கடமையான தொழுகைக்கு பின்னால் ஓதப்படவேண்டிய திக்ருகள்.
நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்குப் பின்னால் ஓதுவதற்கு நிறைய திக்ருகளைக் காட்டித் தந்துள்ளார்கள். சஹீஹானவைகளோடு பலவீனமானவைகளும் கலந்திருப்பதால் இரண்டையும் வேறுபடுத்தி அறிய முயற்சிக்க வேண்டும்.
சஹீஹான ஹதீஸ்களில் வந்திருக்கும் திக்ருகள்.
عَنْ ثَوْبَانَ، قَالَ: كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِذَا انْصَرَفَ مِنْ صَلَاتِهِ اسْتَغْفَرَ ثَلَاثًا وَقَالَ: «اللهُمَّ أَنْتَ السَّلَامُ وَمِنْكَ السَّلَامُ، تَبَارَكْتَ ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ» صحيح مسلم
சவ்பான் (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் தொழுது முடிந்தால் மூன்று தடவைகள் ‘அஸ்தக்பிருல்லாஹ்’ சொல்லிவிட்டு, ‘அல்லாஹும்ம அன்தஸ் ஸலாம், வமின்கஸ் ஸலாம், தபாரக்த யாதல் ஜலாலி வல் இக்ராம்’ என்று கூறுவார்கள். (முஸ்லிம்)
كَتَبَ المُغِيرَةُ، إِلَى مُعَاوِيَةَ بْنِ أَبِي سُفْيَانَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ فِي دُبُرِ كُلِّ صَلاَةٍ إِذَا سَلَّمَ: «لاَ إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ المُلْكُ، وَلَهُ الحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، اللَّهُمَّ لاَ مَانِعَ لِمَا أَعْطَيْتَ، وَلاَ مُعْطِيَ لِمَا مَنَعْتَ، وَلاَ يَنْفَعُ ذَا الجَدِّ مِنْكَ الجَدُّ» صحيح البخاري
முகீரா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் தொழுகையை முடிக்க ஸலாம் கொடுத்தால், ‘லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹூ லா ஷரீக லஹு, லஹுல் முல்கு, வலஹுல் ஹம்து, வஹுவ அலா குள்ளி ஷைஇன் கதீர், அல்லாஹும்ம லாமானிஅ லிமா அஃதைத, வலா முஃதிய லிமா மனஃத, வலா யன்பஉ தல்ஜத்தி மின்கல் ஜத்து.’ என்று கூறுவார்கள். (புஹாரி: 7292, முஸ்லிம்)
كَانَ ابْنُ الزُّبَيْرِ، يَقُولُ: فِي دُبُرِ كُلِّ صَلَاةٍ حِينَ يُسَلِّمُ «لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللهِ، لَا إِلَهَ إِلَّا اللهُ، وَلَا نَعْبُدُ إِلَّا إِيَّاهُ، لَهُ النِّعْمَةُ وَلَهُ الْفَضْلُ، وَلَهُ الثَّنَاءُ الْحَسَنُ، لَا إِلَهَ إِلَّا اللهُ مُخْلِصِينَ لَهُ الدِّينَ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ» وَقَالَ: «كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُهَلِّلُ بِهِنَّ دُبُرَ كُلِّ صَلَاةٍ» صحيح مسلم
இப்னுஸ் சுபைர் (ரழி) அவர்கள் கூறினார்கள்:நபி (ஸல்) ஒவ்வொரு தொழுகைக்கு பின்னாலும் ‘லாஹவ்ல வலாகுவ்வத இல்லா பில்லாஹ், லாஇலாஹ இல்லல்லாஹு, வலா நஃபுது இல்லா இய்யாஹு, லஹுன் நிஃமது வலஹுல் பள்லு, வளஹுஸ் சனாஉல் ஹசன், லாஇலாஹ இலாஹ இல்லால்லாஹு முக்லிசீன லஹுத் தீன, வலவ் கரிஹல் காபிரூன்.’ என்று கூறுவார்கள். (முஸ்லிம்)
عَنْ كَعْبِ بْنِ عُجْرَةَ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مُعَقِّبَاتٌ لَا يَخِيبُ قَائِلُهُنَّ – أَوْ فَاعِلُهُنَّ – دُبُرَ كُلِّ صَلَاةٍ مَكْتُوبَةٍ، ثَلَاثٌ وَثَلَاثُونَ تَسْبِيحَةً، وَثَلَاثٌ وَثَلَاثُونَ تَحْمِيدَةً، وَأَرْبَعٌ وَثَلَاثُونَ تَكْبِيرَةً» صحيح مسلم
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகைக்குப் பின்னால் சொல்லப்படும் சில திக்ருகள் இருக்கின்றன, அவற்றை கடமையான தொழுகைக்கு பின்னால் சொல்பவர் தோல்வி அடையமாட்டார், ‘முப்பத்து மூன்று தடவை அலாஹ்வை (சுப்ஹானல்லாஹ் என்று கூறி) தச்பீஹ் செய்வதும்,முப்பத்து மூன்று தடவை அலாஹ்வை (அல்ஹம்து லில்லாஹ் என்று கூறி) புகழ்வதும்,முப்பத்து நான்கு தடவை அலாஹ்வை (அல்லாஹு அக்பர் என்று கூறி) தக்பீர் செய்வதுமாகும். (முஸ்லிம்)
عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ سَبَّحَ اللهَ فِي دُبُرِ كُلِّ صَلَاةٍ ثَلَاثًا وَثَلَاثِينَ، وَحَمِدَ اللهَ ثَلَاثًا وَثَلَاثِينَ، وَكَبَّرَ اللهَ ثَلَاثًا وَثَلَاثِينَ، فَتْلِكَ تِسْعَةٌ وَتِسْعُونَ، وَقَالَ: تَمَامَ الْمِائَةِ: لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ غُفِرَتْ خَطَايَاهُ وَإِنْ كَانَتْ مِثْلَ زَبَدِ الْبَحْرِ ” صحيح مسلم
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் ஒவ்வொரு தொழுகைக்கு பின்னாலும், ‘முப்பத்து மூன்று தடவை அலாஹ்வை (சுப்ஹானல்லாஹ் என்று கூறி) தச்பீஹ் செய்வது,முப்பத்து மூன்று தடவை அலாஹ்வை (அல்ஹம்து லில்லாஹ் என்று கூறி) புகழ்ந்து,முப்பத்து மூன்று தடவை அலாஹ்வை (அல்லாஹு அக்பர் என்று கூறி) தக்பீர் செய்து, (அவை தொன்னூற்றி ஒன்பதாகும்) நூறை பூர்த்தியாக்க, ‘லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹூ லா ஷரீக லஹு, லஹுல் முல்கு, வலஹுல் ஹம்து, வஹுவ அலா குள்ளி ஷைஇன் கதீர்’ என்று சொல்கின்றாரோ, அவரது பாவங்கள் கடல் நுரையளவு இருந்தாலும், அவை மன்னிக்கப்படும். (முஸ்லிம்)
عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، قَالَ: «أَمَرَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ أَقْرَأَ بِالْمُعَوِّذَاتِ دُبُرَ كُلِّ صَلَاةٍ» سنن أبي داود
உக்பதுப்னு ஆமிர் (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள், ஐந்து நேரத் தொழுகைக்குப் பின்னாலும் முஅவ்விதாத்களை (சூரா நாஸ், பலக், இக்லாஸ்) ஓதுமாறு ஏவினார்கள். (அஹ்மத்:17792, அபூதாவுத்: 1523)
عَنِ الْبَرَاءِ، قَالَ: كُنَّا إِذَا صَلَّيْنَا خَلْفَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَحْبَبْنَا أَنْ نَكُونَ عَنْ يَمِينِهِ، يُقْبِلُ عَلَيْنَا بِوَجْهِهِ، قَالَ: فَسَمِعْتُهُ يَقُولُ: «رَبِّ قِنِي عَذَابَكَ يَوْمَ تَبْعَثُ – أَوْ تَجْمَعُ – عِبَادَكَ». صحيح مسلم
பராஃ பின் ஆஸிப் (ரழி) அவர்கள் கூறினார்கள்: நாங்கள் நபிகளாருக்கு பின்னால் தொழுதால் அவர்களது வலப்பக்கத்தில் இருப்பதை விரும்புவோம், ஏனெனில் அவரகள் (அப்பக்காத்தாலே) எங்களை முன்னோக்குவார்கள். அவர்கள் ‘ரப்பி கினீ அதாபக யௌம தப்அசு இப்பாதக’ என்று சொல்வதை நான் கேட்டிருக்கின்றேன். (முஸ்லிம்)
عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ، أَنَّ رَسُولَ صَلَّى عَلَيْهِ وَسَلَّمَ أَخَذَ بِيَدِهِ، وَقَالَ: «يَا مُعَاذُ، وَاللَّهِ إِنِّي لَأُحِبُّكَ، وَاللَّهِ إِنِّي لَأُحِبُّكَ»، فَقَالَ: ” أُوصِيكَ يَا مُعَاذُ لَا تَدَعَنَّ فِي دُبُرِ كُلِّ صَلَاةٍ تَقُولُ: اللَّهُمَّ أَعِنِّي عَلَى ذِكْرِكَ، وَشُكْرِكَ، وَحُسْنِ عِبَادَتِكَ ” سنن أبي داود
முஆத் (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபியவர்கள் எனது கையைப் பிடித்தவராக, ‘முஆதே அல்லாஹ்வின் மீது ஆணையாக உங்களை நான் நேசிக்கிறேன், அல்லாஹ்வின் மீதுஆணையாக உங்களை நான் நேசிக்கிறேன்,’ ‘முஆதே ‘அல்லாஹும்ம அஇன்னீ அலா திக்ரிக வஷுக்ரிக, வஹுஸ்னி இபாததிக’ என்று ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும் சொல்வதை நீர் விட்டுவிடாதீர். என்று நான் உங்களுக்கு அறிவுரை செய்கிறேன். என்று கூறினார்கள். (அஹ்மத்:22119, அபூதாவுத்:1522)
முஅவ்விசதைனை (நாஸ், பலக்) ஓதுமாறு சொன்னதாக திர்மிதியில் வரும் அறிவிப்பில் ‘இப்னு லஹீஅஹ்‘ இடம்பெற்றுள்ளார், அவர் பலவீனமானவர்.
தொழுகைக்குப் பின் ஓதுவதில் கருத்து வேற்றுமை உள்ள திக்ருகள்.
ஸலாம் கொடுத்ததும் ‘அல்லாஹு அக்பர்’ என்று ஒரு விடுத்தம் சொல்லுதல்.
عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: «كُنْتُ أَعْرِفُ انْقِضَاءَ صَلاَةِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالتَّكْبِيرِ» صحيح البخاري
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபிகளார் தொழுது முடித்துவிட்டார்கள் என்பதை தக்பீரைக் கொண்டே நான் அறிந்து கொள்வேன். (புஹாரி: 842, முஸ்லிம்)
குறிப்பு:- இந்த ஹதீஸை வைத்தே பலர் தொழுகை முடிந்தவுடன் ‘அல்லாஹு அக்பர்’ என்று சத்தமிட்டு ஒரு விடுத்தம் சொல்கின்றனர்.
ஆனால் இது ஹதீசை புரிவதில் ஏற்பட்ட தவறாகும்.
1- தக்பீர் என்பதைக் கொண்டு ‘அல்லாஹு அக்பர்’ என்று புரிவதை விடவும் ‘திக்ர் செய்தல்’ என்று புரிவதே பொருத்தமாகும். ஏனெனில் இதே அறிவிப்பாளர் தொடர்கொண்டு திக்ர் என்ற வாரத்தை பதியப்பட்டுள்ளது.
عَمْرُو بْنُ دِينَارٍ، أَنَّ أَبَا مَعْبَدٍ مَوْلَى ابْنِ عَبَّاسٍ، أَخْبَرَهُ، أَنَّ ابْنَ عَبَّاسٍ أَخْبَرَهُ: «أَنَّ رَفْعَ الصَّوْتِ بِالذِّكْرِ حِينَ يَنْصَرِفُ النَّاسُ مِنَ الْمَكْتُوبَةِ، كَانَ عَلَى عَهْدِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ» وَأَنَّهُ قَالَ: قَالَ ابْنُ عَبَّاسٍ: «كُنْتُ أَعْلَمُ إِذَا انْصَرَفُوا بِذَلِكَ، إِذَا سَمِعْتُهُ» صحيح مسلم
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: கடமையான தொழுகை முடிந்தவுடன் திக்ரை சத்தமிட்டு சொல்வது நபிகளார் காலத்தில் இருந்ததாகும். அதனைக் கொண்டே தொழுகை முடிந்ததை நான் அறிந்து கொள்வேன். (முஸ்லிம்)
2- அடுத்து தக்பீரைக் கொண்டு அறிவதாக அறிவிப்பு செய்த அதே அறிவிப்பாளர் அபூ மஃபத் அவர்கள் ‘நான் அப்படி சொல்லவில்லை’ என்று மறுக்கின்றார்கள். எனவே தக்பீர் என்ற வார்த்தையை விடவும் திக்ர் என்ற வார்த்தை பலமானது.
عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ أَبِي مَعْبَدٍ، مَوْلَى ابْنِ عَبَّاسٍ أَنَّهُ سَمِعَهُ يُخْبِرُ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: «مَا كُنَّا نَعْرِفُ انْقِضَاءَ صَلَاةِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَّا بِالتَّكْبِيرِ» قَالَ عَمْرٌو: ” فَذَكَرْتُ ذَلِكَ لِأَبِي مَعْبَدٍ فَأَنْكَرَهُ، وَقَالَ: لَمْ أُحَدِّثْكَ بِهَذَا، قَالَ عَمْرٌو: وَقَدِ اَخْبَرَنِيهِ قَبْلَ ذَلِكَ ” صحيح مسلم
அபூ ம ஃ பத் அவர்களிடமிருந்து அறிவிக்கும் அறிவிப்பாளரான அமர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:நான் ‘தக்பீரைக் கொண்டு அறிவார்கள்’ என்ற செய்தியை அபூ மஃபத் அவர்களிடம் கூறினேன், அதை அவர்கள் மறுத்து, நான் அப்படி உங்களுக்கு அறிவிக்கவில்லை என்று கூறினார். (முஸ்லிம்)
3- அந்த ஹதீஸில் உள்ள பிரகாரம் ‘அல்லாஹு அக்பர்’ என்று விளங்கினால், அது தொழுகை முடிந்துவிட்டது என்பதை விடவும் தொழுகைக்கு உள்ளே இருக்கிறார்கள் என்பதையே எடுத்துக் காட்டும். ஏனெனில் தொழுகையின் பெரும்பான்மையான அசைவுகளின் போது ‘அல்லாஹு அக்பர்’ என்றே சொல்லப்படுகின்றது.
4- அடுத்து தொழுகைக்குப் பின்னால் ஓதப்படும் திக்ருகள் பொதுப்படையாக அறிவிக்கப்படாமல், வார்த்தைகள் குறிப்பிட்டு அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் எந்த ஒரு ஹதீஸிலும் தெளிவாக ‘ ‘அல்லாஹு அக்பர்’ என்று ஒரு விடுத்தம் சொன்னதாக வரவில்லை.
5- அடுத்து தொழுகையின் திக்ருகளுள் ‘அல்லாஹு அக்பர்’ முப்பத்து மூன்று விடுத்தம் சொல்வதற்கு தனி ஆதாரம் இருக்கும் போது, ஒரு விடுத்தம் தனித்து சொன்னார்கள் என்பது சாத்தியக் குறைவே.
எனவே முன்னால் சொல்லப்பட்ட காரணிகளை வைத்து, ‘அல்லாஹு அக்பர்‘ என்று ஒரு விடுத்தம் சொல்லுதல் என்று விளங்குவதை விடவும், திக்ர் என்பதை விளங்கி, நபிகளாரைத் தொட்டு வந்திருக்கும் திக்ருகளை செய்வதே பொருத்தமானது. அல்லாஹு அஃலம்!
ஆயதுல் குர்ஸி ஓதுதல்
عَنْ أَبِي أُمَامَةَ، رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ قَرَأَ آيَةَ الْكُرْسِيِّ دُبُرَ كُلِّ صَلَاةٍ مَكْتُوبَةٍ لَمْ يَمْنَعْهُ مِنْ دُخُولِ الْجَنَّةِ إِلَّا أَنْ يَمُوتَ» الدعاء للطبراني
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கடமையான ஒவ்வொரு தொழுகைக்கு பின்னரும் யார் ஆயதுல் குர்சியை ஓதுகின்றாரோ அவர் சுவனம் நுழைவதற்கு மரணமே தடையாக இருக்கும். (தப்ரானீ:675, சுனனுல் குப்ரா:9848)
இந்த ஹதீஸ் அறிவிப்பாளரான ‘முஹம்மத் பின் ஹிம்யர்‘ என்பவரை சிலர், ‘நம்பகமானவர்‘ என்றும், சிலர், ‘அவரைக் கொண்டு ஆதாரம் பிடிக்க முடியாது‘ என்றும், சிலர், ‘பலம் அற்றவர்‘ என்றும் கூறியுள்ளனர். இவர் மீது வைக்கப்பட்டுள்ள விமர்சனமே இவர் தனிப்பட்டு அறிவிக்கும் ஹதீஸில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதனை பலப்படுத்த வேறு அறிவிப்புகள் இல்லாததனால் சிலர் அதனை பலவீனப்படுத்துகின்றனர். அவர் புஹாரியின் அறிவிப்பாளர் என்ற அடிப்படையில் பலர் சஹீஹ் என்று கூறுகின்றனர். அல்லாஹு அஃலம்!
இதே ஹதீஸ் அலி (ரழி) வழியாக ‘ஷுஅபுல் ஈமானில்’ பதியப்பட்டுள்ளது. அது மிகவும் பலவீனமானதாகும்.
மேலும் சிலர் அதனை ஓதி நெஞ்சுப்பகுதியில் ஊதிக் கொள்வர், அதற்கு எந்த சான்றுகளும் அறவே வரவில்லை.
சுப்ஹு, மக்ரிப் ஆகிய தொழுகைகளுக்குப் பின்னால் குல் சூராக்களை மூன்று தடவைகள் ஓதுதல்.
அவ்விரண்டு தொழுகைகளையும் குறிப்பிட்டு ஓதுவதற்கு எந்த ஹதீஸ்களும் வரவில்லை. மூன்று தடவைகள் ஓதுமாறு கூறி வந்திருக்கும் ஹதீஸ், காலை மாலை என்றே வந்துள்ளது. தொழுகையின் திக்ர் என்பதும், காலை,மாலை திக்ர் என்பதும் வெவ்வேறானது என்பதைப் புரிந்தால் முடிவுக்கு வந்துவிடலாம்.
عَنْ مُعَاذِ بْنِ عَبْدِ اللهِ بْنِ خُبَيْبٍ، عَنْ أَبِيهِ، قَالَ: خَرَجْنَا فِي لَيْلَةٍ مَطِيرَةٍ وَظُلْمَةٍ شَدِيدَةٍ نَطْلُبُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي لَنَا، قَالَ: فَأَدْرَكْتُهُ، فَقَالَ: قُلْ فَلَمْ أَقُلْ شَيْئًا، ثُمَّ قَالَ: قُلْ، فَلَمْ أَقُلْ شَيْئًا، قَالَ: قُلْ، فَقُلْتُ، مَا أَقُولُ؟ قَالَ: قُلْ: قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ، وَالمُعَوِّذَتَيْنِ حِينَ تُمْسِي وَتُصْبِحُ ثَلاَثَ مَرَّاتٍ تَكْفِيكَ مِنْ كُلِّ شَيْءٍ. سنن الترمذي
அப்துல்லாஹிப்னு குபைப் (ரழி) அவர்கள் கூறினார்கள்: நாங்கள் கரும் மழையும், இருளும் சூழ்ந்த ஒரு இரவில் எங்களுக்கு தொழுவிக்க வேண்டி, நபிகளாரைத் தேடிச் சென்றோம்.அவர்களிடம் சென்றதும், ‘சொல்’ என்றார்கள், மீண்டும் ‘சொல்’ என்றார்கள் நான் ஒன்றும் சொல்லவில்லை. மூன்றாவது தடவையாகவும் ‘சொல்’ என்ற போது, என்ன சொல்வேன்? என்று நான் கேட்கவே, ‘குல்ஹுவல்லாஹு அஹத், பலக், நாஸ் ஆகியவற்றை காலையிலும், மாலையிலும் மூன்று தடவைகள் ஓதும், அது அனைத்துக்கும் போதுமானது’ என்று கூறினார்கள். (திர்மிதீ: 3575)
தொழுகைக்குப் பின் ஓதுவதில் பலவீனமானவை.
‘அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக இல்மன் நாபிஅன்’ என்று சுபஹுக்கு பின்னால் ஓதுதல்.
عَنْ أُمِّ سَلَمَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ: فِي دُبُرِ الْفَجْرِ: «اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا، وَعَمَلًا مُتَقَبَّلًا، وَرِزْقًا طَيِّبًا» مسند أحمد
உம்மு ஸலமா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் சுப்ஹுக்குப் பின் ‘அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக இல்மன் நாபிஅன், வ அமலன் முதகப்பலன், வரிஸ் கன் தையிபா’ என்று சொல்வார்கள். (அஹ்மத்: 26521, இப்னு மாஜா, தபரானீ)
இது மிகவும் பலவீனமான செய்தியாகும். இதில் உம்மு சலாமா அவர்களிடமிருந்து அறிவிக்கும் ‘அவர்களது அடிமை’ யார் என்று அறியப்படாத மஜ்ஹூல் ஆவார்.
‘அல்லாஹும்ம அஜிர்னீ மினன் நார்’ சுப்ஹு, மக்ரிப் பின்னால் மூன்று தடவைகள்.
أَنَّ مُسْلِمُ بْنُ الْحَارِثِ التَّمِيمِيَّ، حَدَّثَهُ عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” إِذَا صَلَّيْتَ الصُّبْحَ، فَقُلْ قَبْلَ أَنْ تُكَلِّمَ أَحَدًا مِنَ النَّاسِ: اللَّهُمَّ أَجِرْنِي مِنَ النَّارِ، سَبْعَ مَرَّاتٍ، فَإِنَّكَ إِنْ مِتَّ مِنْ يَوْمِكَ ذَلِكَ، كَتَبَ اللَّهُ لَكَ جِوَارًا مِنَ [ص:593] النَّارِ، وَإِذَا صَلَّيْتَ الْمَغْرِبَ، فَقُلْ قَبْلَ أَنْ تُكَلِّمَ أَحَدًا مِنَ النَّاسِ: اللَّهُمَّ أَجِرْنِي مِنَ النَّارِ سَبْعَ مَرَّاتٍ، فَإِنَّكَ إِنْ مِتَّ مِنْ لَيْلَتِكَ تِلْكَ، كَتَبَ اللَّهُ لَكَ جِوَارًا مِنَ النَّارِ ” مسند أحمد
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அல்ஹாரிஸ் அத்தமீமீ அறிவிக்கின்றார்கள்: நீ சுப்ஹு தொழுதால் யாரோடும் பேசுவதற்கு முன்னர், ”அல்லாஹும்ம அஜிர்னீ மினன் நார்’ என்று ஏழு தடவைகள் கூறி, அதன் பகல் பொழுதில் நீ மரணித்தால், நரகை விட்டும் பாதுகாப்பு ஒன்றை அல்லாஹ் ஏற்படுத்துவான். மேலும் மக்ரிப் தொழுதுவிட்டு, யாரோடு ம் பேச முன்னர் ”அல்லாஹும்ம அஜிர்னீ மினன் நார்’என்று ஏழு தடவைகள் கூறி, அதன் இராப் பொழுதில் நீ மரணித்தால், நரகை விட்டும் பாதுகாப்பு ஒன்றை அல்லாஹ் ஏற்படுத்துவான். (அஹ்மத்:18054, அபூதாவுத்: 5079)
இதில் வரும் ‘முஸ்லிம் பின் ஹாரிஸ்‘ என்பவர் யார் என்று அறியப்படாத ‘மஜ்ஹூல்‘ ஆவார். எனவே இது மிகவும் பலவீனமானது.
லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹூ……. பாத்து விடுத்தம் சுப்ஹு, மக்ரிபுக்கு பின்னால் சொல்லுதல்.
عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ غَنْمٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: ” مَنْ قَالَ قَبْلَ أَنْ يَنْصَرِفَ وَيَثْنِيَ رِجْلَهُ مِنْ صَلَاةِ الْمَغْرِبِ، وَالصُّبْحِ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، بِيَدِهِ الْخَيْرُ، يُحْيِي وَيُمِيتُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ عَشْرَ مَرَّاتٍ، كُتِبَ لَهُ بِكُلِّ وَاحِدَةٍ عَشْرُ حَسَنَاتٍ، وَمُحِيَتْ عَنْهُ عَشْرُ سَيِّئَاتٍ، وَرُفِعَ لَهُ عَشْرُ دَرَجَاتٍ، وَكَانَتْ حِرْزًا مِنْ كُلِّ مَكْرُوهٍ، وَحِرْزًا مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ، وَلَمْ يَحِلَّ لِذَنْبٍ يُدْرِكُهُ إِلَّا الشِّرْكَ، وَكَانَ مِنْ أَفْضَلِ النَّاسِ عَمَلًا، إِلَّا رَجُلًا يَفْضُلُهُ، يَقُولُ: أَفْضَلَ مِمَّا قَالَ ” مسند أحمد
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் சுப்ஹு, மக்ரிபுக்கு பின்னால் திரும்பி செல்வதற்கு முன்னர், காலை மடித்து அமர்ந்து, ‘லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹூ லாஷரீகலஹூ,லஹுல்முல்கு, வலஹுல் ஹம்து, பியதிஹில் கைர், யுஹ்யீ, வயுமீத், வஹுவ அலா குல்லி ஷைஇன் கதீர்’ என்று கூறினால், பத்து நன்மைகள் எழுதப்பட்டு, பத்து தீமைகள் மன்னிக்கப்பட்டு, பத்து அந்தஸ்துகள் உயர்த்தப்பட்டு, வெறுப்பான அனைத்திலிருந்தும், ஷைத்தானிடமிருந்தும் பதுகாக்கப்பாக அமையும்…. (அஹ்மத்:17990)
இது முர்ஸல் வகையைச் சேர்ந்த ஹதீஸாகும். ‘அப்துர் ரஹ்மான் பின் கனம்‘ என்பவர் நபிகளாராரைக் காணவில்லை. எனவே அது பலவீனமாகும்.
திமிதியில்:3534 ‘உமாரதுப்னு ஷபீப்‘ வழியாக பதியப்பட்டுள்ளது, அதுவும் முர்ஸல் ஆகும்.
இதே திக்ர் ஒரு நாளையில் ஓதுவதற்கும் சஹீஹான அறிவிப்பாளர் தொடரோடு பதியப்பட்டுள்ளது.
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: ” مَنْ قَالَ: لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ المُلْكُ وَلَهُ الحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، فِي يَوْمٍ مِائَةَ مَرَّةٍ، كَانَتْ لَهُ عَدْلَ عَشْرِ رِقَابٍ، وَكُتِبَتْ لَهُ مِائَةُ حَسَنَةٍ، وَمُحِيَتْ عَنْهُ مِائَةُ سَيِّئَةٍ، وَكَانَتْ لَهُ حِرْزًا مِنَ الشَّيْطَانِ يَوْمَهُ ذَلِكَ حَتَّى يُمْسِيَ، وَلَمْ يَأْتِ أَحَدٌ بِأَفْضَلَ مِمَّا جَاءَ بِهِ، إِلَّا أَحَدٌ عَمِلَ أَكْثَرَ مِنْ ذَلِكَ ” صحيح البخاري
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “லாஇலாஹ இல்லல்லாஹ், வஹ்தஹு லாஷரீக்க லஹு, லஹுல், முல்க்கு வ லஹுல், ஹம்து, வ ஹுவ அலா குல்லி ஷய்இன் கதீர்” என்று ஒரு நாளில் நூறு முறை சொல்கிறவருக்கு, பத்து அடிமைகளை விடுதலை செய்த நன்மையாக அமையும்.. மேலும், அவருக்கு நூறு நன்மைகள் எழுதப்பட்டு, நூறு தீமைகள் அழிக்கப்படும். மேலும், அந்த நாளின் மாலை நேரம் வரை ஷைத்தானிடமிருந்து (பாதுகாப்பாக அமையும். மேலும், அவர் புரிந்த சிறந்த நற்செயலை எவரும் செய்ய முடியாது; ஒருவர் இதை விட அதிகமாக ஒரு நற்செயல் புரிந்தாலே தவிர. (புஹாரி: 3293)
அபூ தாவுதில்: 5077, காலை மாலை என்றும் பதியப்பட்டுள்ளது. அது ஹசன் தரத்தில் உள்ள செய்தியாகும்.
ஐந்து நேரத் தொழுகைக்குப் பின்னால் துஆ அங்கீகரிக்கப்படுமா ???
இது சம்பந்தமாக வரும் ஹதீஸ் பலவீனமானவையே.
عَنْ أَبِي أُمَامَةَ، قَالَ: قِيلَ يَا رَسُولَ اللَّهِ: أَيُّ الدُّعَاءِ أَسْمَعُ؟ قَالَ: «جَوْفَ اللَّيْلِ الآخِرِ، وَدُبُرَ الصَّلَوَاتِ المَكْتُوبَاتِ » سنن الترمذي
அபூ உமாமா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபிகளாரிடம்; அல்லாஹ்வின் தூதரே! அதிகம் ஏற்கப்படும் துஆ எது? என்று கேட்கப்பட்டது, அதற்கு நபி (ஸல்) அவர்கள்: நாடு இரவிலும், கடமையான தொழுகைகளுக்குப் பின்னாலும். என்று கூறினார்கள். (திர்மிதீ: 3499, நசாஇ)
இது முன்கதிஆன மிகவும் பலவீனமான ஒரு செய்தியாகும்.
இது அல்லாமல் நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்குப் பின்வழமையாக கையேந்தி துஆ கேட்டதற்கோ, அங்கீகரித்ததற்கோ எந்த ஹதீஸ்களும் வரவில்லை.
எனவே தொழுகைக்குப் பின்னால் தேவை இருந்தால் சந்தர்ப்பத்திற்கு கேட்கலாம். ஆனால் தொழுகைக்குப் பின் துஆ கேட்பதை சுன்னத் போன்றோ, கடமை போன்றோ செய்வதற்கு அடிப்படை இல்லை.
இது போன்றே ஏனைய திக்ருகளையும் ஹதீஸ் ஆதாரங்களோடு படித்து, அதனைப் பேணி நடந்து, பூரண கூலியைப் பெற்றுக்கொள்ள முயற்சிப்போம்.