சட்டம் இயற்றும் அதிகாரமும் அல்லாஹ்வுக்கு மாத்திரம் சொந்தமானதே
வீடியோவைப் பார்க்க இங்கே தட்டவும் click
ஒரு விடையத்தை ஹலால் ஹராம் ஆக்குவதோ, ஒன்றை மார்க்கம் என்று தீர்மானிப்பதோ அல்லாஹ்வின் அதிகாரமாகும். இது நபிமார்களுக்கும் வழங்கப்படவில்லை.
- அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்விடமேயன்றி வேறில்லை; சத்தியத்தையே அவன் கூறுகின்றான், தீர்ப்பு வழங்குவோரில் அவனே மிகவும் மேலானவனாக இருக்கிறான். (6:57)
- “அல்லாஹ் ஒருவனுக்கே அன்றி (வேறெவருக்கும்) அதிகாரம் இல்லை. அவனையன்றி (வேறு எவரையும்) நீங்கள் வணங்கக் கூடாது என்று அவன் (உங்களுக்குக்) கட்டளையிட்டிருக்கின்றான். இதுவே நேரான மார்க்கமாகும்; ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் இதனை அறிந்து கொள்வதில்லை. (12:40)
- பின்னர் அவர்கள் தங்களின் உண்மையான பாதுகாவலனான அல்லாஹ்விடம் கொண்டு வரப்படுவார்கள்; (அப்போது தீர்ப்பு கூறும்) அதிகாரம் அவனுக்கே உண்டு என்பதை அவர்கள் அறிந்து கொள்ளட்டும். அவன் கணக்கு வாங்குவதில் மிகவும் விரைவானவன். (6:62)
- தீர்ப்புக் கூறும் அதிகாரமும் அவனுக்கே உரியது; ஆதலின் அவனிடத்திலேயே நீங்கள் திரும்பிக் கொண்டு வரப்படுவீர்கள். (28:70)
மேலும் அல்லாஹ் வழங்கிய தீர்ப்பை விட்டுவிட்டு வேறு தீர்ப்புகளை எடுக்கும் போது அது எங்களை இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றலாம்.
- எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ, அவர்கள் நிச்சயமாக காஃபிர்கள்தாம். (5: 44)
- எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்த (வேதக் கடடளைப்)படி தீர்ப்பு வழங்கவில்லையோ நிச்சயமாக அவர்கள் அநியாயக் காரர்களே! (5: 45)
- (ஆதலால்) இன்ஜீலையுடையவர்கள், அதில் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பு வழங்கட்டும்; அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு யார் தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள் தான் பாவிகளாவார்கள். (5:47)
- உம் இறைவன் மேல் சத்தியமாக, அவர்கள் தங்களிடையே எழுந்த சச்சரவுகளில் உம்மை நீதிபதியாக, ஏற்றுப் பின்னர் நீர் தீர்ப்பு செய்தது பற்றி எத்தகைய அதிருப்தியையும் தம் மனங்களில் கொள்ளாது (அத்தீர்ப்பை) முற்றிலும் ஏற்றுக் கொள்ளாத வரையில், அவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள் ஆகமாட்டார்கள். (4:65)
- நபியே! உம் மனைவியரின் திருப்தியை நாடி, அல்லாஹ் உமக்கு அனுமதித்துள்ளதை ஏன் விலக்கிக் கொண்டீர்? மேலும் அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன். (66:1)
மேலும் யூதர்கள் சபிக்கப்பட்டதற்கான காரணங்களுள் ஒன்றாக இந்த அதிகாரம் அவர்களது மதத் தலைவர்களுக்கு வழங்கப்பட்டதுமாகும்.
- அதிய் இப்னி ஹாதிம் அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டபோது; அவர்கள் அல்லாஹ்வை விட்டும் தம் பாதிரிகளையும், தம் சந்நியாசிகளையும் மர்யமுடைய மகனாகிய மஸீஹையும் தெய்வங்களாக்கிக் கொள்கின்றனர்; (9:31) என்ற வசனம் தொடர்பில் ‘வேதக்காரகள் அவர்கள் தலைவர்களை வணங்கவில்லையே.’ என்று நபிகளாரிடம் கேட்டபோது, நபியவர்கள்; ஆனாலும் அவர்கள் ஹலாலாக்கியதை ஹலால் என்றும், ஹராமாக்கியதை ஹராம் என்றும் ஏற்றுக்கொள்ளவில்லையா? என்று கேட்டார்கள். (திர்மிதீ) இதே விளக்கத்தை ஹுதைபா(றழி) அவர்களும் கொடுக்கின்றார்கள். (பைஹகீ, முஸன்னப் அப்துர்ரஸ்ஸாக்)
- ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(றழி) அறிவித்தார்கள்: நபி(ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின்போது, நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மதுபானம், செத்தவை, பன்றி, உருவச் சிலைகள் ஆகியவற்றை விற்பனை செய்வதைத் தடை செய்துள்ளனர்!” என்று கூறினார்கள். அப்போது அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! செத்தவற்றின் கொழுப்புகள் கப்பல்களுக்குப் பூசப்படுகின்றன. தோல்களுக்கு அவற்றின் மூலம் மெருகேற்றப்படுகிறது; மக்கள் விளக்கெரிக்க அவற்றைப் பயன்படுத்துகின்றனர்; எனவே, அதைப் பற்றிக் கூறுங்கள்!’ எனக் கேட்கப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘கூடாது! அது விலக்கப்பட்டது!’ எனக் கூறினார்கள். அப்போது தொடர்ந்து, ‘அல்லாஹ் யூதர்களை சபிப்பானாக! அல்லாஹ் யூதர்களுக்குக் கொழுப்பை ஹராமாக்கியபோது, அவர்கள் அதை உருக்கி விற்று, அதன் கிரயத்தை சாப்பிட்டார்கள்!” என்று கூறினார்கள். (புஹாரி:2236, முஸ்லிம்)
எனவே இந்த அடிப்படையில் அல்லாஹ்வின் சட்டங்களுக்கு எதிராக அரசியல் சட்டங்களை உறுவாக்கிக்கொண்டும், முதலாலித்துவம், சோசலிசம் போன்ற இஸ்லாமிய பொருளாதாரத்துக்கு எதிரானவைகளையும் ஏற்றுக்கொண்டு, மார்க்கம் வேறு அரசியல் வேறு என்று கூறிக்கொள்தல் இறை நிறாகரிப்பை ஏற்படுத்தும் அம்சமாகும். (இதனை சம காலத்தில் முஸ்லிம்களாக காட்டிகொள்ளும் அல்மானியாக்கள் என்போர் கொள்கையாக கொண்டிருக்கின்றனர்.)
- அல்லது: அல்லாஹ் அனுமதிக்காததை மார்க்கமாக்கி வைக்கக்கூடிய இணை(த் தெய்வங்)கள் அவர்களுக்கு இருக்கின்றனவா? மேலும், (மறுமையில் விசாரணைக்குப் பிறகு தக்க கூலி கொடுக்கப்படும் என்னும் இறைவனின்) தீர்ப்புப் பற்றிய வாக்கு இல்லாதிருப்பின் (இதுவரை) அவர்களுக்கிடையில் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும்-நிச்சயமாக அநியாயக்காரர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு. (42:21)
மேலும் அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒரு விடையத்தில் தெளிவாக தீர்ப்பு வழங்கிய பின் அவர்களுக்கு முறனாக ஒரு பெரியாரின் கூற்றையோ, அல்லது ஒரு ஆலிமின் கூற்றையோ முதன்மைப் படுத்தி ஏற்றுக்கொள்வதும் இணைவைப்பிலும், வழிகேட்டிலும் கொண்டு சேர்த்துவிடும் என்பதையும் நாம் அறிந்து கொள்ளவேண்டும்.
- மேலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை; ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள். (33:36)
எனவே இன்றைக்கு குர்ஆன் ஹதீஸ்களின் தெளிவான தீர்ப்புகளுக்கு எதிறாக பல விடையங்களில் தனிமனிதர்கள் முதன்மைப் படுத்தப்படுகின்றனர். இது இணைவைப்பிலும், சில சந்தர்பங்களில் குப்ரிலும் சேர்த்துவிடும். அல்லாஹ்வே எம்மைக் காப்பாற்றவேண்டும்.