சுன்னாத்தான தொழுகைகள்
ஐந்து நேரத் தொழுகைகளுக்கு முன்னாலும், பின்னாலும் தொழப்படுகின்ற தொழுகைகளை நோக்குவோம் .
அவைகளின் சிறப்புகள், ஒரு நாளைக்கு பன்னிரண்டு ரக்அத்துகள் சுன்னத் தொழுபவருக்கு சுவனத்தில் ஒரு வீடு பரிசாக கிடைக்கும்.
أُمَّ حَبِيبَةَ، تَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «مَنْ صَلَّى اثْنَتَيْ عَشْرَةَ رَكْعَةً فِي يَوْمٍ وَلَيْلَةٍ، بُنِيَ لَهُ بِهِنَّ بَيْتٌ فِي الْجَنَّةِ» قَالَتْ أُمُّ حَبِيبَةَ: فَمَا تَرَكْتُهُنَّ مُنْذُ سَمِعْتُهُنَّ مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صحيح مسلم
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் ஒரு நாளையின் பகலிலும் இரவிலுமாக பன்னிரண்டு ரக்அத்துகள் தொழுகின்றாரோ அவருக்கு சுவனத்தில் ஒரு வீடு கட்டப்படும். நபிகளாரின் மனைவி உம்மு ஹபீபா (ரழி) அவர்கள் கூறினார்கள்; அவற்றை நபிகளாரிடமிருந்து கேட்டதிலிருந்து நான் விட்டதில்லை. (முஸ்லிம்)
எப்படி தொழுவது? அந்த பன்னிரண்டு ரக்அத்துகளும் பின்வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ : «حَفِظْتُ مِنَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَشْرَ رَكَعَاتٍ رَكْعَتَيْنِ قَبْلَ الظُّهْرِ، وَرَكْعَتَيْنِ بَعْدَهَا، وَرَكْعَتَيْنِ بَعْدَ المَغْرِبِ فِي بَيْتِهِ، وَرَكْعَتَيْنِ بَعْدَ العِشَاءِ فِي بَيْتِهِ، وَرَكْعَتَيْنِ قَبْلَ صَلاَةِ الصُّبْحِ صحيح البخاري
இப்னு உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபிகளாரிடமிருந்து (தொழுகைக்கு முன்னும், பின்னும் தொழவேண்டிய) பத்து ரக்அத்துகளை நான் மனமிட்டேன்; லுஹருக்கு முன்னால் இரண்டு, பின்னால் இரண்டு, மக்ரிபுக்கு பின்னால் இரண்டு அவர்களது வீட்டில், இஷாவுக்கு பின்னால் இரண்டு அவர்களது வீட்டில், சுப்ஹுக்கு முன்னால் இரண்டு. (புஹாரி:1126, முஸ்லிம்)
عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: «صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَجْدَتَيْنِ قَبْلَ الظُّهْرِ، وَسَجْدَتَيْنِ بَعْدَ الظُّهْرِ، وَسَجْدَتَيْنِ بَعْدَ المَغْرِبِ، وَسَجْدَتَيْنِ بَعْدَ العِشَاءِ، وَسَجْدَتَيْنِ بَعْدَ الجُمُعَةِ، فَأَمَّا المَغْرِبُ وَالعِشَاءُ فَفِي بَيْتِهِ» صحيح البخاري
இப்னு உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள்: நான் நபிகளாரோடு லுஹருக்கு முன்னால் இரண்டு ரக்அத்களும், பின்னால் இரண்டு ரக்அத்களும், மக்ரிபுக்கு பின்னால் இரண்டு ரக்அத்களும், இஷாவுக்கு பின்னால் இரண்டு ரக்அத்களும், ஜும்ஆவுக்கு பின்னால் இரண்டு ரக்அத்களும் தொழுதேன், ஆனால் மக்ரிப், இஷாவுடையதை அவர்களது வீட்டில் தொழுதேன். (புஹாரி:1172, முஸ்லிம்)
சுப்ஹுக்கு முன்னர் இரண்டு ரக்அத்கள்.
عَنْ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «رَكْعَتَا الْفَجْرِ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا» صحيح مسلم
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; சுப்ஹுக்கு (முன்னால் உள்ள) இரு ரக்அத்துகளும் உலகம், அதில் உள்ளவற்றை விடவும் சிறந்ததாகும். (முஸ்லிம்)
عَنْ أَبِي هُرَيْرَةَ، ” أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَرَأَ فِي رَكْعَتَيِ الْفَجْرِ: قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ، وَقُلْ هُوَ اللهُ أَحَدٌ ” صحيح مسلم
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள்; நபிகளார் சுப்ஹுடைய (சுன்னத்தான) இரு ரக்அத்களிலும் சூரா காபிரூன், சூரா இக்லாஸை ஓதுவார்கள். (முஸ்லிம்)
أَنَّ ابْنَ عَبَّاسٍ، أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ” كَانَ يَقْرَأُ فِي رَكْعَتَيِ الْفَجْرِ فِي الْأُولَى مِنْهُمَا: {قُولُوا آمَنَّا بِاللهِ وَمَا أُنْزِلَ إِلَيْنَا} [البقرة: 136] الْآيَةَ الَّتِي فِي الْبَقَرَةِ، وَفِي الْآخِرَةِ مِنْهُمَا: {آمَنَّا بِاللهِ وَاشْهَدْ بِأَنَّا مُسْلِمُونَ} [آل عمران: 52] ” صحيح مسلم
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் சுப்ஹின் (சுன்னத்தான) இரு ரக்அத்களிலும், முதலாவதில் 2:136 யும், இரடாண்வதில் 3:52 யும் ஓதுவார்கள். (முஸ்லிம்)
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: «صَلَّى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ العِشَاءَ، ثُمَّ صَلَّى ثَمَانِيَ رَكَعَاتٍ، وَرَكْعَتَيْنِ جَالِسًا، وَرَكْعَتَيْنِ بَيْنَ النِّدَاءَيْنِ وَلَمْ يَكُنْ يَدَعْهُمَا أَبَدًا» صحيح البخاري
ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் சுப்ஹுடைய அதானுக்குப் பின் இரண்டு ரக்அத்துகள் தொழுவார்கள், அதனை ஒருபோதும் விட்டதில்லை. (புஹாரி:1160, முஸ்லிம்)
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: «لَمْ يَكُنِ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى شَيْءٍ مِنَ النَّوَافِلِ أَشَدَّ مِنْهُ تَعَاهُدًا عَلَى رَكْعَتَيِ الفَجْرِ» صحيح البخاري
ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் சுப்ஹின் இரு ரக்அத்துகளை கவனிப்பது போன்று வேறு எந்த சுன்னாத்தான தொழுகைகளையும் கவனித்ததில்லை. (புஹாரி: 1169, முஸ்லிம்)
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ….ثُمَّ يُصَلِّي إِذَا سَمِعَ النِّدَاءَ بِالصُّبْحِ رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ» صحيح البخاري
ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் சுப்ஹின் இரு ரக்அத்களையும் சுருக்கமாக தொழுவார்கள். (புஹாரி: 1170, முஸ்லிம்)
லுஹருக்கு முன், பின் சுன்னத்துகள். முன்னால் நான்கு, அல்லது இரண்டு, பின்னாலும் நான்கு, அல்லது இரண்டு தொழலாம்.
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ لاَ يَدَعُ أَرْبَعًا قَبْلَ الظُّهْرِ صحيح البخاري
ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் லுஹருக்கு முன்னுள்ள நான்கு ரக்அத்களை விடவேமாட்டார்கள். (புஹாரி:1182)
عَائِشَةَ عَنْ صَلَاةِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَنْ تَطَوُّعِهِ؟ فَقَالَتْ: «كَانَ يُصَلِّي فِي بَيْتِي قَبْلَ الظُّهْرِ أَرْبَعًا، ثُمَّ يَخْرُجُ فَيُصَلِّي بِالنَّاسِ، ثُمَّ يَدْخُلُ فَيُصَلِّي رَكْعَتَيْنِ، وَكَانَ يُصَلِّي بِالنَّاسِ الْمَغْرِبَ، ثُمَّ يَدْخُلُ فَيُصَلِّي رَكْعَتَيْنِ، وَيُصَلِّي بِالنَّاسِ الْعِشَاءَ، وَيَدْخُلُ بَيْتِي فَيُصَلِّي رَكْعَتَيْنِ، صحيح مسلم
ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் லுஹருக்கு முன்னால் எனது வீட்டில் நான்கு ரக்அத்களை தொழுவார்கள், பிறகு மக்களுக்கு தொழுவித்து விட்டு, வீட்டுக்கு வந்து இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்.மக்ரிபுக்கு பின் இரண்டை வீட்டிலும், இஷாவுக்குப் பின் இரண்டை வீட்டிலும் தொழுவார்கள். (முஸ்லிம்)
أُمَّ حَبِيبَةَ، يَعْنِي أُخْتَهُ، تَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ صَلَّى أَرْبَعًا قَبْلَ الظُّهْرِ، وَأَرْبَعًا بَعْدَهَا، حَرَّمَ اللَّهُ لَحْمَهُ عَلَى النَّارِ» مسند أحمد
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யாராவது லுஹருக்கு முன்னால் நான்கும், பின்னால் நான்கும் தொழுதால் அவரது உடலை அல்லாஹ் நரகிற்கு ஹராமாக்கி விடுவான். (அஹ்மத்:26764)
அசாருக்கு முன்னால் இரண்டு அல்லது நான்கு தொழலாம். விடுபட்ட சுன்னாக்களைத் தவிர்த்து,பின்னால் தொழக்கூடாது.
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ المُزَنِيِّ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «بَيْنَ كُلِّ أَذَانَيْنِ صَلاَةٌ، ثَلاَثًا لِمَنْ شَاءَ» صحيح البخاري
நபி (ஸல்) அவர்கள், அதானுக்கும், இகாமத்திற்கும் இடையில் விரும்பியவர் சுன்னத் தொழலாம் என்று மூன்று விடுத்தங்கள் கூறினார்கள். (புஹாரி:624,627, முஸ்லிம்)
عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «رَحِمَ اللَّهُ امْرَأً صَلَّى قَبْلَ الْعَصْرِ أَرْبَعًا» مسند أحمد
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அசருக்கு முன்னால் நான்கு தொழுபவருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக. (அஹ்மத்:5980)
இதில் வரும் ‘முஹம்மத்‘ என்பவர் ‘தவறு விடக்கூடியவர்‘ என்று விமர்சிக்கப்பட்டுள்ளார். சிலர் இந்த ஹதீசை ஹசன் என்று கூறுகின்றனர்.
عَنِ عَلِيّ، عَنْ تَطَوُّعِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالنَّهَارِ،……وَأَرْبَعًا قَبْلَ الْعَصْرِ، يَفْصِلُ بَيْنَ كُلِّ رَكْعَتَيْنِ بِالتَّسْلِيمِ عَلَى الْمَلائِكَةِ الْمُقَرَّبِينَ، وَالنَّبِيِّينَ وَمَنْ تَبِعَهُمْ مِنَ الْمُؤْمِنِينَ، وَالْمُسْلِمِينَ ” مسند أحمد
அலி (ரழி) அவர்கள், நபிகளாரின் பகல் நேர சுன்னத்தான தொழுகை பற்றி கூறும் போது, அசருக்கு முன்னால் இரண்டிரண்டாக நான்கு தொழுவார்கள். இடையே சலாத்தைக் கொண்டு பிரிப்பார்கள். என்று கூறினார்கள் (அஹ்மத்:650)
இதிலும் ‘ஆசிம் பின் ளம்ரா‘ என்பவர் இடம்பெற்றுள்ளார். அவர் ‘சதூக்‘ ஏற்றுக் கொல்லப்பட்டவர் என்ற தரத்தி உள்ளார். ஹதீசை ஹசன் என்று கூறலாம்.
மக்ரிபுக்கு முன்னால் விரும்பியவர் இரண்டும், பின்னால் பின்னால் கவனம் செலுத்தி இரண்டும் தொழவேண்டும்.
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: «كَانَ المُؤَذِّنُ إِذَا أَذَّنَ قَامَ نَاسٌ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَبْتَدِرُونَ السَّوَارِيَ، حَتَّى يَخْرُجَ النَّبِيُّ صلّى الله عليه وسلم وَهُمْ كَذَلِكَ، يُصَلُّونَ الرَّكْعَتَيْنِ قَبْلَ المَغْرِبِ، وَلَمْ يَكُنْ بَيْنَ الأَذَانِ وَالإِقَامَةِ شَيْءٌ» صحيح البخاري
فَقُلْتُ لَهُ: أَكَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّاهُمَا؟ قَالَ: «كَانَ يَرَانَا نُصَلِّيهِمَا فَلَمْ يَأْمُرْنَا، وَلَمْ يَنْهَنَا» صحيح مسلم
அனஸ்(ரழி) அவர்கள் கூறினார்கள்: முஅத்தின் பாங்கு சொன்னதும் நபி(ஸல்) அவர்கள் (தொழுகைக்கு) வருவதற்கு முன் நபித் தோழர்கள் (ஸுனனத் தொழுவதற்காக) தூண்களை நோக்கி விரைவார்கள். இவ்வாறே பாங்கிற்கும் இகாமத்துக்கும் இடையில் (அதிக நேரம்) இல்லாமலிருந்தும் மஃரிபுக்கும் முன்பு இரண்டு ரக்அத் தொழுதார்கள். (புஹாரி: 625, முஸ்லிம்)
முஸ்லிமின் அறிவிப்பில்; நபிகளார் நாங்கள் தொழுவதை காண்பார்கள். ஏவவுமில்லை, தடுக்கவுமில்லை. என்று வந்துள்ளது.
இஷாவுக்கு முன்னால் சுன்னத் தொழுவதைப் பொறுத்தவரை, அதற்கு நேரடி ஆதாரங்கள் இல்லாவிட்டாலும், அதான் இகாமத்துக்கு இடையில் சுன்னத் தொழ முடியும் என்ற பொது ஆதாரத்தை வைத்து சுன்னத் தொழ முடியும்.இஷாவுக்கு பின்னாலும் கவனித்து தொழ வேண்டிய இரண்டு ரக்அத்கள் இருக்கின்றன. முன்னால் ஆதரங்கள் வந்துள்ளன.
ஜும்ஆவைப் பொறுத்தவரை அதற்கு ஏனைய தொழுகை போன்று (அமர்ந்திருப்பவர் அதானுக்குப் பின்னர் குறிப்பிட்டு தொழும் அளவுக்கு) முந்தைய சுன்னத் குறிப்பிடப் படவில்லை. ஆனாலும் ஒரு மனிதர் பள்ளிக்குள் சென்றதிலிருந்து தொழ முடியுமான பொது வலியுறுத்தலே இருக்கின்றது. ஏனெனில் நபிகளார் காலத்தில் இமாம் மிம்பரில் அமர்ந்த பிறகே அதான் சொல்லப்பட்டுள்ளது.
عَنْ سَلْمَانَ الفَارِسِيِّ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لاَ يَغْتَسِلُ رَجُلٌ يَوْمَ الجُمُعَةِ، وَيَتَطَهَّرُ مَا اسْتَطَاعَ مِنْ طُهْرٍ، وَيَدَّهِنُ مِنْ [ص:4] دُهْنِهِ، أَوْ يَمَسُّ مِنْ طِيبِ بَيْتِهِ، ثُمَّ يَخْرُجُ فَلاَ يُفَرِّقُ بَيْنَ اثْنَيْنِ، ثُمَّ يُصَلِّي مَا كُتِبَ لَهُ، ثُمَّ يُنْصِتُ إِذَا تَكَلَّمَ الإِمَامُ، إِلَّا غُفِرَ لَهُ مَا بَيْنَهُ وَبَيْنَ الجُمُعَةِ الأُخْرَى» صحيح البخاري
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஜும்ஆ நாளில் குளித்துவிட்டு இயன்றவரை சுத்தமாகித் தமக்குரிய எண்ணெய்யைத் தேய்த்துக் கொண்டு தம் வீட்டிலுள்ள நறுமணத்தைப் பூசிக் கொண்டு பள்ளிக்கு வந்து (அங்கு நெருக்கமாக அமர்ந்திருக்கும்) இரண்டு நபர்களைப் பிரித்துவிடாமல், தமக்கு விதிக்கப் பட்டதைத் தொழுதுவிட்டு, இமாம் உரையாற்றத் தொடங்கியதும் வாய் மூடி மௌனமாக இருந்தால் அந்த ஜும்ஆவுக்கும் அடுத்த ஜும்ஆவுக்கும் இடையிலான பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.” (புஹாரி: 883, 910)
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: جَاءَ رَجُلٌ وَالنَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ النَّاسَ يَوْمَ الجُمُعَةِ، فَقَالَ: «أَصَلَّيْتَ يَا فُلاَنُ؟» قَالَ: لاَ، قَالَ: «قُمْ فَارْكَعْ رَكْعَتَيْنِ» صحيح البخاري
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரழி) அவர்கள் கூறினார்கள்: ஜும்ஆ நாளில் நபி(ஸல்) அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்தபோது ஒருவர் வந்தார். உடனே நபி(ஸல்) அவர்கள் ‘நீர் தொழுது விட்டீரா?’ என்று கேட்டார்கள். அதற்கவர் ‘இல்லை’ என்றார். ‘எழுந்து தொழுவீராக!” என்று கூறினார்கள். (புஹாரி:930, முஸ்லிம்)
ஜும்ஆ தொழுகைக்கு பின்னர் இரண்டு அல்லது நான்கு தொழலாம். அதனை வீட்டுக்கு சென்று தொழுவது ஏற்றம். பள்ளிக்குள் தொழுவதாயின் ஒருவரோடு கதைத்துவிட்டு தொழலாம்.
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ……. وَكَانَ لاَ يُصَلِّي بَعْدَ الجُمُعَةِ حَتَّى يَنْصَرِفَ، فَيُصَلِّي رَكْعَتَيْنِ» صحيح البخاري
இப்னு உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபியவர்கள் ஜும்ஆவுக்குப் பின் (வீட்டுக்கு) திரும்பிச் செல்லாமல் தொழமாட்டார்கள். (வீட்டில்) இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். (புஹாரி: 937, முஸ்லிம்)
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا صَلَّى أَحَدُكُمُ الْجُمُعَةَ فَلْيُصَلِّ بَعْدَهَا أَرْبَعًا» صحيح مسلم
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:உங்களில் ஒருவர் ஜும்ஆ தொழுதால் அதற்கு பின்னால் நான்கு ரக்அத்கள் தொழட்டும். (முஸ்லிம்)
عَنِ مُعَاوِيَةُ ……قَالَ: «لَا تَعُدْ لِمَا فَعَلْتَ، إِذَا صَلَّيْتَ الْجُمُعَةَ، فَلَا تَصِلْهَا بِصَلَاةٍ حَتَّى تَكَلَّمَ أَوْ تَخْرُجَ، فَإِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَنَا بِذَلِكَ، أَنْ لَا تُوصَلَ صَلَاةٌ بِصَلَاةٍ حَتَّى نَتَكَلَّمَ أَوْ نَخْرُجَ». صحيح مسلم
முஆவியா (ரழி) அவர்கள், ஜும்ஆ தொழுகையின் பின் அதே இடத்தில் சுன்னத் தொழுதவரைப் பார்த்து பார்த்து; ‘நீர் ஜும்ஆவை தொழுதால்,(யாருடனாவது) பேசாத வரை, அல்லது வெளியேராதவரை அதனுடன் ஒரு தொழுகையை சேர்த்து தொழவேண்டாம்.’ என்று கூறு விட்டு, இப்படி நபியவர்கள் எங்களுக்கு கட்டளையிட்டார்கள். என்று கூறினார்கள். (முஸ்லிம்)
பொதுவாக இந்த சுன்னத்துக்களை வலியுறுத்தப்பட்ட, வலியுருத்தப்படாத சுன்னத் என்று இரு வகையாக நோக்கலாம்.
வலியுறுத்தப்பட்டவை;-
சுப்ஹுக்கு முன் இரண்டு, லுஹருக்கு முன் இரண்டு, பின் இரண்டு, மக்ரிபுக்கு பின் இரண்டு, இஷாவுக்கு பின் இரண்டு, ஜுமாஆவுக்கு பின் இரண்டு.
வலியுருத்தப்படாதவை;-
லுஹருக்கு முன் நான்கில் இரண்டு, பின் நான்கில் இரண்டு, அசருக்கு முன் இரண்டு அல்லது நான்கு, மக்ரிபுக்கு முன் இரண்டு, இஷாவுக்கு முன் இரண்டு, ஜுமாஆவுக்கு பின் நான்கில் இரண்டு.
சுருக்கம் ஒரு நாளைக்கு பன்னிரண்டு ரக்அஅத்கள் தொழுவதன் மூலம் சுவன வீட்டை அடையலாம்.
முன் சுன்னத்தை வழமையாக தொழும் ஒருவருக்கு அதனை தொழ முடியாமல் போனால், பர்ளுக்கு பின்னால் தொழுது கொள்ளலாம்.
عَنْ كُرَيْبٍ، أَنَّ ابْنَ عَبَّاسٍ، وَالمِسْوَرَ بْنَ مَخْرَمَةَ، وَعَبْدَ الرَّحْمَنِ بْنَ أَزْهَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمْ، أَرْسَلُوهُ إِلَى عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، فَقَالُوا: اقْرَأْ عَلَيْهَا السَّلاَمَ مِنَّا جَمِيعًا، وَسَلْهَا عَنِ الرَّكْعَتَيْنِ بَعْدَ صَلاَةِ العَصْرِ، وَقُلْ لَهَا: إِنَّا أُخْبِرْنَا عَنْكِ أَنَّكِ تُصَلِّينَهُمَا، وَقَدْ بَلَغَنَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْهَا، وَقَالَ ابْنُ عَبَّاسٍ وَكُنْتُ أَضْرِبُ النَّاسَ مَعَ عُمَرَ بْنِ الخَطَّابِ عَنْهَا، فَقَالَ كُرَيْبٌ: فَدَخَلْتُ عَلَى عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، فَبَلَّغْتُهَا مَا أَرْسَلُونِي، فَقَالَتْ: سَلْ أُمَّ سَلَمَةَ، فَخَرَجْتُ إِلَيْهِمْ، فَأَخْبَرْتُهُمْ بِقَوْلِهَا، فَرَدُّونِي إِلَى أُمِّ سَلَمَةَ بِمِثْلِ مَا أَرْسَلُونِي بِهِ إِلَى عَائِشَةَ، فَقَالَتْ أُمُّ سَلَمَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْهَى عَنْهَا، ثُمَّ رَأَيْتُهُ يُصَلِّيهِمَا حِينَ صَلَّى العَصْرَ، ثُمَّ دَخَلَ عَلَيَّ وَعِنْدِي نِسْوَةٌ مِنْ بَنِي حَرَامٍ مِنَ الأَنْصَارِ، فَأَرْسَلْتُ إِلَيْهِ الجَارِيَةَ، فَقُلْتُ: قُومِي بِجَنْبِهِ فَقُولِي لَهُ: تَقُولُ لَكَ أُمُّ سَلَمَةَ: يَا رَسُولَ اللَّهِ، سَمِعْتُكَ تَنْهَى عَنْ هَاتَيْنِ، وَأَرَاكَ تُصَلِّيهِمَا، فَإِنْ أَشَارَ بِيَدِهِ، فَاسْتَأْخِرِي عَنْهُ، فَفَعَلَتِ الجَارِيَةُ، فَأَشَارَ بِيَدِهِ، فَاسْتَأْخَرَتْ عَنْهُ، فَلَمَّا انْصَرَفَ قَالَ: «يَا بِنْتَ أَبِي أُمَيَّةَ، سَأَلْتِ عَنِ الرَّكْعَتَيْنِ بَعْدَ العَصْرِ، وَإِنَّهُ أَتَانِي نَاسٌ مِنْ عَبْدِ القَيْسِ، فَشَغَلُونِي عَنِ الرَّكْعَتَيْنِ اللَّتَيْنِ بَعْدَ الظُّهْرِ فَهُمَا هَاتَانِ» صحيح البخاري
சுன்னத் தொழுகைகளில் ஒரு பகுதியை வீட்டில் தொழுவது சிறந்தது, அதுவே மனத்தூய்மைக்கும், வீட்டு சூழலுக்கும் சிறந்தது.
عَنْ جَابِرٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا قَضَى أَحَدُكُمُ الصَّلَاةَ فِي مَسْجِدِهِ، فَلْيَجْعَلْ لِبَيْتِهِ نَصِيبًا مِنْ صَلَاتِهِ، فَإِنَّ اللهَ جَاعِلٌ فِي بَيْتِهِ مِنْ صَلَاتِهِ خَيْرًا» صحيح مسلم
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் பள்ளியில் தனது தொழுகையை முடித்தால்,தனது வீட்டில் தொழுவதற்கு ஒரு பகுதி தொழுகையை வைத்துக் கொள்ளட்டும்.ஏனெனில் தொழுகையின் காரணமாக அவரது வீட்டில் அல்லாஹ் நலவை ஏற்படுத்துவான். (முஸ்லிம்)
عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «اجْعَلُوا فِي بُيُوتِكُمْ مِنْ صَلاَتِكُمْ وَلاَ تَتَّخِذُوهَا قُبُورًا» صحيح البخاري
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் உங்கள் தொழுகையில் சிலதை வீட்டில் தொழுது கொள்ளுங்கள், உங்கள் வீடுகளை மையவாடிகளாக ஆக்காதீர்கள். (புஹாரி:432, முஸ்லிம்)
عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ……..قَالَ: «قَدْ عَرَفْتُ الَّذِي رَأَيْتُ مِنْ صَنِيعِكُمْ، فَصَلُّوا أَيُّهَا النَّاسُ فِي بُيُوتِكُمْ، فَإِنَّ أَفْضَلَ الصَّلاَةِ صَلاَةُ المَرْءِ فِي بَيْتِهِ إِلَّا المَكْتُوبَةَ» صحيح البخاري
ஸைத் பின் ஸாபித் (ரழி) அவர்கள் கூறினார்கள்; நபியவர்கள், அவர்களோடு இரவுத் தொழுகையில் கலந்து கொள்ள வந்த தோழர்களைப் பார்த்து; ‘நீங்கள் செய்ததை நான் அறிவேன், மக்களே உங்கள் வீடுகளில் (சுன்னத்தை) தொழுங்கள். ஏனெனில் கடமையான தொழுகையை தவிர்த்து, ஒரு மனிதனது தொழுகையில் சிறந்தது, அவன் தன் வீட்டில் தொழும் தொழுகையாகும். என்று கூறினார்கள் (புஹாரி: 731, முஸ்லிம்)
வாகனத்தில் பயணம் செய்வோர் வாகனத்தில் இருந்தவாறே, அது பயணிக்கும் திசையில் சுன்னத்துக்களை தொழலாம். பர்ளுக்காக கீழிறங்கி கிப்லாவை முன்னோக்க வேண்டும்.
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي عَلَى رَاحِلَتِهِ، حَيْثُ تَوَجَّهَتْ فَإِذَا أَرَادَ الفَرِيضَةَ نَزَلَ فَاسْتَقْبَلَ القِبْلَةَ» صحيح البخاري
ஜாபிர் (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் தங்களுடைய வாகனத்தின் மீது அமர்ந்து, அது செல்கிற திசையை நோக்கி, சைக்கினை செய்து தொழுபவர்களாக இருந்தார்கள். கடமையான தொழுகையைத் தொழ விரும்பினால் வாகனத்திலிருந்து கீழே இறங்கி கிப்லாவை முன்னோக்கித் தொழுவார்கள்” (புஹாரி: 400,1000, முஸ்லிம்)
சுன்னத்தான தொழுகையின் சிறப்பில், ‘அது பர்ளில் வரும் குறையை ஈடுசெய்யும்‘ என்ற கருத்தில் அபூஹுரைரா (ரழி) அவர்களைத் தொட்டு வரும் செய்தி, பல அறிவிப்பாளர் தொடர் மூலம் பதியப்பட்டிருந்தாலும், அனைத்தும் விமர்சனங்களுக்கு உற்பட்டவையே. அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்.