பிக்ஹு -13;திரைகளுக்கு மேல் தடவுதல்

திரைகளுக்கு மேல் தடவுதல்

திரை எனும் போது கால் முழுவதையும் மறைத்து அணியும் சப்பாத்து போன்றதாகவோ, அல்லது தலைப்பாகையாகவோ அல்லது காயங்களுக்கு போடப்படுகின்ற கட்டுக்களாகவோ இருக்கலாம்.

சப்பாத்து போன்றவற்றின் மீது தடவுதல்

அன்றைய காலத்தில் இருந்தது குப் எனப்படும் தோலினாலான, முழுக்காலையும் மறைக்கும் ஒரு வகை பாதணியாகும். அதன் சட்டமே இன்று இருக்கும் சப்பாத்துகளுக்கு வழங்கப்படுகின்றது.

download images (4)

அதற்கான ஆதாரங்கள்

عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ عَنْ «النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ مَسَحَ عَلَى الخُفَّيْنِ»( صحيح البخاري)

ஸஃதுப்னு அபீ வக்காஸ் (றழி) அவர்கள் கூறினார்கள்: ‘நபி(ஸல்) அவர்கள் (ஒருமுறை வுழூச் செய்தபோது) இரண்டு (குப்புகள்) காலுறைகளின் மீது மஸ்ஹு செய்தார்கள்”  (புகாரி: 202, முஸ்லிம்)

 المُغِيرَةِ بْنِ شُعْبَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنَّهُ خَرَجَ لِحَاجَتِهِ، فَاتَّبَعَهُ المُغِيرَةُ بِإِدَاوَةٍ فِيهَا مَاءٌ، فَصَبَّ عَلَيْهِ حِينَ فَرَغَ مِنْ حَاجَتِهِ فَتَوَضَّأَ وَمَسَحَ عَلَى الخُفَّيْنِ»( صحيح البخاري)

‘நபி(ஸல்) அவர்கள் (இயற்கைத்) தேவையை நிறைவேற்றுவதற்காக வெளியே சென்றபோது ஒரு பாத்திரத்தில் தண்ணீருடன் அவர்களை பின்தொடர்ந்து சென்றேன். நபி(ஸல்) அவர்கள் தங்களின் தேவையை நிறைவேற்றிவிட்டு வந்தபோது அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றினேன். (அதில்) நபி(ஸல்) அவர்கள் வுழூச் செய்துவிட்டு இரண்டு காலுறைகளின் மீது மஸ்ஹு செய்தார்கள்”  (புஹாரி: 203, முஸ்லிம்)

இன்னும் பல நபித்தோழர்களும் இச்செய்தியை அறிவிக்கின்றனர்.

عَنْ حُذَيْفَةَ، قَالَ: «كُنْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَانْتَهَى إِلَى سُبَاطَةِ قَوْمٍ، فَبَالَ قَائِمًا» فَتَنَحَّيْتُ فَقَالَ: «ادْنُهْ» فَدَنَوْتُ حَتَّى قُمْتُ عِنْدَ عَقِبَيْهِ «فَتَوَضَّأَ فَمَسَحَ عَلَى خُفَّيْهِ»( صحيح البخاري و صحيح مسلم)

ஹுதைபா (றழி) அவர்கள் கூறினார்கள்: ‘நபி(ஸல்) அவர்கள் ஒரு சமூகத்தாரின் குப்பை கூளங்கள் போடுகின்ற இடத்தில் நின்று சிறுநீர் கழித்தார்கள். பின்னர் தண்ணீர் கொண்டு வரக் கூறினார்கள். நான் தண்ணீர் கொண்டு வந்தேன். அதில் நபி(ஸல்) அவர்கள் வுழூச் செய்தார்கள்,” (புஹாரி: 225, முஸ்லிமின் அறிவிப்பில்;அப்போது தனது (குப்பு) காலுறைகள் மீது தடவினார்கள். என்று வந்துள்ளது.

அதற்கான நிபந்தனைகள்

சுத்தத்துடன் அணிந்திருத்தல்

عَنْ عُرْوَةَ بْنِ المُغِيرَةِ، عَنْ أَبِيهِ قَالَ: كُنْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ، فَأَهْوَيْتُ لِأَنْزِعَ خُفَّيْهِ، فَقَالَ: «دَعْهُمَا، فَإِنِّي أَدْخَلْتُهُمَا طَاهِرَتَيْنِ». فَمَسَحَ عَلَيْهِمَا»( صحيح البخاري)

முகீரா (றழி) அவர்கள் கூறினார்கள்: ‘நான் ஒரு பயணத்தின்போது நபி(ஸல்) அவர்களுடன் இருந்தேன். அவர்கள் (வுழூச் செய்தபோது) அவர்களின் இரண்டு காலுறைகளையும் கழற்றுவதற்குக் குனிந்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘அதை விட்டுவிடும். கால்கள் இரண்டும் சுத்தமாக இருக்கும்போதுதான் உறைகளை அணிந்தேன்’ என்று கூறிவிட்டு அவ்விரு காலுறைகளின் மீதும் மஸ்ஹு  செய்தார்கள்”  (புஹாரி: 206, முஸ்லிம்)

வுழுவில் கழுவ வேண்டிய கால் பகுதியை மறைக்கக் கூடியதாக பாதணி இருத்தல்.

வுழூவில் மாத்திரம் தடவுதல், குளிப்புக்காக கழட்டுதல்.

எப்படி தடவ வேண்டும்?

பாதணியின் மேற்பகுதியை மாத்திரம், முன் விரல் பகுதியில் ஆரம்பித்து, கரண்டைக்கால் வரை தடவிவிடல்.

images (5) download (1)

 عَنْ عَلِيٍّ، قَالَ: كُنْتُ أَرَى أَنَّ بَاطِنَ الْقَدَمَيْنِ أَحَقُّ بِالْمَسْحِ مِنْ ظَاهِرِهِمَا، حَتَّى رَأَيْتُ ” رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْسَحُ ظَاهِرَهُمَا “( مسند أحمد)

 அலி (றழி) அவர்கள் கூறினார்கள்: மார்க்கம் என்பது புத்தியைக் கொண்டு தீர்மானிப்பதாக இருந்தால், பாதணிக்கு மேலால் தடவுவதை விடவும் கீழால் தடவுவதே பொருத்தமாக இருந்திருக்கும். ஆனாலும் நபி (ஸல்) அவர்கள் தனது பாதணி குப்பின் வெளிப்பகுதியின் மீது தடவுவதை நான் கண்டிருக்கின்றேன்.  (அஹ்மத்: 737, அபூதாவுத்: 162)

தடவுவதட்கான கால எல்லை

ஊர்வாசியாக இருந்தால் ஒரு பகலும் இரவுமாக ஒரு நாள்.

பயணியாக இருந்தால் இரவும், பகலுமாக மூன்று நாட்கள்.

முதல் முறை தடவியதிலிருந்து கால எல்லை ஆரம்பமாகும்.

குளிப்பு கடமையாகி விட்டால் காலம் முடிந்து விடும்.

عَلي ابْنِ أَبِي طَالِبٍ قَالَ: «جَعَلَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلَاثَةَ أَيَّامٍ وَلَيَالِيَهُنَّ لِلْمُسَافِرِ، وَيَوْمًا وَلَيْلَةً لِلْمُقِيمِ» (صحيح مسلم)

அலி (றழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள், பயணிகளுக்கு மூன்று பகல்களையும், இரவுகளையும், ஓர் பகலையும் இரவையும் ஊர்வாசிக்கும் (பாதணியின் மீது தடவுவதற்கான கால எல்லையாக) ஆக்கினார்கள்.  (முஸ்லிம்: 661)

தலைப்பாகை, கட்டு போன்றவற்றின் மீது தடவுதல்

தலைப்பாகை, தலைக் கவசம் போன்றவற்றை ஒருவர் அணிந்திருந்தால் வுழூச் செய்வதற்காக அவற்றை கலட்ட வேண்டியதில்லை, மாறாக அவற்றின் மீதே தண்ணீரால் தடவிக்கொண்டால் போதுமானது.

711f3bba262846f6ace3d0c19d0e147d images (7)

عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ  أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَوَضَّأَ فَمَسَحَ بِنَاصِيَتِهِ، وَعَلَى الْعِمَامَةِ وَعَلَى الْخُفَّيْنِ» (صحيح مسلم)

முகீரா (றழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் வுழூச் செய்தார்கள், அப்போது தன் முன்நெற்றி ரோமத்தை தடவிவிட்டு, தலைப்பாகை மீதும் தடவினார்கள். (முஸ்லிம்: 658,659)

عَنْ بِلَالٍ: «أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَسَحَ عَلَى الْخُفَّيْنِ وَالْخِمَارِ»(صحيح مسلم)

பிலால் (றழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் (வுழூவின் போது) பாதணிகள் மீதும், தலைப்பாகை மீதும் தடவினார்கள். (முஸ்லிம்:660)

கலட்ட முடியுமான தலைப்பாகை மீதே தடவ முடியும் என்றால் கட்டு போன்றவை கலட்ட முடியாததே. எனவே தேவை ஏற்படின் அதன் மீதும் தடவிக்கொள்ளலாம்.

images (6)

எனவே போடப்பட்ட கட்டு வுழூவுடைய உறுப்பில் இருப்பின் அதன் மீது தடவிவிட்டு, வுழூவை பூரணப்படுத்தலாம்.

கட்டு போட்டிருப்பவர்கள் வுழூவும் எடுத்துவிட்டு, தயம்முமும் செய்யவேண்டும் என்று சிலர் விளங்கிவைத்துள்ளனர், அது தவறாகும். ஏனெனில் இரண்டில் ஒன்றை செய்வதே இஸ்லாம் காட்டித் தந்த ஒன்றாகும்.

இந்த சட்டம் இஸ்லாம் இலகுவான மார்க்கம் என்பதை படம் பிடித்துக் காட்டுகின்றது, எனவே இஸ்லாம் தந்திருக்கும் இந்த சலுகையை முறையாக விளங்கி செயல்படுத்துவோம்.

                                                                                                                                                                                                                                

சட்டக் கலை பகுதியில் பதியப்படும் இந்தப் பதிவு; 2008 ம் ஆண்டு காலப் பகுதியில் தொகுக்கப்பட்டு, பாடமும் நடத்தப்பட்டது. இப்போது அது ஒரு சில மாற்றங்களுடனே இங்கு பதியப்படுகின்றது. அன்று தொகுக்கப்பட்ட ஆக்கங்கக் எழுத்து வடிவில் பாதுகாக்கப்படாததால் அதன் போடோ பிரதியை இணைத்துள்ளேன்.
தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்டினால் திருத்தி, இன்னும் பயனுள்ளதாக மாற்றலாம்.
அல்லாஹ்வே எம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக!!!

14 15

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *