VEDIO வடிவில் பார்வையிடுவதற்கு இங்கே CLICK செய்யவும்!
இன்றைக்கு முஸ்லிம் சமூகத்தால் எப்படியெல்லாம் மறைவு ஞானம் படைப்பினங்களுக்கு வழங்கப்பட்டது என்பதனை அறிந்துகொள்ள பின்வருமாறு நோக்கலாம்.
1- சகுனம் பார்த்தல்
2-ராசிபலனை நம்புவது
3-குறி சாஸ்த்திரம்
4-மௌலிதுகள் படிப்பதன் மூலம்
சகுனம் பார்த்தல்:
வீடியோவைப் பார்க்க இங்கே தட்டவும் click
அன்று மக்களிடத்தில் ஈட்டி எறிந்து நல்லது கெட்டது சொல்கின்ற (எதிர்வு கூறுகின்ற) வழமை இருந்தது. ஆனால் இன்று அது பால் பார்ப்பது, நொம்பர் போட்டுப் பார்ப்பது, என்ற வடிவங்களிலும், மிருகங்கள், பறவைகள் செயல்களிலிருந்தும் மறைவானவற்றை எதிர்வு கூர்வதைப் பார்க்கமுடிகின்றது. ஆனால் இது இன்று ஒரு மூட நம்பிக்கையாகவே அறியாமையின் காரணமாக செய்யப்படுகின்றது. அதே நேரம் அல்லாஹ்வோடு சேர்க்க வேண்டிய முடிவை படைப்பினங்களோடு சேர்ப்பதனால் வெளிப்படையா௧ ஷிர்க்காகவும் அமைந்துவிடும்.
பிர்அவ்னும் அவன் சமூகமும் ஏதும் பிரச்சினை நேர்ந்தால் மூஸாவே அதற்கு காரணம் என அவரைவைத்து சகுனம் பார்த்தனராம். அதனை அல்லாஹ் கண்டிக்கின்றான்.
- அவர்களுக்கு ஒரு நன்மை வருமானால், “அது நமக்கு (உரிமையாக) வரவேண்டியது தான்” என்று கூறினார்கள்; ஆனால் அவர்களுக்கு ஒரு கெடுதி ஏற்படுமானால், அது மூஸாவினாலும், அவருடனிருப்பவர்களாலும் வந்த பீடையென்பார்கள்; அறிந்து கொள்ளுங்கள்: அவர்களுடைய இந்த துர்பாக்கியமெல்லாம் அல்லாஹ்விடமிருந்தே வந்துள்ளது – எனினும் அவர்களில் பெரும்பாலோர் இதனை அறிந்து கொள்வதில்லை. (7:131)
சாலிஹ் நபியின் சமூகம் அவர்களை வைத்து அபசகுணம் பார்த்தது.
- அதற்கவர்கள்: “உம்மையும், உம்முடன் இருப்பவர்களையும் நாங்கள் துர்ச்சகுணமாகக் காண்கிறோம்” என்று சொன்னார்கள்; அவர் கூறினார்: “உங்கள் துர்ச்சகுணம் அல்லாஹ்விடம் இருக்கிறது; எனினும், நீஙகள் சோதனைக்குள்ளாக்கப்படும் சமூகத்தாராக இருக்கிறீர்கள்.” (27:47)
நபி முஹம்மத் (ஸல்) அவர்களை வைத்து அவர்களது சமூகமும் அபசகுணம் பார்த்தது.
- “நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே! (போருக்குச் சென்ற முனாபிக்களுக்கு) ஏதேனும் ஒரு நன்மை ஏற்பட்டால் “இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது” என்று கூறுகிறார்கள்; ஆனால், அவர்களுக்கு ஏதாவது தீங்கு ஏற்பட்டாலோ, “இது உம்மிடம் இருந்துதான் ஏற்பட்டது” என்று கூறுகிறார்கள், (நபியே! அவர்களிடம்) கூறும்: “எல்லாம் அல்லாஹ்விடமிருந்தே வந்திருக்கின்றன; இந்த மக்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? எந்த ஒரு விஷயத்தையும் அவர்களுக்கு விளங்கிக் கொள்ள முடியவில்லையே!” (4:78)
ஒரு முஸ்லிமை முஃமினை பொறுத்தவரை எது நடந்தாலும், என்ன சோதனை நேர்ந்தாலும் அல்லாஹ்வின் மீதே பொறுப்பு சாட்டுவான். அதே நேரம் தான் ஏதும் தவறு விட்டிருந்தால் தான் விட்ட தவறை நினைத்து வருந்தி திருந்தவும் முயற்சிப்பான்.
- உனக்குக் கிடைக்கும் எந்த நன்மையும் அல்லாஹ்விடமிருந்தே கிடைக்கிறது; இன்னும், உனக்கு ஏதாவது ஒரு தீங்கு ஏற்பட்டால் அது உன்னால் தான் வந்தது; (நபியே!) நாம் உம்மை மனிதர்களுக்கு (இவற்றை எடுத்துக் கூறுவதற்காகத்) தூதராகவே அனுப்பியுள்ளோம் – (இதற்கு) அல்லாஹ்வே போதுமான சாட்சியாக இருக்கின்றான். (4:79)
- இன்னும் உங்களுக்கு (உஹதில்) ஒரு துன்பம் வந்துற்றபோது, நீங்கள் (பத்ரில்) அவர்களுக்கு இது போன்று இருமடங்குத் துன்பம் உண்டு பண்ணியிருந்த போதிலும், “இது எப்படி வந்தது?” என்று கூறுகிறிர்கள்; (நபியே!) நீர் கூறும்: இது (வந்தது) உங்களிடமிருந்தேதான் – நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கிறான்,” (3:165)
இன்று மனிதர்களிடம் குறிப்பாக முஸ்லிம்களிடம் காணப்படும் சகுணம் ஷிர்க்கில்தான் கொண்டுபோய் சேர்க்கும், ஏனெனில் அல்லாஹ்வில் சார்ந்திருக்கவேண்டிய எதிர்வு கூறும் அதிகாரம் படைப்பினங்களுக்கு வழங்கப்படுகின்றது.
உ-ம் காக்காய் கத்தும் போது விருந்தினர் வருவார்கள் என முடிவெடுப்பது, பல்லி கத்தும் போது தன் கூற்றை உறுதிப்படுத்துகின்றது என கூறுவது, ஒரு நல்லவரின் வருகை நல்லதை ஏற்படுத்தியது என்பதும், கெட்டவரின் வருகை கெட்டதை ஏற்படுத்தியது என்பது போல. எனவே இதனை நபிகளார் ஷிர்க் என பொதுவாக குறிப்பிட்டு தடுத்தார்கள். ஓருவன் இவற்றை செய்யும்போது மூட நம்பிக்கையின் அடிப்படையில் வழக்கத்தின் அடிப்படையில் செய்யும்போது சிரிய ஷிர்க்கில் அமையலாம்.
- நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘சகுணம் பார்ப்பது ஷிர்க்காகும், ஆனாலும் அல்லாஹ் அதனை தவக்குல் (அல்லாஹ்வை சார்ந்திருப்பது) இன் மூலம் போக்குவான்.’ (அஹ்மத், திர்மிதி, அபூ தாவுத்)
- அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:தொற்றுநோய் என்பது கிடையாது. பறவைகளைக்கொண்டு சகுனம் பார்ப்பதும் ஆந்தையால் சகுனம் பார்ப்பதும் கிடையாது. ‘ஸபர்’ மாதம் பீடை என்பதும் கிடையாது. சிங்கத்திடமிருந்து நீ எப்படி வெருண் டோடுவாயோ அப்படி தொழுநோயாளியிடமிருந்து வெருண்டோடு. (புஹாரி, முஸ்லிம்)
- அபூ ஹுரைரா(றழி) அவர்கள் கூறினார்கள்:இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘தொற்று நோய் கிடையாது. ‘ஸபர்’ மாதம் பீடை என்பதும் கிடையாது; ஆந்தையால் சகுனம் பார்ப்பதும் கிடையாது’ என்று கூறினார்கள். அப்போது கிராமவாசியொருவர், ‘இறைத்தூதர் அவர்களே! (பாலை) மணலில் மான்களைப் போன்று (ஆரோக்கியத்துடன் துள்ளித் திரியும்) என் ஒட்டகங்களிடம் சிரங்கு பிடித்த ஒட்டகம் வந்து அவற்றிற்கிடையே கலந்து அவற்றையும் சிரங்கு பிடித்தவையாக ஆக்கிவிடுகின்றனவே! அவற்றின் நிலையென்ன (தொற்று நோயில்லையா)?’ என்று கேட்டார்.அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘அப்படியென்றால் முதல் (முதலில் சிரங்கு பிடித்த) ஒட்டகத்திற்கு (அந்த நோயைத்) தொற்றச் செய்தது யார்?’ என்று திருப்பிக் கேட்டார்கள். (புஹாரி, முஸ்லிம்)
- முஆவியதுப்னுல் ஹிகம்(றழி) அவர்கள் நபிகளாரிடம், அல்லாஹ்வின் தூதரே! நான் புதிதாகவே மடமைத் தனத்தைவிட்டு இஸ்லாத்தில் இணைந்தவன், எங்களில் சில மனிதர்கள் எதிர்வு கூறுபவர்கள் (சாஸ்திரக்காரர்கள்) இடம் செல்கின்றனர் (அது சரியா)? எனக் கேட்க, நபியவர்கள்: ‘அவர்களிடம் நீ செல்லாதே.’ என்று கூற, எங்களில் சிலர் சகுனம் பார்ப்பவர்களாக இருக்கின்றனர் (அது சரியா)? எனக் கேட்க, நபியவர்கள்: அது அவர்களின் உள்ளங்களில் ஏற்படும் ஒரு விடையமாகும், அது அவர்களை தடுக்கவேண்டாம்.’ என்று கூறினார்கள். (முஸ்லிம்)
- நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யாரை அபசகுனம் ஒரு தேவையிலிருந்து தடுக்கின்றதோ அவர் நிச்சியமாக இனைவைத்துவிட்டார். (அப்போது நபித்தோழர்கள்), அல்லாஹ்வின் தூதரே! அதற்கான பாவ மீழ்ச்சி எது? என்று கேட்க, ‘இறைவா உனது நலவைத் தவிர வேறு நலவு இல்லை, உனது ஏற்பாட்டில் உள்ளதைத் தவிர வேறு சகுனமில்லை, உன்னைத்தவிர வேறு வணக்கத்துகுறியவனுமில்லை.’ என்று அவர்களில் ஒருவர் கூறுவதாகும் என்று நபிகளார் கூறினார்கள். (அஹ்மத்)
اَللّهُم لَا طَيْرَ إِلا طَيْرُكَ وَلَا خَيْرَ إِلا خَيْرُكَ وَلَا إِلهَ غَيْرُكَ
ஆனாலும் நல்ல வார்த்தைகளைக் கேட்டு ஒரு மனிதன் சந்தோஷப்படமுடியும், உதாரணமாக; ஒருவன் வேலைக்காக வெளியேறும்போது ‘வெற்றி பெற்றவனே, பரகத் பெற்றவனே’ போன்ற வார்த்தைகளைக் கேட்பதுபோன்று.
- அபூ ஹுரைரா(றழி) அவர்கள் கூறினார்கள்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘பறவை சகுனம் என்பது கிடையாது. சகுனங்களில் சிறந்தது நற்குறியே ஆகும்’ என்று கூறினார்கள். மக்கள், ‘நற்குறி என்பதென்ன?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘அது நீங்கள் செவியுறும் நல்ல (மங்கலகரமான) சொல்லாகும்’ என்று பதிலளித்தார்கள்.(புஹாரி, முஸ்லிம்)
மேலும் சகுனம் பார்ப்பதை விட்டவருக்கு மறுமையில் கேள்விகணக்கின்றி சுவனம் செல்லும் பாக்கியமும் கிடைக்கும்.
- இப்னு அப்பாஸ்(றழி) அவர்கள் கூறினார்கள்: (ஒரு நாள்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மிஅராஜ் எனும் விண்ணுலகப் பயணத்தின்போது) எனக்குப் பல சமுதாயத்தார் எடுத்துக் காட்டப்பட்டனர். அப்போது இறைத்தூதர்களில் ஓரிருவருடன் (அவர்களின் சமுதாயத்தாரில் பத்துக்குட்பட்ட) ஒரு சிறு கூட்டமே கடந்து செல்லலாயினர். ஓர் இறைத்தூதர் தம்முடன் ஒருவருமில்லாத நிலையில் கடந்து சென்றார். பின்னர் எனக்கு ஒரு பெரும் கூட்டம் காட்டப்பட்டது. நான், ‘இது எந்தச் சமுதாயம்? இது என் சமுதாயமா?’ என்று கேட்டேன். அப்போது, ‘அல்ல. இது (இறைத் தூதர்) மூஸாவும் அவரின் சமுதாயமும்’ என்று எனக்குச் சொல்லப்பட்டது. அப்போது ‘அடிவானத்தைப் பாருங்கள்’ என்று என்னிடம் கூறப்பட்டது. அங்கு அடி வானத்தையே அடைந்திருந்த ஏராளமான மக்கள் திரளை பார்த்தேன். பிறகு என்னிடம், ‘அடிவானங்களில் இங்கும் இங்கும் பாருங்கள்’ எனச் சொல்லப்பட்டது. அப்போது நான் அடிவானங்களை அடைத்திருந்த ஏராளமான மக்கள் திரளைக் கண்டேன். ‘இது உங்கள் சமுதாயம். விசாரணையின்றி சொர்க்கம் செல்லும் எழுபதாயிரம் பேரும் இவர்களில் அடங்குவர்’ என்று எனக்குச் சொல்லப்பட்டது. (விசாரணையின்றி சொர்க்கம் செல்லும் அந்த எழுபதாயிரம் பேர் யார் என்பதை) தோழர்களுக்கு விளக்காமலேயே நபி(ஸல்) அவர்கள் (தம் வீட்டுக்குள்) நுழைந்துவிட்டார்கள். (அது தொடர்பாக) மக்கள் விவாதிக்கத் தொடங்கினார்கள். ‘நாம் தாம் அவர்கள். (ஏனெனில்,) நாமே அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு அவனுடைய தூதரைப் பின்பற்றினோம்; அல்லது நம் பிள்ளைகள் தாம் அவர்கள். (ஏனெனில்) அவர்கள் இஸ்லாத்தில் பிறந்தவர்கள். நாமோ அறியாமைக் காலத்தில் பிறந்தோம்’ என்று கூறினார்கள். இச்செய்தி நபி(ஸல்) அவர்களுக்கு எட்டியது. எனவே, அவர்கள் புறப்பட்டு வந்து, ‘(விசாரணையின்றி சொர்க்கம் செல்லவுள்ள) அவர்கள் யாரெனில், அவர்கள் ஓதிப்பார்க்கமாட்டார்கள்; பறவைகளை வைத்து சகுனம் பார்க்க மாட்டார்கள்; (நோய்க்காக) சூடிட்டுக் கொள்ளமாட்டார்கள். தம் இறைவனையே சார்ந்திருப்பார்கள்’ என்று கூறினார்கள். அப்போது உக்காஷா இப்னு மிஹ்ஸன்(ரலி) எழுந்து, ‘அவர்களில் நானும் ஒருவனா? இறைத்தூதர் அவர்களே!’ என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், ‘ஆம்’ என்று பதிலளித்தார்கள். மற்றொருவர் எழுந்து நின்று, ‘அவர்களில் நானும் ஒருவனா?’ என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள் ‘இவ்விஷயத்தில் உக்காஷா உம்மை முந்திக்கொண்டுவிட்டார்’ என்று கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்)
****குறிப்பு: பின்வரும் ஹதீஸை பார்க்கும்போது மூன்று விடையங்களை வைத்து அபசகுனம் பார்க்கமுடியும் என்பதைப் போன்று விளங்குகின்றது, என்றால் மனிதன் பிரச்சினைகளை சந்திக்கும் போது இந்த மூன்றில் ஒன்றின் காரணமாகவே ஏற்படுகின்றது என்று முடிவெடுப்பது. ஆனால் அது அப்படியல்ல, மாறாக ஒரு மனிதனுக்கு பிரச்சினை வருவதாக இருந்தால் இந்த மூன்றில் ஒன்றில் வரலாம் என்று விளங்குவதே பொறுத்தமானது.
- இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்”அபசகுனம் என்பது (எதிலாவது இருக்கமுடியும் என்றால்) பெண், வீடு, குதிரை ஆகிய மூன்று விஷயங்களில் தான் (இருக்க முடியும்).(புஹாரி, முஸ்லிம்)
A- நபிகளார் ஒன்றுக்கு பல திருமணங்களை முடித்து வாழ்ந்ததோடு, மனிதனது நின்மதிக்கும் வழியாக திருமணத்தையே காட்டினார்கள்.
- இன்னும், நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன. (30:21)
- நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘வாலிபர்களே! உங்களில் யாருக்கு சக்தி இருக்கின்றதோ அவர் திருமணம் முடிக்கட்டும், ஏனெனில் அது பார்வையை தாழ்த்தக்கூடியதாகவும், கற்பை பாதுகாக்கக்கூடியதாகவும் இருக்கும். யார் சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு பிடிக்கட்டும், அது அவருக்கு பாதுகாப்பாக கேடயமாகவு இருக்கும்.’ (புஹாரி, முஸ்லிம்)
B- ஆனால் ஒரு மனிதனுக்கு கெட்ட மனைவி கிடைப்பதே பெறும் முஸீபத்து என்ற அடிப்படையில்தான் அந்த ஹதீஸை நோக்கவேண்டும்.
- நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘உலகம் அனுபவிக்கும் பொருளாகும், அவற்றுள் சிறந்தது ஸாலிஹான பெண்ணாகும்.’ (முஸ்லிம்)
C- மேலும் புஹாரியில் பதிவு செய்யப்பட்ட குறிப்பிட்ட அந்த ஹதீஸுக்கு அடுத்த ஹதீஸைப் பார்க்கும் போது அதனுடைய கறுத்தை தெளிவாக புறிந்து கொள்ளலாம்.
- நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனக்குப்பின் பெண்களைவிட மோசமான ஒரு பிரச்சினையை ஆண்களுக்கு நான் விட்டுச்செல்லவில்லை.’ (புஹாரி, முஸ்லிம்)
மேலும் வாகனம் வீடு என்பதை நோக்கினாலும், நபிகளார் தனக்கென்று வீடுகளையும் வாகனங்களையும் வைத்திருந்தார்கள் என்றால், இந்த ஹதீஸ் குறிப்பிடும் கறுத்து என்ன என்பதனை இழகுவாக விளங்களாம்.
எனவே ஒரு மனிதனிக்கு பிரச்சினை வருவதாக இருந்தால் இவற்றில் வருவதற்கே பொருத்தம் என்று விளங்குவதோடு, இவைகளை வைத்திருப்பதே எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம் என்று பல குர்ஆன் வசனங்களுகும் ஹதீஸ்களுக்கும் முறனாக விளங்கவும் கூடாது. அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்.