سُورَةِ الْقَارِعَةِ

ஸூரது அல்காரிஆ

PDF வடிவில் பார்வையிடுவதற்கு இங்கே CLICK செய்யவும்!

பெயர்: ஸூரது அல்காரிஆ (திடுக்கிடச் செய்யும் நிகழ்ச்சி)

இறங்கிய காலப் பகுதி: மக்கீ

வசனங்கள்: 11

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)

 اَلْقَارِعَةُ

اَلْقَارِعَةُ     தட்டக்கூடியது/திடுக்கத்தில் ஆழ்த்தக்கூடியது

தட்டக்கூடியது. (101:1)

 مَا الْقَارِعَةُ‌ ۚ‏

مَا     என்ன/எது/ஒன்று

தட்டக்கூடியது என்றால் என்ன? (101:2)

وَمَاۤ اَدْرٰٮكَ مَا الْقَارِعَةُ ؕ‏

 اَدْرٰٮ  அது அறிவித்தது,     كَ    உனக்கு/ உன்னை

(நபியே!) தட்டக்கூடியது என்னவென்று உமக்கு அறிவித்தது எது? (101:3)

அல்காரிஆ என்றால் தட்டக்கூடியது என்பது மொழி அர்த்தம், பயங்கரமான நிகழ்வுகளால் மனித உள்ளங்கள் அதிர்ந்து போகின்ற அளவுக்கு உள்ளங்களை உசுப்பிவிடக்கூடிய நாள் என்பதனால் அல்காரிஆ  என்பதைக் கொண்டு மறுமை நாள் நாடப்படுகின்றது, மறுமை நாளைக் குறிக்கும் இன்னும் ஒரு சில பெயர்களையும் அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது.

الطَّامَّةِ அத்தாம்மா, الصَّاخَّةِ அஸ்ஸாக்கா, الْآزِفَةِ அல் ஆஸிபா, السَّاعَةُ அஸ்ஸாஆ الْغَاشِيَةِ அல் காஷியா இந்த பெயர்கள் ஒவ்வொன்றும் மறுமை நிகழ்வின் பாரதூரத்தை எடுத்துக்காட்டுவதோடு, அந்நிகழ்வுகளை குறித்தே பெயர்களும் பாவிக்கப்பட்டுள்ளன. மொழி அடிப்படையில் அந்த சொற்களுக்கு வித்தியாசமான அர்த்தங்கள் இருக்கின்றன.

وَلَا يَزَالُ الَّذِيْنَ كَفَرُوْا تُصِيْبُهُمْ بِمَا صَنَعُوْا قَارِعَةٌ ‏

…… நிராகரிப்போரை, அவர்கள் செய்திட்ட (தீய)வற்றின் காரணமாக (அவர்கள் திடுக்கிடக் கூடிய) யாதேனுமொரு சம்பவம் அவர்களை வந்தடைந்து கொண்டேயிருக்கும், ….. (13:31)

மறுமை நிகழ்வுகள் பற்றி அல்லாஹ் பின்வருமாறு கூறிக் காட்டுகின்றான்:

يٰۤـاَيُّهَا النَّاسُ اتَّقُوْا رَبَّكُمْ‌ۚ اِنَّ زَلْزَلَةَ السَّاعَةِ شَىْءٌ عَظِيْمٌ‏

மனிதர்களே! நீங்கள் உங்கள் இரட்சகனை பயந்து கொள்ளுங்கள், நிச்சயமாக மறுமை நாளின் அதிர்ச்சி மகத்தானதாகும். (22:1)

يَوْمَ تَرَوْنَهَا تَذْهَلُ كُلُّ مُرْضِعَةٍ عَمَّاۤ اَرْضَعَتْ وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمْلٍ حَمْلَهَا وَتَرَى النَّاسَ سُكٰرٰى وَمَا هُمْ بِسُكٰرٰى وَلٰـكِنَّ عَذَابَ اللّٰهِ شَدِيْدٌ‏

அதனை நீங்கள் காணும் அந்நாளில், பாலூட்டிக் கொண்டிருக்கும் ஒவ்வொருத்தியும், தான் பாலூட்டியதை (குழந்தையை) மறந்து விடுவாள், கர்ப்பமுடைய ஒவ்வொருத்தியும் தன் சுமையை பெற்றெடுத்துவிடுவாள், மேலும் மனிதர்களை (பீதியின் கடுமையால்) போதை பிடித்தவர்களாக நீர் காண்பீர், அவர்கள் (மதுவினால்) போதை பிடித்தவர்கள் அல்லர், மாறாக அல்லாஹ்வுடைய வேதனை மிகக் கடினமானதாகும். (22:2)

اَزِفَتِ الْاٰزِفَةُ‌ۚ‏

நெருங்ககூடியது (உலக முடிவு காலம்) நெருங்கிவிட்டது. (53:57)

لَيْسَ لَهَا مِنْ دُوْنِ اللّٰهِ كَاشِفَةٌ ؕ‏

அல்லாஹ்வைத் தவிர அதனை வெளிப்படுத்தக்கூடியவர் எவரும் இல்லை. (53:58)

அடுத்து, மறுமை நிகழ்வின் பாரதூரத்தை எடுத்துக் காட்டுவதற்காகவே அல்லாஹ் கேள்வியாக கேட்டுவிட்டு மறுமை நிகழ்வுகளைப் பற்றி பின்வருமாறு எடுத்துரைக்கின்றான்;

يَوْمَ يَكُوْنُ النَّاسُ كَالْفَرَاشِ الْمَبْثُوْثِۙ‏

يَوْمَ     ஒரு நாள்/ பகல்,     يَكُوْنُ    இந்த வினைச் சொல்லுக்கு ஒரு எழுவாயும் ஒரு பயனிலையும் வருவது அவசியம்/அவன் இருப்பான்,    النَّاسُ     மக்கள்,     كَ     ஒரு சொல்லின் ஆரம்பத்தில் சேர்ந்து வரும் போது ‘போன்று’ என்ற கருத்தில் வரும்,     الْفَرَاشِ     ஈசல்கள்,     الْمَبْثُوْثِۙ‏     பரப்பப்பட்டது

அந்நாளில் மனிதர்கள் சிதறிக்கிடக்கும் ஈசல்களைப் போல் ஆகி விடுவார்கள். (101:4)

وَتَكُوْنُ الْجِبَالُ كَالْعِهْنِ الْمَنْفُوْشِؕ‏

وَتَكُوْنُ     இன்னும் அது/அவை இருக்கும்,     الْجِبَالُ    மலைகள்,     كَالْعِهْنِ    பஞ்சைப் போன்று,     الْمَنْفُوْشِؕ‏     சாயம் ஏற்றப்பட்டது

மலைகள், கொட்டிய பஞ்சுகளைப்போல் இருக்கும். (101:5)

இந்த வசனங்கள் மூலம் அல்லாஹ், மறுமை நிகழ்வு ஏற்படுகின்ற பொழுது மனிதர்களின் நிலை எப்படி இருக்கும் என்பதைப் பற்றியும், அசைக்க முடியாத மலைகள் எப்படிப்பட்ட நிலையில் இருக்கும் என்பதைப் பற்றியும் எடுத்துரைக்கின்றான்.

மனிதனைப் பொறுத்தவரையில் பரத்திவிடப்பட்ட சிதறிக்கிடக்கும் ஈசல்கள் வெட்டுக்கிளிகளைப் போன்று சிதறி கிடப்பார்கள், மலைகள் வெடித்துச் சிதறி, பறக்கின்ற பஞ்சுகளைப் போன்றிருக்கும்.

அல் பராஷ் என்பது ‘நெருப்பில் விழுந்து பொசுங்கி விடக் கூடிய சிறிய பூச்சிகள்’ என்றும் ‘சிறிய வெட்டுக்கிளிகள்’ என்றும் கூறப்பட்டுள்ளன.

அல்லாஹ் கூறுகின்றான்:

يَخْرُجُوْنَ مِنَ الْاَجْدَاثِ كَاَنَّهُمْ جَرَادٌ مُّنْتَشِرٌۙ‏

பரவிக் கிடக்கும் வெட்டுக் கிளியைப்போல் சமாதிகளிலிருந்து வெளிப்பட்டு வருவார்கள். (54:7)

وَيَوْمَ يُنْفَخُ فِىْ الصُّوْرِ فَفَزِعَ مَنْ فِىْ السَّمٰوٰتِ وَمَنْ فِى الْاَرْضِ اِلَّا مَنْ شَآءَ اللّٰهُ‌ؕ وَكُلٌّ اَتَوْهُ دٰخِرِيْنَ‏

ஸுர் (குழல்) ஊதப்படும் நாளில், அல்லாஹ்(காப்பாற்ற) நாடியவர்களைத் தவிர வானங்களிலுள்ளவர்களும், பூமியிலுள்ளவர்களும் திடுக்கிட்டு விடுவார்கள், ஒவ்வொருவரும் பணிந்தவர்களாக அவனிடம் வந்து விடுவர்.

وَتَرَى الْجِبَالَ تَحْسَبُهَا جَامِدَةً وَّهِىَ تَمُرُّ مَرَّ السَّحَابِ‌ؕ ‏

மேலும் நீர் மலைகளை, அவைகளைத் திடமானவையாக (அசையாததாக) நீர் எண்ணுகிறீர்,(எனினும் அந்நாளின் போது) அவை மேகம் நகர்வது போல் நகர்வதை நீர் காண்பீர், (27:88)

மறுமையில் மனிதனின் நிலை எப்படி இருக்கும் என்று எடுத்துக்காட்டிய அல்லாஹ், மனிதன் இந்த உலகத்தில் செய்த நற்கருமங்கள் அல்லது தீய காரியங்கள் எப்படி நீதமாக கையாளப்படும் என்பதைப் பற்றியும், அவரவர்களுக்கு கிடைக்கவிருக்கும் கூலிகள் பற்றியும் பின்வருமாறு எடுத்துரைக்கின்றான்.

 فَاَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِيْنُهٗ ۙ‏

فَ     ஆகவே/எனவே,    اَمَّا     எழுவாயுடன் சேர்ந்து வரும் மேலதிக எழுத்து,    مَنْ     யார்/எவர்,     ثَقُلَتْ     அது/அவை கனத்துவிட்டது/ன,     مَوَازِيْنُ     தராசுகள்/நிறுவைகள்,   

ஆகவே, எவருடைய (நன்மையின்) எடை கனத்ததோ, (101:6)

 فَهُوَ فِىْ عِيْشَةٍ رَّاضِيَةٍ ؕ‏

فَ     இந்த இடத்தில் அருத்தமில்லை, எழுவாயுடன் اَمَّا என்ற எழுத்து சேர்ந்து வந்தால் இப்படி வரும்,     هُوَ     அவன்,    فِىْ      இல்/ லே,     عِيْشَةٍ     வாழ்க்கை,     رَّاضِيَةٍ ؕ‏     திருப்தியானது/ விருப்பத்திற்குரியது

அவர் திருப்தியுள்ள வாழ்க்கையில் இருப்பார். (101:7)

 وَاَمَّا مَنْ خَفَّتْ مَوَازِيْنُهٗ ۙ‏

مَنْ     யார்/ஒருவன்,     خَفَّتْ     இலேசாகி விட்டது,     مَوَازِيْنُهٗ ۙ‏     அவருடைய நிறுவைகள்

மேலும், எவருடைய (நன்மையின்) எடை இலேசாகிவிட்டதோ, (101:8)

فَاُمُّهٗ هَاوِيَةٌ ؕ‏

اُمُّهٗ     அவரது தாய்/ அவருடைய தங்குமிடம்,     هَاوِيَةٌ ؕ‏     ஹாவியா (நரகின் பெயர்)

அவர் தங்குமிடம் “ஹாவியா” (எனும் நரகம்) தான். (101:9)

 وَمَاۤ اَدْرٰٮكَ مَا هِيَهْ ؕ‏

وَمَاۤ     இன்னும் எது/ஒன்று,     اَدْرٰٮ      அது அறிவித்தது,     مَا هِيَهْ ؕ‏     அது என்னவென்று

அ(ந்த ஹாவியாவான)து என்னவென்று உமக்கு அறிவித்தது எது? (101:10)

 نَارٌ حَامِيَةٌ‏

نَارٌ     நெருப்பு,     حَامِيَةٌ‏     கடும் சூடானது

(அதுதான்) கடுமையாக சூடேற்றப்பட்ட (நரக) நெருப்பாகும். (101:11)

இந்த வசனங்கள் மூலம் பல பாடங்கள் புகட்டப்படுகின்றன,

மறுமையில் மனிதனது செயற்பாடுகள் தராசுகளை கொண்டு நிறுக்கப்படும், அந்த தராசுகளைப் பற்றி அல்லாஹ் கூறும் பொழுது ‘அது நீதமாக நியாயமாக நிறுக்கக்கூடிய தராசுகள்’ என்று சொல்கிறான், அது பற்றிய சில வசனங்களைப் பார்ப்போம்!

அது நீதமானது, சிறிய செயல்களையும் துல்லியமாக நிறுத்துவிடும்;

وَنَضَعُ الْمَوَازِيْنَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيٰمَةِ فَلَا تُظْلَمُ نَـفْسٌ شَيْــٴًـــا‌ ؕ وَاِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ اَتَيْنَا بِهَا‌ ؕ وَكَفٰى بِنَا حٰسِبِيْنَ‏

மேலும், மறுமை நாளில் நீதமான தராசுகளை நாம் வைப்போம், எந்த ஓர் ஆத்மாவும் (எதையும் குறைத்தோ, கூட்டியோ) சிறிதளவும் அநியாயம் செய்யப்படமாட்டாது, (நன்மையோ, தீமையோ) ஒரு கடுகின் வித்தளவு அது இருந்தபோதிலும், அதனையும் நிறுக்கக்) கொண்டு வருவோம், கணக்கெடுப்பவர்களில் (நமக்கு) நாமே போதும், (கணக்கெடுக்க மற்றவரின் உதவி நமக்குத் தேவையில்லை.) (21:47)

وَالْوَزْنُ يَوْمَٮِٕذِ اۨلْحَـقُّ‌ ۚ فَمَنْ ثَقُلَتْ مَوَازِيْنُهٗ فَاُولٰۤٮِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ‏

மேலும், (ஒவ்வொருவரின் நன்மை தீமைகளையும்) அந்நாளில் (கூடுதல் குறைவின்றி) எடைபோடுவது உண்மையாகும், அப்போது எவர்களுடைய (நன்மையின்) எடைகள் கனத்தனவோ அவர்கள்தாம் நிச்சயமாக வெற்றியாளர்கள். (7:8)

وَمَنْ خَفَّتْ مَوَازِيْنُهٗ فَاُولٰۤٮِٕكَ الَّذِيْنَ خَسِرُوْۤا اَنْفُسَهُمْ بِمَا كَانُوْا بِاٰيٰتِنَا يَظْلِمُوْنَ‏

இன்னும், எவர்களுடைய நன்மையின் எடைகள் (கனம் குறைந்து) இலோசாக இருக்கின்றனவோ அத்தகையோர், நம்முடைய வசனங்களை பொய்யாக்கிக் கொண்டிருந்ததன் காரணமாக அவர்கள் தங்களுக்குத் தாமே நஷ்டமிழைத்துக் கொண்டவர்கள் ஆவர். (7:9)

فَاِذَا نُفِخَ فِى الصُّوْرِ فَلَاۤ اَنْسَابَ بَيْنَهُمْ يَوْمَٮِٕذٍ وَّلَا يَتَسَآءَلُوْنَ‏

ஆகவே சூர் (குழல்), ஊதப்பட்டால், அந்நாளில் அவர்களுக்கிடையில் பந்தங்கள் (பயனளிப்பது) இல்லை, ஒருவரின் செய்தியை மற்றொருவர் விசாரிக்கவும் மாட்டார்கள், (ஒவ்வொருவருக்கும் அவரவர் கவலையே பெரிதாக இருக்கும்). (23:101)

فَمَنْ ثَقُلَتْ مَوَازِيْنُهٗ فَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ‏

எவர்களுடைய (நன்மையின்) எடைகள் கனமாக இருக்கின்றனவோ அவர்கள்தாம் வெற்றியாளர்கள். (23:102)

وَمَنْ خَفَّتْ مَوَازِيْنُهٗ فَاُولٰٓٮِٕكَ الَّذِيْنَ خَسِرُوْۤا اَنْفُسَهُمْ فِىْ جَهَـنَّمَ خٰلِدُوْنَ‌ ۚ‏

இன்னும் எவர்களுடைய (நன்மையின்) எடைகள் கனம் குறைந்து இருக்கின்றனவோ, அவர்கள் தங்களுக்குத் தாங்களே நஷ்டத்தையுண்டு பண்ணிக் கொண்டவர்கள் (அவர்கள்) நரகத்தில் நிரந்தரமாக (த்தங்கி) இருப்பவர்கள். (23:103)

تَلْفَحُ وُجُوْهَهُمُ النَّارُ وَهُمْ فِيْهَا كٰلِحُوْنَ‏

அவர்களுடைய முகங்களை (நரகத்தின்) நெருப்புப் பொசுக்கும், அதில் அவர்கள் விகாரமானவர்களாகவும் இருப்பார்கள். (23:104)

அடுத்து மறுமையைப் பற்றிய நம்பிக்கையில் பொதுவாகவே நாம் நம்ப வேண்டிய அடிப்படை, ‘அல்லாஹ் யாருக்கும் கடுகளவேனும் அநியாயம் இழைக்க மாட்டான், அதே போன்று ஒரு மனிதன் செய்த செயல் அணுவளவாக இருந்தாலும் அது நல்லதோ கெட்டதோ அனைத்தையும் அல்லாஹ் கொண்டு வந்து சேர்ப்பான்’ என்ற அடிப்படையாகும்.

அல்லாஹ் அல்குர்ஆனிலே பின்வருமாறு கூறுகின்றான்:

اِنَّ اللّٰهَ لَا يَظْلِمُ مِثْقَالَ ذَرَّةٍ‌ ۚ وَاِنْ تَكُ حَسَنَةً يُّضٰعِفْهَا وَيُؤْتِ مِنْ لَّدُنْهُ اَجْرًا عَظِيْمًاؔ‏

நிச்சயமாக அல்லாஹ் (யாருக்கும்) ஓர் அணுவளவும் அநியாயம் செய்ய மாட்டான், இன்னும், (ஓர் அணுவளவுள்ள) அது நன்மையாக இருந்தால் அதனை இரட்டிப்பாக்கி தன்னிடத்திலிருந்து மகத்தான நற்கூலியைக் கொடுக்கின்றான். (4:40)

اِنَّ اللّٰهَ لَا يَظْلِمُ النَّاسَ شَيْــٴًــا وَّلٰـكِنَّ النَّاسَ اَنْفُسَهُمْ يَظْلِمُوْنَ‏

நிச்சயமாக அல்லாஹ் மனிதர்களுக்கு கொஞ்சமும் அநீதமிழைக்கமாட்டான், எனினும் மனிதர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொள்கின்றனர். (10:44)

وَوُضِعَ الْكِتٰبُ فَتَرَى الْمُجْرِمِيْنَ مُشْفِقِيْنَ مِمَّا فِيْهِ وَ يَقُوْلُوْنَ يٰوَيْلَـتَـنَا مَالِ هٰذَا الْـكِتٰبِ لَا يُغَادِرُ صَغِيْرَةً وَّلَا كَبِيْرَةً اِلَّاۤ اَحْصٰٮهَا‌ ۚ وَوَجَدُوْا مَا عَمِلُوْا حَاضِرًا‌ ؕ وَ لَا يَظْلِمُ رَبُّكَ اَحَدًا‏

(செயல்கள் பதியப்பட்ட) புத்தகமும் (அவர்கள் முன்) வைக்கப்படும், அப்போது அதில் இருப்பதைக் கண்டு பயந்தவர்களாக குற்றவாளிகளை நீர் காண்பீர், மேலும், அவர்கள் எங்களுடைய கேடே “இந்தப் புத்தகத்திற்கு என்ன நேர்ந்தது?” (எங்களுடைய பாவங்கள்) சிறிதோ, பெரிதோ அதைக் கணக்கெடுத்(துபதிந்)தே தவிர, அது விட்டுவைக்கவில்லை, எனக் கூறுவார்கள், அவர்கள் செய்தவற்றை (எதிரில்) முன் வைக்கப்பட்டதாகவும் பெறுவார்கள், இன்னும், உமதிரட்சகன் எவருக்கும் அநியாயம் செய்ய மாட்டான். (18:49)

يٰبُنَىَّ اِنَّهَاۤ اِنْ تَكُ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ فَتَكُنْ فِىْ صَخْرَةٍ اَوْ فِى السَّمٰوٰتِ اَوْ فِى الْاَرْضِ يَاْتِ بِهَا اللّٰهُ ‌ؕ اِنَّ اللّٰهَ لَطِيْفٌ خَبِيْرٌ‏

“என்னருமை மைந்தனே! நிச்சயமாக அது (நன்மையோ, தீமையோ) கடுகின் வித்தளவாக இருப்பினும் (சரி) அது ஒரு பாறைக்குள் அல்லது வானங்களில் அல்லது பூமியில் (மறைந்து) இருந்த போதிலும் (கேள்வி கணக்கின் போது) அல்லாஹ் அதனைக் கொண்டுவந்துவிடுவான், (ஏனென்றால்,) நிச்சயமாக அல்லாஹ் வெகு நுட்பமான (அறிவுடைய)வன், நன்கு உணர்பவன். (31:16)

فَمَنْ يَّعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَّرَهٗ ؕ‏

எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மையைச் செய்தாரோ அவர் (மறுமையில்) அத(ன்பய)னைக் கண்டு கொள்வார். (99:7)

وَمَنْ يَّعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَّرَهٗ‏

இன்னும், எவர் ஓர் அணுவளவு தீமையைச் செய்தாரோ அவர் (மறுமையில்) அத(ன் கேடி)னைக் கண்டு கொள்வார். (99:8)

அடுத்து இந்த வசனங்களில் வரும் ‘மவாஸீன்’ தராசுகள் என்ற பன்மை சொல்லைக் கொண்டு நாடப்பட்டிருப்பது, ‘மனிதனின் செயல்கள்தான்’ என்பதை இப்னு கஸீர் இமாமவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

அடுத்து மனிதனின் பலவகையான செயல்களை நிறுப்பதற்கு பல தராசுகள் வைக்கப்படும் என்பதும் அல்குர்ஆன் தெளிவாக சொல்லித்தரும் ஒரு விடயமாகும். (அல்வாஉல் பயான்,அல் அன்பியாஃ விளக்கம்)

அடுத்து, நன்மைகள் நிறுக்கப்படுகின்ற தராசுகள் நன்மைகளால் கனத்து, சுவன பாக்கியம் பெறுகின்ற நல்ல மனிதர்கள், இன்பகரமான மகிழ்ச்சிகரமான திருப்திகரமான ஒரு வாழ்க்கையை சுவனலோகத்தில் வாழுவார்கள் என்பது இந்த வசனம் நல்ல மனிதர்களுக்கு சொல்லுகின்ற நற்செய்தியாகும்.

அல்குர்ஆனில் அல்லாஹ் சுவன இன்பங்களைப் பற்றி கூறுகின்ற சில வசனங்கள் பின்வருமாறு;

فَلَا تَعْلَمُ نَفْسٌ مَّاۤ اُخْفِىَ لَهُمْ مِّنْ قُرَّةِ اَعْيُنٍ‌ۚ جَزَآءًۢ بِمَا كَانُوْا يَعْمَلُوْنَ‏

ஆகவே, அவர்கள் செய்து கொண்டிருதவற்றிற்க்குக் கூலியாக, அவர்களுக்காக மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கண்களின் குளிர்ச்சியை எந்த ஒரு ஆத்மாவும் அறியாது. (32:17)

وَلَـكُمْ فِيْهَا مَا تَشْتَهِىْۤ اَنْفُسُكُمْ وَلَـكُمْ فِيْهَا مَا تَدَّعُوْنَ ؕ‏

நாங்கள் உலக வாழ்விலும், மறுமையிலும் உங்களுக்கு உதவியாளர்கள், அ(ச்சுவனத்)தில் உங்கள் மனம் விரும்பியவை உங்களுக்குண்டு, இன்னும், அதில் நீங்கள் தேடுகின்றவை உங்களுக்குண்டு. (41:31)

لَهُمْ فِيْهَا فَاكِهَةٌ وَّلَهُمْ مَّا يَدَّعُوْنَ‌ ۖ‌ۚ‏

அதில் அவர்களுக்கு (விதவிதமான) கனிவர்க்கங்களுண்டு, இன்னும், அவர்கள் வேண்டுவன(யாவும்) அவர்களுக்குண்டு. (36:57)

நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் கூறுகின்றான்: “எனது நல்லடியார்களுக்கு; எந்தக் கண்ணும் கண்டிராத, எந்த காதுகளும் கேட்டிறாத, எந்த மனித உள்ளங்களிலும் ஊசலாட்டம் பெறாதவைகளை சுவனத்தில் நான் ஏற்பாடு செய்திருக்கின்றேன்.” (புகாரி:3244, முஸ்லிம்)

அடுத்து, நன்மைகளின் தராசு பாரம் குறைந்து, பாவங்களின் தராசு கனமாகின்ற பாவிகள் நுழையும் இடம் நரகம் தான் என்று அல்லாஹ் எச்சரிக்கின்றான்.

فَأُمُّهُ هَاوِيَةٌ  என்ற வசனத்திற்கு விளக்கமாக சில அறிஞர்கள், ‘அவன் ஒதுங்கும் இடம் நரகம்’ என்றும், ஹாவியா என்பதை கொண்டு நரகமே நாடப்படுகிறது என்றும் கூறினர், இன்னும் சில அறிஞர்கள், ‘உம்முஹு என்பதைக் கொண்டு அவனது தலை நாடப்பட்டிருக்கின்றது, ஹாவியா என்பது ‘ஹுவிய்’எனும் விழுதல் என்ற கருத்து கொண்ட சொல்லில் இருந்து வந்தது, எனவே அவன் நரகில் தலை கீழாக எறியப்படுவான்’ என்றும் விளக்கம் கூறினர்.

இமாம் ஷன்கீதி அவர்கள் கூறும் போது; அது நரகமே, அதில் அவன் தலை கீழாக வீசப்படுவான் என்று இரண்டு கருத்தையும் சேர்த்து கூறினார்கள். ஹாவியா என்றால் அடுத்த வசனத்தில்  ‘சூடான நெருப்பு’என்று தெளிவாக  சொல்லப்பட்டிருக்கிறது. மேலும் அவன் வீசப்படுவான் என்பதும் பின்வரும் வசனத்தில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது என்று விளக்கினார்கள்.

كَلَّا‌ لَيُنْۢبَذَنَّ فِى ‏الْحُطَمَةِؗۖ

(பொருளைச் சேகரித்து வைத்துக்கொண்டு உலகில் அவனை நிலைத்திருக்கச் செய்யுமென்று எண்ணியிருந்தானே) அவ்வாறன்று! (அல்லாஹ்வின் மீது சத்தியமாக) ஹூதமாவில் அவன் எறியப்படுவான்.(104:4)

وَمَاۤ اَدْرٰٮكَ مَا الْحُطَمَةُ ؕ‏

(நபியே!) “ஹூதமா” என்றால் என்னவென்று உமக்கு அறிவித்தது எது? (104:5)

نَارُ اللّٰهِ الْمُوْقَدَةُ ۙ‏

மூட்டப்பட்டுக் கொண்டிருக்கும் அல்லாஹ்வின் (நரக) நெருப்பு.(104:6) (அல்வாஃ)

நரகை எச்சரிக்கும் சில நபி மொழிகள் பின்வருமாறு;

நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: ‘நீங்கள் உலகில் மூட்டுகின்ற நெருப்பு, நரக நெருப்பின் எழுபதில் ஒரு பகுதியாகும்’ அப்போது அல்லாஹ்வின் தூதரே! ‘அந்த ஒரு பகுதியே தண்டிப்பதற்கு போதுமானதே’ என்று நபித்தோழர்கள் கேட்ட போது, ‘அதன் மீது 69 மடங்கால் அது சூடேற்றப்படும், அவை ஒவ்வொன்றும் அந்த ஒரு பங்கின் சூட்டைப் போன்றது.’ என்று கூறினார்கள். (புகாரி3265, முஸ்லிம்)

நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: நரகவாசிகளுள் மிகவும் இலகுவாக தண்டிக்கப்படக் கூடியவர், மூளை கொதிக்கும் அளவுக்கு இட்டுச் செல்லும் நெருப்பினாலான இரண்டு செருப்புகள் அணிவிக்கப்படும் ஒருவராவார்.’ (புகாரி:6561, முஸ்லிம்)

நபிஸல் அவர்கள் கூறினார்கள்: நரகம் தன்னுடைய இரட்சகனிடத்தில், ‘இறைவா! என் ஒரு பகுதி ஒரு பகுதியை சாப்பிட்டு விடுகின்றது.’ என்று கூறவே! அல்லாஹ் அதற்கு,  குளிர் காலத்தில் ஒரு மூச்சு, கோடை காலத்தில் ஒரு மூச்சு என்ற அடிப்படையில் இரண்டு மூச்சுகளை விட அவகாசம் கொடுத்தான், எனவே நீங்கள் காணுகின்ற கடுமையான குளிர், நீங்கள் காணுகின்ற கடுமையான உஷ்ணம் நரகத்தின் சூட்டில் உள்ளதாகும்.’ (புகாரி:3260, முஸ்லிம்)

நபி ஸல் அவர்கள்,  உஷ்ணம் கடுமையாகி விட்டால், ‘நீங்கள் தொழுகையை தாமதப்படுத்துங்கள், ஏனெனில் கடுமையான உஷ்ணம் நரக நெருப்பின் ஜுவாலை.’ என்று கூறுவார்கள். (புகாரி:533, முஸ்லிம்)

ஸூரா அல்காரிஆவின் விளக்கம் முற்றுப் பெற்றது.

وَآخِرُ دَعْوَانا أَنِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *