இஸ்லாத்திற்கு எதிரான விமர்சனம்!
முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடை முறை!
மேலும் முஸ்லிம் பெண்கள் அணியும் அபாயா என்ற ஆடையானது பெண் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கின்றது. என்ற ஒரு விமர்சனமும் முன்வைக்கப்படுகின்றது. இது எந்தளவு மடத்தனம் எனில், ;கோழி நலைகின்றது என்று ஓனாய் கண்ணீர் வடித்த கதைதான்.இது சரிதானா என்று பார்த்தால், இது பிழை என்பதற்கு உலகமே பதில் சொல்லும். ஏன்??!!
முதலில் இந்த கோஷத்தை முன்வைப்பவர்கள் யார் என்று பார்த்தால், முழுக்கவும் மறைத்து, முஸ்லிமாக வாழ்ந்த பத்தினிப் பெண்களா என்றால்? அவர்களல்ல. மாறாக காமவெரியர்களின் ஆசைகளுக்கு அடிமையான கற்பை இழந்த பெண்களும், இஸ்லாத்தைப் பற்றி அறிந்து வைத்திராத விரோதிகளுமே. எனவே இது காற்றில் பறக்கும் போலி விமர்சனமே என்பது முதல் பதிலாகும்.
அடுத்து, உலகில் முதன்மை இடங்களில் நிற்கும் ஆண் ஜனாதிபதிகளைப் பாருங்கள், அவர்கள் முழுஉடலையும் மறைத்தவர்களாகவே காட்சியளிக்கின்றனர். ஆண் வைத்தியர்களைப் பாருங்கள், அவர்களும் பெண்களைவிட அதிகமாகவே மறைத்திருக்கின்றனர், விமானத்தை செலுத்தும் பைலட்டைப் பாருங்கள், விமானத்திலிருக்கும் பெண்களெல்லாம் அரைகுறை ஆடையோடு சீரழியும் போது அவர்கள் கௌரவமாக அணிந்து தன் முன்னேற்றத்தைக் காட்டுகின்றனர். எனவே இப்படி எத்துறையினரை எடுத்து நோக்கினாலும் ஆண்கள் பெண்களைவிட அதிகமாக மறைத்தே முன்னேறுகின்றனர். ஆச்சரியம் என்னவென்றால்; முழுக்கவும் மறைக்கவேண்டிய பெண்னை இவ்வுலகம் முன்னேற்றக் கோஷம் போட்டு அரைகுறை ஆட்டையோடு நிறுத்துகின்றது, மறைக்காமல் இருந்தாலும் சமூகத்தில் சீரழிவு வராத நிலையில் இருக்கும் ஆண் சமூகத்தை முழுக்கவும் மறைக்க வைத்தது இந்த உலகம். கல்வியின் உறைவிடமாய் இருக்கும் பல்கலைக் கழகங்களை எடுத்து நோக்கினால் கூட பெண்களை விடவும் ஆண்கள் அதிகமாக மறைத்தே காட்சியளிக்கின்றனர். எனவே மனிதனால் யுனிபோம் என்று ஒன்றை அறிமுகப்படுத்த முடியுமென்றால், மனிதனைப் படைத்த அல்லாஹ்வுக்கு முடியாதா?!
எனவே இந்த விமர்சனம் பெண்களை சந்தைக்கு இழுத்தெடுத்து காட்சிபொருளாக்குவதற்கான ஒரு முயற்சியும்,இஸ்லாத்தின் வளர்ச்சி வேகத்தைக் கண்டு பொறுக்க முடியாத விரோதிகளின் வாய்ப்பேச்சுமே அன்றி, பெண் சமூகத்திற்கு அதில் எந்த நலவுகளும் இல்லை என்பதனை பெண்கள் நன்றாக விளங்கிக்கொள்ள வேண்டும். இதனை நடுநிலையாக சிந்திக்கும் அனைவரும் நன்றாக விளங்கிக் கொள்வார்கள்.
இப்படியெல்லாம் காரண காரியங்களைக் கூறி பெண் சமூகத்தை சந்தைக்கு இழுத்தது காடையர் சமூகம், அதன் விபரீதம் என்னவெனில்; கற்பளிப்பில் ஈடுபட்ட ஒருவனை அழைத்து, ‘நீ ஏன் இந்த தீய செயலில் ஈடுபட்டாய்?’ என்று கேட்டால், அவன் கூறும் பதில் ‘பெண்கள் அணியும் ஆடை தான்’ என்பதைத் தவிர வேறெதுவாகவும் இருக்காது. பாதையில் நடமாடும் நல்லவனைக் கூட நாசத்திற்கு இட்டுச் செல்கின்றது இந்த ஆடைக் கலாச்சாரம். எனவே மானிக்கத்தை முற்றவெளியில் எறிந்த பின்பு அதை திருடியவனை தண்டிக்கலாமா? அப்படி தண்டித்தால் அது நியாயம் தானா?, எனவே பெறுமதி வாய்ந்த பொருட்களை எங்கு வைத்து பாதுகாக்க வேண்டுமோ அங்கு வைத்து பாதுகாப்பதே அந்தப் பொருளுக்கு கொடுக்கும் நீதியாகும். எனவே பெண் சமூகத்தின் பெறுமதியை நன்றாக விளங்கி வைத்திருக்கும் இஸ்லாம் அந்த சமூகத்தை பாதுகாப்பதற்காகவே பல ஏற்பாடுகளை செய்திருக்கின்றது. அவற்றில் ஒன்றே முஸ்லிம் பெண்களின் அபாயா என்ற ஆடை.
ஆணின் பொறுப்பில் இருக்கவேண்டிய பெண்!
இஸ்லாம் பெண்களை அடிமைப் படுத்துகின்றது என்று விரோதிகள் விமர்சிப்பதற்கான இன்னொரு காரணமாக, ‘இஸ்லாம் பெண்களை ஒரு ஆண் துனைக்கு கீழால் இருக்கச்சொல்கின்றது’ என்பது இருக்கின்றது.
முதல்விடயம் என்னவென்றால்; ஒருவரை ஒருவர் நிர்வகிக்க வேண்டும் என்பது அடிமைத் தனமாக இருந்தால், இந்த உலகம் நிம்மதியாக இயங்குமா?. ஏன்? பெண்களின் உரிமைக்காக போராடுகின்றோம் என்று கூறித் திரியும் இந்த சடவாத உலகம், முழு மனித சமூகத்தையும் அடிமைகளாகவே வைத்திருக்கின்றது என்று சொல்லவேண்டி வரும். சிந்திப்பதற்காக!! பாடசாலைகளை எடுத்து நோக்கினால், மாணவர்களை ஆசிரியர்கள் நிர்வகிக்கின்றனர். (இது மாணவ சமூகத்திற்கு நலவா, உரிமையைப் பரிக்கும் அநியாயமா?) தொழிற்சாலைகளை எடுத்து நோக்கினால், முதலாளிகள் தொழிலாளிகளை நிர்வகிக்கின்றனர். (இது தொழிலாளர் சமூகத்தின் உரிமையைப் பரிப்பதாகுமா? அல்லது ஒரு தொழிட்சாலைக்கு நன்மையாக இருக்குமா?) வைத்தியசாலைகளை எடுத்துக் கொள்ளுங்கள், அங்கு வைத்தியர்களும் தாதிகளுமே நேயாளிகளை நிர்வகிக்கின்றனர். (இது நோயாளிகளுக்கு நல்லதா அல்லது உரிமையைப் பரிப்பதா?) இப்படி ஆரோக்கியமாக சிந்தித்தால் ஒரு சாராரின் நலனுக்காகவே அவர்களை நிர்வகிக்கும் பொறுப்பை அவர்களை விடவும் ஏதோ ஒரு விதத்தில் சிறப்புகளையுடைய ஒரு சாராரிடம் ஒப்படைக்கப்படுகின்றது. உலகில் அநியாயத்திற்கு துனைபோகும் மனிதர்களால் இப்படியெல்லாம் பொறுப்பு வழங்க முடியுமென்றால், அநியாயத்தை தனக்குத்தானே தடுத்துக் கொண்டிருக்கும் படைப்பாளன் அல்லாஹ்வுக்கு உடல் ரீதியான பலவீனைத்தைக் கொண்டிருக்கும் பெண்களை, உடல் பலம் கொண்ட ஆண்களிடம் ஒப்படைக்க முடியாதா? அப்படி வழங்கினால் அது எப்படி அநியாயமாகும்? சிந்திக்காதா காமாலைக் கண் கொண்ட விமர்சிக்கும் சமூகம்.
எனவே முன்னால் பல விடயங்கள் கொண்டு சுட்டிக்காட்டப்பட்ட பெண்ணின் உடல் ரீதியிலான பலவீனத்தைப் பயன்படுத்தி காமவெரியர்கள் அவர்களை சீரழித்துவிடக்கூடாது என்பதற்காக, உடல் பலவீனம் கொண்ட பெண் சமூகத்தை பாதுகாக்கும் பொறுப்பை உடல் பலம் கொண்ட ஆண்களிடம் வழங்கியது இஸ்லாம். இது எப்படி அடிமைத்தனமாக அமையும்?.
மேலும் இஸ்லாமியப் பெண்ணைப் பொறுத்தவரை அவள் ஒரு ஆணின் பொறுப்பிலிருந்துகொண்டு அவனுக்கு வேலைக்காரியாகவோ, அவனுக்காக உழைப்பவளாகவோ இருக்கமாட்டாள். மாறாக ஒரு ராணியாக இல்லத்தரசியாக ஆணின் உழைப்பில் வாழ்பவளாகவே இருக்கின்றாள். (அவள் விரும்பினால் அவளுக்காக உழைக்க முடியும், ஆனால் ஆணுக்காக அல்ல.) எனவே ஒருவனை ‘நீ சம்பாதிக்கத் தேவையில்லை சும்மா இருந்து, இலவசமாக சாப்பிடு, இலவசமாக மருத்துவம் பெற்றுக்கொள் என்றால் அது அவனுக்கு சொகுசு வாழ்க்கையா? அல்லது அடிமை வாழ்க்கையா? சிந்திக்காதா பொருளாதாரம் திரட்ட சீரழியும் பெண் சமூகம்?!!. எனவே பெண்ணின் மான்பு அறிந்த இஸ்லாம் அவளை ஒரு ஆணின் பொறுப்பில் வைத்து, அவனின் உழைப்பில் அவளை வாழவைக்கின்றது. எனவே பெண்ணைப் பாதுகாக்கும் பொறுப்பை முன்னால் கோடிட்டுக் காட்டப்பட்ட இரண்டு காரணங்களுக்காகவும் ஆண் சமூகத்திடம் வழங்கியிருக்கின்றது இஸ்லாம். அல்லாஹ் கூறுவதைக் கேளுங்கள்:
- (ஆண், பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட(உடல் ரீதியான சிறப்பை வைத்து) மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். (4:32)
- நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பெண் என்பவள் தன் கனவனின் வீட்டுக்கு பொறுப்பாளியாவாள், அவளது பொறுப்பைப் பற்றியும் அவள் விசாரிக்கப்படுவாள். (புஹாரி, முஸ்லிம்)
- அம்ரிப்னுல் அஹ்வஸ் (றழி) அவர்கள் கூறினார்கள் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:’ பெண்களின் விடயத்தில் நல்லதையே நாடுங்கள், ஏனெனில் அவர்கள் உங்களிடம் ஒப்படைக்கப்பட்டவர்களாவர், அல்லாஹ்வின் பெயர்கொண்டே அவர்களை நீங்கள் கரம்பிடித்திருக்கின்றீர்கள், அவர்கள் வெளிப்படையான மானக்கேடானதை செய்தாலே தவிர அவர்களிடம் உங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. அப்படி அவர்கள் செய்தால் அவர்களை படுக்கையில் ஒதுக்குங்கள், அல்லது காயம் வராத அளவுக்கு அடியுங்கள், அவர்கள் உங்களுக்கு கட்டுப்பட்டு விட்டால் அவர்கள் மீது உங்களுக்கு எந்த அதிகாரமுமில்லை. அவர்களுக்கு உங்கள் மீது கடமைகளும், உங்கள் மீது அவர்களுக்கு கடமைகளும் இருக்கின்றன, அவர்களுக்குள்ள கடமை ‘உங்களது படுக்கையை வேறு யாருக்கும் கொடுக்காமலிருப்பதே’, உங்களுக்குள்ள கடமை ‘அவர்களுக்கு ஆடை அணிவிப்பதிலும், உணவளிப்பதிலும் நல்ல முறையில் நடப்பதாகும்.’ (திர்மிதீ:1163)
சுருக்கம் சமகால உலகில் சீரழியும் பெண் சமூகம், இஸ்லாமியப் பெண்கள் அனுபவிக்கும் இன்பங்களையும் சுகபோகங்களையும் பார்த்தாலே இஸ்லாத்தின் பெறுமதி விளங்கி இஸ்லாத்தை ஏற்றுவிடுவார்கள். அல்லாஹ்வே விமர்சகர்களின் காமலைக் கண்களுக்கு இஸ்லாத்தின் பெறுமதியை எடுத்துக் காட்ட போதுமானவன்.
அபாயா என்ற ஆடையின் சட்டம்
அடுத்து, இஸ்லாம் அபாயா சம்பந்தமாக கூறும் சட்டத்தை சுருக்கமாக நோக்குவோம்.
அன்னிய ஆண்களின் பார்வையிலிருந்து தன்னை காத்துக் கொள்ளுமாறு கட்டலை பிறப்பித்த இஸ்லாம், அந்த ஆடைக்கு நிறத்தை நிர்ணயிக்கவில்லை. என்றால் அபாயா என்பது கறுப்பு நிறத்தால் அமையவேண்டும் என்பதல்ல. எனவே ஒரு பெண் எப்படியும் தன்னை மறைக்கலாம். ஒரு போர்வையால் கூட மறைக்கலாம்.
- ஆயிஷா (றழி) அவர்கள் கூறினார்கள்: எங்களில் முஃமினான சில பெண்கள் இருந்தனர், அவர்கள் போர்வைகளால் போர்த்தியவர்களாக நபிகளாரோடு சுபஹுத் தொழுகையில் கலந்துவிட்டு, தொழுகை முடிந்ததும் வீடு திரும்புவார்கள், இருளின் காரணமாக அவர்களை யாரும் அடையாளம் கண்டுகொள்ளமாட்டார்கள். (புஹாரி: 553,முஸ்லிம்)
அடுத்து; ஒரு பெண் தன்னை மறைக்கும் போது முகம், கை தவிர்ந்த ஏனைய பகுதிகளையே கட்டாயம் மறைக்கவேண்டும். மாறாக முலு உடலையும் கட்டாயம் மறைக்க வேண்டும் என்பதற்கு தெளிவான சான்றுகள் வரவில்லை.மாறாக ‘தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது;’ என்று ஒரு பகுதி வெளியில் தெரிய முடியும் என்ற சலுகையுடனே இஸ்லாம் கடமையாக்கியுள்ளது.எனவே குர்ஆனிலும் சுன்னாவிலும் ‘வெளிப்படும் பகுதி’ எது என்பதற்கு தெளிவான சான்றுகள் இல்லாத போது நபித் தோழிகளின் செயற்பாட்டைப் பார்த்தே முடிவெடுக்க வேண்டும். அப்படி நபிகளார் காலத்து நபித் தோழிகளின் செயற்பாடுகளைப் பார்த்தாலும் மூடுவதற்கும், மூடாமல் இருப்பதற்கும் அவகாசமளிப்பதைப் பார்க்கமுடியும். எனவே ஒரு பெண் தான் விரும்பினால் முழுக்கவும் மூடலாம், விரும்பினால் முகம், கை தவிர்ந்த பகுதியை மூடலாம். யாருக்கும் அதில் அதிகாரம் செலுத்த முடியாது.
- ஜாபிர் (றழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபியவர்கள் ஒரு பெருநாள் தினத்தில் ஆண்களுக்கு உரை நிகழ்த்திவிட்டு, பிலால் (றழி) அவர்களோடு பெண்களிருக்குமிடத்திற்குச் சென்று உரை நிகத்தைனார்கள். அப்போது ‘பெண்களே அதிகம் நரகில் இருப்பார்கள்’ என்று கூறவே கன்னத்தில் குழி விழுந்த ஒரு பெண்மனி எழுந்து காரணம் கேட்டார்கள். (முஸ்லிம்: 2085)
இந்த செய்தி நபிகளாருக்கு முன் பெண்கள் முகம் திறந்த நிலையில் இருந்ததற்கு சான்றாகும்.
கடைசியாக; இந்தக் கட்டுரையின் மூலம் இஸ்லாமிய ஆடை சார்ந்த விடையங்களை என்னால் முடிந்த அளவு தொகுத்து வழங்கினேன். இந்தக் கட்டுரையைப் படித்து, நாமும் இஸ்லாத்தின் பெறுமதியை விழங்கிக் கொள்வதோடு, மாற்று மதத்தவர்களுக்கும் எடுத்துக்காட்டுவோம். அல்லாஹ்வே எமக்கு சத்தியத்தில் தெளிவைத் தந்து அதில் நிலைத்திருக்கவும் செய்வானாக. வ ஆகிரு தஃவானா அனில் ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்.