தொழுகைக்கான நிபந்தனைகள்
ஷர்த் நிபந்தனை என்றால்; எந்தக் காரணமும் இல்லாத நேரத்தில் ஒரு வணக்கம் நிறைவேற பூரணமாக இருக்கவேண்டியதைக் குறிக்கும்.ஏதாவது காரணம் இருந்தால் நீங்கிவிடும்.
தொழுகையை நிறைவேற்றுவதற்கு இருக்கவேண்டிய நிபந்தனைகள்.
1- சிறு தொடக்கு, பேரு தொடக்கிலிருந்து சுத்தமாக இருத்தல், வுழு இல்லாமலும், குளிப்பு கடமையான நிலையிலும் தோழமுடியாது.
{يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا قُمْتُمْ إِلَى الصَّلَاةِ فَاغْسِلُوا وُجُوهَكُمْ وَأَيْدِيَكُمْ إِلَى الْمَرَافِقِ وَامْسَحُوا بِرُءُوسِكُمْ وَأَرْجُلَكُمْ إِلَى الْكَعْبَيْنِ وَإِنْ كُنْتُمْ جُنُبًا فَاطَّهَّرُوا } [المائدة: 6]
முஃமின்களே! நீங்கள் தொழுகைக்காக நின்றால், உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்கள் இரு கைகளையும், கழுவிக் கொள்ளுங்கள்; உங்களுடைய தலைகளை தடவிக்கொள்ளுங்கள்; உங்கள் கால்களை இரு கணுக்கால் வரைக் கழுவிக் கொள்ளுங்கள். நீங்கள் பெருந்தொடக்குடையோராக (குளிக்கக் கடமைப் பட்டோராக) இருந்தால் குளித்துக் கொள்ளுங்கள்…. (5:6)
أَبَا هُرَيْرَةَ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لاَ تُقْبَلُ صَلاَةُ مَنْ أَحْدَثَ حَتَّى يَتَوَضَّأَ» قَالَ رَجُلٌ مِنْ حَضْرَمَوْتَ: مَا الحَدَثُ يَا أَبَا هُرَيْرَةَ؟، قَالَ: فُسَاءٌ أَوْ ضُرَاطٌ صحيح البخاري
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘சிறு தொடக்கு ஏற்பட்டவன், வுழு செய்யும் வரை அவனுடைய தொழுகை ஏற்கப்படாது” (புஹாரி:135,6954, முஸ்லிம்)
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: أُقِيمَتِ الصَّلاَةُ وَعُدِّلَتِ الصُّفُوفُ قِيَامًا، فَخَرَجَ إِلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمَّا قَامَ فِي مُصَلَّاهُ، ذَكَرَ أَنَّهُ جُنُبٌ، فَقَالَ لَنَا: «مَكَانَكُمْ» ثُمَّ رَجَعَ فَاغْتَسَلَ، ثُمَّ خَرَجَ إِلَيْنَا وَرَأْسُهُ يَقْطُرُ، فَكَبَّرَ فَصَلَّيْنَا مَعَهُ ” صحيح البخاري
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள்: ‘தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டு. வரிசைகளும் சரி செய்யப்பட்டன, வீட்டிலிருந்து வெளியே வந்த நபி(ஸல்) அவர்கள், தொழுகைக்காக அவர்களின் இடத்தில் நின்றதும் குளிப்பு கடமையானது நினைவிற்கு வந்தால் எங்களைப் பார்த்து ‘உங்களுடைய இடத்திலேயே நில்லுங்கள்’ என்று கூறிவிட்டு சென்று, குளித்துவிட்டு, தலையிலிருந்து தண்ணீர் சொட்டச் சொட்ட வந்தார்கள். தக்பீர் சொல்லித் தொழுகை நடத்தினார்கள். நாங்கள் அவர்களுடன் தொழுதோம்” (புஹாரி: 275, முஸ்லிம்)
2- உடல், உடை, இடம் சுத்தமாக இருத்தல்.
عَنْ عَائِشَةَ أَنَّهَا قَالَتْ: قَالَتْ فَاطِمَةُ بِنْتُ أَبِي حُبَيْشٍ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ [ص:69]: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي لَا أَطْهُرُ أَفَأَدَعُ الصَّلاَةَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّمَا ذَلِكِ عِرْقٌ وَلَيْسَ بِالحَيْضَةِ، فَإِذَا أَقْبَلَتِ الحَيْضَةُ فَاتْرُكِي الصَّلاَةَ، فَإِذَا ذَهَبَ قَدْرُهَا، فَاغْسِلِي عَنْكِ الدَّمَ وَصَلِّي» صحيح البخاري
நபி (ஸல்) அவர்கள், தொடர் இரத்தம் வரும் பெண்களுக்கு தொழுகை நேரம் வந்தால் இரத்தத்தைக் கழுவிக்கொண்டு தொழுமாறு ஏவினார்கள். (புஹாரி: 306, முஸ்லிம்)
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى أَعْرَابِيًّا يَبُولُ فِي المَسْجِدِ فَقَالَ: «دَعُوهُ حَتَّى إِذَا فَرَغَ دَعَا بِمَاءٍ فَصَبَّهُ عَلَيْهِ»صحيح البخاري
அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள், பள்ளிக்குள் ஒரு காட்டரபி சிறுநீர் கழித்தபோது, அவரை பூரணமாக கழிக்க விட்டுவிடுமாறு கூறிவிட்டு, முடிந்த பின் அவ்விடத்திற்கு ஒரு வாளி தண்ணீரை ஊற்றிவிட சொன்னார்கள். (புஹாரி:219, 220, முஸ்லிம்)
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى فَخَلَعَ [ص:243] نَعْلَيْهِ، فَخَلَعَ النَّاسُ نِعَالَهُمْ فَلَمَّا انْصَرَفَ، قَالَ: «لِمَ خَلَعْتُمْ نِعَالَكُمْ؟» فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ، رَأَيْنَاكَ خَلَعْتَ فَخَلَعْنَا، قَالَ: «إِنَّ جِبْرِيلَ أَتَانِي فَأَخْبَرَنِي أَنَّ بِهِمَا خَبَثًا فَإِذَا جَاءَ أَحَدُكُمُ الْمَسْجِدَ، فَلْيَقْلِبْ نَعْلَهُ، فَلْيَنْظُرْ فِيهَا، فَإِنْ رَأَى بِهَا خَبَثًا فَلْيُمِسَّهُ بِالْأَرْضِ، ثُمَّ لِيُصَلِّ فِيهِمَا» مسند أحمد
அபூ சஈத் அல்குத்ரீ (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் தன் தோழர்களுக்கு தொழுவிக்கும் போது (திடீரென) தன் பாதணிகளை கழற்றி இடப்பக்கத்தில் வைத்தார்கள், உடனே தோழர்களும் தங்கள் பாதணிகளைக் கழற்றிவிட்டனர். நபியவர்கள், தொழுகை முடிந்தவுடனே ‘ஏன் உங்களது பாதணிகளைக் கழற்றினீர்கள்?’ என்று கேட்க, ‘நீங்கள் கழற்றியதைப் பார்த்து கழற்றினோம்’என்று தோழர்கள் கூறவே, ‘ஜிப்ரீல் அவர்கள் என்னிடம் வந்து, எனது பாதணியில் அசுத்தம் இருப்பதாக கூறினார். (அதனாலே கழற்றினேன்)’ ‘உங்களில் ஒருவர் பள்ளிக்கு வந்தால் அவர் தனது பாதணியைப் பார்க்கட்டும், அதில் ஏதும் அசுத்தங்களைக் கண்டால் அதனை துடைத்துவிட்டு, அதை அணிந்த நிலையில் தொழட்டும்.’ என்று கூறினார்கள். (அஹ்மத்:11153,அபூதாவுத்: 650)
சுத்தமான எல்லா இடங்களிலும் தொழலாம்.
جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” أُعْطِيتُ خَمْسًا لَمْ يُعْطَهُنَّ أَحَدٌ قَبْلِي: نُصِرْتُ بِالرُّعْبِ مَسِيرَةَ شَهْرٍ، وَجُعِلَتْ لِي الأَرْضُ مَسْجِدًا وَطَهُورًا، فَأَيُّمَا رَجُلٍ مِنْ أُمَّتِي أَدْرَكَتْهُ الصَّلاَةُ فَلْيُصَلِّ، وَأُحِلَّتْ لِي المَغَانِمُ وَلَمْ تَحِلَّ لِأَحَدٍ قَبْلِي، وَأُعْطِيتُ الشَّفَاعَةَ، وَكَانَ النَّبِيُّ يُبْعَثُ إِلَى قَوْمِهِ خَاصَّةً وَبُعِثْتُ إِلَى النَّاسِ عَامَّةً ” صحيح البخاري
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:….. ‘பூமி முழுவதும் சுத்தம் செய்யத் தக்கதாகவும் தொழுமிடமாகவும் எனக்கு ஆக்கப்பட்டுள்ளது. என்னுடைய சமுதாயத்தில் தொழுகையின் நேரத்தை அடைந்தவர் (இருக்கும் இடத்தில்) தொழுதுகொள்ளட்டும்! …. (புஹாரி: 335, முஸ்லிம்)
தொழுபவரின் உடலிலோ, உடையிலோ, இடத்திலோ அசுத்தம் பட்டிருப்பது தெரியாமல் தொழுதால் அது நிறைவேறிவிடும், (மீட்டத் தேவையில்லை) ஆனால் இடையில் தெரியவந்தால் முடியுமான விதத்தில் அதனை அகற்றிவிட வேண்டும்.
3- தொழுகைக்கான நேரம் நுழைந்திருத்தல்.
{إِنَّ الصَّلَاةَ كَانَتْ عَلَى الْمُؤْمِنِينَ كِتَابًا مَوْقُوتًا } [النساء: 103]
நிச்சயமாக தொழுகை என்பது முஃமீன்கள் மீது நேரம் குறிக்கப்பட்ட கடமையாக உள்ளது. (4:103)
عَبْدِ اللَّهِ، قَالَ: سَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَيُّ العَمَلِ أَحَبُّ إِلَى اللَّهِ؟ قَالَ: «الصَّلاَةُ عَلَى وَقْتِهَا» صحيح البخاري
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான செயல் எது? என்று நபி(ஸல்) அவர்களிடம் நான் கேட்டபோது, ‘தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுவதாகும்” என்று பதில் கூறினார்கள். (புஹாரி: 527, முஸ்லிம்)
ஒவ்வொரு தொழுகைக்கும் இஸ்லாம் நேரத்தைக் குறிப்பிட்டுள்ளது, அந்தந்த நேரங்களிலேயே குறிப்பிட்ட தொழுகைகளை தொழவேண்டும். ஜம்உக்கான காரணிகள் இன்றி முற்படுத்தவும் முடியாது, பிற்படுத்தவும் முடியாது.
أَنَّ المُغِيرَةَ بْنَ شُعْبَةَ أَخَّرَ الصَّلاَةَ يَوْمًا وَهُوَ بِالعِرَاقِ، فَدَخَلَ عَلَيْهِ أَبُو مَسْعُودٍ الأَنْصَارِيُّ، فَقَالَ: مَا هَذَا يَا مُغِيرَةُ أَلَيْسَ قَدْ [ص:111] عَلِمْتَ أَنَّ جِبْرِيلَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَزَلَ فَصَلَّى، فَصَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ صَلَّى، فَصَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ صَلَّى، فَصَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ صَلَّى، فَصَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ صَلَّى، فَصَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ قَالَ: «بِهَذَا أُمِرْتُ» صحيح البخاري
அபூ மஸ்ஊத் அல் அன்சாரீ (ரழி) அவர்கள் கூறினார்கள்: ஐந்து நேரத் தொழுகையின் நேரமும் ஜிப்ரீல் (அலை) மூலம் நபிகளாருக்கு காட்டிக்கொடுக்கப்பட்டது. (புஹாரி:521,3221, முஸ்லிம்)
அவைகளை நிறைவேற்றவேண்டிய நேரங்கள்
عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «وَقْتُ الظُّهْرِ إِذَا زَالَتِ الشَّمْسُ وَكَانَ ظِلُّ الرَّجُلِ كَطُولِهِ، مَا لَمْ يَحْضُرِ الْعَصْرُ، وَوَقْتُ الْعَصْرِ مَا لَمْ تَصْفَرَّ الشَّمْسُ، وَوَقْتُ صَلَاةِ الْمَغْرِبِ مَا لَمْ يَغِبِ الشَّفَقُ، وَوَقْتُ صَلَاةِ الْعِشَاءِ إِلَى نِصْفِ اللَّيْلِ الْأَوْسَطِ، وَوَقْتُ صَلَاةِ الصُّبْحِ مِنْ طُلُوعِ الْفَجْرِ مَا لَمْ تَطْلُعِ الشَّمْسُ، فَإِذَا طَلَعَتِ الشَّمْسُ فَأَمْسِكْ عَنِ الصَّلَاةِ، فَإِنَّهَا تَطْلُعْ بَيْنَ قَرْنَيْ شَيْطَانٍ» صحيح مسلم
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: லுஹருடைய நேரம் சூரியன் (உச்சியிலிருந்து) சாய்ந்ததிலிருது, ஒரு மனிதனின் நிழல் அவனளவு வந்து, அசர் நேரம் வராத வரை. அஸருடைய நேரம் சூரியன் மறையாத வரை. மக்ரிபுடைய நேரம் (செந்நிற) அடிவானம் மறையாத வரை.இஷாவுடைய நேரம் நள்ளிரவு வரை. சுப்ஹுடைய நேரம் பஜ்ர் உதயமானதிலிருந்து சூரியன் உதிக்கும் வரை. (முஸ்லிம்)
மனிதர்களின் இலேசிக்காக அல்லாஹ் தொழுகையின் நேரத்தை விசாலப்படுத்தி வைத்துள்ளான். ஆனாலும் முதல் நேரத்தில் தொழுவதே சிறந்தது. சில நேரங்களில் நபிகளார் சில தொழுகைகளை ஆரம்ப நேரத்திலிருந்து தாமதப்படுத்தியும், தாமதப்படுத்த அனுமதியும் அளித்துள்ளார்கள்.
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ زَيْدَ بْنَ ثَابِتٍ، حَدَّثَهُ: ” أَنَّهُمْ تَسَحَّرُوا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ قَامُوا إِلَى الصَّلاَةِ، قُلْتُ: كَمْ بَيْنَهُمَا؟ قَالَ: قَدْرُ خَمْسِينَ أَوْ سِتِّينَ “، يَعْنِي آيَةً صحيح البخاري
ஸைத் இப்னு ஸாபித்(ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி(ஸல்) அவர்களுடன் நாங்கள் ஸஹர் செய்துவிட்டு, பின்னர் (பஜ்ர்) தொழுகைக்குத் தயாரானோம்.) ‘ஸஹருக்கும் தொழுகைக்குமிடையே எவ்வளவு இடைவெளி இருக்கும்?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு ஸைத் இப்னு ஸாபித்(ரழி) அவர்கள் ஐம்பது அல்லது அறுபது வசனங்கள் (ஓதும்) நேரம்’ என்று பதிலளித்தார்கள். புஹாரி: 575, முஸ்லிம்)
أَنَّ عَائِشَةَ قَالَتْ: «كُنَّ نِسَاءُ المُؤْمِنَاتِ يَشْهَدْنَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلاَةَ الفَجْرِ مُتَلَفِّعَاتٍ بِمُرُوطِهِنَّ، ثُمَّ يَنْقَلِبْنَ إِلَى بُيُوتِهِنَّ حِينَ يَقْضِينَ الصَّلاَةَ، لاَ يَعْرِفُهُنَّ أَحَدٌ مِنَ الغَلَسِ» صحيح البخاري
ஆயிஷா(ரழி) அவர்கள் கூறினார்கள்: முஃமினான சில பெண்கள் தங்களின் ஆடைகளால் போர்த்தியவர்களாக நபி(ஸல்) அவர்களுடன் சுப்ஹு தொழுகையில் கலந்துகொள்பவர்களாக இருந்தனர். தொழுகை முடிந்ததும் தங்களின் இல்லங்களுக்குத் திரும்புவார்கள். இருளின் காரணமாக அவர்களை ஒருவரும் அறிந்து கொள்ளமுடியாது. (புஹாரி: 578, முஸ்லிம்)
أَنَسُ بْنُ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ حِينَ زَاغَتِ الشَّمْسُ، فَصَلَّى الظُّهْرَ، ……..صحيح البخاري
அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் சூரியன் சாய்ந்த நேரத்தில் வெளியேறி, லுஹரைத் தொழுதார்கள். (புஹாரி: 540, முஸ்லிம்)
حَدَّثَنِي أَنَسُ بْنُ مَالِكٍ، قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي العَصْرَ وَالشَّمْسُ مُرْتَفِعَةٌ حَيَّةٌ، فَيَذْهَبُ الذَّاهِبُ إِلَى العَوَالِي، فَيَأْتِيهِمْ وَالشَّمْسُ مُرْتَفِعَةٌ» وَبَعْضُ العَوَالِي مِنَ المَدِينَةِ عَلَى أَرْبَعَةِ أَمْيَالٍ أَوْ نَحْوِهِ صحيح البخاري
அனஸ்(ரழி) அவர்கள் கூறினார்கள்: சூரியன் உயரத்தில் ஒளி வீசிக் கொண்டிருக்கும்போது நபி(ஸல்) அவர்கள் அஸர் தொழுபவர்களாக இருந்தனர். மேட்டுப பாங்கான பகுதிக்குச் செல்பவர் அங்கே சென்றடையும்போது சூரியன் உயரத்திலேயே இருக்கும். சில மேட்டுப் பாங்கான பகுதிகள் மதீனாவிலிருந்து நான்கு மைல் அல்லது கிட்டததட்ட அந்த அளவு தூரத்தில் அமைந்திருந்தன. (புஹாரி: 550, முஸ்லிம்)
عَنْ عَائِشَةَ، قَالَتْ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «يُصَلِّي صَلاَةَ العَصْرِ وَالشَّمْسُ طَالِعَةٌ فِي حُجْرَتِي لَمْ يَظْهَرِ الفَيْءُ بَعْدُ» صحيح البخاري
ஆயிஷா(ரழி) அவர்கள் கூறினார்கள்: சூரியன் என்னுடைய அறையில் விழுந்து கொண்டிருக்கும்போது நிழல் என் அறையைவிட்டும் வெளியாகாத நிலையில் நபி(ஸல்) அவர்கள் அஸர் தொழுதார்கள். (புஹாரி: 546)
جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، فَقَالَ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي الظُّهْرَ بِالهَاجِرَةِ، وَالعَصْرَ وَالشَّمْسُ نَقِيَّةٌ، وَالمَغْرِبَ إِذَا [ص:117] وَجَبَتْ، وَالعِشَاءَ أَحْيَانًا وَأَحْيَانًا، إِذَا رَآهُمُ اجْتَمَعُوا عَجَّلَ، وَإِذَا رَآهُمْ أَبْطَؤُوا أَخَّرَ، وَالصُّبْحَ كَانُوا – أَوْ كَانَ – النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّيهَا بِغَلَسٍ» صحيح البخاري
ஜாபிர் (ரழி) அவர்கள் கூறினார்கள்: “நபி(ஸல்) அவர்கள் நண்பகலில் லுஹர் தொழுவார்கள. சூரியன் தெளிவாக இருக்கும்போது அஸர் தொழுவார்கள். சூரியன் மறைந்ததும் மக்ரிப் தொழுவார்கள். இஷாவை சில நேரம் முன்னேரத்திலும் சில நேரம் பின்னேரத்திலும் தொழுவார்கள். அதாவது மக்கள் ஒன்று சேர்ந்துவிட்டால் முற்படுத்துவார்கள். மக்கள் வருவதற்கு தாமதமானால் தாமதப் படுத்துவார்கள். ஸுப்ஹைக் காலை வெளிச்சம் வருவதற்கு முன்னால் தொழுபவர்களாக இருந்தனர். (புஹாரி; 560)
தொழுகைகளை காரணங்களோடு குறிப்பிட்ட நேரத்திற்குள் தாமதப்படுத்தவும் இஸ்லாம் அவகாசம் தந்துள்ளது.
عَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ أَدْرَكَ مِنَ الصُّبْحِ رَكْعَةً قَبْلَ أَنْ تَطْلُعَ الشَّمْسُ، فَقَدْ أَدْرَكَ الصُّبْحَ، وَمَنْ أَدْرَكَ رَكْعَةً مِنَ العَصْرِ قَبْلَ أَنْ تَغْرُبَ الشَّمْسُ، فَقَدْ أَدْرَكَ العَصْرَ» صحيح البخاري
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “சூரியன் உதிப்பதற்கு முன் ஸுப்ஹுடைய ஒரு ரக்அத்தை அடைந்து கொள்பவர் ஸுப்ஹை அடைந்து கொள்கிறார். சூரியன் மறைவதற்கு முன் அஸருடைய ஒரு ரக்அத்தை அடைந்து கொள்பவர் அஸர் தொழுகையை அடைந்து கொள்கிறார்.” (புஹாரி: 579, முஸ்லிம்)
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: أَخَّرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلاَةَ العِشَاءِ إِلَى نِصْفِ اللَّيْلِ، ثُمَّ صَلَّى، ثُمَّ قَالَ: «قَدْ صَلَّى النَّاسُ وَنَامُوا، أَمَا إِنَّكُمْ فِي صَلاَةٍ مَا انْتَظَرْتُمُوهَا» صحيح البخاري
அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி(ஸல்) அவர்கள் இஷாத் தொழுகையைப் பாதி இரவு வரை பிற்படுத்தினார்கள். பின்பு ‘மக்கள் தொழுதுவிட்டு உறங்கிவிட்டனர், ஆனால் நீங்களோ தொழுகைக்காகக் காத்துக் கொண்டிருக்கும் வரை நீங்கள் தொழுகையிலேயே இருக்கிறீர்கள்!” என்று குறிப்பிட்டார்கள். (புஹாரி: 572, முஸ்லிம்)
عَنْ أَبِي ذَرٍّ، قَالَ: أَذَّنَ مُؤَذِّنُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الظُّهْرَ، فَقَالَ: «أَبْرِدْ أَبْرِدْ» أَوْ قَالَ: «انْتَظِرِ انْتَظِرْ» وَقَالَ: «شِدَّةُ الحَرِّ مِنْ فَيْحِ جَهَنَّمَ، فَإِذَا اشْتَدَّ الحَرُّ فَأَبْرِدُوا عَنِ الصَّلاَةِ» حَتَّى رَأَيْنَا فَيْءَ التُّلُولِ صحيح البخاري
அபூ தர்(ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி(ஸல்) அவர்களின் முஅத்தின், லுஹருக்கு பாங்கு சொன்னார்கள், அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘கொஞ்சம் பொறு; தாமதப்படுத்து” என்று கூறிவிட்டு, ‘கடுமையான வெப்பம் நரகத்தின் வெப்பக் காற்றின் வெளிப்படாகும். எனவே வெப்பம் கடுமையாகும்போது (லுஹர்) தொழுகையைத் தாமதப் படுத்துங்கள்!” என்றார்கள். மணல் மேடுகளின் நிழலை நாங்கள் பார்க்கும் வரை நபி(ஸல்) அவர்கள் தாமதப் படுத்துங்கள்!” என்றார்கள். (புஹாரி:535, 539, முஸ்லிம்)
தொழுவதற்கு தடுக்கப்பட்ட நேரங்கள், சிலர் ஐந்து நேரமாகவும், சிலர் மூன்று நேரமாகவும் குறிப்பிடுவர். இரண்டும் சரியானதே.
சுப்ஹு தொழுத பின்னர், சூரியன் பூரணமாக உதிக்கும் வரை.
عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: شَهِدَ عِنْدِي رِجَالٌ مَرْضِيُّونَ وَأَرْضَاهُمْ عِنْدِي عُمَرُ، «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنِ الصَّلاَةِ بَعْدَ الصُّبْحِ حَتَّى تَشْرُقَ الشَّمْسُ، وَبَعْدَ العَصْرِ حَتَّى تَغْرُبَ» صحيح البخاري
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்; ஸுப்ஹுக்குப் பிறகிலிருந்து சூரியன் உதிக்கும் வரை தொழுவதை நபி(ஸல்) அவர்கள் தடுத்தார்கள் . (புஹாரி:581, முஸ்லிம்)
ابْنُ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا طَلَعَ حَاجِبُ الشَّمْسِ فَأَخِّرُوا الصَّلاَةَ حَتَّى تَرْتَفِعَ، وَإِذَا غَابَ حَاجِبُ الشَّمْسِ فَأَخِّرُوا الصَّلاَةَ حَتَّى تَغِيبَ» صحيح البخاري
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “சூரியன் உதிக்கத் துவங்கும்போது அது (முழுமையாக) உயரும் வரை தொழுவதைத் தாமதப்படுத்துங்கள்! சூரியன் மறையத் துவங்கும்போது அது முழுமையாக மறையும் வரை தொழுகையைப் பிற்படுத்துங்கள்!” புஹாரி: 583, முஸ்லிம்)
அசர் தொழுத பின்னர், சூரியன் முழுமையாக மறையும் வரை.
عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: شَهِدَ عِنْدِي رِجَالٌ مَرْضِيُّونَ وَأَرْضَاهُمْ عِنْدِي عُمَرُ، «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنِ الصَّلاَةِ بَعْدَ الصُّبْحِ حَتَّى تَشْرُقَ الشَّمْسُ، وَبَعْدَ العَصْرِ حَتَّى تَغْرُبَ»، صحيح البخاري
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்; ஸுப்ஹுக்குப் பிறகிலிருந்து சூரியன் உதிக்கும் வரை தொழுவதையும், அஸருக்குப் பிறகிலிருந்து சூரியன் மறையும் வரை தொழுவதையும் நபி(ஸல்) அவர்கள் தடுத்தார்கள் (புஹாரி:581, முஸ்லிம்)
சூரியன் உச்சம் கொடுக்கும் போது, அது (நிழல் பெரும் அளவு) சாயும் வரை.
عُقْبَةَ بْنَ عَامِرٍ الْجُهَنِيَّ، يَقُولُ: ثَلَاثُ سَاعَاتٍ كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْهَانَا أَنْ نُصَلِّيَ فِيهِنَّ، أَوْ أَنْ نَقْبُرَ فِيهِنَّ مَوْتَانَا: «حِينَ تَطْلُعُ الشَّمْسُ بَازِغَةً حَتَّى تَرْتَفِعَ، وَحِينَ يَقُومُ قَائِمُ الظَّهِيرَةِ حَتَّى تَمِيلَ الشَّمْسُ، وَحِينَ تَضَيَّفُ الشَّمْسُ لِلْغُرُوبِ حَتَّى تَغْرُبَ» صحيح مسلم
உக்பதுப்னு ஆமிர் (ரழி) அவர்கள் கூறினார்கள்; மூன்று நேரங்கள் இருக்கின்றன, அவற்றில் தொழுவதை நபிகளார் தடுத்தார்கள். மைய்யித்துகளை அடக்கம்செய்வதையும் தடுத்தார்கள். சூரியன் உதிக்கும்போது, அது உயரும் வரை, அது நடு உச்சியில் இருக்கோம் போது, அது சாயும் வரை, அது மறையும்போது, முழுக்கவும் மறையும் வரை. (முஸ்லிம்)
ஜும்ஆ தொழுகைக்கு சூரியன் நாடு உச்சியில் இருப்பது தடையில்லை. அதற்கு முன்னர் தொழுவதும் அனுமதிக்கப்பட்டதே.
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي الجُمُعَةَ حِينَ تَمِيلُ الشَّمْسُ» صحيح البخاري
அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: சூரியன் சாயும் நேரத்தில் நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆ தொழுபவர்களாக இருந்தார்கள். (புஹாரி:904)
سَلَمَةَ بْنِ الأَكْوَعِ، قَالَ: «كُنَّا نُصَلِّي مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الجُمُعَةَ ثُمَّ نَنْصَرِفُ، وَلَيْسَ لِلْحِيطَانِ ظِلٌّ نَسْتَظِلُّ فِيهِ» صحيح البخاري
ஸலமதுப்னு அக்வஃ (ரழி) அவர்கள் கூறினார்கள்: நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் (வெள்ளிக்கிழமை) ‘ஜும்ஆ’ தொழுதுவிட்டு (வீட்டிற்கு)த் திரும்புவோம். அப்போது நாங்கள் நிழலுக்காக ஒதுங்கும் அளவிற்குக் கூட, மதில்களுக்கு நிழல் இருக்காது” . (புஹாரி:4168, முஸ்லிம்)
4- அவ்ரத்தை மறைத்தல்
ஒருவன் தன் மறைவிடங்களை மறைக்காமல் தொழுதால் அவனது தொழுகை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது, முடியுமான அளவு மறைக்கவேண்டும்.
தொழுகைக்கு வரும் போது இயன்ற அளவு அழகான நல்ல ஆடைகளை அணிந்து வரவேண்டும்.
{يَا بَنِي آدَمَ خُذُوا زِينَتَكُمْ عِنْدَ كُلِّ مَسْجِدٍ وَكُلُوا وَاشْرَبُوا وَلَا تُسْرِفُوا إِنَّهُ لَا يُحِبُّ الْمُسْرِفِينَ} [الأعراف: 31]
ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் உங்களை (ஆடைகளால்) அழகாக்கிக் கொள்ளுங்கள்;…. (7:31)
أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ: بَعَثَنِي أَبُو بَكْرٍ فِي تِلْكَ الحَجَّةِ فِي مُؤَذِّنِينَ يَوْمَ النَّحْرِ، نُؤَذِّنُ بِمِنًى: أَنْ لاَ يَحُجَّ بَعْدَ العَامِ مُشْرِكٌ وَلاَ يَطُوفَ بِالْبَيْتِ عُرْيَانٌ ” صحيح البخاري
நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜின் போது ‘எந்த ஒரு நிர்வாணியும் கஃபாவை வலம்வரக்கூடாது’ என அறிவிப்பு செய்யுமாறு ஏவினார்கள். (புஹாரி: 369,3177, முஸ்லிம்)
ஆண்களைப் பொருத்தவரை அவர்களது மறைக்கவேண்டிய பகுதி முழங்காலுக்கும், தொப்புளுக்கும் இடைப்பட்டது என்ற வகையில், அவன் கீழாடையுடன் மட்டும் தொழலாம், அப்படி தொழும்போது தோளை மறைக்கவேண்டும். இதுவே நபிகளார் காட்டிய குறைந்த கட்ட ஆடையாகும்.
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لاَ يُصَلِّي أَحَدُكُمْ فِي الثَّوْبِ الوَاحِدِ لَيْسَ عَلَى عَاتِقَيْهِ شَيْءٌ» صحيح البخاري
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘உங்களில் ஒருவர் தன்னுடைய தோளின் மீது எதுவும் இல்லாதிருக்க ஓர் ஆடையை மட்டும் அணிந்து தொழ வேண்டாம்’ (புஹாரி:359, முஸ்லிம்)
أَبَا هُرَيْرَةَ، يَقُولُ: أَشْهَدُ أَنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ صَلَّى فِي ثَوْبٍ وَاحِدٍ فَلْيُخَالِفْ بَيْنَ طَرَفَيْهِ» صحيح البخاري
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘ஓர் ஆடையை மட்டும் அணிந்து தொழுபவர் அந்த ஆடையின் இரண்டு ஓரத்தையும் மாற்றி அணியட்டும்’ (புஹாரி:360)
عَنْ عُمَرَ بْنِ أَبِي سَلَمَةَ، «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى فِي ثَوْبٍ وَاحِدٍ قَدْ خَالَفَ بَيْنَ طَرَفَيْهِ» صحيح البخاري
உமர் பின் அபீ சலமா (ரழி) அவர்கள் கூறினார்கள்: ‘நபி(ஸல்) அவர்கள் ஒரே ஆடையை அணிந்து, அதன் இரண்டு ஓரத்தையும் இரண்டு தோள்களின் மீது மாற்றிப் போட்டு தொழுதார்கள்” (புஹாரி:354, முஸ்லிம்)
عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ سَائِلًا سَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الصَّلاَةِ فِي ثَوْبٍ وَاحِدٍ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَوَلِكُلِّكُمْ ثَوْبَانِ» صحيح البخاري
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள்: ‘ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் ஒரே ஆடையை அணிந்து தொழுவதைப் பற்றிக் கேட்டதற்கு, ‘உங்களில் ஒவ்வொருவருக்கும் இரண்டு ஆடைகள் இருக்கின்றனவா?’ என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்” (புஹாரி: 358, முஸ்லிம்)
பெண்களும் தன் உடலை முடிந்த அளவு மறைத்துக் கொள்ளவேண்டும்.
عَنْ أُمِّ عَطِيَّةَ، قَالَتْ: أُمِرْنَا أَنْ نُخْرِجَ الحُيَّضَ يَوْمَ العِيدَيْنِ، وَذَوَاتِ الخُدُورِ فَيَشْهَدْنَ جَمَاعَةَ المُسْلِمِينَ، وَدَعْوَتَهُمْ وَيَعْتَزِلُ الحُيَّضُ عَنْ مُصَلَّاهُنَّ، قَالَتِ امْرَأَةٌ: يَا رَسُولَ اللَّهِ إِحْدَانَا لَيْسَ لَهَا جِلْبَابٌ؟ قَالَ: «لِتُلْبِسْهَا صَاحِبَتُهَا مِنْ جِلْبَابِهَا» صحيح البخاري
உம்மு அதிய்யா (ரழி) அவர்கள் கூறினார்கள் : இரண்டு பெருநாள்களிலும் மாதவிடாய்ப் பெண்களையும் வீட்டில் இருக்கிற கன்னிப் பெண்களையும் வெளியேற்றி (தொழும் திடலுக்கு) அழைத்துவருமாறும், அப்பெண்கள் வீட்டிலிருந்து வெளியாகி முஸ்லிம்கள் தொழுகிற இடத்திற்குச் சென்று அவர்களின் பிரச்சாரத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்றும், தொழும் இடத்தைவிட்டு மாதவிடாய்ப் பெண்கள் ஒதுங்கியிருக்க வேண்டும்’ என்றும் கட்டளையிடப்பட்டோம். நபி(ஸல்) அவர்களின் இந்தக் கட்டளையைக் கேட்டுக் கொண்டிருந்த பெண்களில் ஒருவர் ‘இறைத்தூதர் அவர்களே! எங்களில் எவருக்கேனும் அணிந்து கொள்வதற்கு மேலாடை இல்லையெனில் என்ன செய்வது?’ எனக் கேட்டதற்கு, ‘அவளுடைய தோழி தன்னுடைய (உபரியான) மேலாடையை இவளுக்கு அணியக் கொடுக்கட்டும்’ என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்” (புஹாரி: 324,351, முஸ்லிம்)
أَنَّ عَائِشَةَ قَالَتْ: «كُنَّ نِسَاءُ المُؤْمِنَاتِ يَشْهَدْنَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلاَةَ الفَجْرِ مُتَلَفِّعَاتٍ بِمُرُوطِهِنَّ، ثُمَّ يَنْقَلِبْنَ إِلَى بُيُوتِهِنَّ حِينَ يَقْضِينَ الصَّلاَةَ، لاَ يَعْرِفُهُنَّ أَحَدٌ مِنَ الغَلَسِ» صحيح البخاري
ஆயிஷா(ரழி) அவர்கள் கூறினார்கள்: இறைநம்பிக்கையுள்ள பெண்கள் தங்களின் ஆடைகளால் போர்த்திக் கொண்டு நபி(ஸல்) அவர்களுடன் ஃபஜ்ருத் தொழுகையில் பங்கெடுப்பவர்களாக இருந்தனர். தொழுகை முடிந்ததும் தங்களின் இல்லங்களுக்குத் திரும்புவார்கள். இருட்டின் காரணமாக அவர்களை ஒருவரும் அறிந்து கொள்ளமுடியாது.
தொழுகையில் ஆடை பற்றிய சில ஒழுக்கங்கள்.
தொழுகையை விட்டு சிந்தனையைப் போக்கும் அடையாளங்கள் இடப்பட்ட, உருவமுள்ள ஆடைகளைத் தவிர்த்தல்.
عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى فِي خَمِيصَةٍ لَهَا أَعْلاَمٌ، فَنَظَرَ إِلَى أَعْلاَمِهَا نَظْرَةً، فَلَمَّا انْصَرَفَ قَالَ: «اذْهَبُوا بِخَمِيصَتِي هَذِهِ إِلَى أَبِي جَهْمٍ وَأْتُونِي بِأَنْبِجَانِيَّةِ أَبِي جَهْمٍ، فَإِنَّهَا أَلْهَتْنِي آنِفًا عَنْ صَلاَتِي» صحيح البخاري
ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் பல வண்ணங்கள் உள்ள ஓர் ஆடையை அணிந்து தொழுதபோது அந்த வண்ணங்களின் பக்கம் பார்வையைச் செலுத்தினார்கள். அவர்கள் தொழுகையை முடித்ததும், ‘என்னுடைய இந்த ஆடையை எடுத்துச் சென்று அபூ ஜஹ்மிடம் கொடுத்துவிட்டு, அவரின் ஆடையைக் கொண்டு வாருங்கள். இந்த ஆடை சிறிது நேரத்திற்கு முன்னர் என்னுடைய தொழுகையைவிட்டு என் கவனத்தைத் திருப்பிவிட்டது’ என்று கூறினார்கள்” (புஹாரி: 373,752, முஸ்லிம்)
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، كَانَ قِرَامٌ لِعَائِشَةَ سَتَرَتْ بِهِ جَانِبَ بَيْتِهَا، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَمِيطِي عَنَّا قِرَامَكِ هَذَا، فَإِنَّهُ لاَ تَزَالُ تَصَاوِيرُهُ تَعْرِضُ فِي صَلاَتِي» صحيح البخاري
அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: ‘ஆயிஷா(ரழி) அவர்களிடம் (உருவப் படங்கள் நிறைந்த) ஒரு திரை இருந்தது. அதனால் தங்களின் வீட்டின் ஓர் ஓரத்தை மறைத்திருந்தார்கள். இதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் ஆயிஷா(ரழி) அவர்களிடம் ‘உன்னுடைய இந்தத் திரையை நம்மைவிட்டும் அகற்றி விடு. அதிலுள்ள படங்கள் நான் தொழுது கொண்டிருக்கும்போது என்னை பராக்காக்கிவிட்டன.’ என்று கூறினார்கள்” (புஹாரி:374)
பட்டுத் துணி அணிந்து தொழுவதை தவிர்த்தல்.
عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، قَالَ: أُهْدِيَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرُّوجُ حَرِيرٍ، فَلَبِسَهُ، فَصَلَّى فِيهِ، ثُمَّ انْصَرَفَ، فَنَزَعَهُ نَزْعًا شَدِيدًا كَالكَارِهِ لَهُ، وَقَالَ: «لاَ يَنْبَغِي هَذَا لِلْمُتَّقِينَ» صحيح البخاري
உக்பா (ரழி) அவர்கள் கூறினார்கள்: ‘நபி(ஸல்) அவர்களுக்குப் பட்டினாலான மேல் அங்கி ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அதை அவர்கள் அணிந்து தொழுதார்கள். தொழுகையை முடித்த பின்னர் அந்த அங்கியில் வெறுப்புற்றவர்களைப் போன்று வேகமாக அதைக் கழற்றி எறிந்துவிட்டு ‘பயபக்தியுடையவர்களுக்கு இந்த ஆடை உகந்ததன்று’ என்று கூறினார்கள்” (புஹாரி: 375, முஸ்லிம்)
عَنْ أَبِي جُحَيْفَةَ،قَالَ: «……. وَخَرَجَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حُلَّةٍ حَمْرَاءَ، مُشَمِّرًا صَلَّى إِلَى العَنَزَةِ بِالنَّاسِ رَكْعَتَيْنِ، وَرَأَيْتُ النَّاسَ وَالدَّوَابَّ يَمُرُّونَ مِنْ بَيْنِ يَدَيِ العَنَزَةِ» صحيح البخاري
அபூ ஜுஹைபா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி(ஸல்) அவர்கள் ஒரு சிவப்பு நிற மேல் அங்கியை அணிந்து, தடியை நோக்கி இரண்டு ரக்அத் தொழுதார்கள். (புஹாரி: 376, முஸ்லிம்)
செருப்பு அணிந்து தொழலாம்.
أَبُو مَسْلَمَةَ سَعِيدُ بْنُ يَزِيدَ الأَزْدِيُّ، قَالَ: سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ: أَكَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي فِي نَعْلَيْهِ؟ قَالَ: «نَعَمْ» صحيح البخاري
அனஸ் (ரழி) அவர்களிடம், ‘நபி(ஸல்) அவர்கள் செருப்பணிந்து தொழுதிருக்கிறார்களா? என்று கேட்கப்பட்டதற்கு ‘ஆம்’ என்றார்கள்” (புஹாரி: 386, முஸ்லிம்)
தொழும்போது மறைவிடங்களில் ஏதும் வெளிப்பட்டால் முடியுமான அளவு மறைக்க வேண்டும். அது தொழுகையில் பாதிப்பை ஏற்படுத்தாது.
عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ: كَانَ رِجَالٌ يُصَلُّونَ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَاقِدِي أُزْرِهِمْ عَلَى أَعْنَاقِهِمْ، كَهَيْئَةِ الصِّبْيَانِ، وَيُقَالُ لِلنِّسَاءِ: «لاَ تَرْفَعْنَ رُءُوسَكُنَّ حَتَّى يَسْتَوِيَ الرِّجَالُ جُلُوسًا» صحيح البخاري
சஹ்ல் பின் சஃத் (ரழி) அவர்கள் கூறினார்கள்: ஆண்கள் தங்கள் வேட்டிகளை, வேட்டி போதாமை காரணமாக சிறுவர்கள் போன்று தங்கள் கழுத்தில் கட்டிக்கொண்டு, நபிகளாருக்கு பின்னால் (தொழுது கொண்டு) இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். அப்போது ஒருவர்; பெண்களே! ஆண்கள் (தலையை) தூக்கும் வரை, நீங்கள் உங்கள் தலைகளை தூக்கவேண்டாம். என்று கூறுவார். (புஹாரி: 362,முஸ்லிம்)
ஆடை வசதியில்லாதவர்கள் முடிந்த அளவு மறைத்து தொழுவார்கள்.
عَنْ عَمْرِو بْنِ سَلَمَةَ، قَالَ: قَالَ لِي أَبُو قِلاَبَةَ: …..قَالَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ….فَإِذَا حَضَرَتِ الصَّلاَةُ فَلْيُؤَذِّنْ أَحَدُكُمْ، وَلْيَؤُمَّكُمْ أَكْثَرُكُمْ قُرْآنًا». فَنَظَرُوا فَلَمْ يَكُنْ أَحَدٌ أَكْثَرَ قُرْآنًا مِنِّي، لِمَا كُنْتُ أَتَلَقَّى مِنَ الرُّكْبَانِ، فَقَدَّمُونِي بَيْنَ أَيْدِيهِمْ، وَأَنَا ابْنُ سِتٍّ أَوْ سَبْعِ سِنِينَ، وَكَانَتْ عَلَيَّ بُرْدَةٌ، كُنْتُ إِذَا سَجَدْتُ تَقَلَّصَتْ عَنِّي، فَقَالَتِ امْرَأَةٌ مِنَ الحَيِّ: أَلاَ تُغَطُّوا عَنَّا اسْتَ قَارِئِكُمْ؟ فَاشْتَرَوْا فَقَطَعُوا لِي قَمِيصًا، فَمَا فَرِحْتُ بِشَيْءٍ فَرَحِي بِذَلِكَ القَمِيصِ صحيح البخاري
அம்ர் பின் சலமா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் :……. உங்களில் குர்ஆனை அதிகம் அறிந்து வைத்துள்ளவர் உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுகை நடத்தட்டும்’என்று கூறினார்கள் எனவே, மக்கள் (குர்ஆனை அதிகம் அறிந்தவர் யார் எனத்) துருவிப் பார்த்தபோது நான் பயணிகளிடம் கேட்டு அறிந்துகொண்ட காரணத்தால் என்னை விட அதிகமாகக் குர்ஆனை அறிந்தவர்கள் எவரும், (எங்களிடையே) இருக்கவில்லை. எனவே, (தொழுகை நடத்துவதற்காக) என்னை அவர்கள் முன்னால் நிறுத்தினார்கள். நான் அப்போது ஆறு அல்லது ஏழு வயதுடைய (சிறு)வனாக இருந்தேன். நான் ஒரு சால்வையைப் போர்த்தியிருந்தேன். நான் சஜ்தா செய்யும்போது அது என் முதுகை (விட்டு நழுவிப் பின் புறத்தைக்) காட்டிவந்தது. எனவே, அந்தப் பகுதிப் பெண்மணியொருவர், ‘உங்கள் இமாமின் பின்புறத்தை எங்களிடமிருந்து மறைக்க மாட்டீர்களா?’ என்று கேட்டார். எனவே, அவர்கள் (துணியொன்றை) வாங்கி வந்து எனக்குச் சட்டையொன்றை வெட்டித் தந்தார்கள். நான் அந்தச் சட்டையின் காரணத்தால் அடைந்த மகிழ்ச்சியைப் போன்று வேறெதனாலும் மகிழ்ச்சியடைந்ததில்லை. (புஹாரி: 4302)
5- கிப்லாவை (கஃபாவை) முன்னோக்குதல்
{وَمِنْ حَيْثُ خَرَجْتَ فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ وَإِنَّهُ لَلْحَقُّ مِنْ رَبِّكَ وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ (149) وَمِنْ حَيْثُ خَرَجْتَ فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ وَحَيْثُ مَا كُنْتُمْ فَوَلُّوا وُجُوهَكُمْ شَطْرَهُ } [البقرة: 149، 150
நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் (தொழுகையின் போது) உம் முகத்தை மஸ்ஜிதுல் ஹராம் பக்கமே திருப்பிக்கொள்வீராக;….(2:149,150)
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ صَلَّى صَلاَتَنَا وَاسْتَقْبَلَ قِبْلَتَنَا، وَأَكَلَ ذَبِيحَتَنَا فَذَلِكَ المُسْلِمُ الَّذِي لَهُ ذِمَّةُ اللَّهِ وَذِمَّةُ رَسُولِهِ، فَلاَ تُخْفِرُوا اللَّهَ فِي ذِمَّتِهِ» صحيح البخاري
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘நம்முடைய தொழுகையைத் தொழுது, நம்முடைய கிப்லாவை முன்னோக்கி, நாம் அறுப்பதைப் புசித்து வருகிறவர்தாம் முஸ்லிம். அவர் மீதே அல்லாஹ்வினதும், அவன் தூதரினதும் பொறுப்பு இருக்கிறது. எனவே அவரின் பொறுப்பு விஷயத்தில் அல்லாஹ்வின் ஒப்பந்தத்தை முறிக்காதீர்கள்’ (புஹாரி:391)
عَنِ البَرَاءِ بْنِ عَازِبٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ أَوَّلَ مَا قَدِمَ المَدِينَةَ نَزَلَ عَلَى أَجْدَادِهِ، أَوْ قَالَ أَخْوَالِهِ مِنَ الأَنْصَارِ، وَأَنَّهُ «صَلَّى قِبَلَ بَيْتِ المَقْدِسِ سِتَّةَ عَشَرَ شَهْرًا، أَوْ سَبْعَةَ عَشَرَ شَهْرًا، وَكَانَ يُعْجِبُهُ أَنْ تَكُونَ قِبْلَتُهُ قِبَلَ البَيْتِ، وَأَنَّهُ صَلَّى أَوَّلَ صَلاَةٍ صَلَّاهَا صَلاَةَ العَصْرِ، وَصَلَّى مَعَهُ قَوْمٌ» فَخَرَجَ رَجُلٌ مِمَّنْ صَلَّى مَعَهُ، فَمَرَّ عَلَى أَهْلِ مَسْجِدٍ وَهُمْ رَاكِعُونَ، فَقَالَ: أَشْهَدُ بِاللَّهِ لَقَدْ صَلَّيْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قِبَلَ مَكَّةَ، فَدَارُوا كَمَا هُمْ قِبَلَ البَيْتِ،….. صحيح البخاري
நபி (ஸல்) அவர்கள் பதினாறு அல்லது பதினேழு மாதங்கள் பைத்துல் முகத்தஸை நோக்கியே தொழுது வந்தார்கள். (இருப்பினும்) தொழுகையில் தாம் முன்னோக்கித் தொழும் திசை (மக்காவிலுள்ள) கஃபா ஆலயமாக இருக்க வேண்டும் என்பதே அவர்களின் விருப்பமாக இருந்தது. 2:144 வது வசனத்தை அல்லாஹ் இறக்கிய போது கஃபாவை நோக்கி தொழுதார்கள். நபியவர்கள் கஃபாவை நோக்கி தொழுத முதல் தொழுகை அஸர் தொழுகையாகும். அவர்களுடன் மற்றவர்களும் தொழுதார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் சேர்ந்து தொழுதவர்களில் ஒருவர் அங்கிருந்து புறப்பட்டு வேறு ஒரு பள்ளிவாசலுக்கருகே சென்றார். அங்கே பைத்துல் முகத்தஸை நோக்கித் தொழுது கொண்டிருந்தவர்களிடம், ‘நான் இறைவன் மீது ஆணையாக மக்காவை (கஃபாவை) முன்னோக்கி இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் சேர்ந்து தொழுதுவிட்டு வருகிறேன்’ என்று கூறினார். உடனே மக்கள் (தொழுகையில்) அப்போதிருந்த நிலையிலிருந்த படியே கஃபாவை நோக்கித் திரும்பினார்கள்….(புஹாரி: 40,399, முஸ்லிம்)
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ: بَيْنَا النَّاسُ بِقُبَاءٍ فِي صَلاَةِ الصُّبْحِ، إِذْ جَاءَهُمْ آتٍ، فَقَالَ: «إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ أُنْزِلَ عَلَيْهِ اللَّيْلَةَ قُرْآنٌ، وَقَدْ أُمِرَ أَنْ يَسْتَقْبِلَ الكَعْبَةَ، فَاسْتَقْبِلُوهَا، وَكَانَتْ وُجُوهُهُمْ إِلَى الشَّأْمِ، فَاسْتَدَارُوا إِلَى الكَعْبَةِ» صحيح البخاري
இப்னு உமர்(ரழி) அவர்கள் கூறினார்கள்: மக்கள் ‘சுப்ஹு’த் தொழுகையை ‘மஸ்ஜிது குபா’வில் தொழுது கொண்டிருந்தபோது ஒருவர் வந்து, ‘கஃபாவை முன்னோக்கும்படி கட்டளையிட்டு நபி(ஸல்) அவர்களுக்கு குர்ஆனை அல்லாஹ் அருளியுள்ளான்’ என்று கூறி, அதை நோக்கி திரும்புங்கள் என்றார். உடனே, அம்மக்கள், கஃபாவை நோக்கி திரும்பிக்கொண்டனர். (புஹாரி: 403,4488, முஸ்லிம்)
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ……..قَالَ: «إِذَا قُمْتَ إِلَى الصَّلاَةِ فَأَسْبِغِ الوُضُوءَ، ثُمَّ اسْتَقْبِلِ القِبْلَةَ فَكَبِّرْ،…… صحيح البخاري
தொழுகையில் தவறிழைத்த மனிதருக்கு தொழுகையை கற்றுக் கொடுத்த நபிகளார், ‘நீ கிப்லாவை முன்னோக்கி, தக்பீர் சொல்லி, தொழ ஆரம்பி..’ என்று சொல்லிக்கொடுத்தார்கள். (புஹாரி: 6251,6667, முஸ்லிம்)
கிப்லா திசை அல்லாத ஒரு திசையை நோக்கி தொழும் ஒருவரை காணும் ஒருவர், தொழுபவருக்கு எடுத்துச் சொல்லவோ, தொழுபவரை சரியான திசைக்கு திருப்பிவிடவோ முடியும். தொழுபவரும் தொழும் நிலையிலேயே திரும்பலாம்.
கஃபாவை கண்ணால் பார்ப்பவரே அதை அப்படியே முன்நோக்க வேண்டும். அதை பார்க்க முடியாத அளவு தூர இருப்போர் அதன் திசையை முன்னோக்கினால் போதுமானது.
{وَحَيْثُ مَا كُنْتُمْ فَوَلُّوا وُجُوهَكُمْ شَطْرَهُ } [البقرة: 144]
நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் (தொழுகையின் போது) உம் முகத்தை மஸ்ஜிதுல் ஹராம் பக்கமே திருப்பிக்கொள்வீராக;….(2:149,150)
உபரியான, சுன்னத்தான தொழுகைகளை வாகனங்களில் இருந்தவாறே, அது சொல்லும் திசையில் தொழலாம். கடமையான தொழுகைக்காக இறங்கி கிப்லாவை முன்நோக்க வேண்டும்.
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي عَلَى رَاحِلَتِهِ، حَيْثُ تَوَجَّهَتْ فَإِذَا أَرَادَ الفَرِيضَةَ نَزَلَ فَاسْتَقْبَلَ القِبْلَةَ» صحيح البخاري
ஜாபிர் (ரழி) அவர்கள் கூறினார்கள்: ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தங்களுடைய வாகனத்தின் மீது அமர்ந்து, அது செல்கிற திசையை நோக்கித் தொழுபவர்களாக இருந்தார்கள். கடமையான தொழுகையைத் தொழ விரும்பினால் வாகனத்திலிருந்து கீழே இறங்கி கிப்லாவை முன்னோக்கித் தொழுவார்கள்” (புஹாரி:400, முஸ்லிம்)
جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، أَخْبَرَهُ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي التَّطَوُّعَ وَهُوَ رَاكِبٌ فِي غَيْرِ القِبْلَةِ» صحيح البخاري
ஜாபிர் (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி(ஸல்) அவர்கள் வாகனத்தில் செல்லும்போது கிப்லா அல்லாத திசையை நோக்கி உபரியான தொழுகைகளைத் தொழுவார்கள். (புஹாரி: 1094)
أَنَّ عَامِرَ بْنَ رَبِيعَةَ ، قَالَ: «رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ عَلَى الرَّاحِلَةِ يُسَبِّحُ، يُومِئُ بِرَأْسِهِ قِبَلَ أَيِّ وَجْهٍ تَوَجَّهَ، وَلَمْ يَكُنْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْنَعُ ذَلِكَ فِي الصَّلاَةِ المَكْتُوبَةِ» صحيح البخاري
நபி (ஸல்) அவர்கள் கடமையான தொழுகையை வாகனத்தில் தொழ மாட்டார்கள். என ஆமிர் பின் ரபீஆ அவர்களும், இப்னு உமரவர்களும் கூறினார்கள். (புஹாரி: 1097,1098, முஸ்லிம்)
கிப்லாவை அடைந்து கொள்ள முடியாத ஒருவர், முடியுமான வரை அதை அடைய முயற்சிக்க வேண்டும், முடியாத பட்சத்தில் அவர் இருக்கும் நிலையில் தொழ முடியும்.
{فَاتَّقُوا اللَّهَ مَا اسْتَطَعْتُمْ } [التغابن: 16]
உங்களால் இயன்ற வரை அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்;…. ( 64:16)
{ لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا } [البقرة: 286]
அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை; … (2:286)
கிப்லாவை முன்னோக்குவதில் அச்சம் ஏற்பட்டால் அதை முன்னோக்கத் தேவையில்லை.
{حَافِظُوا عَلَى الصَّلَوَاتِ وَالصَّلَاةِ الْوُسْطَى وَقُومُوا لِلَّهِ قَانِتِينَ (238) فَإِنْ خِفْتُمْ فَرِجَالًا أَوْ رُكْبَانًا فَإِذَا أَمِنْتُمْ فَاذْكُرُوا اللَّهَ كَمَا عَلَّمَكُمْ مَا لَمْ تَكُونُوا تَعْلَمُونَ} [البقرة: 238، 239]
தொழுகைகளை (குறிப்பாக) நடுத்தொழுகையை பேணிக் கொள்ளுங்கள்; (தொழுகையின்போது) அல்லாஹ்வின் முன்னிலையில் உள்ளச்சப்பாட்டுடன் நில்லுங்கள். 239. ஆயினும், (பகைவர்களையோ அல்லது வேறெதையுமோ கொண்டு) நீங்கள் பயப்படும் நிலையில் இருந்தால், நடந்து கொண்டோ அல்லது சவாரி செய்து கொண்டோ தொழுது கொள்ளுங்கள்; பின்னர் நீங்கள் அச்சம் தீர்ந்ததும், நீங்கள் அறியாமல் இருந்ததை அவன் உங்களுக்கு அறிவித்ததைப் போன்று, (நிறைவுடன் தொழுது) அல்லாஹ்வை நினைவு கூறுங்கள். (2:238,239)
தொழுகையின் நிபந்தனைகளை முடிந்த அளவு படித்து, அதை பேணி நடந்து பூரண கூலியைப் பெற முயற்சிப்போம்.
அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்.
சட்டக் கலை பகுதியில் பதியப்படும் இந்தப் பதிவு; 2008 ம் ஆண்டு காலப் பகுதியில் தொகுக்கப்பட்டு, பாடமும் நடத்தப்பட்டது. இப்போது அது ஒரு சில மாற்றங்களுடனே இங்கு பதியப்படுகின்றது. அன்று தொகுக்கப்பட்ட ஆக்கங்கக் எழுத்து வடிவில் பாதுகாக்கப்படாததால் அதன் போடோ பிரதியை இணைத்துள்ளேன்.
தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்டினால் திருத்தி, இன்னும் பயனுள்ளதாக மாற்றலாம்.
அல்லாஹ்வே எம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக!!!
.