَرَادَ اللَّهُ رَحْمَةَ مَنْ أَرَادَ مِنْ أَهْلِ النَّارِ، أَمَرَ اللَّهُ المَلاَئِكَةَ: أَنْ يُخْرِجُوا مَنْ كَانَ يَعْبُدُ اللَّهَ، فَيُخْرِجُونَهُمْ وَيَعْرِفُونَهُمْ بِآثَارِ السُّجُودِ، وَحَرَّمَ اللَّهُ عَلَى النَّارِ أَنْ تَأْكُلَ أَثَرَ السُّجُودِ، فَيَخْرُجُونَ مِنَ النَّارِ، فَكُلُّ ابْنِ آدَمَ تَأْكُلُهُ النَّارُ إِلَّا أَثَرَ السُّجُودِ، فَيَخْرُجُونَ مِنَ النَّارِ، قَدْ امْتَحَشُوا فَيُصَبُّ عَلَيْهِمْ مَاءُ الحَيَاةِ، فَيَنْبُتُونَ كَمَا تَنْبُتُ الحِبَّةُ فِي حَمِيلِ السَّيْلِ،…….( صحيح البخاري)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:….. நரக வாசிகளில் அல்லாஹ் நாடுபவர்களுக்கு அருள் செய்ய எண்ணும்போது, அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருந்தவர்களை நரகிலிருந்து வெளியேற்றுமாறு வானவர்களுக்கு உத்தரவிடுவான். ஸஜ்தா செய்த அடையாளத்தை வைத்து இவர்களை வானவர்கள் அடையாளம் காண்டு, வெளியேற்றுவார்கள்….(புஹாரி: 806)

 عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ العُقَيْلِيِّ، قَالَ: «كَانَ أَصْحَابُ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَرَوْنَ شَيْئًا مِنَ الأَعْمَالِ تَرْكُهُ كُفْرٌ غَيْرَ الصَّلَاةِ»(سنن الترمذي وابن أبي شيبة)

அப்துல்லாஹ் பின் ஷகீக் (ரஹ்) கூறினார்கள்: நபித் தோழர்கள், வணக்கங்களில் தொழுகையைத் தவிர வேறு எதை விடுவதையும் குப்ராக (இறை நிராகரிப்பு) காணவில்லை. (திர்மிதி)

வேண்டுமென்றே நேரம் தாழ்த்தி தொழுதல்

வேண்டுமென்று தொழுகையை நேரம் தாழ்த்துவது குற்றத்திற்குரிய செயலாகும், அது கலாச் செய்யப்பட முடியாதது, ஏனெனில் அது நேரம் குறிப்பிடப்பட்டதாகும்.

{فَأَقِيمُوا الصَّلَاةَ إِنَّ الصَّلَاةَ كَانَتْ عَلَى الْمُؤْمِنِينَ كِتَابًا مَوْقُوتًا} [النساء: 103]

நீங்கள் தொழுதுகொள்ளுங்கள், ஏனெனில் தொழுகை என்பது முஃமீன்கள் மீது நேரம் குறிப்பிடப்பட்ட கடமையாகும்.  (4:103)

{فَوَيْلٌ لِلْمُصَلِّينَ (4) الَّذِينَ هُمْ عَنْ صَلَاتِهِمْ سَاهُونَ} [الماعون: 4، 5]

இன்னும், தம் தொழுகையில் போடுபோக்குள்ளவர்களாக இருக்கும் தொழுகையாளிகளுக்கு கேடுதான். (104: 4,5)

தொழுகையை பிற்படுத்துவதற்கு அவகாசம் கொடுக்கப்பட்ட சந்தர்ப்பங்கள்.

இஸ்லாம் சில நேரங்களில் தொழுகையை பிற்படுத்த அவகாசம் கொடுத்துள்ளது, அது களா என்பதல்ல, மாறாக நபிகளாரால் வழிகாட்டப்பட்ட, (நேரம் குறிக்கப்பட்ட) வற்றில் உள்ளதாகும்.

  1. முற்படுத்தி, பிற்படுத்தி சேர்த்து தொழும் அவகாசம்.

عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَجْمَعُ بَيْنَ صَلاَةِ الظُّهْرِ وَالعَصْرِ، إِذَا كَانَ عَلَى ظَهْرِ سَيْرٍ وَيَجْمَعُ بَيْنَ المَغْرِبِ وَالعِشَاءِ»( صحيح البخاري)

இப்னு அப்பாஸ்(றழி) அவர்கள் கூறினார்கள்: நபி(ஸல்) அவர்கள் பயணத்தில் இருக்கும்போது லுஹர், அஸரையும் மக்ரிப், இஷாவையும் ஜம்உ செய்து (சேர்த்து) தொழுவார்கள். (புஹாரி: 1106,107, முஸ்லிம்)

عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: «جَمَعَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ الظُّهْرِ وَالْعَصْرِ، وَالْمَغْرِبِ وَالْعِشَاءِ بِالْمَدِينَةِ، فِي غَيْرِ خَوْفٍ، وَلَا مَطَرٍ»( صحيح مسلم)

முஸ்லிமின் மற்றொரு அறிவிப்பில்; இப்னு அப்பாஸ் (றழி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பயணம்,  பயம், மலை இல்லாத நேரத்திலும் லுஹர் அஸ்ரை சேர்த்தும், மஃக்ரிப் இஷாவை சேர்த்தும்  தொழுதார்கள்;  (முஸ்லிம்)

      2.   நேரம் வெளியேறும் அளவுக்கு தூக்கம் மிகைத்துவிடல். ஒருவர் தொழுகைக்காக விழிக்கும் நோக்குடனும், ஏற்பாடுகளுடனும் தூங்கி, நேரத்திற்கு விழிக்க முடியாது போனால் எழும்பியவுடன் தொழலாம். வேண்டுமென்று தூங்குவதல்ல, அப்படி செய்வது பெரும் பாவமாகும்.

عَنْ أَبِي قَتَادَةَ، قَالَ: سِرْنَا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةً، فَقَالَ: بَعْضُ القَوْمِ: لَوْ عَرَّسْتَ بِنَا يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «أَخَافُ أَنْ تَنَامُوا عَنِ الصَّلاَةِ» قَالَ بِلاَلٌ: أَنَا أُوقِظُكُمْ، فَاضْطَجَعُوا، وَأَسْنَدَ بِلاَلٌ ظَهْرَهُ إِلَى رَاحِلَتِهِ، فَغَلَبَتْهُ عَيْنَاهُ فَنَامَ، فَاسْتَيْقَظَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَقَدْ طَلَعَ حَاجِبُ الشَّمْسِ، فَقَالَ: «يَا بِلاَلُ، أَيْنَ مَا قُلْتَ؟» قَالَ: مَا أُلْقِيَتْ عَلَيَّ نَوْمَةٌ مِثْلُهَا قَطُّ، قَالَ: «إِنَّ اللَّهَ قَبَضَ أَرْوَاحَكُمْ حِينَ شَاءَ، وَرَدَّهَا عَلَيْكُمْ حِينَ شَاءَ، يَا بِلاَلُ، قُمْ فَأَذِّنْ بِالنَّاسِ بِالصَّلاَةِ» فَتَوَضَّأَ، فَلَمَّا ارْتَفَعَتِ الشَّمْسُ وَابْيَاضَّتْ، قَامَ فَصَلَّى  (صحيح البخاري)

அபூ கதாதா(றழி) அவர்கள் கூறினார்கள்: நாங்கள் இரண்டு இரவு நபி(ஸல்) அவர்களுடன் பயணம் செய்து கொண்டிருந்தோம். அப்போது சிலர் ‘இறைத்தூதர் அவர்களே! எங்களைச் சற்று இளைப்பாறச் செய்யலமே!” என்று கேட்டனர். ‘நீங்கள் தொழுகையைவிட்டும் உறங்கி விடுவீர்களோ என அஞ்சுகிறேன்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது பிலால் ‘நான் உங்களை எழுப்பி விடுகிறேன்’ என்று கூறியதும் அனைவரும் படுத்தனர். பிலால்(றழி) தம் முதுகைத் தம் கூடாரத்தின் பால் சாய்த்தார். அவரையும் மீறி உறங்கிவிட்டார். சூரியனின் ஒரு பகுதி உதித்த பின்பே நபி(ஸல்) அவர்கள் விழித்தனர். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘பிலாலே! நீர் சொன்னது என்னவாயிற்று?’ என்று கேட்டார்கள்.’இது போன்ற தூக்கம் எனக்கு ஒருபோதும் ஏற்பட்டதில்லை’ என்று பிலால்(றழி) கூறினார். ‘நிச்சயமாக இறைவன் உங்கள் உயிர்களை அவன் விரும்பியபோது கைப்பற்றிக் கொள்கிறான்; அவன் விரும்பியபோது திரும்பவும் ஒப்படைக்கிறான்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறிவிட்டு (பிலாலை நோக்கி) ‘பிலாலே! எழுந்து தொழுகைக்கு பாங்கு சொல்வீராக!” என்றார்கள். (பின்னர்) வுழுச் செய்துவிட்டு சூரியன் உயர்ந்து பிரகாசம் ஏற்பட்டபோது தொழுதார்கள்.  (புஹாரி: 595)

عَنْ عَائِشَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا نَعَسَ أَحَدُكُمْ وَهُوَ يُصَلِّي فَلْيَرْقُدْ، حَتَّى يَذْهَبَ عَنْهُ النَّوْمُ، فَإِنَّ أَحَدَكُمْ إِذَا صَلَّى وَهُوَ نَاعِسٌ، لاَ يَدْرِي لَعَلَّهُ يَسْتَغْفِرُ فَيَسُبُّ نَفْسَهُ»( صحيح البخاري)

ஆயிஷா (றழி) அவர்கள் கூறினார்கள்: ‘உங்களில் ஒருவர் தொழுது கொண்டிருக்கும்போது கண் அயர்ந்தால், அவரைவிட்டும் தூக்கம் நீங்கும் வரை அவர் (தொழுவதை விட்டுவிட்டு) தூங்கட்டும். உங்களிலே அவர் கண் அயர்ந்து கொண்டே தொழுதால் அவர் (தொழுகையில்) பாவ மன்னிப்புக் கோருகிறாரா, தன்னைப் பழிக்கிறாரா என்பது அவருக்குத் தெரியாது’ என்று’ இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (புஹாரி: 212,213)

     3.   மறதியின் காரணமாக ஒருவர் ஒரு தொழுகையை விட்டுவிட்டால், நினைவு வந்தவுடன் தொழவேண்டும்.

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ [ص:123] قَالَ: ” مَنْ نَسِيَ صَلاَةً فَلْيُصَلِّ إِذَا ذَكَرَهَا، لاَ كَفَّارَةَ لَهَا إِلَّا ذَلِكَ {وَأَقِمِ الصَّلاَةَ لِذِكْرِي} [طه: 14] “(صحيح البخاري)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “யாரேனும் ஒரு தொழுகையை மறந்துவிட்டால் நினைவு வந்ததும் அவர் அதைத் தொழட்டும்! இதைத் தவிர அதற்கு வேறு பரிகாரம் எதுவுமில்லை.”

“என்னைத் தியானிப்பதற்காகத் தொழுகையை நிலை நிறுத்துவீராக” (திருக்குர்ஆன் 20:14) என்ற வசனத்தையும் ஓதிக் காட்டினார்கள்.

என அனஸ்(றழி) அவர்கள் கூறினார்கள்.  (புஹாரி: 597 , முஸ்லிம்)

 عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ عُمَرَ بْنَ الخَطَّابِ، جَاءَ يَوْمَ الخَنْدَقِ، بَعْدَ مَا غَرَبَتِ الشَّمْسُ فَجَعَلَ يَسُبُّ كُفَّارَ قُرَيْشٍ، قَالَ: يَا رَسُولَ اللَّهِ مَا كِدْتُ أُصَلِّي العَصْرَ، حَتَّى كَادَتِ الشَّمْسُ تَغْرُبُ، قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَاللَّهِ مَا صَلَّيْتُهَا» فَقُمْنَا إِلَى بُطْحَانَ، فَتَوَضَّأَ لِلصَّلاَةِ وَتَوَضَّأْنَا لَهَا، فَصَلَّى العَصْرَ بَعْدَ مَا غَرَبَتِ الشَّمْسُ، ثُمَّ صَلَّى بَعْدَهَا المَغْرِبَ  (صحيح البخاري)

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(றழி) அவர்கள் கூறினார்கள்:  அகழ்ப்போரின்போது சூரியன் மறைந்த பின் உமர்(றழி) அவர்கள் குரைஷி இறைமறுப்பாளர்களை ஏசிக் கொண்டே வந்து ‘இறைத்தூதர் அவர்களே! சூரியன் மறையும் வரை நான் அஸர் தொழவில்லையே’ என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக நானும் அஸர் தொழவில்லை” என்று கூறினார்கள். நாங்கள் ‘புத்ஹான்’ எனும் பள்ளத்தாக்கை நோக்கிச் சென்றோம். நபி(ஸல்) அவர்கள் அஸர் தொழுகைக்காக வுழு செய்தார்கள். நாங்களும் அதற்காக வுழு  செய்தோம். சூரியன் மறைந்த பின் அஸர் தொழுதார்கள். அதன்பின்னர் மக்ரிப் தொழுதார்கள்.   (புஹாரி:596)

குறிப்பு: இந்த ஆதாரங்களை முன்வைத்து களா செய்யலாம் என வேண்டுமென்று விட்ட தொழுகைக்கு ஆதாரம் பிடிப்பது தவறு, வேண்டுமென்று விடுவது பெரும்பாவம் என்ற அடிப்படையில் அதற்காக தௌபா  செய்வது கட்டாயம்.

அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்.

                                                                                                                                                                                                                      

சட்டக் கலை பகுதியில் பதியப்படும் இந்தப் பதிவு; 2008 ம் ஆண்டு காலப் பகுதியில் தொகுக்கப்பட்டு, பாடமும் நடத்தப்பட்டது. இப்போது அது ஒரு சில மாற்றங்களுடனே இங்கு பதியப்படுகின்றது. அன்று தொகுக்கப்பட்ட ஆக்கங்கக் எழுத்து வடிவில் பாதுகாக்கப்படாததால் அதன் போடோ பிரதியை இணைத்துள்ளேன்.
தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்டினால் திருத்தி, இன்னும் பயனுள்ளதாக மாற்றலாம்.
அல்லாஹ்வே எம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக!!!

A B C

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *