ஜனாசாவைக் குளிப்பாட்டுதல்.
குளிப்பாட்டுவது கடமை என்பதற்கு ஏராலமான சான்றுகள் இருக்கின்றன.
அதை குளிப்பாட்டும் போது மூன்று விடுத்தமோ, தேவைக்கேட்ப அதைவிட அதிகமாகவோ ஒற்றைப்படையாக குளிப்பாட்டுதல்,
சுத்தப்படுத்துவதற்காக இலந்தை இலையையோ, சவர்க்காரம் போன்ற, அழுக்கைப் போக்கும் ஏதாவது ஒன்றையோ பயன்படுத்தல்.
கடைசி விடுத்தம் ஊற்றும் நீருடன் கட்பூரத்தை கலந்துகொள்ளல்.
பெண்களின் கொண்டைகளை கலைந்து, நன்றாக கழுவிவிட்டு, மூன்று கொண்டைகளிட்டு, பின் பக்கமாக விட்டுவிடுதல்.
.
குளிப்பாட்டும் போது வலது பக்கத்தைக் கொண்டு ஆரம்பித்து, அதிலும் வுழுவுடைய உறுப்புக்களைக் கொண்டு ஆரம்பித்தல்.
- உம்மு அதீய்யா (றழி) கூறினார்கள்: நபி (ஸல்)அவர்களின் மகளை நாங்கள் குளிப்பாட்டிக்கொண்டிருந்தபோது அங்கு வந்த நபிகளார் ‘அவரை இலந்தை இலை கலந்த நீரால் மூன்று அல்லது ஐந்து அல்லது தேவைக்கேற்ப அதைவிட அதிகமான தடவைகள்,ஒற்றைப் படையாக குளிப்பாட்டுங்கள், கடைசியில் கற்பூரத்தைச் சேர்த்துக்கொள்ளுங்கள், குளிப்பாட்டி முடிந்ததும் எனக்கு அறிவியுங்கள்.’ என்று கூறினார்கள். குளிப்பாட்டி முடிந்ததும் நாங்கள் நபியவர்களுக்கு அறிவித்தோம், அப்போது அவர்கள் தமது கீழாடையைத் தந்து இதை அவரது உடலில் சுற்றுங்கள்’ எனக் கூறினார்கள்.
- ஹப்ஸா (றழி) அவர்களது அறிவிப்பில், ஒற்றை படையாக குளிப்பட்டுங்கள், மூன்று அல்லது ஐந்து அல்லது ஏழு தடவைகள் நீரை ஊற்றுங்கள், அவரது வலப்புரத் திலிருந்தும், வுழூச் செய்யவேண்டிய உருப்புக்களிலிருந்தும் ஆரம்பியுங்கள், என்று நபிகளார் கூறினார்கள். நாங்கள் அவர்களுக்கு தலை வாரி மூன்று கொண்டைகளை பின்னினோம்’ என்றும் வந்துள்ளது. (புஹாரி 1254, முஸ்லிம்)
- மற்றொரு அறிவிப்பில், நபியவர்களின் மகளின் சடலத்திற்க்கு தலையில் பெண்கள் மூன்று கொண்டைகளைப் பின்னியிருந்தார்கள், பிறகு அவற்றைப் பிரித்துக் கழுவிவிட்டுப் பிறகு மீண்டும் மூன்று கொண்டைகளைப் பின்னி, அதை முதுகுப் பின்னால் போட்டு வைத்தோம்’. என உம்மு அதீய்ய (றழி) கூறினார்கள். (புஹாரி: 1260, 1263)
ஆண்கள் ஆண்களையும், பெண்கள் பெண்களையும் குளிப்பாட்டுதல், கனவன் மனைவி ஒருவர் மற்றவரைக் குளிப்பாட்டலாம்.
- ஆயிஷா (றழி) அவர்கள் கூறினார்கள்: ‘நபியவர்கள் பகீஇல் ஒரு ஜனாசாவை அடக்கிவிட்டு வரும் போது, எனக்கு தலையில் வலி ஏற்பட்டிருந்தது, நான் தலை வலியே எனக்கூறி கொண்டிருந்தேன், அப்போது நபியவர்கள், தலை வலியே எனக்கூறிவிட்டு, ‘உனக்கு எந்த பாதிப்பும் இல்லை, எனக்கு முன் நீ மரணித்தால் உன்னை நான் குளிப்பாட்டி, கபனிட்டு, பிறகு உனக்காக தொழுவித்து, உன்னை அடக்கமும் செய்வேன்.’ என்று கூறினார்கள். (அஹ்மத்)
குளிப்பாட்டும் போது தூய்மையான எண்ணத்துடன் குளிப்பாட்டி, அதில் ஏதும் குறைகளைக் கண்டு அதை மறைத்தால் பெரும் கூலியும் இருக்கின்றது.
- நபி (ஸல்) கூறினார்கள் யார் ஒரு முஸ்லிமைக் குளிப்பாட்டி, அதிலிருக்கும் குறையை மறைக்கின்றாரோ, அவருக்கு அல்லாஹ் நாற்பது விடுத்தம் மன்னிப்பளிக்கின்றான், யார் அவருக்காக கப்ரு வெட்டி அதில் அடக்கமும் செய்கின்றாரோ அவருக்கு, மறுமை நாள்வரை ஒரு வீட்டில் வாழவைத்த கூலியை அல்லாஹ் கொடுக்கின்றான், மேலும் யார் கபனிடுகின்றாரோ, அவருக்கு மறுமை நாளில் பட்டு, மரத்திலிருந்து அல்லாஹ் சுவனத்தில் ஆடை அணிவிப்பான்.’ (அல் ஹாகிம், பைஹகீ)
குளிப்பாட்டியவர் தேவை என்றால் குளித்துக் கொள்ளலாம், அது கடமை இல்லை.
- நபி (ஸல்) கூறினார்கள்: ‘யார் ஒரு மையித்தைக் குளிப்பாட்டுகின்றாரோ அவர் குளித்துக்கொள்ளட்டும், அதை சுமந்து சென்றவர் வுழூ செய்துகொள்ளட்டும். (அபூ தாவுத், திர்மிதி)
- நபி (ஸல்) கூறினார்கள்: நீங்கள் மையித்தை குளிப்பாட்டினால் அதற்காக உங்களூக்கு குளிப்பு கடமையில்லை, ஏனெனில் உங்கள் மையித் நஜிசல்ல, நீங்கள் கையை கழுவிகொண்டாலே போதுமானது.’ (அல் ஹாகிம், பைஹகீ)
யுத்தங்களில் ஷஹீதாக்கப்பட்டவர்களை குளிப்பாட்டத் தேவையில்லை.
- ஜாபிர் (றழி) அவர்கள் கூறினார்கள்: நபியவர்கள் உஹது யுத்தத்தில் ஷஹீதானவர்களை இரண்டிரண்டு பேராக சேர்த்து, யார் அதிகம் குர்ஆனை சுமந்தவர் என்று’ கேட்பார்களாம், இன்னார் என ஒருவர் காட்டப்பட்டால், அவரை குழியில் முற்படுத்துவார்கலாம், பிறகு ‘மறுமை நாளில் இவர்களுக்கு நான் ஷாட்சியாக இருப்பேன்’ என்று கூறினார்கள், அவர்களை குளிப்பாட்டாமல், இரத்ததுடனே அடக்குமாறு ஏவினார்கள். (புஹாரி: 1288)