அபூலஹபுக்கு நரகில் பானம் புகட்டப்படுகிறதா?

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

அபூலஹபும், நரகில் பானம் புகட்டப்படுவதும்:

PDF வடிவில் பார்வையிட இங்கே தட்டவும்!

இதில் ஒரு சில அறிஞர்கள் இந்த செய்தியை ஆதாரம் காட்டி நரகில் காபிர்களுக்கு தண்டனை குறைக்கப்படலாம் என்று பேசியுள்ளனர், அதற்கு இப்னு ஹஜர் ரஹ் அவர்கள் இந்த செய்தி பலவீனம் என்று எடுத்துக்காட்டி மறுப்பளித்துள்ளார்கள். அதேநேரம் அபூதாலிப் அவர்களுக்கு குறைந்த தண்டனை வழங்கப்படும் என்று வரும் நபிமொழியை ஆதாரம் காட்டி அதனை சரிக்கண்டு பேசியுள்ளார்கள்,

உம்மு ஹபீபா பின்த் அபீ ஸுப்யான்(ரலி) அவர்கள் அறிவித்ததாக, ஸைனப் பின்து அபீ ஸலமா அவர்கள் கூற, அவர்கள் தனக்கு அறிவித்ததாக உர்வதுப்னு ஸுபைர் அறிவிக்க, அவர்   தனக்கு அறிவித்ததாக ஸுஹ்ரீ இமாம் அவர்களைத் தொட்டு ஷுஐப் அவர்கள் அறிவிக்க, அவர் தனக்கு அறிவித்ததாக அல்ஹகம் பின் நாபிஃ அவர்கள் கூற, அவர்  தனக்கு அறிவித்ததாக புகாரி இமாம் பதிவு செய்தார்கள்:

இந்த செய்தியைப் பொறுத்தவரை இது புகாரியில் வந்திருந்தாலும், புகாரி இமாமவர்கள் அறிவிப்பாளர் தொடர்கொண்டு அறிவித்த செய்தி மட்டுமே நேரடியாக ஸஹீஹ் என்று நோக்கப்படும், இது ஹதீஸ்கலை பற்றிய சாதாரண அறிவுள்ளவர்களுக்கும் தெரியும். அந்த அடிப்படையில், பால்குடி உறவு சகோதரரின் பிள்ளையை திருமணம் முடிக்கக் கூடாது என்ற அந்த விடயமே அறிவிப்பாளர் தொடர் சேர்ந்து வந்திருக்கும் செய்தியாகும்.

முதலில் இது நபியவர்கள் கூறிய செய்தியோ, நபித்தோழர்கள் கூறிய செய்தியோ அல்ல, மாறாக அபூலஹபின் குடும்பத்தில் ஒருவர் என்ற அறியப்படாத மஜ்ஹூலான ஒருவர், அதுவும் கனவில் கண்டதாக கூறப்பட்ட செய்தி, என்ற அடிப்படையில் இது அடிப்படையற்ற செய்தியாகும். ஏனெனில் நல்லவர்களின் கனவுக்கே நபியவர்கள் நன்மாராயம் என்கிறார்கள். இங்கு கனவு கண்டவர் யார் என்று தெரியாத நபராவர். எனவே அதனை நம்பமுடியாது. மேலும் அந்த நபர் அப்பாஸ் ரலி என்ற ஒரு கருத்து இருந்தாலும் அதுவும் ஆதாரப்பூர்வமாக பதியப்படவில்லை.

அடுத்து, இந்த செய்தி பல அறிவிப்பாளர்கள் விடப்பட்ட தொடர்பு அறுந்துபோன முன்கதிஆன ஒரு செய்தியாகும்.

இமாம் இப்னு ஹஜர் ரஹ் அவர்கள் கூறும்போது; ‘இது முர்ஸலான (தாபிஈயின் கூற்று) ஒரு செய்தியாகும், அதனை அறிவித்தவர் உர்வா அவர்களே, அவர் அவருக்கு சொன்னவரை சொல்லவில்லை. (முர்ஸல் முன்கதிஃ வகையை சாரும்) மேலும் அதனை சரியான அறிவிப்பாளர் தொர் என்று வைத்துக்கொண்டாலும், அதில் கனவில் கண்டதாகவே வந்துள்ளது, அதில் எந்த ஆதாரமும் எடுக்கமுடியாது. கனவில் கண்டவர் அந்த நேரத்தில் இஸ்லாத்தை ஏற்காதவராக இருக்கலாம். எனவே அதனை ஆதாரம் கொள்ளமுடியாது.” என்று கூறினார்கள்.  (பத்ஹுல் பாரி)

அடுத்து இது அறிவிப்பாளர் தொடரில் பலவீனம் இருப்பதோடு அல்குர்ஆனின் வெளிப்படையான கூற்றுக்கு மாற்றமாக இருக்கின்றது. அதாவது; அபூலஹப் நாசமடைந்து விட்டான் என்று உறுதியாக குர்ஆன் கூறிய பிறகு இந்த பலவீனமான செய்தி, அபூலஹபுக்கு கொஞ்சம் நிம்மதி கிடைத்ததாக கூறுகின்றது. மேலும் குறிப்பிட்டு இரண்டு கைகளும் சபிக்கப்பட்டிருக்க, அதன் விரல்களுக்கிடையால் பானம் புகட்டப்படுகிறது என்றால் அது முரண்பாட்டை இன்னும் வலுப்படுத்துகின்றது.

அடுத்து இந்த விடயத்தை ஏற்க முடியாது என்பதற்கு அறிவுப்பூர்வமான ஒரு கருத்தாக “அபூலஹப் ஸுவைபா அவர்களை உரிமை விட்டது தன் சகோதரனுக்கு ஆண் குழந்தை பிறந்த செய்தியை சொன்னதற்காகவே, ஏனெனில் பெண்பிள்ளை பிறப்பதை அந்த சமூகம் குறையாக கண்டது, இரண்டாவது ஆண் பிள்ளை பிறந்ததற்காக சந்தோசப்பட்ட அபூலஹப் அவர் நபி என்று கூறும்போது எதிர்த்தான் என்றால், ஆண் பிள்ளை சந்தோசத்தை எடுப்பதா? அல்லது நபித்துவ புறக்கணிப்பை முற்படுத்துவதா?

அடுத்து இந்த நிகழ்வை முன்வைத்து பிறந்ததினம் ‘மீலாதுன் நபி’ கொண்டாடுதல் என்பது நூற்றுக்கு ஆயிரம் வீதம் பிழையானதாகும். ஏன்? இஸ்லாத்தில் நபிகளாரையே பின்பற்றவேண்டும், இது போன்ற காபிர்களையல்ல.

அடுத்து பிறப்பிலிருந்து நாற்பது வருடங்கள் ஒரு மனிதராக அந்த சமூகத்தில் வாழ்ந்த நபியவர்கள், பிறகு பதின்மூன்று வருடங்கள் மக்காவில், ஆட்சி அதிகாரத்துடன் மதீனாவில் பத்து வருடங்கள் வாழ்ந்தும், அவர்கள் தனக்காக கொண்டாடாத போது நாம் எப்படி கொண்டாடலாம்?.

எனவே நபிகளாரின், நபித்தோழர்களின் கலாசாரத்தில் இல்லாத பிறந்ததின கொண்டாட்டத்தை ஒரு இறைமறுப்பாளனின், அதிலும் குறித்து சபிக்கப்பட்டவனின் வழிமுறையிலிருந்து, அதிலும் அடிப்படையற்ற மிக பலவீனமான செய்திலிருந்து பின்பற்ற நினைப்பது ஒரு முஸ்லிமுக்கு நல்லதல்ல. (அல்லாஹு அஃலம்)

وَآخِرُ دَعْوَانا أَنِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *