பிக்ஹு -23; இமாமத் செய்வதற்கான சட்டமும், ஒழுங்குகளும்

இமாமத் செய்வதற்கான சட்டமும், ஒழுங்குகளும்

இருவரோ, அதற்கு அதிகமானவர்களோ இருந்தால் ஜமாஅத்தாக தொழலாம்.

عَنْ مَالِكِ بْنِ الحُوَيْرِثِ، قَالَ: أَتَى رَجُلاَنِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُرِيدَانِ السَّفَرَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا أَنْتُمَا خَرَجْتُمَا، فَأَذِّنَا، ثُمَّ أَقِيمَا، ثُمَّ لِيَؤُمَّكُمَا أَكْبَرُكُمَا»  صحيح البخاري

மாலிக் இப்னு ஹுவைரிஸ்(ரழி) அவர்கள் கூறினார்கள்: பயணத்தை மேற்கொள்ள விரும்பிய இருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்தனர். அப்போது அவர்களிடம் ‘நீங்கள் இருவரும் பயணம் புறப்பட்டுச் சென்றால், தொழுகைக்காக பாங்கு சொல்லி, பின்னர் இகாமத்தும் சொல்லுங்கள். பின்னர் உங்களில் பெரியவர் இமாமாக நின்று தொழுகை நடத்தட்டும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (புஹாரி: 630, முஸ்லிம்)

 عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا كَانُوا ثَلَاثَةً فَلْيَؤُمَّهُمْ أَحَدُهُمْ، وَأَحَقُّهُمْ بِالْإِمَامَةِ أَقْرَؤُهُمْ» صحيح مسلم

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூன்று பேர் இருந்தால் அவர்களுக்கு ஒருவர் இமாமத் செய்யட்டும், அவர்களுள் இமாமத் செய்வதற்கு மிகவும் தகுதியானவர் நன்றாக ஒதுபவரே.  (முஸ்லிம்)

இமாமத் செய்வதற்கு தகுதியானவர்.

عَنْ أَبِي مَسْعُودٍ الْأَنْصَارِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَؤُمُّ الْقَوْمَ أَقْرَؤُهُمْ لِكِتَابِ اللهِ، فَإِنْ كَانُوا فِي الْقِرَاءَةِ سَوَاءً، فَأَعْلَمُهُمْ بِالسُّنَّةِ، فَإِنْ كَانُوا فِي السُّنَّةِ سَوَاءً، فَأَقْدَمُهُمْ هِجْرَةً، فَإِنْ كَانُوا فِي الْهِجْرَةِ سَوَاءً، فَأَقْدَمُهُمْ سِلْمًا (فَلْيَؤُمَّهُمْ أَكْبَرُهُمْ سِنًّا)، وَلَا يَؤُمَّنَّ الرَّجُلُ الرَّجُلَ فِي سُلْطَانِهِ، وَلَا يَقْعُدْ فِي بَيْتِهِ عَلَى تَكْرِمَتِهِ إِلَّا بِإِذْنِهِ» صحيح مسلم

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் வேதத்தை நன்றாக ஒதுபவரே கூட்டத்திற்கு இமாமத் செய்வார், அவர்கள் ஓதுவதில் சமமாக இருந்தால் நபிவழியை நன்றாக அறிந்தவர், அதிலும் சமமாக இருந்தால் முதலில் ஹிஜ்ரத் செய்தவர், அதிலும் சமமாக இருந்தால் இஸ்லாத்தை முதலில் ஏற்றவர் (வயதில் மூத்தவர் என்றும் வந்துள்ளது). ஒரு மனிதர், அதிகாரமுள்ள ஒரு மனிதருக்கு (அவரது இடத்தில்) அவரது அனுமதியின்றி இமாமத் செய்யவேண்டாம். மேலும் ஒரு மனிதரின் வீட்டில் அவரது சாய்மானத்தில் அவரது அனுமதியின்றி அமரவேண்டாம். (முஸ்லிம்)

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ: «لَمَّا قَدِمَ المُهَاجِرُونَ الأَوَّلُونَ العُصْبَةَ – مَوْضِعٌ بِقُبَاءٍ – قَبْلَ مَقْدَمِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَؤُمُّهُمْ سَالِمٌ مَوْلَى أَبِي حُذَيْفَةَ، وَكَانَ أَكْثَرَهُمْ قُرْآنًا»  صحيح البخاري

இப்னு உமர்(ரழி) அவர்கள் கூறினார்கள்:  முதன் முறையாக மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து வந்தவர்கள், குபா என்ற பகுதியிலுள்ள உஸ்பா என்ற இடத்தில் தங்கினார்கள். நபி(ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்து மதீனாவிற்கு வருவதற்கு முன்புவரை அபூ ஹுதைபா(ரழி) அவர்களின், அடிமை, ஸாலிம் தாம் மக்களுக்கு இமாமாகத் தொழுகை நடத்தினார். அவர் குர்ஆனை அதிகம் ஓதிய வராக இருந்தார்.   (புஹாரி: 692)

சிறுவர் இமாமத் செய்தல்.

ஒரு சமூகத்தில் அல்குர்ஆனை நன்றாக ஓதத் தெரிந்தவர் சிறுவனாக இருந்தால் அவருக்கு இமாமத் செய்யும் தகமை இருக்கின்றது.

 عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ عَمْرِو بْنِ سَلَمَةَ، قَالَ: قَالَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: …..فَإِذَا حَضَرَتِ الصَّلاَةُ فَلْيُؤَذِّنْ أَحَدُكُمْ، وَلْيَؤُمَّكُمْ أَكْثَرُكُمْ قُرْآنًا». فَنَظَرُوا فَلَمْ يَكُنْ أَحَدٌ أَكْثَرَ قُرْآنًا مِنِّي، لِمَا كُنْتُ أَتَلَقَّى مِنَ الرُّكْبَانِ، فَقَدَّمُونِي بَيْنَ أَيْدِيهِمْ، وَأَنَا ابْنُ سِتٍّ أَوْ سَبْعِ سِنِينَ،…..  صحيح البخاري

அம்ர் பின் சலமா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் :……. உங்களில் குர்ஆனை அதிகம் அறிந்து வைத்துள்ளவர் உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுகை நடத்தட்டும்’என்று கூறினார்கள் எனவே, மக்கள் (குர்ஆனை அதிகம் அறிந்தவர் யார் எனத்) துருவிப் பார்த்தபோது நான் பயணிகளிடம் கேட்டு அறிந்துகொண்ட காரணத்தால் என்னை விட அதிகமாகக் குர்ஆனை அறிந்தவர்கள் எவரும், (எங்களிடையே) இருக்கவில்லை. எனவே, (தொழுகை நடத்துவதற்காக) என்னை அவர்கள் முன்னால் நிறுத்தினார்கள். நான் அப்போது ஆறு அல்லது ஏழு வயதுடைய (சிறு)வனாக இருந்தேன். …….  (புஹாரி: 4302)

ஒரு தொழுகையை ஒரு இமாமோடு தொழுதவர், அதே தொழுகைக்கு இமாமாக இருக்கலாம்.

جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ: أَنَّ مُعَاذَ بْنَ جَبَلٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، كَانَ يُصَلِّي مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ يَأْتِي قَوْمَهُ فَيُصَلِّي بِهِمُ الصَّلاَةَ، فَقَرَأَ بِهِمُ البَقَرَةَ، قَالَ: فَتَجَوَّزَ رَجُلٌ فَصَلَّى صَلاَةً خَفِيفَةً، فَبَلَغَ ذَلِكَ مُعَاذًا، فَقَالَ: إِنَّهُ مُنَافِقٌ، فَبَلَغَ ذَلِكَ الرَّجُلَ، فَأَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّا قَوْمٌ نَعْمَلُ بِأَيْدِينَا، وَنَسْقِي بِنَوَاضِحِنَا، وَإِنَّ مُعَاذًا صَلَّى بِنَا البَارِحَةَ، فَقَرَأَ البَقَرَةَ، فَتَجَوَّزْتُ، فَزَعَمَ أَنِّي مُنَافِقٌ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” يَا مُعَاذُ، أَفَتَّانٌ أَنْتَ – ثَلاَثًا – اقْرَأْ: وَالشَّمْسِ وَضُحَاهَا وَسَبِّحِ اسْمَ رَبِّكَ الأَعْلَى وَنَحْوَهَا ” صحيح البخاري

முஆத் (ரழி) அவர்கள் நபிகளாரோடு தொழுதுவிட்டு, தன் கூட்டத்தாரிடம் சென்று அதே தொழுகையை தொழுவிப்பார்கள். ஒரு நாள் இஷாவைத் தொழுவித்தவர்கள் பகராவை ஓத, பின்னே தொழுத ஒரு மனிதர், திரும்பிச் சென்றுவிட்டார். அவரைப் பார்த்து முஆத் (ரழி) அவர்கள் முனாபிக் என்று கூறினார்கள். நபிகளாருக்கு அச்செய்தியை அவர் எடுத்துச் சொல்லவே, நபியவர்கள் ;முஆதே! நீர் குழப்பம் ஏற்படுத்தினீரா?’ என்று கேட்டுவிட்டு, சிறிய சூராக்களை ஓதுமாறு ஏவினார்கள்.  (புஹாரி:701, 6106, முஸ்லிம்)

தனிமையில் தொழுபவர் இடையில் இமாமாக மாறலாம்.

عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: بِتُّ فِي بَيْتِ خَالَتِي مَيْمُونَةَ بِنْتِ الحَارِثِ زَوْجِ النَّبِيِّ صلّى الله عليه وسلم وَكَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَهَا فِي لَيْلَتِهَا، فَصَلَّى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ العِشَاءَ، ثُمَّ جَاءَ إِلَى مَنْزِلِهِ، فَصَلَّى أَرْبَعَ رَكَعَاتٍ، ثُمَّ نَامَ، ثُمَّ قَامَ، ثُمَّ قَالَ: «نَامَ الغُلَيِّمُ» أَوْ كَلِمَةً تُشْبِهُهَا، ثُمَّ قَامَ، فَقُمْتُ عَنْ يَسَارِهِ، فَجَعَلَنِي عَنْ يَمِينِهِ، صحيح البخاري

இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: நான் எனது சாச்சியான மைமூனா (ரழி) அவர்கள் வீட்டில் இரவில் தங்கினேன். நபியவர்கள் நான்கு ரக்அத்கள் தொழுதுவிட்டு தூங்கி, மிண்டும் எழுந்து, தொழுகைக்கு நின்றார்கள், நானும் அவர்களின் இடப்பக்கத்தில் நின்றேன், அபோது என் தலையைப் பிடித்திழுத்து,வலப்பக்கத்தில் என்னை நிறுத்தி (தொழுவித்தார்கள்)….. (புஹாரி: 117,697, முஸ்லிம்)

 عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ” أَبْصَرَ رَجُلًا يُصَلِّي وَحْدَهُ، فَقَالَ: أَلَا رَجُلٌ يَتَصَدَّقُ عَلَى هَذَا فَيُصَلِّيَ مَعَهُ ” سنن أبي داود

அபூ ஸஈத் அல்குத்ரீ (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் தனிமையில் தொழும் ஒருவரைக் கண்டபோது, ‘இவரோடு (மஃமூமாக) தொழுது, இவருக்கு தர்மம் செய்யும் ஒருவர் இல்லையா?’ என்று கேட்டார்கள்.  (அபூ தாவுத்: 574, அஹ்மத்)

பாவிகள், பித்அத்வாதிகள் இமாமத் செய்தல்;

அவர்களை இமாமாக நியமிப்பது தடுக்கப்பட்டிருந்தாலும், அவர்களை பின் துயர்ந்து தொழுதால் அது ஏற்றுக்கொள்ளப்படும்.

عَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «يُصَلُّونَ لَكُمْ، فَإِنْ أَصَابُوا فَلَكُمْ، وَإِنْ أَخْطَئُوا فَلَكُمْ وَعَلَيْهِمْ» صحيح البخاري

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (சில தலைவர்கள்) உங்களுக்கு தொழுவிப்பார்கள், அவர்கள் சரியாக செய் (தொழுவித்) தால், உங்களுக்கு நன்மையானது. அவர்கள் தவறிழைத்தால் உங்களுக்கு நன்மையாகவும், அவர்களுக்கு தீமையாகவும் அமையும்.  (புஹாரி: 694)

عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَدِيِّ بْنِ خِيَارٍ، أَنَّهُ دَخَلَ عَلَى عُثْمَانَ بْنِ عَفَّانَ رَضِيَ اللَّهُ عَنْهُ، – وَهُوَ مَحْصُورٌ – فَقَالَ: إِنَّكَ إِمَامُ عَامَّةٍ، وَنَزَلَ بِكَ مَا نَرَى، وَيُصَلِّي لَنَا إِمَامُ فِتْنَةٍ، وَنَتَحَرَّجُ؟ فَقَالَ: «الصَّلاَةُ أَحْسَنُ مَا يَعْمَلُ النَّاسُ، فَإِذَا أَحْسَنَ النَّاسُ، فَأَحْسِنْ مَعَهُمْ، وَإِذَا أَسَاءُوا فَاجْتَنِبْ إِسَاءَتَهُمْ» صحيح البخاري

உஸ்மான்(ரழி) அவர்கள் முற்றுகையிடப்பட்டபோது, உபைத் என்பவர் அவர்களிடம் வந்து, ‘நீங்களே பொது இமாமாக இருக்க, உங்களுக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது, எங்களுக்கு குழப்பக்கார இமாம்கள் தொழுவிக்கின்றார்கள், எங்களுக்கு சங்கடமாக இருக்கிறது, நாம் என்ன செய்வது? என்று கேட்டபோது, ‘தொழுகை என்பது மனிதர்கள் செய்யும் வணக்கங்களில் மிகச் சிறந்தது, எனவே அவர்கள் (முறையாக தொழுவித்து) நல்லமுறையில் நடப்பார்களானால் அவர்களுடன் நல்லமுறையில் நடங்கள், அவர்கள் (தொழுகை விடையத்தில்) தவறிழைத்தால் அவர்களது தவறைத் தவிர்ந்து கொள்ளுங்கள்.’ என்று கூறினார்கள். (புஹாரி: 695)

(இந்த செய்தியிலிருந்து நபித் தோழர்கள் நபிகளாரின் கூற்றை எப்படி புரிந்துள்ளார்கள் என்பதை சரியாக விளங்கலாம்)

அடுத்து பித்அத் வாதிகளுக்கு பின்னால் தொழுதால் தொழுகை ஏற்றுக்கொள்ளப்டாது என்பதட்கு எந்த சான்றுகளும் வரவில்லை. இமாமை புறக்கணிக்கும் ஒரே நிலை வெளிப்படையான குப்ர், ஷிர்க் என்பது மட்டுமே.

عُبَادَةَ بْنِ الصَّامِتِ – قَالَ فِيمَا أَخَذَ عَلَيْنَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ….. وَأَنْ لاَ نُنَازِعَ الأَمْرَ أَهْلَهُ، إِلَّا أَنْ تَرَوْا كُفْرًا بَوَاحًا، عِنْدَكُمْ مِنَ اللَّهِ فِيهِ بُرْهَانٌ» صحيح البخاري

உபாததுப்னு ஸாமித் (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபிகளார் எங்களிடம் எடுத்த உடன்படிக்கைகளுள் ‘அல்லாஹ்விடம் ஆதாரம் காட்டும் அளவுக்கு தெளிவான குப்ரை நீங்கள் காணாதவரை, ஆட்சியாளர்களோடு முரண்படாதீர்கள்.’ என்பதும் ஒன்றாகும்.  (புஹாரி: 7056, முஸ்லிம்)

عَنْ أَبِي سَهْلَةَ السَّائِبِ بْنِ خَلَّادٍ – قَالَ أَحْمَدُ: مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ – أَنَّ رَجُلًا أَمَّ قَوْمًا، فَبَصَقَ فِي الْقِبْلَةِ، وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْظُرُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ فَرَغَ: «لَا يُصَلِّي لَكُمْ»، فَأَرَادَ بَعْدَ ذَلِكَ أَنْ يُصَلِّيَ لَهُمْ فَمَنَعُوهُ وَأَخْبَرُوهُ بِقَوْلِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذَكَرَ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «نَعَمْ»، وَحَسِبْتُ أَنَّهُ قَالَ: «إِنَّكَ آذَيْتَ اللَّهَ وَرَسُولَهُ» سنن أبي داود

ஸாஇப் பின் கல்லாத் (ரழி) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதர் இமாமத் செயும்போது, கிப்லா திசையில் துப்பிவிட்டார், நபிகளார் அதனை பார்த்துவிட்டார்கள். தொழுகை முடிந்ததும் நபியவர்கள்; ‘இவர் (இனி) உங்களுக்கு தொழுவிக்கவேண்டாம்’ என்றார்கள். பிறகு (ஒரு நாள்) அவர் தொழுவிக்க முற்படவே, தோழர்கள் தடுத்துவிட்டனர். அதனை அவர் நபிகளாரிடம் முறைப்படவே, நபியவர்கள்; ஆம்! நீர் அல்லாஹ்வையும், தூதரையும் நோவினை செய்துவிட்டீர். என்று கூறினார்கள்.  (அஹ்மத், அபூதாவுத்: 481)

இந்த ஹதீஸ் அறிவிப்பாளர்கள் அனைவரும் நம்பகமானவர்களாக இருந்தாலும், ‘சாலிஹ் பின் கயவான்‘ என்பவரை ‘இஜ்லீ’ இப்னு ஹிப்பான்’ மாத்திரமே நம்பகப்படுத்தியுள்ளார்கள்.

பெண்கள் இமாமத் செய்தல்

.இதைப் பொருத்தவரை இமாமத் என்பது ஆண்களுக்கு உரித்தானது என்பதே அடிப்படை. அதிலிருந்து தொழுகை இமாமத்தை விதிவிலக்கு செய்வதாக இருப்பின் தனி ஆதாரம் இருக்கவேண்டும். அதுசம்பந்தமாக வரும் ஹதீஸ்கள் பலவீனமானவையே. முடியும் என்போர் அதனையும், ஆயிஷா, உம்மு சலமா (ரழி) ஆகியோர் தொழுவித்ததாக வரும் செய்திகளை வைத்தே அனுமதிக்கின்றனர். ஆனால் ஜும்ஆ தொழுகை நடத்த அனுமதி மறுப்பார்கள். அதிலும் ஒரு சாரார் ஆண்களுக்கு முடியாது, பெண்களுக்கு மாத்திரமே முடியும் என்பார்கள். அல்லாஹு அஃலம்.

عَنْ أُمِّ وَرَقَةَ بِنْتِ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ، بِهَذَا [ص:162] الْحَدِيثِ، وَالْأَوَّلُ أَتَمُّ، قَالَ: وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَزُورُهَا فِي بَيْتِهَا وَجَعَلَ لَهَا مُؤَذِّنًا يُؤَذِّنُ لَهَا، وَأَمَرَهَا أَنْ تَؤُمَّ أَهْلَ دَارِهَا، قَالَ عَبْدُ الرَّحْمَنِ: فَأَنَا رَأَيْتُ مُؤَذِّنَهَا شَيْخًا كَبِيرًا.  سنن أبي داود

உம்மு வரகா (ரழி) அவர்கள் கூறினார்கள்; நபி (ஸல்) அவர்கள், அவர்களை அவரது வீட்டிலே சந்திப்பார்களாம், அவர்களுக்கென்று ஒரு (வயோதிபரான) முஅத்தினையும் ஏற்படுத்திக் கொடுத்ததோடு, வீட்டில் உள்ளவர்களுக்கு தொழுவிக்கவும் அனுமதி கொடுத்தார்களாம். (அபூதாவுத்; 592, அஹ்மத்)

இதன் அறிவிப்பாளரான ‘அப்துர் ரஹ்மான் பின் கல்லாத்‘ என்பவர் ‘யார் என்று அறியப்படாத, மஜ்ஹூல்‘ ஆவார். எனவே இது மிகவும் பலவீனமானது.

அடுத்து இந்த ஹதீசை ஆதாரமாக எடுத்தால் ஆண்களுக்கும் தொழுவிக்க அனுமதிக்க வேண்டும் ஏனெனில் முஅத்தின் ஆணாகவே இருந்தார்.

டுத்து ஆயிஷா (ரழி) அவர்கள் இமாமத் செய்ததாக வரும் ஹதீஸ்.

5086 – عَنِ الثَّوْرِيِّ، عَنْ مَيْسَرَةَ بْنِ حَبِيبٍ النَّهْدِيِّ، عَنْ رِيطَةَ الْحَنَفِيَّةِ أَنَّ عَائِشَةَ «أَمَّتْهُنَّ وَقَامَتْ بَيْنَهُنَّ فِي صَلَاةٍ مَكْتُوبَةٍ» مصنف عبد الرزاق

இது முஸன்னப் அப்திர் ரஸ்ஸாக்:5086, தாரகுத்னீ போன்ற கிதாபுகளில் பதியப்பட்டுள்ளது. இந்த அறிப்பாளர் தொடரில் ஆயிஷா அவர்களைத் தொட்டு அறிவிக்கும் ‘ரீததல் ஹனபிய்யா‘ என்ற பெண் யார் என்று அறியப்படாதவர், மஜ்ஹூல் ஆவார். எனவே இது மிகவும் பலவீனமானது.

அதேபோன்று ஹாகிம், இப்னு அபீஷைபா, பைஹகீ, முசன்னப் அப்திர் ரஸ்ஸாக் போன்ற கிதாபுகளில் ‘லைஸ்’ என்பவர் வழியாக பதியப்பட்டுள்ளது, அவர் மிகவும் மனன சக்தி குறைந்தவராவர்.

மேலும் ‘இப்னு அபீலைலா’ வழியாக இப்னு அபீஷைபாவில் பதியப்பட்டுள்ளது, அவர் மிகவும் மறதி உள்ளவர், இப்ரஹீம் அவர்கள் வழியாக அல் ஆசார் லிஅபீ யூசுபிலும் பதியப்பட்டுள்ளது அது முன்கதிஃ ஆகும்.

எனவே ஆயிஷா (ரழி) அவர்கள் இமாமத் செய்ததாக வரும் அனைத்து செய்திகளும் பலவீனமானவை.

5082 – عَنِ الثَّوْرِيِّ، عَنْ عَمَّارٍ الدُّهْنِيِّ، عَنْ حُجَيْرَةَ بِنْتِ حُصَيْنٍ، قَالَتْ: «أَمَّتْنَا أُمُّ سَلَمَةَ فِي صَلَاةِ الْعَصْرِ قَامَتْ بَيْنَنَا» مصنف عبد الرزاق

உம்மு ஸலமா (ரழி) அவர்கள் தொழுவித்ததாக வரும் செய்தி முசன்னப் அப்திர் ரஸ்ஸாக், இப்னு அபீ ஷைபா போன்றவற்றில் பதியப்பட்டுள்ளது. இதில் உம்மு சலமா அவர்களைத் தொட்டு அறிவிக்கும் ‘ஹுஜைரா‘ என்பவர் யார் என்று அறியப்படாத மஜ்ஹூளாக இருக்கின்றார். எனவே இதுவும் பலவீனமானதே.

இமாமை பின்பற்றும் போது செயலால் அவரை முந்தவோ, பிந்தவோ கூடாது.

 البَرَاءُ  قَالَ: ” كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا قَالَ: سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، لَمْ يَحْنِ أَحَدٌ مِنَّا ظَهْرَهُ، حَتَّى يَقَعَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَاجِدًا، ثُمَّ نَقَعُ سُجُودًا بَعْدَهُ “ صحيح البخاري

பராஃ பின் ஆஸிப் (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் ‘ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَه’ என்று சொன்னால், நபியவர்கள் ஸுஜூத் செய்யும் (நெற்றியை கீழே வைக்கும்) வரை எங்களில் யாரும் தன் முதுகை வளைக்க மாட்டார்கள். பிறகு நாம் ஸுஜூத் செய்வோம்.  (புஹாரி: 690,  811, முஸ்லிம்)

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ….قَالَ: ” إِنَّمَا جُعِلَ الإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ، فَإِذَا صَلَّى قَائِمًا، فَصَلُّوا قِيَامًا، فَإِذَا رَكَعَ، فَارْكَعُوا وَإِذَا رَفَعَ، فَارْفَعُوا، وَإِذَا قَالَ: سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، فَقُولُوا: رَبَّنَا وَلَكَ الحَمْدُ، وَإِذَا صَلَّى قَائِمًا، فَصَلُّوا قِيَامًا، وَإِذَا صَلَّى جَالِسًا، فَصَلُّوا جُلُوسًا أَجْمَعُونَ ” صحيح البخاري

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இமாம் ஏற்படுத்தப்பட்டிருப்பது அவரை பின்பற்றுவதற்கே, (எனவே அவருக்கு முரண்பட வேண்டாம்) அவர் நின்று தொழுதால் நின்று தொழுங்கள், அவர் ருகூஃ செய்தால் ருகூஃ செய்யுங்கள், அவர் தலையை தூக்கினால் தூக்குங்கள், அவர் ‘ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ’ என்றால் நீங்கள் ‘ رَبَّنَا وَلَكَ الحَمْدُ’ என்று கூறுங்கள், அவர் ஸுஜூத் செய்தால் ஸுஜூத் செய்யுங்கள், அவர் அமர்ந்து தொழுதால் அமர்ந்து தொழுங்கள்.  (புஹாரி: 689, முஸ்லிம்)

குறிப்பு; இமாம் நின்று தொழுதால் நின்று தொழ வேண்டும், அவர் அமர்ந்து தொழுதால் அமர்ந்து தொழ வேண்டும் என்பது ஆரம்பத்தில் இருந்த சட்டம், நபியவர்கள் மரணத் தருவாயில் இருந்தபோது அவர்கள் அமர்ந்து தொழுவிக்க, நபித் தோழர்கள் நின்று தொழுதார்கள். கடைசியாக நடந்த இந்த சட்டம் மூலம் அந்த சட்டம் மாற்றப்பட்டு விட்டது.

 قَالَتْ عَائِشَةَ: فَلَمَّا دَخَلَ الْمَسْجِدَ سَمِعَ أَبُو بَكْرٍ حِسَّهُ، ذَهَبَ يَتَأَخَّرُ، فَأَوْمَأَ إِلَيْهِ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قُمْ مَكَانَكَ، فَجَاءَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى جَلَسَ عَنْ يَسَارِ أَبِي بَكْرٍ قَالَتْ: فَكَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي بِالنَّاسِ جَالِسًا وَأَبُو بَكْرٍ قَائِمًا يَقْتَدِي أَبُو بَكْرٍ بِصَلَاةِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَيَقْتَدِي النَّاسُ بِصَلَاةِ أَبِي بَكْرٍ صحيح مسلم

நபி (ஸல்) அவர்கள் மரணத் தருவாயில் இருக்கும் போது, நபியவர்கள் அபூ பக்ர் (ரழி) அவர்களுக்கு பக்கத்தில் அமர்ந்து தொழுவிக்க, அபூ பக்ர் (ரழி) அவர்கள் நின்ற நிலையில் தக்பீரை மக்களுக்கு கேட்கச் செய்தார்கள், மக்கள் அபூ பக்ர் அவர்களை பின்பற்றி தொழுதார்கள்.  (புஹாரி: 664,687,712, முஸ்லிம்)

இமாமுக்கு முன்னர் ஸுஜூதிலிருந்து தலையைத் தூக்குவது பெரும் பாவமாகும்.

أَبَا هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” أَمَا يَخْشَى أَحَدُكُمْ – أَوْ: لاَ يَخْشَى أَحَدُكُمْ – إِذَا رَفَعَ رَأْسَهُ قَبْلَ الإِمَامِ، أَنْ يَجْعَلَ اللَّهُ رَأْسَهُ رَأْسَ حِمَارٍ، أَوْ يَجْعَلَ اللَّهُ صُورَتَهُ صُورَةَ حِمَارٍ ” صحيح البخاري

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தன் தலையை இமாமுக்கு முன்னாள் உயர்த்தினால், அல்லாஹ் அவருடைய தலையை கழுதையின் தலையாக மாற்றுவதையோ, அல்லது அவரது தோற்றத்தை கழுதையின் தோற்றமாக மாற்றுவதையோ அவர் அஞ்சவேண்டாமா!  (புஹாரி: 691, முஸ்லிம்)

இமாமுக்கு தவறு ஏற்பட்டால் ஆண்கள் ‘ஸுப்ஹானல்லாஹ்’ என்று சொல்வதன் மூலமும், பெண்கள் இடது கையின் மீது வலது கையால் தட்டுவதன் மூலமும் தவறை உணர்த்தலாம்.

عَنْ سَهْلِ  بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَهَبَ إِلَى بَنِي عَمْرِو بْنِ عَوْفٍ لِيُصْلِحَ بَيْنَهُمْ، فَحَانَتِ الصَّلاَةُ، فَجَاءَ المُؤَذِّنُ إِلَى أَبِي بَكْرٍ، فَقَالَ: أَتُصَلِّي لِلنَّاسِ فَأُقِيمَ؟ قَالَ: نَعَمْ فَصَلَّى أَبُو بَكْرٍ، فَجَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالنَّاسُ فِي الصَّلاَةِ، فَتَخَلَّصَ حَتَّى وَقَفَ فِي الصَّفِّ، فَصَفَّقَ النَّاسُ وَكَانَ أَبُو بَكْرٍ لاَ يَلْتَفِتُ فِي صَلاَتِهِ، فَلَمَّا أَكْثَرَ النَّاسُ التَّصْفِيقَ التَفَتَ، فَرَأَى رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَشَارَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنِ امْكُثْ مَكَانَكَ»، فَرَفَعَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ يَدَيْهِ، فَحَمِدَ اللَّهَ عَلَى مَا أَمَرَهُ بِهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ ذَلِكَ، ثُمَّ اسْتَأْخَرَ أَبُو بَكْرٍ حَتَّى اسْتَوَى فِي الصَّفِّ، وَتَقَدَّمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَصَلَّى، فَلَمَّا انْصَرَفَ قَالَ: «يَا أَبَا بَكْرٍ مَا مَنَعَكَ أَنْ تَثْبُتَ إِذْ أَمَرْتُكَ» فَقَالَ أَبُو بَكْرٍ: مَا كَانَ لِابْنِ أَبِي قُحَافَةَ أَنْ يُصَلِّيَ بَيْنَ يَدَيْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا لِي رَأَيْتُكُمْ أَكْثَرْتُمُ التَّصْفِيقَ، مَنْ رَابَهُ شَيْءٌ فِي صَلاَتِهِ، فَلْيُسَبِّحْ فَإِنَّهُ إِذَا سَبَّحَ التُفِتَ إِلَيْهِ، وَإِنَّمَا التَّصْفِيقُ لِلنِّسَاءِ» صحيح البخاري

சஹ்ல் பின் ஸஃத் (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் அம்ரு கோத்திரத்தாரிடம் சமாதானம் பேசுவதற்கு சென்றபோது, தொழுகை நேரம் நெருங்க,பிலால் (ரழி) அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி அபூ பக்ர் (ரழி)  அவர்கள் தொழுவித்தார்கள். இடையில் நபியவர்கள் வர, நபித் தோழர்கள் கையைத் தட்ட ஆரம்பித்தார்கள். அபூ பக்ர் (ரழி)  அவர்கள் தொழுகையில் திரும்பி பார்க்கமாட்டார்கள்.அதிகம் கை தட்டுவதைப் பார்த்து திரும்பி பார்க்கவே, அங்கே நபியவர்கள் இருப்பதைக் கண்டு பின்வாங்க, நபியவர்கள் தொழுவித்தார்கள். தொழுத பிறகு ‘ஏன் அபூ பக்ரே தொழுவிப்பதை  தொடரவில்லை?’ என்று கேட்க, அபூ பக்ரவர்கள்; அல்லாஹ்வின் தூதருக்கு முன்னிலையில் குஹாபாவின் மகனுக்கு தொழுவிக்க என்ன தகுதி!. என்று கேட்டார்கள். பிறகு மக்களை நோக்கி; ‘நீங்கள் ஏன் அதிகம் கையை தட்டினீர்கள், தொழுகையில் ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால், ‘சுப்ஹானால்லாஹ்’ என்று சொல்லட்டும், அப்படி சொன்னால் இமாம் திரும்பிப் பார்ப்பார். கை தட்டுவது பெண்களுக்குறியதே.’ என்று கூறினார்கள்.  (புஹாரி:684, முஸ்லிம்)

ஜமாஅத் நடைபெறும் போது பள்ளியினுள் தொழாமல் இருப்பது கூடாது.

عَنْ جَابِرِ بْنِ يَزِيدَ بْنِ الْأَسْوَدِ، عَنْ أَبِيهِ، أَنَّهُ صَلَّى مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ غُلَامٌ شَابٌّ، فَلَمَّا صَلَّى إِذَا رَجُلَانِ لَمْ يُصَلِّيَا فِي نَاحِيَةِ الْمَسْجِدِ، فَدَعَا بِهِمَا فَجِئَ بِهِمَا تُرْعَدُ فَرَائِصُهُمَا، فَقَالَ: «مَا مَنَعَكُمَا أَنْ تُصَلِّيَا مَعَنَا؟» قَالَا: قَدْ صَلَّيْنَا فِي رِحَالِنَا، فَقَالَ: «لَا تَفْعَلُوا، إِذَا صَلَّى أَحَدُكُمْ فِي رَحْلِهِ ثُمَّ أَدْرَكَ الْإِمَامَ وَلَمْ يُصَلِّ، فَلْيُصَلِّ مَعَهُ فَإِنَّهَا لَهُ نَافِلَةٌ»، سنن أبي داود

யஸீத் பின் அஸ்வத் (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் தொழுது முடிந்த பிறகு, தொழாமல்  பள்ளியின் ஓரத்தில் இருந்த இருவரைக் கண்டபோது, அவ்விருவரையும் அழைத்து, ‘நீங்கள் ஏன் எங்களோடு தொழவில்லை? என்று கேட்க, ‘நாங்கள் எங்கள் இடத்தில் தொழுதோம்’ என்று கூறினார். அப்போது நபியவர்கள் ‘நீங்கள் அப்படி செய்யவேண்டாம், உங்களில் ஒருவர் தம் இடத்தில் தொழுத பிறகு, இமாம் தொழாத நிலையில் அவரை அடைந்துகொண்டால் அவரோடு தொழட்டும், அது அவருக்கு நபிலாக அமையும்.’ என்று கூறினார்கள்.  (அஹ்மத்:17474, அபூதாவுத்:575, திர்மிதீ:219)

தொழுகையை சுருக்கமாக தொழுவிப்பது இமாமின் கடமை, தனிமையில் தொழுதால் விரும்பியவாறு நீட்டி தொழலாம்.

முஆத் (ரழி) அவர்கள் நபிகளாரோடு தொழுதுவிட்டு, தன் கூட்டத்தாரிடம் சென்று அதே தொழுகையை தொழுவிப்பார்கள். ஒரு நாள் இஷாவைத் தொழுவித்தவர்கள் பகராவை ஓத, பின்னே தொழுத ஒரு மனிதர், திரும்பிச் சென்றுவிட்டார். அவரைப் பார்த்து முஆத் (ரழி) அவர்கள் முனாபிக் என்று கூறினார்கள். நபிகளாருக்கு அச்செய்தியை அவர் எடுத்துச் சொல்லவே, நபியவர்கள் ;முஆதே! நீர் குழப்பம் ஏற்படுத்தினீரா?’ என்று கேட்டுவிட்டு, சிறிய சூராக்களை ஓதுமாறு ஏவினார்கள்.  (புஹாரி:701, 6106, முஸ்லிம்)

 أَبُو مَسْعُودٍ، أَنَّ رَجُلًا، قَالَ: وَاللَّهِ يَا رَسُولَ اللَّهِ إِنِّي لَأَتَأَخَّرُ عَنْ صَلاَةِ الغَدَاةِ مِنْ أَجْلِ فُلاَنٍ مِمَّا يُطِيلُ بِنَا، فَمَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي مَوْعِظَةٍ أَشَدَّ غَضَبًا مِنْهُ يَوْمَئِذٍ، ثُمَّ قَالَ: «إِنَّ مِنْكُمْ مُنَفِّرِينَ، فَأَيُّكُمْ مَا صَلَّى بِالنَّاسِ فَلْيَتَجَوَّزْ، فَإِنَّ فِيهِمُ الضَّعِيفَ وَالكَبِيرَ وَذَا الحَاجَةِ» صحيح البخاري

அபூ மஸ்ஊத் (ரழி) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதர் நபிகளாரிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! இன்ன மனிதர் தொழுகையை நீட்டுவதன் காரணமாக நான் சுப்ஹு தொழுகையை விட்டு பிந்திவிடுகிறேன். என்று கூற, கடுமையாக கோபப்பட்ட நபியவர்கள், ‘நீங்கள் விரண்டோடச்  செய்வோராக இருக்கின்றீர்கள், மாறாக நீங்கள் மக்களுக்காக தொழுவித்தால்  இலேசுபடுத்தட்டும், ஏனெனில் அவர்களில் பலவீனரும், முதியவரும், தேவையுடையோரும் இருப்பார்கள்.’ என்று கூறினார்கள்.  (புஹாரி: 90,702, முஸ்லிம்)

عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا صَلَّى أَحَدُكُمْ لِلنَّاسِ، فَلْيُخَفِّفْ، فَإِنَّ مِنْهُمُ الضَّعِيفَ وَالسَّقِيمَ وَالكَبِيرَ، وَإِذَا صَلَّى أَحَدُكُمْ لِنَفْسِهِ فَلْيُطَوِّلْ مَا شَاءَ» صحيح البخاري

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் யாரும் மக்களுக்கு தொழுவித்தால் இலகுபடுத்தட்டும், ஏனெனில் அவர்களில் பலவீனரும், நோயாளியும், பெரியோரும் இருப்பார்கள். தனக்காக (தனிமையில்) தொழுதால் விரும்பியவாறு நீட்டிக் கொள்ளட்டும்.  (புஹாரி: 703, முஸ்லிம்)

 أَبِي قَتَادَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنِّي لَأَقُومُ فِي الصَّلاَةِ أُرِيدُ أَنْ أُطَوِّلَ فِيهَا، فَأَسْمَعُ بُكَاءَ الصَّبِيِّ، فَأَتَجَوَّزُ فِي صَلاَتِي كَرَاهِيَةَ أَنْ أَشُقَّ عَلَى أُمِّهِ»   صحيح البخاري

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் தொழுகைக்காக நின்றால் அதை நீட்டவேண்டும் என்று விரும்புகின்றேன், பிள்ளையின் அழுகை சத்தம் கேட்டு, தாய்க்கு கஷ்டம் வந்துவிடும் என்பதற்காக தொழுகையை சுருக்கிவிடுகிறேன்.  (புஹாரி: 707,868, முஸ்லிம்)

இமாமின் தக்பீர் சத்தத்தை மக்களுக்கு கேட்கச் செய்தல். ஏதோ ஒரு காரணத்தினால் இமாமின் சத்தம் மக்களை சென்றடைவதில் சிரமம் இருந்தால் ஒரு மஃமூமுக்கு அவரது சத்தத்தை உயர்த்துவதன் மூலம் எத்திவைக்கலாம்.

 قَالَتْ عَائِشَةَ: فَلَمَّا دَخَلَ الْمَسْجِدَ سَمِعَ أَبُو بَكْرٍ حِسَّهُ، ذَهَبَ يَتَأَخَّرُ، فَأَوْمَأَ إِلَيْهِ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قُمْ مَكَانَكَ، فَجَاءَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى جَلَسَ عَنْ يَسَارِ أَبِي بَكْرٍ قَالَتْ: فَكَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي بِالنَّاسِ جَالِسًا وَأَبُو بَكْرٍ قَائِمًا يَقْتَدِي أَبُو بَكْرٍ بِصَلَاةِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَيَقْتَدِي النَّاسُ بِصَلَاةِ أَبِي بَكْرٍ صحيح مسلم

நபி (ஸல்) அவர்கள் மரணத் தருவாயில் இருக்கும் போது, நபியவர்கள் அபூ பக்ர் (ரழி) அவர்களுக்கு பக்கத்தில் அமர்ந்து தொழுவிக்க, அபூ பக்ர் (ரழி) அவர்கள் நின்ற நிலையில் தக்பீரை மக்களுக்கு கேட்கச் செய்தார்கள், மக்கள் அபூ பக்ர் அவர்களை பின்பற்றி தொழுதார்கள்.  (புஹாரி: 664,687,712, முஸ்லிம்)

அவசரமின்றி அமைதியாக தொழுகைக்கு சமுகமளித்தல், இமாமோடு அடைந்துகொண்டதை தொழுதல், தவறியதை பூரணப்படுத்தல்.

 عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا سَمِعْتُمُ الإِقَامَةَ، فَامْشُوا إِلَى الصَّلاَةِ وَعَلَيْكُمْ بِالسَّكِينَةِ وَالوَقَارِ، وَلاَ تُسْرِعُوا، فَمَا أَدْرَكْتُمْ فَصَلُّوا، وَمَا فَاتَكُمْ فَأَتِمُّوا» صحيح البخاري

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் இகாமத்தை செவிமடுத்தால் தொழுகைக்காக அமைதியாகவும், சங்கையுடனும் வாருங்கள், அவசரப்பட வேண்டாம். (இமாமோடு) அடைந்து கொண்டதை தொழுங்கள், தவறியதை பூர்த்தியாக்குங்கள்.  (புஹாரி: 636, 908, முஸ்லிம்)

இமாம் ருகூஇல் இருக்கும் நிலையில், அவரை அடைந்தவர் அந்த ரக்அத்தை மீட்டத் தேவையில்லை.

 عَنْ أَبِي بَكْرَةَ، أَنَّهُ انْتَهَى إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ رَاكِعٌ، فَرَكَعَ قَبْلَ أَنْ يَصِلَ إِلَى الصَّفِّ، فَذَكَرَ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «زَادَكَ اللَّهُ حِرْصًا وَلاَ تَعُدْ» صحيح البخاري

அபூ பக்ரா (ரழி) அவர்கள் (பள்ளிக்கு வந்து) நபிகளாரை அடைந்த போது, நபியவர்கள் ருகூஇல் இருக்க, ஸப்பை அடைய முன்னரே ருகூஃ செய்தார்கள். பிறகு நபிகளாரிடம் அதனை கூற, நபியவர்கள், ‘உங்கள் ஆசையை அல்லாஹ் அதிகப்படுத்தட்டும், திருப்பியும் (ஸப்பில் சேர முன்னர்) அப்படி செய்யவேண்டாம்.’ என்று கூறினார்கள்.  (புஹாரி: 783)

இந்த ஹதீஸில் ‘அவர் தொழுத தொழுகையை மீட்ட சொல்லவில்லை என்பதும், ருகூஇல் சேர முடியும் என்பதனாலே நபித்தோழர் அப்படி செய்தார் என்பதுமே‘ ஆதாரமாக கொள்ளப்படுகிறது. அதேநேரம் இந்த ஹதீசை முன்வைத்து ருகூஇல் சேர்ந்தால் ரக்அத் கணிக்கப்படமாட்டாது என்று கூறுவோரும் இருக்கின்றனர்.

இமாமுடன் ஒரு ரக்அத்தை அடைந்து கொண்டவர் ஜமாஅத்தை அடைந்து கொண்டவராவார்.

عَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ أَدْرَكَ رَكْعَةً مِنَ الصَّلاَةِ {مَعَ الْإِمَامِ}، فَقَدْ أَدْرَكَ الصَّلاَةَ» صحيح البخاري

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் இமாமோடு தொழுகையின் ஒரு ரக்அத்தை அடைந்தாரோ அவர் அந்த தொழுகையை (ஜமாஅத்தை) அடைந்துவிட்டார்.  (புஹாரி: 580, முஸ்லிம்)

இமாமுக்குப் பின்னால் ஓதுவதன் சட்டம்.

மௌனமாக ஓதப்படும் தொழுகையில் மஃமூமும் ஓதவேண்டும். சத்தமிட்டு ஓதப்படுவதில் ஓதக்கூடாது.

இமாம் சத்தமிட்டு ஓதுவதில் மஃமூம்கள் ஓதுவதற்காக இமாம் மௌனமாக இருப்பதற்கு எந்த ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களும் வரவில்லை.

குர்ஆன் ஓதப்பட்டால் அதற்கு செவிசாயுங்கள், மௌனமாக இருங்கள்.  (09:204)

 عَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ قَالَ نَبِيِّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: وَإِذَا قَرَأَ فَأَنْصِتُوا ” صحيح مسلم

அபூ மூஸா (ரழி) அவர்கள் நபிகளாரின் தொழுகையை சொல்லிக் கொடுக்கும்போது, ‘இமாம் ஓதினால் நீங்கள் மௌனமாக இருங்கள்’ என்று நபிகளார் கூறியதாக கூறினார்கள்.  (முஸ்லிம்)

 أَبَا هُرَيْرَةَ، يَقُولُ: صَلَّى بِنَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةً، نَظُنُّ (2) أَنَّهَا الصُّبْحُ، فَلَمَّا قَضَى صَلَاتَهُ، قَالَ: ” هَلْ قَرَأَ مِنْكُمْ أَحَدٌ؟ ” قَالَ رَجُلٌ: أَنَا. قَالَ: ” أَقُولُ: مَا لِي أُنَازَعُ الْقُرْآنَ؟ ” قَالَ مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ: ” فَانْتَهَى النَّاسُ عَنِ الْقِرَاءَةِ فِيمَا يَجْهَرُ بِهِ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ” مسند أحمد

அபூ ஹுரைரா(ரழி) அவர்கள் கூறினார்கள்: நபியவர்கள் சத்தமிட்டு ஓதிய ஒரு தொழுகையை முடித்ததும், ‘தற்போது உங்களில் யாரும் என்னுடன் ஒதினாரா?’ என்று கேட்க, ஆம் என்று ஒருவர் கூற, நபியவர்கள் ‘நான் குர்ஆன் ஓதும்போது ஏன் என்னுடன் முரண்பட்டு ஓத வேண்டும்’ என்று கூறினார்கள். மக்கள் சத்தமிட்டு ஓதுவதில் ஓதுவதை தவிர்த்தார்கள்.  (அஹ்மத்: 7270. திர்மிதீ: 312)

இதன் அறிவிப்பாளரான ‘இப்னு உக்மிய்யா‘ என்பவர் அறியப்படாதவர் என்று சிலர் கூறியிருக்கிறார்கள். சுஹ்ரீ போன்ற உறுதியான ஒருவர் அவரைத் தொட்டு அறிவித்திருப்பது போதுமானது என்று ஏனைய ஹதீஸ்கலை அறிஞர்கள் கூறியுள்ளார்கள்.

இமாமாக இருந்து தொழுவிக்க விரும்பும் ஒவ்வொருவரும் இமாமத்தின் சட்டதிட்டங்களை கற்று, இமாமத் செய்வதன் மூலமே இமாம் ஜமாஅத்தின் கூலியைப் பெறலாம்.

                                                                                                                                                                                                                   

சட்டக் கலை பகுதியில் பதியப்படும் இந்தப் பதிவு; 2008 ம் ஆண்டு காலப் பகுதியில் தொகுக்கப்பட்டு, பாடமும் நடத்தப்பட்டது. இப்போது அது ஒரு சில மாற்றங்களுடனே இங்கு பதியப்படுகின்றது. அன்று தொகுக்கப்பட்ட ஆக்கங்கக் எழுத்து வடிவில் பாதுகாக்கப்படாததால் அதன் போடோ பிரதியை இணைத்துள்ளேன்.
தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்டினால் திருத்தி, இன்னும் பயனுள்ளதாக மாற்றலாம்.
அல்லாஹ்வே எம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக!!!

img039img040 img041 img042

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *