வெற்றிக்கு என்ன வழி
மனித சமூகத்தின் வெற்றிக்கான வழிகளை அல்லாஹ்வும் அவன் தூதரும் அழகாக காட்டித் தந்துள்ளார்கள், அவாறான வழிகளை பின்வரும் ஆதாரங்களைக் கொண்டு விளக்கினால் அவை இரண்டுதான் என்பது தெளிவாகும். அவை அல்லாஹ்வின் கட்டளை அல்குர்ஆனும், நபிகளாரின் வழிகாட்டல் சுன்னவுமேயாகும்.
அல்குர்ஆனின் கூற்றுக்கள்:-
وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَٰئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِم مِّنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ ۚ وَحَسُنَ أُولَٰئِكَ رَفِيقًا
யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் – இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள். (4:69)
وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَلَا مُؤْمِنَةٍ إِذَا قَضَى اللَّهُ وَرَسُولُهُ أَمْرًا أَن يَكُونَ لَهُمُ الْخِيَرَةُ مِنْ أَمْرِهِمْ ۗ وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ ضَلَّ ضَلَالًا مُّبِينًا
மேலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை; ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள். (33:36)
நபி (ஸல்) அவர்களின் கூற்றுக்கள்:-
عَنْ أَبِي هُرَيْرَةَ، وَزَيْدِ بْنِ خَالِدٍ قَالَ: كُنَّا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «لَأَقْضِيَنَّ بَيْنَكُمَا بِكِتَابِ اللَّهِ
அபூ ஹுரைரா(றழி) மற்றும் ஸைத் இப்னு காலித்(றழி) ஆகியோர் அறிவிக்கின்றார்கள் : (ஒரு முறை) நபி(ஸல்) அவர்களிடம் நாங்கள் இருந்தோம். அப்போது (வழக்கைக் கொண்டு வந்த இருவரிடம்) ‘உங்கள் இருவருக்குமிடையே நான் அல்லாஹ்வின் சட்டப்படியே தீர்ப்பளிப்பேன்’ என்று நபியவர்கள் சொன்னார்கள். (புஹாரி: 7278)
عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «كُلُّ أُمَّتِي يَدْخُلُونَ الجَنَّةَ إِلَّا مَنْ أَبَى»، قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، وَمَنْ يَأْبَى؟ قَالَ: «مَنْ أَطَاعَنِي دَخَلَ الجَنَّةَ وَمَنْ عَصَانِي فَقَدْ أَبَى»
அபூ ஹுரைரா(றழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:(ஒரு முறை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘என் சமுதாயத்தார் அனைவரும் சொர்க்கம் செல்வார்கள்; ஏற்க மறுத்தவரைத் தவிர’ என்று கூறினார்கள். மக்கள், ‘இறைத்தூதர் அவர்களே! ஏற்க மறுத்தவர் யார்?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘எனக்குக் கீழ்ப்படிந்தவர் சொர்க்கம் புகுவார்; எனக்கு மாறு செய்தவர் (சத்தியத்தை) ஏற்க மறுத்தவராவார்’ என்று பதிலளித்தார்கள். (புஹாரி: 7280)
நபித் தோழர்கள் கூற்று :-
عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، قَالَ: شَهِدْتُ ابْنَ عُمَرَ حَيْثُ اجْتَمَعَ النَّاسُ عَلَى عَبْدِ المَلِكِ، قَالَ: «كَتَبَ إِنِّي أُقِرُّ بِالسَّمْعِ، وَالطَّاعَةِ لِعَبْدِ اللَّهِ عَبْدِ المَلِكِ أَمِيرِ المُؤْمِنِينَ عَلَى سُنَّةِ اللَّهِ وَسُنَّةِ رَسُولِهِ مَا اسْتَطَعْتُ، وَإِنَّ بَنِيَّ قَدْ أَقَرُّوا بِمِثْلِ ذَلِكَ
அப்துல்லாஹ் இப்னு தீனார்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.: அப்துல் மாலிக் இப்னு மர்வான் அவர்களிடம், (அவருக்கு விசுவாசப் பிரமாணம் செய்வதற்காக) மக்கள் ஒன்றுகூடிய இடத்தில் நான் இப்னு உமர்(றழி) அவர்களைப் பார்த்தேன். அன்னார், ‘நான் அல்லாஹ் வகுத்த நெறிமுறையின்படியும் அவனுடைய தூதர் காட்டிய வழிமுறையின்படியும், அல்லாஹ்வின் அடியாரும் இறைநம்பிக்கையாளர்களின் தலைவருமான அப்துல் மலிக் இப்னு மர்வானின் கட்டளைகளை என்னால் இயன்றவரை செவியேற்றுக் கீழ்ப்படிந்து நடப்பேன் என உறுதி அளிக்கிறேன்; என் மக்களும் இதைப் போன்றே உறுதி அளித்துள்ளனர்’ என்று எழுதித் தந்தார்கள். (புஹாரி:7203)
قَالَ عَبْدُ اللَّهِ: «إِنَّ أَحْسَنَ الحَدِيثِ كِتَابُ اللَّهِ، وَأَحْسَنَ الهَدْيِ هَدْيُ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَشَرَّ الأُمُورِ مُحْدَثَاتُهَا
தாரிக் இப்னு ஷிஹாப்(ரஹ்) அவர்கள் கூறினார்கள்:அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(றழி) அவர்கள், ‘உரையில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம் (குர்ஆன்) ஆகும். நடத்தையில் சிறந்தது முஹம்மத்(ஸல்) அவர்களின் நடத்தையாகும்’ என்று கூறினார்கள். (புஹாரி: 6098,7277)
عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: «لَعَنَ اللَّهُ الوَاشِمَاتِ وَالمُوتَشِمَاتِ، وَالمُتَنَمِّصَاتِ وَالمُتَفَلِّجَاتِ، لِلْحُسْنِ المُغَيِّرَاتِ خَلْقَ اللَّهِ» فَبَلَغَ ذَلِكَ امْرَأَةً مِنْ بَنِي أَسَدٍ يُقَالُ لَهَا أُمُّ يَعْقُوبَ، فَجَاءَتْ فَقَالَتْ: إِنَّهُ بَلَغَنِي عَنْكَ أَنَّكَ لَعَنْتَ كَيْتَ وَكَيْتَ، فَقَالَ: وَمَا لِي أَلْعَنُ مَنْ لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَمَنْ هُوَ فِي كِتَابِ اللَّهِ، فَقَالَتْ: لَقَدْ قَرَأْتُ مَا بَيْنَ اللَّوْحَيْنِ، فَمَا وَجَدْتُ فِيهِ مَا تَقُولُ، قَالَ: لَئِنْ كُنْتِ قَرَأْتِيهِ لَقَدْ وَجَدْتِيهِ، أَمَا قَرَأْتِ: {وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوا} [الحشر: 7]؟ قَالَتْ: بَلَى، قَالَ: فَإِنَّهُ قَدْ نَهَى عَنْهُ، قَالَتْ: فَإِنِّي أَرَى أَهْلَكَ يَفْعَلُونَهُ، قَالَ: فَاذْهَبِي فَانْظُرِي، فَذَهَبَتْ فَنَظَرَتْ، فَلَمْ تَرَ مِنْ حَاجَتِهَا شَيْئًا، فَقَالَ: لَوْ كَانَتْ كَذَلِكَ مَا جَامَعْتُهَا
அல்கமா இப்னு கைஸ்(ரஹ்) அறிவித்தார்கள்: அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (றழி), ‘பச்சை குத்திவிடும் பெண்கள், பச்சை குத்திக்கொள்ளும் பெண்கள், முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை அகற்றக் கேட்டுக் கொள்ளும் பெண்கள், அழகிற்காக அரத்தால் தேய்த்து, தம் முன் பற்களைப் பிரித்துக் கொள்ளும் பெண்கள், (ஆக) அல்லாஹ் தந்த உருவத்தை மாற்றிக்கொள்ள முயலும் பெண்களின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்?’ என்று கூறினார்கள்.6 இச்செய்தி பனூ அசத் குலத்தைச் சேர்ந்த, ‘உம்மு யஅகூப்’ எனப்படும். ஒரு பெண்மணிக்கு எட்டியது. அந்தப் பெண் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(றழி) அவர்களிடம் வந்து, ‘இப்படிப்பட்ட பெண்களை நீங்கள் சபித்ததாக எனக்குச் செய்தி கிடைத்துள்ளதே என்றார். அதற்கு அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(றழி), ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் யாரைச் சபித்தார்களோ அவர்களையும், அல்லாஹ்வின் வேதத்தில் சபிக்கப்பட்டு உள்ளவர்களையும் நான் ஏன் சபிக்கக்கூடாது?’ என்று கேட்டார்கள். அதற்கு அந்தப் பெண், ‘(குர்ஆன் பிரதியில்) இரண்டு அட்டைகளுக்கிடையிலுள்ள அனைத்தையும் நான் ஓதியுள்ளேன். நீங்கள் குறிப்பிட்டதை நான் அதில் காணவில்லையே!’ என்று கேட்டதற்கு அவர்கள், ‘நீ குர்ஆனை(ச் சரியாக) ஓதியிருந்தால் அதில் நான் கூறியதைக் கண்டிருப்பாய். ‘இறைத்தூதர் எதை உங்களுக்குக் கொடுத்தாரோ, அதைப் பெற்றுக்கொள்ளுங்கள். அவர் உங்களைத் தடுப்பதைவிட்டும் நீங்கள் விலகி இருங்கள்’ எனும் (திருக்குர்ஆன் 59:7 வது) வசனத்தை நீ ஓதவில்லையா?’ என்று கேட்டார்கள். அந்தப் பெண், ‘ஆம் (ஒதினேன்)’ என்று பதிலளித்தார். அப்துல்லாஹ்(ரலி), ‘நபி(ஸல்) அவர்கள் (மேலே குறிப்பிட்ட) இவற்றைச் செய்ய வேண்டாமெனத் தடுத்துள்ளார்கள்’ என்று கூறினார்கள். அந்தப் பெண்மணி, ‘உங்கள் துணைவியார் இதைச் செய்வதாக கருதுகிறேன்’ என்று கூறினார். அப்துல்லாஹ்(றழி), ‘சரி, நீ சென்று, (என் மனைவியைப்) பார்!’ என்று கூறினார்கள். எனவே, அந்தப் பெண் சென்று பார்த்தார். அப்படி எதையும் அவர் காணவில்லை. அப்போது அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(றழி), ‘என் மனைவி (மட்டும்) அப்படிச் செய்பவளாக இருந்தால், அவளுடன் நான் சேர்ந்து வாழமாட்டேன்’ என்று கூறினார்கள். (புஹாரி: 4886, முஸ்லிம்)
இந்த குர்ஆன் வசனங்கள் ஹதீஸ்கள் நபித் தோழர்களின் கூற்றுகள் அனைத்தும் அல்லாஹ்வின் வேதமும் நபிகளாரின் சுன்னாவுமே பின்பற்றத் தகுதியானவை என்பதை தெளிவுபடுத்துகின்றன.
மேலும் குறிப்பாக ஒரு விடையத்தில் கருத்து முரண்பாடு ஏற்பட்டுவிட்டால் அப்போது ஒரு முஃமின் எப்படி நடக்க வேண்டும் என்பதை தெளிவு படுத்தும் சான்றுகள் பின்வருமாறு:
இறைக் கூற்று:
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَأُولِي الْأَمْرِ مِنكُمْ ۖ فَإِن تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ إِن كُنتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ ۚ ذَٰلِكَ خَيْرٌ وَأَحْسَنُ تَأْوِيلًا
நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள்; உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் – மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் – அதை அல்லாஹ்விடமும், (அவன்) தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் – இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும். (4:59)
فَلَا وَرَبِّكَ لَا يُؤْمِنُونَ حَتَّىٰ يُحَكِّمُوكَ فِيمَا شَجَرَ بَيْنَهُمْ ثُمَّ لَا يَجِدُوا فِي أَنفُسِهِمْ حَرَجًا مِّمَّا قَضَيْتَ وَيُسَلِّمُوا تَسْلِيمًا
உம் இறைவன் மேல் சத்தியமாக, அவர்கள் தங்களிடையே எழுந்த சச்சரவுகளில் உம்மை நீதிபதியாக ஏற்றுப் பின்னர் நீர் தீர்ப்பு செய்தது பற்றி எத்தகைய அதிருப்தியையும் தம் மனங்களில் கொள்ளாது (அத்தீர்ப்பை) முற்றிலும் ஏற்றுக் கொள்ளாத வரையில், அவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள் ஆகமாட்டார்கள். (4:65)
இவ்வசனங்கள் கருத்து வேறுபாடின் போது ஒரு முஃமின் எதன்மூலம் தீர்வு தேடவேண்டும் என்பதை தெளிவுபடுத்துகின்றது, அத்தோடு அவ்விரண்டுக்கும் அப்பால் மத்ஹப்களிலோ தரீக்கக்களிலோ ஊர் வழமைகளிலோ குடும்ப அங்கீகாரங்களிலோ தீர்வு தேடுவது வழிகேடாகும் என்பதனையும் தெளிவுபடுத்துகின்றது.
அடுத்து நாம் மத்ஹப்களின் அறிஞர்களான மாலிக், அபூஹனீபா, ஷாபி, அஹ்மத் (ரஹ்) போன்ற இமாம்களின் கூற்றுக்களை எடுத்து நோக்கினால் அவர்களும் ஒன்றுபட்டு சொன்னது; அவ்விரண்டையும் பின்பற்ற வேண்டும் என்பதே.
அபூஹனீபா (ரஹ்) அவர்களின் கூற்று:
قَالَ زفر: فَقَالَ يَوْمًا أَبُو حنيفَة، لأبي يُوسُف: “وَيحك يَا يَعْقُوب، لَا تكْتب كل مَا تسمع مني، فَإِنِّي قد أرَى الرَّأْي الْيَوْم، وأتركه غَدا، وَأرَى الرَّأْي غَدا، وأتركه فِي غده” (نصب الراية)
தன் மாணவர்களை அழைத்து: நான் சொல்வதையெல்லாம் எழுதாதீர்கள், ஏனெனில் நான் மனிதனாக இருக்கின்றேன்,இன்று ஒன்றையும் நாளை வேறொன்றையும் சொல்லலாம். என்று கூறுவார்கள்.
فَقَدْ صَحَّ عَنْهُ أَنَّهُ قَالَ: إذَا صَحَّ الْحَدِيثُ فَهُوَ مَذْهَبِي. وَقَدْ حَكَى ذَلِكَ ابْنُ عَبْدِ الْبَرِّ عَنْ أَبِي حَنِيفَةَ وَغَيْرِهِ مِنْ الْأَئِمَّةِ. الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار
மேலும் நபி வழி சரியாக (ஸஹீஹ்) இருந்தால் அதுவே எனது (மத்ஹப்) போக்காகும். என்று கூறினார்கள் (நஸ்புர்ராயா)
மாலிக் பின் அனஸ் (ரஹ்) அவர்களின் கூற்று:
وَقَالَ مَالِكُ: مَا مِنْ أَحَدٍ إلَّا يُؤْخَذُ مِنْ قَوْلِهِ وَيُتْرَكُ إلَّا قَوْلِ رَسُولِ اللَّهِ – صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ – الآداب الشرعية والمنح المرعية
ஒவ்வொரு மனிதர்களின் பேச்சுக்களிலும் எடுப்பதற்கும் விடுவதற்கும் இடம்பாடு இருக்கின்றது, நபி (ஸல்) அவர்களின் கூற்றைத் தவிர. என்று கூறினார்கள். (அல் ஆதாபுஷ்ஷர்இய்யா)
அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்) அவர்களின் கூற்று;
وَقَالَ الإِمَام أَحْمد رَضِي الله عَنهُ: لرجل لَا تقلدني وَلَا تقلدن مَالِكًا وَلَا الْأَوْزَاعِيّ وَلَا النَّخعِيّ وَلَا غَيرهم وَخذ الْأَحْكَام من حَيْثُ أخذُوا من الْكتاب وَالسّنة- الإنصاف في بيان أسباب الاختلاف للدهلوي
நீங்கள் என்னையோ ஷாபிஈயையோ அவசாஈயையோ சவ்ரியையோ பின்பற்ற வேண்டாம், மாறாக அவர்கள் எங்கிருந்து மார்க்கத்தை எடுத்தார்களோ அதனை (அல்குர்ஆன், அஸ்ஸுன்னா) பின்பற்றுங்கள்.என்று கூறினார்கள்.
இமாம் ஷாபிஈ அவர்களின் கூற்று:
فقال الإمام الشافعي رحمه الله: أن رأيت أقاويل أصحاب رسول الله إذا تفرقوا فيها؟ فقلت: نصير منها إلى ما وافق الكتاب، أو السنة، أو الإجماع، أو كان أصحَّ في القياس. الرسالة للشافعي
நபித் தோழர்கள் ஒரு விடயத்தில் பல கருத்துக்கள் கொண்டால் அவற்றுள் குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் நேர்பட்டதை நாம் எடுப்போம். என்று கூறுவார்கள். (அர்ரிஸாலா)
الرَّبِيْعُ: سَمِعْتُ الشَّافِعِيَّ يَقُوْلُ: إِذَا وَجَدْتُمْ فِي كتَابِي خِلاَفَ سُنَّةِ رَسُوْلِ اللهِ -صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ- فَقُوْلُوا بِهَا وَدَعُوا مَا قُلْتُهُ.- سير أعلام النبلاء ط الحديث
என் புத்தகத்தில் நபி வழிக்கு மாற்றமானதை நீங்கள் கண்டால் என் கருத்தை விட்டுவிட்டு நபி வழியைக் கூறுங்கள். என கூறியதை நான் கேட்டேன் என அவர்களின் மாணவன் ராபிஃ அவர்கள் கூறினார்கள். (ஸியருஅஃலாமின் நுபலா)
إذَا صَحَّ الْحَدِيثُ خِلَافَ قَوْلِي فَاعْمَلُوا بِالْحَدِيثِ وَاتْرُكُوا قَوْلِي أَوْ قَالَ فَهُوَ مَذْهَبِي- المجموع شرح المهذب
ஹதீஸ் சரியாக (ஸஹீஹாக) வந்தால் அதுவே எனது (மத்ஹப்) போக்காகும்.
குறிப்பு: இன்னும் பல கூற்றுக்களை அவர்களது ரிஸாலா எனும் நூலில் பார்க்க முடியும்,
முன்னாள் கூறப்பட்ட அறிஞ்சர்களின் கூற்றுக்களை நோக்கும் போது மறுமை வெற்றிக்கான வழிகள் இரண்டுதான் என்பதை தெளிவாக அறிந்து கொள்ளமுடியும். அத்தோடுஅவர்கள் யாரும் அவர்களை பின்பற்றுமாறு கூறவில்லை என்பதும் தெளிவாகின்றது.
அடுத்து இஜ்மாவும் கியாஸும் இரண்டு அடிப்படைகள் என்று சிலர் விளங்கிவைத்துள்ளனர், இது சரிதானா அல்லது அதனை நாம் எப்படி நோக்கவேண்டும் என்பதை நோக்குவோம்.
சட்டக் கலை பகுதியில் பதியப்படும் இந்தப் பதிவு; 2008 ம் ஆண்டு காலப் பகுதியில் தொகுக்கப்பட்டு, பாடமும் நடத்தப்பட்டது. இப்போது அது ஒரு சில மாற்றங்களுடனே இங்கு பதியப்படுகின்றது. அன்று தொகுக்கப்பட்ட ஆக்கங்கக் எழுத்து வடிவில் பாதுகாக்கப்படாததால் அதன் போடோ பிரதியை இணைத்துள்ளேன்.
தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்டினால் திருத்தி, இன்னும் பயனுள்ளதாக மாற்றலாம்.
அல்லாஹ்வே எம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக!!!