வுழூவை முறிக்கும் காரியங்கள்
முன், பின் துவாரங்களிலிருந்து ஏதேனும் ஒன்று வெளிப்படுதல், அது மலமாகவோ, சிறுநீர் ராகவோ ,காற்றாகவோ, மதியாகவோ (இச்சையின் துவக்கத்தில் வெளிப்படக்கூடிய திரவம்), வாதியாகவோ (சிறு நீர் கழித்த பின்னர், அல்லது பாரம் சுமக்கும் நேரத்தில் வெளியாகும் திரவம்) இருக்கலாம்.
{ وَإِنْ كُنْتُمْ مَرْضَى أَوْ عَلَى سَفَرٍ أَوْ جَاءَ أَحَدٌ مِنْكُمْ مِنَ الْغَائِطِ أَوْ لَامَسْتُمُ النِّسَاءَ فَلَمْ تَجِدُوا مَاءً فَتَيَمَّمُوا صَعِيدًا طَيِّبًا فَامْسَحُوا بِوُجُوهِكُمْ وَأَيْدِيكُمْ مِنْهُ} [المائدة: 6]
5:6 வசனத்தில் அல்லாஹ் கூறும் போது ; அல்லது உங்களில் எவரும் மல ஜலம் கழித்து வந்தாலும், அல்லது நீங்கள் பெண்களைத் தீண்டி (உடல் உறவு கொண்டி)ருந்தாலும் (உங்களைச் சுத்தப்படுத்திக் கொள்ள) உங்களுக்குத் தண்ணீர் கிடைக்காவிட்டால் (தயம்மும் செய்து கொள்ளுங்கள்; (5: 6)
عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، قَالَ: كُنْتُ رَجُلًا مَذَّاءً فَأَمَرْتُ المِقْدَادَ بْنَ الأَسْوَدِ أَنْ يَسْأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلَهُ، فَقَالَ: «فِيهِ الوُضُوءُ» صحيح البخاري
அலி (றழி) அவர்கள் கூறினார்கள்: ‘மதி (அதிக உணர்ச்சியினால் ஏற்படும் கசிவு) வெளியாகும் ஆடவனாக நான் இருந்தேன். (இது பற்றி அறிய) மிக்தாத்(றழி) அவர்களை நபி(ஸல்) அவர்களிடம் கேட்குமாறு ஏவினேன். அவர் அது பற்றி அவர்களிடம் வினவினார். ‘அதற்காக வுழூச் செய்வதுதான் கடமை. (குளிக்க வேண்டிய கட்டாயமில்லை)’ என்று நபி(ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்” (புஹாரி: 132, முஸ்லிம்)
أَبَا هُرَيْرَةَ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لاَ تُقْبَلُ صَلاَةُ مَنْ أَحْدَثَ حَتَّى يَتَوَضَّأَ» قَالَ رَجُلٌ مِنْ حَضْرَمَوْتَ: مَا الحَدَثُ يَا أَبَا هُرَيْرَةَ؟، قَالَ: فُسَاءٌ أَوْ ضُرَاطٌ ( صحيح البخاري )
‘சிறு தொடக்கு ஏற்பட்டவன் வுழூச் செய்யும் வரை அவனுடைய தொழுகை ஏற்கப்படாது” என்று நபி(ஸல்) கூறினார்கள் என அபுஹுரைரா(றழி) அவர்கள் கூறியபோது, ஹள்ர மவ்த் என்ற இடத்தைச் சேர்ந்த ஒருவர் ‘அபூ ஹுரைராவே! சிறு தொடக்கு என்பது என்ன? என்று கேட்டதற்கு அவர்கள் ‘சப்தத்துடனோ சப்தமின்றியோ காற்றுப் பிரிவது’ என்றார்கள்” (புஹாரி: 135, முஸ்லிம்)
சிந்தனையை போக்கும் அளவுக்கு கடுமையாக தூங்குதல், ஆனால் அமர்ந்தவாறு, அல்லது சாதாரண சிறு தூக்கமாக இருந்தால் அதனால் வுழூ முறியாது.
أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ أَخْبَرَهُ أَنَّهُ بَاتَ لَيْلَةً عِنْدَ مَيْمُونَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهِيَ خَالَتُهُ فَاضْطَجَعْتُ فِي عَرْضِ الوِسَادَةِ ” وَاضْطَجَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَهْلُهُ فِي طُولِهَا، فَنَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، حَتَّى إِذَا انْتَصَفَ اللَّيْلُ، أَوْ قَبْلَهُ بِقَلِيلٍ أَوْ بَعْدَهُ بِقَلِيلٍ، اسْتَيْقَظَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَجَلَسَ يَمْسَحُ النَّوْمَ عَنْ وَجْهِهِ بِيَدِهِ، ثُمَّ قَرَأَ العَشْرَ الآيَاتِ الخَوَاتِمَ مِنْ سُورَةِ آلِ عِمْرَانَ، ثُمَّ قَامَ إِلَى شَنٍّ مُعَلَّقَةٍ، فَتَوَضَّأَ مِنْهَا فَأَحْسَنَ وُضُوءَهُ، ثُمَّ قَامَ يُصَلِّي. قَالَ ابْنُ عَبَّاسٍ: فَقُمْتُ فَصَنَعْتُ مِثْلَ مَا صَنَعَ، ثُمَّ ذَهَبْتُ فَقُمْتُ إِلَى جَنْبِهِ، فَوَضَعَ يَدَهُ اليُمْنَى عَلَى رَأْسِي، وَأَخَذَ بِأُذُنِي اليُمْنَى يَفْتِلُهَا،…… (صحيح البخاري )
‘நபி(ஸல்) அவர்களின் மனைவியும் என்னுடைய சிறிய தாயாருமான மைமூனாவின் வீட்டில் நான் தலையணையின் பக்க வாட்டில் சாய்ந்து தூங்கினேன். நபி(ஸல்) அவர்களும் அவர்களின் மனைவியும் அதன் மற்ற பகுதியில் தூங்கினார்கள். இரவின் பாதிவரை – கொஞ்சம் முன் பின்னாக இருக்கலாம் – நபி(ஸல்) தூங்கினார்கள். பின்னர் விழித்து அமர்ந்து தங்களின் கையால் முகத்தைத் தடவித் தூக்கக் கலக்கத்தைப் போக்கினார்கள். பின்னர் ஆலு இம்ரான் என்ற அத்தியாயத்தின் இறுதியிலுள்ள பத்து வசனங்களை ஓதினார்கள். பின்னர் எழுந்து சென்று தொங்கவிடப்பட்டிருந்த பழைய தோல் பையிலிருந்து (தண்ணீர் எடுத்து) உளூச் செய்தார்கள். அவர்களின் உளூவை நல்ல முறையில் செய்தார்கள். பின்னர் தொழுவதற்காக எழுந்தார்கள். நானும் எழுந்து நபி(ஸல்) அவர்கள் செய்தது போன்று (உளூ) செய்துவிட்டு நபி(ஸல்) அவர்களின் அருகில் சென்று நின்றேன். அவர்கள் தங்களின் வலக்கரத்தை என் தலைமீது வைத்தார்கள். என்னுடைய வலக்காதைப் பிடித்து (அவர்களின் வலப்பக்கம்) நிறுத்தினார்கள்……(புஹாரி: 183,,,,, முஸ்லிம்)
عَنْ قَتَادَةَ، قَالَ: سَمِعْتُ أَنَسًا، يَقُولُ: «كَانَ أَصْحَابُ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنَامُونَ ثُمَّ يُصَلُّونَ وَلَا يَتَوَضَّئُونَ» صحيح مسلم وأبو داود
وفي روايته: حَتَّى تَخْفِقَ رُءُوسُهُمْ، ثُمَّ يُصَلُّونَ وَلَا يَتَوَضَّئُونَ»
அனஸ் (றழி) அவர்கள் கூறினார்கள்: நபித் தோழர்கள் இஷாத் தொழுகைக்காக (நபிகளாரை) எதிர்பார்த்திருந்து, குறட்டை விடும் அளவு தூங்குவார்கள், பிறகு வுழூச் செய்யாமல் தொழுவார்கள். (முஸ்லிம்: 861, அபூதாவுத்: 200)
عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: «صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ لَيْلَةٍ، فَقُمْتُ عَنْ يَسَارِهِ، فَأَخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِرَأْسِي مِنْ وَرَائِي، فَجَعَلَنِي عَنْ يَمِينِهِ، فَصَلَّى وَرَقَدَ، فَجَاءَهُ المُؤَذِّنُ، فَقَامَ وَصَلَّى وَلَمْ يَتَوَضَّأْ» صحيح البخاري
நபி (ஸல்) அவர்களும் இரவுத் தொழுகைக்குப்பின் தூங்கிவிட்டு, சுப்ஹு தொழுகைக்கு வுழூச் செய்யாமல் செல்வார்கள். (புஹாரி: 726…)
புத்தி பேதலித்து, சுய நினைவை இழந்து விடுவதன் மூலமும் வுழூ முறியும்.
தன் உறுப்பை தன் கையால் பிடிப்பதன் மூலமும் வுழூ முறியலாம், ஆனால் தானாக பட்டால் வுழூ முறியாது.
عَنْ بُسْرَةَ بِنْتِ صَفْوَانَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: مَنْ مَسَّ ذَكَرَهُ فَلاَ يُصَلِّ حَتَّى يَتَوَضَّأَ. (سنن الترمذي )
புஸ்ரா பின்த் ஸப்வான் (றழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் தன் உறுப்பை பிடிக்கின்றாரோ, அவர் வுழூச் செய்யும் வரை தொழ வேண்டாம். (திர்மிதீ: 82, அபூதாவுத்)
عَنْ قَيْسِ بْنِ طَلْقِ بْنِ عَلِيٍّ الحَنَفِيُّ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: وَهَلْ هُوَ إِلاَّ مُضْغَةٌ مِنْهُ؟ أَوْ بِضْعَةٌ مِنْهُ؟ (سنن الترمذي )
தல்க் பின் அலி (றழி) அவர்கள் கூறினார்கள்: நபிகளாரிடம் ஒரு மனிதர் வந்து, அல்லாஹ்வின் தூதரே! ஒருவர் தொழுகையில் தம் உறுப்பை பிடித்தால் அவர் வுழூ செய்ய வேண்டுமா? என்று கேட்கவே, ‘அது உமது உடலின் ஒரு பகுதியல்லவா (ஏன் வுழூ எடுப்பது) என்று கேட்டார்கள்.” (நசாஇ: 165, திர்மிதீ: 85, அபூதாவுத்)
குறிப்பு: ஒரு ஹதீஸில் வுழூ தேவையில்லை என்றும், மற்ற ஹதீஸில் வுழூ தேவை என்றும் வந்து, இரண்டு ஹதீஸும் சஹீஹாக இருந்தால் அவற்றை சேர்த்து விளங்குவதே பொருத்தமானது. அந்த அடிப்படையில் ; ஒரு மனிதன் தன் உறுப்பை தானாக பிடிக்கும் போது வுழூ கடமை என்றும், விரும்பிப் பிடிக்காமல் தானாக படக்கூடிய சந்தர்ப்பத்தில் வுழூ எடுக்கத் தேவையில்லை என்று விளங்க முடியும். ஏனெனில் தொழுகையில் ஒருவர் வேண்டுமென்று பிடிக்கமாட்டார். அல்லாஹு அஃலம்.
ஒட்டக இறைச்சி சாப்பிட்டால் வுழூ முறியும்.
عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، أَنَّ رَجُلًا سَأَلَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَأَتَوَضَّأُ مِنْ لُحُومِ الْغَنَمِ؟ قَالَ: «إِنْ شِئْتَ فَتَوَضَّأْ، وَإِنْ شِئْتَ فَلَا تَوَضَّأْ» قَالَ أَتَوَضَّأُ مِنْ لُحُومِ الْإِبِلِ؟ قَالَ: «نَعَمْ فَتَوَضَّأْ مِنْ لُحُومِ الْإِبِلِ» قَالَ: أُصَلِّي فِي مَرَابِضِ الْغَنَمِ؟ قَالَ: «نَعَمْ» قَالَ: أُصَلِّي فِي مَبَارِكِ الْإِبِلِ؟ قَالَ: «لَا»( صحيح مسلم)
ஜாபிர் பின் ஸமுரா (றழி) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதர் நபிகளாரிடம் வந்து, நான் ஆட்டிறைச்சிக்காக வுழூ செய்ய வேண்டுமா? என்று கேட்க, “விரும்பினால் வுழூ செய், இல்லையென்றால் தேவையில்லை.” என்று நபிகளார் கூறவே, ஒட்டக இறைச்சி சாப்பிட்டால் வுழூ செய்ய வேண்டுமா? என்று கேட்க, ” ஆம், ஒட்டக இறைச்சி சாப்பிட்டால் வுழூ செய்துகொள்.” என்று கூறினார்கள். (முஸ்லிம்: 828)
குறிப்பு:-
பெண்கள் பட்டாலோ, அவர்களை தொட்டாலோ வுழூ முறியுமா என்றால் முறியாது என்பதே சரியான கருத்தாகும். ஏனெனில் பெண்கள் பட்டதட்காக நபிகளார் வுழூ செய்ததற்கு எந்த ஸஹீஹான ஹதீஸ்களும் வரவில்லை. மாறாக அதற்காக வுழூ செய்யவில்லை என்பதற்கு ஹதீஸ்கள் வந்துள்ளன.
عَنْ عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهَا قَالَتْ: «كُنْتُ أَنَامُ بَيْنَ يَدَيْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَرِجْلاَيَ، فِي قِبْلَتِهِ فَإِذَا سَجَدَ غَمَزَنِي، فَقَبَضْتُ رِجْلَيَّ، فَإِذَا قَامَ بَسَطْتُهُمَا»، قَالَتْ: وَالبُيُوتُ يَوْمَئِذٍ لَيْسَ فِيهَا مَصَابِيحُ (صحيح البخاري )
ஆயிஷா (றழி) அவர்கள் கூறினார்கள்: ‘நான் நபி(ஸல்) அவர்களுக்கு முன்பாகத் தூங்கிக் கொண்டிருப்பேன். என்னுடைய இரண்டு கால்களும் அவர்களை முன்னோக்கியிருக்கும். அவர்கள் ஸுஜுது செய்யும்போது என்னை விரலால் குத்துவார்கள். அப்போது நான் என்னுடைய இரண்டு கால்களையும் மடக்கிக் கொள்வேன். அவர்கள் நிலைக்கு வந்துவிட்டால் இரண்டு கால்களையும் (மறுபடியும்) நீட்டிக் கொள்வேன். அந்த நாள்களில் (எங்களின்) வீடுகளில் விளக்குகள் கிடையாது” (புஹாரி: 382, முஸ்லிம்)
عَنْ عَائِشَةَ، قَالَتْ: فَقَدْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةً مِنَ الْفِرَاشِ فَالْتَمَسْتُهُ فَوَقَعَتْ يَدِي عَلَى بَطْنِ قَدَمَيْهِ وَهُوَ فِي الْمَسْجِدِ وَهُمَا مَنْصُوبَتَانِ وَهُوَ يَقُولُ: «اللهُمَّ أَعُوذُ بِرِضَاكَ مِنْ سَخَطِكَ، وَبِمُعَافَاتِكَ مِنْ عُقُوبَتِكَ، وَأَعُوذُ بِكَ مِنْكَ لَا أُحْصِي ثَنَاءً عَلَيْكَ أَنْتَ كَمَا أَثْنَيْتَ عَلَى نَفْسِكَ» صحيح مسلم
ஆயிஷா (றழி) அவர்கள் கூறினார்கள்: ஒரு நாள் இரவு நபிகளாரை படுக்கையில் காணவில்லை, அவர்களை நான் (தடாவித் தடாவி) தேடும் போது, எனது கை அவர்களது கால்களின் உட்பகுதியில் பட்டது, அவர்களோ பள்ளியில் இருந்தார்கள், கால்கள் இரண்டும் நட்டிவைக்கப்பட்ட நிலையில் இருந்தன. (முஸ்லிம்: 1118)
நெருப்பினால் சமைக்கப்பட்டவைகளுக்காக வுழூ செய்யவேண்டிய அவசியமில்லை, ஆரம்பத்தில் கடமையாக இருந்து பிறகு அந்த சட்டம் மாற்றப்பட்டது. இது நாசிக், மன்சூக் என்ற வகையை சாரும்.
زَيْدَ بْنَ ثَابِتٍ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «الْوُضُوءُ مِمَّا مَسَّتِ النَّارُ» صحيح مسلم)
ஸைத் பின் ஸாபித் (றழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ” நெருப்பில் வெந்தவற்றிட்காக வுழூ இருக்கின்றது.” முஸ்லிம்: 814)
، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّهُ سَأَلَهُ عَنِ الوُضُوءِ مِمَّا مَسَّتِ النَّارُ؟ فَقَالَ: «لاَ، قَدْ كُنَّا زَمَانَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لاَ نَجِدُ مِثْلَ ذَلِكَ مِنَ الطَّعَامِ إِلَّا قَلِيلًا، فَإِذَا نَحْنُ وَجَدْنَاهُ لَمْ يَكُنْ لَنَا مَنَادِيلُ إِلَّا أَكُفَّنَا وَسَوَاعِدَنَا وَأَقْدَامَنَا، ثُمَّ نُصَلِّي وَلاَ نَتَوَضَّأُ» (صحيح البخاري )
ஸயீத் இப்னு ஹாரிஸ்(ரஹ்) அவர்கள் கூறினார்கள்: நான் ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(றழி) அவர்களிடம், ‘நெருப்பில் சமைத்த உணவை உண்பதால் வுழூ செய்ய வேண்டுமா?’ என்று கேட்டேன். அவர்கள், ‘தேவையில்லை. நபி(ஸல்) அவர்களின் காலத்தில் அது போன்ற உணவு அரிதாகவே எங்களுக்குக் கிடைத்துவந்தது. அவ்வாறு எங்களுக்கு அது கிடைக்கும்போது எங்கள் முன்கைகள், மேல்கைகள் மற்றும் பாதங்கள் தாம் எங்களின் கைகுட்டைகளாக இருந்தன. பிறகு நாங்கள் தொழுவோம். வுழூ செய்யமாட்டோம்’ என்று பதிலளித்தார்கள். (புஹாரி: 5457)
، عَنْ جَابِرٍ، قَالَ: «كَانَ آخِرَ الْأَمْرَيْنِ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَرْكُ الْوُضُوءِ مِمَّا غَيَّرَتِ النَّارُ»( سنن أبي داود)
ஜாபிர் (றழி) அவர்கள் கூறினார்கள்: நெருப்பில் சமைக்கப்பட்டதட்காக வுழூ செய்யாமல் இருப்பதே, நபிகளாரின் இரு கட்டளைகளுள் கடைசியானதாகும். (அபூதாவுத்: 192)
முன் பின் துவாரம் தவிர்ந்த உடம்பின் ஏனைய பகுதியினால் ஏதும் வெளிப்பட்டால் அதற்காக வுழூ செய்யவேண்டியதில்லை. மூக்கிலிருந்து சளி வெளிப்படல், காதிலிருந்து சீல் வெளிப்படல், இரத்தம் வெளியேறுதல் போன்றவை. இவைகள் மூலம் வுழூ முறியும் என்பதற்கு ஸஹீஹான ஹதீஸ்கள் வரவில்லை.
வுழூவில் தவிர்க்க வேண்டியவை
காரணமின்றி ஒரு சுன்னாவை நபி வழியை புறக்கணித்தல்.
عَنْ أَبِي ذَرٍّ، قَالَ: قَالَ لِيَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَحْقِرَنَّ مِنَ الْمَعْرُوفِ شَيْئًا، وَلَوْ أَنْ تَلْقَى أَخَاكَ بِوَجْهٍ طَلْقٍ» (صحيح مسلم)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நல்லவற்றில் எதனையும் நீ சிறுமையாக கருதாதே, அது, உன் சகோதரனை சிரித்த முகத்துடன் சந்திப்பதாக இருந்தாலும் சரியே. (முஸ்லிம்: 6857)
عَمْرِو بْنِ الأَحْوَصِ، عَنْ أَبِيهِ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي حَجَّةِ الوَدَاعِ لِلنَّاسِ: أَيُّ يَوْمٍ هَذَا؟ قَالُوا: يَوْمُ الحَجِّ الأَكْبَرِ، قَالَ: فَإِنَّ دِمَاءَكُمْ وَأَمْوَالَكُمْ وَأَعْرَاضَكُمْ بَيْنَكُمْ حَرَامٌ كَحُرْمَةِ يَوْمِكُمْ هَذَا فِي بَلَدِكُمْ هَذَا، أَلاَ لاَ يَجْنِي جَانٍ إِلاَّ عَلَى نَفْسِهِ، أَلاَ لاَ يَجْنِي جَانٍ عَلَى وَلَدِهِ وَلاَ مَوْلُودٌ عَلَى وَالِدِهِ، أَلاَ وَإِنَّ الشَّيْطَانَ قَدْ أَيِسَ مِنْ أَنْ يُعْبَدَ فِي بِلاَدِكُمْ هَذِهِ أَبَدًا وَلَكِنْ سَتَكُونُ لَهُ طَاعَةٌ فِيمَا تَحْتَقِرُونَ مِنْ أَعْمَالِكُمْ فَسَيَرْضَى بِهِ. (سنن الترمذي)
நபி (ஸல்) ஹஜ்ஜதுல் வதாவிலே கூறினார்கள்: அறிந்து கொள்ளுங்கள்! உங்களது இந்த ஊரில் ஷைத்தான் வணங்கப்படுவதை அவன் நம்பிக்கை இழந்துவிட்டான், ஆனாலும் நீங்கள் உங்கள் செயல்களில் எதனை சிறுமையாக கருதுவீர்களோ அதன் மூலம் அவனுக்கு வழிபாடு நடக்கும், அதனை அவன் பொருந்திக்கொள்வான். (திர்மிதீ: 2159)
…… فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : «أَنْتُمُ الَّذِينَ قُلْتُمْ كَذَا وَكَذَا، أَمَا وَاللَّهِ إِنِّي لَأَخْشَاكُمْ لِلَّهِ وَأَتْقَاكُمْ لَهُ، لَكِنِّي أَصُومُ وَأُفْطِرُ، وَأُصَلِّي وَأَرْقُدُ، وَأَتَزَوَّجُ النِّسَاءَ، فَمَنْ رَغِبَ عَنْ سُنَّتِي فَلَيْسَ مِنِّي»( صحيح البخاري )
நபிகளாரின் ஒரு சில நடைமுறைகளுக்கு மாறுசெய்ய நினைத்த நபித் தோழர்களுக்கு நபிகளார் :எனவே, என் வழிமுறையை கைவிடுகிறவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்” என்று கூறியதும் குறிப்படத்தக்கது. (புஹாரி: 5063, முஸ்லிம்)
வீண்விரையம் செய்தல்.
{ وَكُلُوا وَاشْرَبُوا وَلَا تُسْرِفُوا إِنَّهُ لَا يُحِبُّ الْمُسْرِفِينَ} [الأعراف: 31]
உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை. (07: 31)
أَنَسًا، يَقُولُ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَغْسِلُ، أَوْ كَانَ يَغْتَسِلُ، بِالصَّاعِ إِلَى خَمْسَةِ أَمْدَادٍ، وَيَتَوَضَّأُ بِالْمُدِّ» (صحيح البخاري
‘நபி(ஸல்) அவர்கள் நான்கு ‘முத்து’விலிருந்து ஐந்து ‘முத்து’ வரை உள்ள தண்ணீரில் குளிப்பார்கள். ஒரு ‘முத்து’ அளவு தண்ணீரில் உளூச் செய்வார்கள்” (புஹாரி: 201, முஸ்லிம்)
முத்து என்பது நடுத்தரமான ஒருவரின் இருகைகளையும் சேர்த்து அள்ளும் ஒரு அள்ளுகும்.
மூன்று தடவைகளை விட அதிகப்படுத்தல்.
عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ قَالَ: جَاءَ أَعْرَابِيٌّ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْأَلُهُ عَنِ الْوُضُوءِ، فَأَرَاهُ الْوُضُوءَ ثَلَاثًا ثَلَاثًا، ثُمَّ قَالَ: «هَكَذَا الْوُضُوءُ، فَمَنْ زَادَ عَلَى هَذَا فَقَدْ أَسَاءَ وَتَعَدَّى وَظَلَمَ»( سنن النسائي)
நபி (ஸல்) அவர்கள் ஒரு காட்டரபிக்கு வுழூவை மும்மூன்று முறைகள் செய்து காட்டிவிட்டு, ‘ இதுவே வுழூ, இதனைவிட யார் அதிகப்படுத்தினாரோ, அவர் தவறு செய்து, எல்லைமீறி, அநியாயமிளைத்து விட்டார். என்று கூறினார்கள். (நசாஇ: 140)
வுழூ முறியும் விடையத்திலோ, உறுப்புக்களை கழுவும் விடையத்திலோ, வேறு விடையங்களிலோ வீண் சந்தேகம் கொள்ளுதல்.
عَنْ سَعِيدِ بْنِ المُسَيِّبِ، ح وَعَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ، عَنْ عَمِّهِ، أَنَّهُ شَكَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الرَّجُلُ الَّذِي يُخَيَّلُ إِلَيْهِ أَنَّهُ يَجِدُ الشَّيْءَ فِي الصَّلاَةِ؟ فَقَالَ: «لاَ يَنْفَتِلْ – أَوْ لاَ يَنْصَرِفْ – حَتَّى يَسْمَعَ صَوْتًا أَوْ يَجِدَ رِيحًا»
அப்துல்லாஹிப்னு ஸைத் (றழி) அவர்கள் கூறினார்கள்: ‘தொழும்போது காற்றுப் பிரிவது போன்ற உணர்வு ஏற்படுவதாக நபி(ஸல்) அவர்களிடம் நான் முறையிட்டதற்கு, ‘நாற்றத்தை உணரும் வரை அல்லது சப்தத்தைக் கேட்கும வரை தொழுகையிலிருந்து திரும்ப வேண்டாம்’ என்று அவர்கள் கூறினார்கள்” (புஹாரி: 137)
சட்டக் கலை பகுதியில் பதியப்படும் இந்தப் பதிவு; 2008 ம் ஆண்டு காலப் பகுதியில் தொகுக்கப்பட்டு, பாடமும் நடத்தப்பட்டது. இப்போது அது ஒரு சில மாற்றங்களுடனே இங்கு பதியப்படுகின்றது. அன்று தொகுக்கப்பட்ட ஆக்கங்கக் எழுத்து வடிவில் பாதுகாக்கப்படாததால் அதன் போடோ பிரதியை இணைத்துள்ளேன்.
தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்டினால் திருத்தி, இன்னும் பயனுள்ளதாக மாற்றலாம்.
அல்லாஹ்வே எம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக!!!