இடி, மின்னலின் போது என்ன சொல்லவேண்டும்!
இடி, மின்னலின் போது சொல்வதற்கு நபி வழியில் ஏதும் இருக்கின்றதா என்று தேடிப்பார்க்கும் சில ஹதீஸ்களையும், நபித் தோழர்களின் கூற்றுக்கலையும் பார்க்க முடிகின்றது, அவை ஷீஹானதா, பலவீனமானதா என்பதை நோக்குவோம்!
سنن الترمذي ت بشار (5/ 380)
عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا سَمِعَ صَوْتَ الرَّعْدِ وَالصَّوَاعِقِ، قَالَ: اللَّهُمَّ لاَ تَقْتُلْنَا بِغَضَبِكَ، وَلاَ تُهْلِكْنَا بِعَذَابِكَ، وَعَافِنَا قَبْلَ ذَلِكَ.
இப்னு உமர் (றழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் இடி, மின்னல் சத்தத்தைக் கேட்டால், ‘அல்லாஹும்ம லா தக்துல்னா பிகலபிக, வலா துஹ்ளிக்னா பியாதாபிக, வ ஆபினா கப்லா தாளிக” என்று கூறுவார்கள். (அஹ்மத்: 5763, திர்மிதீ: 3450,நசாஇ)
இறைவா! உனது கோபத்தால் எம்மை கொன்றுவிடாதே, மேலும் உனது தண்டனையைக் கொண்டு எம்மை அழித்துவிடாதே, அதற்கு முன்னர் எம்மை ஆரோகியப்படுத்திவிடு.
அந்த ஹதீஸ் “அபூ மதர்” என்பவர் வழியாகவே பதியப்பட்டுள்ளது, அவர் ‘மஜ்ஹூல்’ அறியப்படாதவராக இருப்பதோடு, அவரிடமிருந்து அறிவிப்பவரான “அல்ஹஜ்ஜாஜ் பின் அர்தா” என்பவரும் விமர்சிக்கப்பட்ட பலவீனமானவ்ரே! எனவே இந்த ஹதீஸ் பலவீனமானதாகும்.
அறிஞ்சர் அஹ்மத் ஷாகிர் அவர்கள் முஸ்னத் அஹ்மதில் சஹீஹ் என்று கூறியிருந்தாலும்,அறிஞ்சர் அல்பானி அவர்களும் அதபுல் முப்ரத் எனும் நூலில் லஈபாக்கியுள்ளார்கள். லஈப் என்பதே சரியான கருத்தாகும்.
تفسير الطبري = جامع البيان ت شاكر (16/ 389)
حدثنا أحمد بن إسحاق قال: حدثنا أبو أحمد قال: حدثنا إسرائيل، عن أبيه، عن رجل، عن أبي هريرة رفع الحديث: أنه كان إذا سمع الرعد قال:”سبحان من يسبح الرعد بحمده”.
அபூ ஹுரைரா (றழி) அவர்கள் கூறினார்கள்: நபியவர்கள் இடி சத்தத்தைக் கேட்டால், சுப்ஹான மன் யுசப்பிஹூர் றஃது’ என்று கூறுவார்கள்.
இதனை இமாம் தபரி அவர்கள் தனது தப்சீரில் பதிந்துள்ளார்கள், அதில் யார் என்று பெயர் குறிப்பிடப்படாத ஒருவர் வந்துள்ளார். எனவே இது பலவீனமானதாகும்.
المراسيل لأبي داود (ص: 356)
531 – حَدَّثَنَا مَحْمُودُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا مَرْوَانُ يَعْنِي ابْنَ مُحَمَّدٍ، حَدَّثَنَا اللَّيْثُ، حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ أَبِي جَعْفَرٍ، أَنَّ قَوْمًا سَمِعُوا الرَّعْدَ، فَكَبَّرُوا [ص:357] فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا سَمِعْتُمُ الرَّعْدَ فَسَبِّحُوا وَلَا تُكَبِّرُوا»
உபைதுல்லா (ரஹ்) கூறினார்கள்: ஒரு கூட்டம் இடி சத்தத்தைக் கேட்டுவிட்டு அல்லாஹ்வை தக்பீர் செய்தார்கள், அப்போது நபியவர்கள்; நீங்கள் இடி சத்தத்தைக் கேட்டால் அல்லாஹ்வை (சுப்ஹானல்லாஹ் சொல்லி) துதியுங்கள், தக்பீர் செய்யவேண்டாம் .
இதனை அபூதாவுத் இமாம் அவர்கள் தனது மராசீல் எனும் நூலில் பதிந்துள்ளார்கள். உபைதுல்லாஹ் என்பவர் தாபிஇ, இந்த வகை ஹதீஸ் பலவீனமானதாகும். ஏனெனில் நபிகளாரை காணாதவர் நபிகளார் கூறியதாக சொன்னால் (முர்ஸல்) ஏற்க முடியாது என்பது பொது விதி.
الدعاء للطبراني (ص: 304)
982 – حَدَّثَنَا زَكَرِيَّا بْنُ يَحْيَى السَّاجِيُّ، ثنا أَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ، ثنا يَحْيَى بْنُ كَثِيرٍ أَبُو النَّضْرِ، عَنْ عَبْدِ الْكَرِيمِ أَبِي أُمَيَّةَ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا سَمِعْتُمُ الرَّعْدَ فَاذْكُرُوا اللَّهَ عَزَّ وَجَلَّ فَإِنَّهُ لَا يُصِيبُ ذَاكِرًا»
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் இடி சத்தத்தைக் கேட்டால் அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள், அவனை திக்ரு செய்வோரை அது தீண்டாது.
இதனை இமாம் தப்ரானீ அவர்கள் அல்முஃஜமுல் கபீரிலும், அத்துஆஃ விலும் பதிந்துள்ளார்கள்.
அதன் அறிவிப்பாளர்களான “அப்துல் கரீம் அபூ உமைய்யா “என்பவரும், அபுன் நள்ர் யஹ்யப்னு கசீர் என்பவரும் பலவீனமானவர்களே. அவ்விருவரும் சில அறிஞ்சர்களால் “மத்ரூக்” விடப்பட்டவர்கள் என்று விமர்சிக்கப்பட்டுள்ளனர். எனவே இந்த ஹதீசும் பலவீனமானதே.
இப்படி நபிகளாரைத் தொட்டு வரும் அனைத்து செய்திகளும் பலவீனமானதே!
நபித் தோழர்களைத் தொட்டு வந்த செய்திகள். (ஆசார்)
الزهد لأبي داود (ص: 323)
371 – حَدَّثَنَا أَبُو دَاوُدَ قَالَ: نا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، وَقُتَيْبَةُ الْمَعْنِيُّ، قَالَا: نا مَالِكٌ، عَنْ عَامِرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، عَنْ أَبِيهِ: أَنَّهُ كَانَ إِذَا سَمِعَ الرَّعْدَ تَرَكَ الْحَدِيثَ وَقَالَ: «سُبْحَانَ مَنْ سُبِّحَ» وَقَالَ الْقَعْنَبِيُّ فِيمَا قَرَأَ عَلَى مَالِكٍ: «سُبْحَانَ مَنْ يُسَبِّحُ الرَّعْدُ بِحَمْدِهِ، إِنَّ هَذَا لَوَعِيدٌ لِأَهْلِ الْأَرْضِ شَدِيدٌ»
அப்துல்லாஹிப்னு சுபைர் (ரழி) அவர்கள் இடி சத்தத்தைக் கேட்டால், பேசுவதை விட்டுவிட்டு, சுப்ஹான மன் சுப்பிஹா என்று கூறுவார்கள். கஃநபீ அவர்கள் மாலிக் இமாம் அவர்களுக்கு எடுத்துகாட்டியத்தில், சுப்ஹான மன் யுசப்பிஹூர் ரஃது பிஹம்திஹீ , இது பூமியில் உள்லோருக்குள்ள கடும் எச்சரிக்கையாகும். என்று கூறுவார்கள்.
இதனை அபூதாவுத் அவர்கள் சுஹ்த் எனும் புத்தகத்தில் பதிந்துள்ளார்கள்.
இதனை மாலிக் இமாம் அவர்கள் :
موطأ مالك ت الأعظمي (5/ 1444)
سُبْحَانَ الَّذِي يُسَبِّحُ الرَّعْدُ بِحَمْدِهِ وَالْمَلاَئِكَةُ مِنْ خِيفَتِهِ
சுப்ஹானல்லதீ யுசப்பிஹூர் ரஃது பிஹம்திஹீ, வல்மலாஇகது மின் கீபதிஹீ. என்று பதிந்துள்ளார்கள். இது மக்துஃ வகையை சார்ந்த தாபி ஈயின் கூற்றாகும்.
அதே செய்தி மவ்கூபாகவும் (இப்னுஸ் சுபைர் அவர்களின் கூற்றாக)அல் அதபுல் முப்ரத்தில் பதியப்பட்டுள்ளது , அது சஹீஹாகும்.
الدعاء للطبراني (ص: 304)
984 – حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ الْعَزِيزِ، ثنا أَبُو نُعَيْمٍ، ثنا يَعْلَى بْنُ الْحَارِثِ الْمُحَارِبِيُّ، عَنْ أَبِي صَخْرَةَ جَامِعِ بْنِ شَدَّادٍ، قَالَ: كَانَ الْأَسْوَدُ بْنُ يَزِيدَ إِذَا سَمِعَ صَوْتَ الرَّعْدِ، قَالَ: ” سُبْحَانَ مَنْ سَبَّحْتَ لَهُ يُسَبِّحُ الرَّعْدُ بِحَمْدِهِ وَالْمَلَائِكَةُ مِنْ خِيفَتِهِ
அலச்வதுப்னு யசீத் அவர்கள் இடி சத்தத்தைக் கேட்டால் ‘சுப்ஹான மன் சப்பஹத் லஹூ, யுசப்பிஹூர் ரஃது பிஹம்திஹஈ வால் மலாஇகது மின் கீபதிஹீ.’ என்று கூறுவார்கள்.
இது தப்ரானியின் துஆவில் பதியப்பட்டுள்ளது. இது முன்கதிஃ வகையை சார்ந்த பலவீனமானது. அபூ சக்ராவுக்கும் அலச்வத் அவர்களுக்கும் சந்திப்பில்லை.
الأدب المفرد مخرجا (ص: 252)
722 – حَدَّثَنَا بِشْرٌ قَالَ: حَدَّثَنَا مُوسَى بْنُ عَبْدِ الْعَزِيزِ قَالَ: حَدَّثَنِي الْحَكَمُ قَالَ: حَدَّثَنِي عِكْرِمَةُ، أَنَّ ابْنَ عَبَّاسٍ كَانَ إِذَا سَمِعَ صَوْتَ الرَّعْدِ قَالَ: سُبْحَانَ الَّذِي سَبَّحْتَ لَهُ، قَالَ: إِنَّ الرَّعْدَ مَلَكٌ يَنْعِقُ بِالْغَيْثِ، كَمَا يَنْعِقُ الرَّاعِي بِغَنَمِهِ
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் இடி சத்தம் கேட்கும் போது, சுப்ஹானல்லதீ சப்பஹத் ல்ஹூ என்று கூறுவார்கள்.
இது அதபுல் முப்ரதிலும், தப்ரியிலும் பதியப்பட்டுள்ளது. இதுவும் பலவீனமானதே. இதில் வரும் அல்ஹகம் என்பவரும், மூசா என்பவரும் பலவீனமானவர்களே.
இதே செய்தி அலி (ரழி) அவர்களைத் தொட்டும் தபரியில் பதியப்பட்டுள்ளது,
تفسير الطبري = جامع البيان ت شاكر (16/ 389)
حدثنا الحسن بن محمد قال: حدثنا مسعدة بن اليسع الباهلي، عن جعفر بن محمد، عن أبيه، عن علي رضي الله عنه، كان إذا سمع صوت الرعد قال:”سبحان من سَبَّحتَ له”.
அது மிகப் பலவீனமானதாகும்.அதில் வரும் முஸ்இதா என்பவர் பொய்யர் என்று விமர்சிக்கப்பட்டவர்.
இதே செய்தி தாவூச் வழியாக தபரியிலும், ஷாபிஈ இமாமின் உம்மிலும் பதியப்பட்டுள்ளது.
قَالَ الشَّافِعِيُّ: أَخْبَرَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ قَالَ قُلْت لِابْنِ طَاوُوسٍ: مَا كَانَ أَبُوك يَقُولُ إذَا سَمِعَ الرَّعْدَ؟ قَالَ كَانَ يَقُولُ: سُبْحَانَ مَنْ سَبَّحَتْ لَهُ
தாவூச் அவர்கள் தாபிஈயாவார்கள்.உம்மு என்ற புத்தகத்தில் பலமான அறிவிப்பளர்களால் பதியப்பட்டுள்ளது.
الدعاء للطبراني (ص: 305)
985 – حَدَّثَنَا بِشْرُ بْنُ مُوسَى، ثنا أَبُو عَبْدِ الرَّحْمَنِ الْمُقْرِئُ، عَنْ مُحَمَّدِ بْنِ رَاشِدٍ الدِّمَشْقِيُّ، عَنْ سُلَيْمَانَ بْنِ عَلِيِّ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، قَالَ: كُنَّا مَعَ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ فِي سَفَرٍ فَأَصَابَنَا رَعْدٌ وَبَرْقٌ وَبَرْدٌ فَقَالَ لَنَا كَعْبٌ [ص:305]: ” مَنْ قَالَ حِينَ يَسْمَعُ الرَّعْدَ: سُبْحَانَ مَنْ يُسَبِّحُ الرَّعْدُ بِحَمْدِهِ وَالْمَلَائِكَةُ مِنْ خِيفَتِهِ ثَلَاثًا عُوفِيَ مِمَّا يَكُونُ فِي ذَلِكَ الرَّعْدِ ” قَالَ ابْنُ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: فَقُلْنَا فَعُوفِينَا، ثُمَّ لَقِيتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ فِي بَعْضِ الطَّرِيقِ فَإِذَا بَرْدَةٌ قَدْ أَصَابَتْ أَنْفَهُ فَأَثَّرَتْ بِهِ، فَقُلْتُ: يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ مَا هَذَا؟ فَقَالَ: بَرْدَةٌ أَصَابَتْ أَنْفِي فَأَثَّرَتْ بِي، فَقُلْتُ: إِنَّ كَعْبًا حِينَ سَمِعَ الرَّعْدَ قَالَ لَنَا: مَنْ قَالَ حِينَ يَسْمَعُ الرَّعْدَ: سُبْحَانَ مَنْ يُسَبِّحُ الرَّعْدُ بِحَمْدِهِ وَالْمَلَائِكَةُ مِنْ خِيفَتِهِ عُوفِيَ مِمَّا يَكُونُ فِي ذَلِكَ الرَّعْدِ، فَقُلْنَا فَعُوفِينَا، فَقَالَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ: فَهَلَّا أَعْلَمْتُمُونَا حَتَّى نَقُولَهُ
கஃப் (ரழி) அவர்கள் கூறினார்கள்: யார் இடி சத்தத்தைக் கேட்கும் போது ‘சுப்ஹான மன் யுசப்பிஹூர் ரஃது பிஹம்திஹீ வல்மலாஇகது மின் கீபதிஹீ என்று மூன்று விடுத்தம் கூறுகின்றாரோ அவருக்கு அதன் தீங்கிலிருந்து பாதுகாப்பளிக்கப்படும்.
இது தப்ரானி அவர்களின் துஆவில் பதியப்பட்டுள்ளது, அது சஹீஹானதாக உள்ளது.
எனவே சில நபித் தோழர்களைத் தொட்டு சஹீஹான அறிவிப்பாளர் வரிசையில் பதியப்பட்டுள்ளது, ஆனாலும் வார்த்தை வித்தியாசங்கள் பரவலாக இருந்திருக்கின்றது, மேலும் சிறப்புகளும் வித்தியசப்பட்டுள்ளது என்ற அடிப்படையில் குறிப்பிட்ட ஒன்றை சுன்னாவாக காட்டமுடியாது. அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்.
இறைவா ! நபிகளாரைப் பின்பற்றி வாழ்ந்து அதே நிலையில் மரணிக்கும் பாக்கியத்தையும் எங்களுக்கு தருவாயாக.