குடும்ப உறவுகள் செய்யவேண்டியது:
- மரண செய்தி கேள்விப்பட்ட உறவினர்கள் பொருமையாக இருப்பது முதற் கடமையாகும்.
- நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!. (பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்” என்று கூறுவார்கள். இத்தகையோர் மீது தான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், நற்கிருபையும் உண்டாகின்றன, இன்னும் இவர்கள் தாம் நேர் வழியை அடைந்தவர்கள். (அல்குர் ஆன்: 2:155 ,157)
- கப்ரிடத்திலிருந்து அழுதுகொண்டிருக்கும் ஒரு பெண்ணுக்கருகாமையால் நபியவர்கள் நடந்து சென்றபோது ‘அல்லாஹ்வைப் பயந்து, பொருமையாக இரு’ என்று கூறினார்கள். அவர் நபியென்று அறியாத அந்தப் பெண் ‘ எனக்கு ஏற்பட்ட சோதனை உமக்கு ஏற்படவில்லை, தூரப் போய்விடும், என்று கூறினார், பின்னர் அவர் நபிகளார் என்று அந்தப் பெண்ணிடம் கூறப்பட்டபோது, அவள் நபிகளாரின் வீட்டுக்கு வந்து முறைப்பாடு செய்த போது, நபியவர்கள் : ‘பொருமை என்பது முதல் கட்டத்தில் வரவேண்டியது.’ என்று கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்)
- பிள்ளைகளை இழந்து பொருமைக் காப்பது மிகவும் சிறப்புக்குறியதே.
- நபியவர்கள்: ‘எந்தப் பெண்ணாவது மூன்று (வயதுக்கு வராத) பிள்ளைகை இழந்து, (அதற்கு பொருமையாகவும் இருந்தால்) அந்தப் பிள்ளைகள் நரகத்துக்குத் தடடையாக இருப்பார்கள்.’ என்று கூறியபோது, ஒரு பெண்மனி, ‘இரண்டிருந்தாலுமா?’ என்று கேற்க, ‘இரண்டிருந்தாலும் தான்.’ என்று கூரினார்கள். (புஹாரி, முஸ்லிம், நசாஇ)
- மரணச்செய்தி கேள்விப்படுபவர்கள் ‘இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன், அல்லாஹும்மஃஜுர்னீ fஈ முஸீபதீ வஅஹ்லிfலீ கைரன் மின்ஹா.’ என்று கூற வேண்டும்.
- நபி (ஸல்) அவர்கள் கூறினர்கள்: ‘ஒரு முஸ்லிமுக்கு ஒரு சோதனை ஏற்படும் போது, அல்லாஹ் ஏவிய (إنا لله وإنا إليه راجعون) என்பதையும், (اللهم اجرني في مصيبتي وأخلف لي خيرا منها) (இரைவா எனது சோதனையில் கூலியைத் தந்து, அதைவிட சிறந்ததை எனக்கு தருவாயாக) என்பதையும் கூறினால், அதைவிட சிறந்ததை அல்லாஹ் ஏற்படுத்திக் கொடுப்பான். (முஸ்லிம், அஹ்மத்)
- மூன்று நாற்களுக்கு மேல் மையித்துக்காக கவலைப்படுவது கூடாது. ஆனால் ஒரு பெண்மனிக்கு தன் கனவனுக்காக நான்கு மாதம் பத்து நாட்கள் கவலைப் படுவது கடமையாகும்.
- நபி (ஸல்) அவர்கள் கூறினர்கள்: ‘அல்லாஹ்வையும் மருமை நாளையும் நம்பிய எந்தப் பெண்ணும் ஒரு மையித்துக்காக மூன்று நாற்களுக்கு மேல் கவலை தெறிவிப்பது ஆகுமாகமாட்டாது, ஆனால் கனவனுக்காக ஒரு பெண் நான்கு மாதம் பத்து நாட்கள் கவலைப் படுவதைத்தவிர.’ (புஹாரி)
- முஹம்மத் இப்னு ஸிரீன் அறிவித்தார். மகன் இறந்த மூன்றாம் நாள் உம்மு அதிய்யா(ரலி) மஞ்சள் நிறவாசனைப் பொருளைப் பூசினார். மேலும், ‘கணவனைத் தவிர வேறு யாருக்காகவும் மூன்று நாள்களுக்கு மேல் துக்கம் கடைப்பிடிக்கக் கூடாது என்று நாங்கள் தடுக்கப்பட்டிருந்தோம்’ என்றும் கூறினார்கள். (புஹாரி: 1279)
- குறிப்பு: ஒரு மனிதன் மையித்துக்காக கவலை தெறிவிக்காமல் இருந்தாலும் குற்றமில்லை. உம்மு ஸுலைம் (றழி) அவர்கள் தம் பிள்ளையின் மரனத் திற்காக பொறுமையாக இருந்து, தன் கனவரோடு நடந்து கொண்டவிதமும், அதற்காக நபியவர்கள் பிறார்த்தனை செய்ததும் அதற்கு ஒரு ஆதாரமாகும், (முஸ்லிம்)