முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடை முறை! -1

இஸ்லாத்திற்கு எதிரான விமர்சனம்!

முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடை முறை!

வீடியோவைப் பார்க்க இங்கே தட்டவும் click

இன்று உலகில் குறிப்பாக இலங்கையில் அதிகம் விமர்சிக்கப்படும் ஒரு விடையமாக முஸ்லிம் பெண்கள் அணியும் அபாயா, ஹிஜாப் (உடலை முழுக்கவும் மறைக்கும் ஆடை) எனும் ஆடை மாறிவிட்டது. இஸ்லாம் பெண்களை அடக்குகின்றது, பெண்களின் உரிமைகளைப் பரிக்கின்றது, அந்த ஆடை பயங்கரவாதத்தைத் தூண்டுகின்றது என்றெல்லாம் விமர்சிக்கப் படுகின்றது. ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை இந்த விமர்சனங்களுக்கு பதில் கொடுக்கவேண்டிய கடமைப்பாட்டிலேயே இருக்கின்றான். அந்த அடிப்படையில் இதற்கான பதிலை பின்வருமாறு நோக்குவோம்.

இந்த விமர்சனங்களை முன்வைப்பவர்கள் யார் என்று பார்த்தால்; பல காலங்கள் இஸ்லாமிய ஆடை அணிந்து பல இழப்புகளை சந்தித்த பெண்கள் சமூகமா? என்று பார்த்தால்! அவர்களல்ல, மாறாக முஸ்லிம் அல்லாதவர்களும், பெண்களை முன்வைத்து காமத்தை தீர்க்கும் இஸ்லாத்தின் விரோத சக்திகளும், இன்னும் சில இஸ்லாத்தின் விரோதிகளின் அடிமைகளாக இருக்கும் (தஸ்லிமா நஸ்ரின், சல்மான் ருஸ்தி போன்ற) கோடாரிக் கம்புகளுமே!!. அதே நேரம் நவீன காலத்தில் அரைகுறை ஆடைகளோடு வாழ்வைக் கழித்த எத்துனையோ பெண்கள் சமகாலத்தில் இஸ்லாத்தை ஏற்று, இஸ்லாமிய ஆடையின் பெறுமதியை இவ்வுலகிற்கு எடுத்துரைத்துக் கொண்டிருக்கின்றனர். இது இஸ்லாத்திற்கு கிடைத்த பெறும் வெற்றியாகும்.

பொதுவாக முஸ்லிம்கள் என்றில்லாமல், மனிதனை பொறுத்தவரை அந்ணியப் பெண்களை ஆசைக்கண் கொண்டு பார்த்தாலும், தன் தாயை,சகோதரியை, மனைவியை, ஏனைய குடும்பப் பெண்களை அந்ணிய ஆண்கள் ஆசைக்கண் கொண்டு பார்ப்பதை ஒரு போதும் விரும்பமாட்டான், அப்படி பார்ப்பது தெரிந்துவிட்டால் அது பல சந்தர்ப்பங்களில் கைகலப்பிலும் முடிவடைந்து விடுகின்றது.இதுவே நல்ல மனிதனின் பண்பாகவும் இருக்கின்றது. எனவே இந்த உண்மை நிலையை அறிய வேண்டுமா!! தன் தாயை, சகோதரியை, மனைவியை நேசிக்கும், மாற்றுமத சகோதரர் ஒருவரிடம் சென்று ‘உன் சகோதரியை ஒரு ஆண் ஆசைக்கண் கொண்டு பார்ப்பதை நீ விரும்புவாயா?’ என்று கேளுங்கள்.  அப்போது உண்மை நிலையை அறிய முடியும்.

எனவே மனிதனின் ஆழ்மனதில் பதிந்திருக்கும் ‘பெண்மைக்கான இந்த மதிப்பை’ படைப்பாளன் அல்லாஹ் நன்கறிந்து, ஒரு பெண்ணை அந்ணிய ஆண்கள் ஆசைக் கண்கொண்டு பார்க்கக் கூடாது என்பதற்காக ஒழுக்கமுள்ள பெண்ணுக்கு தன்னை ஆண்களுக்கு முன்னால் மறைக்குமாறு கட்டலையிடுகின்றான். தன் சொந்தப் பெண்களின் மகிமை தெரிந்த மனிதன், அவளை யாரும் பார்க்கக்கூடாது என்று விரும்பும் போது, பெண்களை படைத்து, அவர்களுக்கு உள்ள சிறப்புகளையும் அறிந்த படைப்பாளன் அல்லாஹ், அவளுக்கு அந்ணிய ஆண்களுக்கு முன்னால் மறைக்குமாறு கட்டலையிடுவது எப்படி தவராகும். சிந்திக்கும் மனிதர்களுக்கு இதுவொன்றே போதுமானதாகும்.

அடுத்து, ஒரு பெண்ணின் உடல் கட்டமைப்பைப் பொறுத்தவரை ஆண்களின் உடல் கட்டமைப்பைவிட அழகானதும் கவர்ச்சியானதுமாகும். அதனால்தான் பெண்களின் மகிமை அறியாத இன்றைய உலகம் அவளை ஒரு காட்சிப் பொருளாக, உற்பத்திப் பொருட்களை சந்தைப் படுத்துவதற்கான ஒரு அழங்காரப் பொருளாக பயன்படுத்திக் கொண்டிருக்கின்றது. இப்படிப்பட்ட காமவெரியர்களின் ஆசைகளுக்கு ஒரு பெண் ஆளாகிவிடக்கூடாது என்பதற்கே இஸ்லாம் இந்த ஆடை முறையை கடமையாக்கியிருக்கின்றது.

  • நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலைமுன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக; அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன். (33:59)

மேலும் ஒரு பெண்ணைப் பொறுத்தவரை உடல் ரீதியான ஒரு பலவீனத்தைக் கொண்டிருக்கின்றாள். அவள் என்னதான் ஆண்களுக்கு நிகராக சம உரிமைக் கோசம் போட்டாலும் அவள் ஆண்களை விட உடல் ரீதியான பலவீனமுடையவளே. இந்தப் பலவீனம் தான் இஸ்லாம் காத்துக் கொள்ளுமாறு சொல்லித்தரும் ”கற்பு” என்பது. இந்தப் பலவீனத்திற்கு மிகப் பெறும் எடுத்துக்காட்டு; ‘உலக வரலாற்றில் காமவெரியர்களால் கற்பழிக்கப்பட்டவர்கள் பெண்களே, மாறாக பெண்களால் ஆண்கள் கற்பழிக்கப்பட்டார்கள் என்பது உலக வரலாற்றில் இல்லாத ஒன்றாகும். மேலும் ஒரு ஆண்மகன் நினைத்தால் ஓராயிரம் பெண்களின் கற்பைப் பரிக்கலாம், ஆனால் ஓராயிரம் பெண்கள் சேர்ந்தாலும் ஒரு ஆணின் கற்பைப் பரிக்கமுடியாது.’என்பதாகும். இந்த உண்மையை அறிந்த படைப்பாளன் அல்லாஹ், பெண் சமூகத்தை பாதுகாப்பதற்கு முன்வைத்ததே பெண்கள் தன்னை முழுக்கவும் மறைக்கும் இஸ்லாமிய ஆடை அபாயா.

  • இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில் தெரியக் கூடியதைத் தவிர வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது; இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது; மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள். (24:31)

மேலும் எந்த அளவுக்கு இஸ்லாம் பெண்களை பாதுகாக்கச் சொல்கின்றது என்றால், பெண்களின் குரல் இயற்கயில் அழகானதே, அந்த ஓசையைக் கேட்டு காம வெரியர்கள் பெண்களை வீனாக்கிவிடலாம் என்பதனால் அதனைக் கூட கட்டுப் படுத்தச் சொல்கின்றது இஸ்லாம். பாருங்கள் படைப்பாளன் அல்லாஹ் பெண் சமூகத்திற்கு சொல்லும் அறிவுரையை!

  • நபியின் மனைவிகளே! நீங்கள் பெண்களில் மற்றப் பெண்களைப் போலல்ல; நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விரும்பினால், (அந்நியருடன் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனெனில் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ, அ(த்தகைய)வன் ஆசை கொள்வான்; இன்னும் நீங்கள் நல்ல பேச்சே பேசுங்கள். (33:32)

மேலும் பெண்ணிடம் மறைந்திருக்கும் இந்தப் பொக்கிஷத்தை காமர்களின் கனவிலிருந்து பாதுகாக்கவே பெண் சமூகத்தை பாதுகாக்கும் பொறுப்பை ஆண்களிடம் வழங்கியது இஸ்லாம். வெறுமனே பொறுப்பு வழங்காமல் அவளுக்காக செலவு செய்வதையும் கடமையாக்கியது இஸ்லாம்.

(ஆண், பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட(உடல் ரீதியான சிறப்பை வைத்து) மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். (4:32)

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *