குத்பா உரையின் சட்டங்கள்

குத்பா உரையின் சட்டங்கள்.

 1. குத்பா நிறைவேற குறிப்பிட்ட தொகையினர் இருக்கவேண்டு என்றில்லை, ஆகக் குறைந்தது மூன்று பேர் இருந்தாலே போதுமானது. ஏனெனில் நபியவர்கள் 40 பேர் இருக்க வேண்டுமென்றோ, அல்லது வேறு எண்ணிகைகளை நிபந்தனை இடவில்லை.

صحيح البخاري 4616 – عن جابر بن عبد الله رضي الله عنهما قال : أقبلت عير يوم الجمعة ونحن مع النبي صلى الله عليه و سلم فثار الناس إلا اثني عشر رجلا فأنزل الله { وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما }

ஜாபிர் (றழி) கூறினார்கள்: ‘நாங்கள் நபிகளாரோடு (குத்பாவில்) இருக்கும்போது ஜும்ஆ தினத்தில் ஒரு வியாபாரக் கூட்டம் வந்தது, அப்போது 12 பேரைத்தவிர அனைத்து தோழர்களும் (குத்பாவிலிருந்து கூட்டத்தை நோக்கி) சென்றுவிட்டனர், அப்போது அல்லாஹ்: ‘(நபியே!) ஒரு வியாபாரத்தையோ, அல்லது வேடிக்கையையோ அவர்கள் பார்த்தபோது, அதனளவில் சென்றுவிடுகின்றனர், (குத்பா நடத்தும் நிலையில்) உம்மை நின்ற நிலையில் விட்டும்விடுகின்றனர்.(62:11) என்ற வசனத்தை அல்லாஹ் இறக்கினான்.’ (புஹாரி 4616, முஸ்லிம்)

நற்பது பேர், அதற்கு அதிகமாக இருந்தாலே ஜும்ஆ செல்லுபடியாகும் என்ற கருத்தில் தாரகுத்னியில் வரும் ஹதீஸ் மிகவும் பலவீனமானது. அதனை வைத்து சட்டம் நிபந்தனை உறுவாக்க முடியாது.

سنن الدارقطني –  قرئ على أبي عيسى عبد الرحمن بن عبد الله بن هارون الأنباري وأنا أسمع حدثكم إسحاق بن خالد بن يزيد ببالس ثنا عبد العزيز بن عبد الرحمن ثنا خصيف عن عطاء بن أبي رباح عن جابر بن عبد الله قال : مضت السنة أن  في كل أربعين فما فوق ذلك جمعة

 1. அல்லாஹ்வை புகழ்ந்து, ஷஹாதவுடைய வார்த்தையையும் கூறி, அம்மா பாத் கூறி உரை நிகழ்த்தல்.

நபியவர்கள் அறிவுரைகளின்போது இப்படி செய்வார்கள் என்பதற்கான ஏராலமான சான்றுகளை புஹாரி, முஸ்லிம் போன்ற எல்லா கிதாப்களிலும் காண முடியும்.

 1. நின்ற நிலையில் குத்பா ஓதுதல். இரண்டு குத்பாவுக்கிடையில் அமர்தல்.

صحيح البخاري  878  ومسلم- عن ابن عمر رضي الله عنهما قال : كان النبي صلى الله عليه و سلم يخطب قائما ثم يقعد ثم يقوم كما تفعلون الآن

இப்னு உமர் (றழி) கூறினார்கள்: ‘நபியவர்கள் நின்றவர்களாக குத்பா செய்வார்கள், பிறகு இப்போது செய்வது போன்று அமர்ந்து விட்டு எழும்புவார்கள்.’ (புஹாரி, முஸ்லிம்)

صحيح مسلم 2033- جَابِرُ بْنُ سَمُرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- كَانَ يَخْطُبُ قَائِمًا ثُمَّ يَجْلِسُ ثُمَّ يَقُومُ فَيَخْطُبُ قَائِمًا فَمَنْ نَبَّأَكَ أَنَّهُ كَانَ يَخْطُبُ جَالِسًا فَقَدْ كَذَبَ فَقَدْ وَاللَّهِ صَلَّيْتُ مَعَهُ أَكْثَرَ مِنْ أَلْفَىْ صَلاَةٍ.

ஜாபிர் (றழி) கூறினார்கள்: ”நபியவர்கள் நின்றவர்களாக குத்பா செய்வார்கள், பிறகு அமர்ந்து விட்டு எழும்பி குத்பா செய்வார்கள். எனவே யாராவது ‘நபியவர்கள் அமர்ந்து குத்பா செய்தார்கள்’ என்று அறிவித்தால், அவன் பொய் சொல்கின்றான், அல்லாஹ்வின் மீது சத்தியமாக நான் அவர்களோடு இரண்டாயிரம் தொழுகைகளைவிட அதிகமாக தொழுதுள்ளேன்.  (முஸ்லிம்)

 • இமாம் மிம்பரில் இரு கொத்பாவுக்கிடையில் அமரும்போது முஅத்தினால் ஸலவாத் சொல்லப்படுகின்றது, இதுவும் புதுமையாகும், அதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
 1. இரண்டு குத்பாக்கள் ஓதுதல்.

صحيح البخاري886 -عن عبد الله قال :كان النبي صلى الله عليه و سلم يخطب خطبتين يقعد بينهما

இப்னு உமர் (றழி) கூறினார்கள்: ‘நபியவர்கள் இரண்டு குத்பா ஓதுவார்கள், இரண்டுக்குமிடையில் அமர்வார்கள்.’  (புஹாரி886, முஸ்லிம், வார்த்தை புஹாரியில்)

 • இன்று அதிகமான பள்ளிகளில் மூன்று கொத்பாக்கள் ஓதப்படுகின்றன, அதாவது ஹம்து ஸலவாத் கூறி ஆரம்பிப்பது ஒரு கொத்பாவாகும், ஆரம்பத்தில் ஹம்து, ஸலாத்துடன் தமிழில் நிகழ்த்திவிட்டு, மீண்டும் ஹம்து, ஸலாத்துடன் அறபியில் ஓதுகின்றனர், இது இரண்டு கொத்பாவாகும், சிறு அமர்வுக்குப் பின் மீண்டும் ஹம்து, ஸலாத்துடன் அறபியில் கொத்பா செய்யப்படுகின்றது, இது மூன்றாவதாகும், நபிகளார் இரண்டு கொத்பாக்களே நடாத்தினார்கள். எனவே, இரண்டையும் அறபியிலோ, அல்லது வேறு ஒரு மொழியிலோ, அல்லது ஒன்றை தமிழிலும் மற்றதை அறபியிலுமோ ஓதுவதன் மூலம் இரண்டு கொத்பாக்களை ஓதி நபி வழிக்கு நேர்பட முயற்சிக்கவேண்டும், அதையும் பித்அத் மூலம் வீனாக்கி விடக்கூடாது.என்பதும் கவனிக்கத்தக்கது.
 1. குர்ஆன் வசனங்கள், ஹதீஸ்களை விளங்கப் படுத்தல். கதைகள் கப்சாக்கள் தவிர்க்கப்படல்.

صحيح مسلم 2032- عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ قَالَ كَانَتْ لِلنَّبِىِّ -صلى الله عليه وسلم- خُطْبَتَانِ يَجْلِسُ بَيْنَهُمَا يَقْرَأُ الْقُرْآنَ وَيُذَكِّرُ النَّاسَ.

ஜாபிர் (றழி) கூறினார்கள்: ‘நபிகளாருக்கு இரண்டு குத்பாக்கள் இருந்தன, அவற்றுக்கிடையில் அமர்வார்கள், குர் ஆனை ஓதி, மக்களுக்கு அறிவுரை செய்வார்கள்.’  (முஸ்லிம்2032)

صحيح مسلم 2049- عَنْ أُخْتٍ لِعَمْرَةَ قَالَتْ أَخَذْتُ (ق وَالْقُرْآنِ الْمَجِيدِ) مِنْ فِى رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- يَوْمَ الْجُمُعَةِ وَهُوَ يَقْرَأُ بِهَا عَلَى الْمِنْبَرِ فِى كُلِّ جُمُعَةٍ.

உம்மு ஹிஷாம் என்ற பெண்மனி கூறினார்கள்: ‘நான் நபிகளாரின் வாயிலிருந்து கேட்டே ஸூறா காபை மனனமிட்டேன், அவர்கள் ஒவ்வொரு குத்பாவிலும் அதை மிம்பரில் ஓதி குத்பா செய்வார்கள்.எங்களது அடுப்பும் நபிகளாரின் அடுப்பும் ஒன்றாக இருந்தது.’ (முஸ்லிம்2049)

صحيح البخاري 1027-  عمر بن الخطاب رضي الله عنه قرأ يوم الجمعة على المنبر بسورة النحل ح

உமர் (றழி) அவர்கள் ஜும் ஆ தினத்தில் மிம்பரில் ஸூறா நஹ்லை ஓதினார்கள்….(புஹாரி1027)

ஜாபிர் (றழி) கூறினார்கள்; ‘நபியவர்கள் குத்பா செய்தால், முகம் சிவந்து, சத்தம் உயர்ந்து, கோவம் கடுமையாகிவிடும், எந்த அளவுக்கென்றால் எதிரிப் படையினர் தாக்குதல் தொடுக்கப்போவது குறித்து ‘எதிரிகள் காலையில் உங்கள் கீது தாக்குதல் தொடுக்கபோகின்றனர், மாலையில் உங்கள் கீது தாக்குதல் தொடுக்கபோகின்றனர்’ என்று கூறி எச்சரிக்கை விடுப்பவரைப் போன்றிருப்பார்கள்., மேலும் தன் ஆள் காட்டி விரலையும் நடு விரலையும் சேர்த்துக் காட்டி, நான் அனுப்பப் பட்டதும் மறுமையும் இவ்வளவு நெறுக்கமானது என்று கூறிவிட்டு, “அம்மா பாத்” என்று கூறி, வார்த்தைகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம், நடை முறைகளில் சிறந்தது முஹம்மதின் வழி முறை, கருமங்களில் மிகக் கெட்டது அதில் புதிதாக உண்டாக்கப்பட்டவை, எல்லா பித் அத்தும் வழிகேடு’ என்று கூறுவார்கள்….(முஸ்லிம்2042)

 1. குத்பா செய்பவர் தடி போன்ற ஏதாவது ஒரு பொருளை கையில் வைக்க வேண்டுமா? என்றால் அதற்கு எந்த ஸஹீஹான ஹதீஸ்களும் வரவில்லை.

நபிகளார் தடி அல்லது வில் போன்றவற்றில் சாய்ந்தவர்களாக குத்பா செய்வார்கள் என்று வரும் ஹதீஸ் பலவீனமானது  (அபூதாவுத்

எனவே தடி (அஸா) வைத்து உரை நிகழ்த்துவதை நிபந்தனையிட முடியாது.

ஷாபி இமாம் அவர்களின் கூற்றுப் படியும் நிபந்தனை இட முடியாது.

الأم – (ج 1 / ص 230)   قال) ويعتمد الذي يخطب على عصا أو قوس أو ما أشبههما لانه بلغنا أن النبي صلى الله عليه وسلم كان يعتمد على عصا أخبرنا الربيع قال أخبرنا الشافعي قال أخبرنا عبد المجيد عن ابن جريج قال قلت لعطاء أكان رسول الله صلى الله عليه وسلم يقوم على عصا إذا خطب؟ قال: نعم كان يعتمد عليها اعتمادا (قال الشافعي) وإن لم يعتمد على عصا أحببت أن يسكن جسده ويديه إما بأن يضع اليمنى على اليسرى وإما أن يقرهما في موضعهما ساكنتين ويقل التلفت ويقبل بوجهه قصد وجهه ولا أحب أن يلتفت يمينا ولا شمالا ليسمع الناس خطبته لانه إن كان لا يسمع أحد الشقين إذا قصد بوجهه تلقاءه فهو لا يلتفت ناحية يسمع أهلها إلاخفى كلامه على الناحية التي تخالفها مع سوء الادب من التلفت

 • ஜும்ஆ கொத்பாவுக்காக இமாம் மிம்பருக்கு ஏறமுன் முஅத்தினாக இருப்பவர் அசாகோளை கையிலேந்தி, நபிகளார்மீது ஸலவாத் கூறி, சில ஹதீஸ்களையும் கூறி (மஹ்ஷர் ஓதி) அசாவைக்கொடுக்கும் வழமை உள்ளது, அதுவும் மார்க்கத்தில் புகுத்தப்பட்ட பித்அத்தாகும், அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அது தவிர்க்கப் படவேண்டும்.
 1. ஜும்ஆ தினத்தில் இமாம் மிம்பருக்கு ஏரிய பிறகு பாங்கு சொல்வதே  நபி வழியாகும்.

صحيح البخاري 870- عن السائب بن يزيد قال :كان النداء يوم الجمعة أوله إذا جلس الإمام على المنبر على عهد النبي صلى الله عليه و سلم وأبي بكر وعمر رضي الله عنهما فلما كان عثمان رضي الله عنه وكثر الناس زاد النداء الثالث على الزوراء

ஸாஇப் பின் யஸீத் (றழி) கூறினார்கள்: ‘நபியவர்கள் காலத்திலும் அபூ பக்ர், உமர் (றழி) காலத்திலும் முதலாவது அழைப்பு (பாங்கு) இமாம் மிம்பரில் அமர்ந்தபிறகே (சொல்லப்பட்டுக் கொண்டு) இருந்தது, உஸ்மான் (றழி) காலத்தில் மக்கள் அதிகமானபோது Zசொளரா என்ற இடத்தில் மூன்றாவது அழைப்பை அவர்கள் அதிகமாக்கினார்கள்.’  (புஹாரி 870)

 • உஸ்மான் (றழி) அவர்கள் Zசொளரா எனும் சந்தையில்தான் ஒரு அழைப்பை மக்களுக்கு சென்றடைவதற்காக ஏற்படுத்தியுள்ளார்கள், இன்றைக்கு நடப்பது போன்றல்ல. மேலும் இகாமத்துடன் சேர்த்தே எண்ணப்பட்டுள்ளது, அதுதான் மூன்றாவது என்று வந்துள்ளது.
 • ஜும்ஆவுக்கு நபிகளார் காலத்தில் போல ஒரு பாங்கு சொல்வதையே ஷாபி இமாமவர்களும் விரும்பினார்கள்.

(قال الشافعي وأيهما كان فالأمر الذي على عهد رسول الله صلى الله عليه وسلم أحب إلي உம்மு என்ற கிதாப் ‘ஜும் ஆவுக்கு பாங்கு சொல்லும் நேரம்’ என்ற பாடம்)

 1. ஜும்ஆ பயானின் கடைசியில், குறிப்பிட்ட ஸஹாபாக்களின் பெயர் சொல்வதும் நபி வழியில் ஆதாரப் பூர்வமான ஹதீஸ்களில் வராத ஒருவிடயமாகும்.
 2. குத்பாவின் கடைசியில் மூமின்களுக்காக ஒரு துஆ ஓதுவது நிபந்தனையாக கறுதப்படுகின்றது, அதட்கும் அதாரப் பூர்வமான ஹதீஸ்கள் எதுவும் வரவில்லை.

நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு கொத்பாவிலும் முஃமீன்களுக்கு துஆ கேட்டதாக பஸ்ஸார் என்ற புத்தகத்தில் வரும் ஹதீஸ் மிகப் பலவீனமானதாகும்.

 1. குத்பாவை அறபியில்தான் செய்யவேண்டும் என்ற கட்டாயமில்லை, ஏனெனில் குத்பாவின் நோக்கம் அறிவுரை செய்வதாகும், எனவே குத்பாவை செவி மடுக்கும் மக்களுக்கு பயன் அளிக்கும் விதத்திலே குத்பா அமையவேண்டும். மிம்பரில் வேறு மொழி பேசினால் குத்பா பாலாகி விடும் என்பதட்கு எந்த ஆதாரமு இல்லை.

صحيح مسلم 2032- عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ قَالَ كَانَتْ لِلنَّبِىِّ -صلى الله عليه وسلم- خُطْبَتَانِ يَجْلِسُ بَيْنَهُمَا يَقْرَأُ الْقُرْآنَ وَيُذَكِّرُ النَّاسَ.

ஜாபி (றழி) கூறினார்கள் :’நபியவர்களுக்கு இரண்டு குத்பாக்கள் இருந்தன, அவற்றுக்கிடையில் அமர்வார்கள், குர்ஆனை ஓதி மக்களுக்கு அறிவுரை செய்வார்கள்.’ (முஸ்லிம்2032)

 1. மிம்பரில் கையேந்தி பிரார்த்தணை செய்வதும் நிபந்தனையாக வர முடியாது, ஏனெனில் நபியவர்கள் மலைக்காக அன்றி வேறு எந்த சந்தர்ப்பத்திலும் மிம்பரில் கையேந்தி பிரார்த்தித்தது இல்லை.

صحيح مسلم 2053- عَنْ عُمَارَةَ بْنِ رُؤَيْبَةَ قَالَ رَأَى بِشْرَ بْنَ مَرْوَانَ عَلَى الْمِنْبَرِ رَافِعًا يَدَيْهِ فَقَالَ قَبَّحَ اللَّهُ هَاتَيْنِ الْيَدَيْنِ لَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- مَا يَزِيدُ عَلَى أَنْ يَقُولَ بِيَدِهِ هَكَذَا. وَأَشَارَ بِإِصْبَعِهِ الْمُسَبِّحَةِ.

உமாரா (றழி) அவர்கள்: பிஷ்ர் பின் மர்வான் என்பவர் இருகைகளையும் ஏந்தியவராக மிம்பரில் இருப்பதைக் கண்ட போது, ‘அல்லாஹ் இந்த இரு கைகளையும் இலிவு படுத்துவானாக, நிச்சியமாக நான் நபியவர்களை கண்டிருக்கின்றேன்’ அவர்கள் தன் இரு ஆள் காட்டி விரலால் சாடை செய்வதைவிட அதிகப் படுத்தவில்லை, என்று கூறினார்கள்.  (முஸ்லிம் 2053)

 • ஒரு கொத்பாவில் நபிகளார் மீது ஸலவாத் சொல்வது நிபந்தனையாக நோக்கப்படுகின்றது, அதிலும் நபிகளாரிடமிருந்து எந்த முன்மாதிரியும் வரவில்லை, எனவே அதை நிபந்தனையிட முடியாது.

நபிகளாரின் வழிகாட்டல் இல்லாமல் சட்டம் உருவாக்கப்பட்டாலே, நிபந்தனியிடப்பட்டாலோ அது புதுமையாக பித்அத்தாக கணிக்கப்படும், எனவே ஜும்ஆவோடு சார்ந்த நபிவழியில் இல்லாத அனைத்தும் பித்அத்தாகும், ஜும்ஆ தட்டப்படுவதற்கும் காரணமாக இருக்கும். அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்.

عن عَائِشَةُ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « مَنْ عَمِلَ عَمَلاً لَيْسَ عَلَيْهِ أَمْرُنَا فَهُوَ رَدٌّ ». مسلم 4590

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எங்களது ஏவல் இல்லாத ஒரு அமலை யாராவது செய்தால் அது தட்டப்படும். (முஸ்லிம்:4590)

عن عائشة رضي الله عنها قالت : قال رسول الله صلى الله عليه و سلم ( من أحدث في أمرنا هذا ما ليس فيه فهو رد ) البخاري 2550ومسلم

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இந்த மார்க்கத்தில் இல்லாத ஒன்றை யாராவது புதிதாக உருவாக்கினால் அது தட்டப்படும். (புஹாரி:2550 முஸ்லிம்)

Related Posts

2 thoughts on “குத்பா உரையின் சட்டங்கள்

 1. நீங்கள் குத்பா உரையின் சட்டங்கள் தலைப்பில் இட்டிருக்கும் இக்கட்டுரை இஸ்லாத்திற்கு முற்றிலும் முறனான முறையில் இட்டிருக்கிறீர்கள் .அல்லாஹ்வை முதலில் பயந்து கொள்ளுங்கள் .மனோ இச்சைக்கு வழிப்பட்டு நடப்பவனின் தலைவன் செய்தானாகதான் இருப்பான் உங்களின் தலைவனும் அவனாகத்தான் இருப்பான் என்று எனக்கு என்னத் தோண்றுகிறது . நீங்கள் ஸஹாபாக்கள் செய்த செயற்பாடுகளை லயீப் பலயீனம் என்று என்த ஒரு ஆதாரமும் காட்டாமல் உங்கள் விருப்பப்படி சொல்லிருப்பது மோசமான செயலாகும். பலயீனம் என்றால் எது எந்த வகையில் பலயீனம் என்பதை ஆதாரத்துடன் முன்வையுங்கள்.பத்அத்தின் வகைகளை முதலில் அறிந்து கொள்ளுங்கள். குர்ஆனுக்கும் ஹதீதுக்கும் முரனில்லாமல் எந்த ஒரு நல்லவிடையத்தை ஏற்படுத்தி அதை செய்து வந்தாலும் அதற்கு அல்லாஹ்விடத்தில் கூலி உண்டு என்று நபியவர்கள் கூறியுள்ளார்கள் அந்தக் கூற்றை மருத்து நீங்கள் காபிராகிவிட்டீர்கள் என்பதை அறிந்து இனிமேலும் இப்படியொரு தவரு செய்வதை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள் அல்லாஹ் றஹ்மத் செய்வான்.

  1. சகோதரரே! கோபப்படாமல் நிதானமாக, நான் விட்ட தவறை சுட்டிக்காட்டி விமர்சனமாகவோ, கேள்வியாகவோ பதியுங்கள்!
   அப்படியிருந்தால் தான் திருத்திக் கொள்ளலாம், அல்லது விளக்கலாம்!
   அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்யட்டும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *