குறி சாஸ்த்திரம்:
வீடியோவைப் பார்க்க இங்கே தட்டவும் click
மறைவானவற்றை கூறுவதும், எதிர்காலத்தைப் பற்றி எதிர்வு கூறுவதும் எம்சமூகத்தில் காணப்படும் இன்னுமொரு அம்சமாகும்.
இதுவே இன்றைக்கு முஸ்லிம்கள் மத்தியில் பால் பார்ப்பது நொம்பர் போட்டுப்பார்ப்பது என்ற பெயர்களில் பரவியுள்ளது, எந்த பெயர் கொண்டு அழைக்கப்பட்டாலும் மறைவானவற்றை அறிகின்ற ஆற்றால் படைப்பினங்களுக்கு வழங்கப்படுவதே தடுக்கப்பட்ட விடையமாகும். பெயர் மாறியிருக்கின்றதே அல்லாமல் கறுப்பொருள் மாறவில்லை.
தன் வீட்டில் கானாமல் போன பொருளை தேடித்தறுமாரு ஒன்றுமறியாத சாஸ்திரக்காரர்களிடம் போய் கூறுவது, குடும்பப் பிரச்சினைக்கு காரணத்தை பால் பார்த்து அறிய முயழ்வது, சூனியம் வைத்தது யார் என்று அறிய முயற்சிப்பது போன்று.
இப்படி செய்வது எம்மை ஷிர்க்கில் சேர்த்து ஈமானை பறித்துவிடும். முஸ்லிம்களை பொறுத்தவரை ஜோதிடம் பார்ப்பது, சாஸ்திரம் பார்ப்பது என்பதனை தவராக விழங்கியிருந்தாலும் பால்பார்ர்ப்பது நொம்பர்போட்டுப் பார்ப்பது எனும்போது அதனை தவராக பார்ப்பதில்லை இதுவே ஷைத்தான் எங்களை வழிகெடுக்கும் விதமாகும். அல்லாஹ் நம்மை காப்பானாக!
- நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘யார் எதிர்வு கூறுபவனிடம் (சாஸ்திரக்காரன்) சென்று, அவனிடம் ஒன்றைப்பற்றிக் கேட்டால் அவனது நாட்பது இரவுகளின் தொழுகை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.’ (முஸ்லிம்)
- நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘யார் எதிர்வு கூறுபவனிடம் அல்லது சாஸ்திரக்காரனிடம் சென்று, அவன் சொல்வதை உண்மைப்படுத்துகின்றானோ அவன் முஹ்ம்மத் (ஸல்) அவர்களின் மீது இறக்கப்பட்டதை மறுத்துவிட்டான்.’ (அஹ்மத், பைஹகீ)
சில சமயங்களில் அவர்கள் சொல்வது உண்மையாக இருந்தாலும்கூட அதனை நம்பக்கூடாது என இஸ்லாம் கூறுகின்றது. அப்படி ஒரு சில நேரங்களில் உண்மை வருவதற்கு காரணம் ஷைத்தான்களின் உதவியே.
- ஆயிஷா (றழி) அவர்கள் கூறினார்கள்: சில மனிதர்கள் நபிகளாரிடம் சாஸ்திரக்காரர்களைப் பற்றி கேட்டனர், அதற்கு நபியவர்கள்; ‘அவர்கள் ஒன்றுக்குமில்லாதவர்கள்.’ என்று கூற, அல்லஹ்வின் தூதரே! அவர்கள் சில நேரங்களில் ஒன்றை சொல்லுகின்றனர், அது உண்மையாக இருக்கின்றதே?’ என்று கேட்க, நபியவர்கள்: ‘அந்த உண்மை வார்த்தை, ஜின்கள் (வானத்துக்குச் சென்று மலக்குகளின் பேச்சை உத்துக் கேட்டு) அதனை பாதுகாத்துக் கொள்கின்றனர், பிறகு (உலகில்) தம் தோழர்களின் காதுகளில் அதனை ஊதிவிடுகின்றனர், அவர்கள் அதனுடன் நூறு பொய்யை களந்துவிடுகின்றனர்.’ என்று கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்)
- இப்னு அப்பாஸ் (றழி) அவர்கள் ஒரு நபித் தோழர் கூறியதாக கூறினார்கள்: அவர்கள் ஒரு இரவு நபிகளாரிடம் அமர்ந்திருந்தபோது ஒரு நட்சத்திரம் எறியப்பட்டு அது எறிந்துபோனது, அப்போது நபி (ஸல்) அவர்கள் நபித் தோழர்களிடம், மடமைக் காலத்தில் இப்படி எறியப்பட்டால் நீங்கள் என்ன கூறுவீர்கள்?’ என்று கேட்க, ‘அல்லாஹ்வும் அவனது தூதருமே அறிவார்கள், இந்த இரவு ஒரு பெரிய மனிதர் பிறந்துவிட்டார், அல்லது இறந்துவிட்டார் என்று கூறுவோம். என்று கூற, நபியவர்கள்: ‘நிச்சியமாக அது எவரின் மரணத்திற்க்கோ, பிறப்பிற்கோ எறியப்படமாட்டாது, ஆனாலும் தன் நாமம் உயர்த்தியான பரகத் பொறுந்திய நாயன் ஒரு விடயத்தை தீர்வுசெய்துவிட்டால் அதனை அர்சை சுமக்கும் மலக்குகளிடம் சொல்கின்றான், அவர்கள் தமக்கு நெறுக்கமானவர்களுக்கு அறிவிக்க அது கீழ் வானத்தில் உள்ளவர்களுக்கு எட்டுகின்றது, அதனை ஜின்கள் உத்துக் கேட்டு, அதனை தம் நேசர்களிடம் எடுத்துவந்து கூறுகின்றனர், அதுவரை அது உண்மையாகவே இருக்கின்றது, ஆனாலும் அவர்கள் அதில் பொய்யை அதிகமாக்குகின்றனர்.’ என்று கூறினார்கள். (முஸ்லிம்)
எனவே அல்லாஹ்வுக்கு சொந்தமான மறைவான வற்றை அறியும் ஆற்றலை அவனுக்கே ஓர்மைப் படுத்தி, எமது ஈமானை நாம் பாதுகாக்க முயற்சிப்போம்.