பிக்ஹு -15; மஸ்ஜித்கள் இறையில்லங்கள்

மஸ்ஜித்கள்  இறையில்லங்கள்

மஸ்ஜித்களை நிர்மானிப்பதன் சிறப்புகள்

عُثْمَانَ بْنَ عَفَّانَ، يَقُولُ عِنْدَ قَوْلِ النَّاسِ فِيهِ حِينَ بَنَى مَسْجِدَ الرَّسُولِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّكُمْ أَكْثَرْتُمْ، وَإِنِّي سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ” مَنْ بَنَى مَسْجِدًا – قَالَ بُكَيْرٌ: حَسِبْتُ أَنَّهُ قَالَ: يَبْتَغِي بِهِ وَجْهَ اللَّهِ – بَنَى اللَّهُ لَهُ مِثْلَهُ فِي الجَنَّةِ ” (صحيح البخاري)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘அல்லாஹ்வின் திருமுகத்தை நாடி, பள்ளிவாசல் ஒன்றை யாராவது கட்டினால், அது போன்ற ஒன்றைச் சுவர்க்கத்தில் அவருக்காக அல்லாஹ் கட்டுகிறான்”  (புஹாரி: 450)

عَنْ أَنَسٍ، وَقَتَادَةُ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَتَبَاهَى النَّاسُ فِي الْمَسَاجِدِ»( سنن أبي داود)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்கள் மஸ்ஜித்களில் (கட்டுவதில்) (போட்டிபோட்டு) பெருமையடிக்கும் வரை மறுமை ஏற்படாது.  (அபூதாவுத்: 449)

மஸ்ஜிதை நிர்மாணிப்பதற்கான நிபந்தனைகள்

ஒன்பதாவது அத்தியாயத்தின் 107- 118 வரையிலான வசனங்களில் குறிப்பிடப்படும் நிபந்தனைகள் தவிர்த்து, இறையச்சத்தை அடிப்படையாக கொண்டு கட்டப்படல்.

{وَالَّذِينَ اتَّخَذُوا مَسْجِدًا ضِرَارًا وَكُفْرًا وَتَفْرِيقًا بَيْنَ الْمُؤْمِنِينَ وَإِرْصَادًا لِمَنْ حَارَبَ اللَّهَ وَرَسُولَهُ مِنْ قَبْلُ وَلَيَحْلِفُنَّ إِنْ أَرَدْنَا إِلَّا الْحُسْنَى وَاللَّهُ يَشْهَدُ إِنَّهُمْ لَكَاذِبُونَ (107) لَا تَقُمْ فِيهِ أَبَدًا لَمَسْجِدٌ أُسِّسَ عَلَى التَّقْوَى مِنْ أَوَّلِ يَوْمٍ أَحَقُّ أَنْ تَقُومَ فِيهِ فِيهِ رِجَالٌ يُحِبُّونَ أَنْ يَتَطَهَّرُوا وَاللَّهُ يُحِبُّ الْمُطَّهِّرِينَ } أَفَمَنْ أَسَّسَ بُنْيَانَهُ عَلَى تَقْوَى مِنَ اللَّهِ وَرِضْوَانٍ خَيْرٌ أَمْ مَنْ أَسَّسَ بُنْيَانَهُ عَلَى شَفَا جُرُفٍ هَارٍ فَانْهَارَ بِهِ فِي نَارِ جَهَنَّمَ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ (109) لَا يَزَالُ بُنْيَانُهُمُ الَّذِي بَنَوْا رِيبَةً فِي قُلُوبِهِمْ إِلَّا أَنْ تَقَطَّعَ قُلُوبُهُمْ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ (110) [التوبة: 107، 108]

இன்னும் (இஸ்லாம் மார்க்கத்திற்குத்) தீங்கிழைக்கவும், குப்ருக்கு (நிராகரிப்புக்கு) உதவி செய்யவும், முஃமின்களிடையே பிளவு உண்டுபண்ணவும், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் விரோதமாய்ப் போர்புரிந்தவர்களுக்கு புகலிடமாகவும் ஆக்க ஒரு மஸ்ஜிதை முன்னர் நிறுவியவர்கள்: “நாங்கள் நல்லதையேயன்றி (வேறொன்றும்) விரும்பவில்லை” என்று நிச்சயமாகச் சத்தியம் செய்வார்கள் – ஆனால் அவர்கள் நிச்சயமாகப் பொய்யர்கள் என்பதற்கு அல்லாஹ்வே சாட்சியம் கூறுகிறான்.108,ஆகவே, (நபியே!) அங்கு நீர் தொழுகைக்காக ஒருபோதும் நிற்க வேண்டாம் – நிச்சயமாக ஆரம்ப தினத்திலேயே பயபக்தியின் மீது அமைக்கப்பட்ட மஸ்ஜிது உள்ளது; அதில் நீர் நின்று (தொழவும், தொழ வைக்கவும்) மிகவும் தகுதியானது; அங்கிருக்கும் மனிதர்கள் தூய்மையுடையோராக இருப்பதையே விரும்புகிறார்கள். அல்லாஹ் தூய்மையுடையோரையே விரும்புகிறான்.(9:107,108)

மையத்துகள்  அடக்கப்பட்டிருக்கும் இடங்கள், அவை அகற்றப்பட்டாலே தவிர,

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَدِمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ المَدِينَةَ فَنَزَلَ أَعْلَى المَدِينَةِ فِي حَيٍّ يُقَالُ لَهُمْ بَنُو عَمْرِو بْنِ عَوْفٍ، فَأَقَامَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيهِمْ أَرْبَعَ عَشْرَةَ لَيْلَةً، ثُمَّ أَرْسَلَ إِلَى بَنِي النَّجَّارِ، فَجَاءُوا مُتَقَلِّدِي السُّيُوفِ كَأَنِّي أَنْظُرُ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى رَاحِلَتِهِ، وَأَبُو بَكْرٍ رِدْفُهُ وَمَلَأُ بَنِي النَّجَّارِ حَوْلَهُ حَتَّى أَلْقَى بِفِنَاءِ أَبِي أَيُّوبَ [ص:94]، وَكَانَ يُحِبُّ أَنْ يُصَلِّيَ حَيْثُ أَدْرَكَتْهُ الصَّلاَةُ، وَيُصَلِّي فِي مَرَابِضِ الغَنَمِ، وَأَنَّهُ أَمَرَ بِبِنَاءِ المَسْجِدِ، فَأَرْسَلَ إِلَى مَلَإٍ مِنْ بَنِي النَّجَّارِ فَقَالَ: «يَا بَنِي النَّجَّارِ ثَامِنُونِي بِحَائِطِكُمْ هَذَا»، قَالُوا: لاَ وَاللَّهِ لاَ نَطْلُبُ ثَمَنَهُ إِلَّا إِلَى اللَّهِ، فَقَالَ أَنَسٌ: فَكَانَ فِيهِ مَا أَقُولُ لَكُمْ قُبُورُ المُشْرِكِينَ، وَفِيهِ خَرِبٌ وَفِيهِ نَخْلٌ، فَأَمَرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقُبُورِ المُشْرِكِينَ، فَنُبِشَتْ، ثُمَّ بِالخَرِبِ فَسُوِّيَتْ، وَبِالنَّخْلِ فَقُطِعَ، فَصَفُّوا النَّخْلَ قِبْلَةَ المَسْجِدِ وَجَعَلُوا عِضَادَتَيْهِ الحِجَارَةَ، وَجَعَلُوا يَنْقُلُونَ الصَّخْرَ وَهُمْ يَرْتَجِزُونَ وَالنَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَهُمْ، وَهُوَ يَقُولُ: «اللَّهُمَّ لاَ خَيْرَ إِلَّا خَيْرُ الآخِرَهْ فَاغْفِرْ لِلْأَنْصَارِ وَالمُهَاجِرَهْ» (صحيح البخاري)

அனஸ் (றழி) அவர்கள் கூறினார்கள்: நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது மதீனாவின் மேற்புறத்தில் வசித்து வந்த ‘பனூ அம்ர் இப்னு அவ்பு’ எனும் கோத்திரத்தினருடன் பதினான்கு நாள்கள் தங்கினார்கள். பின்னர் ‘பனூ நஜ்ஜார்’ கூட்டத்தினரை அழைத்து வருமாறு கூறினார்கள். (தங்கள்) வாள்களைத் தொங்கவிட்டவர்களாக அவர்கள் வந்தனர். நபி(ஸல்) அவர்கள் தம் வாகனத்தின் மீது அமர்ந்திருந்ததும் வாகனத்தில் அவர்களுக்குப் பின்னால் அபூ பக்ர் (றழி) அமர்ந்திருந்ததும் அவர்களைச் சுற்றி ‘பனூ நஜ்ஜார்’ கூட்டத்தினர் நின்றதும் இன்னும் என் கண் முன்னே நிழலாடுகிறது.

நபி(ஸல்) அவர்களின் ஒட்டகம் அபூ அய்யூப்(றழி) வீட்டுக்கு முன்னாலுள்ள பகுதியில் அவர்களை இறக்கியது. தொழுகையின் நேரத்தை எங்கே அடைகிறார்களோ அங்கே தொழுவது நபி(ஸல்) அவர்களின் வழக்கமாக இருந்தது. ஆடுகள் கட்டுமிடங்களில் கூட தொழக் கூடியவர்களாக நபி(ஸல்) அவர்கள் இருந்தனர். அவர்கள் பள்ளிவாசல் கட்டும் படி ஏவினார்கள். பனூ நஜ்ஜார் கூட்டத்தினரை அழைத்து வரச் சொல்லி அவர்களிடம் ‘உங்களின் இந்தத் தோட்டத்தை எனக்கு விலைக்குத் தாருங்கள்!” என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டனர். அதற்கு அவர்கள் இதற்காக விலையை அல்லாஹ்விடமே நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றனர். (அவ்விடத்தில்) பள்ளிவாசல் கட்டுமாறு நபி(ஸல்) கட்டளையிட்டார்கள்.அவ்விடத்தில் இணை வைப்பவர்களின் சமாதிகள் இருந்தன. அங்கு சில உபயோகமற்ற பொருட்களும் சில பேரீச்ச மரங்களும் இருந்தன. அங்குள்ள கப்ருகளைத் தோண்டி அப்புறப்படுத்துமாறு நபி(ஸல்) கட்டளையிட்டனர். அவ்வாறே அவை தோண்டப்பட்டன….. (புஹாரி:428)

யாருடைய கப்ருகளுடனும் சேர்த்து அது கட்டப்பட்டிருக்கக் கூடாது.

عَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «قَاتَلَ اللَّهُ اليَهُودَ، اتَّخَذُوا قُبُورَ أَنْبِيَائِهِمْ مَسَاجِدَ»( صحيح البخاري)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:”தங்கள் நபிமார்களின் அடக்கஸ்தளங்களை வண்ணஸ்தளங்களாக ஆக்கிய யூதர்களை அல்லாஹ் நாசமாக்குவானாக!”  (புஹாரி: 437, முஸ்லிம்)

 أَنَّ عَائِشَةَ، وَعَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ، قَالاَ: لَمَّا نَزَلَ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ طَفِقَ يَطْرَحُ خَمِيصَةً لَهُ عَلَى وَجْهِهِ، فَإِذَا اغْتَمَّ بِهَا كَشَفَهَا عَنْ وَجْهِهِ، فَقَالَ وَهُوَ كَذَلِكَ: «لَعْنَةُ اللَّهِ عَلَى اليَهُودِ وَالنَّصَارَى، اتَّخَذُوا قُبُورَ أَنْبِيَائِهِمْ مَسَاجِدَ» يُحَذِّرُ مَا صَنَعُوا  (صحيح البخاري)

ஆயிஷா(றழி) அவர்களும் இப்னு அப்பாஸ்(றழி) அவர்களும் கூறினார்கள்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டபோது தம் முகத்தின் மீது ஒரு கம்பளித் துணியைத் தூக்கிப் போட்டுக் கொள்ளலானார்கள். மூச்சுத் திணறுவது போல் உணர்ந்தால் தம் முகத்தைவிட்டு அதை விலக்கிக் கொண்டார்கள். அவர்கள் இந்நிலையில் இருக்கும்போது, ‘அல்லாஹ் யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்தட்டும். அவர்கள் தம் நபிமார்களின் அடக்கத்தளங்களை வணக்கத் தளங்களாக ஆக்கிக் கொண்டனர்” என்று அவர்கள் செய்ததைக் குறித்து (“அதே போல் நீங்களும் செய்து விடாதீர்கள்” என்று) எச்சரித்தார்கள். புஹாரி:435, 3453, முஸ்லிம்)

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فِي مَرَضِهِ الَّذِي مَاتَ فِيهِ: «لَعَنَ اللَّهُ اليَهُودَ وَالنَّصَارَى، اتَّخَذُوا قُبُورَ أَنْبِيَائِهِمْ مَسْجِدًا»، قَالَتْ: وَلَوْلاَ ذَلِكَ لَأَبْرَزُوا قَبْرَهُ غَيْرَ أَنِّي أَخْشَى أَنْ يُتَّخَذَ مَسْجِدًا  (صحيح البخاري)

ஆயிஷா (றழி) அவர்கள் கூறினார்கள்:பயம் மட்டும் இல்லையாயின் நபி(ஸல்) அவர்களின் கப்ரைத் திறந்த வெளியில் நபித் தோழர்கள் வைத்திருப்பார்கள். எனினும் அதுவும் வணக்கஸ்தளமாக ஆக்கப்பட்டுவிடுமோ என நான் அஞ்சுகிறேன்.  (புஹாரி:1330)

عَنْ عَائِشَةَ أُمِّ المُؤْمِنِينَ، أَنَّ أُمَّ حَبِيبَةَ، وَأُمَّ سَلَمَةَ ذَكَرَتَا كَنِيسَةً رَأَيْنَهَا بِالحَبَشَةِ فِيهَا تَصَاوِيرُ، فَذَكَرَتَا لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «إِنَّ أُولَئِكَ إِذَا كَانَ فِيهِمُ الرَّجُلُ الصَّالِحُ فَمَاتَ، بَنَوْا عَلَى قَبْرِهِ مَسْجِدًا، وَصَوَّرُوا فِيهِ تِلْكَ الصُّوَرَ، فَأُولَئِكَ شِرَارُ الخَلْقِ عِنْدَ اللَّهِ يَوْمَ القِيَامَةِ»( صحيح البخاري)

ஆயிஷா (றழி) அவர்கள் கூறினார்கள்: உம்மு ஹபீபா(றழி) அவர்களும் உம்மு ஸலமா(றழி) அவர்களும், தாங்கள் அபீ ஸீனியாவில் கண்ட உருவங்கள் இடம் பெற்ற கோவிலைப் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் தெரிவித்தனர். அப்போது நபி(ஸல்) ‘அவர்களில் நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து மரணித்துவிட்டால் அவரின் அடக்கத் தலத்தின் மேல் வண்ணக்கத்தளத்தை அவர்கள் எழுப்பி விடுவார்கள். அந்த நல்லவர்களின் உருவங்களையும் அதில் பதித்து விடுவார்கள். மறுமை நாளில் அல்லாஹ்வின் சன்னிதியில் அவர்கள் தாம் படைப்பினங்களில் மிகவும் கெட்டவர்களாவர்” என்று கூறினார்கள்.   (புஹாரி:427,434, முஸ்லிம்)

குறிப்பு: சிலைகள் உள்ள இடங்களிலும் அல்லாஹ்வை வணங்கக்கூடாது.

மஸ்ஜிதின் கிப்லா திசையில் கப்ருகள் இருக்கவும் கூடாது.

عَنْ أَبِي مَرْثَدٍ الْغَنَوِيِّ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا تُصَلُّوا إِلَى الْقُبُورِ، وَلَا تَجْلِسُوا عَلَيْهَا»( صحيح مسلم)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் கப்ருகளை நோக்கி தொழவேண்டாம், அவற்றின் மீது அமரவும் வேண்டாம்.  (முஸ்லிம்)

அதனை நிர்வகிப்பதற்கான நிபந்தனைகள்.

{إِنَّمَا يَعْمُرُ مَسَاجِدَ اللَّهِ مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَأَقَامَ الصَّلَاةَ وَآتَى الزَّكَاةَ وَلَمْ يَخْشَ إِلَّا اللَّهَ فَعَسَى أُولَئِكَ أَنْ يَكُونُوا مِنَ الْمُهْتَدِينَ } [التوبة: 18]

“குப்ரின்” மீது தாங்களே சாட்சி சொல்லிக் கொண்டிருக்கும், இந்த முஷ்ரிக்குகளுக்கு அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளைப் பரிபாலனம் செய்ய உரிமையில்லை; அவர்களுடைய (நற்)கருமங்கள் (யாவும் பலன் தராது) அழிந்துவிட்டன – அவர்கள் என்றென்றும் நரகத்தில் தங்கிவிடுவார்கள். 18. அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளைப் பரிபாலனம் செய்யக்கூடியவர்கள், அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் மீதும் ஈமான் கொண்டு தொழுகையைக் கடைப்பிடித்து ஜகாத்தை (முறையாகக்) கொடுத்து அல்லாஹ்வைத் தவிர வேறெதற்கும் அஞ்சாதவர்கள்தாம் – இத்தகையவர்கள்தாம் நிச்சயமாக நேர் வழி பெற்றவர்களில் ஆவார்கள்.  (9: 17, 18)

குறிப்பிட்ட ஒருவரின் அல்லது ஒரு சாராரின் பள்ளி என கூறலாமா?

 عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَابَقَ بَيْنَ الخَيْلِ الَّتِي أُضْمِرَتْ مِنَ الحَفْيَاءِ، وَأَمَدُهَا ثَنِيَّةُ الوَدَاعِ، وَسَابَقَ بَيْنَ الخَيْلِ الَّتِي لَمْ تُضْمَرْ مِنَ الثَّنِيَّةِ إِلَى مَسْجِدِ بَنِي زُرَيْقٍ»، وَأَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ كَانَ فِيمَنْ سَابَقَ بِهَا  (صحيح البخاري)

அப்துல்லாஹ் இப்னு உமர்(றழி) அவர்கள் கூறினார்கள்: நபி(ஸல்) அவர்கள் குதிரைகளுக்கிடையே போட்டி நடத்தியபோது, பயிற்சி பெற்ற குதிரைகள் ‘ஹப்யா’ என்ற இடத்திலிருந்து ‘ஸனிய்யதுல் வதா’ என்ற இடம் வரை ஓட வேண்டும் என்றும் பயிற்சியளிக்கப்படாத குதிரைகள் ‘ஸனியதுல் வதா’ என்ற இடத்திலிருந்து பனூ ஸுரைக் கூட்டத்தினரின் பள்ளிவாசல் வரை ஓட வேண்டும் என்றும் இலக்கு நிர்ணயித்தார்கள். அப்போட்டியில் நானும் பங்கெடுத்துக் கொண்டேன்.  (புஹாரி: 420)

பள்ளிகளில் செய்யமுடியுமான காரியங்கள்.

கல்வி கற்றுக்கொடுத்தல்

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «….. وَمَنْ سَلَكَ طَرِيقًا يَلْتَمِسُ فِيهِ عِلْمًا، سَهَّلَ اللهُ لَهُ بِهِ طَرِيقًا إِلَى الْجَنَّةِ، وَمَا اجْتَمَعَ قَوْمٌ فِي بَيْتٍ مِنْ بُيُوتِ اللهِ، يَتْلُونَ كِتَابَ اللهِ، وَيَتَدَارَسُونَهُ بَيْنَهُمْ، إِلَّا نَزَلَتْ عَلَيْهِمِ السَّكِينَةُ، وَغَشِيَتْهُمُ الرَّحْمَةُ وَحَفَّتْهُمُ الْمَلَائِكَةُ، وَذَكَرَهُمُ اللهُ فِيمَنْ عِنْدَهُ…»( صحيح مسلم)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எந்த ஒரு கூட்டமாவது இறையில்லங்களில் ஒரு இல்லத்தில் ஒன்றுகூடி, அவர்கள் குர்ஆனை ஓதி, அதை அவர்களுக்கிடையே படித்துக்கொள்வார்களாக இருந்தால், அவர்கள் மீது சகீனத் எனும் அமைதி இறங்கும், இறையருள் அவர்களை மூடிக்கொள்ளும், மலக்குமார்கள் அவர்களை சூழ்ந்துகொள்வார்கள், அல்லாஹ் அவர்கள் தன்னிடமுள்ளவர்களிடம் ஞாபகப்படுத்துவான்.  (முஸ்லிம்)

عَنْ مَالِكِ بْنِ الحُوَيْرِثِ، أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي نَفَرٍ مِنْ قَوْمِي، فَأَقَمْنَا عِنْدَهُ عِشْرِينَ لَيْلَةً، وَكَانَ رَحِيمًا رَفِيقًا، فَلَمَّا رَأَى شَوْقَنَا إِلَى أَهَالِينَا، قَالَ: «ارْجِعُوا فَكُونُوا فِيهِمْ، وَعَلِّمُوهُمْ، وَصَلُّوا، فَإِذَا حَضَرَتِ الصَّلاَةُ فَلْيُؤَذِّنْ لَكُمْ أَحَدُكُمْ، وَلْيَؤُمَّكُمْ أَكْبَرُكُمْ» (صحيح البخاري )

மாலிக் பின் ஹுவைரிஸ் (றழி) அவர்கள் கூறினார்கள்: நாங்கள் சமவயதுடைய வாலிபத் தோழர்கள் சிலர் நபிகளாரிடம் வந்து, இருபது நாட்கள் தங்கியிருந்து மார்க்கம் படித்தோம்.  (புஹாரி: 628, முஸ்லிம்)

தீர்ப்பு வழங்குவதும், தண்டனை வழங்குவதும்.

عَنْ جَابِرٍ، أَنَّ رَجُلًا مِنْ أَسْلَمَ أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ فِي المَسْجِدِ، فَقَالَ: إِنَّهُ قَدْ زَنَى، فَأَعْرَضَ عَنْهُ، فَتَنَحَّى لِشِقِّهِ الَّذِي أَعْرَضَ، فَشَهِدَ عَلَى نَفْسِهِ أَرْبَعَ شَهَادَاتٍ، فَدَعَاهُ فَقَالَ: «هَلْ بِكَ جُنُونٌ؟ هَلْ أَحْصَنْتَ» قَالَ: نَعَمْ، فَأَمَرَ بِهِ أَنْ يُرْجَمَ بِالْمُصَلَّى، فَلَمَّا أَذْلَقَتْهُ الحِجَارَةُ جَمَزَ حَتَّى أُدْرِكَ بِالحَرَّةِ فَقُتِلَ  (صحيح البخاري)

நபி (ஸல்) அவர்கள்; விபச்சாரம் செய்த ஒரு மனிதருக்கு நான்கு சாட்சிகளின் பின், அவர் புத்திசுவாதினமுள்ளவர், என்று உறுதிபடுத்திய பின், ரஜ்ம் பண்ணுமாறு (கல்லடித்து கொல்லுதல்) பள்ளிக்குள் வைத்து தீர்ப்பளித்தார்கள், முஸல்லாவில் (தொழும் திடல்) வைத்து கல்லடிக்குமாறு ஏவினார்கள்.  (புஹாரி: 5270, 5271..)

عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، أَنَّ رَجُلًا قَالَ: يَا رَسُولَ اللَّهِ «أَرَأَيْتَ رَجُلًا وَجَدَ مَعَ امْرَأَتِهِ رَجُلًا أَيَقْتُلُهُ؟ فَتَلاَعَنَا فِي المَسْجِدِ، وَأَنَا شَاهِدٌ» (صحيح البخاري)

ஸஹ்ல் இப்னு ஸஃத்(றழி) அவர்கள்  கூறினார்கள்: ‘இறைத்தூதர் அவர்களே! ஒருவர் தம் மனைவியுடன் மற்றோர் ஆடவனைக் காண நேர்ந்தால் அவனைக் கொன்று விடலாமா?’ என்று ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டார். (“அது கூடாது! மாறாக இருவரும் லிஆன் செய்ய வேண்டும்” என்று நபி(ஸல்) கூறியதும்) அவ்விருவரும் பள்ளியிலேயே லிஆன் செய்தனர். நான் அதைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.   (புஹாரி: 423, 4745)

கவிதைகள் படித்தல்

عَنْ سَعِيدِ بْنِ المُسَيِّبِ، قَالَ: مَرَّ عُمَرُ فِي المَسْجِدِ وَحَسَّانُ يُنْشِدُ فَقَالَ: كُنْتُ أُنْشِدُ فِيهِ، وَفِيهِ مَنْ هُوَ خَيْرٌ مِنْكَ، ثُمَّ التَفَتَ إِلَى أَبِي هُرَيْرَةَ، فَقَالَ: أَنْشُدُكَ بِاللَّهِ، أَسَمِعْتَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «أَجِبْ عَنِّي، اللَّهُمَّ أَيِّدْهُ بِرُوحِ القُدُسِ؟» قَالَ: نَعَمْ  (صحيح البخاري)

ஸயீத் இப்னு முஸய்யப்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள் : மஸ்ஜிதுன்  நபவியில்  ஹஸ்ஸான் இப்னு ஸாபித்(றழி) அவர்கள் கவி பாடிக்கொண்டிருக்க, உமர்(றழி) அங்கு வந்தார்கள். (ஹஸ்ஸான்(றழி) பள்ளிவாசலில் கவி பாடுவதை உமர்(றழி)  கண்டித்தார்கள்) ஹஸ்ஸான்(றழி)  ‘நான் இந்தப் பள்ளிவாசலில் உங்களை விடச் சிறந்தவர் (நபி(ஸல்) அவர்கள்) இருக்கும் போதே கவி பாடிக்கொண்டிருந்தேன்” என்று கூறிவிட்டு, அபூ ஹுரைரா(றழி) பக்கம் திரும்பி, ‘அல்லாஹ்வின் பெயரால் உங்களிடம் கேட்கிறேன். (என்னிடம்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘(ஹஸ்ஸானே!) என் சார்பாக நீங்கள் (கவிகளாலேயே) பதிலளியுங்கள். இறைவா! ஹஸ்ஸானுக்கு ரூஹுல் குதுஸ்(வானவர் ஜிப்ரீல்) மூலம் துணை புரிவாயாக!” என்று கூறியதை நீங்கள் செவியுற்றிருக்கிறீர்களா?’ என்று கேட்டார்கள். அதற்கு அபூ ஹுரைரா(றழி), ‘ஆம் (செவியுற்றிருக்கிறேன்)” என்று பதிலளித்தார்கள்.   (புஹாரி: 3212, முஸ்லிம்)

பள்ளிக்கு பக்கத்தில் விளையாடுதல்

أَنَّ عَائِشَةَ، قَالَتْ: «لَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا عَلَى بَابِ حُجْرَتِي وَالحَبَشَةُ يَلْعَبُونَ فِي المَسْجِدِ، وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتُرُنِي بِرِدَائِهِ، أَنْظُرُ إِلَى لَعِبِهِمْ» (صحيح البخاري)

ஆயிஷா(றழி) அவர்கள் கூறினார்கள்: அபீஸீனியர்கள் பள்ளியில் விளையாட்டு விளையாடும்போது, நபி(ஸல்) அவர்கள் தங்களின் மேலாடையால் என்னை மறைத்துக் கொண்டிருக்க,  விளையாட்டை பார்த்துக் கொண்டிருந்தேன்.  (புஹாரி: 454, முஸ்லிம்)

கைதிகளை கட்டி வைத்தல்.

 عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” إِنَّ عِفْرِيتًا مِنَ الجِنِّ تَفَلَّتَ عَلَيَّ البَارِحَةَ – أَوْ كَلِمَةً نَحْوَهَا – لِيَقْطَعَ عَلَيَّ الصَّلاَةَ، فَأَمْكَنَنِي اللَّهُ مِنْهُ، فَأَرَدْتُ أَنْ أَرْبِطَهُ إِلَى سَارِيَةٍ مِنْ سَوَارِي المَسْجِدِ حَتَّى تُصْبِحُوا وَتَنْظُرُوا إِلَيْهِ كُلُّكُمْ،  (صحيح البخاري)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “இப்ரீத் என்ற ஜின் நேற்றிரவு என் முன் திடீரெனத் தோன்றி என் தொழுகையைக் கெடுக்க முயன்றது. அதைப் பிடிப்பதற்கான சக்தியை இறைவன் எனக்கு வழங்கினான். காலையில் நீங்கள் அனைவரும் அதைக் காண வேண்டுமென இந்தப் பள்ளிவாசலிலுள்ள ஒரு தூணில் அதைக் கட்டி வைக்க எண்ணினேன்.’இறைவா! எனக்குப் பின் வேறு எவருக்கும் நீ வழங்காத ஓர் ஆட்சியை எனக்கு நீ வழங்குவாயாக’ (திருக்குர்ஆன் 38:35) என்ற என் சகோதரர் ஸுலைமான் (அலை) அவர்களின் பிரார்த்தனை எனக்கு நினைவு வந்தால் அதை விரட்டி அடித்து விட்டேன்.”   (புஹாரி: 461, முஸ்லிம்)

 أَبَا هُرَيْرَةَ، يَقُولُ: ” بَعَثَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَيْلًا قِبَلَ نَجْدٍ، فَجَاءَتْ بِرَجُلٍ مِنْ بَنِي حَنِيفَةَ يُقَالُ لَهُ: ثُمَامَةُ بْنُ أُثَالٍ، فَرَبَطُوهُ بِسَارِيَةٍ مِنْ سَوَارِي المَسْجِدِ ”  (صحيح البخاري)

அபூ ஹுரைரா(றழி) அவர்கள் கூறினார்கள்; ‘நஜ்து’ பிரதேசத்தை நோக்கிச் சிறிய குதிரைப் படை ஒன்றை நபி(ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள். அவர்கள் பனூ ஹனீபா என்ற கூட்டத்தைச் சேர்ந்த ஸுமாமா இப்னு அஸால் என்பவரைப் பிடித்து வந்து பள்ளிவாசலிலுள்ள ஒரு தூணில் கட்டி வைத்தார்கள்.   (புஹாரி:469, முஸ்லிம்)

பள்ளியில் தூங்குவது.

 عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ، «أَنَّهُ كَانَ يَنَامُ وَهُوَ شَابٌّ أَعْزَبُ لاَ أَهْلَ لَهُ فِي مَسْجِدِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ» (صحيح البخاري)

அப்துல்லாஹ் இப்னு உமர்(றழி) அவர்கள் கூறினார்கள்:  திருமணம் செய்வதற்கு முன், குடும்பமில்லாத இளைஞனாக நான் இருந்தபோது நபி(ஸல்) அவர்களின் பள்ளிவாசலில் உறங்கக் கூடியவனாக இருந்தேன்.  (புஹாரி: 440, 1121, முஸ்லிம்)

عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ: جَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْتَ فَاطِمَةَ فَلَمْ يَجِدْ عَلِيًّا فِي البَيْتِ، فَقَالَ: «أَيْنَ ابْنُ عَمِّكِ؟» قَالَتْ: كَانَ بَيْنِي وَبَيْنَهُ شَيْءٌ، فَغَاضَبَنِي، فَخَرَجَ، فَلَمْ يَقِلْ عِنْدِي فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِإِنْسَانٍ: «انْظُرْ أَيْنَ هُوَ؟» فَجَاءَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، هُوَ فِي المَسْجِدِ رَاقِدٌ، فَجَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ مُضْطَجِعٌ، قَدْ سَقَطَ رِدَاؤُهُ عَنْ شِقِّهِ، وَأَصَابَهُ تُرَابٌ، فَجَعَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْسَحُهُ عَنْهُ، وَيَقُولُ: «قُمْ أَبَا تُرَابٍ، قُمْ أَبَا تُرَابٍ» (صحيح البخاري)

அப்துல்லாஹ் இப்னு உமர்(றழி) அவர்கள் கூறினார்கள்: நபி(ஸல்) அவர்கள் பாதிமாவின் இல்லத்திற்கு வந்தபோது அலி (றழி) அவர்களைக்  காணவில்லை ‘உன் பெரிய தந்தையின் மகன் எங்கே?’ என்று பாதிமா(றழி) விடம் கேட்டார்கள். ‘எனக்கும் அவருக்கும் சிறிய மனஸ்தாபம் இருந்தது; கோபித்துக் கொண்டு சென்றார்; என்னிடம் தங்கவில்லை’ என்று பாதிமா(றழி) கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் ‘அவர் எங்கே என்று பார்த்து வாரும்!” என்று ஒருவரை அனுப்பினார்கள். அவர் வந்து, ‘அலி பள்ளிவாசலில் உறங்கிக் கொண்டிருக்கிறார்’ என்றார். நபி(ஸல்) அவர்கள் பள்ளிக்கு வந்தபோது அலீ(றழி) தங்களின் சால்வை  விலகியவராகவும் மேனியில் மண் படிந்தவராகவும் ஒரு பக்கமாகப் படுத்திருந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் அவரின் மேனியில் படிந்திருந்த மண்ணைத் தட்டிவிட்டு ‘மண்ணின் தந்தையே எழும்! மண்ணின் தந்தையே எழும்!” எனக் கூறினார்கள்.   (புஹாரி: 441, முஸ்லிம்)

عَنْ عَائِشَةَ، قَالَتْ: أُصِيبَ سَعْدٌ يَوْمَ الخَنْدَقِ فِي الأَكْحَلِ، «فَضَرَبَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَيْمَةً فِي المَسْجِدِ، لِيَعُودَهُ مِنْ قَرِيبٍ فَلَمْ يَرُعْهُمْ» وَفِي المَسْجِدِ خَيْمَةٌ مِنْ بَنِي غِفَارٍ، إِلَّا الدَّمُ يَسِيلُ إِلَيْهِمْ، فَقَالُوا: يَا أَهْلَ الخَيْمَةِ، مَا هَذَا الَّذِي يَأْتِينَا مِنْ قِبَلِكُمْ؟ فَإِذَا سَعْدٌ يَغْذُو جُرْحُهُ دَمًا، فَمَاتَ فِيهَا  (صحيح البخاري)

ஆயிஷா (றழி) அவர்கள் கூறினார்கள்: ஒரு கறுப்பினத்து பெண் இஸ்லாத்தை தழுவினார்கள், அவர்களுக்காக பள்ளியில் ஒரு கூடாரம் அமைக்கப்பட்டது,  அவர்கள் என்னிடம் வந்து, கதைத்துக் கொண்டிருப்பார்கள்.  (புஹாரி: 439)

 عَنْ عَائِشَةَ، أَنَّ وَلِيدَةً كَانَتْ سَوْدَاءَ لِحَيٍّ مِنَ العَرَبِ، فَأَعْتَقُوهَا، فَكَانَتْ مَعَهُمْ، قَالَتْ……: «فَكَانَ لَهَا خِبَاءٌ فِي المَسْجِدِ – أَوْ حِفْشٌ -» قَالَتْ: فَكَانَتْ تَأْتِينِي فَتَحَدَّثُ عِنْدِي، قَالَتْ: فَلاَ تَجْلِسُ عِنْدِي مَجْلِسًا، إِلَّا قَالَتْ  (صحيح البخاري)

ஆயிஷா(றழி) அவர்கள் கூறினார்கள்: அகழ்ப் போரின்போது ஸஃது இப்னு முஆத்(றழி) கை நரம்பில் தாக்கப்பட்டார். அவரை அருகிலிருந்து நோய் விசாரிப்பதற்கு ஏற்பப் பள்ளிலேயே அவருக்குக் கூடாரம் ஒன்றை நபி(ஸல்) ஏற்படுத்தினார்கள்…. (புஹாரி: 463, முஸ்லிம்)

பொறுப்புக்கள், பணம் போன்றவற்றை பங்குவைத்தல்.

 عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: أُتِيَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَالٍ مِنَ البَحْرَيْنِ، فَقَالَ: «انْثُرُوهُ فِي المَسْجِدِ» وَكَانَ أَكْثَرَ مَالٍ أُتِيَ بِهِ رَسُولُ اللَّهِ [ص:92] صلّى الله عليه وسلم، فَخَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى الصَّلاَةِ وَلَمْ يَلْتَفِتْ إِلَيْهِ، فَلَمَّا قَضَى الصَّلاَةَ جَاءَ فَجَلَسَ إِلَيْهِ، فَمَا كَانَ يَرَى أَحَدًا إِلَّا أَعْطَاهُ، إِذْ جَاءَهُ العَبَّاسُ، فَقَالَ يَا رَسُولَ اللَّهِ: أَعْطِنِي، فَإِنِّي فَادَيْتُ نَفْسِي وَفَادَيْتُ عَقِيلًا، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «خُذْ» فَحَثَا فِي ثَوْبِهِ، ثُمَّ ذَهَبَ يُقِلُّهُ فَلَمْ يَسْتَطِعْ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، اؤْمُرْ بَعْضَهُمْ يَرْفَعْهُ إِلَيَّ، قَالَ: «لاَ» قَالَ: فَارْفَعْهُ أَنْتَ عَلَيَّ، قَالَ: «لاَ» فَنَثَرَ مِنْهُ، ثُمَّ ذَهَبَ يُقِلُّهُ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، اؤْمُرْ بَعْضَهُمْ يَرْفَعْهُ عَلَيَّ، قَالَ: «لاَ» قَالَ: فَارْفَعْهُ أَنْتَ عَلَيَّ، قَالَ: «لاَ» فَنَثَرَ مِنْهُ، ثُمَّ احْتَمَلَهُ، فَأَلْقَاهُ عَلَى كَاهِلِهِ، ثُمَّ انْطَلَقَ، فَمَا زَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُتْبِعُهُ بَصَرَهُ حَتَّى خَفِيَ عَلَيْنَا – عَجَبًا مِنْ حِرْصِهِ – فَمَا قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَثَمَّ مِنْهَا دِرْهَمٌ  (صحيح البخاري)

அனஸ் (றழி) அவர்கள் கூறினார்கள்: பஹ்ரைன் நாட்டிலிருந்து சில பொருள்கள் நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டன. ‘அவற்றைப் பள்ளிவாஸலிலேயே கொட்டுங்கள்!’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். பிறகு தொழுகையின் பின் பங்குவைத்தார்கள்.  (புஹாரி:421)

பள்ளியினுள் செய்யக்கூடாத விடயங்கள் .

வியாபாரம், கொடுக்கல் வாங்கல் செய்தல்.

عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ  قَالَ: ” إِذَا رَأَيْتُمْ مَنْ يَبِيعُ أَوْ يَبْتَاعُ فِي المَسْجِدِ، فَقُولُوا: لَا أَرْبَحَ اللَّهُ تِجَارَتَكَ، وَإِذَا رَأَيْتُمْ مَنْ يَنْشُدُ فِيهِ ضَالَّةً، فَقُولُوا: لَا رَدَّ اللَّهُ عَلَيْكَ ” (سنن الترمذي)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பள்ளியினுள் கொடுக்கல், வாங்கல் செய்வதை  நீங்கள் கண்டால், ‘உங்கள் வியாபாரத்தில் அல்லாஹ் அபிவிருத்தி செய்யாமல் இருக்கட்டும்’ என்று கூறுங்கள்.  (திர்மிதீ:1321, நசாஇ சுனனுல் குப்ரா, இப்னு குஸைமா)

(இந்த ஹதீஸ் அறிவிப்பாளர்களில் சிலர் பற்றி விமர்சிக்கப்பட்டிருந்தாலும் சஹீஹ் என்ற தரத்தில் வரக்கூடியதே)

தொலைந்த பொருட்களை தேடுதல்.

أَبَا هُرَيْرَةَ، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: ” مَنْ سَمِعَ رَجُلًا يَنْشُدُ فِي الْمَسْجِدِ ضَالَّةً، فَلْيَقُلْ لَهُ: لَا أَدَّاهَا اللهُ إِلَيْكَ، فَإِنَّ الْمَسَاجِدَ لَمْ تُبْنَ لِهَذَا ” (مسند أحمد)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பள்ளியினுள் தொலைந்த பொருட்களை தேடும் ஒருவரை யாராவது செவிமடுத்தால், “அல்லாஹ் அதனை உமக்கு திருப்பி தராமல் இருக்கட்டும்” என்று கூறட்டும். ஏனெனில் பள்ளிகள் இதற்காக கட்டப்படவில்லை.  (அஹ்மத்:8588, முஸ்லிம்)

உமிழ் நீரை துப்பிவிட்டு, அதனை மூடிவிடாமல், துடைத்துவிடாமல் இருத்தல்.

أَنَسَ بْنَ مَالِكٍ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «البُزَاقُ فِي المَسْجِدِ خَطِيئَةٌ وَكَفَّارَتُهَا دَفْنُهَا» (صحيح البخاري)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பள்ளியினுள் துப்புவது தவறாகும், அதற்குரிய பரிகாரம்; அதனை மூடிவிடுவதாகும்.  (புஹாரி: 415, முஸ்லிம்)

 أَنَّ أَبَا هُرَيْرَةَ، وَأَبَا سَعِيدٍ حَدَّثَاهُ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى نُخَامَةً فِي جِدَارِ المَسْجِدِ، فَتَنَاوَلَ حَصَاةً فَحَكَّهَا، فَقَالَ: «إِذَا تَنَخَّمَ أَحَدُكُمْ فَلاَ يَتَنَخَّمَنَّ قِبَلَ وَجْهِهِ، وَلاَ عَنْ يَمِينِهِ وَلْيَبْصُقْ عَنْ يَسَارِهِ، أَوْ تَحْتَ قَدَمِهِ اليُسْرَى»( صحيح البخاري)

அபூ ஸயீத் அல்குத்ரீ(றழி) அவர்கள் கூறினார்கள்: நபி(ஸல்) அவர்கள் பள்ளி வாசலின் சுவற்றில் (உமிழப்பட்டிருந்த) சளியைக் கண்டு சிறு கல்லை எடுத்து அதைச் சுரண்டினார்கள். பின்னர் ‘உங்களில் எவருக்கேனும் சளி உமிழ வேண்டிய அவசியம் ஏற்பட்டால் தம் முகத்துக்கு நேராகவோ தம் வலப் புறமாகவோ உமிழலாகாது; தம் இடப்புறமோ தம் இடது பாதத்தின் அடியிலோ அவர் உமிழ்ந்து கொள்ளட்டும், பிறகு அதனை மூடிவிடட்டும்!” என்று கூறினார்கள்.  (புஹாரி: 408,416, முஸ்லிம்)

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى نُخَامَةً فِي القِبْلَةِ، فَحَكَّهَا بِيَدِهِ وَرُئِيَ مِنْهُ كَرَاهِيَةٌ، أَوْ رُئِيَ كَرَاهِيَتُهُ لِذَلِكَ وَشِدَّتُهُ عَلَيْهِ، وَقَالَ: «إِنَّ أَحَدَكُمْ إِذَا قَامَ فِي صَلاَتِهِ، فَإِنَّمَا يُنَاجِي رَبَّهُ أَوْ رَبُّهُ بَيْنَهُ وَبَيْنَ قِبْلَتِهِ، فَلاَ يَبْزُقَنَّ فِي قِبْلَتِهِ، وَلَكِنْ عَنْ يَسَارِهِ أَوْ تَحْتَ قَدَمِهِ»، ثُمَّ أَخَذَ طَرَفَ رِدَائِهِ، فَبَزَقَ فِيهِ وَرَدَّ بَعْضَهُ عَلَى بَعْضٍ، قَالَ: «أَوْ يَفْعَلُ هَكَذَا» (صحيح البخاري)

புஹாரி:417, முஸ்லிமின் அறிவிப்பில், கீழே உமிழ முடியாவிட்டால், தன் ஆடையில் உமிழ்ந்து தேய்த்துக் கொள்ளட்டும். எனும் விதமாக நபிகளார் சைக்கினை செய்தார்கள் என்று வந்துள்ளது.

பள்ளியை அசுத்தப்படுத்தல்.

 أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ: قَامَ أَعْرَابِيٌّ فَبَالَ فِي المَسْجِدِ، فَتَنَاوَلَهُ النَّاسُ، فَقَالَ لَهُمُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «دَعُوهُ وَهَرِيقُوا عَلَى بَوْلِهِ سَجْلًا مِنْ مَاءٍ، أَوْ ذَنُوبًا مِنْ مَاءٍ، فَإِنَّمَا بُعِثْتُمْ مُيَسِّرِينَ، وَلَمْ تُبْعَثُوا مُعَسِّرِينَ» (صحيح البخاري)

அபூ ஹுரைரா (றழி) அவர்கள் கூறினார்கள்:  ‘ஒரு கிராமவாசி பள்ளிவாசலில் சிறுநீர் கழித்துவிட்டார். உடனே மக்கள் அவரை தடுக்க முயலவே. நபி(ஸல்) அவர்கள் ‘அவரைவிட்டு விடுங்கள்; அவர் கழித்த சிறுநீரின் மீது ஒரு வாளித் தண்ணீரை ஊற்றுங்கள். நீங்கள் இலேசுபடுத்துவோராகவே அனுப்பப்பட்டுள்ளீர்கள். மாறாக கஷ்டப்படுத்தக் கூடியவர்களாக நீங்கள் அனுப்பப்படவில்லை’ என்று கூறினார்கள்”  (புஹாரி: 220,6128)

 பள்ளிக்குள் பேணவேண்டிய சில ஒழுக்கங்கள்.

பள்ளிக்குள் நுழைந்த ஒருவர் அமர விரும்பினால், (தஹிய்யதுள் மஸ்ஜித்) 2 ரக்அத்துகள் பள்ளிக்கான காணிக்கை தொழுகை தொழுதல்.

 عَنْ أَبِي قَتَادَةَ السَّلَمِيِّ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا دَخَلَ أَحَدُكُمُ المَسْجِدَ فَلْيَرْكَعْ رَكْعَتَيْنِ قَبْلَ أَنْ يَجْلِسَ»( صحيح البخاري)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  உங்களில் எவரும் பள்ளிவாசலுக்குச் சென்றால் உட்காருவதற்கு முன்பு இரண்டு ரக்அத்கள் தொழட்டும்.  (புஹாரி: 444, முஸ்லிம்)

 أَبَا قَتَادَةَ بْنَ رِبْعِيٍّ الأنْصَارِيَّ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا دَخَلَ أَحَدُكُمُ المَسْجِدَ، فَلاَ يَجْلِسْ حَتَّى يُصَلِّيَ رَكْعَتَيْنِ» (صحيح البخاري)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் யாரும் பள்ளிக்குள் நுழைந்தால் இரண்டு  ரக்அத்கள் தொழாமல் அமரவேண்டாம். (புஹாரி, முஸ்லிம்)

சத்தத்தை உயர்த்தி பேசாமலிருத்தல்.

عَنْ كَعْبٍ، أَنَّهُ تَقَاضَى ابْنَ أَبِي حَدْرَدٍ دَيْنًا كَانَ لَهُ عَلَيْهِ فِي المَسْجِدِ، فَارْتَفَعَتْ أَصْوَاتُهُمَا حَتَّى سَمِعَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ فِي بَيْتِهِ، فَخَرَجَ إِلَيْهِمَا حَتَّى كَشَفَ سِجْفَ حُجْرَتِهِ، فَنَادَى: «يَا كَعْبُ» قَالَ: لَبَّيْكَ يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «ضَعْ مِنْ دَيْنِكَ هَذَا» وَأَوْمَأَ إِلَيْهِ: أَيِ الشَّطْرَ، قَالَ: لَقَدْ فَعَلْتُ يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «قُمْ فَاقْضِهِ»( صحيح البخاري)

கஃப் பின் மாலிக் (றழி) அவர்கள் கூறினார்கள்: அவர்கள் இப்னு அபீ ஹத்ரத் என்பவரிடம் கொடுத்த கடனை பள்ளியில் வைத்து திருப்பி கேட்கவே, இருவரது சத்தமும், வீட்டிலிருக்கும்  நபிகளாருக்கு கேட்கும் அளவுக்கு உயர்ந்துவிட்டது, உடனே அவ்விருவரிடமும் வந்த நபிகளார், கஃபே உமது கடனில் அரைவாசியை குறைத்துவிடும் என்று தனது கையால் ஜாடை செய்யவே, அதனை நான் ஏற்றுக்கொண்டேன் என கஃப் அவர்கள் கூறினார்கள்.  (புஹாரி:457, 471,  முஸ்லிம்)

عَنِ السَّائِبِ بْنِ يَزِيدَ، قَالَ: كُنْتُ قَائِمًا فِي المَسْجِدِ فَحَصَبَنِي رَجُلٌ، فَنَظَرْتُ فَإِذَا عُمَرُ بْنُ الخَطَّابِ، فَقَالَ: اذْهَبْ فَأْتِنِي بِهَذَيْنِ، فَجِئْتُهُ بِهِمَا، قَالَ: مَنْ أَنْتُمَا – أَوْ مِنْ أَيْنَ أَنْتُمَا؟ – قَالاَ: مِنْ أَهْلِ الطَّائِفِ، قَالَ: «لَوْ كُنْتُمَا مِنْ أَهْلِ البَلَدِ لَأَوْجَعْتُكُمَا، تَرْفَعَانِ أَصْوَاتَكُمَا فِي مَسْجِدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ» (صحيح البخاري)

ஸாயிப் இப்னு யஸீத்(றழி) அவர்கள் கூறினார்கள்: நான் பள்ளி வாசலில் நின்றிருந்தபோது ஒருவர் என் மீது சிறு கல்லை எறிந்தார். நான் திரும்பிப் பார்த்தபோது உமர் (றழி) நின்றிருந்தார்கள். ‘நீ சென்று (அதோ) அந்த இருவரையும் என்னிடம் அழைத்து வா!” என்றார்கள். அவ்விருவரையும் அவர்களிடம் கூட்டிக் கொண்டு வந்தேன். நீங்கள் இருவரும் எங்கிருந்து வருகிறீர்கள்?’ என்று உமர்(றழி) அவர்கள் கேட்க, ‘நாங்கள் தாயிப் வாசிகள்’ என்று அவர்கள் கூறினர். ‘அல்லாஹ்வின் தூதருடைய பள்ளி வாசலில் சப்தங்களை நீங்கள் உயர்த்தியதற்காக நீங்கள் இவ்வூரைச் சேர்ந்தவர்களாக இருந்தால் உங்களிருவரையும்  தண்டிடித்திருப்பேன் ‘ என்று உமர்(றழி) அவர்கள் கூறினார்கள்.  (புஹாரி: 470)

வெள்ளைப்பூடு, வெங்காயம் போன்ற வாடை வீசுபவற்றை சாப்பிட்டுவிட்டு  பள்ளிக்குள் நுளையாதிருத்தல்.

عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فِي غَزْوَةِ خَيْبَرَ: «مَنْ أَكَلَ مِنْ هَذِهِ الشَّجَرَةِ – يَعْنِي الثُّومَ – فَلاَ يَقْرَبَنَّ مَسْجِدَنَا»( صحيح البخاري)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யாராவது  இந்த (வெங்காய, வெள்ளைப்பூடு ) மரத்திலிருந்து சாப்பிட்டால், அவர் எமது பள்ளியை நெருங்க வேண்டாம்.  (புஹாரி: 853, முஸ்லிம்)

عَنْ جَابِرٍ، قَالَ: نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَنْ أَكْلِ الْبَصَلِ وَالْكُرَّاثِ، فَغَلَبَتْنَا الْحَاجَةُ، فَأَكَلْنَا مِنْهَا، فَقَالَ: «مَنْ أَكَلَ مِنْ هَذِهِ الشَّجَرَةِ الْمُنْتِنَةِ، فَلَا يَقْرَبَنَّ مَسْجِدَنَا، فَإِنَّ الْمَلَائِكَةَ تَأَذَّى، مِمَّا يَتَأَذَّى مِنْهُ الْإِنْسُ» (صحيح مسلم)

முஸ்லிமின் அறிவிப்பில்: அந்த வாடையைக் கொண்டு எம்மை நோவினை செய்யவேண்டாம். என்றும் ‘யாராவது இந்த துர்நாற்றம் வீசும் மரத்திலிருந்து சாப்பிட்டால், அவர் எமது பள்ளியை நெருங்க வேண்டாம், ஏனெனில் மனிதர்கள் நோவினைபடுபவர்ரிளிருந்து மலக்குமார்களும் நோவினைபடுகிறார்கள்.” என்றும் வந்துள்ளது.

 أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ: ……….لَقَدْ رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِذَا وَجَدَ رِيحَهُمَا مِنَ الرَّجُلِ فِي الْمَسْجِدِ، أَمَرَ بِهِ فَأُخْرِجَ إِلَى الْبَقِيعِ، فَمَنْ أَكَلَهُمَا فَلْيُمِتْهُمَا طَبْخًا  (صحيح مسلم)

நபி (ஸல்) அவர்கள், அவ்விரண்டின் வாசத்தையும் ஒரு மனிதனிடம் கண்டால், அவரை பள்ளியை விட்டும் வெளியேற்றுவார்கள், மேலும் அதனை யாராவது சாப்பிட விரும்பினால், சமைத்து சாப்பிடட்டும். என்று கூறுவார்கள்.  (முஸ்லிம்)

பள்ளிகளில் அசுத்தங்களை கண்டால் சுத்தப்படுத்தல்.

 عَنْ عَائِشَةَ أُمِّ المُؤْمِنِينَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «رَأَى فِي جِدَارِ القِبْلَةِ مُخَاطًا أَوْ بُصَاقًا أَوْ نُخَامَةً، فَحَكَّهُ»( صحيح البخاري)

ஆயிஷா(றழி) அவர்கள் கூறினார்கள்: நபி(ஸல்) அவர்கள் கிப்லாத் திசையில் உள்ள சுவற்றில் எச்சிலையோ சளியையோ கண்டுவிட்டு அதைச் சுரண்டி சுத்தப்படுத்தினார்கள்.  (புஹாரி:407, முஸ்லிம்)

 عَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ رَجُلًا أَسْوَدَ أَوِ امْرَأَةً سَوْدَاءَ كَانَ يَقُمُّ المَسْجِدَ فَمَاتَ، فَسَأَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْهُ، فَقَالُوا: مَاتَ، قَالَ: «أَفَلاَ كُنْتُمْ آذَنْتُمُونِي بِهِ دُلُّونِي عَلَى قَبْرِهِ – أَوْ قَالَ قَبْرِهَا – فَأَتَى قَبْرَهَا فَصَلَّى عَلَيْهَا»( صحيح البخاري)

அபூ ஹுரைரா(றழி) அவர்கள் கூறினார்கள்: பள்ளிவாசலை சுத்தப்படுத்துபவராக இருந்த ஒரு கறுத்த ஆண் அல்லது கறுத்த பெண்மணி இறந்துவிட்டார். அவரைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் விசாரித்தபோது அவர் இறந்துவிட்டதாகக் கூறினார்கள். ‘இதை என்னிடம் நீங்கள் சொல்லியிருக்க வேண்டாமா? அவரின் அடக்கத் தலத்தை எனக்குக் காட்டுங்கள்! என்று நபி(ஸல்) கூறிவிட்டு அவரின் அடக்கத்தலத்துக்கு வந்து அவருக்கு (ஜனாஸா) தொழுகை நடத்தினார்கள்.  (புஹாரி: 458, முஸ்லிம்)

குறிப்பு: சிறுவர்களை பள்ளிக்கு அனுமதிப்பது தடுக்கப்பட்டதல்ல. அப்படி தடுக்கப்பட்டதாக வரும் ஹதீஸ் பலவீனமானதே.

 عَنْ وَاثِلَةَ بْنِ الْأَسْقَعِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «جَنِّبُوا مَسَاجِدَكُمْ صِبْيَانَكُمْ، وَمَجَانِينَكُمْ،……( سنن ابن ماجه)

“உங்கள் சிறார்களையும், பைத்தியக்காரர்களையும் பள்ளிகளிலிருந்து தவிர்த்துக்கொள்ளுங்கள்.”

என்று நபிகளார் கூறியதாக இப்னுமாஜா, தபரானி போன்ற கிரந்தங்களில் வரும் அறிவிப்பில் ‘அல்ஹாரிஸ் பின் நப்ஹான்’ என்பவர் வந்துள்ளார். அவர் பலவீனமானவர்.

மேலும் நபிகளார் சிறார்களை அழைத்துவருவதை அனுமதித்துள்ளார்கள்.

أَبِي قَتَادَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنِّي لَأَقُومُ فِي الصَّلاَةِ أُرِيدُ أَنْ أُطَوِّلَ فِيهَا، فَأَسْمَعُ بُكَاءَ الصَّبِيِّ، فَأَتَجَوَّزُ فِي صَلاَتِي كَرَاهِيَةَ أَنْ أَشُقَّ عَلَى أُمِّهِ»( صحيح البخاري)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நீண்ட நேரம் தொழுகை நடத்தும் எண்ணத்துடன் நான் தொழுகையைத் துவக்குகிறேன். அப்போது குழந்தையின் அழுகுரலை கேட்கிறேன். அந்தக் குழந்தையின் தாயாருக்குச் சிரமமளிக்கக் கூடாது என்பதனால் தொழுகையைச் சுருக்கமாக முடித்து விடுகிறேன்’.  (புஹாரி: 707…., முஸ்லிம்)

பெண்கள் ஐந்து நேரத் தொழுகைக்கும் பள்ளிக்கு வரலாம், அதனை தடுக்கமுடியாது, ஆனால் நறுமணம் பூசிவிட்டால் வரக்கூடாது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் பள்ளிகளை விட்டும் அல்லாஹ்வின் அடிமைகளை (பெண்களை) தடுக்கவேண்டாம்.  (முஸ்லிம்)

இப்னு உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள்: உமர் (ரழி) அவர்களுக்கு ஒரு மனைவி இருந்தார்கள், அவர்கள் இஷா, சுப்ஹு தொழுகைகளில் பள்ளியில் ஜமாஅத்தில் கலந்துகொள்வார்கள், அவர்களிடம்; “நீங்கள் பள்ளிக்கு செல்வதை உமர் அவர்கள் வெறுக்கின்றார்கள் என்று தெரிந்தும் ஏன் பள்ளிக்கு செல்கின்றீர்கள்” என்று கேட்கப்பட்டது, அதற்கு அந்தப் பெண்மணி, உமர் அவர்கள் ஏன் என்னை தடுக்கவில்லை? என்று கேட்டார்கள். இப்னு உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபியவர்கள்: அல்லாஹ்வின் பெண் அடிமைகளை பள்ளிகளை விட்டும் தடுக்கவேண்டாம் என்று கூறினார்கள்.  (புஹாரி: 900)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவரது  மனைவியர் பள்ளிக்கு செல்ல அனுமதி கேட்டால், அவர் அவளை தடுக்க வேண்டாம். (புஹாரி) மற்றொரு அறிவிப்பில், இரவில் அனுமதி கேட்டாலும் அனுமதி கொடுங்கள் என்று கூறினார்கள். (புஹாரி: 875, 899, முஸ்லிம்)

ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் சுப்ஹை தொழுவிப்பார்கள், அவர்களோடு முஃமினான சில பெண்களும், தங்கள் போர்வைகளால் போர்த்தியவர்களாக கலந்து கொள்வார்கள், பிறகு திரும்பிச் செலவார்கள், இருளின் காரணமாக அவர்களை யாரும் அடையாளம் கண்டுகொள்ள மாட்டார்கள். (புஹாரி: 04, 372, முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒரு பெண் வாசனை பூசிவிட்டால், அவர் பள்ளிக்கு வரவேண்டாம்.  (முஸ்லிம்)

பள்ளிக்குள் ஆண்களும், பெண்களும் தொழும் போது திரை போன்றவற்றை இட்டு மறைக்கவேண்டுமா? என்றால், நபிகளார் காலத்திலோ, நபித்தோழர்கள் காலத்திலோ அப்படி ஒரு நடைமுறை இருந்ததற்கு எந்த சான்றுகளையும் பார்க்க முடியவில்லை. எனவே அதனை கட்டாயப்படுத்த முடியாது.

அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்; நபி (ஸல்) அவர்கள் உம்மு ஸுலைம் அவர்களின் வீட்டில் தொழுகைக்கு நின்றார்கள், நானும், ஒரு அனாதையும் அவருக்கு பின்னால் நிற்க, உம்மு ஸுலைம் எங்களுக்கு பின்னால் சப்பில் நின்றார்கள், நபிகளார் இரண்டு ராகஅத்துகள் தொழுவித்தார்கள்.  (புஹாரி: 380, 871, முஸ்லிம்)

சஹ்ல் பின் சஃத் (ரழி)  அவர்கள் கூறினார்கள்: ஆண்கள் தங்கள் வேட்டிகளை, வேட்டி  போதாமை காரணமாக சிறுவர்கள் போன்று தங்கள் கழுத்தில் கட்டிக்கொண்டு, நபிகளாருக்கு பின்னால் (தொழுது கொண்டு) இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். அப்போது ஒருவர்; பெண்களே! ஆண்கள் (தலையை) தூக்கும் வரை, நீங்கள் உங்கள் தலைகளை தூக்கவேண்டாம். என்று கூறுவார்.  (முஸ்லிம்)

உம்மு சலமா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபிகளார் (தொழுகையிலிருந்து) சலாம் கொடுத்தால், அவர்களது சலாத்தைத் தொடர்ந்து பெண்கள் எழுந்து செல்வார்கள், நபிகளாரும், ஆண்களும் எழும்பாமல் அவர்களது இடத்தில் சற்று நேரம் இருப்பார்கள். நபிகளார் எழுந்தால் ஆண்களும் எழும்புவார்கள். (இப்படி நடந்தது ஆண்கள் பெண்களை அடைவதற்கு முன்னர் பெண்கள் திரும்பிச் செல்லவேண்டும் என்பதற்காக என்று நாம் கருதுகிறோம். அல்லாஹ் அறிந்தவன். என்று அறிவிப்பாளர்கள் கூறுகின்றனர்.) (புஹாரி:866, 870)

அம்ர் பின் சலமா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் :……. உங்களில் குர்ஆனை அதிகம் அறிந்து வைத்துள்ளவர் உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுகை நடத்தட்டும்’என்று கூறினார்கள் எனவே, மக்கள் (குர்ஆனை அதிகம் அறிந்தவர் யார் எனத்) துருவிப் பார்த்தபோது நான் பயணிகளிடம் கேட்டு அறிந்துகொண்ட காரணத்தால் என்னை விட அதிகமாகக் குர்ஆனை அறிந்தவர்கள் எவரும், (எங்களிடையே) இருக்கவில்லை. எனவே, (தொழுகை நடத்துவதற்காக) என்னை அவர்கள் முன்னால் நிறுத்தினார்கள். நான் அப்போது ஆறு அல்லது ஏழு வயதுடைய (சிறு)வனாக இருந்தேன். நான் ஒரு சால்வையைப் போர்த்தியிருந்தேன். நான் சஜ்தா செய்யும்போது அது என் முதுகை (விட்டு நழுவிப் பின் புறத்தைக்) காட்டிவந்தது. எனவே, அந்தப் பகுதிப் பெண்மணியொருவர், ‘உங்கள் ஓதுவாரின் பின்புறத்தை எங்களிடமிருந்து மறைக்க மாட்டீர்களா?’ என்று கேட்டார். எனவே, அவர்கள் (துணியொன்றை) வாங்கி வந்து எனக்குச் சட்டையொன்றை வெட்டித் தந்தார்கள். நான் அந்தச் சட்டையின் காரணத்தால் அடைந்த மகிழ்ச்சியைப் போன்று வேறெதனாலும் மகிழ்ச்சியடைந்ததில்லை.  (புஹாரி: 4302)

நபி (ஸல்) அவர்கள்; ஆண்களுக்கு சிறந்த ஸப்பாக முதல் ஸப்பையும், பெண்களுக்கு சிறந்த ஸப்பாக கடைசி  ஸப்பையும் காடிக்கொடுத்தார்கள்.  (முஸ்லிம்)

எனவே நபிகளார் காட்டித்தந்த ஒழுக்கங்களை அழகாகவும், தெளிவாகவும் எடுத்துக்காட்டி, சமூகத்தை நெறிப்படுத்துவதே வெற்றிக்கு வழிவகுக்கும்.

பள்ளிக்குள் கிப்லா திசையை நோக்கி காலை நீட்டுவது பாவமாக கருதப்படுகின்றது. ஆனால் அதற்கு எந்த தடைகளும், எச்சரிக்கைகளும் சான்றுகளில் வரவில்லை. எனவே நபி வழியில் எச்சரிக்கப்படாததை நாமாக தடுக்கக்கூடாது.

மேலும், (நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்; இன்னும், எதை விட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள்; மேலும், அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வதில் மிகக் கடினமானவன்.  (59:7)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: …..ஒன்றைச் செய்ய வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்தால் அதிலிருந்து நீங்கள் தவிர்ந்து கொள்ளுங்கள். ஒன்றைச் செய்யுமாறு உங்களுக்கு நான் கட்டளையிட்டால் அதை உங்களால் முடிந்த அளவிற்குச் செய்யுங்கள்.  (புஹாரி:7288, முஸ்லிம்)

தூர இடங்களிலிருந்து பள்ளிக்கு வருவது சிறப்புக்குரியதே. மாறாக பள்ளிக்கு பக்கத்தில் வீடு இருக்கவேண்டும் என்பதற்காக தூரத்தில் உள்ள வீட்டை விற்பனை செய்வதை நபிகளார் விரும்பவில்லை.

ஜாபிர் (ரழி) அவர்கள் கூறினார்கள்: மஸ்ஜிதுன் நபவிக்கு சூழ காலியாக இருந்தது, பனூ ஸலமா கூட்டத்தினர் தங்கள் இல்லங்களை நபி(ஸல்) அவர்களின் மஸ்ஜிதுக்கு சமீபத்தில் அமைத்துத் தங்க நினைத்தனர். அது கேள்விப்பட்ட  நபி(ஸல்) அவர்கள்: “பனூ சலமா கூட்டத்தாரே உங்கள் வீட்டைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள், உங்கள் வீட்டைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்,எட்டுக்களுக்கு நன்மை எழுதப்படும்.” என்று  கூறினார்கள்.  (புஹாரி: 655, 656, முஸ்லிம்)

ஜாபிர் (ரழி) அவர்கள் கூறினார்கள்; எங்களது வீடு பள்ளியைவிட்டு தூரத்தில் இருந்தது, எனவே அவைகளை விற்றுவிட்டு, பள்ளிக்கு நெருக்கமாக (வீடு எடுக்க) விரும்பினோம். அப்போது நபிகளார் எங்களை (வீட்டை விற்பதை) தடுத்துவிட்டு, “உங்களது ஒவ்வொரு எட்டுக்களுக்கும் அந்தஸ்த்து இருக்கின்றது” என்று கூறினார்கள்.  (முஸ்லிம்)

பள்ளியோடு உள்ளம் தொடர்புபட்டிருப்பது மிக முக்கியமான ஒன்றாகும். அதற்காக எந்த நேரமும் பள்ளியில் இருக்க வேண்டும் என்பதல்ல, மாறாக நாம் எங்கிருந்தாலும் தொழுகையைப் பற்றிய எண்ணமும், பள்ளிக்கு நேரத்திற்கு செல்லும் எண்ணமும் இருக்கவேண்டும்.

இறை இல்லங்களில்  காலையிலும் மாலையிலும் சில மனிதர்கள் அவனை துதி செய்வார்கள், அவர்களை  அல்லாஹ்வை தியானிப்பதை விட்டும், தொழுகையை முறையாக நிறைவேற்றுவதை விட்டும் ஜகாத் கொடுப்பதை விட்டும் அவர்களுடைய வாணிபமோ கொடுக்கல் வாங்கல்களோ பராமுகமாக்கமாட்டாது.  (24: 36, 37)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வி நிழலைத் தவிர வேறு எந்த நிழலும் இல்லாத மறுமை நாளில் அல்லாஹ் ஏழு கூட்டத்தாருக்கு தன் நிழலைக் கொடுப்பான். அதில் ஒரு நபர்; பள்ளியோடு உள்ளம் தொடர்புபட்டிருக்கும் மனிதர்.  (புஹாரி: 660, முஸ்லிம்)

இறை இல்லங்களில் சிறப்புக்குரியது மஸ்ஜிதுல் ஹராம். மஸ்ஜிதுன் நபவி, மஸ்ஜிதுல் அக்ஸா, மஸ்ஜிது குபா ஆகியவையே. இவை தவிர ஏனைய மஸ்ஜிதுகள் அனைத்தும் நன்மை விடயத்தில் சமமானவையே. எனவே விசேட கவனம் செலுத்தி முதல் மூன்று பள்ளிகளுக்கல்லாமல் வேறு பள்ளிகளுக்கு செல்லக்கூடாது. அதே நேரம் குபா மஸ்ஜிதில் இரண்டு ரக்அத்துகள் தொழுவது உம்ராவின் நன்மையைப் பெற்றுத் தரும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மஸ்ஜிதுல் ஹராமைத் தவிர்த்து, ஏனைய பள்ளிகளில் தொழுவதை விட என்னுடைய பள்ளியில் தொழுவது ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும்’.   (புஹாரி: 1190, முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதுன்  நபவி, மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று பள்ளிகளைத் தவிர (அதிக நன்மையை எதிர்பார்த்து)ப் பயணம் மேற்கொள்ளக் கூடாது.  (புஹாரி:1189, முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் மஸ்ஜித் குபாவுக்காக வெளியேறிச் சென்று, இரண்டு ரக்அத்கள் தொழுகின்றாரோ அது அவருக்கு உம்ரா செய்தது போன்றாகும். (அஹ்மத்)

பள்ளிகளை நோக்கி அதிகம் நடப்பது சிறப்புக்குரியதே.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பள்ளிவாசலுக்கு ஒருவர் காலையிலோ மாலையிலோ சென்றால், அவர் காலையிலும் மாலையிலும் செல்லும் போதெல்லாம் சுவர்க்கத்தில் அவருக்கு உரிய இடத்தை அல்லது விருந்துபசாரத்தை அல்லாஹ் தயார் செய்கிறான்.”  (புஹாரி: 662, முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘தொழுகை விடயத்தில் அதிகம் நன்மைக்குரியவர் மிக நீண்ட நீண்ட தூரம் நடப்பவருக்கே. மேலும்  ஜமாஅத் தொழுகையை எதிர்பார்த்திருந்து இமாமுடன் தொழுகிறவருக்குத் தனியாகத் தொழுதுவிட்டுத் தூங்கி விடுபவரை விட அதிகம் நன்மையுண்டு’ .  (புஹாரி:651, முஸ்லிம்)

பள்ளிக்குள் அமர்ந்து தொழுகையை எதிர்ப்பார்த்திருப்பதும் சிறப்புக்குரியதே.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒருவர் தாம் தொழுமிடத்தில் உளூவுடன் இருக்கும் போதெல்லாம் அவருக்காக வானவர்கள் பிரார்த்திக்கிறார்கள். தங்கள் பிரார்த்தனையில், ‘இறைவா! இவரை மன்னித்து விடு! இவருக்கு நீ கருணை புரி!’ என்றும் கூறுவார்கள். உங்களில் ஒருவர் தொழுவதற்காகக் காத்திருந்து தொழுகைதான் அவரைத் தம் மனைவி மக்களிடம் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தியிருக்குமானால் அவர் தொழுகையில் இருப்பவராகவே கருதப்படுவார்.”  (புஹாரி: 659, முஸ்லிம்)

 இது போன்ற சட்டங்களைப் படித்து, பள்ளிகளுக்கு கொடுக்க வேண்டிய கண்ணியத்தை சரியாக கொடுக்க முயற்சிப்போம்.

 இறை இல்லங்களின் பெறுமதிகளையும், அதன் ஒழுக்கங்களையும் சரியாக விளங்கி, அல்லாஹ்வுக்கு செய்ய வேண்டிய கடமைகளை சரியாக நிறைவேற்ற அல்லாஹ்வே எங்களுக்கு துணை இருப்பானாக.

                                                                                                                                                                                                                            

சட்டக் கலை பகுதியில் பதியப்படும் இந்தப் பதிவு; 2008 ம் ஆண்டு காலப் பகுதியில் தொகுக்கப்பட்டு, பாடமும் நடத்தப்பட்டது. இப்போது அது ஒரு சில மாற்றங்களுடனே இங்கு பதியப்படுகின்றது. அன்று தொகுக்கப்பட்ட ஆக்கங்கக் எழுத்து வடிவில் பாதுகாக்கப்படாததால் அதன் போடோ பிரதியை இணைத்துள்ளேன்.
தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்டினால் திருத்தி, இன்னும் பயனுள்ளதாக மாற்றலாம்.
அல்லாஹ்வே எம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக!!!

20 21 23 2526 27

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *