-
மரணத்தருவாயில் இருக்கும் நோயாளி செய்யவேண்டியது
அல்லாஹ்வின் ஏற்பாட்டை பொருந்திக்கொண்டு, பொறுமையுடன் இருப்பதோடு, அல்லாஹ்வைப் பற்றிய நல்லெண்ணத்துடன் இருப்பது அவசியம்.
- நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘மூஃமினின் விடயம் ஆச்சர்யத்தக்கது, அவனது எல்லா விடயமும் அவனுக்கு நல்லதே, அது ஒரு மூஃமினுக்கே தவிர இருக்கவும் மாட்டாது, அவனுக்கு நல்லது நடந்தால் நன்றி செலுத்துவான் அது அவனுக்கு நல்லதாகிவிடும், அவனுக்கு கெட்டது நடந்தால் பொறுமைக் காப்பான் அது அவனுக்கு நல்லதாகிவிடும்.’ (முஸ்லிம்)
- நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘உங்களில் ஒருவர் அல்லாஹ்வைப் பற்றி நல்லெண்ணம் வைக்காமல் மரணிக்கவேண்டாம்.’ (முஸ்லிம்)
- அல்லாஹ்வின் சந்திப்பை யார் விரும்பி விட்டாரோ, அவரது சந்திப்பை அல்லாஹ்வும் விரும்பி விடுகிறான், யார் அல்லாஹ்வின் சந்திப்பை வெறுத்து விட்டாரோ அவரது சந்திப்பை அல்லாஹ்வும் வெறுத்து விடுகிறான் (என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதும்) அல்லாஹ்வின் நபியவர்களே! மரணத்தை வெறுப்பது தானா? நாம் அனைவரும் மரணத்தை வெறுக்கிறோமே என நான் கேட்டேன். அதற்கவர்கள் அவ்வாறல்ல எனினும் மூ/மினானவர், அல்லாஹ்வின் அருளையும் அவனின் பொருத்தத்தையும், அவனது சுவனத்தையும் கொண்டு நற்செய்தி கூறப்பட்டால் அல்லாஹ்வின் சந்திப்பை அவர் விரும்பி விடுகிறார். (அது போன்றே) அல்லாஹ்வும் அவரது சந்திப்பை விரும்பி விடுகிறான். நிச்சயமாக நிராகரிப்பவன் அல்லாஹ்வின் தண்டனை பற்றியும், அவனது கோபத்தை பற்றியும் நற்செய்தி கூறப்பட்டால் அல்லாஹ்வின் சந்திப்பை அவனும் வெறுத்து விடுகிறான். (அது போன்றே) அல்லாஹ்வும் அவனை சந்திக்க வெறுப்படைந்து விடுகிறான் என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறுகிறார்கள். (முஸ்லிம் : 454)
- எவ்வளவு நோய் கடுமையானாலும் மரணிப்பதை ஆசை வைக்கக்கூடாது.
- நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் யாரும் ஏற்பட்ட ஒரு சோதனைக்காக மரணிப்பதை ஆசைவைக்கவேண்டாம், அப்படி செய்யவேண்டிய கட்டாயம் இருந்தால் அவர், اللهم أحيني ما كانت الحياة خيرا لي وتوفني إذا كانت الوفاة خيرا لي யா அல்லாஹ் வாழ்வது எனக்கு நல்லதாக இருந்தால் என்னை வாழவை, மரணிப்பதுதான் நல்லம் என்றிருந்தால் மரணிக்கச் செய்துவிடு.’ என்று கூறட்டும். (புஹாரி, முஸ்லிம்)
- மனிதர்களுக்கு ஏதும் அநியாயம் செய்திருந்தால், அல்லது உரிமைகள் செலுத்த வேண்டியிருந்தால் அவற்றை விரைவாக நிறைவேற்ற வேண்டும்.
- நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யாராவது தன் சகோதரனின் மானத்துக்கோ, பொருளாதாரத்துக்கோ அநியாயம் இழைத்திருந்தால்,திர்ஹம் தீனர் (காசு பணம்) இல்லாத மறுமை நாள் வருமுன் அதை அவர் நிறைவேற்றிவிடட்டும், (மறுமையில்) அவருக்கு நல்லமல்கள் இருந்தால் அதை எடுதுத் அந்தப் பாதிக்கப்பட்ட மனிதருக்கு கொடுக்கப்படும், அவருக்கு நல்லமல்கள் இல்லையென்றால் அவரது (பாதிக்கப்பட்டவன்) பாவங்களை எடுத்து அநியாயம் இழைத்தவன் மீது சுமத்தப்படும்.’ (புஹாரி)
- நபி (ஸல்) அவர்கள் தோழர்களிடம் ‘வங்குரோத்துக்காரன் ‘முப்லிஸ்’ என்றால் யார் தெறியுமா?.’ என்று கேட்டார்கள்?. அதற்கு தோழர்கள் ‘திர்ஹமோ, சொத்துக்களோ இல்லாதவன்’ என்று பதில் அளித்தார்கள், அப்போது நபியவர்கள்; ‘எனது உம்மத்தில் வங்குரோத்துக்காரன் மறுமை நாளில் தொழுகை, நோன்பு, ஸகாத் போன்றவற்றின் நன்மையோடு வருவான், அவனோ ஒருவனுக்கு ஏசியவனாக, இட்டுக்கட்டியவனாக, ஒருவனின் சொத்தை அனியாயமாக சாப்பிட்டவனாக, ஒருவனின் இரத்தத்தை ஓட்டியவனாக, ஒருவனுக்கு அடித்தவனாக வருவான்,, அப்போது பாதிக்கப்பட்டவனுக்கு அநியாயம் இலைத்தவனின் நன்மைகள் பங்கு வைக்கப்படும், நன்மைகள் முடியும் பட்சத்தில் பாதிக்கப்பட்டவனின் தீமைகளை எடுத்து அநியாயம் இலைத்தவனின் மீது சுமத்தப்பட்டு, பின்பு அநியாயம் இலைத்தவன் (தொழுகை, நோன்பு, ஸகாத் போன்றவற்றின் நன்மையோடு வந்தவன்) நரகில் வீசப்படுவான். (முஸ்லிம்)
- அதில் விஷேடமாக கடன் சம்பந்தப்பட்டிருந்தால் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்,
- நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு ஷஹீதின் கடனைத்தவிர உள்ள எல்லா பாவங்களும் மண்ணிக்கப்படுகின்றன.’ (முஸ்லிம்)
- இதுபோன்ற விடயங்களை நிறைவேற்ற முடியாத நிலையில் இருந்தால் அவற்றை விரைவாகவே உயில் (வசீய்யத்தாக) எழுதி வைத்துவிட வேண்டும், அது கட்டாய மும்கூட.
- நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘வசீய்யத் செய்ய விரும்பும் ஒரு முஸ்லிம், அதை எழுதி தன் தலைமாட்டில் வைத்துக்கொல்லாமல், இரண்டு இரவுகளைக் கழிப்பது அவனுக்கு தகுந்ததல்ல.’ இப்னு உமர் (றழி) கூறினார்கள் : நபியவர்களிடத்திலிருந்து இந்த செய்தியைக் கேட்டதிலிருந்து எனது வசீய்யத் என்னிடம் இல்லாமல் ஒரு இரவும் என்னைத் தாண்டியதில்லை. (புஹாரி, முஸ்லிம்)
- சொத்துக்களைப் பற்றி வசீயத் செய்வதாக இருந்தால் சொத்தில் மூன்றில் ஒரு பகுதியைத்தான் வசீய்யத் செய்ய வேண்டும், மாறாக சொத்துக்கள் அனைத்தையும் வசீய்யத் செய்யக்கூடாது.
- சஃத் பின் அபீ வக்காஸ் (றழி) அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்தபொழுது நபியவர்கள் நோய் விசாரிக்கச் சென்றார்கள், அப்பொது சஃத் அவர்கள், ‘அல்லாஹ்வின் தூதரே! எனக்கு நிறைய சொத்துக்கள் இருக்கின்றன, ஒரு பெண் பிள்ளையைத் தவிர அனந்தரக்காரர்களும் எனக்கில்லை, எனவே எனது சொத்தில் மூன்றில் இரண்டு பகுதியை வசீயத் செய்துவிடவா?’ என்று கேட்க, வேண்டாம் என்று நபியவர்கள் கூற, ‘அறைவாசியை வசீய்யத் செய்யவா? என்று கேட்ட போதும் வேண்டாம், என்று கூற, மூன்றில் ஒரு பகுதியில் முடியுமா? என்று கேட்டபோது, ‘ மூன்றில் ஒரு பகுதியை வசீய்யத் செய், அதுவும் அதிகம்தான்.’ என்று கூறிவிட்டு, ‘ சஃதே உனது அனந்தரக் காரர்களை மக்களிடம் கை ஏந்தும் நிலையில் விடுவதை விட வசதி வாய்ப்போடு பணக்காரர்களாக விட்டுச் செல்வது சிறந்தது,என்று கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்)
- வசீய்யத் செய்யும் போது இரண்டு சாட்சிகளை வைப்பது அவசியமாகும்.
- ஈமான் கொண்டவர்களே! உங்களில் யாருக்கேனும் மரணம் சமீபித்து (அவர் மரணசாஸனம் கூற விரும்பினால்) அச்சமயத்தில் உங்களுக்குள் நம்பிக்கைக்குரிய இரண்டு சாட்சிகள் இருக்கவேண்டும்; அல்லது உங்களில் எவரும் பூமியில் பிரயாணம் செய்து கொண்டிருக்கும்போது மரணம் சமீபித்தால் (அப்போது முஸ்லிம்களாக இரு சாட்சிகள் கிடையாவிடின்) உங்களையல்லாத வேறிருவர் சாட்சியாக இருக்கட்டும்; (இவர்கள் மீது) உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால் இவ்விருவரையும் (அஸரு) தொழுகைக்குப் பின் தடுத்து வைத்துக் கொள்ளவும்; இவ்விருவரும் “நாங்கள் (சாட்சி) கூறியது கொண்டு யாதொரு பொருளையும் நாங்கள் அடைய விரும்பவில்லை; அவர்கள், எங்களுடைய பந்துக்களாயிருந்த போதிலும், நாங்கள் அல்லாஹ்வுக்காக சாட்சியங்கூறியதில் எதையும் மறைக்கவில்லை; அவ்வாறு செய்திருந்தால் நிச்சயமாக நாங்கள் பாவிகளாயிவிடுவோம்“ என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறவேண்டும். நிச்சயமாக அவ்விருவரும் பாவத்திற்குரியவர்களாகி விட்டார்கள் என்று கண்டு கொள்ளப்பட்டால், அப்போது உடைமை கிடைக்க வேண்டும் எனக் கோருவோருக்கு நெருங்கிய உறவினர் இருவர் (மோசம் செய்துவிட்ட) அவ்விருவரின் இடத்தில் நின்று: “அவ்விருவரின் சாட்சியத்தைவிட எங்களின் சாட்சியம் மிக உண்மையானது; நாங்கள் வரம்பு மீறவில்லை; (அப்படி மீறியிருந்தால்) நாங்கள் அநியாயக்காரர்களாகி விடுவோம்” என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூற வேண்டும். இ(வ்வாறு செய்வ)து அவர்களுடைய சாட்சியத்தை முறைப்படி, கொண்டு வருவதற்கும், அல்லது (அவர்களும் பொய்ச் சத்தியம் செய்திருந்தால்) அது மற்றவர்களின் சத்தியத்திற்குப் பின்னர் மறுக்கப்பட்டுவிடும் என்பதை அவர்கள் பயப்படுவதற்கும் இது சுலபமான வழியாகும்; மேலும், அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து (அவன் கட்டளைகளை) கவனமாய்க் கேளுங்கள் – ஏனென்றால் அல்லாஹ் பாவம் செய்யும் மக்களுக்கு நேர்வழி காட்டமாட்டான். (அல் குர் ஆன் 05: 106 – 108)
- தவராக பிழையாக வசீய்யத் செய்தால் அதை நிறைவேற்ற வேண்டிய தில்லை, இஸ்லாமிய முறைப்படி நிறைவேற்றினால் போதுமானது.
- இம்ரான் பின் ஹுஸைன் (றழி) கூறினார்கள்: ஒரு மனிதர் மரணத் தருவாயில் (அவரிடமிருந்த) ஆறு அடிமைகளையும் உரிமையிட்டார், அவரது அனந்தரக்காரர்கள் நபிகளாரிடம் வந்து, அவர் செய்ததை முறைப்பாடு செய்தார்கள், நபியவர்கள்: ‘அவர் அப்படி செய்தாரா?, அல்லாஹ்வின் நாட்டத்தினால் அதை நாம் அறிந்தால் அவருக்காக தொழுதிருக்கமாட்டோம்,’என்று கூறி விட்டு, ஆறு பேருக்கிடையிலும் துண்டு குழுக்கிப் பார்த்து, இரண்டு பேரை விடுதலை செய்துவிட்டு, நான்கு பேரை திருப்பி அடிமையாக்கினார்கள். (அஹ்மத், முஸ்லிம்)
- இன்று ஜனாசாக் கடமைகளுல் நிறையவே பித்அத்கள் நடை பெருவதனால், அவற்றை செய்யக்கூடாது என வஸீய்யத் செய்வது மிக அவசியமான ஒன்றாகும். அப்போதுதான் அவற்றை தடுக்கவும், ஒழிக்கவும் முடியும்.
- சஃத் பின் அபீவக்காஸ் (றழி) அவர்கள் மரணப்படுக்கையில் கூறினார்கள், நபிகளாருக்கு செய்யப்பட்டது போன்று எனக்காக புள்ளைக் குழி தோண்டுங்கள், என் கப்ரின் மீது கல்லை நட்டுங்கள். (முஸ்லிம்)