பிக்ஹு -10;குளிப்பு கடமையின் போதும், வுழூ வின்றியும் செய்யக்கூடாதவை

குளிப்பு கடமையின் போதும், வுழூ வின்றியும் செய்யக்கூடாதவை

வுழூ இன்றி தொழுதல் கூடாது

{يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا قُمْتُمْ إِلَى الصَّلَاةِ فَاغْسِلُوا وُجُوهَكُمْ وَأَيْدِيَكُمْ إِلَى الْمَرَافِقِ وَامْسَحُوا بِرُءُوسِكُمْ وَأَرْجُلَكُمْ إِلَى الْكَعْبَيْنِ} [المائدة: 6]

முஃமின்களே! நீங்கள் தொழுகைக்குத் தயாராகும்போது, உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்கள் இரு கைகளையும், கழுவிக் கொள்ளுங்கள்; உங்களுடைய தலைகளை  தடவி (மஸஹு செய்து) கொள்ளுங்கள்; உங்கள் கால்களை இரு கணுக்கால் வரை(க் கழுவிக் கொள்ளுங்கள்) (6:5)

أَبَا هُرَيْرَةَ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لاَ تُقْبَلُ صَلاَةُ مَنْ أَحْدَثَ حَتَّى يَتَوَضَّأَ» قَالَ رَجُلٌ مِنْ حَضْرَمَوْتَ: مَا الحَدَثُ يَا أَبَا هُرَيْرَةَ؟، قَالَ: فُسَاءٌ أَوْ ضُرَاطٌ (صحيح البخاري)

அபூ ஹுரைரா (றழி) அவர்கள் கூறினார்கள்: ‘சிறு தொடக்கு ஏற்பட்டவன் வுழூச் செய்யும் வரை அவனுடைய தொழுகை ஏற்கப்படாது” என்று நபி(ஸல்) கூறினார்கள். (புஹாரி: 135 முஸ்லிம்)

தவாப் கஃபதுல்லாவை வலம்வருதல்.

عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا: «أَنَّهُ أَوَّلُ شَيْءٍ بَدَأَ بِهِ حِينَ قَدِمَ أَنَّهُ تَوَضَّأَ، ثُمَّ طَافَ بِالْبَيْتِ،…………… (صحيح البخاري)

நபிகளாரின் ஹஜ்ஜைப் பற்றி ஆயிஷா (றழி) அவர்கள் கூறும் போது:  நபி(ஸல்) அவர்கள் (மக்காவுக்கு) வந்ததும் முதன் முதலாக வுழூச் செய்தார்கள்; பிறகு கஃபாவை வலம்வந்தார்கள்; …… என்று கூறினார்கள்.  (புஹாரி: 1641)

குளிப்பு கடமையான நிலையில் பள்ளியில் தரித்திருத்தல் கூடாது. ஆனால் கடந்து செல்லலாம்.

{يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَقْرَبُوا الصَّلَاةَ وَأَنْتُمْ سُكَارَى حَتَّى تَعْلَمُوا مَا تَقُولُونَ وَلَا جُنُبًا إِلَّا عَابِرِي سَبِيلٍ } [النساء: 43]

ஈமான் கொண்டவர்களே! …… மேலும் குளிப்புக் கடமையாக இருக்கும்போது குளிக்கும் வரை தொழுகையை நெருங்காதீர்கள், பாதையை கடந்து செல்பவராக இருந்தாலே  தவிர.  (4:43)

அல்குர்ஆனை வுழூவின்றி தொடுதல்; அல்குர்ஆனை வுழூவின்றி தொடுவதிலும், ஓதுவதிலும் பரவலான கருத்து வேற்றுமை இருந்தாலும், அதனை தடுப்பதற்கு எந்த சான்றுகளும் வரவில்லை.

عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ: «لَا يَمَسُّ الْقُرْآنَ إِلَّا طَاهِرٌ» (المعجم الصغير للطبراني والدارقطني)

“சுத்தமானவரைத் தவிர் வேறு யாரும் குர்ஆனை தொடக்கூடாது” என்று வரும் ஹதீஸும் பலவீனமானது. இந்த ஹதீஸ் அம்ர் பின் ஹஸ்ம், ஹகீம் பின் ஹிஸாம், இப்னு உமர், உஸ்மான் பின் அபில் ஆஸ் ஆகியோர் வழியாக தார்குத்னீ, தப்ரானீ, போன்றவற்றில் பதியப்பட்டிருந்தாலும் பலவீனமானதே.

{إِنَّهُ لَقُرْآنٌ كَرِيمٌ (77) فِي كِتَابٍ مَكْنُونٍ (78) لَا يَمَسُّهُ إِلَّا الْمُطَهَّرُونَ (79) تَنْزِيلٌ مِنْ رَبِّ الْعَالَمِينَ } [الواقعة: 77 – 80]

நிச்சயமாக, இது மிகவும் கண்ணியமும் சங்கையும் மிக்க குர்ஆன் ஆகும்.78 பாதுகாக்கப்பட்ட ஏட்டில் இருக்கிறது. 79. தூய்மையானவர்களைத் தவிர (வேறெவரும்) இதனைத் தொட மாட்டார்கள்.80. அகிலத்தாரின் இறைவனால் இது இறக்கியருளப்பட்டது.

இது லௌஹுல் மஹ்பூலில் உள்ள குர்ஆனையே குறிக்கின்றது. மேலும் சுத்தமானவர்கள் என்பது மலக்குமார்களை குறிக்கின்றது.

அப்படி சுத்தமானவர்கள் என்பதைக் கொண்டு மனிதர்கள் நாடப்பட்டுள்ளார்கள் என்று வைத்துக் கொண்டாலும் அது முஸ்லிம்களைக் குறிக்காது.

 عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَقِيَهُ فِي بَعْضِ طَرِيقِ المَدِينَةِ وَهُوَ جُنُبٌ، فَانْخَنَسْتُ مِنْهُ، فَذَهَبَ فَاغْتَسَلَ ثُمَّ جَاءَ، فَقَالَ: «أَيْنَ كُنْتَ يَا أَبَا هُرَيْرَةَ» قَالَ: كُنْتُ جُنُبًا، فَكَرِهْتُ أَنْ أُجَالِسَكَ وَأَنَا عَلَى غَيْرِ طَهَارَةٍ، فَقَالَ: «سُبْحَانَ اللَّهِ، إِنَّ المُسْلِمَ لاَ يَنْجُسُ»( صحيح البخاري)

அபூ ஹுரைரா (றழி) அவர்கள் கூறினார்கள்;  ‘நான் குளிப்புக் கடமையான நிலையில் மதீனாவின் ஒரு தெருவில் நின்றிருந்தபோது நபி(ஸல்) என்னைச் சந்தித்தார்கள். அப்போது, நான் நழுவி விட்டேன். குளித்துவிட்டுப் பின்னர் வந்தேன். நபி(ஸல்) அவர்கள் ‘அபூ ஹுரைரா! எங்கு நழுவி விட்டீர்?’ என்று கேட்டதற்கு, ‘குளிப்புக் கடமையாகியிருந்தேன்; எனவே நான் சுத்தமில்லாமல் உங்கள் அருகே அமர்வதை வெறுத்தேன்’ என்றேன். அப்போது ‘ஸுப்ஹானல்லாஹ்! ஒரு முஸ்லிம் அசுத்தமாகவே மாட்டான்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி: 283, முஸ்லிம்)

 ثُمَّ دَعَا بِكِتَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الَّذِي بَعَثَ بِهِ دِحْيَةُ إِلَى عَظِيمِ بُصْرَى، فَدَفَعَهُ إِلَى هِرَقْلَ، فَقَرَأَهُ فَإِذَا فِيهِ ” بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ، مِنْ مُحَمَّدٍ عَبْدِ اللَّهِ وَرَسُولِهِ إِلَى هِرَقْلَ عَظِيمِ الرُّومِ: سَلاَمٌ عَلَى مَنِ اتَّبَعَ الهُدَى، أَمَّا بَعْدُ، فَإِنِّي أَدْعُوكَ بِدِعَايَةِ الإِسْلاَمِ، أَسْلِمْ تَسْلَمْ، يُؤْتِكَ اللَّهُ أَجْرَكَ مَرَّتَيْنِ، فَإِنْ تَوَلَّيْتَ فَإِنَّ عَلَيْكَ إِثْمَ الأَرِيسِيِّينَ ” وَ {يَا أَهْلَ الكِتَابِ تَعَالَوْا إِلَى كَلِمَةٍ سَوَاءٍ بَيْنَنَا وَبَيْنَكُمْ أَنْ لاَ نَعْبُدَ إِلَّا اللَّهَ وَلاَ نُشْرِكَ بِهِ شَيْئًا وَلاَ يَتَّخِذَ بَعْضُنَا بَعْضًا أَرْبَابًا مِنْ دُونِ اللَّهِ فَإِنْ تَوَلَّوْا فَقُولُوا اشْهَدُوا بِأَنَّا مُسْلِمُونَ} (صحيح البخاري)

நபி (ஸல்) அவர்கள் ஹிரக்ல் மன்னருக்கு கடிதம் எழுதும் போது “பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்’ என்றும் 3:64 வசனத்தையும் எழுதி அனுப்பினார்கள், அதனை மன்னர் வாசித்தார்.  (புஹாரி: 7)

ஓதுவது தடை இல்லை எனும் போது பிடிப்பது எந்தத் தவறும் இல்லை. ஏனெனில் ஓதுவதே வணக்கமாகும்.

عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: بِتُّ عِنْدَ خَالَتِي مَيْمُونَةَ، فَتَحَدَّثَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَ أَهْلِهِ سَاعَةً، ثُمَّ رَقَدَ، فَلَمَّا كَانَ ثُلُثُ اللَّيْلِ الآخِرُ، قَعَدَ فَنَظَرَ إِلَى السَّمَاءِ، فَقَالَ: {إِنَّ فِي خَلْقِ السَّمَوَاتِ وَالأَرْضِ وَاخْتِلاَفِ اللَّيْلِ وَالنَّهَارِ لَآيَاتٍ لِأُولِي الأَلْبَابِ}، ثُمَّ «قَامَ فَتَوَضَّأَ وَاسْتَنَّ فَصَلَّى إِحْدَى عَشْرَةَ رَكْعَةً» (صحيح البخاري)

இப்னு அப்பாஸ்(றழி) அவர்கள் கூறினார்கள்: (ஒரு நாள்) நான் என் சிறிய தாயார் (அவர்களும் நபி(ஸல்) அவர்களின் துணைவியாருமான) மைமூனா(றழி) அவர்களின் வீட்டில் இரவு தங்கியிருந்தேன். அப்போது இரவின் இறுதி மூன்றிலொரு பகுதி வந்தபோது (எழுந்து) அமர்ந்துகொண்டு வானத்தை நோக்கியவாறு ‘நிச்சயமாக வானங்கள் மற்றும் பூமியின் படைப்(பு அமைப்)பிலும், இரவு – பகல் மாறி, மாறி வருவதிலும் அறிவுடையோருக்குப் பல சான்றுகள் உள்ளன’ எனும் (திருக்குர்ஆன் 03:190 வது) வசனத்தை ஓதினார்கள். பின்னர் எழுந்து (சென்று) வுழூ செய்தார்கள்; பல் துலக்கினார்கள். பதினொரு ரக்அத்கள் தொழுதார்கள். …(புஹாரி: 4569, முஸ்லிம்)

குளிப்பு கடமையான நிலையில் தூங்க விரும்பினால் வுழூ செய்துகொள்வார்.

 أَنَّ عُمَرَ بْنَ الخَطَّابِ، سَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيَرْقُدُ أَحَدُنَا وَهُوَ جُنُبٌ؟ قَالَ: «نَعَمْ إِذَا تَوَضَّأَ أَحَدُكُمْ، فَلْيَرْقُدْ وَهُوَ جُنُبٌ» (صحيح البخاري)

இப்னு உமர் (றழி) அவர்கள் கூறினார்கள்: ‘நம்மில் ஒருவர் குளிப்புக் கடமையான நிலையில் தூங்கலாமா?’ என உமர்(றழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டதற்கு ‘ஆம்! உங்களில் ஒருவர் குளிப்புக் கடமையானவராக இருக்கும்போது வுழூ செய்துவிட்டுத் தூங்கலாம்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி: 287,,, முஸ்லிம்)

சிலர் குளிப்பு கடமையான நிலையில் நோன்பு பிடிக்கக் கூடாது என்பர், ஆனால் நபியவர்கள் அந்த நிலையில் நோன்பு பிடித்தார்கள், தொழுகைக்காகவே குளித்தார்கள்.

 قَالَتْ عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «يُدْرِكُهُ الفَجْرُ فِي رَمَضَانَ مِنْ غَيْرِ حُلْمٍ، فَيَغْتَسِلُ وَيَصُومُ» (صحيح البخاري)

ஆயிஷா(றழி) அவர்கள் கூறினார்கள்: “நபி(ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தில் தாம்பத்திய உறவில் ஈடுபட்டு, குளிப்பு கடமையானவர்களாக பஜ்ரு நேரத்தை அடைவார்கள். குளித்துவிட்டு நோன்பைத் தொடர்வார்கள்!”  (புஹாரி: 1930, முஸ்லிம்)

 أُمِّ سَلَمَةَ رَضِيَ اللهُ عَنْهَا يَسْأَلُ عَنِ الرَّجُلِ يُصْبِحُ جُنُبًا، أَيَصُومُ؟ فَقَالَتْ: «كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصْبِحُ جُنُبًا مِنْ جِمَاعٍ، لَا مِنْ حُلُمٍ، ثُمَّ لَا يُفْطِرُ وَلَا يَقْضِي» (صحيح مسلم )

முஸ்லிமின் அறிவிப்பில் :குளிப்பு கடமையான நிலையில் நோன்பு பிடிப்பார்கள், அதனை முறிக்கவோ, களாச் செய்யவோ மாட்டார்கள். என்று வந்துள்ளது.

அல்லாஹு அஃலம், சத்தியத்தை சத்தியமாக விளங்கி எடுத்து நடக்கவும், அசத்தியத்தை அசாத்தியமாக விளங்கி ஒதுங்கி நடக்கவும் இறைவா எமக்கு அருள் புரிவாயாக!

                                                                                                                                                                                                                        

சட்டக் கலை பகுதியில் பதியப்படும் இந்தப் பதிவு; 2008 ம் ஆண்டு காலப் பகுதியில் தொகுக்கப்பட்டு, பாடமும் நடத்தப்பட்டது. இப்போது அது ஒரு சில மாற்றங்களுடனே இங்கு பதியப்படுகின்றது. அன்று தொகுக்கப்பட்ட ஆக்கங்கக் எழுத்து வடிவில் பாதுகாக்கப்படாததால் அதன் போடோ பிரதியை இணைத்துள்ளேன்.
தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்டினால் திருத்தி, இன்னும் பயனுள்ளதாக மாற்றலாம்.
அல்லாஹ்வே எம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக!!!

10

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *