பிக்ஹு -5; சுத்தம் செய்யும் விதங்கள்

சுத்தம் செய்யும் விதங்கள்

நாய் வாய் நுழைத்த பாத்திரம்; அதனை ஏழு விடுத்தங்கள் கழுவ வேண்டும், ஒரு விடுத்தம் மண்ணை கலந்து கழுவவேண்டும்.

 عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا شَرِبَ الكَلْبُ فِي إِنَاءِ أَحَدِكُمْ فَلْيَغْسِلْهُ سَبْعًا» (صحيح البخاري )

அபூ ஹுரைரா (றழி) அவர்கள் கூறினார்கள்: ‘உங்களில் ஒருவரின் (தண்ணீர்) பாத்திரத்தில் நாய் குடித்தால் அவர் அப்பாத்திரத்தை ஏழு முறை கழுவட்டும்” என இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (புஹாரி: 172)

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «طَهُورُ إِنَاءِ أَحَدِكُمْ إِذَا وَلَغَ فِيهِ الْكَلْبُ، أَنْ يَغْسِلَهُ سَبْعَ مَرَّاتٍ أُولَاهُنَّ بِالتُّرَابِ» (صحيح مسلم)

முஸ்லிமின் அறிவிப்பில்; ஏழு விடுத்தத்தில் முதல் தடவை மண்ணைக் கொண்டு கழுவுங்கள். என்று வந்துள்ளது.  (677)

சிறு நீர்; உணவு உட்கொள்ளாத ஆண் குழந்தைகளின் சிறுநீராக இருப்பின் தண்ணீரை தெளித்து விட்டால் போதுமானது.

عَنْ أُمِّ قَيْسٍ بِنْتِ مِحْصَنٍ، أَنَّهَا «أَتَتْ بِابْنٍ لَهَا صَغِيرٍ، لَمْ يَأْكُلِ الطَّعَامَ، إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَجْلَسَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَجْرِهِ، فَبَالَ عَلَى ثَوْبِهِ، فَدَعَا بِمَاءٍ، فَنَضَحَهُ وَلَمْ يَغْسِلْهُ» (صحيح البخاري )

உம்மு கைஸ் பின்த் மிஹ்சன் (றழி) அவர்கள் கூறினார்கள்: ‘(தாய்ப் பாலைத் தவிர வேறு) உணவு சாப்பிடாத என்னுடைய சிறிய ஆண் குழந்தையை நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தேன். நபி(ஸல்) அவர்கள் அக்குழந்தையைத் தங்களின் மடியில் உட்கார வைத்தபோது, அக்குழந்தை நபி(ஸல்) அவர்களின் ஆடையில் சிறுநீர் கழித்துவிட்டது. உடனே தண்ணீர் கொண்டு வரச் செய்து (சிறுநீர் பட்ட இடத்தில்) தெளித்தார்கள்; அதைக் கழுவவில்லை”  (புஹாரி: 223, முஸ்லிம்)

பெண் குழந்தையாக இருப்பின் கழுவிவிடுதல்

عَنْ لُبَابَةَ بِنْتِ الْحَارِثِ قَالَتْ: كَانَ الْحُسَيْنُ بْنُ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ فِي حِجْرِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَبَالَ عَلَيْهِ فَقُلْتُ: الْبَسْ ثَوْبًا وَأَعْطِنِي إِزَارَكَ حَتَّى أَغْسِلَهُ. قَالَ: «إِنَّمَا يُغْسَلُ مِنْ بَوْلِ الْأُنْثَى وَيُنْضَحُ مِنْ بَوْلِ الذَّكَرِ» (أحمد, سنن أبي داود)

லுபாபா பிந்துல் ஹாரிஸ் (றழி) அவர்கள் கூறினார்கள்: ஹசன் (றழி) அவர்கள் நபிகளாரின் மடியில் இருந்தார்கள், அவர்கள் மீது சிறுநீர் கழித்து விடவே, நீங்கள் ஒரு ஆடையை அணிந்து கொண்டு, உங்கள் கீலாடையை தாருங்கள் கழுவி விடுகின்றேன். என்றேன். அதற்கு நபியவர்கள்; கழுவவேண்டியது பென்குழந்தையின் சிருநீருக்காகத்தான், ஆண் குழந்தையின் சிறு நீருக்காக தெளித்துவிட்டால் போதுமானது.  (அஹ்மத்: 563, அபூதாவுத்)

இரத்தம்; பொதுவாக அதனை சுரண்டிவிட்டு  கழுவிக்கொள்ளல், சிறிய அளவில் இருக்குமானால் தெளித்துக் கொண்டாலும் போதுமானது.

عَنْ أَسْمَاءَ، قَالَتْ: جَاءَتِ امْرَأَةٌ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ: أَرَأَيْتَ إِحْدَانَا تَحِيضُ فِي الثَّوْبِ، كَيْفَ تَصْنَعُ؟ قَالَ: «تَحُتُّهُ، ثُمَّ تَقْرُصُهُ بِالْمَاءِ، وَتَنْضَحُهُ، وَتُصَلِّي فِيهِ» (صحيح البخاري ومسلم)

அஸ்மாஃ பின்த் அபீ பக்ர் (றழி) அவர்கள் கூறினார்கள்:  ‘ஒரு பெண், நபி(ஸல்) அவர்களிடம் வந்து ‘எங்களில் ஒருத்தியின் துணியில் மாதவிடாய் இரத்தம் பட்டால், அவள் என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்டதற்கு, ‘அந்த இடத்தைச் சுரண்ட வேண்டும்; பின்னர் அதைத் தண்ணீரால் தேய்த்துக் கழுவ வேண்டும்; பின்னர் அந்தத் துணியுடன் நீ தொழலாம்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (புஹாரி: 227, முஸ்லிம்)

عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ أَنَّهَا قَالَتْ: سَأَلَتِ امْرَأَةٌ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، أَرَأَيْتَ إِحْدَانَا إِذَا أَصَابَ ثَوْبَهَا الدَّمُ مِنَ الحَيْضَةِ كَيْفَ تَصْنَعُ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا أَصَابَ ثَوْبَ إِحْدَاكُنَّ الدَّمُ مِنَ الحَيْضَةِ فَلْتَقْرُصْهُ، ثُمَّ لِتَنْضَحْهُ بِمَاءٍ، ثُمَّ لِتُصَلِّي فِيهِ» (صحيح البخاري )

அஸ்மாஃ பின்த் அபீ பக்ர் (றழி) அவர்கள் கூறினார்கள்: ‘ஒரு பெண் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! எங்களில் ஒரு பெண்ணின் துணியில் மாதவிடாய் இரத்தம் பட்டால் அவள் எவ்வாறு (சுத்தம்) செய்ய வேண்டும்?’ என்று கேட்டதற்கு, ‘உங்களில் ஒருத்தியின் ஆடையில் மாதவிடாய் இரத்தம் பட்டால் அதைச் சுரண்டிவிட்டுப் பின்னர் அந்த இடத்தில் தண்ணீர் தெளித்து விடட்டும். அதன் பின்னர் அந்த ஆடையுடன் தொழுது கொள்ளலாம்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி: 307)

விந்து, இந்திரியம்; கண்ணுக்கு தென்படும் அளவு இருந்தால் சுரண்டிவிட்டு கழுவிவிடுவதும், தென்படாத அளவு அடையாளம் மட்டும் இருந்தால் தண்ணீரை தெளித்துவிடுதல்.

عَائِشَةُ: «كُنْتُ أَغْسِلُهُ مِنْ ثَوْبِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ يَخْرُجُ إِلَى الصَّلاَةِ، وَأَثَرُ الغَسْلِ فِيهِ» (صحيح البخاري)

ஆயிஷா (றழி) அவர்கள் கூறினார்கள்:   ‘நான் நபி(ஸல்) அவர்களின் ஆடையில் இந்திரியம் பட்ட இடத்தைக் கழுவுவேன். அந்த ஆடையோடு நபி(ஸல்) அவர்கள் தொழுகைக்குச் செல்வார்கள். ஆடையில் நீரின் அடையாளம் தெளிவாகத் தெரியும்” (புஹாரி: 231, முஸ்லிம் )

عَنْ أَبِي مَعْشَرٍأَنَّ رَجُلًا نَزَلَ بِعَائِشَةَ، فَأَصْبَحَ يَغْسِلُ ثَوْبَهُ فَقَالَتْ عَائِشَةُ: «إِنَّمَا كَانَ يُجْزِئُكَ إِنْ رَأَيْتَهُ أَنْ تَغْسِلَ مَكَانَهُ، فَإِنْ لَمْ تَرَ نَضَحْتَ حَوْلَهُ وَلَقَدْ رَأَيْتُنِي أَفْرُكُهُ مِنْ ثَوْبِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرْكًا فَيُصَلِّي فِيهِ» (صحيح مسلم )

முஸ்லிமின் அறிவிப்பில்; ஆயிஷா (றழி) அவர்கள், ஒரு மனிதன் ஆடையை கழுவுவதை கண்ட போது, விந்தை நீ கண்டால் அவ்விடத்தைக் கழுவிக்கொள்வதும், காணவில்லையாயின் தண்ணிரை  தெளித்துக் கொள்வதும் போதுமானது. ஏனெனில் நபி (ஸல் ) அவர்களின்  ஆடையிலிருந்து அதை நான் சுரண்டிவிடுவேன், நபியவர்கள் அந்த ஆடையிலேயே தொழுவார்கள்.   (694)

கையை மணிக்கட்டு வரை கழுவுதல்; இரவில் நித்திரையிலிருந்து எழுந்தால் பாத்திரத்துக்குள் நேரடியாக கையை நுழைக்காமல் வெளியில் மூன்று விடுத்தங்கள் கழுவுவிட்டு நுழைத்தல்.

عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا تَوَضَّأَ أَحَدُكُمْ فَلْيَجْعَلْ فِي أَنْفِهِ، ثُمَّ لِيَنْثُرْ، وَمَنِ اسْتَجْمَرَ فَلْيُوتِرْ، وَإِذَا اسْتَيْقَظَ أَحَدُكُمْ مِنْ نَوْمِهِ فَلْيَغْسِلْ يَدَهُ قَبْلَ أَنْ يُدْخِلَهَا فِي وَضُوئِهِ، فَإِنَّ أَحَدَكُمْ لاَ يَدْرِي أَيْنَ بَاتَتْ يَدُهُ» (صحيح البخاري )

அபூஹுரைர (றழி) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் நித்திரையிலிருந்து விழித்தெழுந்தால் அவர், தாம் உளூச் செய்யும் தண்ணீரில் தம் கையை நுழைப்பதற்கு முன்னர் மூன்று விடுத்தம் கழுவிக் கொள்ளட்டும். ஏனென்றால், (தூங்கத்தில்) தம் கை எங்கே இருந்தது என்பதை உங்களில் எவரும் அறியமாட்டார்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி: 162, முஸ்லிம்)

மிருகங்களின் தோல்; அவற்றை சுண்ணாம்பு அல்லது கெமிகல் போன்ற வற்றில் ஊரக்கட்டுவதன் மூலம் சுத்தப்படுத்தலாம்.

 عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: ” وَجَدَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَاةً مَيِّتَةً، أُعْطِيَتْهَا مَوْلاَةٌ لِمَيْمُونَةَ مِنَ الصَّدَقَةِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَلَّا انْتَفَعْتُمْ بِجِلْدِهَا؟» قَالُوا: إِنَّهَا مَيْتَةٌ: قَالَ: «إِنَّمَا حَرُمَ أَكْلُهَا» صحيح البخاري

இப்னு அப்பாஸ்(றழி) அவர்கள் கூறினார்கள்: மைமூனா(றழி) அவர்களின் அடிமைப் பெண்ணுக்கு தர்மமாக வழங்கப்பட்ட ஓர் ஆடு செத்துக் கிடந்ததைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் ‘இதன் தோலை நீங்கள் பயன்படுத்தியிருக்கக் கூடாதா?’ என்று கேட்டார்கள். ‘இது செத்ததாயிற்றே!” எனத் தோழர்கள் கூறியதும் ‘இதை உண்பதுதான் தடுக்கப்பட்டுள்ளது’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (புஹாரி: 1492, முஸ்லிம்)

عَنْ عَبْدِ اللهِ بْنِ عَبَّاسٍ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِذَا دُبِغَ الْإِهَابُ فَقَدْ طَهُرَ» صحيح مسلم

இப்னு அப்பாஸ் (றழி) அவர்கள் கூறினார்கள்: தோள்கள் பதணிடப்பட்டால் அது சுத்தமாகிவிடும்.  (முஸ்லிம்: 838)

பொதுவாக அசுத்தம் கண்ணுக்கு தென்படும் பொருளாக இருந்தால் அதனை அவ்விடத்திலிருந்து முதலாவது அகற்ற வேண்டும், பிறகு சுத்தப்படுத்த வேண்டும்.  சிறுநீர் மண்ணில் கழிக்கப்பட்டு அகற்ற முடியாத நிலையில் இருக்குமானால் அவ்விடத்திற்கு நீரை ஊற்றி விட்டால் போதுமானது.

 أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ: قَامَ أَعْرَابِيٌّ فَبَالَ فِي المَسْجِدِ، فَتَنَاوَلَهُ النَّاسُ، فَقَالَ لَهُمُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «دَعُوهُ وَهَرِيقُوا عَلَى بَوْلِهِ سَجْلًا مِنْ مَاءٍ، أَوْ ذَنُوبًا مِنْ مَاءٍ، فَإِنَّمَا بُعِثْتُمْ مُيَسِّرِينَ، وَلَمْ تُبْعَثُوا مُعَسِّرِينَ» صحيح البخاري

அபூ ஹுரைரா (றழி) அவர்கள் கூறினார்கள்:  ‘ஒரு கிராமவாசி பள்ளிவாசலில் சிறுநீர் கழித்துவிட்டார். உடனே மக்கள் அவரைப் பிடித்தனர். நபி(ஸல்) அவர்கள் ‘அவரைவிட்டு விடுங்கள்; அவர் கழித்த சிறுநீரின் மீது ஒரு வாளித் தண்ணீரை ஊற்றுங்கள். நீங்கள் (எளிமையான மார்க்கத்தில்) நளினமாக எடுத்துச் சொல்பவர்களாக அனுப்பப்பட்டுள்ளீர்கள். கடினமாக எடுத்துச் சொல்லக் கூடியவர்களாக நீங்கள் அனுப்பப்படவில்லை’ என்று கூறினார்கள்”  (புஹாரி: 220)

சுத்தத்தின் ஒழுங்குகளை விளங்கி சுத்தத்தை கடைபிடித்து பூரண முஃமினாக மாறமுயற்சிப்போம்.

                                                                                                                                                                                                                                    

சட்டக் கலை பகுதியில் பதியப்படும் இந்தப் பதிவு; 2008 ம் ஆண்டு காலப் பகுதியில் தொகுக்கப்பட்டு, பாடமும் நடத்தப்பட்டது. இப்போது அது ஒரு சில மாற்றங்களுடனே இங்கு பதியப்படுகின்றது. அன்று தொகுக்கப்பட்ட ஆக்கங்கக் எழுத்து வடிவில் பாதுகாக்கப்படாததால் அதன் போடோ பிரதியை இணைத்துள்ளேன்.
தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்டினால் திருத்தி, இன்னும் பயனுள்ளதாக மாற்றலாம்.
அல்லாஹ்வே எம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக!!!

3

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *