நோயாளி மரணித்தபின் பக்கத்தில் உள்ளவர்கள் செய்யவேண்டியவை,
- மரணித்த பின் கண்ணைகளை மூடி விடுவதும், அவருக்காக நபிகளார் ஓதிய துஆவை ஓதுவதும் முக்கியமாகும்.
- அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் அபூஸலமா (மரணத்தருவாயிலிருந்த போது)விடம் நுழைந்(அருகில் வந்)தார்கள். அவரது பார்வை மேல் நோக்கி விட்டது. ஆகவே அதை ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் மூடினார்கள். அதன்பிறகு “நிச்சயமாக உயிர் கைப்பற்றப்பட்டு விட்டால் பார்வை அதை தொடர்கிறது” எனக்கூறினார்கள். (உடனே) அவர் குடும்பத்தவர்களிலுள்ள மக்கள் பெரும் சப்தமிட்டனர். அப்போது (உங்களுக்காக) நலவானவற்றைக் கொண்டே தவிர துஆ செய்யாதீர்கள், ஏனெனில் அமரர்கள் உங்களது கூற்றுக்கு (அல்லாஹ்விடம் ஏற்றுக் கொள்ளுமாறு) ஆமீன் கூறுகிறார்கள் எனக்கூறினார்கள். اللهم اغفر لابي سلمة، وارفع درجته في المهديين، واخلفه في عقبه في الغابرين، واغفر لنا وله يا رب العالمين، وافسح له في قبره، ونور له (அல்லாஹும்மGfபிர் லிஅபீ ஸலமா, வர்fபஹ் தரஜதஹூ fபில் மஹ்தியீன், வ அக்லிfப்ஹு fபீ அகிபிஹீ fபில் Gகாபிரீன், வGக்fபிர் லன வலஹூ யா ரப்பல் ஆலமீன், வfப்ஸஹ் லஹூ fபீ கப்ரிஹீ, வனவ்விர் லஹூ fபீஹி) அதன்பிறகு “யா அல்லாஹ்! அபூஸலாமாவிற்கு பாவமன்னிப்புச் செய்வாயாக நேர்வழி பெற்றவர்களில் அவரது தரத்தை உயர்த்துவாயாக. மீதமிருப்பவர்களில் அவருக்குப்பிறகு அவரை (இழந்தற்குரிய) பகரத்தை நல்குவாயாக அகிலங்களின் இரட்சகனே! எங்களுக்கும் அவருக்கும் பாவமன்னிப்புச் செய்வாயாக அவரது கப்ரில் அவருக்கு விஸ்தீரனத்தை நல்கி அதில் ஒளியை ஆக்குவாயாக” எனக்கூறினார்கள்.
அறிவிப்பவர் : உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா (முஸ்லிம் : 456)
- முகத்தையும் தலையையும் மூடிவிட முடியும், ஆனால் மரணித்தவர் இஹ்ராம் கட்டிய நிலையில் இருந்தால் முகம் தலையை மூடக்கூடாது.
- ஹஜ்ஜின்போது அரபாவில் ஒட்டகத்தில் இருந்த ஒருவர் விழுந்து, அவரை அது மிரித்துவிட்டது, (அவர் மரணித்து விட்டார்) நபியவர்கள் கூரினார்கள்: ‘அவரை நீராலும், இலந்தை இலையைக் கொண்டும் குளிப்பாட்டி, அவரது இரு ஆடைகளிலும் அவரை கபனிடுங்கள், அவருக்கு நறுமணம் பூசவோ, தலை, முகத்தை மூடவோ வேண்டாம், ஏனெனில் அவர் தல்பியா கூறிய நிலையிலேயே எழுப்பப்படுவார்.’ என்று கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்)
- மரணித்தவரை தயார் செய்து, அவரை முடியுமான அளவு அவசரமாக அடக்கம் செய்வதற்காக வீட்டை விட்டு வெளியேற்றல்.
- நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘ஜனாசாவை அவசரப் படுத்துங்கள்.’ (புஹாரி)
- குறிப்பு: தேவை ஏற்பட்டால் ஜனாசாவை வீட்டில் தாமதப் படுத்தவும் முடியும். அப்படி செய்யக் கூடாது என இரண்டு ஹதீஸ்கள் வந்துள்ளன இரண்டும் மிகவும் பலவீனமானவை. அதே நேரம் உம்மு ஸுலைம் அவர்களின் மகன் மரணித்தபோது முழு இரவும் அது வீட்டில் வைக்கப்படுகின்றது, அதை நபிகளார் கண்டிக்கவுமில்லை, தடுக்கவுமில்லை.
- அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். அபுதல்ஹா(ரலி)வின் மகன் நோயுற்றிருந்தார். ஒரு நாள் அபுதல்ஹா(ரலி) வெளியே சென்றிருந்தபோது குழந்தை இறந்துவிட்டது. இதைக் கண்ட அபூ தல்ஹா(ரலி)வின் மனைவி உடனே கொஞ்சம் உணவைத் தயார் செய்தார். பிறகு மய்யித்தை வீட்டின் ஒரு மூலையில் வைத்தார். வெளியே சென்றிருந்த அபூ தல்ஹா(ரலி) வீடு திரும்பிய உடன் மகன் எவ்வாறுள்ளான்? எனக் கேட்டார் அதற்கு அவரின் மனைவி ‘அமைதியாகிவிட்டான்; நிம்மதி (ஓய்வு) பெற்று விட்டிருப்பான் என்பதே என்னுடைய எதிர்பார்ப்பு” என பதிலளித்தார். அபூ தல்ஹா(ரலி) தம் மனைவி கூறியது உண்மைதான் என்றெண்ணி (நிம்மதியுடன்) தம் மனைவியோடு இரவைக் கழித்தார். பொழுது விடிந்து குளித்துவிட்டுத் (தொழுகைக்காக) வெளியே செல்ல நாடியபோது மகன் இறந்துவிட்டதை மனைவி கூறினார். அபூ தல்ஹா நபி(ஸல்) அவர்களோடு தொழுதுவிட்டுத் தம் வீட்டில் நடந்த சம்பவத்தை அவர்களிடம் கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘இந்த இரவு நடந்தவற்றில் அல்லாஹ் உங்கள் இருவருக்கும் அபிவிருத்தி செய்யக்கூடும்” என்றார்கள். இருவருக்கும் ஒன்பது குழந்தைகள் இருப்பதை பார்த்தேன். அவர்கள் அனைவரும் குர்ஆனை ஓதுபவர்களாக இருந்தனர் என மதீனாவைச் சேர்ந்த அன்சாரிகளில் ஒருவர் கூறினார். (புஹாரி : 1301.)
- ‘உங்களில் ஒருவர் மரணித்துவிட்டால் அவரை (வீட்டில்) தடுத்து வைக்காதீர்கள், அவரை கப்ருக்கு விரைவாக எடுத்துச் செல்லுங்கள், அவரது தலை மாட்டில் பகரா சூராவின் ஆரம்பத்தையும், கால் மாட்டில் அதன் கடைசிப் பகுதியையும் ஒதுங்கள்.’ (தபரானி, மிகவும் பலவீனமானது)
- தல்ஹதுப்னுல் பரா என்ற தோழர் மரணித்த போது, நபிகளார் ‘அவரை அடக்குவதை அவசரப்படுத்துங்கள், ஏனெனில் ஒரு முஸ்லிமின் சடலத்தை குடும்பத்தவர்கள் மத்தியில் வைத்திருப்பது ஆகுமானதல்ல.’ என்று கூறினார்கள். ((அபூ தாவுத், பைஹகி, இதுவும் பலவீனமானது)
- மரணிக்கும் அதே ஊரிலே அடக்கம் செய்யவேண்டு, அவசியத் தேவைக்கே அன்றி வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்லவும் கூடாது.
- ஜாபிர் (றழி) கூறினார்கள்: உஹது யுத்த முடிவின் போது, அதில் உயிர் நீத்தவர்களை பகீஇல் அடக்குவதற்காக தூக்கிச் செல்லப்பட்டார்கள், அப்போது நபிகளாரின் ஒரு அளைப்பாளர், ‘மரணித்தவர்களை அந்த இடங்களிலே அடக்குமாறு அல்லாஹ்வின் தூதர் ஏவுகின்றார்கள், என்று கூறினார், நானோ எனது தாயையும், மாமாவையும் பகீஇல் அடக்குவதற்காக ஒட்டகத்தின் இரு பக்கங்களிலும் கட்டிவிட்டேன்,எல்லோரும் உஹதிலேயே அடக்க, நானும் அவர்களை அவர்களோடே அடக்கினேன். (அபூ தாவுத், திர்மிதி, நஸாஇ..)
- ஜனசாவை பார்ப்பதும், முத்தமிடுவதும் ஆகுமானதே. அதற்காக மூன்று நாளைக்கு கண்ணீர் வடிக்கவும் முடியும்.
- ஆயிஷா(ரலி) கூறினார்கள்” நபி(ஸல்)அவர்களின் மரணச் செய்தியைக் கேள்விப்பட்ட) அபூ பக்ர்(ரலி) ஸுன்ஹ் என்னும் இடத்திலுள்ள தம் வீட்டிலிருந்து குதிரையில் மஸ்ஜிது(ன்னபவீ)க்கு வந்திறங்கி, யாரிடமும் பேசாமல் நேரடியாக என் அறைக்குள் நுழைந்தார். அங்கு நபி(ஸல்) அவர்களை அடையாளமிடப்பட்ட போர்வையால் போர்த்தப்பட்ட நிலையில் கண்டார். உடனே, அபூ பக்ர் (ரலி) நபி(ஸல்) அவர்களின் முகத்திலிருந்த துணியை அகற்றிவிட்டு, அவர்களின் மேல் விழுந்து முத்தமிட்டு விட்டு, அழுதார். பின்பு, ‘இறைத்தூதர் அவர்களே! என்னுடைய தந்தையும் தாயும் தங்களுக்கு அர்ப்பணம். அல்லாஹ் தங்களுக்கு இரண்டு மரணங்களை ஏற்படுத்தவில்லை. உங்களின் மீது விதிக்கப்பட்ட அந்த மரணத்தை தாங்கள் அடைந்து விட்டீர்கள்’ என்று கூறினார். . (புஹாரி : 1241.)
- .ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். தந்தை கொல்லப்பட்டுக் கிடந்தபோது நான் அவரின் முகத்தின மீதிருந்த துணியை அகற்றிவிட்டு அழுதேன். அப்போது (அங்கிருந்தவர்கள்) என்னைத் தடுத்தார்கள். ஆனால், நபி(ஸல்) அவர்கள் என்னைத் தடுக்கவில்லை. பிறகு என்னுடைய மாமி ஃபாத்திமா(ரலி)வும் அழ ஆரம்பித்துவிட்டார். அப்போது, ‘நீங்கள் அழுதாலும் அழாவிட்டாலும் நீங்கள் அவரைத் தூக்கும் வரை வானவர்கள் அவருக்குத் தங்களின் இறக்கைகளால் தொடர்ந்து நிழல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி : 1244 முஸ்லிம். அஹ்மத்)
- அனஸ் (ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் (அவர்களின் மகன் இப்ராஹீம் வளர்ந்து வந்த) அபூ ஸைஃப் என்ற கொல்லரின் வீட்டிற்குச் சென்றோம். அவர் இப்ராஹீமின் பால்குடித் தாயாருடைய கணவராவார். நபி(ஸல்) அவர்கள் இப்ராஹீமைத் தூக்கி முகர்ந்து முத்தமிட்டார்கள். மற்றொரு முறை நாங்கள் வீட்டினுள் நுழைந்தோம். அப்போது இப்ராஹீமின் உயிர் பிரிந்து கொண்டிருந்தது. நபி(ஸல்) கருணையாகும்” என்று கூறிவிட்டு மேலும் தொடர்ந்து அழுதார்கள். பிறகு, ‘கண்கள் நீரைச் சொரிகின்றன அவர்களின் கண்கள் நீரைப் பொழியலாயின. இதைக்கண்ட அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) ‘இறைத்தூதர் அவர்களே! தாங்களா (அழுகிறீர்கள்)?’ எனக் கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘அவ்ஃபின் மகனே! நிச்சயமாக இது உள்ளம் வாடிக் கொண்டிருக்கிறது; எனினும், இறைவன் விரும்பாத எந்த வார்த்தையையும் நாங்கள் கூற மாட்டோம். இப்ராஹீமே! நிச்சயமாக நாங்கள் உன்னுடைய பிரிவால் அதிகக்கவலைப்படுகிறோம்” என்றார்கள். . (புஹாரி : 1303.)
- உஸாமா இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார். மகன் மரணத் தருவாயில் இருப்பதால் உடனே வரும்படி நபி(ஸல்) அவர்களின் மகள் (ஜைனப்(ரலி) நபியவர்களுக்குச் செய்தியனுப்பினார். நபி(ஸல்) அவர்கள், தம் மகளுக்கு ஸலாம் கூறி அனுப்பியதோடு, ‘எடுத்ததும் கொடுத்ததும் அல்லாஹ்வுக்குரியதே! ஒவ்வொன்று க்கும் அவனிடம் ஒரு குறிப்பிட்ட தவணையுண்டு. எனவே பொறுமையைக் கைக்கொண்டு நன்மையை எதிர்பாரும்!” என்றும் கூறி அனுப்பினார்கள். அப்போது அவர்களின் மகள் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு, கண்டிப்பாக வரவேண்டும் எனக் கூறியனுப்பினார். உடனே நபி(ஸல்) அவர்கள் எழுந்தார்கள். அவர்களுடன் ஸஅத் இப்னு உபாதா, முஆத் இப்னு ஜபல், உபை இப்னு கஃபு, ஸைத் இப்னு ஸாபித்(ரலி) ஆகியோரும் மற்றும் பலரும் எழுந்தனர். சென்ற) நபி(ஸல்) அவர்களிடம், சுவாசிக்க முடியாமல் மூச்சுத்திணறிக் கொண்டிருக்கும் குழந்தையைக் காட்டினார்கள்.. இற்றுப்போன பழைய தோற் துருத்தி போல் குழந்தையின் மார்பு ஏறி இறங்கியது. நபி(ஸல்) அவர்களின் கண்கள் நீர் சொரிந்தன. ‘இறைத்தூதர் அவர்களே! என்ன இது? (அழுகிறீர்கள்) என ஸஃத்(ரலி) கேட்டதற்கு நபி(ஸல்), ‘இது அல்லாஹ் தன் அடியார்களின் உள்ளங்களில் ஏற்படுத்திய இரக்க உணர்வாகும். நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களில் இரக்கமுடையவர்க்கே இரக்கம் காட்டுகிறான்” என்றார்கள். . (புஹாரி : 1284)
- அப்துல்லாஹ் பின் ஜஃபர் (றழி)கூறினார்கள்: நபியவர்கள் ஜஃபர் அவர்களின் குடும்பத்தினரிடம் மூன்று நாட்கள் வரவில்லை, பிறகு அவர்களிடம் வந்த நபியவர்கள் ‘இன்றைய தினத்துக்குப் பிறகு என் சகோதரருக்காக நீங்கள் அழவேண்டாம்.’ என்று கூறினார்கள். (அபூ தாவுத், நஸாஇ)