أَمَّن يُجِيبُ الْمُضْطَرَّ إِذَا دَعَاهُ وَيَكْشِفُ السُّوءَ وَيَجْعَلُكُمْ خُلَفَاءَ الْأَرْضِ ۗ أَإِلَٰهٌ مَّعَ اللَّهِ ۚ قَلِيلًا مَّا تَذَكَّرُونَ
(கஷ்டத்தில் சிக்கித்) துடிதுடித்துக் கொண்டிருப்பவர்கள் அபயமிட்டழைத்தால் அவர்களுக்குப் பதில் கூறி, அவர்களுடைய கஷ்டங்களை நீக்குபவன் யார்? பூமியில் உங்களை(த் தன்னுடைய) பிரதிநிதிகளாக ஆக்கி வைத்தவன் யார்? (இத்தகைய) அல்லாஹ்வுடன் வணக்கத்திற்குரிய வேறொரு இறைவன் இருக்கின்றானா? (இல்லவே இல்லை.) உங்களில் நல்லுணர்ச்சி பெறுபவர்கள் வெகு சொற்பமே. 27:62
அனபுச் சகோதர்களே! ஒரு விடயத்தை செய்ய நினைக்கும் மனிதனுக்கு நபிகளார் காட்டிக்கொடுத்த வழிமுறையைப் பாருங்கள்;
عَنْ جَابِرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعَلِّمُنَا الِاسْتِخَارَةَ فِي الأُمُورِ كُلِّهَا، كَالسُّورَةِ مِنَ القُرْآنِ: ” إِذَا هَمَّ بِالأَمْرِ فَلْيَرْكَعْ رَكْعَتَيْنِ ثُمَّ يَقُولُ: اللَّهُمَّ إِنِّي أَسْتَخِيرُكَ بِعِلْمِكَ، وَأَسْتَقْدِرُكَ بِقُدْرَتِكَ، وَأَسْأَلُكَ مِنْ فَضْلِكَ العَظِيمِ، فَإِنَّكَ تَقْدِرُ وَلاَ أَقْدِرُ، وَتَعْلَمُ وَلاَ أَعْلَمُ، وَأَنْتَ عَلَّامُ الغُيُوبِ، اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الأَمْرَ خَيْرٌ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي – أَوْ قَالَ: فِي عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ – فَاقْدُرْهُ لِي، وَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الأَمْرَ شَرٌّ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي – أَوْ قَالَ: فِي عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ – فَاصْرِفْهُ عَنِّي وَاصْرِفْنِي عَنْهُ، وَاقْدُرْ لِي الخَيْرَ حَيْثُ كَانَ، ثُمَّ رَضِّنِي بِهِ، وَيُسَمِّي حَاجَتَهُ “
ஜாபிர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு எல்லா விஷயங்களிலும் நல்லதைத் தேர்ந்தெடுக்கப் பிரார்த்திக்கும் முறையை (இஸ்திகாராவை) குர்ஆனின் அத்தியாயங்களைக் கற்றுத் தருவதைப் போன்று கற்றுத் தருபவர்களாய் இருந்தார்கள். (அந்த முறையாவது): நீங்கள் ஒன்றைச் செய்ய நினைத்தால் கூடுதலான (நஃபிலான) இரண்டு ரக்அத்கள் தொழுது கொள்ளுங்கள். பிறகு அல்லாஹ்விடம், ‘அல்லாஹும்ம இன்னீ அஸ்தகீருக்க பி இல்மிக்க, வ அஸ்தக்திருக்க பி குத்ரத்திக்க, வ அஸ்அலுக்க மின் ஃபழ்லிக்கல் அழீம். ஃபஇன்னக்க தக்திரு வலா அக்திரு. வதுஅலமு வலா அஉலமுஇ வஅன்த்த அல்லாமுல் ஃகுயூப். அல்லாஹும்ம இன்குன்த்த தஅலமு அன்ன ஹாதல் அம்ர் கைருன்லீ ‘ஃபீ தீனி, வமஆஷீ, வ ஆம்பத்தி அம்ரீ’ ஃ ஃபீ ஆஜிலி அம்ரீ வஆஜிலிஹிஃ ஃபக்துர்ஹு லீ. வ இன் குன்த்த தஅலமு அன்ன ஹாதல் அம்ர் ஷர்ருன் லீ ஃபீ தீனீ, வ மஆஷீ, வ ஆஜிலிஹி’ஃ ஃபஸ்ரிஃப்ஹு அன்னீ, வஸ்ரிஃபினீ அன்ஹு, வக்துர் லி யல் கைர கான, ஸும்ம ரள்ளினீ பிஹி’ என்று பிரார்த்தித்து, ‘உங்கள் தேவை இன்னதெனக் குறிப்பிடுங்கள்’ என்று கூறினார்கள். (பொருள்: இறைவா! நீ அறிந்துள்ள படி (எது எனக்கு) நன்மை(யோ அ)தனை ஆற்றலால் எனக்கு ஆற்றல் உண்டாக வேண்டுமென உன்னிடம் கோருகிறேன். உன்னுடைய மாபெரும் அருளைக் கோருகிறேன். ஏனெனில், ‘நீயே ஆற்றல் மிக்கவன்; எனக்கோ எந்த ஆற்றலும் கிடையாது. நீயே நன்கறிந்தவன்; எனக்கோ எந்த அறிவும் கிடையாது. நீயே மறைவானவற்றை நன்கறிந்தவன். இறைவா! இந்தக் காரியம் எனக்கு ‘என் மார்க்கத்திலும் என் வாழ்க்கையிலும் என் காரியத்தின் முடிவிலும்’ அல்லது ‘என் இம்மை வாழ்விலும் மறுமை வாழ்விலும்’ நன்மையானதாக இருக்குமென நீ அறிந்திருந்தால் அதைச் சாதிப்பதற்குரிய ஆற்றலை எனக்கு வழங்குவாயாக! இந்தக் காரியம் எனக்கு ‘என் மார்க்கத்திலும் வாழ்க்கையிலும் தீமையானதென நீ அறிந்திருந்தால் இக்காரியத்தை என்னைவிட்டுத் திருப்பிவிடுவாயாக! என்னையும் இக்காரியத்தைவிட்டுத் திருப்பிவிடுவாயாக. நன்மை எங்கிருந்தாலும் அதை அடைவதற்குரிய ஆற்றலை எனக்கு வழங்குவாயாக! பிறகு அதில் எனக்குத் திருப்தியை அளித்திடுவாயாக.) ஸஹீஹுல் புகாரி 6382.
எனவே நாம் எதிர் நோக்கியிருக்கும் இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்பதை படைத்தவன் அல்லாஹ் எப்போதோ முடிவெடுத்துவிட்டான். எம்மீதுள்ள கடமை நாம் (இறந்த கால நிகழ்வுகளை வைத்து ) யாரை முதன்மை படுத்துகிறோமோ அவருக்கு வாக்களிப்பதும், அல்லாஹ்விடம் பொறுப்பு சாட்டுவதும், அஅல்லாஹவிடம் நலவுக்காக பிறார்த்திப்பதுமே!
எனவே அல்லாஹவிடம் இந்த நாட்களில் எதிர்கால நலனுக்காக அதிகம் துஆ செய்வோம்.
இறைவா! நீயே இந்தத் தேர்தல் முடிவை நல்லாட்சிக்கான முடிவாக ஆக்குவாயாக, இறைவா இலங்கை முஸ்லிம்களோ அதிகமானவர்கள் மைத்தரியை ஆதரவு வைக்கின்றனர், எனவே அவர்களது ஆசைக்கேற்ப அவரை வெற்றிபெறச் செய்து இலங்கைவாள் மக்களுக்கும், இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் நல்லாட்சியை ஏறபடுத்து இறைவா!
இறைவா! உன்னுடைய முடிவு மஹிந்த வெற்றி பெறுவதாக இருந்தால் ; அவரது மனநிலையை முஸ்லிம்களுக்கும் இலங்கைக்கும் நலவு செய்யக்கூடியதாக மாற்றிவிடுவாயாக!!!