ஸூரதுல் காபிரூன் விளக்கவுரை!

سُورَة الْكَافِرُونَ 

ஸூரதுல் காபிரூன்

PDF வடிவில் பார்வையிடுவதற்கு இங்கே CILICK செய்யவும்!

பெயர் : ஸூரதுல் காபிரூன்(காபிர்கள்)

இறங்கிய காலப்பகுதி : மக்கீ

வசனங்கள்: 6

சிறப்பு :

நவ்பலுல்  அஷ்ஜஈ ரலி அவர்கள் கூறினார்கள்: நான் நபி ஸல் அவர்களிடம் சென்று, நான் நித்திரைகொள்ள முன்னர் சொல்வதற்கு ஏதாவது சொல்லித்தாருங்கள்’ என்றேன், அதற்கு நபியவர்கள், ‘நீ தூங்க முன் குல்யாஅய்யுஹல் காபிரூனை கடைசியாக ஓதிவிட்டு தூங்கு, அது இணைவைப்பிலிருந்து பாதுகாக்கக் கூடியது.’ என்று கூறினார்கள்.  (அஹ்மத்: 24009/49)

குர்துபீ இமாமவர்கள் கூறும்போது; ‘அலிப் லாம் சேர்ந்த்திருப்பது காபிர்கள் என்ற இனைத்தை குறிக்கும் என்றிருந்தாலும், அல்லாஹ்வின் முடிவின்படி யாரெல்லாம் இறைமறுப்பிலே மரணிப்பார்கள் என்று முடிவாகி இருக்கிறதோ அவர்களே நாடப்படுவார்கள், எனவே இது பொதுவாக அழைக்கப்பட்டும் சொல்லைக்கொண்டு குறிப்பாக நாடப்படும் இடமாகும், ஏனெனில் நபியவர்களால் அழைக்கப்பட்ட பலபேர் பிறகு முஸ்லிமாகி அல்லாஹ்வை வணங்கினார்கள். அவர்களில் இறைநிராகரிப்பில் மரணித்தவர்களும் இருக்கின்றனர், அவர்களே இதன் மூலம் நாடப்படுபவர்கள்.’ என்று கூறினார்கள். இதுபோன்று மாவர்தீ அவர்களும் கூறினார்கள்.’  (குர்துபீ)

நபி ஸல் அவர்கள் மக்கா வாசிகளை அவர்களது இடத்திலே இருந்துகொண்டு ‘காபிர்களே இறைமறுப்பாளர்களே’ என்று அழைக்கிறார்கள் என்றால், இந்த அழைப்பு முறை அவர்களை கோபமூட்டும் என்பதும் நபிகளாருக்கு தெரியும், ஆனாலும் அவர்களால் எந்த தீங்கும் செய்யமுடியாத அளவு நபியவர்கள் பாதுகாக்கப்பட்டவர்கள் என்பதும் உண்மையானதே. (இந்த ஆழமான அருத்தம் இருப்பதாக குர்துபீ இமாமவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள்.) (குர்துபீ)

ரூஹுல் பயான் என்ற புத்தகத்தின் இமாம் அபுல் பிதா (1127 மர) அவர்கள் கூறும் போது: ‘இப்படி நபிகளார் அவர்களது இடத்திலிருந்த நிலையில் அழைத்து கூறியிருப்பது, அவர்களால் நபிகளாருக்கு எந்த தீங்கும் செய்யமுடியாது என்பதை உறுதிப்படுத்தும் ‘நுபூவத்தின் தூதுத்துவத்தின்’ அடையாளமாகும்.’ என்று கூறினார்கள். (ரூஹுல் பயான்)

புகாரி இமாமவர்கள் கூறும்போது ; “”வேறு சிலர் கூறினர்: {لَا أَعْبُدُ مَا تَعْبُدُونَ} என்றால்  ‘நீங்கள் வணங்குவதை நான் இப்போதும் வணங்கமாட்டேன், எனது வாழ்நாளில் மீதமுள்ள காலத்திலும் உங்களுக்கு நான் பதிலளிக்கமாட்டேன்’ என்பதாகும். {وَلَا أَنْتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ} என்றால் ‘அவர்களே அல்லாஹ், ஸூரா மாஇதா: 64 வது வசனத்தில் குறிப்பிடும் காபிர்களாவர்’ அல்லாஹ் கூறுகின்றான்:

என்பதாகும்”” என்று கூறினார்கள். (புகாரி: ஸூரா காபிரூன் விளக்க குறிப்பு)

இந்த வசனங்கள் திரும்ப திரும்ப சொல்லப்பட்டிருப்பதற்கு இமாம் இப்னு தைமிய்யா ரஹ் அவர்கள் கூறியதாக இப்னு கஸீர் இமாமவர்கள் பின்வருமாறு பதிந்தார்கள்; “”நீங்கள் வணங்குவதை நான் வணங்கமாட்டேன்’ என்பது செயலை மறுப்பதாகும், ஏனெனில் அது வினைச்சொல் வசனமாகும், ‘நீங்கள் வணங்கியதை நான் வணங்குபவனல்லன்’ என்பது அதனை ஏற்றுக்கொள்வதை மொத்தமாக மறுப்பதாகும், ஏனெனில் பெயர் சொல்லால் வரும் வசனம் மிக உறுதியானதாக, அது அந்த செயலையே நிராகரித்தது போன்றதாகும். அதன் அருத்தம் நடப்பதை மறுப்பதும், மார்க்க அடிப்படையில் சாத்தியம் என்பதை மறுப்பதுமாகும்.”” இப்னு கஸீர் இமாமவர்கள் ‘இது அழகானதோர் விளக்கம்’ என்கிறார்கள். அல்லாஹு அஃலம்.

அடுத்து, அது மீட்டப்படவில்லை, மாறாக ஒரு வசனத்தொடர் இறந்த காலத்தையும், மற்றது எதிர்காலத்தையும் குறிக்கிறது என்ற ஒரு கருத்தும் கூறப்பட்டுள்ளது. இன்னும் சில கருத்துக்களும் கூறப்பட்டுள்ளன. மொத்தத்தில் இந்த ஸூரா பின்னால் வரும் வசனத்தைப் போன்று ‘நபியவர்கள் அவர்களது சிலைகளை வணங்கப்போவதுமில்லை, அவர்களோ அல்லாஹ்வை வணங்கப்போவதுமில்லை’ என்பதை குறித்துக்காட்டுகின்றது. அல்லாஹ் கூறுகின்றான்:

ஒன்றில்; சுருக்கமாக அது இறைமறுப்பாளர்கள் என்ற இனத்துக்கு சொல்லப்பட்டதாகும், அவர்கள் பிறகு இஸ்லாத்தை ஏற்றாலும் அவர்கள் காபிர்களாக இருக்கும் நிலையில் விழிக்கப்பட்டதாகும்.

அல்லது அது பொதுவாக சொல்லப்பட்டதில் குறிப்பாக்கப்பட்டதாகும், எனவே இந்த எச்சரிக்கை ‘வணங்கமாட்டார்கள் என்பது’ யார் விடையத்தில் நரகவாதிகள் என்ற அல்லாஹ்வின் கட்டளை விதியானதோ அவர்களை குறிப்பதாகும்.

இந்த இரண்டு வசன நடைகளுக்கு இடையிலும் ஒரு வித்தியாசம் இருக்கின்றது; நபிகளார் ஒரு வசனத்தில் ‘வணங்கமாட்டேன்’ என்று காலத்தைக் குறிக்கும் வினைச்சொல் வசனத்தாலும், இரண்டாவது வசனத்தில் ‘நான் வணங்குபவனல்லன்’ என்று பெயர்ச்சொல்லினாலான வசனத்தாலும் குறிப்பிடும் போது, மக்கா இணைவைப்பாளர்கள் பற்றிய இரண்டு வசனங்களும் ‘நீங்கள் வணங்குபவர்களல்லர்’ என்று பெயர் சொல் வசனங்களாகவே கூறியுள்ளான் என்பது, நபிகளாரின் விடயத்தில் இப்போதும் அது நடக்காது, பிறகும் அது நடக்காது என்பதை காட்டுவதோடு, இணைவைப்பாளர்கள் விடயத்தில் இப்போது நடக்காது என்பதே மறுக்கப்பட்டுள்ளது, பிறகு நடக்கலாம் என்பது மறுக்கப்படவில்லை.’ என்ற ஒரு கருத்தை இமாம் ஸமக்ஷரீ அவர்கள் கூறியதாக, இப்னு ஹய்யான் அவர்கள் கூறிவிட்டு, இந்த விளக்கம் பெரும்பாலும் சாத்தியமானது, உறுதியானது அல்ல என்று கூறினார்கள்.  இமாம் ஷன்கீதி ரஹ் அவர்கள்: ‘பெரும்பாண்மையான அடிப்படையில் நாட முடியும் என்றால் அதுவே போதுமானது, அதுவே உண்மையாக நடக்கிறது, ஏனெனில் அவர்களில் பலர் இஸ்லாத்தை ஏற்று நபியவர்களின் இறைவனான அல்லாஹ்வை வணங்கினர்.’ என்று கூறினார்கள் (அல்வாஉல் பயான்)

புகாரி இமாமவர்கள் கூறினார்கள்: ‘{لَكُمْ دِينُكُمْ} உங்களது மார்க்கம் உங்களுக்கு என்றால், இறைநிராகரிப்பு என்பதாகும், {وَلِيَ دِينِ} எனது மார்க்கம் எனக்கு என்றால் இஸ்லாம் என்பதாகும், இங்கு {دِينِي} தீனி என்று யாவோடு சொல்லப்படவில்லை, ஏனெனில் அந்த ஸூராவின் வசனங்கள் நூன் உடனே முடிந்துள்ளன, எனவே யா என்ற எழுத்து விழுத்தாட்டப்பட்டுள்ளது. அது ஸூரா கஹ்ப்: 24 வது {يَهْدِينِ} என்ற  வசனம், ஸூரதுஷ் ஷுஅராஃ :80 வது  {يَشْفِينِ} என்ற வசனம் போன்றதாகும்.  (புகாரி; ஸூரா காபிரூன் விளக்க குறிப்பு)

இந்த வசனத்தில் ‘{دِينِ} தீன்’ என்றே எழுதப்பட்டுள்ளது, ஓதுவதும் அப்படித்தான், அதேநேரம் சிலர் ‘{دِينِي} தீனீ’ என்று யாவை வைத்தும் ஓதியள்ளனர். இது அல்குர்ஆனின் எழுத்து முறையாகும் அதனை அப்படி பேணுவதும் அவசியமே. (குர்துபீ)

இந்த வசனம் பின்வரும் வசனங்களைப் போன்றதே.

இதன் அருத்தம் அவர்களது போக்கை சரிகாணுவதல்ல, மாறாக பின்வரும் வசனத்தைப் போன்று கண்டிப்பதற்கும், எச்சரிப்பதற்குமாகும். அல்லாஹ் கூறுகின்றன:

இந்த ஸூராவிலே ‘இறைமறுப்பாளர்களே’ என்று அழைத்திருக்கும் விதம், அவர்களது மதங்கள் இறை நிராகரிப்புக்குரியது என்பதற்கு போதுமானதாகும், மேலும் நபியவர்கள்; ‘நீங்கள் வணங்குவதை நான் வணங்கமாட்டேன் என்று கூறிவிட்டார்கள், ஏனெனில் அது பிழையான, இறைமறுப்பாளர்களின் வணக்கமாகும். அப்படி இருந்தும் அதிலேயே நீங்கள் இருந்தால் உங்களது மார்க்கம் உங்களுக்கிருக்கட்டும், எனது மார்க்கம் எனக்கிருக்கிறது. என்பது அர்த்தமாகும். (அல்வாஉல் பயான்)

இந்த நபி மொழிகள் முஸ்லிமுக்கும் இறைமறுப்பாளருக்கும் அனந்தர உரிமை இல்லை என்பதை மிகவும் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது.

அல்ஹம்து லில்லாஹ் இத்தோடு ஸூரா காபிரூன் விளக்கம் முற்றுப்பெறுகிறது.

وَآخِرُ دَعْوَانا أَنِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *