ஜனாசாவும் அதனோடு சார்ந்த சட்டங்களும்-5

மரணச்செய்தி கேள்விப்பட்டால் செய்யக்கூடாத காரியங்கள்:

 1. ஒப்பாரி வைத்தல்
 2. கன்னத்தில் அறைந்துகொள்ளுதல், ஆடைகளைக் கிழித்துக்கொள்ளல்.
 3. முடிகளை வழித்தல்.
 4. கவலைக்காக முடியை வளர்த்தல்.
 • நபி (ஸல்) அவர்கள் கூறினர்கள்:‘எனது உம்மத்தில் நான்கு காரியங்கள் அறியாமைக்கால காரியங்களில் உள்ளவையாகும். அவைகளை அவர்கள் விடமாட் டார்கள். (அவையாவன) வம்சா வழியைக் கூறி பெருமைப்படுதல், மனிதர்கள் (உயர்வான குடும்பப்) பாரம்பரியங்களை குறை கூறுதல், நட்சத்திரங்களைக் கொண்டு மழைப் பெய்யத் தேடுதல், (ஒப்பாரியிட்டு) ஓலமிட்டு அழுதல் (முதலியவைகளாகும்). “ஒலமிட்டு அழும் பெண் அவள் மரணத்திற்கு முன்பு தவ்பாச் செய்யவில்லையாயின் மறுமை நாளில் அவளை(க் கொண்டுவந்து) நிறுத்தப்படும். அவள்மேல் தாரினால் வார்க்கப்பட்ட சட்டையும் சொரிக் கவசமும் (அணிவிக்கப்பட்டு) இருக்கும்.” என நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபுமாலிக் அல் அஷ்அரி (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.. ’  (முஸ்லிம்: 463)
 • நபி (ஸல்) அவர்கள் கூறினர்கள்: ‘மக்களிடத்தில் குப்ரை உண்டாக்கும் இரண்டு விடயங்கள் இருக்கின்றன, வம்சத்தில் குறைகூறுவது, மய்யித்துக்காக ஒப்பாரி யிடுவது.’   (முஸ்லிம்)
 • உம்மு அதீய்யா (றழி) கூறினார்கள் நபியவர்கள் எங்களிடம் பைஅத் உறுதி மொழி எடுக்கும்போது ஒப்பாரியிடாமல் இருப்பதையும் பைஅத் செய்தார்கள். மேலும் ஐந்து பேரைத் தவிர வேறு எந்தப் பெண்ணும் அதை நிறைவேற்றவில்லை, உம்மு ஸுலைம், உம்முல் அழா, முஆத் அவர்களின் மனைவி, அபூ ஸுப்ராவின் மகள் ஆகியோராவார்கள். (புஹாரி, முஸ்லிம்)

ஒப்பாரியிடுவது சம்பந்தமாக நிறைய ஹதீஸ்களில் எச்சரிக்கை வந்துள்ளது.

 • நபி (ஸல்) அவர்கள் கூறினர்கள்: ‘ யார் கன்னத்தில் அறைந்து, ஆடைகளை கிழித்து, ஜாஹிலீயாக்கால வார்த்தைகளைக் கூறுகின்றார்களோ அவர்கள் எங்களை சார்ந்தவர்கள் அல்ல.’  (புஹாரி, முஸ்லிம்)
 • அபூ புர்தா இப்னு அபீ மூஸா அறிவித்தார். (என்தந்தை) அபூ மூஸா தம் கடுமையான மரண வேதனையால் மயக்கமடைந்துவிட்டார். அவரின் தலை அவரின் மனைவியின் மடியில் இருந்தது. (தம் மனைவியின் எந்தப் பேச்சுக்கும்) அவரால் பதில் சொல்ல முடியவில்லை. பின்பு மயக்கம் தெளிந்தபோது, ‘நிச்சயமாக நபி(ஸல்) அவர்கள் (துன்பத்தின் போது) அதிகச் சப்தமிட்டு அழும் பெண்ணைவிட்டும் மொட்டையடித்துக் கொள்ளும் பெண்ணைவிட்டும் ஆடைகளைக் கிழித்துக் கொள்ளும் பெண்ணைவிட்டும் தம்மை விலக்கினார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம்மைவிலக்கிக் கொண்டவரிடமிருந்து நானும் விலகிக்கொள்கிறேன்” என்று கூறினார். (புஹாரி: 1296, முஸ்லிம்)
 • உறுதி மொழி எடுத்த ஒரு பெண் கூறினார்கள்: ‘நபியவர்கள் எடுத்த உறுதி மொழியில் அவர்களுக்கு மாறு செய்யாமலிருப்பதும், முகத்தில் முடி புடுங்காமலிருப்பதையும், சாபத்தை வேண்டாமலிருப்பதையும், ஆடையை கிழிக்காமலிருப்பதையும், தலைவிரிகோலமாக இருக்காமலிருப்பதையும் உறுதி மொழியாக எடுத்தார்கள்.’  (அபோதாவூத், பைஹகி)

மரணச் செய்தியை அறிவிப்புச் செய்தல்.

 • ஆபூ ஹுரைரா (றழி) கூறினார்கள்: நபியவர்கள் நஜாஷி மன்னர் மரனித்த தினத்தன்று மரனச் செய்தி அரிவித்தார்கள், முஸல்லாவுக்குச் சென்று, அவர்களை ஸப்பில் நிறுத்தி,  நான்கு தக்பீர்கள் சொல்லி (ஜனாசா தொழுகை நடாத்தினார்கள்.)  (புஹாரி, முஸ்லிம்)

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *