அல்குர்ஆன் சூராக்கள் பற்றிய ஸஹீஹான செய்திகளும், பலவீனங்களும் -1

அல்குர்ஆனில் உள்ள சூராக்களின் சிறப்புகள்

அல் குர்ஆனைப் பொறுத்தவரை அது இறை வசனங்கள் என்பதே முதல் சிறப்பம்சமாகும். அந்த அடிப்படையில் ஒரு முஸ்லிம் அல்குர்ஆனில் இருக்கும் ஒவ்வொரு வசனத்தையும் பாகுபாடு, ஏற்றத்தாழ்வு படுத்தாமல் ஓதிவருவதே மிகப்பொறுத்தமாகும். அதேநேரம் ஒரு சூராவை குறிப்பிட்டு சிறப்புகள் வந்திருக்குமாயின் அவற்றை அந்த சிறப்பின் அடிப்படையில் கவனிப்பதும் கட்டாயமாகும். அதற்கு அப்பால் நாமாக ஒரு சூராவுக்கு சிறப்பு சொல்வதோ, அல்லது குறிப்பிட்ட சூராக்களை ஓதுவதற்கென்று வேறுபடுத்தி அதனை தனிப் புத்தக வடிவத்தில் தொகுப்பதோ, மக்களுக்கு அறிமுகப்படுத்துவதோ அல்குர்ஆனுக்கு செய்யும் கடமையாக இருக்காது, மாறாக இறை அதிகரத்தில் கைவைக்கும் ஒரு அம்சமாகும். அல்லாஹ் எம்மைக் காப்பாற்றுவானாக!.
அடுத்து அல்குர்ஆனைப் பொறுத்தவரை மனிதன் அதிகம் கவனம் செலுத்தவேண்டிய ஒன்று என்பதனால் அதனை மனிதன் அதிகம் கவனிப்பதும், நேசிப்பதும் இயழ்பானதே, அந்த வகையில் அதிகமான முஸ்லிம்கள் அது சம்பந்தமாக வந்திருக்கும் செய்திகளை சரி, பிழை பார்க்காமல் அப்படியே ஏற்று நடைமுறைப்படுத்தும் ஒரு நிலையும் இருக்கின்றது. இந்த இடத்தில் நாம் அறிந்து வைத்திருக்கவேண்டிய முக்கிய அம்சம் ‘அல்குர்ஆன் பற்றியும், சூராக்கள் பற்றியும் அதிகமான பொய் சிறப்புகளும், இட்டுக்கட்டப்பட்ட செய்திகளும் இருக்கின்றன’ என்பதே!!

روي عن أبي عصمة نوح بن أبي مريم المروزي ، ومحمد بن عكاشة الكرماني ، وأحمد بن عبد الله الجويباري ، وغيرهم . قيل لأبي عصمة : من أين لك عن عكرمة عن ابن عباس في فضل سور القرآن سورة سورة ؟ فقال : إني رأيت الناس قد أعرضوا عن القرآن واشتغلوا بفقه أبي حنيفة ومغازي محمد بن إسحاق ; فوضعت هذا الحديث حسبة . قال أبو عمرو عثمان بن الصلاح في كتاب ( علوم الحديث(

அபூ இஸ்மத் என்பவரிடம்; இப்னு அப்பாஸ் (றழி) அவர்களைத் தொட்டு வரும் சூராக்களின் சிறப்புகள் பற்றிய செய்திகள் உமக்கு எங்கிருந்து கிடைத்தது? என்று கேட்கப்பட்டது, அதற்கு அவர்; மக்கள் குர்ஆனைப் புறக்கனித்துவிட்டு, அபூ ஹனீபாவின் பிக்ஹுடனும், இப்னு இஸ்ஹாக்கின் மகாzஸி என்ற புத்தக்த்துடனும் சார்ந்திருப்பதைப் பார்த்தேன், எனவே நன்மையை எதிர்பார்த்து (மக்களை குர்ஆன் பக்கம் நெருக்கப்படுத்த) இந்த செய்திகளை நான் இட்டுக்கட்டினேன். என்று கூறினார்.  (உலூமுல் ஹதீஸ்- இப்னுஸ் ஸலாஹ் (றஹ்))
அந்த அடிப்படையில் இந்த கட்டுரையின் மூலம் அல்குர்ஆனிய சூராக்களுக்குள்ள சிறப்புகளில் ஸஹீஹானதை தெளிவு படுத்துவதுடன், இட்டுக்கட்டப்பட்ட, பலவீனமான செய்திதகளை அடையாளப்படுத்துவதும் எனது நோக்கமாகும். ஏனெனில் இதனை செய்வது என்பது அல்குர்ஆனுக்கு சேவை செய்வதுடன், நபிகளாரின் சுன்னாவுக்கும் சேவை செய்வதாக அமைந்துவிடும்.

عن ربْعِيَّ بْنَ حِرَاشٍ، يَقُولُ: سَمِعْتُ عَلِيًّا، يَقُولُ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: لاَ تَكْذِبُوا عَلَيَّ، فَإِنَّهُ مَنْ كَذَبَ عَلَيَّ فَلْيَلِجِ النَّارَ

அலி (றழி) அவர்கள் அறிவித்தார்கள்: ‘என் மீது இட்டுக்கட்டிச் சொல்லாதீர்கள். ஏனெனில், என் மீது எவன் இட்டுக்கட்டிச் சொல்வானோ அவன் நரகத்தில் நுழைவான்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (புஹாரி: 106, 107,  முஸ்லிம்)

  عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ قَال قَالَ رَسُولُ اللَّهِ : مَنْ حَدَّثَ عَنِّى بِحَدِيثٍ يُرَى أَنَّهُ كَذِبٌ فَهُوَ أَحَدُ الْكَاذِبِينَ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யாராவது பொய் என்று கருதப்படும் ஒரு செய்தியை என்னைத் தொட்டும் அறிவித்தால், அவர் இரு பொய்யர்களில் ஒரு பொய்யனாவான்.  (முஸ்லிம்: முன்னுரை, திர்மிதீ: 2662)
இந்த ஹதீஸ்களின் அடிப்படையில் அலகுர்ஆனின் சூராக்கள் பற்றிய சிறப்புகளில் அதிகமானவை இட்டுக்கட்டப்பட்டவைகளாகவோ, பலவீனமானவைகளாகவோ இர்ப்பதனால் மறுமை வெற்றியை இழக்காகக் கொண்டு இந்த கட்டுரையை எழுத ஆசைப்படுகின்றேன்.
சூரா பாத்திஹா பற்றிய ஆதாரப் பூர்வமான ஹதீஸ்கள்

 وَلَقَدْ آتَيْنَاكَ سَبْعًا مِّنَ الْمَثَانِي وَالْقُرْآنَ الْعَظِيمَ

(நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு திரும்பத் திரும்ப ஓதக் கூடிய (ஸுரத்துல் ஃபாத்திஹாவின்) ஏழு வசனங்களையும், மகத்தான (இந்த) குர்ஆனையும் வழங்கியிருக்கின்றோம். (15:87)

عَنْ أَبِي سَعِيدِ بْنِ المُعَلَّى، قَالَ: كُنْتُ أُصَلِّي فِي المَسْجِدِ، فَدَعَانِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمْ أُجِبْهُ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي كُنْتُ أُصَلِّي، فَقَالَ: ” أَلَمْ يَقُلِ اللَّهُ: {اسْتَجِيبُوا لِلَّهِ وَلِلرَّسُولِ إِذَا دَعَاكُمْ لِمَا يُحْيِيكُمْ} [الأنفال: 24]. ثُمَّ قَالَ لِي: «لَأُعَلِّمَنَّكَ سُورَةً هِيَ أَعْظَمُ السُّوَرِ فِي القُرْآنِ، قَبْلَ أَنْ تَخْرُجَ مِنَ المَسْجِدِ». ثُمَّ أَخَذَ بِيَدِي، فَلَمَّا أَرَادَ أَنْ يَخْرُجَ، قُلْتُ لَهُ: «أَلَمْ تَقُلْ لَأُعَلِّمَنَّكَ سُورَةً هِيَ أَعْظَمُ سُورَةٍ فِي القُرْآنِ»، قَالَ: {الحَمْدُ لِلَّهِ رَبِّ العَالَمِينَ} [الفاتحة: 2] «هِيَ السَّبْعُ المَثَانِي، وَالقُرْآنُ العَظِيمُ الَّذِي أُوتِيتُهُ»

அபூ ஸயீத் இப்னு முஅல்லா(றழி) அவர்கள் அறிவித்தார்கள்:நபி(ஸல்) அவர்கள் நான் தொழுது கொண்டிருக்கும் நிலையில் என்னைக் கடந்து சென்றார்கள். அப்போது என்னை அவர்கள் அழைத்தார்கள். நான் தொழுது முடிக்கும் வரை அவர்களிடம் செல்லவில்லை. (தொழுது முடித்த) பிறகு சென்றேன். அவர்கள், ‘(நான் அழைத்தவுடன்) நீ ஏன் என்னிடம் வரவில்லை?’ என்று கேட்டார்கள். அதற்கு, ‘நான் தொழுது கொண்டிருந்தேன்’ என்று சொன்னேன். அப்போது அவர்கள், ‘இறைநம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்கும் இறைத்தூதருக்கும் நீங்கள் பதிலளியுங்கள்’ என்று (திருக்குர்ஆன் 08:24 வது வசனத்தில்) அல்லாஹ் சொல்லவில்லையா?’ என்று கேட்டார்கள். பிறகு, ‘நீ பள்ளிவாசலிலிருந்து வெளியே செல்லும் முன்பாக குர்ஆனிலேயே மகத்தான அத்தியாயமொன்றை உனக்கு நான் கற்றுத் தர வேண்டாமா?’ என்று கேட்டார்கள். பிறகு நபி(ஸல்) அவர்கள் (பள்ளிவாசலிலிருந்து) வெளியேறப் போனார்கள். நான் அவர்களுக்கு (அன்னார் சொன்னதை) நினைவுபடுத்தினேன். அவர்கள், ‘அகிலத்தாரின் அதிபதியான அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்’ (என்று தொடங்கும் ‘அல்ஃபாத்திஹா’ அத்தியாயம் தான்) அது திரும்பத் திரும்ப (தொழுகையில்) ஓதப்படும் ஏழு வசனங்களும் எனக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்த மகத்தான குர்ஆனுமாகும்’ என்று கூறினார்கள்.  (புஹாரி: 4703)
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: திரும்பத் திரும்ப (தொழுகையில்) ஓதப்படும் ஏழு வசனங்கள் (‘அல் பாத்திஹா அத்தியாயம்) குர்ஆனின் அன்னையும் மகத்தான குர்ஆனும் ஆகும். (புஹாரி: 4704)

عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ بَيْنَمَا جِبْرِيلُ قَاعِدٌ عِنْدَ النَّبِىِّ -صلى الله عليه وسلم- سَمِعَ نَقِيضًا مِنْ فَوْقِهِ فَرَفَعَ رَأْسَهُ فَقَالَ هَذَا بَابٌ مِنَ السَّمَاءِ فُتِحَ الْيَوْمَ لَمْ يُفْتَحْ قَطُّ إِلاَّ الْيَوْمَ فَنَزَلَ مِنْهُ مَلَكٌ فَقَالَ هَذَا مَلَكٌ نَزَلَ إِلَى الأَرْضِ لَمْ يَنْزِلْ قَطُّ إِلاَّ الْيَوْمَ فَسَلَّمَ وَقَالَ أَبْشِرْ بِنُورَيْنِ أُوتِيتَهُمَا لَمْ يُؤْتَهُمَا نَبِىٌّ قَبْلَكَ فَاتِحَةُ الْكِتَابِ وَخَوَاتِيمُ سُورَةِ الْبَقَرَةِ لَنْ تَقْرَأَ بِحَرْفٍ مِنْهُمَا إِلاَّ أُعْطِيتَهُ.

இப்னு அப்பாஸ் (றழி) அவர்கள் கூறினார்கள்: ஒரு நாள் ஜிப்ரீல் அவர்கள் நபிகளாருக்கு பக்கத்தில் அமர்ந்திருக்கும் பொது, மேலிருந்து ஒரு சத்தத்தை கேட்கவே, தன் தலையை உயர்த்திப் பார்த்து, ‘இது வானத்தின் ஒரு கதவு,இன்று திறக்கப்பட்டுள்ளது, இதற்கு முன் திறக்கப்பட்டதில்லை. என்று கூறினார்கள்.  அதலிருந்து ஒரு மலக்கு இறங்கினார், அப்போது ஜிப்ரீல் அவர்கள்; இவர் ஒரு மலக்காவார், இன்றுதான் பூமிக்கு இறங்கியுள்ளார், இதற்கு முன்னர் இறங்கியதில்லை. என்று கூறினார்கல். அவர்  ஸலாம் கூறிவிட்டு, (நபியே!) இரு ஒலிகளைக் கொண்டு நன்மாராயம் பெருவீராக, அவ்விரண்டும் உமக்கு முன் வேறு எந்த நபிக்கும் கொடுக்கப்பட்டதில்லை, ‘அவை பாத்திஹா ஸூராவும், ஸூரதுல் பகராவின் கடைசி வசனங்களுமாகும், அவ்விரண்டிலிருந்து ஒரு ஒரு எழுத்தை நீர் ஓதினாலும் அது உமக்கு வழங்கப்படும். என்று கூறினார்.  (முஸ்லிம்:1913)

 عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم : ما أنزلت في التوراة، ولا في الإنجيل، ولا في الزبور، ولا في الفرقان مثلها. وإنها سبع من المثاني، والقرآن العظيم الذي أعطيته

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தௌராத்திலோ, இஞ்சீலிலோ, ஸபூர் வேதத்திலோ குர்ஆனிலோ பாத்திஹாவைப் போன்ற ஒரு ஸூரா இல்லை, அதுவே அஸ்ஸப்உல் மஸானீ, அல்குர்ஆனுல் அழீம் என்பதாகும்.  (அஹ்மத்: 8682, திர்மிதீ: 2875)

عَنْ أَبِى هُرَيْرَةَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ « قَالَ اللَّهُ تَعَالَى قَسَمْتُ الصَّلاَةَ بَيْنِى وَبَيْنَ عَبْدِى نِصْفَيْنِ وَلِعَبْدِى مَا سَأَلَ فَإِذَا قَالَ الْعَبْدُ ( الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ ). قَالَ اللَّهُ تَعَالَى حَمِدَنِى عَبْدِى وَإِذَا قَالَ (الرَّحْمَنِ الرَّحِيمِ ). قَالَ اللَّهُ تَعَالَى أَثْنَى عَلَىَّ عَبْدِى. وَإِذَا قَالَ (مَالِكِ يَوْمِ الدِّينِ). قَالَ مَجَّدَنِى عَبْدِى – وَقَالَ مَرَّةً فَوَّضَ إِلَىَّ عَبْدِى – فَإِذَا قَالَ (إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ ). قَالَ هَذَا بَيْنِى وَبَيْنَ عَبْدِى وَلِعَبْدِى مَا سَأَلَ. فَإِذَا قَالَ (اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلاَ الضَّالِّينَ ). قَالَ هَذَا لِعَبْدِى وَلِعَبْدِى مَا سَأَلَ »

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:அல்லாஹ் கூறுகின்றான் :தொழுகையை (பாத்திஹா ஸூராவை) எனக்கும் அடியானுக்குமிடையில் இரு பகுதிகளாக நான் பிரித்துள்ளேன், எனது அடியான் கேட்பது அவனுக்கு இருக்கின்றது.  எனது அடியான் ( الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ ) என்று கூறினால், அல்லாஹ்; (எனது அடியான் என்னை புகழ்ந்துவிட்டான்’ என்றும், அடியான் ; (الرَّحْمَنِ الرَّحِيمِ )என்று கூறும் போது, அல்லாஹ்; எனது அடியான் என்னை துதித்துவிட்டான்.’ என்றும், அடியான் ;(مَالِكِ يَوْمِ الدِّينِ) என்றால், அல்லாஹ்; ‘எனது அடியான் என்னை கண்ணியப்படுத்திவிட்டான்.’ என்றும் கூறுவான். மேலும் அடியான் (إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ ) என்றால், அல்லாஹ் ‘இது எனக்கும் அடியானுக்குமிடையில் உள்ளது, எனது அடியானுக்கு அவன் கேட்டது இருக்கின்றது’ என்றும், அடியன் (اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلاَ الضَّالِّينَ )என்றால், அல்லாஹ் ‘இது எனக்கும் அடியானுக்குமிடையில் உள்ளது, எனது அடியானுக்கு அவன் கேட்டது இருக்கின்றது’ என்றும் கூறுவான். (முஸ்லிம்: 904)

عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ :قْالَ: «لاَ صَلاَةَ لِمَنْ لَمْ يَقْرَأْ بِفَاتِحَةِ الكِتَابِ»

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பாதிஹதுல் கிதாபை ஓதாதவருக்கு தொழுகை இல்லை.  (புஹாரி:756, முஸ்லிம்)

عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ، قَالَ: كُنَّا فِي مَسِيرٍ لَنَا فَنَزَلْنَا، فَجَاءَتْ جَارِيَةٌ، فَقَالَتْ: إِنَّ سَيِّدَ الحَيِّ سَلِيمٌ، وَإِنَّ نَفَرَنَا غَيْبٌ، فَهَلْ مِنْكُمْ رَاقٍ؟ فَقَامَ مَعَهَا رَجُلٌ مَا كُنَّا نَأْبُنُهُ بِرُقْيَةٍ، فَرَقَاهُ فَبَرَأَ، فَأَمَرَ لَهُ بِثَلاَثِينَ شَاةً، وَسَقَانَا لَبَنًا، فَلَمَّا رَجَعَ قُلْنَا لَهُ: أَكُنْتَ تُحْسِنُ رُقْيَةً – [ص:188] أَوْ كُنْتَ تَرْقِي؟ – قَالَ: لاَ، مَا رَقَيْتُ إِلَّا بِأُمِّ الكِتَابِ، قُلْنَا: لاَ تُحْدِثُوا شَيْئًا حَتَّى نَأْتِيَ – أَوْ نَسْأَلَ – النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمَّا قَدِمْنَا المَدِينَةَ ذَكَرْنَاهُ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «وَمَا كَانَ يُدْرِيهِ أَنَّهَا رُقْيَةٌ؟ اقْسِمُوا وَاضْرِبُوا لِي بِسَهْمٍ»

அபூ ஸயீத் அல்குத்ரீ(றழி)அவர்கள் கூறினார்கள்:நாங்கள் ஒரு பயணத்தில் சென்று கொண்டிருந்தபோது, (ஓய்வெடுப்பதற்காக) ஓரிடத்தில் இறங்கித் தங்கினோம். அப்போது ஓர் இளம் பெண் வந்து ‘எங்கள் கூட்டத் தலைவரை தேள் கொட்டிவிட்டது. எங்கள் ஆட்கள் வெளியே சென்றுள்ளார்கள். அவருக்கு ஓதிப்பார்ப்பவர் உங்களில் எவரேனும் உண்டா?’ என்று கேட்டாள். அவளுடன் எங்களில் ஒருவர் சென்றார். அவருக்கு ஓதிப்பார்க்கத் தெரியும் என்று நாங்கள் நினைத்தது கூட இல்லை. அவர் சென்று ஓதிப்பார்த்தார். உடனே, அந்தத் தலைவர் குணமடைந்துவிட்டார். எனவே, எங்களுக்கு முப்பது ஆடுகள் (அன்பளிப்பாக) வழங்குமாறு அவர்களின் தலைவர் உத்தரவிட்டதுடன் எங்களுக்குப் பாலும் கொடுத்தனுப்பினார். (ஓதிப்பார்க்கச் சென்ற) அந்த மனிதர் திரும்பி வந்தபோது, அவரிடம் ‘உமக்கு நன்றாக ஓதிப்பார்க்கத் தெரியுமா?’ அல்லது ‘ஏற்கனவே, நீர் ஓதிப்பார்பவராக இருந்தீரா?’ என்று கேட்டோம். அவர், ‘இல்லை; குர்ஆனின் அன்னை’ என்றழைக்கப்படும் (‘அல்ஃபாத்திஹா’) அத்தியாயத்தைத் தான் ஒதிப்பார்த்தேன்’ என்று கூறினார். (இந்த முப்பது ஆடுகளையும்) நாம் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ‘செல்லும் வரையில்’ அல்லது ‘சென்று (விளக்கம்) கேட்கும் வரையில்’ ஒன்றும் செய்துவிடாதீர்கள்’ என்று (எங்களுக்கிடையே) பேசிக்கொண்டோம். நாங்கள் மதீனா வந்து சேர்ந்தபோது, இது குறித்து நபி(ஸல்) அவர்களிடம் கூறினோம். ‘இது (‘அல் ஃபாத்திஹா’ ) ஓதிப்பார்த்து நிவாரணம் பெறத்தக்கது என்று அவருக்கு எப்படித் தெரியும்? அந்த ஆடுகளைப் பங்கிட்டு அதில் ஒரு பங்கை எனக்கும் தாருங்கள்! என்று கூறினார்கள். (புஹாரி: 5007)
பாத்திஹா ஸூரா பற்றிய பலவீனமான செய்திகள்
‘ஸூரா பாதிஹா அல்குர்ஆனின் மூன்றில் இரண்டுக்கு சமனாகும்’ என்ற செய்தி ‘அல்முன்தகப் மினல் முஸ்னத்’ எனும் நூளில் பதிவுசெய்யப்பட்டுள்ளது, இது மிகப் பலவீனமானது, இதில் வரும் ‘இப்னு அபீ அய்யாஷ் அல்பஸரீ’ என்பவர் ஹதீஸ் கலையில் ‘மத்ரூக்; விடப்பட்டவர்’ என்று விமர்சிக்கப்பட்டுள்ளார். (ஸில்ஸிலதுல் லஈபா)
‘ஸூரா பாதிஹாவில் எல்லா நோய்க்கும் மருந்திருக்கின்றது’என்ற செய்தி ‘தாரிமீ,பைஹகீ’ போன்ற நூற்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளது, இது  பலவீனமான முர்ஸல் வகையைச் சார்ந்தது, இதில் நபிகளாரைத் தொட்டு அறிவிப்பவர் ‘அப்துல் மலிக் பின் உமைர்’ என்பவர் நபித் தோழராக இல்லை.
‘ஒரு அடியான் வீட்டிலே பாதிஹாவையும், ஆயதுல் குர்ஸியையும் ஓதினால் அன்றைய நாள் மனித, ஜின்னின் கண் பழிக்காது.’என்ற செய்தி தைலமீயின் ‘முஸ்னதுல் பிர்தௌஸ்’ எனும் நூளில் பதிவுசெய்யப்பட்டுள்ளது, இது முன்கர் தரத்திலுள்ள மிகப் பலவீனமானது, இதன் அறிவிப்பாளர் தெடரில் அறியப்படாத பலர் வந்துள்ளனர். (ஸில்ஸிலதுல் லஈபா)
‘நீ படுக்கையில் விழாவை வைத்து, பாதிஹா ஸூராவையும், குல்ஹுவல்லாஹு அஹத் ஸூராவையும் ஓதினால் மரணத்தை தவிர்ந்த எல்லா விடயங்களிலிருந்தும் பாதுகாப்பு பெருவாய்.’ என்ற செய்தி ‘பஸ்ஸார்’ எனும் நூளில் பதிவுசெய்யப்பட்டுள்ளது, இதன் அறிவிப்பாளர் தொடரில் ‘கஸ்ஸான் பின் உபைத் என்பவர்’ வந்துள்ளார். இவர் பலவீனமானவர்.
‘பாதிஹா ஸூரா விசத்திற்கு மருந்தாகும்’என்ற செய்தி ‘அல்fபவாஇத்’ எனும் நூளில் பதிவுசெய்யப்பட்டுள்ளது, இதன் அறிவிப்பாளர் தொடரில் ‘ஸலமுத் தவீல்’ வந்துள்ளனர். இவர் இட்டுக்கட்டுபவர் என்று சந்தேகிக்கப்படுபவர். மேலும் ஸைத் என்பவரும் பலவீனமானவராவார். (ஸில்ஸிலதுல் லஈபா)
‘பாதிஹா ஸூரா அல்குர்ஆனில் எந்த ஸூராவும் பயனளிக்காததை பயனளிக்கும், அதனை ஒரு தராஸுத் தட்டிலும், முலுக் குர்ஆனை மற்றொரு தட்டிலும் வைத்தால் பாதிஹா ஸூரா அல்குர்ஆனை ஏழு மடங்கு மிஞ்சிவிடும்.’ என்ற செய்தியை தைலமீ அவர்கள் பதிவு செய்துள்ளார்கள், இதன் அறிவிப்பாளர் தொடரில் ‘யூஸுப் இப்னு அதீய்யா’ என்பவர் வந்துள்ளார். இவர் ‘மத்ரூக்; விடப்பட்டவர்’ என்று விமர்சிக்கட்டவர். மேலும் ‘Zஸாஹிருல் அZஸதீ’ என்பவர் அறியப்படாதவர். அனவே இது மிகப் பலவீனமானது. (ஸில்ஸிலதுல் லஈபா)
ஸூரதுல் பகராவின் சிறப்புகள் பற்றிய ஹதீஸ்கள்

أَبُو أُمَامَةَ الْبَاهِلِيُّ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «اقْرَءُوا الْقُرْآنَ فَإِنَّهُ يَأْتِي يَوْمَ الْقِيَامَةِ شَفِيعًا لِأَصْحَابِهِ، اقْرَءُوا الزَّهْرَاوَيْنِ الْبَقَرَةَ، وَسُورَةَ آلِ عِمْرَانَ، فَإِنَّهُمَا تَأْتِيَانِ يَوْمَ الْقِيَامَةِ كَأَنَّهُمَا غَمَامَتَانِ، أَوْ كَأَنَّهُمَا غَيَايَتَانِ، أَوْ كَأَنَّهُمَا فِرْقَانِ مِنْ طَيْرٍ صَوَافَّ، تُحَاجَّانِ عَنْ أَصْحَابِهِمَا، اقْرَءُوا سُورَةَ الْبَقَرَةِ، فَإِنَّ أَخْذَهَا بَرَكَةٌ، وَتَرْكَهَا حَسْرَةٌ، وَلَا تَسْتَطِيعُهَا الْبَطَلَةُ».

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் குர்ஆனை ஓதுங்கள், ஏனெனில் அது மறுமை நாளில் தன் தோழர்களுக்காக சிபாரிஸுச் செய்வதற்காக வரும். இரண்டு மலர்களாகிய பகராவையும், ஆல இம்ரானையும் ஓதுங்கள், அவ்விரண்டும் மறுமை நாளையில் மேகங்களைப் போன்று அல்லது பறவைக் கூட்டத்தைப் போன்று வந்து, தன் தோழர்களுக்காக வாதாட்டம் செய்யும். நீங்கள் ஸூரதுல் பகராவை ஓதுங்கள், ஏனெனில் அதனை எடுப்பது பரகத் (அபிவிருத்தி) ஆகும், அதனை விட்டுவிடுவது நஷ்டமாகும். அதனை ஓத சோம்பேரிகள் சக்திபெறமாட்டார்கள்.  (முஸ்லிம்: 1910)

عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَا تَجْعَلُوا بُيُوتَكُمْ مَقَابِرَ، إِنَّ الشَّيْطَانَ يَنْفِرُ مِنَ الْبَيْتِ الَّذِي تُقْرَأُ فِيهِ سُورَةُ الْبَقَرَةِ»

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களது வீடுகளை மையவாடிகளாக ஆக்கிக்கொள்ள வேண்டாம், ஏனெனில் எந்த வீட்டில் ஸூரதுல் பகரா ஓதப்படுமோ அந்த வீட்டிலிருந்து ஷைத்தான் விரண்டு ஓடுகின்றான். (முஸ்லிம்: 1860)

عَنْ أَبِي مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ قَرَأَ بِالْآيَتَيْنِ مِنْ آخِرِ سُورَةِ البَقَرَةِ فِي لَيْلَةٍ كَفَتَاهُ»،

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யாராவது ஸூரதுல் பகராவின் கடைசி இரண்டு வசனங்களை இரவையில் ஓதினால். அவருக்கு அவ்விரண்டுமே போதுமானதாகும்.  (புஹாரி: 5009, முஸ்லிம்)

عَنْ عَبْدِ اللهِ، قَالَ: «لَمَّا أُسْرِيَ بِرَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، انْتُهِيَ بِهِ إِلَى سِدْرَةِ الْمُنْتَهَى، وَهِيَ فِي السَّمَاءِ السَّادِسَةِ، إِلَيْهَا يَنْتَهِي مَا يُعْرَجُ بِهِ مِنَ الْأَرْضِ فَيُقْبَضُ مِنْهَا، وَإِلَيْهَا يَنْتَهِي مَا يُهْبَطُ بِهِ مِنْ فَوْقِهَا فَيُقْبَضُ مِنْهَا»، قَالَ: ” {إِذْ يَغْشَى} [النجم: 16] السِّدْرَةَ مَا يَغْشَى “، قَالَ: «فَرَاشٌ مِنْ ذَهَبٍ»، قَالَ: ” فَأُعْطِيَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلَاثًا: أُعْطِيَ الصَّلَوَاتِ الْخَمْسَ، وَأُعْطِيَ خَوَاتِيمَ سُورَةِ الْبَقَرَةِ، وَغُفِرَ لِمَنْ لَمْ يُشْرِكْ بِاللهِ مِنْ أُمَّتِهِ شَيْئًا، الْمُقْحِمَاتُ

அப்துல்லஹிப்னு மஸ்ஊத் (றழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள், மிஃராஜ் சென்றபோது மூன்று விடையங்கள் கொடுக்கப்பட்டன; ஐந்து நேரத் தொழுகைகள், ஸூரதுல் பகராவின் கடைசி வசனங்கள், தன் உம்மத்தில் இனைவைக்காதவர்களுக்கு பெரும் பாவங்கள் மண்ணிப்பளிக்கப்பட்டன.  (முஸ்லிம்: 449)

إِذَا أَوَيْتَ إِلَى فِرَاشِكَ فَاقْرَأْ آيَةَ الكُرْسِيِّ، لَنْ يَزَالَ مَعَكَ مِنَ اللَّهِ حَافِظٌ، وَلاَ يَقْرَبُكَ شَيْطَانٌ حَتَّى تُصْبِحَ،

நபி (ஸல்) அவர்கள் அபூபக்ர் (றழி) அவர்களுக்கு; நீ படுக்கைக்கு வந்து, ஆயதுல் குர்சியை (2:255) ஓதினால், அல்லாஹ்விடமிருந்து ஒரு பாதுகாவளன் உம்முடன் இருந்து கொண்டே இருப்பார், மேலும் காலை வரை உம்மை ஷைத்தான் நெருங்கவும் மாட்டான்.  (புஹாரி: 5010)

 عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا أَبَا الْمُنْذِرِ، أَتَدْرِي أَيُّ آيَةٍ مِنْ كِتَابِ اللهِ مَعَكَ أَعْظَمُ؟» قَالَ: قُلْتُ: اللهُ وَرَسُولُهُ أَعْلَمُ. قَالَ: «يَا أَبَا الْمُنْذِرِ أَتَدْرِي أَيُّ آيَةٍ مِنْ كِتَابِ اللهِ مَعَكَ أَعْظَمُ؟» قَالَ: قُلْتُ: {اللهُ لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ} [البقرة: 255]. قَالَ: فَضَرَبَ فِي صَدْرِي، وَقَالَ: «وَاللهِ لِيَهْنِكَ الْعِلْمُ أَبَا الْمُنْذِرِ»

நபி (ஸல்) அவர்கல் அபூ முன்ஸிர் (றழி) அவர்களைப் பார்த்து; அபூ முன்ஸிரே! அல்லாஹ்வின் வேதத்திலிருந்து எந்த வசனம் உன்னிடத்தில் மிக கன்னியமிக்கது? என்று கேட்க, அல்லாஹ்வும் அவன் தூதருமே அறிவார்கள் என்று அவர் கூற, மீண்டும் நபிகளார்; அபூ முன்ஸிரே! அல்லாஹ்வின் வேதத்திலிருந்து எந்த வசனம் உன்னிடத்தில் மிக கன்னியமிக்கது? என்று கேட்க, அவர் ‘ஆயதுல் குர்சி, 2:255’ என்று கூறவே, நபிகளார் அவர்களின் தோழில் தட்டிவிட்டு ‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக அபூ முன்ஸிரே அறிவு உமக்கு வரவேற்பாக அமையட்டும்’ என்று கூறினார்கள். (முஸ்லிம்: 1921)

 عَنْ أَبِي أُمَامَةَ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ قَرَأَ آيَةَ الْكُرْسِيِّ فِي دُبُرِ كُلِّ صَلَاةٍ مَكْتُوبَةٍ لَمْ يَمْنَعْهُ مِنْ دُخُولِ الْجَنَّةِ إِلَّا أَنْ يَمُوتَ»

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யாராவது கடமையான தொழுகைகளுக்கு பின்னால் ஆயதுல் குர்சியை (2:255) ஓதினால், அவர் சுவனம் நுழைவதற்கு மரணத்தைத் தவிர வேரெதுவும் தடையாக இருக்காது. (அந்நஸாஇ: 9848)
இந்த ஹதீஸை சிலர் பலவீனமானது என்று விமர்சனம் செய்திருந்தாலும், அதிகமானவர்கள் ஸஹீஹ் என்றே கூறுகின்றனர். அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்.
சூரதுல் பகரா பற்றிய பலவீனமான இட்டுக்கட்டப்பட்ட செய்திகள்
 من قرأ سورة البقرة؛ توج بتاج في الجنة
யாராவது சூரதுல் பகராவை ஓதினால் அவருக்கு சுவனத்தில் கிரீடம் அணிவிக்கப்படும். இந்த செய்தி பைஹகீ இமாமின் ‘ஷுஅபுல் ஈமான்’ எனும் புத்தகத்தில் பதியப்பட்டுள்ளது. இதன் அறிவிப்பாளர் தெடரில் வரும் ‘முஹம்மதிப்னுல் ளவ்ஃ’ என்பவர் பொய்யன் என்று விமர்சனம் செய்யப்பட்டுள்ளார்.மேலும் முஹ்ம்மதிப்னு மஹ்தீ என்பவர் நிரகரிக்கப்பட்ட செய்திகளை அறிவிக்கும் மிகப் பலவீனமானவர் என்று விமர்சிக்கப்பட்டுள்ளார். (ஸில்ஸிலதுல் லஈபா)
 ابْنَ عُمَرَ، يَقُولُ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِذَا مَاتَ أَحَدُكُمْ فَلَا تَحْبِسُوهُ، وَأَسْرِعُوا بِهِ إِلَى قَبْرِهِ، وَلْيُقْرَأْ عِنْدَ رَأْسِهِ بِفَاتِحَةِ الْكِتَابِ، وَعِنْدَ رِجْلَيْهِ بِخَاتِمَةِ الْبَقَرَةِ فِي قَبْرِهِ»
உங்களில் ஒருவர் மரணித்துவிட்டால் அவரை நீங்கள் தடுத்து (தாமதப் படுத்தி) வைக்கவேண்டாம், அவரை கப்ரை நோக்கி விரைவுபடுத்துங்கள், மேலும் கப்ரடியில்வைத்து அவரது தலைமாட்டில் சூரதுல் பாத்திஹாவையும், கால் மாட்டில் பகரா சூராவின் கடைசியை ஒதுங்கள்.  (தப்ரானி முஃஜமுல் கபீர், ஷுஅபுல் ஈமான்) இதில் அய்யூப் இப்னு நுஹைக் என்பவர் இடம் பெருகின்றார், அவர் ஹதிஸ்கலையில் விடப்பட்டவராவார்,மேலும் யஹ்யா என்பவர் பலவீனமானவராவார். (ஸில்ஸிலதுல் லஈபா)
ஸூரா ஆல இமரான் பற்றிய சிறப்பு செய்திகள்
நபி (ஸல்) அவர்கள் நித்திரையிலிருந்து எழுந்தால் ஸூரா ஆல இம்ரானின் கடைசி பத்து வசனங்களை ஓதுவார்கள். (புஹாரி:183, முஸ்லிம்)
ஆல இம்ரான் சூரா பற்றிய பலவீனமான செய்திகள்
من قرأ السورة التي يذكر فيها آل عمران يوم الجمعة صلى الله عليه وملائكته حتى تجب الشمس
யார் இம்ரானின் குடும்பம் பற்றி கூறும் சூராவை (ஆல இம்ரான்) வெள்ளிக் கிழமையில் ஓதுகின்றாரோ, அவர் மீது அல்லாஹ்வும், மலக்கு மார்களும் சூரியன் மறையும் வரை ஸலவாத் சொல்கின்றனர். (தப்ரானி, முஃஜமுல் கபீர், அவ்ஸத்) அந்த அறிவிப்பில் வரும் ‘அஹ்மத் இப்னு மாஹான்’ என்பவர் அறியப்படாத ‘மஜ்ஹூல்’ என்ற தரத்தில் இருப்பவர். மேலும் தல்ஹதுப்னு யZஸீத் என்பவர் ‘பொய்யைக் கொண்டு சந்தேகிக்கப்பட்டவர்’ மேலும் யஸித் பின் ஸினான் என்பவர் பலவீனமானவராவார். (ஸில்ஸிலதுல் லஈபா)
இன்னும் பல லஈபான செய்திகளைப் பார்க்கமுடியும்.
சூரதுல் கஹ்Fப் பற்றிய சிறப்புகள்

عَنْ أَبِي الدَّرْدَاءِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ حَفِظَ عَشْرَ آيَاتٍ مِنْ أَوَّلِ سُورَةِ الْكَهْفِ عُصِمَ مِنَ الدَّجَّالِ».

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் சூரதுல் கஹ்Fபின் ஆரம்ப பத்து வசனங்களை மனனமிடுகின்றாரோ அவர், தஜ்ஜாலை விட்டும் பாதுகாக்கப்படுவார்.  (முஸ்லிம்:1919)
சில அறிவிப்புகளில் ‘சூரா கஹ்Fபின் கடைசி பத்து வசனங்கள்’ (அஹ்மத், அபூதாவுத், இப்னு ஹிப்பான்) என்று வருகின்றது, அதனை விடவும் ஆரம்ப பத்து வசனங்கள் என்பது மிகச் சரியான அறிவிப்பாகும்.
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: «مَنْ قَرَأَ سُورَةَ الْكَهْفِ لَيْلَةَ الْجُمُعَةِ، أَضَاءَ لَهُ مِنَ النُّورِ فِيمَا بَيْنَهُ وَبَيْنَ الْبَيْتِ الْعَتِيقِ»
யார் சூரதுல் கஹ்பை வெள்ளிக் கிழமையில் ஓதுகின்றாரோ அவருக்கு இரண்டு ஜும் ஆக்களுக்கிடையில் ஒளி வழங்கப்படும். (நஸாஇ, பைஹகீ, தாரிமீ, ஹாகிம்; வார்த்தை வித்தியாசங்களுடன்)இந்த ஹதீஸ் நபிகளாரின் குற்றாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் அவை அனைத்தும் பலவீனமானவையே. நபித் தோழர் அபூ ஸஈத் அவர்களின் கூற்றாக ஸஹீஹாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.

இன்ஷா அல்லாஹ் தொடரும்! பகுதி 2

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *