ஆண் பிள்ளைகள் பூப்பெய்வதற்கான அடையாளங்களும், அதன் சட்டங்களும்!
PDF வடிவில் பார்வையிட இங்கே CLICK செய்யவும்!
சிறுபராயத்தில் இருக்கும் ஒருவன் இளமைப் பருவத்தை அடைதல் பூப்பெய்தல் எனப்படும், அந்த கட்டத்தை ஒருவன் அடைவதே இஸ்லாத்தில் உள்ள கடமைகள் அவன் மீது கடமையாவதற்கான வயதெல்லையாகும்.
இபாதத்துகள் கடமையாக்குதல்.
அஜ்னபீ மஹ்ரமி ஆண்கள் பெண்களின் சட்டங்கள் அமுலாகுதல்.
அனாதையாக இருப்பின் சொத்துக்கள் கையில் கொடுக்கப்படுதல்.
இஸ்லாத்தின் பார்வையில் தண்டனைகள் நிறைவேற்றப்படுவதற்கு, குற்றம் பிடிக்கப்படுவதற்குமான வயதெல்லை.
- அதன் அடையாளங்களை மூன்றாக நோக்கலாம்;
- இந்திரியம் வெளிப்படுதல். தூக்கத்திலோ விழிப்பிலோ முதல் தடவையாக வெளிப்படுத்தல்.
وَاِذَا بَلَغَ الْاَطْفَالُ مِنْكُمُ الْحُـلُمَ فَلْيَسْتَـاْذِنُوْا كَمَا اسْتَـاْذَنَ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْؕ كَذٰلِكَ يُبَيِّنُ اللّٰهُ لَـكُمْ اٰيٰتِهٖؕ وَاللّٰهُ عَلِيْمٌ حَكِيْمٌ
இன்னும் உங்களிலுள்ள குழந்தைகள் பருவ வயதை அடைந்துவிட்டால் அவர்களும், தங்களுக்கு (வயதில்) மூத்தவர்கள் அனுமதி கேட்பது போல் அனுமதி கேட்க வேண்டும்; இவ்வாறே அல்லாஹ் தன்னுடைய வசனங்களை உங்களுக்கு விவரிக்கின்றான்; அல்லாஹ் (யாவற்றையும்) அறிந்தவன்; ஞானம் மிக்கவன். (24:59)
இந்த வசனத்தில் (பருவ வயது) என்பதை குறிக்க அரபியில் பயன்படுத்தப்பட்டுள்ள சொல் ‘அல் ஹுல்ம்’ என்பதாகும். அதன் அர்த்தமே ‘இந்திரியம் வெளிப்படுவதற்கான ஒரு காரணியை கனவில் கண்டு இந்திரியம் முதல் முறையாக வெளிப்படுவது’ என்பதுதான்.
2. மருமஸ்தானத்தை சுற்றி, கமக்கட்டு பகுதியில் மயிர் முளைத்தல்.
அதிய்யதுல் குரலி (ரலி) அவர்கள் கூறினார்கள்: குரைலா யுத்தம் முடிவடைந்த போது நாங்கள் நபிகளாரிடம் எடுத்துக் காட்டப்பட்டோம், மயிர் முளைத்திருந்தோர் கொலைசெய்யப்பட்டனர், மயிர் முளைக்காதோர் விடுவிக்கப்பட்டனர், நானும் மயிர் முளைக்காதவர்களில் ஒருவனாக இருந்து விடுவிக்கப்பட்டேன். (ஆதாரம்: அஹ்மத்:18776, திர்மிதி:1584)
3. ஹிஜ்ரி கணக்குப்படி பதினைந்தாவது வயதை அடைதல்.
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: உஹது யுத்த நேரம் அவர்கள் யுத்தம் செய்வதற்காக நபிகளாரிடம் எடுத்துக்காட்டப்பட்டார்கள், அவர்களது வயது பதிநான்காக இருந்தது, நபியவர்கள் அனுமதி வழங்க வில்லை. கந்தக் யுத்தத்தின் போது எடுத்துக்காட்டப்படவே நபியவர்கள் அனுமதி கொடுத்தார்கள், அவர்களது வயது பதினைந்தாக இருந்தது. (ஆதாரம்: புஹாரி:2664, முஸ்லிம்)
- ஒருவருக்கு இந்திரியம் வெளிப்பட்டால் அவர் தொழுவதாக இருந்தால், மஸ்ஜிதில் தரிப்பதாக இருந்தால் காடடாயம் குளிக்க வேண்டும்.
அவர் கடமையான குளிப்பை நிறைவேற்ற தனி முறையையும் இஸ்லாம் காட்டி தந்துள்ளது, அந்த முறை பின் வருமாறு;
A- ஒரு மனிதன் கடமையான குளிப்பை நிறைவேற்றும் எண்ணத்துடன் முழு உடலையும் தண்ணீரால் கழுவினால் அவனது கடமை நீங்கிவிடும்.
B- ஆனாலும் அதற்கான ஒழுங்கு முறைகளை நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்துள்ளார்கள், அவற்றை கவனிப்பதன் மூலமே குளிப்பை வணக்கமாக்கலாம்.
- ஒழுங்குமுறை பின்வருமாறு,
பாத்திரத்திற்குள் கையை நுழைக்க முன் வெளியில் கையை கழுவிவிட்டு, தொழுகைக்கு போன்று வுழூ செய்து கொள்ளல், ஆனால் கால் கழுவுவதை மாத்திரம் குளிப்புக்கு பின் வைத்துக்கொள்ளல். அதனையும் குளித்த இடத்தை மாற்றி கழுவுதல்.
நபிகளாரின் மனைவி மைமூனா (றழி) அவர்கள் கூறினார்கள்: ‘நபி(ஸல்) அவர்கள் கால்களை விட்டுவிட்டு தொழுகைக்கு வுழூச் செய்வது போன்று வுழூச் செய்வார்கள். மேலும் தங்கள் மர்மஸ்தலத்தையும் உடலில் பட்ட அசுத்தங்களையும் கழுவுவார்கள். பின்னர் தங்களின் மீது தண்ணீரை ஊற்றுவார்கள். பின்னர் சிறிது நகர்ந்து நின்று தங்களின் இரண்டு கால்களையும் கழுவுவார்கள். இதுதான் நபி(ஸல்) அவர்களின் கடமையான குளிப்பாக இருந்தது” (புஹாரி: 248, 249, முஸ்லிம்) பாத்திரத்தில் கையை நுழைக்க முன் கையை வெளியில் கழுவுவார்கள், என்று முஸ்லிமில் வந்துள்ளது.
பிறகு இரு கைகளையும் தண்ணீரில் இட்டு, தலையை குடைந்து விட்டு, தலைக்கு ஆரம்பமாக மூன்று அல்லுகள் ஊற்றுதல், அதிலும் வலதைக் கொண்டு ஆரம்பித்தல், பிறகு முழு உடலையும் கழுவுதல்.
ஆயிஷா (றழி) அவர்கள் கூறினார்கள்: ‘நபி(ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றும்போது முதலாவதாகத் தங்களின் இரண்டு முன்கைகளையும் கழுவுவார்கள். பின்னர் தொழுகைக்கு வுழூச் செய்வது போல் வுழூச் செய்வார்கள். பின்னர் விரல்களைத் தண்ணீரில் மூழ்கச் செய்து அதைக் கொண்டு தலை முடியின் அடிப்பாகத்தைக் கோதுவார்கள். பின்னர் அவர்கள் தலையின் மீது மூன்று முறை கையினால் தண்ணீரைக் கோரி ஊற்றுவார்கள். பின்னர் தங்களின் உடல் முழுவதும் தண்ணீரை ஊற்றுவார்கள்” (புஹாரி: 248…முஸ்லிம்)
மற்றொரு அறிவிப்பில்; பாத்திரத்திலிருந்து தங்களின் கையில் அள்ளித் தங்களின் தலையின் வலப்புறம் ஊற்றுவார்கள். பின்னர் இடப்புறம் ஊற்றுவார்கள். பின்னர் தங்களின் இரண்டு கைகளால் தலையைத் தேய்ப்பார்கள்” (புஹாரி: 258, முஸ்லிம்)
பெண்கள் தலையில் கொண்டை கட்டியிருந்தால் கடமையான குளிப்புக்காக அதனை அவிழ்க்க வேண்டியதில்லை.
உம்மு ஸலமா (றழி) அவர்கள் கூறினார்கள்: நான் அல்லாஹ்வின் தூதரிடம், எனது தலையில் கொண்டை கட்டுபவளாக நான் இருக்கின்றேன், கடமையான குளிப்புக்காக அதனை நான் அவிழ்க்க வேண்டுமா? என்று கேட்க, தேவையில்லை, மாறாக உன் தலை மீது மூன்று அல்லுகளை ஊற்றிவிட்டு, உடலுக்கு ஊற்று, நீ சுத்தமடைவாய். என்று கூறினார்கள். (முஸ்லிம்: 770)
இப்னு உமர் (றழி) அவர்கள், கடமையான குளிப்பின் போது தம் பெண்களுக்கு தலை முடியை அவிழ்க்க சொன்னதை கேள்விபட்ட ஆயிஷா (றழி) அவர்கள் அதனை கண்டித்தார்கள். (முஸ்லிம்: 773)
குளிப்பின் சட்டங்களை முழுக்கவும் பார்வையிட இங்கே CLICK செய்யவும்!