நோய்கள் அதிகம் பரவும் இந்த காலகட்டத்தில் நம்மை காத்துக் கொள்ள சில வழிமுறைகள்.
PDF வடிவில் பார்வையிட இங்கே CLICK செய்யவும்!
- அல்லாஹ்வின் முடிவில் (கலாகத்ர்) ஆலமான நம்பிக்கை வைத்தல்,
அல்லாஹ்வின் நாட்டப்படியே எதுவும் நடக்கும், அவனது முடிவைத் தாண்டி எந்தக் கெடுதியும் நிகழப்போவதில்லை என்ற ஆலமான நம்பிக்கை! 2021 ம் ஆண்டு யாருக்கு கொரோனா ஏற்படும், யாருக்கு ஏற்படாது, யார் மரணிப்பார், யார் குணமடைவார் அனைத்தும் அல்லாஹ்வின் விதியே என்று நம்புவது அடிப்படை!
قُلْ لَّنْ يُّصِيْبَـنَاۤ اِلَّا مَا كَتَبَ اللّٰهُ لَـنَا ۚ هُوَ مَوْلٰٮنَا ۚ وَعَلَى اللّٰهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُوْنَ
(ஆகவே நபியே! அவர்களிடம்) அல்லாஹ் எங்களுக்கு விதித்துள்ளதைத் தவிர (வேறொன்றும்) நிச்சயமாக எங்களை அணுகவே செய்யாது, அவன் (தான்) எங்களுடைய பாதுகாவலன்” என்று நீர் கூறுவீராக! அல்லாஹ்வின் மீதே விசுவாசிகள் (தங்களுடைய காரியங்களை ஒப்படைத்து முழுமையாக) நம்பிக்கைவைக்கவும்.(அல்குர்ஆன்: 9:51)
مَاۤ اَصَابَ مِنْ مُّصِيْبَةٍ فِى الْاَرْضِ وَلَا فِىْۤ اَنْفُسِكُمْ اِلَّا فِىْ كِتٰبٍ مِّنْ قَبْلِ اَنْ نَّبْـرَاَهَا ؕ اِنَّ ذٰ لِكَ عَلَى اللّٰهِ يَسِيْرٌۚ ۖ
எந்தத் துன்பமும்_அதனை (பூமியை ஆத்மாவை) நாம் சிருஷ்டிப்பதற்கு முன்னதாக, (லவ்ஹுல் மஹ்ஃபூள் என்னும்) புத்தகத்தில் (பதியப்பட்டு) இருந்தே தவிர_பூமியிலோ, அல்லது உங்களிலோ ஏற்படுவதில்லை, நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு மிக்க எளிதானதாகும்.(அல்குர்ஆன்: 57:22)
- அல்லாஹ்வின் மீது நல்லெண்ணம் வைத்தல்,
அல்லாஹ் என்னை பாதுகாப்பான், அவன் எனக்கு தீங்கை ஏற்படுத்தமாட்டான் என்று உறுதியாக இருப்பது, இதுவே முதல் “நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும்” காரணி, ஏன் வெக்சின் போட்டுக் கொண்டவன், அதில் நம்பிக்கை வைக்கும் போது ஏன் அல்லாஹ்வில் நம்பிக்கை வைக்கக்கூடாது!!!
وَمَنْ يَّـتَّـقِ اللّٰهَ يَجْعَلْ لَّهٗ مَخْرَجًا ۙ
அன்றியும், எவர் அல்லாஹ்வுக்குப் பயந்து நடக்கிறாரோ அவருக்கு (ஒவ்வொரு சங்கடத்திலிருந்தும்) வெளியேறும் வழியை அவன் ஆக்குவான்.(அல்குர்ஆன்: 65:2)
وَّيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ ؕ وَمَنْ يَّتَوَكَّلْ عَلَى اللّٰهِ فَهُوَ حَسْبُهٗ ؕ اِنَّ اللّٰهَ بَالِغُ اَمْرِهٖ ؕ قَدْ جَعَلَ اللّٰهُ لِكُلِّ شَىْءٍ قَدْرًا
மேலும், அவர் எண்ணியிராத விதத்தில் அவருக்கு வாழ்வாதாரங்களை அவன் வழங்குவான், எவர் அல்லாஹ்வின்மீது (தன் காரியத்தை ஒப்படைத்து முழுமையாக) நம்பிக்கை வைக்கிறாரோ அவருக்கு அவனே (முற்றிலும்) போதுமானவன், நிச்சயமாக, அல்லாஹ் தன் காரியத்தை அடைந்தே தீருவான்,(ஆயினும்) அல்லாஹ் ஒவ்வொருபொருளுக்கும் ஓர் அளவை திட்டமாக நிர்ணயம் செய்திருக்கிறான்.(அல்குர்ஆன்: 65:3)
நபி இப்றாஹீம் (அலை) அவர்களின் நம்பிக்கையைப் பற்றி அல்லாஹ் கூறுகின்றான்:
الَّذِىْ خَلَقَنِىْ فَهُوَ يَهْدِيْنِۙ
என்னைப்படைத்தான், பின்னர் எனக்கு நேர்வழி காண்பிக்கிறான்”
وَ الَّذِىْ هُوَ يُطْعِمُنِىْ وَيَسْقِيْنِۙ
“அவனே எனக்கு உணவளிக்கிறான், அவனே (எனக்கு) குடிக்கவும் தருகிறான்.”
وَاِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِيْنِ ۙ
மேலும் “நான் நோயுற்று விட்டால், அவனே என்னைக் குணப்படுத்துகின்றான்.”
وَالَّذِىْ يُمِيْتُنِىْ ثُمَّ يُحْيِيْنِۙ
இன்னும், அவனே ” என்னை இறப்பெய்தச் செய்வான், பின்னர் என்னை (மறுமையில்) அவன் உயிர்ப்பிப்பான்.” (26:78-81)
- இஸ்லாம் காட்டிய சுத்தத்தைப் பேணுதல்,
தூங்கி எழுந்தால் மூக்கிற்கு நீரை மூன்று தடவைகள் செலுத்தி, சீறிவிடல், ஒவ்வொரு வுழூவின் போதும் அப்படிசெய்தல், எப்போதும் வுழுவுடன் இருக்க முயற்சிப்பது, ஏன் மனிதன் சொல்லிவிட்டான் என்பதற்க ஒவ்வொரு இடத்திலும் கை கழுவும் மனிதன், செனிடைசர் பூசிக்கொள்ளும் மனிதன் வுழுவுடன் இருந்தால் அது சுத்தமாக எம்மைவைக்காதா!
- நோய்கள் வருவதற்கு முன் பாதுகாப்பு தேடுதல்.
- நபிவழியில் பிரார்த்தணை
«اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ جَهْدِ البَلاَءِ، وَدَرَكِ الشَّقَاءِ، وَسُوءِ القَضَاءِ، وَشَمَاتَةِ الأَعْدَاءِ»
தாங்கமுடியாத சோதனை, அழிவில் வீழ்வது, விதியின் கேடு, எதிரிகளால் ஏற்படும் மன உளைச்சல் ஆகியவற்றிலிருந்து இறைவா உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன் (புஹாரி:6347)
2. ஒரு இடத்தில் இறங்கிவிட்டால் பாதுகாப்புக்காக சொல்ல வேண்டிய துஆ
أَعُوذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ
(முஸ்லிம்)
3. பாதுகாப்புக்காக மாலையில் ஒரு தடவை சொல்ல வேண்டிய துஆ
أَعُوذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ
(முஸ்லிம்)
4. பாதுகாப்புக்காக காலையிலும் மாலையிலும் மூன்று தடவைகள் சொல்ல வேண்டிய துஆ
بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ
அபூதாவூத், அஹ்மத் 528
5. தூங்குவதற்கு முன்னர் குல் சூராக்களை ஓதி கையில் ஊதி உடம்பில் தடவுதல், அதனை மூன்று தடவைகள் செய்தல். (புஹாரி:5017, முஸ்லிம்)
- நோய் ஏற்பட்டுவிட்டால் நபி (ஸல்) அவர்கள் ஓதிப்பார்ப்பதற்கென சில சூறாக்களையும், துஆக்களையும் காட்டித்தந்தார்கள். அவைகளை வைத்து ஓதிப்பார்ப்பதே எமக்குப் போதுமானது.
- நோய்வாய்ப்பட்டால் பாதுகாப்புக் கோரும் வசனங்களான கடைசி மூன்று அத்தியாயங்களை ஓதித் தம் கையில் ஊதி, தம் கையை (தம் உடல் மீது) தடவிக் கொள்ளல். (புஹாரி:4439)
- சூரதுல் பாத்திஹாவை ஓதிக்கொள்ளல். (புஹாரி:5007, முஸ்லிம்)
- ‘பிஸ்மில்லாஹி துர்பது அர்ளினா பிரீகதி பஃளினா யுஷ்பா சகீமுனா பிஇத்னி ரப்பினா’
«بِسْمِ اللَّهِ، تُرْبَةُ أَرْضِنَا، بِرِيقَةِ بَعْضِنَا، يُشْفَى سَقِيمُنَا، بِإِذْنِ رَبِّنَا»
(பொருள்: அல்லாஹ்வின் பெயரால்… எங்களில் சிலரின் உமிழ் நீரோடு எம்முடைய இந்த பூமியின் மண் (இணைந்தால் அது) எங்கள் இறைவனின் ஆணையின்பேரில் எங்களில் நோயுற்று இருப்பவரைக் குணப்படுத்தும்.) (புஹாரி:5745, முஸ்லிம்)
4. தம் வலக் கையால் நோயாளியை தடவிக் கொடுத்து,
‘அத்ஹிபில் பஃஸ், ரப்பன்னாஸ்! வஷ்பி அன்தஷ் ஷாபி, லா ஷிபாஅ இல்லா ஷிபாஉக – ஷிபாஅன் லா யுகாதிரு சகமன்’
«أَذْهِبِ البَاسَ رَبَّ النَّاسِ، وَاشْفِ أَنْتَ الشَّافِي، لاَ شِفَاءَ إِلَّا شِفَاؤُكَ، شِفَاءً لاَ يُغَادِرُ سَقَمًا»
(பொருள்: மக்களை இரட்சிப்பவனே! துன்பத்தைப் போக்குவாயாக! குணப்படுத்துவாயாக! நீயே குணமளிப்பவன். உன் நிவாரணத்தைத் தவிர வேறு நிவாரணம் இல்லை. நோய் சிறிதும் இல்லாதவாறு குணப்படுத்திடுவாயாக.) (புஹாரி:5750, முஸ்லிம்)
5. =லாபஃச தஹூருன் இன் ஷா அல்லாஹ்= என்று அல்லாஹ்வை நினைவூட்டி ஆறுதல் படுத்தல். மாறாக இப்படி செய்தால் குணமாகும், அப்படி செய்தால் குணமாகும் என்று வெறுமனே கூறாமல் இறை நாட்டத்தோடு சேர்த்து அறிவுரை கூறல்.
«لاَ بَأْسَ، طَهُورٌ إِنْ شَاءَ اللَّهُ»
‘கவலைப்பட வேண்டாம். இறைவன் நாடினால் குணமாகிவிடும்’ (புஹாரி: 3616)
6. மேலும் நோவுகள் ஏற்பட்டால் அந்த இடத்தில் கையை வைத்தவாறு பின் வரும் துஆவை ஓதுவதும் நபிகளார் காட்டித் தந்த மந்திரீக (ஓதிப் பார்க்கும்) முறைகளுல் ஒன்றாகும். குறிப்பாக வெக்சின் (ஊசி) போட்ட இடம் நோக்கலாம் அந்த இடத்திலும் கை வைத்து ஓதிக்கொள்வது.
بِاسْمِ اللَّهِ
(பிஸ்மில்லாஹ்)
என்று மூன்று விடுத்தம் கூறிவிட்டு,
أَعُوذُ بِاللَّهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ
(அஊது பில்லாஹி வகுத்ரதிஹி மின் ஷர்றி மா அஜிது வஉஹாதிரு)
(முஸ்லிம்)
7. பிள்ளைகளுக்காக ஓதுதல்
” أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ، مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ، وَمِنْ كُلِّ عَيْنٍ لاَمَّةٍ “
(அஊது பிகலிமாதில்லாஹித் தாம்மா, மின் குல்லி ஷைதானின் வாஹாம்மா, வமின் குல்லி அய்னின் லாம்மா)
‘அல்லாஹ்வின் முழுமையான சொற்களைக் கொண்டு ஒவ்வொரு ஷைத்தானிடமிருந்தும் நச்சுப் பிராணியிடமிருந்தும் தீய எண்ணத்துடன் தீண்டும் (பொறாமைக்) கண்ணிலிருந்தும் அவனிடம் பாதுகாப்புக் கோருகிறேன்” (புஹாரி:3371) திர்மிதியின் (2060) அறிவிப்பில்
«أُعِيذُكُمَا بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ، وَمِنْ كُلِّ عَيْنٍ لَامَّةٍ»
(உஈதுகுமா பிகலிமாதில்லாஹித் தாம்மா, மின் குல்லி ஷைதானின் வாஹாம்மா, வமின் குல்லி அய்னின் லாம்மா)
8. ஜிப்ரில் (அலை) அவர்கள் நபிகளாருக்கு ஓதி பார்த்த முறை
«بِاسْمِ اللهِ أَرْقِيكَ، مِنْ كُلِّ شَيْءٍ يُؤْذِيكَ، مِنْ شَرِّ كُلِّ نَفْسٍ أَوْ عَيْنِ حَاسِدٍ، اللهُ يَشْفِيكَ بِاسْمِ اللهِ أَرْقِيكَ»
(பிஸ்மில்லாஹி உர்கீக மின் குல்லி ஷைஇன் யுஃதீக, மின் ஷர்றி குல்லி நப்ஸின்,அவ் அய்னி ஹாஸிதின், அல்லாஹு யஷ்பீக, பிஸ்மில்லாஹி உர்கீக)
குறிப்பு; மாஸ்க் அணிவதிலும், செனிடைசர் பாவிப்பதிலும், ஒரு மீட்டர் இடைவெளி பேணுவதிலும் கவனம் செலுத்தும் நாம் இந்த துஆக்களில் அதிக கவனம் செலுத்துவோம், அல்லாஹ் நாம்மை பாதுகாக்க போதுமானவன்.
தொகுப்பு: M S M MURSHID ABBASI