பிக்ஹு -3; الطهارة = சுத்தம்

الطهارة  =  சுத்தம்

சுத்தம் என்பது ஈமானின் ஒரு  பகுதி என்ற அடிப்படையிலும் ஐம்பெரும் கடமைகளுள் ஒன்றாக இருக்கின்ற தொழுகை ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு அது நிபந்தனையாக இருக்கின்றது என்ற அடிப்படையிலும்  இஸ்லாம் அதனை அதிகமாகவே வலியுறுத்துகின்றது. எந்த அளவுக்கென்றால் ஒரு முஃமின் எப்போதும் சுத்தமாக இருக்கவேண்டும் என்று கூறுகின்றது.

  عَنْ أَبِي مَالِكٍ الْأَشْعَرِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الطُّهُورُ شَطْرُ الْإِيمَانِ   صحيح مسلم

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சுத்தம்  என்பது ஈமானின் அரைவாசியாகும்.  (முஸ்லிம்: 556)

عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَقِيَهُ فِي بَعْضِ طَرِيقِ المَدِينَةِ وَهُوَ جُنُبٌ، فَانْخَنَسْتُ مِنْهُ، فَذَهَبَ فَاغْتَسَلَ ثُمَّ جَاءَ، فَقَالَ: «أَيْنَ كُنْتَ يَا أَبَا هُرَيْرَةَ» قَالَ: كُنْتُ جُنُبًا، فَكَرِهْتُ أَنْ أُجَالِسَكَ وَأَنَا عَلَى غَيْرِ طَهَارَةٍ، فَقَالَ: «سُبْحَانَ اللَّهِ، إِنَّ المُسْلِمَ لاَ يَنْجُسُ» صحيح البخاري , صحيح مسلم

அபூ ஹுறைரா (றழி) அவர்கள் கூறினார்கள் :’நான் குளிப்புக் கடமையான நிலையில் மதீனாவின் ஒரு தெருவில் நின்றிருந்தபோது நபி(ஸல்) என்னைச் சந்தித்தார்கள். அப்போது, நான் நழுவி விட்டேன். குளித்துவிட்டுப் பின்னர் வந்தேன். நபி(ஸல்) அவர்கள் ‘அபூ ஹுறைரா! எங்கு நழுவி விட்டீர்?’ என்று கேட்டதற்கு, ‘குளிப்புக் கடமையாகியிருந்தேன்; எனவே நான் சுத்தமில்லாமல் உங்கள் அருகே அமர்வதை வெறுத்தேன்’ என்றேன். அப்போது ‘ஸுப்ஹானல்லாஹ்! ஒரு முஸ்லிம் அசுத்தமாகவே மாட்டான்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (புஹாரி: 283, முஸ்லிம்)

{ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّمَا الْمُشْرِكُونَ نَجَسٌ فَلَا يَقْرَبُوا الْمَسْجِدَ الْحَرَامَ بَعْدَ عَامِهِمْ هَذَا} [التوبة: 28]

ஈமான் கொண்டவர்களே! நிச்சயமாக இணை வைத்து வணங்குவோர் அசுத்தமானவர்களே…. (9:28)
மேலும் நபி (ஸல்) அவர்களை தஃவா செய்ய தூண்டும் அல்லாஹ் சுத்தத்தையும் வலியுறுத்துகின்றான்.

{يَا أَيُّهَا الْمُدَّثِّرُ (1) قُمْ فَأَنْذِرْ (2) وَرَبَّكَ فَكَبِّرْ (3) وَثِيَابَكَ فَطَهِّرْ} [المدثر: 1 – 4]

(போர்வை) போர்த்திக் கொண்டு இருப்பவரே!2. நீர் எழுந்து (மக்களுக்கு அச்சமூட்டி) எச்சரிக்கை செய்வீராக.3. மேலும், உம் இறைவனைப் பெருமைப் படுத்துவீராக.4. உம் ஆடைகளைத் தூய்மையாக ஆக்கி வைத்துக் கொள்வீராக.  (74:1- 4)
சுத்தம் செய்வதற்குரிய சாதனங்களாக இஸ்லாம் பல சாதனங்களை காட்டித்தருகின்றது. அவை பின் வருமாறு.
  1. நீர் (முதன்மை சாதனம்)
  2. மண் (தண்ணீருக்கு பகரமாக வரக்கூடியது)
  3. தண்ணீருக்கு துணை நிற்கும் (சவர்க்காரம் போன்ற)   ஏனைய சாதனங்கள்.

{ وَيُنَزِّلُ عَلَيْكُمْ مِنَ السَّمَاءِ مَاءً لِيُطَهِّرَكُمْ بِهِ} [الأنفال: 11]

உங்களை சுத்தப்படுத்துவதற்காக  அவன் உங்கள் மீது வானிலிருந்து மழை பொழியச் செய்தான்.  (8: 11)

أَبُو هُرَيْرَةَ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْكُتُ بَيْنَ التَّكْبِيرِ وَبَيْنَ القِرَاءَةِ إِسْكَاتَةً – قَالَ أَحْسِبُهُ قَالَ: هُنَيَّةً – فَقُلْتُ: بِأَبِي وَأُمِّي يَا رَسُولَ اللَّهِ، إِسْكَاتُكَ بَيْنَ التَّكْبِيرِ وَالقِرَاءَةِ مَا تَقُولُ؟ قَالَ: ” أَقُولُ: اللَّهُمَّ بَاعِدْ بَيْنِي وَبَيْنَ خَطَايَايَ، كَمَا بَاعَدْتَ بَيْنَ المَشْرِقِ وَالمَغْرِبِ، اللَّهُمَّ نَقِّنِي مِنَ الخَطَايَا كَمَا يُنَقَّى الثَّوْبُ الأَبْيَضُ مِنَ الدَّنَسِ، اللَّهُمَّ اغْسِلْ خَطَايَايَ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالبَرَدِ ” صحيح البخاري 

அபூ ஹுறைரா (றழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் தக்பீருக்கும் கிராஅத்துக்கும் இடையே சற்று நேரம் மவுனமாக இருப்பார்கள். இறைத்தூதர் அவர்களே! என் தந்தை தாய் தங்களுக்கு அர்ப்பணம். தக்பீருக்கும் கிராஅத்துக்குமிடையே நீங்கள் மவுனமாக இருக்கும் சமயத்தில் என்ன கூறுவீர்கள்? என்று கேட்டேன். ‘இறைவா! கிழக்குக்கும் மேற்குக்குமிடையே நீ ஏற்படுத்திய தூரத்தைப் போல், எனக்கும் தவறுகளுக்குமிடையே நீ தூரத்தை ஏற்படுத்துவாயாக! இறைவா! வெண்மையான ஆடை அழுக்கிலிருந்து தூய்மைப் படுத்தப் படுவது போல் என் தவறுகளைவிட்டும் என்னைத் தூய்மைப் படுத்துவாயாக! தண்ணீராலும் பனிக்கட்டியாலும் ஆலங்கட்டியாலும் என் தவறுகளைக் கழுவுவாயாக! என்று நான் கூறுவேன்” என்றார்கள்.  (புஹாரி: 744, முஸ்லிம்)

جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” أُعْطِيتُ خَمْسًا لَمْ يُعْطَهُنَّ أَحَدٌ قَبْلِي: نُصِرْتُ بِالرُّعْبِ مَسِيرَةَ شَهْرٍ، وَجُعِلَتْ لِي الأَرْضُ مَسْجِدًا وَطَهُورًا، فَأَيُّمَا رَجُلٍ مِنْ أُمَّتِي أَدْرَكَتْهُ الصَّلاَةُ فَلْيُصَلِّ، ……… ” صحيح البخاري 

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “எனக்கு முன்னர் (நபிமார்கள்) யாருக்கும் கொடுக்கப்படாத ஐந்து விஷயங்கள் எனக்குக் கொடுக்கப்பட்டுள்ளன….. பூமி முழுவதும் சுத்தம் செய்யத்தக்கதாகவும் தொழுமிடமாகவும் எனக்கு ஆக்கப்பட்டுள்ளது……(புஹாரி: 438, முஸ்லிம்)

{ وَإِنْ كُنْتُمْ مَرْضَى أَوْ عَلَى سَفَرٍ أَوْ جَاءَ أَحَدٌ مِنْكُمْ مِنَ الْغَائِطِ أَوْ لَامَسْتُمُ النِّسَاءَ فَلَمْ تَجِدُوا مَاءً فَتَيَمَّمُوا صَعِيدًا طَيِّبًا فَامْسَحُوا بِوُجُوهِكُمْ وَأَيْدِيكُمْ مِنْهُ } [المائدة: 6]

(உங்களைச் சுத்தப்படுத்திக் கொள்ள) உங்களுக்குத் தண்ணீர் கிடைக்காவிட்டால்சுத்தமான மண்ணை நாடிச் சென்று தயம்மும் செய்துகொள்ளுங்கள்……(5:6)

عَنْ أُمِّ عَطِيَّةَ الأَنْصَارِيَّةِ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: دَخَلَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ تُوُفِّيَتِ ابْنَتُهُ، فَقَالَ: «اغْسِلْنَهَا ثَلاَثًا، أَوْ خَمْسًا، أَوْ أَكْثَرَ مِنْ ذَلِكَ إِنْ رَأَيْتُنَّ ذَلِكَ، بِمَاءٍ وَسِدْرٍ، وَاجْعَلْنَ فِي الآخِرَةِ كَافُورًا – أَوْ شَيْئًا مِنْ كَافُورٍ – فَإِذَا فَرَغْتُنَّ فَآذِنَّنِي»، فَلَمَّا فَرَغْنَا آذَنَّاهُ [ص:74]، فَأَعْطَانَا حِقْوَهُ، فَقَالَ: «أَشْعِرْنَهَا إِيَّاهُ» صحيح البخاري 

உம்மு அதிய்யா(றழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் தங்களின் மகள் மரணித்துவிட்டபோது எங்களிடம் வந்து, ‘அவரை இலந்தை இலை கலந்த நீரால் மூன்று அல்லது ஐந்து, தேவையெனக் கருதினால் அதற்கதிகமான முறை குளிப்பாட்டுங்கள்; இறுதியில் கற்பூரத்தைச் சிறிது சேர்த்துக் கொள்ளுங்கள்; குளிப்பாட்டி முடிந்ததும் அவர்களுக்கு அறிவித்தோம். அவர்கள் வந்து தம் கீழாடையைத் தந்து, ‘இதை அவரின் உடலில் சுற்றுங்கள்” எனக் கூறினார்கள்.   (புஹாரி: 1253, முஸ்லிம்)
நீரை மூன்று வகையாக பிரித்து நோக்கலாம்.
1-        மிகச் சுத்தமானது  2-   சுத்தமானது  3-  அசுத்தமானது
மிகச் சுத்தமானது என்றால் இயல்பிலேயே  அது தன்னிளையிலும் சுத்தமாக இருப்பதோடு பிறவற்றையும் சுத்தப்படுத்தும் நிலையில் உள்ளதைக் குறிக்கும்.

{ وَأَنْزَلْنَا مِنَ السَّمَاءِ مَاءً طَهُورًا (48) لِنُحْيِيَ بِهِ بَلْدَةً مَيْتًا وَنُسْقِيَهُ مِمَّا خَلَقْنَا أَنْعَامًا وَأَنَاسِيَّ كَثِيرًا } [الفرقان: 48، 49]

மேலும், (நபியே!) நாமே வானத்திலிருந்து தூய்மையான நீரையும் இறக்கி வைக்கிறோம்.  (25:48)

أَبَا هُرَيْرَةَ، يَقُولُ: سَأَلَ رَجُلٌ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللهِ، إِنَّا نَرْكَبُ البَحْرَ، وَنَحْمِلُ مَعَنَا القَلِيلَ مِنَ الْمَاءِ، فَإِنْ تَوَضَّأْنَا بِهِ عَطِشْنَا، أَفَنَتَوَضَّأُ مِنَ الْبَحْرِ؟ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: هُوَ الطَّهُورُ مَاؤُهُ، الحِلُّ مَيْتَتُهُ. (سنن الترمذي)

நபி (ஸல்) அவர்களிடம் கடல் நீரைப் பற்றி கேட்கப்பட்ட போது; அதன் தண்ணீரும் சுத்தமானது, அதில் இறந்தவையும் ஆகுமானது. என்று கூறினார்கள்.  (திர்மிதி: 69)
மிகச்  சுத்தமான நிலையில் இருக்கும் நீர், சுத்தமான ஒரு பொருளுடன் கலந்து, அதன் வடிவம் மாறாவிட்டாலும் அது அந்த சட்டத்திலேயே இருக்கும். (உதாரணமாக; இலை, பாசி, சவர்க்காரம் போன்ற ஒன்றினால்  கலக்கப்பட்டது போன்று.)
ஆனால் தண்ணீரின் வடிவம் மாற்றம் பெரும் அளவுக்கு மாற்றம் அடைந்தால் அது சுத்தமானது, ஆனால் பிறவற்றை சுத்தப்படுத்த முடியாதது என்ற இரண்டாவது வகை நீரில் சேர்ந்துவிடும். (உதாரணமாக; தேயிலை கலந்த நீர் தேநீராகவும், சுண்ணாம்பு கலந்த நீர் பூசும் சாயமாகவும் மாறுவது போன்று.)
அசுத்தமானது எனும் போது மிகச் சுத்தமான நீர் அசுத்தமான ஒரு பொருளினால் கலந்து அதன் நிறம் சுவை வாடை மாறிவிடுவதன் மூலம்  ஏற்படலாம். அதன் மூலம் சுத்தம் செய்யமுடியாது. (உதாரணமாக; மல சலம் கலந்த நீர், செத்த பிராணியின் மூலம் மாற்றமடைந்த நீர் போன்று. )
குறிப்பு: பாவனைக்கு உற்படுத்தப்பட்ட நீர் என்று ஒரு வகை குறிப்பிடப்படுகின்றது. அதாவது; வுழூவை நிறைவேற்றவென ஒரு பாத்திரத்தில் உள்ள நீரில் கையை நுளைத்தாலோ, அல்லது நகம் அந்த நீரில் பட்டுவிட்டாலோ அந்த நிலை ஏற்படும் என்பர். அதன் மூலம் நீர் அசுத்தமாகி விடும் என்பர். ஆனால் நபியவர்கள் அப்படி நீரை அசுத்தம் என்று ஒதுக்கியதாக எந்த சான்றுகளும் இல்லை. மாறாக நபியவர்கள் சிறு பாத்திரத்திலிருந்து தன் கையை இட்டு குளித்திருக்கின்றார்கள்.

عَنْ عَائِشَةَ، قَالَتْ: «كُنْتُ أَغْتَسِلُ أَنَا وَالنَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ إِنَاءٍ وَاحِدٍ، تَخْتَلِفُ أَيْدِينَا فِيهِ»  صحيح البخاري 

ஆயிஷா (றழி) அவர்கள் கூரினார்கள்: ‘நானும் நபி(ஸல்) அவர்களும் ஒரே பாத்திரத்திலிருந்து குளிப்போம். அப்போது எங்கள் இருவரின் கைகளும் அந்தப் பாத்திரத்தில் மாறி மாறிச் செல்லும்”
எனவே பாத்திரத்திற்குள் கையை  நுழைத்தாலே தண்ணீர் பழுதடைந்துவிடும் என்ற ஒரு விடையத்தை நபிகளார் காட்டித்தரவில்லை என்பதை நாம் அறிந்துகொள்ளவேண்டும்.

சட்டக் கலை பகுதியில் பதியப்படும் இந்தப் பதிவு; 2008 ம் ஆண்டு காலப் பகுதியில் தொகுக்கப்பட்டு, பாடமும் நடத்தப்பட்டது. இப்போது அது ஒரு சில மாற்றங்களுடனே இங்கு பதியப்படுகின்றது. அன்று தொகுக்கப்பட்ட ஆக்கங்கக் எழுத்து வடிவில் பாதுகாக்கப்படாததால் அதன் போடோ பிரதியை இணைத்துள்ளேன்.
தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்டினால் திருத்தி, இன்னும் பயனுள்ளதாக மாற்றலாம்.
அல்லாஹ்வே எம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக!!!

1

 
 
 

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *