சுபஹில் மாத்திரம் குனூத் ஓதுவது நபி வழியா?

சுபஹில் மாத்திரம் குனூத் ஓதுவது நபி வழியா?

  •   நபிகளார் எதற்காக ஓதினார்கள்?

நபித் தோழர்கள் எழுபது பேர்களை முனாபிக்குகள் அளைத்துச் சென்று கொன்றபோது ஒரு மாத காலம் அவர்களை சபித்து ஓதினார்கள்.

ஆஸிம் அல் அஹ்வல்(ரஹ்)அவர்கள் கூறினார்கள்: நான், அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களிடம் தொழுகையில் குனூத்  குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ஆம்” என்று பதிலளித்தார்கள். உடனே நான், ‘ருகூவிற்கு முன்பா? அல்லது பின்பா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ருகூஉவிற்கு முன்புதான்” என்று பதிலளித்தார்கள்……. (புஹாரிள் 4096 முஸ்லிம்

 

  •  எந்தத் தொழுகைகளில் ஓதினார்கள்?

சுபஹ் உற்பட ஐந்து நேரத் தொழுகையிலும்  ஓதினார்கள்.

صحيح مسلم –

عَنِ الْبَرَاءِ قَالَ قَنَتَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- فِى الْفَجْرِ وَالْمَغْرِبِ.

பராஃ பின் ஆஸிப் (ரலி) அறிவித்தார்.

மஃரிபிலும் ஃபஜ்ரிலும் குனூத் ஓதுதல் (நபி(ஸல்) அவர்களின் காலத்தில் இருந்தது.  முஸ்லிம்

عن أبي هريرة قال

 : لأقربن صلاة النبي صلى الله عليه و سلم . فكان أبو هريرة يقنت في الركعة الأخرى من صلاة الظهر وصلاة العشاء وصلاة الصبح بعد ما يقول سمع الله لمن حمده فيدعو للمؤمنين ويلعن الكفار

அபூ ஹுரைரா ரலி அவர்கள் லுஹரிலும் இஷாவிலும் சுபஹிலும் ஸமி அல்லாஹு லிமன் ஹமிதா என்று கூற்ய பிறகு முஃமீன்களுக்கு துஆ கேட்டும், காபிர்களை சபித்தும் குனூத் ஓதிவிட்டு, இப்படித்தான் நபிகளார் தொழுகை இருந்தட்து என்று கூறுவார்கள். (புஹாரி: 764, முஸ்லிம் பராஃ பின் ஆஸிப் ரலி வழியாக,அபூதாவுத்:1445)

 

  •   சுபஹில் மாத்திரம் நபிகளார் குனூத் ஓதினார்களா?

அதற்கான ஒரே சான்றாக அஹ்மதில் வரும் ஒரு ஹதீஸைப் பார்க்க முடியும்.

مسند أحمد –

12657 حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ قَالَ حَدَّثَنَا أَبُو جَعْفَرٍ يَعْنِي الرَّازِيَّ عَنِ الرَّبِيعِ بْنِ أَنَسٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ مَا زَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْنُتُ فِي الْفَجْرِ حَتَّى فَارَقَ الدُّنْيَا

நபி (ஸல்) அவர்கள் உலலகைப் பிறியும் வரை சுபகில் குனூத் ஓதுபவர்களாக இருந்தார்கள். (அஹ்மத்: 12657)

பதில்:

  1. புஹாரி முஸ்லிமில் அனஸ் ரலி அவர்களைத் தொட்டு வரும் ஹதீஸுக்கு முறன் படுகின்றது.

 957صحيح البخاري –

عاصم قال : سألت أنس بن مالك عن القنوت فقال قد كان القنوت . قلت قبل الركوع أو بعده ؟ قال قبله . قال فإن فلانا أخبرني عنك أنك قلت بعد الركوع ؟ فقال كذب إنما قنت رسول الله صلى الله عليه و سلم بعد الركوع شهرا أراه كان بعث قوما يقال لهم الققراء زهاء سبعين رجلا إلى قوم من المشركين دون أولئك وكان بينهم وبين رسول الله صلى الله عليه و سلم عهد فقنت رسول الله صلى الله عليه و سلم شهرا يدعوا عليهم

 

ஆஸிம் அறிவித்தார்: குனூத் பற்றி அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் ‘குனூத் (நபி(ஸல்) அவர்கள் காலத்தில்) நடைமுறையில் இருந்தது தான்’ என்று விடையளித்தார்கள். ருகூவுக்கு முன்பா? பின்பா? என்று கேட்டேன். அதற்கு ‘ருகூவுக்கு முன்பு தான்’ என்று கூறினார்கள். ருகூவுக்குப் பிறகு என்று நீங்கள் கூறினார்கள் என ஒருவர் எனக்குக் கூறினாரே என்று அனஸ்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அவர் பொய் சொல்லி இருக்கிறார். நபி(ஸல்) அவர்கள் ருகூவுக்குப் பிறகு ஒரு மாதம்தான் குனூத் ஓதினார்கள். நபி(ஸல்) அவர்கள் குர்ஆனை மனனம் செய்த சுமார் எழுபது நபர்களை இணை வைப்பவர்களில் ஒரு கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தார்கள். இவர்கள் அந்த முஷ்ரீகீன்களைவிடக் குறைந்த எண்ணிக்கையினராக இருந்தனர். அவர்களுக்கும் நபி(ஸல்) அவர்களுக்குமிடையே ஓர் உடன்படிக்கையும் இருந்தது. (அந்த முஷ்ரிகீன்கள் எழுபது நபர்களையும் கொன்றுவிட்டனர்.) அப்போது நபி(ஸல்) அவர்கள் முஷ்ரீகீன்களுக்கு எதிராக ஒரு மாதம் குனூத் ஓதினார்கள் என்று அனஸ்(ரலி) விடையளித்தார்கள்.

அனஸ் அவர்கள் வழியாக புஹாரி முஸ்லிமில் வரும் அறிவிப்பை ஏற்பதா? அல்லாது அனஸ் ரலி அவர்களே பொய் என்று சொல்லும் அஹ்மதில் வரும் அறிவிப்பை ஏற்பதா?

  1. மேலும் புஹாரி முஸ்லிமில் ஸஹீஹான ஹதீஸ்களில் ஐந்து நேரத்திலும் ஓதியதாக வரும் போது இதில் மட்டும் சுபஹில் மாத்திரம் ஓதியதாக வருகின்றது, எனவே ஸஹீஹான பல ஹதீஸ்களுக்கு பல வழிகளில் முறன் படுவது இது பலவீனம் என்பதற்கு காரணமாகும்.
  2. அடுத்து அந்த அறிவிப்பாளர் தொடரில் வரும் அபூ ஜஃபருர் ராசி என்பவர் மிகப் பலவீனமானவரே. இப்படிப்பட்ட அறிவிப்பாளர் செய்தியை வைத்து ஒரு ஸுன்னாவை அமலை உறுவாக்க முடியாது.
  • அவரைப் பற்றி இப்னு ஹிப்பான்: மக்கள் அவரது செய்தியிலிருந்து தவிர்ந்து கொண்டனர், காரணம் அவரது செய்திகளில் அதிக குளருபடிகள் இருக்கும். (அஸ்ஸிகாத்)
  • மேலும் கூறினார்கள்: அவர் ஆசான்களிடமிருந்து நிறாகரிக்கப்பட்டவைகளை அறிவிப்பதில் தனித்திருப்பார். அவரது செய்தியை ஆதாரமாகப் பிடிப்பது, நம்பகமானவர்களுக்கு நேர்பட்டாலன்றி எனக்கு விறுப்பமில்லை.
  • அபூ ஸுர்ஆ கூறினார்கள்: அதிகம் தவறு விடுபவர்.
  • அஹ்மத்: அவர் பலமானவர் இல்லை
  • இப்படி அதிகமான ஹதீஸ் கலை அறிஞர்களால் அதிகம் விமர்சிக்கப்பட்டவர். எனவே இப்படி விமர்சிக்கப்பட்டவரின் அறிவிப்பு மகப் பலவீனமாகும்.

 

  1. அடுத்து இவர பலவீனமான செய்திக்கு முறனாக நபித் தோழர்களி தீர்ப்பு.

سنن الترمذي

 402 – حدثنا أحمد بن منيع حدثنا يزيد بن هارون عن أبي مالك الأشجعي قال : قلت لأبي يا أبة ! إنك قد صليت خلف رسول الله صلى الله عليه و سلم و ابي بكر وعمر وعثمان وعلي بن أبي طالب [ ههنا ]بالكوفة نحوا من خمسين سنة أكانوا يقنتون ؟ قال أي بني محدثم

قال الشيخ الألباني : صحيح

 

அபூ மாலிக் என்பவர் தன் தந்தையிடம்: தந்தையே நீங்கள் நபிகளாருக்கும், அபூ பக்ர் உமர் உஸ்மான் அலீ (நலி) ஆகியோருக்குப் பின்னால் தொழுதிருக்கின்றீர்கள், அவர்கள் குனூத் ஓதுபவர்களாக இருந்தார்களா? என்று கேட்க, மகனே அது புதிதாக உறுவாக்கப்பட்டது. என்று தந்தை கூறினார்கள். (திர்மிதீ: 402, அஹ்மத்) நஸாஇயில் ௰80- அது பித் அத் என்றே வந்துள்ளது.

  1. அதிலும் இன்றைக்கு சுபஹ் குனூத்தில் ஓதப்படும் துஆவைப் பார்த்தால் அது பித்அத் என்பது இன்னும் தெளிவாக விளங்கும். ஏனெனில் அல்லாஹும்மஹ்தினீ என்று ஆரம்பிக்கமு துஆவை சுபஹ் குனூத்தில் ஓத நபிகளார கற்றுக் கொடுக்கவில்லை, மாறாக அது வித்ருக்காக கற்றுக் கொடுக்கப்பட்டது. திர்மிதீ:464 நஸாஇ: 1745

Related Posts

2 thoughts on “சுபஹில் மாத்திரம் குனூத் ஓதுவது நபி வழியா?

    1. முதல் விடையம் நபி (ஸல்) அவர்கள் பிரச்சினைகளை எப்படி எதிர் நோக்க வேண்டுமோ அப்படி எதிர் நோக்கினார்கள். அதுவே அல்லாஹ்வின் கட்டளையும் கூட.
      அவர் (நிராகரிப்பவர்)களை எதிர்ப்பதற்காக உங்களால் இயன்ற அளவு பலத்தையும், திறமையான போர்க் குதிரைகளையும் ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள்; இதனால் நீங்கள் அல்லாஹ்வின் எதிரியையும், உங்களுடைய எதிரியையும் அச்சமடையச் செய்யலாம்; அவர்கள் அல்லாத வேறு சிலரையும் (நீங்கள் அச்சமடையச் செய்யலாம்); …..(8:60)
      அந்த வகையில் நபிகளார் எதிரிகளை பல யுத்தங்களில் சந்தித்து தான் இஸ்லாத்தை பாதுகாத்தார்கள். என்பதோடு வெறுமனே குனூத் ஒதிக்கொண்டிருக்கவில்லை.
      அடுத்து; நபிகளாரால் எதிர்கொள்ள முடிந்த நிலையில் குனூத்திட்கு போகாமல் எதிர்த்தும் , எதிர்க்கமுடியாத நேரத்தில் மட்டுமே குனூத் என்ற நிலைக்கு போய் அல்லாஹ்விடம் பொறுப்பு சாட்டினார்கள். இதற்கு ஒரே மாதிரியான இரண்டு உதாரணங்களைப் பார்த்தால் தெளிவாக விளங்கும்.
      அனஸ் இப்னு மாலிக் (றழி) அவர்கள் கூறினார்கள்:(ஹிஜ்ரி ஆறாம் ஆண்டு) உக்ல் குலத்தாரில் (பத்துக்கும் குறைவான) சிலர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து (மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலில் ஏழைகள் மற்றும் அகதிகளின் சாவடியாக அமைந்திருந்த) திண்ணையில் தங்கி இருந்தார்கள். அப்போது அவர்களுக்கு மதீனாவின் தட்பவெப்பநிலை ஒத்துக்கொள்ளவில்லை. எனவே, அவர்கள் ‘இறைத்தூதர் அவர்களே! எங்களுக்குச் சிறிது (ஒட்டகப்) பால் கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள்’ என்று கூறினார்கள்.
      அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வின் தூதரின் (பொறுப்பிலிருக்கும்) ஒட்டகங்களை நீங்கள் சென்றடைவதைத் தவிர (வேறு வழி இருப்பதாக) நான் காணவில்லை’ என்று கூறினார்கள். எனவே, அவர்கள் அந்த ஒட்டகங்களிடம் சென்று அவற்றின் பாலையும் சிறுநீரையும் அருந்தி நலமும் உடல் வளமும் பெற்றனர். பிறகு (அந்த ஒட்டகங்களின்) மேய்ப்பரைக் கொலை செய்துவிட்டு ஒட்டக மந்தையை ஓட்டிச் சென்றுவிட்டனர். அப்போது இரைந்து சப்தமிட்டபடி ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்(து நடந்ததைத் தெரிவித்)தார். உடனே நபி(ஸல்) அவர்கள் ‘உக்ல்’ குலத்தாரைப் பின்தொடர்ந்து சென்று அவர்களைப் பிடித்து வருவதற்காகச் சிலரை அனுப்பி வைத்தார்கள். பகல் பொழுது உச்சிக்கு வருவதற்குள் அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் பிடித்துக் கொண்டுவரப்பட்டார்கள். அப்போது ஆணிகளை பழுக்கக் காய்ச்சி கண் இமைகளின் ஓரங்களில் சூடிடுமாறு பணித்தார்கள். அவர்களின் கைகளையும் கால்களையும் வெட்டச் செய்து அவர்களின் காயங்களுக்கு மருந்திடாமல் அப்படியேவிட்டுவிடச் செய்தார்கள். பிறகு, மதீனாவின் புறநகரிலிருந்த ‘ஹர்ரா’ப் பகுதியில் அவர்கள் போடப்பட்டார்கள். அவர்கள் குடிப்பதற்கு நீர் கேட்டுக் கொண்டிருந்தனர். இறக்கும்வரை அவர்களுக்குக் குடிப்பதற்கு நீர் தரப்படவில்லை.
      (அறிவிப்பாளர்) அபூ கிலாபா(ரஹ்) அவர்கள் கூறினார்கள்: அவர்கள் திருடினார்கள்; கொலை செய்தார்கள்; அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எதிராக வன்முறையில் ஈடுபட்டார்கள். (புகாரி: 6804)
      அனஸ்(றழி) அறிவித்தார் கள்:நபி(ஸல்) அவர்களிடம் ரிஅல், தக்வான், உஸய்யா, பனூ லிஹ்யான் ஆகிய குலத்தார் (சிலர்) வந்து, தாங்கள் இஸ்லாத்தை ஏற்றதாகக் கூறினர். மேலும், தம் சமுதாயத்தினரை நோக்கி ஒரு படையனுப்பு உத்தரவிடும்படியும் நபி(ஸல்) அவர்களிடம் அவர்கள் கேட்டுக் கொண்டனர். நபி(ஸல்) அவர்கள், அன்சாரிகளிலிருந்து எழுபது பேரை அனுப்பி அவர்களுக்கு உதவினார்கள். அவர்களை நாங்கள் ‘காரீகள்’ (குர்ஆனை மனனம் செய்து முறைப்படி ஓதுவோர்) என்று அழைத்து வந்தோம். அவர்கள் பகல் நேரத்தில் விறகு சேகரிப்பார்கள்; இரவு நேரத்தில் தொழுவார்கள். அவர்களை அழைத்துக் கொண்டு அந்தக் குலத்தார் சென்றனர். இறுதியில், ‘பீஃ ரு மஊனா’ என்னுமிடத்தை அவர்கள் அடைந்தவுடன் முஸ்லிம்களை ஏமாற்றிக் கொன்றுவிட்டனர். உடனே, நபி(ஸல்) அவர்கள் ஒரு மாதம் (முழுவதும்) ரிஅல், தக்வான், பனூ லிஹ்யான் ஆகிய குலங்களுக்குத் தீங்கு நேரப் பிரார்த்தனை செய்தார்கள். (கொல்லப்பட்ட) அந்த எழுபது பேரைக் குறித்து (அவர்கள் சொல்வதாக அருளப்பட்ட) ஓர் இறைவசனத்தை குர்ஆனில் நாங்கள் ஓதி வந்தோம்.
      “நாங்கள் எங்கள் இறைவனைச் சந்திக்கச் சென்று விட்டோம் என்றும், அவன் எங்களைக் குறித்துத் திருப்தியடைந்தான்; நாங்களும் அவனைக் குறித்துத் திருப்தியடைந்தோம் என்றும் எங்கள் சமுதாயத்திற்கு எங்களைப் பற்றித் தெரிவித்து விடுங்கள்” என்பதே அந்த வசனம்.
      பின்னர், இந்த வசனத்தை ஓதுவது (இறைவனாலேயே) ரத்து செய்யப்பட்டுவிட்டது. (புகாரி: 3064)
      எனவே பிரச்சினைகளை எம்மால் முடிந்த அளவு எதிர்கொண்டு எம்மால் முடியாத கட்டத்தில் அல்லாஹ்விடம் பொறுப்பு சாட்டுவதே குனூத் என்ற நிலையாகும். அதற்கு மாறாக பொறுமை என்று கூறி அந்த நிலைக்கு செல்வது நபிவழியல்ல.
      அடுத்து நாம் எந்த பிரச்சினையை எதிர்நோக்கி உள்ளோமோ அதனை மையமாக வைத்தே குனூத்தின் துஆவும் அமைய வேண்டும். அல்லாஹும்மஹ்தினா என்ற துஆவை ஓதுவது தனி ஒரு பிதத்தாகும் . அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்.!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *