سُورَةُ الْهُمَزَةِ 

ஸூரதுல் ஹுமஸா (புறங்கூறல்)

PDF வடிவில் பார்வையிடுவதற்கு இங்கே CILICK செய்யவும்!

பெயர்: ஸூரதுல் ஹுமஸா (குறை கூறுதல்)

இறங்கிய காலப்பகுதி: மக்கீ

வசனங்கள்: 9

وَيْلٌ வய்ல் என்ற சொல்லைக்கொண்டு பல அருத்தங்கள் நாடப்படுகின்றன, நரகில் இருக்கும் ஒரு ஓடை, பள்ளத்தாக்கு, தண்டனை,அழிவைக்குறிக்கும் ஒரு சொல், சோதனைகள்,விரும்பத்தகாதவை நிகழும்போது பாவிக்கப்படும்.

இமாம் பக்ருதீனுர் ராஸி அவர்கள் கூறும் போது; வய்ல் என்பது வெறுப்பையும், இழிவையும் குறிக்கும் சொல்லாகும், வய் என்பதே அடிப்படை, லாமுடன் சேர்க்கப்பட்டுள்ளது, பரிதாப்பபடுவதற்கு ஹா வை சேர்த்து வய்ஹ் என்று பாவிக்கக்கப்படும் என்று கூறினார்கள். (அல்வாஉல் பயான்)

அதற்கு ஆதாரமாக பின்வரும் வசனத்தை அல்வாஉல் பயானில் குறிப்பிட்டுள்ளார்கள்;

மேலும் ஆச்சர்யப்படுவதற்கும், கைசேதப்படுவதற்கும் பாவிக்கப்படும்.

அது பொதுப்படையாக வந்திருப்பதும், எச்சரிக்கையுடன் வந்திருப்பதுமே இந்த வித்தியாசமான கருத்துக்களுக்கு காரணமாகும். எனவே எச்சரிக்கை, தண்டனையுடன் சேர்ந்து வந்திருந்தால் அதுவே நாடப்படும்.

(இந்த கருத்துக்கள் அல்வாஉல் பயானில் பதியப்பட்டவை)

ஹுமஸா, லுமஸா என்றால், அவ்விரண்டும் புறம் பேசுவதைக் குறிக்கும் என்றும், குறை கூறி, புறம் பேசுவதை குறிக்கும் என்றும் கூறியுள்ளனர்.

எனவே லம்ஸ் என்பது புரத்தைப் போன்றல்லாது முன்னிலையில் குறை கூறுதல் என்பதை குறிக்கும் என்பதற்கு இவை சான்றாகும்.

எனவே வித்தியாசமான இரு மோசமான பண்புகளைக்கொண்டவன் வய்ல் என்ற வார்த்தையைக் கொண்டு எச்சரிக்கப்பட தகுதியானவனே.

மேலும் ஹம்ஸ் என்பது கையால் முன்னிலையில் குறைத்து மதிப்பிடுவதற்கும், லம்ஸ் என்பது நாவல் குறை கூறுவதற்கும், கம்ஸ் என்பது கண்ணால் ஜாடை மூலம் குறை சொல்வதற்கும் பாவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இவை அனைத்தும் மற்றவர்களை குறைத்து மதிப்பிடுவதில் பாவிப்பதாகும். (அல்வாஉல் பயான்)

இந்த வசனம் முன்னால் இருக்கும் மோசமான குணத்திற்கு காரணத்தை எடுத்துரைக்கிறது, பணத்தை சேகரிப்பது தவறல்ல, மாறாக அந்தப் பணம் இந்த உலகில் நீடூடிகாலம் வாழ வைக்கும் என்ற எண்ணத்தில் கணக்கிடுவதே தவறாகும், அப்படி இருப்பது பல தவறுகளை இழைப்பதற்கு காரணமாகிவிடும்.

பணத்தை வைத்து இப்படி நினைப்பதே கேவலமாகும், அதுவே அந்த எச்சரிக்கை விடப்படுவதற்கும் காரணமாக இருந்தது, ஏனெனில் அவன் மரணத்தின் பின் எழுப்பப்படுவதை மறுத்துவிட்டான். இது ஸூரா கஹ்பில் இடம்பெறும் நிகழ்வை ஒத்ததாகும். அல்லாஹ் கூறுகின்றான்:

இந்த வசனங்கள் மரணத்தையும், அதற்கு பின்னரான மறுமை வாழ்க்கையையும் மறந்து, நிராகரித்து வாழ்பவன் தன்னை அறியாமல்  மோசமான பண்புகளையுடையவனாக மாறிவிடுவான் என்பதற்கு ஸூரா தகாஸுரின் ஆரம்ப வசனங்கள் போன்று சிறந்த எடுத்துக்காட்டாகும். அல்லாஹ் கூறுகின்றான்

இப்படி உலக வாழ்க்கை நிரந்தரமானது என்று தப்புக்கணக்கிட்டு, வழிதவறி செல்லும் மனிதனை அல்லாஹ் நெறிப்படுத்துவதற்காக பின்வரும் வசனங்களில்  நரகைக் கொண்டு எச்சரிக்கிறான்.

கல்லா என்றால் தப்புக்கணக்கிட்டவனை கண்டிக்கும் முகமாக ‘அவ்வாறு நினைத்தது போன்றல்ல’ என்று கூறிவிட்டு, அவன் நரகில் எறியப்படுவான் என்று எச்சரிக்கிறான்.

ஹுதமா என்பது ‘உடைத்து, நொறுக்குதல்’ என்று அருத்தம் கொண்ட ‘அல் ஹத்ம்’ என்ற அரபு சொல்லிலிருந்து வந்த பெயர் சொல்லாகும். இங்கு நரக நெருப்பு என்று பின்னால் வரும் வசனங்களால் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது, ஏனெனில் நரகம் அதில் வீசப்படும் அனைத்தையும் உடைத்து நொறுக்கிவிட்டு, இன்னும் அதிகம் இருக்கிறதா என்று கேட்கக்கூடியதாகும்.

இந்த கேள்வி நரகை எச்சரிப்பதற்காகும், பொதுவாகவே அல்குர்ஆன் கேள்விகேட்டு உணர்த்தும் ஒரு போக்கை மேட்கொள்ளும், அதற்கு பல உதாரணங்களைப் பார்க்கலாம். அந்த நரகத்தின் அகோரத்தன்மை குர்ஆன் நெடுகிலும் பல இடங்களில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது, இங்கு தொடர்ந்து அல்லாஹ் பின்வரும் வசனங்களைக் கொண்டு தெளிவுபடுத்துகின்றான்.

உடலை சூழ்ந்திருக்கும் நெருப்பின் தாக்கம் உள்ளத்தை சென்றடையும், உள்ளத்தை குறித்து சொல்வதற்கு காரணம், உள்ளமே மனிதன் தப்பாக சிந்தித்து முடிவெடுக்க காரணமாக இருந்தது. அடுத்து அதன் தாக்கம் உள்ளத்தை அடைந்தால் வேதனையின் உச்சத்தை அடையும் என்பதுமே.

நரக வாசிகள் தண்டிக்கப்படும் விதமே இந்த இரண்டு வசனங்கள் மூலம் தெளிவுபடுத்தப்படுகின்றன.

எனவே இந்த ஸூராவில் சொல்லப்பட்ட விடயங்களை வைத்து வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த முயல்வோம்.

ஸூரா ஹுமஸாவின் விளக்கம் முடிவுற்றது.

وَآخِرُ دَعْوَانا أَنِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *