பிக்ஹு -16; அதானும், இகாமத்தும்

அதானும், இகாமத்தும்

அதானின் சிறப்புகளும், முஅத்தினின் சிறப்புகளும்.

عَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” إِذَا نُودِيَ لِلصَّلاَةِ أَدْبَرَ الشَّيْطَانُ، وَلَهُ ضُرَاطٌ، حَتَّى لاَ يَسْمَعَ التَّأْذِينَ، فَإِذَا قَضَى النِّدَاءَ أَقْبَلَ، حَتَّى إِذَا ثُوِّبَ بِالصَّلاَةِ أَدْبَرَ، حَتَّى إِذَا قَضَى التَّثْوِيبَ أَقْبَلَ، حَتَّى يَخْطِرَ بَيْنَ المَرْءِ وَنَفْسِهِ، يَقُولُ: اذْكُرْ كَذَا، اذْكُرْ كَذَا، لِمَا لَمْ يَكُنْ يَذْكُرُ حَتَّى يَظَلَّ الرَّجُلُ لاَ يَدْرِي كَمْ صَلَّى ”  صحيح البخاري

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகைக்காக (பாங்கு என்ற) அழைப்புக் கொடுக்கப்படும்போது, பாங்கு சப்தத்தைக் கேட்கக் கூடாது என்பதற்காகச் சப்தமாகக் காற்றுப் பிரிந்தவனாக ஷைத்தான் புறமுதுகு காட்டி ஓடுகிறான். பாங்கு சொல்லி முடிந்ததும் திரும்பி வருகிறான். தொழுகைக்கு இகாமத் கூறும் போதும் ஓடுகிறான். இகாமத் சொல்லி முடிந்ததும் முன்னோக்கி வந்து தொழுகையாளிக்கும் அவரின் மனதிற்குமிடையில் இருந்து கொண்டு, தொழுகையாளி அதற்கு முன்பு வரை நினைத்திராத விஷயங்களையெல்லாம் அவருக்கு நினைவூட்டி, ‘இதை நீ நினைத்துப் பார்; அதை நீ நினைத்துப் பார்,’ என்று சொல்லிக் கொண்டு இருப்பான். தொழுகையாளி தாம் எத்தனை ரக்அத்கள் தொழுதோம் என்று சந்தேகம் ஏற்படும் அளவிற்கு ஷைத்தான் அவ்வாறு செய்து கொண்டிருப்பான்.”  (புஹாரி: 608, முஸ்லிம்)

أَنَّ أَبَا سَعِيدٍ الخُدْرِيَّ، قَالَ لَهُ: إِنِّي أَرَاكَ تُحِبُّ الغَنَمَ وَالبَادِيَةَ، فَإِذَا كُنْتَ فِي غَنَمِكَ، أَوْ بَادِيَتِكَ، فَأَذَّنْتَ بِالصَّلاَةِ فَارْفَعْ صَوْتَكَ بِالنِّدَاءِ، فَإِنَّهُ: «لاَ يَسْمَعُ مَدَى صَوْتِ المُؤَذِّنِ، جِنٌّ وَلاَ إِنْسٌ وَلاَ شَيْءٌ، إِلَّا شَهِدَ لَهُ يَوْمَ القِيَامَةِ»، قَالَ أَبُو سَعِيدٍ: سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ            صحيح البخاري

அப்துல்லாஹ் இப்னு அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: அபூ ஸயீதுல் குத்ரீ(ரழி) என்னிடம் ‘நீர் ஆடுகளை மேய்ப்பதிலும் காட்டுப் புறங்களுக்குச் செல்வதிலும் ஆசைப்படுவதை காண்கிறேன். நீர் ஆடுகளுடன் சென்றால் அல்லது காட்டுப் புறம் சென்றால் தொழுகைக்காக பாங்கு சொல்லும்போது குரல் உயர்த்திச் சொல்வீராக! காரணம், முஅத்தினுடைய பாங்கு சப்தத்தைக் கேட்கிற ஜின்னாக இருந்தாலும் மனிதனாக இருந்தாலும் வேறு எதுவாக இருந்தாலும் அவருக்காக மறுமை நாளில் பரிந்துரை செய்வார்கள்’ எனக் கூறிவிட்டு, இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் சொல்ல, கேட்டேன் என்றும் கூறினார்கள். (புஹாரி: 609)

عَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَوْ يَعْلَمُ النَّاسُ مَا فِي النِّدَاءِ وَالصَّفِّ الأَوَّلِ، ثُمَّ لَمْ يَجِدُوا إِلَّا أَنْ يَسْتَهِمُوا عَلَيْهِ لاَسْتَهَمُوا، …….»  صحيح البخاري 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “பாங்கு சொல்வதற்குரிய நன்மையையும் முதல் வரிசையில் நின்று (தொழுவதற்குரிய) நன்மையையும் மக்கள் அறிவார்களானால் அதற்காக அவர்கள் போட்டி போட்டுக் கொண்டு வருவர். யாருக்கு அந்த இடம் கொடுப்பது என்பதில் சீட்டுக் குலுக்கியெடுக்கப்படும் நிலையேற்பட்டாலும் அதற்கும் தயாராகி விடுவர்…..(புஹாரி:615, முஸ்லிம்)

مُعَاوِيَةُ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «الْمُؤَذِّنُونَ أَطْوَلُ النَّاسِ أَعْنَاقًا يَوْمَ الْقِيَامَةِ»  صحيح مسلم 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளில் மக்களிலேயே நீண்ட கழுத்து உடையவர்களாகத் தொழுகை அறிவிப்பாளர்கள் (முஅத்தின்) காணப்படுவார்கள்.  (முஸ்லிம்)

அதான் சொல்லும் முறைகள்.

இன்று நம் சொல்லும் பங்கு (அழைப்பு) முறையை நபிகளார் எப்படி தேர்வு செய்தார்கள் என்றால், அதனை அல்லாஹ்வே அறிமுகப்படுத்திக் கொடுத்தான்.

نَافِعٌ، أَنَّ ابْنَ عُمَرَ، كَانَ يَقُولُ: كَانَ المُسْلِمُونَ حِينَ قَدِمُوا المَدِينَةَ يَجْتَمِعُونَ فَيَتَحَيَّنُونَ الصَّلاَةَ لَيْسَ يُنَادَى لَهَا، فَتَكَلَّمُوا يَوْمًا فِي ذَلِكَ، فَقَالَ بَعْضُهُمْ: اتَّخِذُوا نَاقُوسًا مِثْلَ نَاقُوسِ النَّصَارَى ، وَقَالَ بَعْضُهُمْ: بَلْ بُوقًا مِثْلَ قَرْنِ اليَهُودِ، فَقَالَ عُمَرُ: أَوَلاَ تَبْعَثُونَ رَجُلًا يُنَادِي بِالصَّلاَةِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا بِلاَلُ قُمْ فَنَادِ بِالصَّلاَةِ» صحيح البخاري 

இப்னு உமர்(ரழி) அவர்கள் கூறினார்கள்: முஸ்லிம்கள் (மக்காவிலிருந்து) மதீனாவிற்கு வந்தபோது தொழுகைக்கு அழைப்புக் கொடுக்கப்படுவதில்லை. அவர்கள் ஒன்று கூடி நேரத்தை முடிவு செய்து கொள்வார்கள். ஒரு நாள் இது பற்றி எல்லோரும் கலந்தாலோசித்தனர். அப்போது சிலர், கிறித்தவர்களைப் போன்று மணி அடியுங்கள் என்றனர். வேறு சிலர் யூதர்கள் வைத்திருக்கிற கொம்பைப் போன்று நாமும் கொம்பூதலாமே என்றனர். அப்போது உமர்(ரழி) ‘தொழுகைக்காக அழைக்கிற ஒருவரை ஏற்படுத்தக் கூடாதா?’ என்றனர். உடனே பிலால்(ரழி) அவர்களிடம் ‘பிலாலே! எழுந்து தொழுகைக்காக அழையுங்கள்” என்று நபி(ஸல்) கூறினார்கள்.  (புஹாரி:604,606, முஸ்லிம்)

குறிப்பு: அதான் சொல்வதற்கு பல முறைகள் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் வந்துள்ளன. அதில் ஒரு முறையே, நமது நடைமுறையில் உள்ளதும்.

அதன் சொல்வதற்கான இன்னும் சில முறைகள்;

عَبْدُ اللَّهِ بْنُ زَيْدٍ، قَالَ: لي النبي صلى الله عليه وسلم  تَقُولُ: اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، حَيَّ عَلَى الصَّلَاةِ، حَيَّ عَلَى الصَّلَاةِ، حَيَّ عَلَى الْفَلَاحِ، حَيَّ عَلَى الْفَلَاحِ، اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، لَا إِلَهَ إِلَّااللَّهُ،……  سنن أبي داود

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: ذَكَرُوا النَّارَ وَالنَّاقُوسَ، فَذَكَرُوا اليَهُودَ وَالنَّصَارَى «فَأُمِرَ بِلاَلٌ أَنْ يَشْفَعَ الأَذَانَ، وَأَنْ يُوتِرَ الإِقَامَةَ» صحيح البخاري

அபூ அப்தில்லாஹ் பின் ஸைத் (ரழி) அவர்கள் கனவில் கண்டது போன்று, பதினைந்து வசனங்கள் அடங்கிய அதான். ‘அல்லாஹு அக்பர்’ ஆரம்பத்தில் 4 விடுத்தம், ‘இரண்டு ஷஹாதாக்களும்’ 4 விடுத்தம், ‘ஹய்யஅலஸ்ஸலாஹ்’ 2 விடுத்தம், ‘ஹய்யஅலல் பலாஹ்’ 2 விடுத்தம், ‘அல்லாஹு அக்பர்’ இரு விடுத்தம், ‘லாஇலாஹ இல்லல்லாஹ்’ ஒரு விடுத்தம். (அஹ்மத், திர்மிதீ, அபூதாவுத் (499)) இதுவே புஹாரி: 605,606, முஸ்லிம் போன்ற பதிவுகளில், “பாங்கை இரட்டையாகவும், இகாமத்தை ஒற்றையாகவும் சொல்லுமாறு பிலால் (ரழி) அவர்கள்  ஏவப்பட்டார்கள் என வந்துள்ளது.

عَنْ أَبِي مَحْذُورَةَ، أَنَّ نَبِيَّ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَّمَهُ هَذَا الْأَذَانَ: «اللهُ أَكْبَرُ اللهُ أَكْبَرُ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللهِ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللهِ»، ثُمَّ يَعُودُ فَيَقُولُ: «أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللهِ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللهِ، حَيَّ عَلَى الصَّلَاةِ مَرَّتَيْنِ، حَيَّ عَلَى الْفَلَاحِ مَرَّتَيْنِ» زَادَ إِسْحَاقُ: «اللهُ أَكْبَرُ اللهُ أَكْبَرُ لَا إِلَهَ إِلَّا اللهُ»  صحيح مسلم

அபூ மஹ்ஸூரா (ரழி) அவர்கள்; அதானில்;  ‘அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர், அஷ்ஹது அன்லாஇலாஹ இல்லல்லாஹ், அஷ்ஹது அன்லாஇலாஹ இல்லல்லாஹ், அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ், அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்’  என்று கூரிவிட்டு, பின்பு மீண்டும் அப்படியே ஒரு விடுத்தம் கூறிவிட்டு, ‘ஹய்யஅலஸ்ஸலாஹ் இரு தடவை, ஹய்யஅலல் பலாஹ்’ இரு தடவை,பின்பு ‘அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர், லாஇலாஹ இல்லல்லாஹ்’ என்று  சொல்லுமாறு நபியவர்கள்  கற்றுத் தந்தார்கள். என்று  கூறினார்கள்.  (முஸ்லிம்)

أَبِي مَحْذُورَةَ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ عَلِّمْنِي سُنَّةَ الْأَذَانِ؟، قَالَ: فَمَسَحَ مُقَدَّمَ رَأْسِي، وَقَالَ: ” تَقُولُ: اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ، تَرْفَعُ بِهَا صَوْتَكَ، ثُمَّ تَقُولُ: أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، تَخْفِضُ بِهَا صَوْتَكَ، ثُمَّ تَرْفَعُ صَوْتَكَ بِالشَّهَادَةِ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ،  سنن أبي داود

அபூதாவுதின் அறிவிப்பில் (500) ;’அஷ்ஹது அன்லாஇலாஹ இல்லல்லாஹ்,அஷ்ஹது அன்லாஇலாஹ இல்லல்லாஹ், அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்,அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்,’ என்பதை ஒரு விடுத்தம் குறைந்த சத்தத்தில் சொல்லிவிட்டு, மீண்டும் சத்தத்தை உயர்த்தி ஒரு விடுத்தம் சொல்லச் சொன்னதாக வந்துள்ளது.

சுப்ஹுடைய அதானில் ‘அஸ்ஸலாது கைரும் மினன் நௌம்’ என்ற வாரத்தையை இரு தடவைகள் சொல்லுதல்.

عَنْ أَنَسٍ قَالَ: ” مِنَ السَّنَةِ إِذَا قَالَ الْمُؤَذِّنُ فِي أَذَانِ الْفَجْرِ: حَيَّ عَلَى الْفَلَاحِ قَالَ: الصَّلَاةُ خَيْرٌ مِنَ النَّوْمِ ”  ابن خزيمة

அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: சுப்ஹுடைய அதானில் ‘ஹய்யஅலல் பலாஹ்’ க்குப் பின்னால், ‘அஸ்ஸலாது  கைரும் மினன் நௌம்’ என்று சொல்வது சுன்னாவாகும். (இப்னு குஸைமா:386)

இகாமத்தை ஒற்றைப் படையாக சொல்வதோடு, ‘கத்காமதிஸ் ஸலா’ என்பதை இரு தடவைகள் சொல்லுதல்.

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: «أُمِرَ بِلاَلٌ أَنْ يَشْفَعَ الأَذَانَ، وَأَنْ يُوتِرَ الإِقَامَةَ» قَالَ إِسْمَاعِيلُ: فَذَكَرْتُ لِأَيُّوبَ، فَقَالَ: «إِلَّا الإِقَامَةَ»   صحيح البخاري 

அனஸ்(ரழி) அவர்கள் கூறினார்கள்: பாங்கின் வாசகங்களை இரட்டை இரட்டையாகவும் ‘கத்காமதிஸ்ஸலாத்’ என்பதைத் தவிர உள்ள இகாமத்தின் வாசகங்களை ஒற்றையாகவும் சொல்லுமாறு பிலால்(ரழி) கட்டளையிடப்பட்டார்கள்.  புஹாரி: 605,607 முஸ்லிம்)

கடுமையான மலை பெய்யும் நேரத்தில் ‘ஹய்யஅலஸ்ஸலாஹ்’ என்ற வார்த்தைக்கு பதிலாக ‘அலா ஸல்லூ பிர் ரிஹால்’ என்று சொல்லிக் கொள்ளலாம்.

عَنْ نَافِعٍ، أَنَّ ابْنَ عُمَرَ، أَذَّنَ بِالصَّلاَةِ فِي لَيْلَةٍ ذَاتِ بَرْدٍ وَرِيحٍ، ثُمَّ قَالَ: أَلاَ صَلُّوا فِي الرِّحَالِ، ثُمَّ قَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَأْمُرُ المُؤَذِّنَ إِذَا كَانَتْ لَيْلَةٌ ذَاتُ بَرْدٍ وَمَطَرٍ، يَقُولُ: «أَلاَ صَلُّوا فِي الرِّحَالِ»  صحيح البخاري 

நாபிஃ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: குளிரும் காற்றும் நிறைந்த ஓர் இரவில் தொழுகைக்காக இப்னு உமர்(ரழி) பாங்கு சொன்னார்கள். பின்னர் ‘ «أَلاَ صَلُّوا فِي الرِّحَالِ» ‘உங்கள் கூடாரங்களிலேயே தொழுது கொள்ளுங்கள்’ என்றார்கள். ‘குளிரும் மழையுமுள்ள இரவுகளில் கூடாரங்களிலே தொழுங்கள் என்று கூறுமாறு நபி(ஸல்) அவர்கள் முஅத்தினுக்கு உத்தரவிடுவார்கள்’ என்றும் கூறினார்கள்.  (புஹாரி:666, முஸ்லிம்)

عَبْدَ اللَّهِ بْنَ الحَارِثِ، قَالَ: خَطَبَنَا ابْنُ عَبَّاسٍ فِي يَوْمٍ ذِي رَدْغٍ، فَأَمَرَ المُؤَذِّنَ لَمَّا بَلَغَ حَيَّ عَلَى الصَّلاَةِ، قَالَ: قُلْ: «الصَّلاَةُ فِي الرِّحَالِ»، فَنَظَرَ بَعْضُهُمْ إِلَى بَعْضٍ، فَكَأَنَّهُمْ أَنْكَرُوا، فَقَالَ: كَأَنَّكُمْ أَنْكَرْتُمْ هَذَا، «إِنَّ هَذَا فَعَلَهُ مَنْ هُوَ خَيْرٌ مِنِّي»، – يَعْنِي النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ – إِنَّهَا عَزْمَةٌ، وَإِنِّي كَرِهْتُ أَنْ أُحْرِجَكُمْ ” صحيح البخاري 

அப்துல்லாஹ் இப்னு ஹாரிஸ் அவர்கள் கூறினார்கள்: மழையினால் சேறு ஏற்பட்டிருந்த ஒரு நாளில் இப்னு அப்பாஸ்(ரழி) ஜும்ஆ பிரசங்கம் செய்தார்கள். பாங்கு சொல்பவர் ‘ஹய்ய அலஸ் ஸலாஹ்’ என்று சொல்ல ஆரம்பித்தபோது «الصَّلاَةُ فِي الرِّحَالِ»’உங்கள் கூடாரங்களிலேயே தொழுது கொள்ளுங்கள்’ என்று மக்களுக்கு அறிவிக்கமாறு கட்டளையிட்டார்கள். அப்போது அங்கிருந்தவர்கள் ஒருவருக்கொருவர் ஆச்சரியமாகப் பார்த்தனர். ‘இந்த பாங்கு சொல்பவரை விடவும் சிறந்தவர்களான நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆ கட்டாயமானதாக இருந்தும் கூட அவ்வாறு செய்திருக்கிறார்கள்’ என இப்னு அப்பாஸ் கூறினார்கள்.'(மழைக் காலங்களில் பள்ளியில் தொழுமாறு உங்களுக்கு நான் கூறிக்) கஷ்டம் கொடுத்து நீங்களும் பள்ளிக்கு வந்து உங்களுடைய கால் மூட்டுகளால் மண்ணை மிதிக்கச் செய்வதை நான் வெறுக்கிறேன்’ என்றும் இப்னு அப்பாஸ்(ரழி) கூறினார்கள்.  (புஹாரி: 668, முஸ்லிம்)

‘ஹய்யஅலஸ்ஸலாஹ்’  ‘ஹய்யஅலல்பலாஹ்’ என்று சொல்லும் போது தலையை திருப்புவதும் ஆகுமானதே.

عَنْ عَوْنِ بْنِ أَبِي جُحَيْفَةَ، عَنْ أَبِيهِ، «أَنَّهُ رَأَى بِلاَلًا يُؤَذِّنُ فَجَعَلْتُ أَتَتَبَّعُ فَاهُ هَا هُنَا وَهَهُنَا بِالأَذَانِ» صحيح البخاري 

அபூ ஜுஹைபா(ரழி) அவர்கள் கூறினார்கள்: பிலால்(ரழி) பாங்கு சொல்லும்போது தம் வாயை அங்கும் இங்குமாக அசைப்பதைப் பார்த்தேன்.  (புஹாரி:634)

عَنْ عَوْنِ بْنِ أَبِي جُحَيْفَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: رَأَيْتُ بِلَالًا خَرَجَ إِلَى الْأَبْطَحِ فَأَذَّنَ فَلَمَّا بَلَغَ حَيَّ عَلَى الصَّلَاةِ، حَيَّ عَلَى الْفَلَاحِ، لَوَى عُنُقَهُ يَمِينًا وَشِمَالًا، وَلَمْ يَسْتَدِرْ ثُمَّ دَخَلَ فَأَخْرَجَ الْعَنَزَةَ وَسَاقَ حَدِيثَهُ              سنن أبي داود 

அபூ தாவுதின் அறிவிப்பில்; கழுத்தை வலதும், இடதுமாக வளைத்தார்கள் என வந்துள்ளது. (520)

அதான் சொல்பவர் தன் காதில் விரலை வைத்துக் கொள்வதும் சுன்னாவாகும்.

عَنْ عَوْنِ بْنِ أَبِي جُحَيْفَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: رَأَيْتُ بِلاَلاً يُؤَذِّنُ وَيَدُورُ وَيُتْبِعُ فَاهُ هَاهُنَا، وَهَاهُنَا، وَإِصْبَعَاهُ فِي أُذُنَيْهِ، وَرَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي قُبَّةٍ لَهُ حَمْرَاءَ،  سنن الترمذي

அபூ ஜுஹைபா (ரழி) அவர்கள் கூறினார்கள்: பிலால் அவர்கள் பாங்கு சொல்லும் போது தனது வாயை அங்கும், இங்கும் அசைப்பதைப் பார்த்தேன், அவரது இரு விரல்களும் அவரது இரு காதுகளுக்குள்ளே இருந்தன. நபிகளார் அவர்களுக்குறிய சென்னிற கூடாரத்தில் இருந்தார்கள். (திர்மிதீ: 197)

அதான் சொல்வதன் சட்டம்

அதானும், இகாமத்தும் ஜமாஅத் தொழுகைக்கு கட்டாயமாகும். இது பர்ளு கிபாயாவில் சேரும். பயணத்திலும், ஊரிலும் சொல்லப்படவேண்டும்.

தனிமையில் இருப்பவரும் சொல்லவேண்டும்.

அபூ ஸயீதுல் குத்ரீ(ரழி) அவர்களின் ஹதீஸ்   (புஹாரி:609)

ஷைத்தான் விரண்டோடுவான் என்று வரும் ஹதீஸ்.  (புஹாரி:608, முஸ்லிம்)

இரண்டு பேர் இருந்தாலும் சொல்லவேண்டும்.

عَنْ مَالِكِ بْنِ الحُوَيْرِثِ، قَالَ: أَتَى رَجُلاَنِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُرِيدَانِ السَّفَرَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا أَنْتُمَا خَرَجْتُمَا، فَأَذِّنَا، ثُمَّ أَقِيمَا، ثُمَّ لِيَؤُمَّكُمَا أَكْبَرُكُمَا» صحيح البخاري 

மாலிக் இப்னு ஹுவைரிஸ்(ரழி) அவர்கள் கூறினார்கள்: பயணத்தை மேற்கொள்ள விரும்பிய இருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்தனர். அப்போது அவர்களிடம் ‘நீங்கள் இருவரும் பயணம் புறப்பட்டுச் சென்றால், தொழுகைக்காக பாங்கு சொல்லி, பின்னர் இகாமத்தும் சொல்லுங்கள். பின்னர் உங்களில் பெரியவர் இமாமாக நின்று தொழுகை நடத்தட்டும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (புஹாரி: 630, முஸ்லிம்)

இரண்டு தொழுகைகளை சேர்த்து தொழும் சந்தர்ப்பத்தில் ஒரு அதானும், இரண்டு இகாமத்களும் சொல்லவேண்டும்.

عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَنَّهُ سَمِعَهُ يَقُولُ: دَفَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ عَرَفَةَ، فَنَزَلَ الشِّعْبَ، فَبَالَ ثُمَّ تَوَضَّأَ وَلَمْ يُسْبِغِ الوُضُوءَ، فَقُلْتُ لَهُ: الصَّلاَةُ؟، فَقَالَ: «الصَّلاَةُ أَمَامَكَ»، فَجَاءَ المُزْدَلِفَةَ، فَتَوَضَّأَ فَأَسْبَغَ، ثُمَّ أُقِيمَتِ الصَّلاَةُ، فَصَلَّى المَغْرِبَ، ثُمَّ أَنَاخَ كُلُّ إِنْسَانٍ بَعِيرَهُ فِي مَنْزِلِهِ، ثُمَّ أُقِيمَتِ الصَّلاَةُ، فَصَلَّى وَلَمْ يُصَلِّ بَيْنَهُمَا    صحيح البخاري 

நபி (ஸல்) அவர்கள் முஸ்தலிபாவில் மக்ரிபையும், இஷாவையும் சேர்த்து தொழுதார்கள், இரண்டுக்கும் இகாமத் சொல்லப்பட்டது.  (புஹாரி: 139, 1672, முஸ்லிம்)

குறிப்பு பாங்கு சொல்வதற்காக வுழு எடுப்பதை நிபந்தனை இடுவதற்கும், பாங்கு சொன்னவரே இகாமத் சொல்லவேண்டும் என்று கூறுவதற்கும் சஹீஹான ஹதீஸ்கள் வரவில்லை.

வுழு உள்ளவரே தவிர அதான் சொல்லக்கூடாது. என்று திர்மிதீ (200), பைஹகீயில் (1858) வரும் ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் ‘முஆவியதுப்னு யஹ்யா அஸ்ஸதபீ ‘ என்பவர் இடம்பெற்றுள்ளார், அவர் பலவீனமானவர்.

பாங்கு சொன்னவரே இகாமத் சொல்லவேண்டு என்று அஹ்மத், திர்மிதீ போன்ற இன்னும் பல கிதாபுகளில் பதியப்பட்டுள்ள அந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் ‘அப்துர் ரஹ்மான் பின் சியாத் அல் அப்ரீகீ‘ என்பவர் இடம் பெற்றுள்ளார். அவர் மிகவும் பலவீனமானவர். மேலும் இப்னு உமர், இப்னு அப்பாஸ் வழியாக வரும் செய்திகளும் பலவீனமானவையே.

அதான் சொல்லப்படுவதை செவிமடுப்பவர் சொல்லவேண்டியவை.

முஅத்தின் சொல்வது போன்று சொல்லுதல்.

عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا سَمِعْتُمُ النِّدَاءَ، فَقُولُوا مِثْلَ مَا يَقُولُ المُؤَذِّنُ» صحيح البخاري

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “பாங்கு சொல்லப்படுவதை நீங்கள் செவியுற்றால் முஅத்தின் சொல்வது போல் நீங்களும் சொல்லுங்கள்.”  (புஹாரி: 611, முஸ்லிம்)

حي على الصلاة .حي على الفلاح” என்று சொல்லப்படும் போது, “لا حول ولا قوة إلا بالله” என்று சொல்லவேண்டும்.

عُمَرَ بْنِ الْخَطَّابِ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” إِذَا قَالَ الْمُؤَذِّنُ: اللهُ أَكْبَرُ اللهُ أَكْبَرُ، فَقَالَ أَحَدُكُمْ: اللهُ أَكْبَرُ اللهُ أَكْبَرُ، ثُمَّ قَالَ: أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ، قَالَ: أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ، ثُمَّ قَالَ: أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللهِ قَالَ: أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللهِ، ثُمَّ قَالَ: حَيَّ عَلَى الصَّلَاةِ، قَالَ: لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللهِ، ثُمَّ قَالَ: حَيَّ عَلَى الْفَلَاحِ، قَالَ: لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللهِ، ثُمَّ قَالَ: اللهُأَكْبَرُ اللهُ أَكْبَرُ، قَالَ: اللهُ أَكْبَرُ اللهُ أَكْبَرُ، ثُمَّ قَالَ: لَا إِلَهَ إِلَّا اللهُ، قَالَ: لَا إِلَهَ إِلَّا اللهُ مِنْ قَلْبِهِ دَخَلَ الْجَنَّةَ ”  صحيح مسلم

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள்: முஅத்தின் ‘ اللهُ أَكْبَرُ اللهُ أَكْبَرُ ‘ என்று கூறும் போது, கேட்பவர், ‘ اللهُ أَكْبَرُ اللهُ أَكْبَرُ‘ என்றும், முஅத்தின் ‘ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ ‘ என்று கூறும் போது,கேட்பவர், ‘ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ‘ என்றும் முஅத்தின் ‘  أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللهِ ‘ என்று கூறும் போது,கேட்பவர், ‘  أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللهِ‘ என்றும் முஅத்தின் ‘ حَيَّ عَلَى الصَّلَاةِ ‘ என்று கூறும் போது,கேட்பவர், ‘ لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللهِ‘ என்றும் முஅத்தின் ‘ حَيَّ عَلَى الْفَلَاحِ‘ என்று கூறும் போது,கேட்பவர், ‘ لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللهِ‘ என்றும் முஅத்தின் ‘ اللهُ أَكْبَرُ اللهُ أَكْبَرُ ‘ என்று கூறும் போது,கேட்பவர், ‘ اللهُ أَكْبَرُ اللهُ أَكْبَرُ‘ என்றும் முஅத்தின் ‘ لَا إِلَهَ إِلَّا اللهُ ‘ என்று கூறும் போது, கேட்பவர், ‘ لَا إِلَهَ إِلَّا اللهُ‘ என்றும் சொல்லுங்கள். உள்ளத்தினால் இப்படி கூறினால் அவர் சுவனம் நுழைவார். (முஸ்லிம்)

முஆவிய (ரழி) அவர்கள் நபிகளார் கூறியதாக கூறினார்கள்: முஅத்தின் ‘ஹய்ய அலஸ்ஸலா’ என்று கூறும்போது அதைச் செவியுறுபவர் ‘லாஹவ்ல வலா குவ்வத இல்லாபில்லாஹ்’ என்று சொல்லட்டும்.  (புஹாரி: 613, முஸ்லிம்)

அதான் சொல்லி முடிந்ததும் நபிகளார் மீது சலவாத் சொல்லி,  பின்வரும் துஆவை சொல்லவேண்டும்.

عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ، أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِذَا سَمِعْتُمُ الْمُؤَذِّنَ، فَقُولُوا مِثْلَ مَا يَقُولُ ثُمَّ صَلُّوا عَلَيَّ، فَإِنَّهُ مَنْ صَلَّى عَلَيَّ صَلَاةً صَلَّى الله عَلَيْهِ بِهَا عَشْرًا، ثُمَّ سَلُوا اللهَ لِيَ الْوَسِيلَةَ، فَإِنَّهَا مَنْزِلَةٌ فِي الْجَنَّةِ، لَا تَنْبَغِي إِلَّا لِعَبْدٍ مِنْ عِبَادِ اللهِ، وَأَرْجُو أَنْ أَكُونَ أَنَا هُوَ، فَمَنْ سَأَلَ لِي الْوَسِيلَةَ حَلَّتْ لَهُ الشَّفَاعَةُ» صحيح مسلم 

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஅத்தினின் அறிவிப்பை நீங்கள் செவியுற்றால் அவர் கூறுவதைப் போன்றே நீங்களும் கூறுங்கள். பின்பு என்மீது ஸலவாத் சொல்லுங்கள். ஏனெனில், என்மீது யார் ஒருமுறை ஸலவாத் சொல்கிறாரோ, அவருக்கு பத்து முறை அல்லாஹ் அருள்புரிகின்றான். பின்பு எனக்காக அல்லாஹ்விடம் வஸீலாவைக் கேளுங்கள். வஸீலா என்பது சொர்க்கத்திலுள்ள (உயர்) பதவியாகும்; அல்லாஹ்வின் அடியார்களில் ஒருவருக்குத்தான் அது கிடைக்கும். அந்த ஒருவர் நானாகவே இருக்க விரும்புகிறேன். எனவே, எனக்காக அந்தப் பதவியை (அல்லாஹ்விடம்) கேட்பவருக்கு (மறுமை நாளில்) எனது பரிந்துரை அவசியம் கிடைக்கும். (முஸ்லிம்)

عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «مَنْ قَالَ حِينَ يَسْمَعُ الْمُؤَذِّنَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، رَضِيتُ بِاللهِ رَبًّا وَبِمُحَمَّدٍ رَسُولًا، وَبِالْإِسْلَامِ دِينًا، غُفِرَ لَهُ ذَنْبُهُ» صحيح مسلم 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஅத்தினின் அறிவிப்பைக் கேட்கக்கூடியவர்,

« أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، رَضِيتُ بِاللهِ رَبًّا  وَبِمُحَمَّدٍ رَسُولًا، وَبِالْإِسْلَامِ دِينًا»

அஷ்ஹது அல்லா இலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, வ அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரசூலுஹு, ரளீத்து பில்லாஹி ரப்பன், வபி முஹம்மதின் ரசூலன், வபில் இஸ்லாமி தீனன் என்று சொன்னால் அவருடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும்.  (முஸ்லிம்)

عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” مَنْ قَالَ حِينَ يَسْمَعُ النِّدَاءَ: اللَّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ، وَالصَّلاَةِ القَائِمَةِ آتِ مُحَمَّدًا الوَسِيلَةَ وَالفَضِيلَةَ، وَابْعَثْهُ مَقَامًا مَحْمُودًا الَّذِي وَعَدْتَهُ، حَلَّتْ لَهُ شَفَاعَتِي يَوْمَ القِيَامَةِ ” صحيح البخاري 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பாங்கு சொல்வதைக் கேட்ட பின்,

اللَّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ، وَالصَّلاَةِ القَائِمَةِ آتِ مُحَمَّدًا الوَسِيلَةَ وَالفَضِيلَةَ، وَابْعَثْهُ مَقَامًا مَحْمُودًا الَّذِي وَعَدْتَهُ

‘பூரணமான இந்த அழைப்பின் இரட்சகனான அல்லாஹ்வே! நிலையான தொழுகைக்குரியவனே! முஹமமது நபி(ஸல்) அவர்களுக்கு வஸீலா என்ற அந்தஸ்தையும் சிறப்பையும் வழங்குவாயாக! நீ வாக்களித்தவாறு புகழுக்குரிய இடத்தில் அவர்களை எழுப்புவாயாக!’ என்ற துஆவை ஓதுகிறவருக்கு மறுமை நாளில் என்னுடைய பரிந்துரை கிடைத்து விடுகிறது’  (புஹாரி: 614)

குறிப்பு:

அதான் துஆவில் ‘ات سيدنا” والدرجة الرفيعة العالية الشريفة وأوردنا حوله يوم القيامة” إنك لا تخلف الميعاد” போன்ற வார்த்தைகள் சஹீஹான ஹதீஸ்களில் வரவில்லை.

சுப்ஹுடைய அதானில் “الصلاة خير من النوم” என்று சொல்லும் போது அதை அப்படியே சொல்லவேண்டுமே அல்லாமல் வேறு துஆ “أقامها الله وأدامها” ஓதுவதற்கு சஹீஹான ஹதீஸ்கள் வரவில்லை.

முஅத்தின் “لا إله إلا الله” என்றால் அப்படியே சொல்லவேண்டும். முஹம்மத் ரசூலுல்லாஹ் என்று சேர்த்து சொல்வது நபிவழிக்கு முரணாகும்.

இகாமத் சொல்லும் போது பதில் சொல்வதற்கு சஹீஹான ஹதீஸ்களில் ஆதாரம் வரவில்லை.

பாங்குக்கு முன்னால் நபிகளார் மீது சலவாத் சொல்வது, இச்திக்பார் செய்வது, சுப்ஹான கலிமா ஓதுவது அனைத்தும் பித்அத்தாகும்.

இந்த சட்டங்களை விளங்கி, நடைமுறைப் படுத்தி, பூரண  கூழியைப் பெற முயற்சிப்போம்.

அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்.

                                                                                                                                                                                                                         

சட்டக் கலை பகுதியில் பதியப்படும் இந்தப் பதிவு; 2008 ம் ஆண்டு காலப் பகுதியில் தொகுக்கப்பட்டு, பாடமும் நடத்தப்பட்டது. இப்போது அது ஒரு சில மாற்றங்களுடனே இங்கு பதியப்படுகின்றது. அன்று தொகுக்கப்பட்ட ஆக்கங்கக் எழுத்து வடிவில் பாதுகாக்கப்படாததால் அதன் போடோ பிரதியை இணைத்துள்ளேன்.
தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்டினால் திருத்தி, இன்னும் பயனுள்ளதாக மாற்றலாம்.
அல்லாஹ்வே எம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக!!!

17 18 19

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *