ஹலால் என்றால் என்ன?

بسم الله الرحمن الرحيم

ஹலால் என்றால் என்ன?

ஹலால் என்ற சொல் இன்று முஸ்லிம் அல்லாதவர்களின் நாவுகளிலும் கூட அதிகமாக உச்சரிக்கப்படும் ஒரு வார்த்தையாக மாறிவிட்டது. ஹலால் என்ற சொல் ஆகுமாக்கப்பட்டது, அனுமதிக்கப்பட்டது என்ற அறுத்தத்தை கொண்டிருப்பதோடு, ‘ஹராம்’ தடுக்கப்பட்டது, அனுமதிக்கப்படாதது என்ற சொல்லை எதிர்ப்பதமாகவும் கொண்ட ஒரு சொல்லாகும்.

இந்த ஹலால் என்பது சில மாற்றுமத சகோதரர்களால் “அல்லாஹ்வுக்காக அறுக்கப்பட்டதும், கொடுக்கப்பட்டதுமாகும்” என்று வரைவிளக்கணப் படுத்தப்பட்டுள்ளது. இது தவறாகும். ஏனெனில் ஹலால் என்பதை ஒரு வார்த்தையால் விளங்கப்படுத்த முடியாத அளவு விசாலமான கறுத்தைக் கொண்ட ஒரு சொல்லாகும். சுறுக்கமாக சொல்வதானால் இஸ்லாமிய மார்க்கப்படி “ஒரு மனிதனின் நலவுக்காக எதுவெல்லாம் இறைவனால் உபயோகிக்க அனுமதிக்கப்பட்டதோ அது ஹலால் (நல்லது)” என்றும், “இறைவனால் உபயோகிக்க தடுக்கப்பட்டவை ஹராம்” என்றும் கூறமுடியும்.

  • எவர்கள் எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய நம் தூதரைப் பின்பற்றுகிறார்களோ – அவர்கள் தங்களிடமுள்ள தவ்ராத்திலும் இன்ஜீலிலும் இவரைப் பற்றி எழுதப் பட்டிருப்பதைக் காண்பார்கள்; அவர், அவர்களை நன்மையான காரியங்கள் செய்யுமாறு ஏவுவார்; பாவமான காரியங்களிலிருந்து விலக்குவார்; தூய்மையான ஆகாரங்களையே அவர்களுக்கு ஆகுமாக்குவார்; கெட்டவற்றை அவர்களுக்குத் தடுத்து விடுவார்;…..(7:157)
  • “என் இறைவன் ஹராம் எனத் தடுத்திருப்பவையெல்லாம், வெளிப்படையான அல்லது அந்தரங்கமான, மானக்கேடான செயல்கள்; பாவங்கள்; நியாயமின்றி (ஒருவருக்கொருவர்) கொடுமை செய்வது ஆதாரமில்லாமலிருக்கும் போதே; நீங்கள் அல்லாஹ்வுக்கு இணைகற்பித்தல், நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது (பொய்யாகக்) கூறுவது (ஆகிய இவையே என்று நபியே!) நீர் கூறுவீராக. (7:33)

இந்த அடிப்படையில் உலகில் படைக்கப்பட்டுள்ள அனைத்தும் மனித குளத்தின் பயண்பாட்டிற்காகவே அல்லாஹ் படைத்துவைத்திருக்கின்றான். அல்லாஹ் கூறுகின்றான்:

      هُوَ الَّذِي خَلَقَ لَكُم مَّا فِي الْأَرْضِ جَمِيعًا ثُمَّ اسْتَوَىٰ إِلَى السَّمَاءِ فَسَوَّاهُنَّ سَبْعَ سَمَاوَاتٍ ۚ وَهُوَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ

  • அ(வ்விறை)வன் எத்தகையவன் என்றால் அவனே உலகத்திலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான்;…………..(2:29)

இந்த வசனத்தின் மூலம் அது தெளிவாக விளங்குகின்றது. எனவே ஹலாலை பட்டியலிட்டு  கூற முடியாது. அந்த அடிப்படையில் ஹராமான தடுக்கப்பட்ட விடையங்கள் எவை என்பதைக் கண்டறிவதே ஹலாலை கணடறிவதற்கான வழியாகும். இப்படியில்லாமல் ஹாலாலை கணடறியவோ, பட்டியலிடவோ முற்பட்டல் அது கஸ்டமான காரியமாக போய்விடும். மேலும் இஸ்லாம் இன்னின்ன பொருட்கள் ஹலால் என்று தெளிவு படுத்தாமல், ஹராமானவற்றையே தெளிவுபடுத்தி இருக்கின்றது. அந்த அடிப்படையில்

  • நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘அனுமதிக்கப் பட்டவையும் (ஹலால்) மிகத் தெளிவானவை. மேலும் அனுமதிக்கப்படாதவையும் (ஹராம்) தெளிவானவையாய் இருக்கின்றன. இவ்விரண்டிற்கும் இடையில் சந்தேகத்திற்கு இடமானவையும் இருக்கின்றன அவற்றை மக்களில் பெரும்பாலலோர் அறிய மாட்டார்கள். எனவே, சந்தேகத்திற்கு இடமானவற்றைத் தவிர்த்துக் கொள்கிறவர் தம் மார்க்கத்திற்கும் தம் மானம் மரியாதைகளுக்கும் களங்கம் ஏற்படுத்துவதிலிருந்து விலம் விடுகிறார். சந்தேகத்திற்கிடமானவைகளில் விழுகிறவர் வேலியோரங்களில் (கால் நடைகளை) மேய்ப்பவரைப் போன்றவராவார். அவர் வேலிக்குள்ளேயே (கால்நடைகளை) மேயவிட நேரும். எச்சரிக்கை! ஒவ்வொரு மன்னனுக்கும் ஓர் எல்லை இருக்கிறது. எச்சரிக்கை! நிச்சயம் அல்லாஹ்வின் பூமியில் அவனுடைய எல்லைகள் அவனால் தடை செய்யப்படடவையாகும். எச்சரிக்கை! உடலில் ஒருசதைத் துண்டு இருக்கிறது. அது சீர் பெற்று விட்க்டல் உடல் முழுவதும் சீர் பெற்று விடும். அது சீர் குலைந்துவிட்டால் முழு உடலும் சீர்குலைந்து விடும். புரிந்து கொள்ளுங்கள். அதுதான் இதயம்!’  (புஹாரி: 52, முஸ்லிம்)

எனவே அல்லாஹ்வுக்கு கட்டுப்படும் ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை அல்லாஹ் அனுமதித்த ஹலாலை பயண்படுத்துபவனாகவும், ஹராத்தை தவிர்ந்து நடப்பவனாகவும் இருப்பான். ஹலாலா, ஹராமா என்று தெளிவில்லாத ஒரு நிலை இருக்குமானால் அதனை விட்டுவிடுவதே ஒரு முஸ்லிமுக்கு நல்லதும், அழகானதுமாகும்.

மேலும் அனுமதித்த ஹலால் என்பது உணவு வகையோடு மாத்திரம் சுறுங்கிய ஒன்றல்ல, மாறாக அது உணவோடு சம்பந்தப்படுவது போன்று பொருளாதாரத்தோடும், பண்பாடுகளோடும் சார்ந்திருக்கின்றது என்பதையும் நாம் விளங்கிக்கொள்ளவேண்டும். அந்த அடிப்படையில் பொருளாதார ரீதியில் மனிதனுக்கு தீங்கிளைத்து, மாற்றானின் சொத்தை சூரையாடும்  வழிகளான வட்டி, சூது, இலஞ்சம், ஏமாற்று, கலப்படம், வாக்குமீரல், கலவு போன்ற அனைத்தையும் ஹராமாக்கி தடுத்திருப்பதுடன் பொறும்பாவமாகவும் கறுதுகின்றது இஸ்லாம்.

  • يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَذَرُوا مَا بَقِيَ مِنَ الرِّبَا إِن كُنتُم مُّؤْمِنِينَ
  • ஈமான் கொண்டவர்களே! நீங்கள் உண்மையாக முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வுக்கு அஞ்சியடங்கி, எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள்.
  • فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ ۖ وَإِن تُبْتُمْ فَلَكُمْ رُءُوسُ أَمْوَالِكُمْ لَا تَظْلِمُونَ وَلَا تُظْلَمُونَ
  • இவ்வாறு நீங்கள் செய்யவில்லையென்றால் அல்லாஹ்விடமிருந்தும், அவனுடைய தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)- நீங்கள் தவ்பா செய்து (இப்பாவத்திலிருந்தும் ) மீண்டுவிட்டால், உங்கள் பொருள்களின் அசல் – முதல் – உங்களுக்குண்டு; (கடன்பட்டோருக்கு) நீங்கள் அநியாயம் செய்யாதீர்கள், – நீங்களும் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள். 2:279
  • (நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்: “அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது” (2:219)
  • ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள் உணவுக் குவியல் ஒன்ருக்குப் பக்கத்தால் நடந்து சென்ற போது, அதற்குள் கையை நுளைத்தார்கள், அப்போது நபிகளாரின் கையில் ஈரம் பட, ‘உணவின் சொந்தக்காரனே! இது என்ன?’ என்று கேட்டார்கள். அதற்கவர்; ‘அல்லாஹ்வின் தூதரே மலை பொழிந்து (தண்ணீர் பட்டு)விட்டது’ என்று கூற, நபியவர்கள்: ‘அதனை மக்கள் பார்வைக்கு தென்படும் அளவுக்கு மேலாக வைத்திருக்கலாமே, யார் ஏமாற்றுகின்றாரோ அவர் என்னைச் சார்ந்தவரல்லர்.’ என்று கூறினார்கள். (முஸ்லிம்)
  • அப்துல்லாஹிப்னு அம்ர் (றழி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்; இலஞ்சம் கொடுப்பவனையும், எடுப்பவனையும் சபித்தார்கள். (அபூதாவுத்:3582, திர்மிதீ)

இப்படி ஏறாலமான பொருளாதாரத்தில் விடப்படும் தவறுகளை இஸ்லாம் மனித சமூகத்தின் நலன் கறுதி ஹராமாக தடுக்கப்பட்டதாக ஆக்கியிருக்கின்றது.

அதே போன்று பண்பாட்டு ரீதியாக மனிதனை நாசப்படுத்தி, மானத்தை சீரழித்து, உரிமையில் பாதிப்பை ஏற்படுத்தும் கோபித்தல், பொய் பேசுதல், மோசமான வார்த்தைகளை (தூசனம்) பேசுதல், புறம், கோள் போன்ற அனைத்தையும் தடுத்து ஹராமாக்கியிருக்கின்றது. மேலும் பார்க்கக் கூடாத (சினிமா, நாடகம் போன்ற அந்நியப் பெண்கள் காட்சி தறுப) வற்றையும் தடுத்து ஹராமாக்கியிருக்கின்றது.

  • (நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்; நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்.31.இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது; இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்;…………..(24:30,31)
  • முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன். (49:12)
  • நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கோள் செல்பவன் சுவனம் நுளைய மாட்டான். (முஸ்லிம்)

இப்படி பண்பாட்டு ரீதியான சீரழிவுகளுக்கும் இஸ்லாம் ஹராம் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

அடுத்து உணவு,பாணம் ஆகியவற்றை எடுத்து நோக்கினால் அவற்றிலும் இதுதான் ஹலால் என்று பட்டியலிட்டுச் சொல்லாமல் ஹராத்தையே குறிப்பிட்டு தெளிவு படுத்துகின்றது. ஒரு முஸ்லிம் ஹராத்தை விளங்கிக் கொண்டால் மற்ற அனைத்தும் ஹலால் என்பதை தெளிவாக விளங்கிக் கொள்வான். அந்த அபிப்படையில் மிறுகங்களில் வேட்டைப் பல் உள்ளவற்றையும், பறவைகளில் கால்களால் பிடித்துக் கொண்டு சொண்டினால் மாமிசங்களை கீரிக் கிழித்து சாப்பிடுபவற்றையும், மனிதனுக்கு தீங்கிழைப்பவற்றையும், உணவாக உற்கொள்ள மனிதன் வெறுப்பவற்றையும், தானாக செத்தவற்றையும், பாணங்களில் மதுபாணம், போதை வஸ்துக்களையும், மனிதனுக்கு தீங்கிழைக்கும் புகைத்தல் பாவனை போன்றவற்றையும் பொதுவாக தடுத்து ஹராமாக்கியிருப்பதோடு, பன்றி, கழுதை, இரத்தம் ஆகியவற்றை குறிப்பிட்டும் தடுத்துள்ளது. இவைகளுக்கு அப்பால் நோக்கினால், அல்லாஹ்வை கடவுளாக ஏற்றிருக்கும் ஒரு முஸ்லிம் ஒரு உயிரை அறுத்துப் பலியிடுவதாக இருந்தால் அல்லாஹ்வின் பெயர் கூறியே அறுக்கவேண்டும், அவற்றையே சாப்பிடவும் வேண்டும். அந்த வகையில் அல்லாஹ் அல்லாதவர்களின் பெயர் கூறி அறுக்கப்பட்டவற்றையும், அல்லாஹ் அல்லாதவர்களுக்கு படையல் செய்யப்பட்டவற்றையும் உணவில் இஸ்லாம் தடுத்து ஹராமாக்கியிருக்கின்றது. இந்த வகை ஹராம் மாத்திரமே முஸ்லிம்களின் கொள்கை சார்ந்த ஹராமாக இருக்கின்றது என்பதை புறிந்துகொண்டு, மற்ற வகை அனைத்தும் முலு மனித சமூகத்திற்கும் பொறுத்தமானதே. முஸ்லிம் அல்லாதவர்கள் விறும்பினால் ஏற்கலாம் மறுக்கலாம் என்பதையும் நாம் அறிந்து வைக்கவேண்டும்.

  • இப்னு அப்பாஸ் (றழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் வேடைப் பிராணிகளில் வேட்டைப் பல் உள்ளவற்றையும், பறவைகளில் கீரிக்கிலிக்கும் நகங்களையுடையதையும் தடுத்தார்கள்.  புகாரி: வேட்டை மிறுகம் மட்டும்: 5207, முஸ்லிம்)
  • அனஸ் (றழி)அவர்கள் அறிவித்தார்கள் : நபி(ஸல்) அவர்கள் கைபருக்குக் காலை நேரத்தில் வந்து சேர்ந்தார்கள். அப்போது அங்குள்ள மக்கள், தங்கள் கழுத்துகளில் மண்வெட்டிகளை மாட்டிக் கொண்டு (வயல்வெளிகளுக்குப்) புறப்பட்டு விட்டிருந்தார்கள். நபி(ஸல்) அவர்களைப் பார்த்ததும், ‘முஹம்மதும் (அவரின்) ஐந்து வியூகங்கள் கொண்ட படையினரும் வந்துள்ளனர்” என்று கூறினர். உடனே, கோட்டைக்குச் சென்று அடைக்கலம் புகுந்தனர். அப்போது நபி(ஸல்) அவர்கள் தம் இரண்டு கைகளையும் உயர்த்தி, ‘அல்லாஹு அக்பர்! கைபர் பாழ்படட்டும்! நாம் ஒரு சமுதாயத்தினரின் (போர்க்) களத்தில் இறங்கி விடடோமென்றால் எச்சரிக்கப்படுகிற அவர்களின் காலை நேரம் மிகக் கெட்டதாகி விடும்” என்று கூறினார்கள். எங்களுக்குக் கழுதைகள் சில கிடைக்கவே அவற்றை நாங்கள் சமைத்தோம். நபி(ஸல்) அவர்களின் அறிவிப்பாளர், ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் கழுதைகளின் இறைச்சிகளை உண்ணத் தடை விதிக்கிறார்கள்” என்று (உரக்கக்) கூவி அறிவித்தார். உடனே, பாத்திரங்கள் அவற்றிலிருந்த இறைச்சிகளுடனேயே கவிழ்க்கப்பட்டுவிட்டன. (புஹாரி:2991…,முஸ்லிம்)
  • (தானாகச்) செத்தது, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாததின் பெயர் அதன் மீது கூறப்பட்ட (அறுக்கப்பட்ட)தும், கழுத்து நெறித்துச் செத்ததும், அடிபட்டுச் செத்ததும், கீழே விழுந்து செத்ததும், கொம்பால் முட்டப் பட்டுச் செத்ததும், (கரடி, புலி போன்ற) விலங்குகள் கடித்(துச் செத்)தவையும் உங்கள் மீது ஹராமாக்கப் பட்டிருக்கின்றன;….(5:3)
  • எதன்மீது. (அறுக்கும்போது) அல்லாஹ்வின் பெயர் கூறப்படவில்லையோ அதைப் புசியாதீர்கள் – நிச்சயமாக அது பாவமாகும்;….(6:121)

குறிப்பு: இந்த கடைசி வகை ஹலாலையே, இன்றைய இஸ்லாத்தினதும், இலங்கை மக்களினதும் விரோதக் கும்பல் ஹலாலுக்கு வரைவிளக்கணமாக கூறி மக்களை துண்டாட முயற்சிக்கின்றது.

மேலும் ஹராம் என்பதன் பட்டியல் எந்தளவு விசாலமானது என்றால் (மாற்றுமத சகோதரர்கள் நினைப்பது போன்றல்ல) மனிதன் பெறுமதியாகக் கறுதும் தங்கம், வெள்ளி பாத்திரத்தில் உண்ணுவது பருகுவது, ஒரு ஆணைப் பொறுத்தவரை, தங்கம், வெள்ளி, பட்டு அணிவது ஹராமாகும். இந்த இன்பங்களையெல்லாம் அல்லாஹ்வுக்காக விடுவதை ஒரு முஸ்லிம் ஒரு போது சுமையாக கறுதவேமாட்டான். எனவே முஸ்லிம்களை திட்ட முயற்சிப்பவர்கள், முஸ்லிம்கள், ஹராம் இன்பமாக இருந்தாலும் அவர்கள் அல்லாஹ்வுக்காக விட்டுவிடுவார்கள் என்பதை புறிந்துகொள்ளவேண்டும்.

  • நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எந்த மனிதன் தங்க, வெள்ளி பாத்திரத்தில் உண்டு, பருகுகின்றாரோ   அவர் நரக நெறுப்பையே தன் வயிற்றில் விழுங்குகின்றார். (முஸ்லிம்)
  • அலி (றழி) அவர்கள் கூறினார்கள்:  நபி (ஸல்) அவர்கள் தன் வலக் கரத்தில் பட்டையும், இடது கையில் தங்கத்தையும் வைத்தவாறு, ‘நிச்சியமாக இந்த இரண்டும் எனது உம்மத்தில் ஆண்களுக்கு ஹராமாக்கப்பட்டதாகும்.’ (அபூதாவுத்: 4059, திர்மிதீ)

எனவே இந்த அடிப்படையில் ஹராம் எவை என்பதை தெளிவாக விளங்கினால் ஹலாலை தெளிவாக விளங்கிக் கொள்ளலாம். மேலும் ஹாராமான ஒரு பொருள் ஹாலாலான ஒரு பொருளோடு கலந்திருந்தால் அதற்கும் ஹராம் என்ற தீர்ப்பே வரும் என்பதையும் நாம் விளங்கிக் கொள்ளவேண்டும்.

அடுத்து ஒன்று ஹராமாகின்றது என்றால் அதற்கான காரணத்தைக் கண்டறிய முற்படும் போது அதனை பல வழிகளில் நோக்கமுடியும், மாறாக இஸ்லாம் தடை செய்வதற்கான காரணத்தை தெளிவாக கூறியிருந்தாலே தவிர ஒரு காரணத்தைக் கூற முடியாது.

ஹராம் என்று தீர்மானிப்பதற்கான காரணம்

அடுத்து ஒன்று ஹராமாகின்றது என்றால் அதற்கான காரணத்தைக் கண்டறிய முற்படும் போது அதனை பல வழிகளில் நோக்கமுடியும், மாறாக இஸ்லாம் தடை செய்வதற்கான காரணத்தை தெளிவாக கூறியிருந்தாலே தவிர ஒரு காரணத்தைக் கூற முடியாது. அந்த அடிப்படையில் தடைசெய்யப்படுவதற்கான காரணிகளை பின்வருமாறு நோக்கலாம்.

1- பிறருக்கு தீங்கிளைக்கக்கூடியது. (உ-ம்: கலவு, ஏமாற்று, வட்டி, கற்பழிப்பு….)

2- தனக்குத் தானே தீங்கிளைப்பது. (உ-ம்: போதைப் பாவனை, புகைத்தல் பாவனை, நச்சுப் பதார்த்தங்களைப் பாவிப்பது, விபச்சாரம், தற்கொலை….)

3- காரண காரியங்களுக்கு அப்பால் சென்று இறைவனால் படைக்கப்பட்ட மனிதன் அவனுக்கு மனிதன் கட்டுப்படுகின்றானா என்பதை வெளிப்படுத்துவதற்காக தடை செய்யப்பட்டது. இதைப் பொருத்த வரை அல்லாஹ் காரணத்தைக் கூறித் தராத பொழுது மனிதனும் அல்லாஹ்வுக்கு கட்டுப் படுவதற்காக அவற்றைத் தவிர்த்தே ஆக வேண்டும். இது இஸ்லாத்தின் அடிப்படை சார்ந்த (அல்லாஹ் அல்லாதவர்களுக்கு பலியிடப்பட்டவை,படையல் செய்யப்பட்டவை) போன்ற அம்சமாக இருக்கலாம், அல்லது உணவு வகை, பாணம் (பன்றி, கழுதை, செத்த மிறுகம்) போன்றவைகளாக இருக்கலாம். இவற்றுக்கு சுகாதார ரீதியாகவோ, விஞ்ஞான ரீதியிலோ காரணங்கள் இருப்பின் அது ஆய்வுகளின் முடிவுகளாக இருக்குமே அல்லாமல் அதுதான் தடைக்கான காரணமாக இருக்காது. எனவே காரணம் தேடுவதை விடவும் அல்லாஹ்வுக்கு கட்டுப் படுவதற்காக விடுவதே ஒரு முஸ்லிமுக்கு நல்லதாகும்.

  • முஃமின்களிடம் அவர்களுக்கிடையே (ஏற்படும் விவகாரங்களில்) தீர்ப்புக் கூறுவதற்காக அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் (வரும்படி) அழைக்கப்பட்டால், அவர்கள் சொல்(வது) எல்லாம் “நாங்கள் செவியேற்றோம், (அதற்குக்) கீழ்படிந்தோம்” என்பது தான்; இ(த்தகைய)வர்கள் தாம் வெற்றியடைந்தவர்கள்.52. இன்னும் எவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்படிந்து அல்லாஹ்வுக்கு பயபக்தி கொள்கிறார்களோ அவர்கள் தாம் வெற்றி பெற்றவர்கள். (24:51,52)
  • மேலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை; ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள். (33:36)

எனவே இவ்வளவு தெளிவு படுத்தப்படவேண்டிய அம்சமான இந்த விவகாரம் குறுகிய நோக்கத்தில் தெளிவு படுத்தப்படும் போதே அது பிரச்சிணைக்கு காரணமாக ஆகிவிடுகின்றது. எனவே இஸ்லாம் எதனையும் தெளிவின்றி கூறவில்லை என்பதை புறிந்து, மாற்றுமத சகோதரர்களுக்கு நல்லதொரு தெளிவை முஸ்லிம்களாகிய நாம் வளங்கும் போது பிரச்சினையைத் தீர்க்கலாம்.

ஹலால் செட்டிபிக்கட் ஒர் நோக்கு

அடுத்து பிரச்சினைக்குறிய ஒரு விடையமாக தீய சக்திகளால் முன்வைக்கப்படும் இந்த ஹலால் செட்டிபிக்கட் விவகாரம் பற்றி நாம் நோக்குவோமாக இருந்தால், அது ஜம்இய்யதுல் உலமாவினால் (அறிஞர்கள்  சபை) நாட்டு நலனுக்காகவும், மாற்றுமத சகோதரர்களின் பொருளாதார நலனுக்காகவும், (இதற்கு மிகப் பெறும் சான்று,  வெண்டோல் லங்கா நிறுவனம் வீரகேசரிக்கு வளங்கிய கட்டுரை) முஸ்லிம்களின் நலனுக்காகவும் மேற்கொள்ளப்பட்ட ஒரு நல்ல முயற்சியாகும். இந்த விடையத்தை சரியாக புரிந்து கொண்டால் ஹலால் செட்டிபிக்கட் விவகாரம் இலங்கையில் வாழும் மாற்றுமத சகோதரர்களுக்கு ஒரு பிரச்சினையே அல்ல.

அடுத்து ஹலால் செட்டிபிக்கட் விவகாரம் முஸ்லிம்களின் உரிமையாகவும் கறுதப்படுகின்றது, இதுவும் தவறாகும். ஏனெனில் ஜம்இய்யதுல் உலமாவினால் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதற்கு முன்னரும் முஸ்லிம்கள் ஹலாலையே உபயோகித்தனர். மேலும் அது முஸ்லிம்களின் உரிமையாக இருந்தால் அதை வழங்க எப்படி பணம் அறவிட முடியும்?, மேலும் அதனை மாற்றுமதத்தவர்களின் கொம்பணிகளுக்கு எப்படி வழங்க முடியும்?, மேலும் அப்படி உரிமையாக இருந்திருந்தால் ஒட்டுமொத்த இலங்கை முஸ்லிகளின் கறுத்தைக் கேட்காமல் ஜம்இய்யாவினால் மாத்திரம் எப்படி அதனை வாபஸ் பெற முடியும்?. (ஆனாலும் முஸ்லிம்களினதும், அரசினதும், மாற்றுமத நிருவணங்களினதும் நலனுக்காக ஜம்இய்யாவின் சொந்த முயற்சியினால் வழங்கப்பட்ட அது அவர்களாலே எடுக்கவும் பட்டது என்பதை முஸ்லிம்கள் நன்றாக விளங்குவதோடு, முஸ்லிம்களின் உரிமை என்று உரத்துப் பேசிவிட்டு வாபஸ் வாங்கியது மிகப்பெறும் தவராகும், இதனால் உண்மையில் உரிமையான விடையங்கள் பாதிக்கப்படலாம்.)

எனவே இந்தக் கேள்விகளுக்கு தெளிவான பதில் இல்லாமல் அதனை முஸ்லிம்களின் உரிமை என்று எப்படி கூற முடியும்? மேலும் இந்த ஹலால் செட்டிபிக்கட் கொடுக்கப்பட்டதால் எப்படி முஸ்லிம்கள் பயனடைந்தனரோ அவ்வாரே இலங்கை அரசும், மாற்றுமத் கம்பணிகளும் பயனடைந்தன. என்வே இது அடிப்படையில் இலங்கை மக்களுக்கான ஒரு சேவையே என்பதை ஒவ்வொருவரும் புறிந்துகொள்வதோடு, இதன் மூலம் முஸ்லிம்கள் இழகுவான முறையில் ஹலாலை அறிந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது என்பதை மறந்துவிடவும் கூடாது. (எனவே சொந்த முயற்சியால் மேற்கொள்ளப்பட்ட இந்த விவகாரத்தை உரிமைக் குரல் எழுப்பி முஸ்லிம்களின் தலையில் மாத்திரம் போடாமல், கம்பணிகளின்மீதும் அலுத்தமாக விட்டிருந்தால் அவர்களை வைத்தே எதிர் சக்தியை அடக்கியிருக்கலம். அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்.) மீண்டும் முஸ்லிம்கள் அறியவேண்டியது, இது முஸ்லிம்களின் உரிமையாக இருந்தால் ஒருபோதும் ஜம்இயாவால் இதனை விட்டுக் கொடுக்கமுடியாது.

ஹலால் இலற்சினை எதற்காக

அடுத்து ஜம்இய்யாவின் இந்த முயற்சி எதற்காக என்று நோக்கினால்! இன்றைக்கு சந்தைப்படுத்தப்படும் நிறைய பொருட்களில் பன்றியின் பாகங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இதனை கண்டறிவதும், அறுக்கப்படும் வகையாக இருந்தால் முறையாக அறுக்கப்படுகின்றதா என்பதை கண்டறிவதும், ஹராமான பொருட்கள் ஹலாலோடு கலக்கப்படுகின்றதா என்பதை கண்டறிவதுமாகும். இந்த முயற்சிக்குப் பின்னரே ஹலால் இலச்சினை இடப்படுகின்றது. (இந்த விடையத்தில் நேர்மையாக நடந்திருந்தால் அல்லாஹ்வே அவர்களுக்கு பூரண கூழியை வழங்கவேண்டும்.)

எனவே ஹராத்திலிருந்து ஹலாலை வேறுபிறிக்கும் இந்த முயற்சி இல்லாவிட்டாலும் அதற்கான வழிகாட்டலை இஸ்லாம் வழங்கத் தவரவில்லை.

  • நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘அனுமதிக்கப் பட்டவையும் (ஹலால்) மிகத் தெளிவானவை. மேலும் அனுமதிக்கப்படாதவையும் (ஹராம்) தெளிவானவையாய் இருக்கின்றன. இவ்விரண்டிற்கும் இடையில் சந்தேகத்திற்கு இடமானவையும் இருக்கின்றன அவற்றை மக்களில் பெரும்பாலலோர் அறிய மாட்டார்கள். எனவே, சந்தேகத்திற்கு இடமானவற்றைத் தவிர்த்துக் கொள்கிறவர் தம் மார்க்கத்திற்கும் தம் மானம் மரியாதைகளுக்கும் களங்கம் ஏற்படுத்துவதிலிருந்து விலம் விடுகிறார். சந்தேகத்திற்கிடமானவைகளில் விழுகிறவர் வேலியோரங்களில் (கால் நடைகளை) மேய்ப்பவரைப் போன்றவராவார். அவர் வேலிக்குள்ளேயே (கால்நடைகளை) மேயவிட நேரும். எச்சரிக்கை! ஒவ்வொரு மன்னனுக்கும் ஓர் எல்லை இருக்கிறது. எச்சரிக்கை! நிச்சயம் அல்லாஹ்வின் பூமியில் அவனுடைய எல்லைகள் அவனால் தடை செய்யப்படடவையாகும். எச்சரிக்கை! உடலில் ஒருசதைத் துண்டு இருக்கிறது. அது சீர் பெற்று விட்க்டல் உடல் முழுவதும் சீர் பெற்று விடும். அது சீர் குலைந்துவிட்டால் முழு உடலும் சீர்குலைந்து விடும். புரிந்து கொள்ளுங்கள். அதுதான் இதயம்!’  (புஹாரி: 52, முஸ்லிம்)

எனவே ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை எப்போதும் தெளிவானதையே பின்பற்றவும், உண்ண, பறுகவும் வேண்டும். தெளிவற்ற, சந்தேகத்திற்கிடமானவற்றையும் ஒதுங்கி நடக்கவேண்டும். இதுவே ஒரு முஸ்லிமை இஸ்லாத்தில் வாழச் செய்யும் என்பதையும் ஒவ்வொரு முஸ்லிமும் உள்ளத்தில் ஆழமாக பதித்துக் கொள்ளல் வேண்டும். இனி இதை தெளிவுபடுத்துவதற்கான முயற்சியிலேயே சமூகத் தொண்டர்கள் கலமிறங்க வேண்டும்.

அல்லாஹ்வே இலங்கை முஸ்லிம்களின் உரிமைகளைப் பாதுகாத்து, முஸ்லிம்களையும் இஸ்லாத்தோடு வாழச் செய்வானாக.

வ ஆகிறு தஃவான அனில் ஹம்து லில்லாஹி றப்பில் ஆலமீன்.

M.S.M MURSSHID ABBASI

Related Posts

2 thoughts on “ஹலால் என்றால் என்ன?

  1. alhamdhulillah!arumayana vilakkam.allah ungalukum ungal kudumbathitkum arul purivanaha!idu pol anaithu sarchai halukum sariyan islamiya theervuhalai ungalidamirundhu edhirparkirom i/allah.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *