சூனியம்

வீடியோவைப் பார்க்க இங்கே தட்டவும் click

part -1

சூனியமும் மனிதனுக்கு தீங்கிழைக்கும் என்று பொதுவாக நம்பியிருக்கின்றனர். எந்த அளவுக்கென்றால் சூனியக்காரன் என்று அடையாளப்படுத்தப்பட்ட ஒரு மனிதனைக் கண்டாலும் பயந்திவிடுகின்றனர். மேலும் பாதை ஓரங்களில் ஓழையினால் பின்னப்பட்ட ஒரு உணவுத் தட்டு இருந்தால் அது தவறியாலும் கடக்கப்பட்டுவிடக்கூடாது. அப்படி கடக்கப்பட்டால் அது ஆபத்தைக் கொண்டு வரும் என்றும், வீட்டு வாசலில் ஏதாவது எழுதப்பட்ட ஒரு தகட்டையோ, அல்லது பூசனிக்காய் போன்ற ஒன்றையோ கண்டுவிட்டால் அவற்றை நெறுங்கவும் மாட்டார்கள். காரணம் அதனால் தீங்கு ஏற்படும் என்ற அச்சம். தவறியாவது அவை கடக்கப்பட்டு, ஏதும் நடந்துவிட்டால் அதனால்தான் நடந்தது என்றும் கூறிவிடுகின்றனர். இந்த அளவுக்கு சூனியத்தின் மீது வீன் நம்பிக்கை கொண்டிருக்கின்றனர். இது ஷிர்க்கில் கொண்டு சேர்த்துவிடும்.

 அதே நேரம் சூனியம் ஒன்றிருக்கின்றது. அது அல்லாஹ்வின் நாட்டமில்லாமல் எந்தத் தீங்கையும் ஏற்படுத்தப்போவதில்லை. என்று நம்புவது ஈமானில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தப்போவதில்லை. இதுவே அல்குர்ஆன் சூனியத்தைப் பற்றி நம்பச் சொன்ன முறையும்கூட.

  • அப்படியிருந்தும் கணவன்-மனைவியிடையே பிரிவை உண்டாக்கும் செயலை அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டார்கள். எனினும் அல்லாஹ்வின் கட்டளையின்றி அவர்கள் எவருக்கும் எத்தகைய தீங்கும் இதன் மூலம் இழைக்க முடியாது. தங்களுக்குத் தீங்கிழைப்பதையும், எந்த வித நன்மையும் தராததையுமே – கற்றுக் கொண்டார்கள். (2: 102)
  • ஆகவே சூனியக்காரன் எங்கு சென்றாலும் வெற்றி பெறமாட்டான். (20: 69)

மேலும் சூனியத்தை பொதுவாக மறுத்தால் பல குர்ஆன் வசனங்களையும், ஹதீஸ்களையும் மறுத்து, வழிகேட்டில் செல்லவேண்டிவரும். அல்லாஹ் அல்குர்ஆனில் சூனியம் ஒன்று இருப்பதாகச் சொல்கின்றான்.

  • அவர்கள் ஸுலைமானின் ஆட்சிக்கு எதிராக ஷைத்தான்கள் ஓதியவற்றையே பின்பற்றினார்கள். ஆனால் ஸுலைமான் ஒருபோதும் நிராகரித்தவர் அல்லர். ஷைத்தான்கள் தாம் நிராகரிப்பவர்கள். அவர்கள்தாம் மனிதர்களுக்குச் சூனியத்தைக் கற்றுக்கொடுத்தார்கள். இன்னும், பாபில் (பாபிலோன் என்னும் ஊரில்) ஹாரூத், மாரூத் என்ற இருவருக்கு இறக்கப்பட்டதையும் (தவறான வழியில் பிரயோகிக்கக் கற்றுக்கொடுத்தார்கள்). ஆனால் அவர்கள் இருவரும் “நிச்சயமாக நாங்கள் சோதனையாக இருக்கிறோம் (இதைக் கற்று) நீங்கள் நிராகரிக்கும் காபிர்கள் ஆகிவிடாதீர்கள்” என்று சொல்லி எச்சரிக்காத வரையில், எவருக்கும் இ(ந்த சூனியத்)தைக் கற்றுக் கொடுக்கவில்லை; அப்படியிருந்தும் கணவன்-மனைவியிடையே பிரிவை உண்டாக்கும் செயலை அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டார்கள். எனினும் அல்லாஹ்வின் கட்டளையின்றி அவர்கள் எவருக்கும் எத்தகைய தீங்கும் இதன் மூலம் இழைக்க முடியாது. தங்களுக்குத் தீங்கிழைப்பதையும், எந்த வித நன்மையும் தராததையுமே-கற்றுக் கொண்டார்கள். (சூனியத்தை) விலை கொடுத்து வாங்கிக் கொண்டவர்களுக்கு, மறுமையில் யாதொரு பாக்கியமும் இல்லை என்பதை அவர்கள் நன்கறிந்துள்ளார்கள். அவர்கள் தங்கள் ஆத்மாக்களை விற்றுப்பெற்றுக்கொண்டது கெட்டதாகும். இதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டாமா?   (2:102)

மேலும் இந்த சூனியத்தையும் அதை செய்பவர்களையும் நபி (ஸல்) பல இடங்களில் எச்சரித்தார்கள். அதற்கு தீர்வுகளையும் கூறினார்கள்.

  • அபூ ஹுரைரா(றழி) அறிவித்தார்கள்: “அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களைத் தவிருங்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.மக்கள், ‘இறைத்தூதர் அவர்களே! அவை எவை?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள்,

1-  ‘அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதும்,

2-  சூனியம் செய்வதும்,

3-  நியாயமின்றி கொல்லக் கூடாது என்று அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள உயிரைக் கொல்வதும்,

4-  வட்டி உண்பதும்,

5-  அனாதைகளின் செல்வத்தை உண்பதும்,

6-  போரின்போது புறமுதுகிட்டு ஓடுவதும்

7-  அப்பாவிகளான, இறைநம்பிக்கை கொண்ட, கற்புள்ள பெண்களின் மீது அவதூறு கூறுவதும் தான் (அந்தப் பெரும் பாவங்கள்)” என்று (பதில்) கூறினார்கள். (புஹாரி: 2766, முஸ்லிம்)

  • இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ தினந்தோறும் காலையில் சில ‘அஜ்வா’ ரகப் பேரீச்சம் பழங்களை (வெறும் வயிற்றில்) சாப்பிடுகிறவருக்கு எந்த விஷமும் எந்தச் சூனியமும் அன்று இரவு வரை இடரளிக்காது. (புஹாரி:5768, முஸ்லிம்)

குறிப்பு: ஒருவர் சூனியம் ஒன்று இருக்கின்றது. அது அல்லாஹ்வின் நாட்டமில்லாமல் எந்தத் தீங்கையும் ஏற்படுத்தப்போவதில்லை என்று நம்பினால் அவர் காபிராகவோ, முஷ்ரிக் ஆகவோ மாட்டார் என்பதை நாம் அறிந்து கொள்ளவேண்டும்.

சூனியத்தால் ஷிர்க் ஏற்படும் மற்றொரு முறை;

ஒருவனுக்கு ஒரு பிரச்சனை ஏற்பட்டால் அல்லாஹ்வின் நாட்டத்தினால் நடந்தது என்று கூறாமல், சூனியத்தின் மீது பலி போடுவதாகும். இதனைக் கூறும் போது நபி (ஸல்) அவர்களுக்கும் சூனியம் வைக்கப்பட்டதுதானே என்று அதனை சரிபடுத்துகின்றனர். ஆனால் நபியவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதாக புஹாரியில் வரும் ஹதீஸை தெளிவாகப் பார்த்தால் இதற்கான பதில் கிடைக்கும். சுறுக்கம் நபியவர்களுக்கு ஏற்பட்ட மன நிலை மாற்றத்தை ஒரு பிரச்சினையாக நோக்கினார்களே அல்லாமல் சூனியத்தின் விளைவு என்று நபிகளாராக முடிவெடுக்க வில்லை. மாறாக அல்லாஹ்விடம் துஆவே செய்தார்கள், அல்லாஹ்தான் சூனியம் என்று அறிவிக்கின்றான். எனவே இது அல்லாஹ்வின் நாட்டத்துடன் ஏற்பட்ட ஒரு விளைவு என்று முடிவெடுக்க முடியும்.

  • ஆயிஷா(றழி) அறிவித்தார்கள்:  இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு ‘பனூஸுரைக்’ குலத்தைச் சேர்ந்த லபீத் இப்னு அஃஸம் என்பான் சூனியம் செய்தான். இதையடுத்து இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தாம் செய்திராத ஒன்றைத் தாம் செய்து கொண்டிருந்ததாகப் பிரமையூட்டப்பட்டார்கள். இறுதியில், அவர்கள் ‘ஒரு நாள்’ அல்லது ‘ஓரிரவு’ என்னிடம் வந்தார்கள். ஆயினும், அவர்கள் (என் மீது கவனம் செலுத்தாமல்) தொடர்ந்து பிரார்த்தனை செய்து கொண்டேயிருந்தார்கள்.  பிறகு (என்னிடம் கூறினார்கள்:) ஆயிஷா! (விஷயம்) தெரியுமா? எந்த விஷயத்தில் தெளிவைத் தரும்படி இறைவனிடம் நான் கேட்டுக் கொண்டிருந்தேனோ அந்த விஷயத்தில் அவன் எனக்குத் தெளிவை அளித்துவிட்டான்…………….. (புஹாரி: 5763…., முஸ்லிம்)

எனவே வஹீ வரக்கூடிய நபிகளாரே சுயமாக சூனியம் என்று முடிவெடுக்காமல் அல்லாஹ்விடம் தீர்வு தேடினார்கள் என்றால், வஹீ இறங்காத நாம் வெறுமனே பிறச்சினைகளை சூனியத்தின் விளைவு என முடிவு செய்வது எந்த அடிப்படையில் என்று சிந்திக்கவேண்டும், என்வே வெறுமனே சூனியத்தில் பலி போடுவது ஷிர்க்கில் சேர்த்துவிடும்.

சூனியத்தால் ஏற்படும் மற்றொரு ஷிர்க்கான அம்சம், மனிதனுக்கு ஏதும் பாதிப்பு ஏற்பட்டால் நம் சமூகத்திலிருக்கும் மந்திரீகக்காரர்கள், சாஸ்திரம் சொல்பவர்கள், குறி சொல்பவர்கள், பால், மை பார்ப்பவர்கள் என்று றைவானவற்றையும், எதிர்காலத்தில் நடப்பவை பற்றியும் அறிவிப்பவர்களிடம் சென்று கேட்கின்றனர். இதுவும் இறை அதிகாரத்தை படைப்பினத்துக்கு வழங்கும் ஷிர்க்கான செயலாகும். நபிகளாருக்கே அல்லாஹ்தான் அறிவித்துக் கொடுத்தான் எனும் போது, அறிவாளிகளுக்கெல்லாம் பெறிய அறிவாளியாக நபிகளார் இருந்தும் அவர்களாகவே முடிவெடுக்கவில்லை எனும் போது நாம் இப்படிப்பட்டவர்களிடம் சென்று மறைவான வற்றை கேட்பது எப்படி சரியாகும்.

இது சார்ந்த விடையங்கள் ‘மறைவு ஞானம்’ என்ற தலைப்பில் தெளிவாக கூறப்பட்டிருக்கின்றது.

மேலும் இன்றைக்கு இருக்கும் சூனியக்காரர்கள் மக்களை ஏமாற்றுகின்றனர் என்பதற்கு பிகப்பெரும் சான்று என்னதெறியுமா? நபிகளாரின் சூனியத்தை ஏற்கும் நமது சமூகத்தின் சூனியம், நபிகளாரின் சூனியத்தைப் போக்கிய அந்த சூறாக்களால் நீங்குவதில்லை. மாறாக ஒரு தேசிக்காயையோ, பூசனிக்காயையோ வெட்டவேண்டும். அல்லது ஒரு தகட்டை நெருப்பிலிட்டு கொளுத்த வேண்டும். இப்படி ஏதாவது ஒரு மூட நம்பிக்கையை செய்தாலே அல்லாமல் நீங்குவதில்லை. எனவே இந்த விடையங்கள் அனைத்தும் எமது ஈமானைப் பறிக்க ஷைத்தானால் வீசப்பட்டிருக்கும் சதிவலை என்பதை அறிந்து, தமது ஈமானை பாதுகாக்கும் பணியில் முஸ்லிம் சமூகம் ஈடுபட முயட்சிக்கவேண்டும்.

மேலும் சூனியம் பற்றி பேசும் அல்குர்ஆன் கண்கட்டு வித்தைகளையும், மாயாஜாலங்களையும் சூனியமாகவே குறிப்பிடுகின்றது. எனவே இது போன்ற விடையங்களை செய்தோ, நம்பியோ நாம் ஈமானை இழந்துவிடக்கூடாது.

  • அதற்கு (மூஸா), “நீங்கள் (முதலில்) எறியுங்கள்” என்று கூறினார். அவ்வாறே அவர்கள் (தம் கைத்தடிகளை) எறிந்தார்கள்; மக்களின் கண்களை மருட்டி அவர்கள் திடுக்கிடும்படியான மகத்தான சூனியத்தை செய்தனர்.(117) அப்பொழுது நாம் “மூஸாவே! (இப்பொழுது) நீர் உம் கைத்தடியை எறியும்” என அவருக்கு வஹீ அறிவித்தோம்; அவ்வாறு அவர் எறியவே (அது பெரிய பாம்பாகி) அவர்கள் (சூனியத்தால்) கற்பனை செய்த யாவற்றையும் விழுங்கி விட்டது.(118) இவ்வாறு உண்மை உறுதியாயிற்று. அவர்கள் செய்த (சூனியங்கள்) யாவும் வீணாகிவிட்டன.(119) அங்கேயே தோற்கடிக்கப்பட்டார்கள். அதனால் அவர்கள் சிறுமைப் பட்டார்கள்.(7:116- 119)
  • “மூஸாவே! நீர் எறிகின்றீரா? எறிகிறவர்களில் நாங்கள் முதலாவதாக இருக்கட்டுமா?” என்று (சூனியக்காரர்கள்) கேட்டனர்.66. அதற்கவர்: “அவ்வாறன்று! நீங்களே (முதலில்) எறியுங்கள்” என்று (மூஸா) கூறினார். (அவர்கள் எறியவே) அவர்களுடைய கயிறுகளும் அவர்களுடைய தடிகளும் அவர்கள் சூனியத்தால் (பாம்புகளாக) நிச்சயமாக நெளிந்தோடுவது போல் அவருக்குத் தோன்றியது.67. அப்போது, மூஸா தம் மனதில் அச்சம் கொண்டார்.68. “(மூஸாவே!) நீர் பயப்படாதீர்! நிச்சயமாக நீர் தாம் மேலோங்கி நிற்பீர்!” என்று நாம் சொன்னோம்.69. “இன்னும், உம் வலது கையில் இருப்பதை நீர் கீழே எறியும்; அவர்கள் செய்த (சூனியங்கள் யா)வற்றையும் அது விழுங்கி விடும்; அவர்கள் செய்தது சூனியக்காரனின் சூழ்ச்சியே ஆகும்; ஆகவே சூனியக்காரன் எங்கு சென்றாலும் வெற்றி பெற மாட்டான்” (என்றும் கூறினோம்).  (20: 65- 69)

முஸ்லிமில் வருகின்ற சூனியத்தைக் கற்கச் சென்ற சிறுவனின் நிகழ்ச்சியிலும் உண்மையாக ஒன்று நடக்கவேண்டுமா? அல்லாஹ்வையே சார்ந்திருக்கவேண்டும் என்பதை அந்த சிருவன் உணர்த்துகின்றான்.

  • சூனியக்காரரனிடம் சூனியத்தையும், ராஹிபிடம் மார்க்கத்தையும் படித்துக் கொண்டிருக்கும் நிலையில் ஒரு நாள் பாதை நடுவே பெறிய ஒரு மிருகம் நின்று மக்களை செல்லவிடாமல் தடுத்துக் கொண்டிருந்தது. இந்த சந்தர்ப்பத்தில் சூனியக்காரனா, ராஹிபா சிறந்தவர்? என்பதனை சோதிப்பதற்காக, ஒரு கல்லை எடுத்து, ‘யாஅல்லாஹ்! சூனியக் காரனின் செயலை விட இந்த ராஹிபின் விடையத்தை நீ விறும்புவதாக இருந்தால் இந்த மிருகத்தை கொன்றுவிடு’ என்று கூறி எறிகின்றார். அது செத்துவிடுகின்றது………….  (முஸ்லிம்)

குறிப்பு: அல்லாஹ்வின் உதவியினால் ஏற்படுவதுபோன்ற ஒரு செயலை சூனியத்தால் செய்யமுடியாது என்பதற்கு இந்த நிகழ்வு மிகப் பெறும் சான்றாகும். சூனியத்தைக் கொண்டு செத்தது போன்ற காட்சியை ஏற்படுத்தலாமேயல்லாமல், உண்மையாக கொலை செய்யமுடியாது. அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்.

மேலும் சூனியம் என்பது கவர்ச்சி, ஈர்ப்பு என்ற அர்த்தங்களிலும் பாவிக்கப்பட்டிருக்கின்றது. இது அறிவுரைகளிலும், கவிதைகளிலும் ஏற்படுவது போன்ற கவர்ச்சி. இதில் எந்த குற்றமும் இல்லை. இது அனுமதிக்கப்பட்டதே.

  • அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) கூறினார்கள்:  இரண்டு மனிதாகள் (மதீனாவுக்குக்) கிழக்கிலிருந்து வந்து உரையாற்றினார்கள். அவ்விருவரின் (சொல்லெழில் மிக்க) சொற்பொழிவைக் கேட்டு மக்கள் வியந்தார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘சில சொற்பொழிவில் கவர்ச்சி உள்ளது’ அல்லது ‘சொற்பொழிவுகளில் சில கவர்ச்சியாகும்’ என்று கூறினார்கள்.  (புஹாரி: 5767, முஸ்லிம்)

மேலும் சிலர் சூனியம் என்பது அல்லாஹ்வின் அதிகாரத்தோடு மோதக்கூடிய அமசம் என்ற அடிப்படையில் மொத்தமாக சூனியத்தை மறுக்கும் நிலை இருக்கின்றது. இது குர்ஆன் ஸுன்னாவுக்கு முறனான ஒரு சிந்தனைப் போக்காகும். மேலும் நபிகளாருக்கு சூனியம் வைக்கப்பட்டதும் அவர்களது தகுதிக்கு பொறுத்தமில்லாதது என்றும், சில குர்ஆன் வசனங்களுக்கு முறன் படுவதாகவும் கூறி, புஹாரியில் வரும் ஹதீஸை பலவீனப்படுத்தும் ஒரு நிலையும் காணப்படுகின்றது.

ஆனால் நாம் மேலே கூறியிருப்பது போன்று விளங்கிக் கொண்டால் ஈமானுக்கு ஆபத்து ஏற்படவும் மாட்டாது. ஹதீஸ்களை மறுக்கவேண்டிய நிலை ஏற்படவும் மாட்டாது. ஒரு ஸஹீஹான ஹதீஸ் குர்ஆனுக்கு முறன் படுவது போன்று விளங்கினால் அதனை ஒன்றோடு ஒன்றை சேர்த்து விளங்க முடியுமானால் அப்படி விளங்க முயற்சிப்பதே ஸஹீஹான ஹதீஸுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தின் அடையாளமாகும். அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *